புதன், 3 ஆகஸ்ட், 2011

வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக......
இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது.
இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சனைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் [பெண்கள்] .......

எப்படி நடந்து கொள்ளவேண்டும்??

பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்?

இதோ உங்களுக்கு உதவ சில பயனுள்ள ஆலோசனைகள்!

* நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. மாடர்ன் ஆக உடுத்தினாலும் நேர்த்தியாக உடுத்துங்கள்.

*முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர்கள். அங்கேதான் ஆரம்பிக்கிறது பல பிரச்சனைகள்.

*சொந்த குடும்ப விஷய்ங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்காதீர்கள், அட்வாண்டேஜ் எடுக்க முன் வருவார்கள்!

*உடன் வேலை செய்தாலும் பர்சனல் செல் நம்பர்களை யாருக்கும் தராதீர்கள். நம்பிக்கைக்குரிய நபர்களை தவிர.

*சில நேரங்களில் உயர் அதிகாரிகளே தொல்லைகள் தருவார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஹாண்டில் செய்யாமல், பிரச்சனைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்.

*ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல, அதற்காக எல்லாவற்றுக்கும் கைக்கொடுப்பது , தொட்டுப் பேசுவது கூடாது.

*உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.

*உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.

*அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே, மற்ற உங்களது தனிப்பட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சனைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.

* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம், ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.

* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல் இவையெல்லாம் நம் அக்கம் பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனசில் வைத்துக்கொள்ளுங்கள்!
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு , மனமெச்சூரிட்டி போன்றவற்றை பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம்.

* உடன் வேலை பார்க்கும் ஆண் தவறாக நடக்க முயற்சிக்கும்போது பெண்கள் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் அதுவே ஆணகளுக்கு மிகப்பெரிய பலம் ஆகிவிடும்.
'நாம எது செஞ்சாலும் வெளில கமிச்சுக்காம அமைதியாத்தேன் இருக்காங்க ! மத்த விஷயத்திலேயும் நமக்கு ஒத்துழைப்பாங்க!' என்று சம்பத்தப்பட்ட ஆண் நினைத்து விடுவான்.
இதனால் பிரச்சனை பூதாகரமாகும்போது பெண்கள் வேலைக்கு போகும் உரிமையை வீட்டில் இழக்கிறார்கள்.

* பெண்களுக்கு சாதகமாக இப்போது நிறைய சட்டங்கள் உள்ளன. பெண்கள் அவற்றை தெரிந்து கொள்வது அவர்களுக்கு அதிக பாதுகாப்பு ஏற்படுத்தித் தரும்!.

*தன்னிடம் அன்பாக பேசக் கூடியவர்கள் எல்லோருமே தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றப் போகிறவர்க்ள் என்ற எண்ணம் பெண்களுக்கு கூடாது. வேலை செய்யும் இடத்தில் ஆண் பெண் உடல் ரீதியான ஈர்ப்புகளுக்கு ஆளானால் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் நிஜமாகவே விபிரீதமாக இருக்கும்.

* ஆபீஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

* ஜல் ஜல் என்று அதிக மணியோசை கொண்ட கொலுசை தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே!

* உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது 'நன்றி' என்று ஸ்டிரெய்ட்டாக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதை தவிருங்கள்.

*யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள், அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள்.

* அரட்டையில் , ஜோக்ஸ் என்ற பேரில் விரச பேச்சுகளை அனுமதிக்காதீர்கள்.

*எதற்காகவும் எந்த பிரச்சனைக்காகவும் அழாதீர்கள், அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.

* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள்.

* விழா , விசேஷம் தவிர உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள், நீங்களும் செல்லாதீர்கள்.

* ஆண்கள் தனது மனைவியை உங்களோடு ஒப்பீட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும் கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணுடம் பழகும் போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

*பெண்களுக்கு தங்கள் விஷயங்களை பகிர்ந்துகொள்ள நட்பு ரீதியிலான பழக்கம் ஆணிடமோ, பெண்ணிடமோ ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் அது அவளது சுயகெளரவத்தை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும்.
அதுவே பாதிப்புகளை ஏற்படுத்தாது, அதுவே நிலைக்கும்!!!
 
 
குமுதம் சிநேகிதி வார இதழில் வெளிவந்த 'வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான ஆலோசனைகள்' ....இங்கு பதிவாக!!

தேவையில்லாத சதைகளைக் குறைக்க சில வழிகள்

 

இன்றைய பெண்கள் முன்பு போல் அம்மி அரைப்பதில்லை, உரல் வைத்து மாவு ஆட்டுவதில்லை (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்). இது எல்லாம் செய்வதில்லை. உடம்பு மட்டும் ஸ்லிம்மா இருக்கணும் என்று ஆசைப்படுகிறோம். மெலிந்த உடம்பை பெருக்க வைப்பது மிகவும் சுலபம். ஆனால் அதிகப்படியான சதைகளைக் குறைப்பது தான் மிகவும் சிக்கல். உடலின் தேவையில்லாத எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்:-

தவிர்க்க வேண்டியவைகள்:முதலில் அதிக நேரம் தொலைக்காட்சி பெட்டியின் முன்போ அல்லது இப்படி ஏதாவது பதிவு போடணும் என்றோ கம்ப்யூட்டர் முன்பு உட்காராதீங்க.

அதிகமாக நொருக்கு தீனி சாப்பிடாதீங்க.

உங்களுக்கு மிகவும் பிடித்த ஆயில் உணவுகளையும், பொழுப்பு நிறைந்த .. பிட்ஸா, பர்கரையும் மறந்துவிடவும்.

வீட்டுக்கு வேலைக்கு ஆள் வந்தால், உங்கள் உடல் ஆரோக்கியத்தை எண்ணிக்கொண்டு யோசிக்கவும்.

மதியம் தூக்கம் கட்டாயம் வேண்டாம். அதிகப்படியான சதைகளை குறைக்க சில பயிற்சிகள்:

இடுப்பில்:

பெண்களுக்கு அதிக சதை போடுவதே இடுப்பில் தான். அவங்க கட்டாயம் இடுப்புக்கு பயிற்சி கொடுக்கணும்.

நல்ல நடைபயிற்சி மிக முக்கியம்.

நல்லா டான்ஸ் ஆடுங்க. (ஆட தெரியவில்லை என்றாலும் இடுப்பை வளைத்து கால் கைகளை மடக்கி டான்ஸ் என்ற பெயரில் ஆடவும்.)

நேராக நின்றுக்கொண்டு 2 கைகளையும் மேலே தூக்கி அப்படியே ஒரு கைகளை மட்டும் கீழே கொண்டு வரும்பொழுது இடுப்புடன் உடலையும் வளைக்கவும். இதை போல் 2 பக்கமும் 10 முறை செய்யவும்.

இதன் மூலம் இடுப்பின் மடிப்பு மற்றும் சதை குறையும்.

எந்த வேலை செய்யும் பொழுதும் வயிற்றை நல்லா உள் இழுத்து விடவும். இப்படி அடிக்கடி செய்தால் வயிற்று பகுதியின் சதை குறையும்.

தரையில் படுத்துக்கொண்டு கால்களை முட்டியினை மடக்காமல் தூக்கி இறக்கவும். 2 கால்களையும் 10 முறை செய்யவும். இடுப்பு மற்றும் தொடைக்கு:

சிலருக்கு பின் பகுதி மட்டும் அழகில்லாமல் இருக்கும். தினமும் குறைந்தது 10முறையாவது மாடிப்படி ஏறி இறங்கவும்.

நின்றுக் கொண்டு கால்களின் முட்டியினை மட்டும் தூக்கி இறக்கவும். அடிக்கடி செய்யவும்.

நன்றாக நடக்கவும். அப்ப தான் இடுப்புத்தொடை உறுதியாக்கும்.

கைகளுக்கு:

இதுக்கு நல்ல உடல்பயிற்சி வீட்டு வேலைகளை சரியாக செய்வது தான். அம்மி அரைக்கவும், கிணற்றில் தண்ணீர் எடுக்கவும், பம்பில் தண்ணீர் அடிக்கவும். இதுவே நல்ல பயிற்சி. முடியாதவங்க செய்வது போல் பாவனை செய்யுங்கள். அது தான் பயிற்சி.

கழுத்துக்கு கீழ் தொங்கும் சதை:

சிலரின் அழகை கெடுப்பது கழுத்தின் மடிப்பு சதை. இதுக்கு கழுத்தை மேலும் கீழுமாக தலையினை மாற்றி மாற்றி 10 முறை செய்யவும்.

முகத்தை இட-வலமாக மாற்றி மாற்றி திருப்பவும்.

முறையான நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, ஜாக்கிங், சைக்கள் ஓட்டுவது போன்ற உடல்பயிற்சிகள் செய்வது ரொம்ப நல்லது... தொடர்ந்து செய்யுங்கள்..

மாதவிடாய் நாள் தவறுவதேன்?

 


மாதவிடாய் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியிலோ, குறைந்தோ அல்லது நாள் தவறியோ ஏற்படலாம். குறைந்தது 21 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது அதிகபட்சமாக 35 நாட்களுக்கு ஒரு முறையோ ஏற்படுவது நார்மல்
என்று கருதப்படுகிறது. ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும் தினத்திலிருந்து 5 அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களுக்கு ஏற்படவில்லை எனில் தாமதமான மாதவிடாய் என்றும், 6 வாரங்களுக்கு நீடித்தால் மாதவிடாய் தவறியது என்றும் பொருள்.


இதற்கான காரணங்கள்:

கருத்தரிப்பு:

கருத்தரித்திருந்தால் மாதவிடாய்த் தவறும். மருத்துவரை அணுகி கர்ப்பம் தரித்திருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொண்டு மாதவிடாய் தவறியதற்கான மற்ற காரணங்களை பரிந்துரை செய்யலாம்.

சாதாரண நடைமுறை:

மாதவிடாய் ஏற்படத் துவங்கிய முதல் 2 ஆண்டுகளுக்கு, உடலின் ஹார்மோன்கள் மாதவிடாய் மாறுதல்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளாத நிலையில் இருக்கும், இதனால் சூலகத்திலிருந்து மாதமொருமுறை கரு முட்டையை வெளியேற்ற தாமதமாகும்.

கவலை:

மனக்கவலையோ, அழுத்தமோ இருந்தால் மாதவிடாய் தாமதமாவதற்கும் தவறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அல்லது கடுமையான காய்ச்சல், பாலியல் உறவால் ஏற்பட்ட கிருமியின் தாக்குதல், கடுமையான உடல் எடையிழப்பு அல்லது எடை கூடுதல், கடுமையான உடற்பயிற்சி இவைகளாலும், விரதம் போன்றவற்றாலும் கூட மாதவிடாய் சுழற்சி பாதிப்படையும்.

ஹார்மோன் சமச்சீரின்மை:

இது அரிதாகவே ஏற்படும் ஒரு காரணமாகும். சில சமயங்களில் கருத்தடை மாத்திரைகளை நிறுத்தியிருந்தீர்களானால் தற்காலிகமாக ஹார்மோன்கள் சமன்நிலை குலையும். இதனால் மாதவிடாய் தவறும். தைராய்டு சுரப்பி கபச் சுரப்பு, அட்ரினல் சுரப்பிகள் மற்றும் கருசூலகம் ஆகிய பிரச்சினைகளால் அரிதாக மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு பாலுறுப்புகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியமா?


பெரு‌ம்பாலு‌ம் நோ‌ய்‌த் தா‌க்குதலு‌க்கு ஆளாவ‌திலு‌ம், த‌ங்களது உடலை ஆரோ‌க்‌கியமாக பராம‌ரி‌க்காம‌ல் இரு‌ப்ப‌திலு‌ம் பெ‌ண்களு‌க்கு‌த்தா‌ன் முத‌லிட‌ம்.குழ‌ந்தை, குடு‌ம்ப‌ம் என எ‌ல்லாவ‌ற்‌றிலு‌ம் அ‌க்கறை செலு‌‌த்து‌ம் பெ‌ண்க‌ள், த‌ங்களது உட‌ல்‌நிலையை கவ‌னி‌க்க மற‌ந்து‌விடு‌கி‌ன்றன‌ர்.
இது அதுபோ‌ன்ற பெ‌ண்களு‌க்கு‌ம், அவ‌ர்க‌ளி‌ன் பெ‌ண் குழ‌ந்தைகளு‌க்கு‌ சொ‌ல்‌லி‌க் கொடு‌க்கவு‌ம் உதவு‌ம்.

நாம் நம் உடலை சுத்தமாக வைக்கிறோம் என்றால் நம் உடலை நாம் நல்ல முறையில் பராமரிக்கிறோம் என்று தான் பொருள். அப்படி நாம் நம் உடம்பை சுத்தமாக வைத்துகொள்ளும்போது உடல் ஆரோகியம் பேணப்படுகிறது .அதோடு நம் உடம்பு பல நோய்களில் இருந்து பாதுகாப்பை பெறுகிறது.

தினமும் குளித்தல் ,பல் துலக்குதல் , தூய்மையான ஆடைகளை அணிதல் போன்றவை அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. அதேபோல்தான் பாலுறுப்புகளின் சுத்தமும், அவற்றை தினமும் ரொம்ப கவனம் செலுத்தி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் . இல்லை என்றல் பல தோற்று கிருமிகள் சூழ்ந்து பல நோய்களை உருவாகும் நிலை ஏற்படும்.

இயற்கையாகவே பாலுருபுகளில் சுரக்கும் திரவம் அவ்வுறுப்புகளை தூய்மை செய்து வருகிறது. இத்திரவம் பெண்ணுறுப்பின் உள் இருக்கும் வரை தான் அது நோய்கிருமிகளை எதிர்த்து அப்பகுதிகளை துப்புரவாக வைக்கிறது. அத்திரவம் பெண்ணுறுப்பின் வெளிப்புறத்தில் வரும்போது அதுவே நமக்கு தீமையை விளைவிக்க கூடும்.அதற்கு வெளிசூழல் தான் காரணம்.

வெளிசூழலில் இருக்கும் பாக்டீரியகளின் தாக்குதலால் அத்திரவம் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்படுகிறது . எனவே நாம் ரொம்ப கவனமுடன் இருக்க வேண்டும். அபகுதிகளை எப்போதும் சுத்தமாக பேணவேண்டும் .


மாதவிலக்குக் காலங்களில் நன்கு துவைக்கப்பட்டு வெயிலில் காய வைத்தத் துணிகளைப் பயன்படுத்த வேண்டும்.
அல்லது கடைகளில் விற்கும் பஞ்சு (அ) நாப்கின்கள் பயன்படுத்த வேண்டும்.

மாதவிடாய் காலங்களில் நல்ல காற்றோட்டம் உள்ள பகுதியில் நம் அன்றாட வேலை செய்வது உடலுக்கும் மனதிற்கும் தெம்பை கொடுக்கும்.

இதே‌ப்போ‌ன்று அ‌ந்த சமய‌த்‌தி‌ல் பய‌ன்படு‌த்து‌ம் உ‌ள்ளாடைகளை ந‌ன்கு வெ‌யி‌லி‌ல் காய வை‌த்து‌த்தா‌ன் பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம். அ‌ந்த சமய‌த்‌தி‌ல் பய‌ன்படு‌த்து‌ம் உ‌ள்ளாடைகளை‌த் த‌னியாக வை‌ப்பது ந‌ல்லது.

சாதாரண சமய‌ங்க‌ளி‌ல் அ‌ந்த உ‌ள்ளாடையை‌ப் பய‌ன்படு‌த்துவதை‌த் த‌வி‌ர்‌க்‌கவு‌ம்.


பொதுவாக மற்றவர்களின் உள்பாவாடை , ஜட்டி போன்றவைகளை ஒரு போதும் அணியக்கூடாது.

மாதவிலக்கு காலங்களில் வெளிப்பாடு குறைவாக இருந்தாலும் கூட 6 லிருந்து 8 மணி நேரத்திற்கு ஒரு முறை துணி அல்லது பஞ்சு (அ) நாப்கின்களை மாற்ற வேண்டும்.உள் ஆடைகள் பருத்தி துணியினால் ஆனதை உபயோகபடுத்தவேண்டும். அப்போதுதான் வியர்வையினை அத்துணி உறிஞ்சி எடுத்து வியர்வையினால் வரக்கூடிய தொற்று நோயை அது தடுக்கும்.

சிறுநீர் மற்றும் மலம் கழிந்த பின்பு பாலுறுப்புகளை நன்கு நீரால் சுத்தம் செய்து உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். 

அதேபோல் தான் மலம் சிறுநீர் கழிக்கும் பகுதிகளை நம் சுத்தமுடன் வைத்து கொள்ள வேண்டும். மலம் கழித்த பின்பு பிறப்புறுப்பிலிருந்து ஆசனவாய் நோக்கி நன்கு சுத்தம் செய்ய வேண்டும். மாறாக ஆசன வாயிலிருந்து பிறப்புறுப்பு நோக்கி சுத்தம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் ‌பிற‌ப்புறு‌‌ப்பு‌க்கு‌ள் கிருமிக‌ள் செ‌ன்று ப‌ல்வேறு தொற்று ஏற்படும், மேலும் வயிற்றில் சீரணத்திற்கு உதவும் பாக்டீரியா வெளிவந்து பிறப்புறுப்பில் தொற்றினை ஏற்படுத்தும்.
. ஒவொரு முறை நம் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் பொது நாம் அப்பகுதிகளை மிகவும் நன்றாக தூய்மை செய்ய வேண்டும். ஏன் என்றால் நம் உடலிலிருந்து வரும் கழிவுகளில் ஏராளமான நுண்கிருமிகளும் வெளிவரும். அவையே அப்பகுதிகளில் தங்கிவிடாமல் இருக்க தூய்மையுடன் வைத்திருக்க வேண்டும். பாலுறுப்புகளை தூய்மை செய்ய நாம் அன்றாடம் உடம்பிற்கு பயன்படுத்தும் சோப்பே போதும். ஏதாவது அரிப்பு ஏற்பட்டால் டெட்டால் உபயோகபடுத்தலாம் . ஏன் என்றால் இது ஓர் கிருமிநாசினியாக பயன்படுகிறது.

great_gift_for_men_shaving_tools_650x400

இது தவிர வேறு எதாவது லோசன் அல்லது ரசாயன பொருட்கள் உபயோகிப்பது என்பது டாக்டரிடம் அறிவுரை கேட்டபின் தான் உபயோகப்படுத்த வேண்டும். நாமே டாக்டரிடம் ஆலோசனை இன்றி பயன்படுடும்போது அப்பகுதிகளில் அப்போருட்களால் பாதிப்புகள் அதாவது கொப்புளங்கள், புண்கள் , அரிப்பு போன்றவை வர வாய்ப்புள்ளது.

பாலுறுப்புகள் நாம் சுத்தம் பராமரிக்கும் போது மற்ற உறுப்புகளும்

ஆரோக்கியமாக இருக்க இது உதவுகிறது.

இதனை ஒ‌வ்வொரு தா‌ய்மா‌ர்களு‌ம், த‌ங்களது பெ‌ண் குழ‌ந்தைகளு‌க்கு‌ எடு‌த்து‌க் கூற வே‌ண்டு‌ம். இதனா‌ல் பெ‌ண் குழ‌ந்தைகளு‌க்கு அ‌வ்வ‌ப்போது ‌சிறு‌நீ‌ர் தொ‌ற்று ஏ‌ற்படுவதை‌த் தடு‌க்கலா‌ம்.

‌பிற‌ப்புறு‌ப்பு‌ப் பகு‌திக‌ளி‌ல் இரு‌க்கு‌ம் ரோம‌ங்களை அ‌வ்வ‌ப்போது ‌நீ‌க்‌கி சு‌த்தமாக வை‌த்‌திரு‌ப்பது அவ‌சிய‌ம்.

பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் தைராய்டு!
பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் நோய்களில் தைராய்டும் ஒன்று. இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை அயோடின் குறைவே இதற்குக் காரணம்.


கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள்

உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது.

தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம், குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இன்றுள்ள சூழ்நிலைக்கு 100 க்கு 90 பேருக்கு தைராய்டு பிரச்சினை உள்ளது. உடல் வெயிட் போடுகிறது என்று தெரிந்தவுடன் முதலில் தைராய்டு டெஸ்டு எடுத்து பார்த்துவிட்டு தைராய்டு இல்லையென்றால் வெயிட் குறைவதற்கு எந்த சிகிச்சை நல்லது? என்று தேர்வு செய்து வெயிட்டை குறைப்பது நல்லது. தைராய்டு டி.எஸ்.எச் அளவு அதிகமாக உள்ளது என்று தெரிந்தவுடன் தைராய்டு குறைய ட்ரீட்மெண்ட எடுக்க வேண்டும். டி.எஸ்.எச் அளவு ரத்தத்தில் அதிகமானால் ஹை தைராய்டு (அதிகமான தைராய்டு), கம்மியானால் லோ தைராய்டு உடலில் அயோடின் சத்து குறைந்தால் வீக்கம் வேறு வந்து விடும். சில சமயம் சிறு, சிறு கட்டிகள் தோன்றி கேன்சரா என்று பயம் ஏற்படும். கட்டிகள் என்ன என்பதை ஸ்கேன் மூலம் பார்த்து தெரிவுப்படுத்திக் கொள்ளலாம்.
தைராய்டு சுரப்பி குறைவாக இருந்தால் ஆரம்பத்தில் தெரிந்தோ, தெரியாமல் இருக்கும். முதல் மாற்றம் மாதவிலக்கில் மாற்றம் ஏற்படலாம். (அதிகமாக அல்லது குறைவாக) உடல் பருமன் அதிகமாகி விடும்.

இளம் பெண்களுக்கு கருமுட்டையில் நீர் கட்டிகள் (பாலி சிஸ்டிக் ஓவரியன் டிஸஸ்) இருக்கலாம். சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கும். டெலிவரிக்கு பிறகு உடல் குண்டாவது முகம் பருமனாகிவிடும். கைகளில் வீக்கம், கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படும். அதிக களைப்பு, குளிர்ச்சியை தாங்க முடியாமல் தோன்றும். கை, கால்கள் உளைச்சல், மூட்டுவலி, ஞாபக மறதி, மனச்சோர்வு அதிகமாகும். சிலருக்கு குரல் மாறும். எச்சில் முழுங்கும் போது வலி ஏற்படும். சருமம் வறண்டு பொலிவு இழந்து காணப்படும். மற்ற நாளமில்லா சுரப்பிகளும் வேலை செய்யாமல் முடி வளர்ச்சி இல்லாமல் முடி கொத்து கொத்தாக கொட்டி சிலருக்கு வழுக்கையே வந்து விடும். கரு முட்டைகள் சரியாக வளர்ச்சியில்லாமல் உடல் பருமன் காரணமாக குழந்தை பிறப்பை தடுத்து விடும்.

டென்ஷன் காரணமாய் தைராய்டு பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு. ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பதோடு, உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

தைராய்டு சுரப்பி, அதிகமாக சுரந்தாலும், கழுத்து வீக்கம், உடல் சூடு, படபடப்பு, வியர்வை அதிகமாகும். நாக்கு வறண்டு, குமட்டல், வாந்தி கூட வரும். சிலருக்கு குறை பிரசவம், கருச்சிதைவு போன்றவை உண்டாகும். சிலருக்கு கண்கள் பெரிதாக வெளியில் விழும் மாதிரி தோன்றும். பார்வை மங்கும். இந்த தைராய்டு பிரச்சினைக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்று பலர் நினைத்து கொள்கிறார்கள். இல்லவே இல்லை. சித்தா மருந்திலிருந்து 3லிருந்து 6மாதம் வரை அவரவர் அளவுக்கேற்ப மருந்து எடுத்துக் கொண்டால் மேல் சொன்ன வியாதிகளை அனைவரும் தவிர்க்கலாம்.

சத்துபவுடர்:

தனியா 100 கிராம், எள் 50 கிராம், மிளகு 10 கிராம், மிளகாய் 10, கறிவேப்பிலை போன்ற சாமான்களை வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். உப்பும் சேர்த்துக் கொள்ளவும். தினமும் 1 பிடி சாதத்தில் 1 ஸ்பூன், நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடவும். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளவும். தினமும் சாப்பிட்டு வந்தால் பசி மற்றும் பித்த மயக்கம், தலை சுற்றல், வாந்தி, ருசியின்மை குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு கல்லீரல் பிரச்சினை நீக்கி பலப்படுத்துவது உறுதி.

நன்றி: வளைகுடா தமிழன்

குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது கவனிக்க வேண்டியவை!


• குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் தாய்மார்கள் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.


•குழந்தைகள் உணவைச் சிந்திவிட்டால் திட்டுவதோ, அடிப்பதோ, மிரட்டுவதோ கூடாது.


•குழந்தைகளுக்கு எவ்வளவு உணவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்ணப் பழக்குங்கள். போதும் எனுமளவுக்கு உண்டபின் அதிகமாக உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம்.


•. சோறு சாப்பிடு, கீரை சாப்பிடு அப்படி சாப்பிட்டால் சாக்லேட் வாங்கித் தரேன், ஐஸ்கிரீம் வாங்கித் தரேன் என்று சொல்வது தவறு. அப்படிச் சொல்வதனால் சோறு என்பது மோசமான பொருள் என்றும், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை நல்ல பரிசுப் பொருட்கள் போன்ற ஒரு தோற்றம் குழந்தைகளின் மனதில் பதிந்து விடும்..


•. இனிப்புகளை முழுமையாய் தவிர்க்காதீர்கள். அப்படி மறுக்க மறுக்க குழந்தைகளுக்கு இனிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வரும். பின்பு வாய்ப்புக் கிடைக்கும் போது வட்டியும் முதலுமாய் சேர்த்து இனிப்பை உண்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும்.


• குறிப்பாக 90/10 முறையைக் கடைபிடிக்க வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். அதாவது 90 விழுக்காடு ஆரோக்கியமான உணவும் மீதி பத்து விழுக்காடு இனிப்பு, பொரியல் போன்றவற்றையும் உண்பதும் நல்லது. அந்த இனிப்பு வகைகளிலும் அதிக கொழுப்பான, செயற்கைப் பொருட்கள் அதிகம் அடங்கியவற்றைத் தவிர்க்கவேண்டும்.•. அதிக கொறித்தல் பொருட்களைக் குழந்தைகளுக்கு வழங்காமல் இருப்பதே நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவு ஊட்டுவதும், சரியான நேரத்தில் தின்பண்டங்கள் கொடுப்பதும் நல்லது. .


• வீடுகளில் தேவையற்ற உணவுப் பொருட்களை வாங்கி நிறைக்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக நீங்கள் வாங்கி வைக்கும் குளிர்பானமோ, சிப்ஸோ குழந்தை சாப்பிடக் கூடாது என நீங்கள் எண்ணுவதில் அர்த்தமில்லை.


• இன்றைக்கு எங்கும் பரவியிருக்கும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை


•. பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். எல்லோரும் எல்லாவற்றையும் விரும்பமாட்டார்கள் என்பதும் நமக்கு மிகவும் பிடித்தது இன்னொருவருக்கு சுத்தமாகப் பிடிக்காமல் போகும் என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.


•. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவை கொடுத்து போரடிக்காதீர்கள். ஒரே மாதிரியான உணவைக் கொடுக்க வேண்டி வந்தால் அதன் வடிவத்தையோ, சுவையையோ எதையேனும் வித்தியாசமாய் காண்பியுங்கள். வித்தியாசமானவை குழந்தைகளுக்குப் பிடிக்கும் , பிடித்தமான பாத்திரத்துக்காகவே குழந்தைகள் உணவை உண்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.


•. ஒரு கடி, ஒரு வாய் என குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். காய்கறி போன்றவற்றை தினமும் கொஞ்சம் கொஞ்சம் உண்ணப் பழக்கினாலே அவை நீண்டகால உணவுப் பழக்கமாய் மாறிவிடும். .

•. குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பறவை, பூ, படகு என வித்தியாசமான வடிவங்களில் வெட்டிப் பரிமாறிப் பாருங்கள். குழந்தைகள் வெகுவாக விரும்பி உண்பார்கள்.


•சிறு சிறு சமையல் வேலைகளில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அவர்களுக்கு உணவின் மீதான நாட்டம் அதிகரிக்கும்.

பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்

 உங்களுக்குத் தெரியுமா? சுயஆளுமைத் தன்மையுள்ள குழந்தையால்தான் புதிய முயற்சிகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடிகின்றது. சமுதாயத்தில் எல்லோருடனும் வலுவான நட்புடன் உறவாட முடிகின்றது. பள்ளி வாழ்வும், நண்பர்களும் உங்கள் குழந்தையின் சுய மதிப்பீட்டைக் குறைக்கலாம். மனம் தளராதீர்கள்! எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையில்; பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பதில்தான்!

உங்கள் குழந்தையின் சுயமதிப்பீட்டை அதிகரிக்கவும், தளரா தன்னம்பிக்கை கொள்ளவும் சில யோசனைகள் :

முதலில், உங்கள் குழந்தையின் மீது முழு நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் குழந்தை விலை மதிப்பில்லாத, அன்பிற்குரிய உயிர் என்பதை நீங்கள் உணர்வதோடு அதை குழந்தையும் உணருமாறு நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தையின் திறமை மற்றும் சாதனைகளைப் பற்றி, அது எத்துணை சிறிய செயலாக இருந்தாலும், உடனுக்குடன் பாராட்டி கருத்துக்களைக் கூறுங்கள். “அது சற்று கடினமான செயலாக இருந்தாலும் நீ நல்ல முறையில் முயற்சித்தாய்” என்று பாராட்டுவது குழந்தையின் முகத்தையும் மனதையும் ஒரு சேர மலர்த்தும்.

குழந்தைகளின் சின்னச் சின்ன தவறுகள் குற்றங்களல்ல; அவை புரிந்து வளர்வதற்கான படிப்பினைகள் என்பதை அவர்களுக்கு உணர வையுங்கள்.

குழந்தைகள் பேசும்போது மிகுந்த உன்னிப்பாக கவனிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கவனிப்பதற்கு அடையாளமாக உடனுக்குடன் கலந்துரையாடி குழந்தைகள் தொடர்ந்து பேச உற்சாகமளியுங்கள். உங்கள் குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆமோதித்து அவற்றை வார்த்தைகளாக வெளியிட உதவுங்கள்.

விமர்சியுங்கள் – குழந்தைகளை அல்ல; குழந்தையின் பழக்க வழக்கங்களை! இதைச் செய்யும்போது மிக கவனமாக கத்தி மீது நடப்பதுபோல செய்ய வேண்டும். அளவிற்கு அதிகமான விமர்சனம் குழந்தையைக் காயப்படுத்தும். ஆனால் ஒன்றில் உறுதியாக இருங்கள். உங்கள் விமர்சனம் குழந்தையின் பழக்க வழக்கம் அல்லது செயல் பற்றியதாக மட்டும் இருக்க வேண்டுமே தவிர, குழந்தையைப் பற்றி அல்ல.

குழந்தையின் ஆர்வத்திற்கு மரியாதை கொடுங்கள். உங்களுக்கு ஆர்வம் குறைவாக இருந்தாலும், தன் நண்பர்கள், பள்ளியின் அன்றைய நிகழ்வுகள் போன்றவை பற்றி குழந்தை விவரிக்கும்போது, உண்மையான அக்கறையுடன் கவனியுங்கள். முடிந்தால் இடையிடையே சில கருத்துகளையும் தெரிவியுங்கள்.

குழந்தை வெளியிடும் அதன் பயம் அல்லது பாதுகாப்பின்மையை முழு மனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள். குழந்தையின் பயம் அர்த்தமற்றதாக இருப்பினும் அதை அலட்சியப்படுத்தாதீர்கள். உதாரணமாக, குழந்தைக்கு கணக்கு பாடம் சிரமமாக இருப்பதாகக் கூறினால், அதை எளிதாகச் சமாளிக்க தாம் உதவுவதாகக் கூறி ஆறுதல் படுத்துங்கள்.

குழந்தை சுதந்திரமாக செயல்பட ஊக்கமளியுங்கள். தனியாகப் புதுப்புது முயற்சிகள் செய்ய வாய்ப்பளியுங்கள். அதில் கிடைக்கும் வெற்றி குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். தோல்வி வேறு புதிய முயற்சிகளுக்கு வழி ஏற்படுத்தும்.
 
 
எப்பொழுதும் குழந்தையுடன் சேர்ந்து சிரித்து மகிழுங்கள்.

குழந்தைக்கு எதில் அதிக ஆர்வம் என்பதைக் கண்டறிந்து அதில் தொடர்ந்த கவனம் செலுத்த குழந்தையை உற்சாகப்படுத்துங்கள். அது நடனமாகவோ, ஓவியமாகவோ, விளையாட்டாகவோ. எதுவாயினும் சரி! உங்களுக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தாலும் கூட!
உங்களுக்கு ஒரு சிறிய தேர்வு…

நீங்கள் பல முறை எச்சரித்தும், கேளாமல் உங்கள் குழந்தை ஒரு கையில் டம்ளர் வழிய பாலும், மற்றொரு கையில் உணவு தட்டும் கொண்டு வருகிறது. வழியில் கால் தவறி கீழே சிந்தி விடுகின்றது. உங்களுடைய செயல்பாடு என்னவாக இருக்கும்?

“நான் முன்பே உன்னிடம் பல முறை எச்சரித்திருக்கிறேன், உன்னால முடியாதுன்னு. பாரு.. இப்போ என்ன ஆச்சுன்னு” என்பது போல இருக்கிறதா?

அப்படியென்றால் அதை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். இப்படிச் சொன்னால் குழந்தையின் உணர்வுகள், கீழே சிந்தியதை விட மோசமாக பாதிக்கப்படும்.

மாறாக, இப்படிச் சொல்லிப் பாருங்கள்!

“நீ நன்றாக முயற்சி செய்தாய்.. முடியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை! அடுத்த முறை நீ ஒவ்வொன்றாக எடுத்து வா. தடுமாறாமல் எளிதாகக் கொண்டு வந்து விடலாம்.”

வண்ணத்துப் பூச்சி போல பறக்கும் உங்கள் குழந்தை!

எனவே, குழந்தையைத் திருத்துவதாக நினைத்து எதையும் நேரடியாகக் கூறக் கூடாது. குழந்தையின் தன்னம்பிக்கையைக் குலைக்காத வண்ணம் எப்படிக் கூறவேண்டும் என தீர்மானித்து சொல்ல வேண்டும்.

குழந்தையின் காதுபட எவரிடமும் குழந்தையைப் பற்றி குறையாக ‘சாப்பிட அடம் பிடிக்கிறாள் ; அழுகிறாள்’ என்று அடுக்கி விடாதீர்கள். ஏனெனில், பெற்றோருக்கு நம்மைப் பிடிக்கவில்லை என்று குழந்தை எண்ண ஆரம்பித்து விடும். இவ்வெண்ணம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

உங்களைப் பற்றி நீங்களே கூறும் சுயவிமர்சனமும் குழந்தையின் ஆளுமையை மாற்றக்கூடும். பொதுவாக குழந்தைகள் பெரியவர்கள் போல. அதிலும், தன் மனம் கவர்ந்த பெரியவர்களைப் போல நடந்து கொள்ள விரும்புவர். நீங்கள் ஏதாவது ஒரு செய்திக்கு அல்லது பிரச்சனைக்குக் கொஞ்சம் அதிகப்படியாக அலட்டிக் கொண்டால்… அவ்வளவுதான்! குழந்தை என்ன நினைக்கும் தெரியுமா? வாழ்வின் சவால்களை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை என்று எண்ணி கவலைப்படும். இது குழந்தையின் ஆரோக்கியமான எதிர்கால எண்ணங்களைச் சிதைக்கும்.

குழந்தையிடம் பேசுவதற்கு முன் நன்றாக யோசித்து சரியான சொற்களையே தேர்ந்தெடுங்கள்! குழந்தை ஏதேனும் குறும்பு செய்தால் அல்லது அனாவசிய கேள்வி கேட்டால் ‘முட்டாள் மாதிரி செய்யாதே’, ‘நீ ரொம்ப பிடிவாதம்’ என்று குழந்தைகளைக் கடிந்து கொள்வது இயல்பு. ஆனால் இவற்றை அதிகமாக அடிக்கடி கூறுவதால் ‘நாம் அது மாதிரிதானோ’ என்ற எண்ணம் குழந்தையிடம் ஏற்படலாம். எனவே எதிர்மறைச் சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுங்கள்.

இவையெல்லாம் எளிதாக பின்பற்றக் கூடியவை. ஒவ்வொரு பெற்றோரும் இதை உணர்ந்து பின்பற்ற ஆரம்பித்தால் எதிர்காலத்தில் ஆரோக்கியமான உலகைக் காண முடியும் அல்லவா?

உங்களது மேலான கருத்துக்களையும், குழந்தைகளுடனான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே…

குழந்தைகளின் சைக்காலஜி தெரியுமா உங்களுக்கு?


சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்க என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா? ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டால் படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? என்று கூறுவார்கள்.
குழந்தைகளை கையாள்வது எப்படி..
பொதுவாக குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் எது சரி எது தவறு என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். சேட்டை என்றால் என்ன? நாம் சந்தோஷமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம். நாம் வேறு மனநிலையில் இருக்கும்போது குழந்தை சாதாரணமாக மண்ணைத் தொட்டால் கூட குழந்தையை அடித்து கண்படி திட்டுவார்கள். சேட்டை என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல. நம்மை மையப்படுத்தி இருக்கிறது. முதலில் அதை உணர்வோம்.அடுத்து குழந்தை தன்னையோ, மற்றவர்களையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும். சேட்டை செய்தபிறகு அடிக்காமல் முன்பே விதிகளைச் சொல்லிவிட வேண்டும். விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாக கண்டிக்க வேண்டும்.


 
அடிக்காமல் வளர்ப்பது எப்படி?
குழந்தைகளை அடித்து சரிபடுத்த அவர்கள் மத்தளமல்ல. கண்டிப்பு என்பது, இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்துவது. சில குழந்தைகள் நான் உன்கூட பேசமாட்டேன் என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக் கொள்ளும். இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜி) உண்டு. முதலில் பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள வேண்டும். பொறுமை யின்மையின் காரணமாக,வேலைப்பளுவின் காரணமாக, நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன. அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

குழந்தை உரிமை மீறல்
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. இன்றைய குழந்தை நாளைய மனிதனல்லவா? இப்படித்தான் நிறைய நபர்களுக்குச் சந்தேகம் உள்ளது.


இதைப் பார்க்கும்போது, கலில் கிப்ரான் என்ற கவிஞர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால், உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர் பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை, அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளை திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். ஏனென்றால், ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை என்ற வரிகளுக் கேற்ப, குழந்தைகளை நாம் உருவாக்கின போதும், அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும், நாம் அவர்களை வன்முறைக்குள்ளாகக் கூடாது.

அடிக்கிற கைதான் அணைக்கும் என்னும் பழமொழி எல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? பேசிப் புரியவைத்து அந்தக் குழந்தையை நல்ல குழந்தையாக வளர்க்கலாம். நட்பாகப் பழகுவதன் மூலம் நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொள்ளச் செய்தால்,வளர்ந்த பிறகு நம்மை அணைப்பான்.இல்லாவிட்டால், அவனும் அடிக்கிற கை அணைக்கும் என்று நம்மை அடிப்பான். நாம் என்ன சொல்லிக் கொடுக்கிறோமே அதைத்தானே குழந்தைகள் செய்வார்கள்.ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்துத் தான் செய்ய வேண்டும். நிலத்தில் விதையை தூவி விட்டால் மட்டும் போதாது. தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லவா.குழந்தைகள் விதைகளைவிட முக்கியமானவர்கள். நல்ல பலன்தரும் விதைகளாக, விருட்சங்களாக, வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்க வேண்டும். பக்குவமாய் சொல்லிக்கொடுத்து பேசி வளர்க்க வேண்டும். உதாரணமாக ஒரு சிறுமியை அவள் தாய், நீ எதற்குத்தான் லாயக்கு..நீ பொறந்ததே வேஸ்ட் என்று திட்டிக்கொண்டே இருந்தால், அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக் குள்ளேயே தங்கிவிடும். சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே அவளால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகிவிடக் கூடும். பிறகு, அந்தப் பெண்ணின் தாழ்வு மனப் பான்மையை சரிசெய்வதே பெரும் பாடாகி விடும். உதாரணமாக 8 மாதக் குழந்தையை அதன் தாய் இடுப்பில் வைத்து சோறு ஊட்டும்போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத் தாய் எப்படியாவது இன்னும் இரு கவளத்தை அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார். அப்போதுதான் அந்தத் தாய்க்கு மனநிறைவு, மகிழ்ச்சி. தன் குழந்தைக்கு வயிறு நிறைய சோறு ஊட்டி விட்டதாக திருப்தி. ஆனால் அந்தக் குழந்தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாமல் தான் சாப்பிட்டதை சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்துவிடும் சூழலில், பார் பிடிவாதத்தை, அது அப்பனைப் போலவே இருக்கு என்று தன் கணவனையும் சேர்த்துத் திட்டி தன் குழந்தைக்கும் இரண்டு அடி வைப்பார் தாய்.இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது. ஒரு தாய் தன் அளவுக்கு மீறிய அன்பினால் செய்யக்கூடிய வன்முறையைக் காட்டுகிறது. வாந்தி எடுத்தால் தன் குழந்தை எங்கே இளைத்துவிடப்போகிறதோ என்ற அதீத பயத்தினால், அக்கறையினால் அந்தக் குழந்தைக்கு இலவசமாக இரண்டு அடியும் கொடுக்கிறார். ஏற்கனவே வாந்தி பண்ணியதால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடு, சேர்ந்து அடியும் வாங்கியதால், அந்தக் குழந்தை மேலும் மேலும் வன்முறைக்குள்ளாகிறது. இந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை.இதெல்லாம் வன்முறையா நாங்கள் என்ன நினைக்கின்றோம் என்றால், குழந்தையை ஒழுங்காகவும், நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்து வளர்க்கிறோம் என்று நினைப்பார்கள்.கண்டிப்பது என்பது வேறு, தண்டிப்பது என்பது வேறு.
கண்டிப்பது என்பது ஒரு செயலைச் செய்யும்போது நல்லது எது கெட்டது எது என்பதைப் புரிய வைப்பது.தண்டிப்பது என்பது, குழந்தைகளுக்கு முன்பே புரிய வைக்காமல், அவர்கள் புரியாமல் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை அடித்து துன்புறுத்தி வன்முறைக்குள்ளாக்குவது. ஒரு குழந்தை ஒரு செயலை ஆர்வமாகச் செய்கிறது என்றால்,அது நல்ல விஷயமாக இருந்தால் அதனை ஊக்கப்படுத்தி அந்த செயலை சரியாகச் செய்ய வழிகாட்டவேண்டும். மாறாக அதன் தலையில் தட்டி அதிகப் பிரசங்கி என்று மூலையில் உட்கார வைத்துவிடக்கூடாது.குழந்தைகள் தவறு செய்தால், அன்பான கண்டிப்புடன் எளிய முறையில் குழந்தைகளுக்கு புரிய வைப்பதுதான் நல்லது. தண்டிப்பது குழந்தையை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, பிற்காலத்தில் தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும். பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிப்பதால், அவர்கள் ஒருவித எதிர்மறையான எண்ணங்களை குடும்ப உறுப்பினர் மீது ஏற்படுத்திக்கொண்டு, மறைமுகமான தீய பழக்கங்களுக்கு ஆட்கொண்டு விடுவார்கள். அன்போடும் ஆதரவோடும் புரியவைத்தால், எதிர்காலத்தில் குழந்தைகள் நல்ல மனிதர்களாக வலம் வருவார்கள்.

நன்றி;நக்கீரன்