ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

டீன் ஏஜ் பெண்ணின் அம்மாவா நீங்க?

Photograph of Mother and Daughter hugging
 
டீன் ஏஜ் பெண்ணின் அம்மாவா நீங்கள்? உங்களுக்கும் உங்கள் பெண்ணுக்கும் இடையேயான உறவு எப்படி? அந்த காலத்து அம்மா போல இன்றும் இருக்கிறீர்களா? காலத்திற்கு ஏற்ப உங்களை கொஞ்சம் மாத்திக் கோங்க, தப்பில்லை. உங்களுக்கும், உங்க பெண்ணுக்கும் உள்ள உறவு மேம்பட, சில "டிப்ஸ்'.

* மனம் விட்டு பேசுங்கள்: உங்கள் பெண்ணுடன் இடைவெளி விட்டு பழகாதீர்கள். அப்படியிருந் தால், அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது. எந்த விஷயமாக இருந்தாலும், மனம் விட்டு பேசுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக, உங்கள் மகள் பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், அன்றைய நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கேளுங்கள்.


இதனால், உங்களுக்கு பொழுது போவது மட்டுமின்றி, அவர்கள் வெளியிடங்களில் செயல்படும் விதங்களையும் அறிந்து கொள்ளலாம்.

* நல்ல நண்பராக இருங்கள்: நீங்கள் தாயாக மட்டும் இல்லாமல், நண்பராகவும் இருக்க முயலுங்கள். தாயிடம் கூற முடியாத சில விஷயங்களை கூட, நண்பர்களிடம் சொல்வர். நீங்களே அந்த நண்பராகவும் இருக்கும் போது, உங்கள் பெண்ணை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

* உடல் தூய்மை பற்றி சொல்லுங்கள்: வயது வந்த பெண் எப்படி உடலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து சொல்லிக் கொடுங்கள். குறிப்பாக, மாதவிடாய் காலங்களில் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையும், அதன் அவசியத்தையும் எடுத்து கூறுங்கள்.

* பெண்ணின் விருப்பமறிந்து செயல்படுங்கள்: ஷாப்பிங் போறீங்களா? நீங்கள் மட்டும் கடைக்கு போய், கையில் கிடைத்ததை வாங்கி வந்து உங்க மகளிடம் கொடுக்காதீர்கள். உடை, அணிகலன், கைப்பை என, தினசரி புதுப்புது மாடல்கள் வந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் வாங்கி வருவது உங்கள் பெண்ணுக்கு பிடிக்காமல் போகலாம். இதை தவிர்க்க, உங்கள் பெண்ணையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அவளது விருப்பமறிந்து வாங்கிக் கொடுக்கலாம்.

* நண்பர்களை அறிமுகப்படுத்தும் போது: பள்ளி முதல் கல்லூரி வரை பெரும்பாலும், இரு பாலர் நிறுவனங்களாக தான் உள்ளன. டியூஷன் செல்லும் இடத்திலும் ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடும். எனவே, உங்கள் பெண், தன்னுடன் படித்த, அல்லது படிக்கும் ஆண் நண்பர்களை அறிமுகப்படுத்தும் போதும், அவர்களிடம் பேசும் போதும் கோபப்படாதீர்கள். மாறாக, இந்த காலகட்டத்தை நினைவில் கொண்டு, அவர்கள் ஆண் நண்பர்களுடன் பழகும் எல்லை எதுவரை இருக்கலாம் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.

* நண்பர்களை தெரிந்து கொள்ளுங்கள்: நண்பர்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், வாழ்க் கையே சீரழிந்து விடும் என்பதை உங்கள் பெண்ணுக்கு உணர்த் துங்கள். உங்கள் பெண்ணின் நண்பர்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள். உங்கள் பெண்ணின் பிறந்த நாள், தீபாவளி, போன்ற விசேஷ தினங்களில் அவர்களை வீட்டிற்கு அழையுங்கள். இதன் மூலம், உங்கள் பெண், சரியான நபர்களுடன் தான் சேர்கிறாளா என்பதும் தெரியவரும்.

விண்டோஸ் 7 ல் அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகள்.

விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு ஒலிபெருக்கியில் ( Speaker ) எவ்வித பிரச்சினையுமில்லை. லேப்டாப் ஆக இருந்தால் எதாவது ஒரு பாட்டைப் போடும் போது இயல்பாக லேப்டாப்பிலேயே உள்ளிணைந்த ஸ்பீக்கரில் பாடும். மேலும் ஹெட்போன் (Headphones) இணைத்தால் அதை உணர்ந்து ஹெட்போனில் பாடத்துவங்கும். ஆனால் விண்டோஸ் 7 ல் இந்த மாதிரி மாற்றி மாற்றி பயன்படுத்தும் போது சில அமைப்புகளை கையாள வேண்டியிருக்கிறது.

 
 
தோழியின் விண்டோஸ் 7 நிறுவப்பட்ட லேப்டாப்பில் சவுண்டே வரவில்லை என்று புலம்பினாள். நானும் ஒலியின் அளவை சோதித்தேன். நிறைவாகத்தான் இருந்தது. சரி என்று ஒரு படத்தை ஓடவிட்டுப்பார்த்தால் எந்த சவுண்டும் வரவில்லை. கணிணியை அணைத்து விட்டு மீண்டும் ஒருமுறை பார்க்கலாம் என்றால் அதுவும் சரியாகவில்லை. அப்போது தான் volume பட்டனை கிளிக் செய்த போது Playback devices என்ற விசயத்தைக் கவனித்தேன்.

விண்டோஸ் 7 ல் இயல்பான ஒலிபெருக்கி ( Default speaker ) என்ற அமைப்பு உள்ளது. அதாவது நாம் லேப்டாப்பில் இணைக்கப்படும் ஒலிபெருக்கிகள், ஹெட்போன்கள் போன்றவற்றை Playback devices பகுதியில் சேர்த்துக்கொள்கிறது. நீங்கள் தற்போதைக்கு ஹெட்போனில் பாட்டு கேட்க விரும்புகிறிர்கள். அதனால் ஹெட்போன் இயல்பான ஒலிபெருக்கியாக (Default speaker) கணிப்பொறியில் அமைந்து விடுகிறது.

அடுத்தமுறை ஹெட்போன் இல்லாமல் பாட்டு கேட்க விரும்பி பாட்டைப்போட்டால் நிச்சயமாக பாடாது. ஏனெனில் இன்னமும் ஹெட்போன் தான் உங்களது இயல்பான ஒலிபெருக்கியாக இருக்கும். அதனால் என்ன செய்ய வேண்டும்?
 
 

Volume பட்டன் கணினியில் டாஸ்க்பாரில் வலது ஒரத்தில் இருக்கும். அதை வலது கிளிக் செய்து Playback devices என்பதை தேர்வு செய்யவும். அங்கே இணைக்கப்பட்ட கருவிகளின் பட்டியல் தெரியும். எது இயல்பான ஒலிபெருக்கியோ அதில் பச்சைக் குறியீடு இருக்கும்.
 
 

மாற்ற வேண்டுமெனில் எதை மாற்றுகிறிர்களோ அதில் வலது கிளிக் செய்து Set Default Device என்பதை கிளிக் செய்தால் போதும்.