புதன், 10 ஆகஸ்ட், 2011

மிக்ரேயின் (migraine )

 

தலையிடியை ஏற்படுத்தும் நோய்களில் பொதுவானது மிக்ரேயின் (migraine)ஆகும்.

இது ஆண்களைவிட பெண்களையே அதிகமாகத் தாகும். இளம் வயதிலேயே இது அதிகமாக ஏற்படும்.வயது போகப் போக இந்த நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் குறையும்.

இந்த நோயின் தன்மை,தீவிரம் என்பவை ஆளுக்கு ஆள் வேறுபாடும். அத்தோடு இந்த தாக்கம் ஏற்படும் இடைவெளியும் ஆளுக்கு ஆள் வேறுபாடும்.
அதாவது சில பேரிலே ஏற்படும் தலையிடி தீவிரமானதாக இருப்பதோடு அவர்களின் அன்றாடச் செயற்பாடுகளையும் பாதிக்கலாம்.சில பேரிலே பல வருடத்திற்கு ஒருமுறையே இந்த நோய் தாக்கும் அதே வேளை சில பேரில் அடிக்கடி அத்தாக்கம் ஏற்படலாம்.

இந்த நோய் உள்ள சில பேரிலே தலையிடி தொடங்குவதற்கு சில மணித்தியாலங்களுக்கு (24மணித்தியாலம் வரை) சில மாற்றங்கள் ஏற்படலாம்.அவை Aura எனப்படும்.அவை தலையிடி தொடங்கப்போகுது என்பதற்கான அறிகுறி என்று அவர்களால் உணரக்கூடியதாக் இருக்கும்.


அவ்வாறான மிக்க்ரேயினுக்கு முன் தோன்றும் அறிகுறிகள்,
 1. தாகம் அதிகரித்தல்
 2. மனிநிலை மாற்றம்
 3. உடம்பிலே சக்தி கூடிய உணர்வு 
 4. பலவீனமான உணர்வு 
 5. பசியிலே மாற்றம் (கூடுதல்/குறையுதல்)

இவ்வாறு வேறுபட்ட உணர்வுகள் தலையிடி தொடங்குவதற்கு முன் எச்சரிக்கை உணர்வாக ஏற்படலாம்.

இவ்வாறான எச்சரிக்கை உணர்வோடு ஏற்படுகின்ற மிக்ரேயின் கிளாசிக்கல் மிக்ரேயின்(classical migraine) எனப்படும்.ஏனையவை common migraine  எனப்படும்.

மிக்ரேயினின் அறிகுறிகள்..

 1. தலையிடி
 2. வாந்தி/வாந்தி வருவது போன்ற உணர்வு
 3. பார்வை மங்குதல் 
 4. வெளிச்சத்தில் இருந்தால் தலையிடி கூடுதல்
 5. குறிப்பிட்ட சில பதார்த்தங்களின் மணம் வலியை அதிகரித்தல் 
 6. களைப்பாக உணர்தல் 
 7. வியர்த்தல்
 8. குளிராக உணர்தல்..

ஒவ்வொரு தடவை மிக்ரேயின் தாக்கும் போதும் இது சில மணிநேரங்கள் தொடக்கம் மூன்று நாட்கள் வரை தொடரலாம்.

சில விடயங்கள் மிக்ரேயின் ஏற்படுவதைத் தூண்டலாம். ஆகவே எந்த விடயத்தால்  மிகிரேயின் அதிகரிக்கிறதோ அதை நோயாளி தவீர்த்தல் வேண்டும்.

நோயைத் தூண்டக் கூடிய விடயங்கள்.

 1. சிலவகை உணவுகள் 
 2. சில வகையான மணங்கள்,அதிகமான சத்தம், வெளிச்சம்
 3. சில காலநிலை மாற்றங்கள் 
 4. அதிகரித்த வேலைப் பளு
 5. புகைத்தல்
 6. சில வாசனைத் திரவியங்கள்
 7. போதிய உறக்கமின்மை
 8. மாதவிடாய்
 9. சாப்பாடுகளைத் தவற விடுதல்(நேரத்திற்கு சாப்பிடாமை

மிக்ரெயினைத் தூண்டக்(ஏற்படுத்தக் கூடிய) கூடிய உணவுகள்

 1. நீண்ட நாட்களாக பதப்படுத்தப்பட்ட இறைச்சி
 2. சொக்கலேட்
 3. சீஸ்
 4. கொக்கோ கலந்த உணவுகள்
 5. மது (குறிப்பாக ரெட் வைன்)
 6. பட்டர் 
 7. சோயா சோஸ் 
 8. பப்பாசி 
 9. பேஷன் புருட்
 10. அதிகரித்த வெங்காயப் பாவனை
 11. அதிகரித்த கோப்பிப் பாவனை

இவை தவிர இன்னும் ஏராளாமான உணவுகள் இருக்கலாம்.மிக்ரேயின் நோயாளி ஒருவர் தனக்கு ஏதாவது உணவுகள் மூலம் அந்த நோய் ஏற்படுவது அதிகரிக்கிறது என்று நினைத்தால் அந்த உணவுகளைத் தவீர்த்தல்வேண்டும்.

மருந்துகள்

இந்த நோய்க்கு இரண்டு விதமான மருந்துகள் உள்ளன

1. நோய் ஏற்பட்டவுடன் வழியை நீக்கும் தற்காலிக மருந்துகள்
பரசிட்டமோல்,இவ்புருபான் போன்ற வைத்தியரின் துண்டு இல்லாமல் வங்கக் கூடிய மருந்துகளைப் பாவிக்கலாம். 

2.நோய் ஏற்படாமல் தடுக்கும் மருந்துகள்
எல்லா நோயாளிகளுக்கும் இந்த மருந்து வழங்கப்படுவதில்லை.மிக்கிறேயின் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களின் வாழ்க்கையைப்பாதித்தாலோ அல்லது வருடத்திற்கு நான்கிற்கு மேட்பட்ட தடவைகள் இந்த நோய் ஏற்பட்டாலோ மாத்திரமே இந்த மாத்திரைகள்வழங்கப்படும். இது வைத்தியர்களாலேயே வழங்கப்பட வேண்டும்.

மாத்திரைகள் தவீர இந்த நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு செய்ய வேண்டியவை

1.மேலே சொன்ன நோயை தூண்டும் காரணிகள் ஏதாவது உங்களுக்கு நோயை ஏற்படுத்துமாயின் அவற்றைத் தவிர்க்க வேண்டும்
2.போதியளவு தூக்கம் அவசியம் 
3.போதியளவு நீராகாரம் 
4.மன அழுத்தத்தைக் குறையுங்கள்
5.போதியளவு உடற்பயிற்சி
6.உடல் பருமனானவர்கள் உடல் நிறையை குறைக்க வேண்டும்


நோய் ஏற்பட்டவுடன் வலியைக் குறைப்பதற்கான வழிமுறைகள்

1.அமைதியான இருட்டறையில் படுத்திருங்கள்
2.ஈரத் துணியினால் தலை போர்த்திவிடுங்கள்
3.நன்கு தலையில் மசாஜ் செய்யுங்கள் 


சிறுகுழந்தைகளில் மிக்ரேயின் 

சிறுகுழந்தைகளுக்கு மிக்கிறேயின் நேரத்தில் வயிற்று வலி ஏற்படலாம். இது .. எனப்படும்.உங்கள் குழந்தைஅடிக்கடி வயிற்று வலி என்று கூறினால் அது சில வேளைகளில் மிக்கிறேயினாக இருக்கலாம்

மிகிரேயின் சுகமான பின்பு

சில பேரில் சந்தோஷமான புது உணர்வு ஏற்பட்ட மன நிலை ஏற்படும்.
சில பேரில் கழைப்புத் தன்மை சில நாட்களுக்கு நீடிக்கலாம். .

ஆபாச தளங்களை குழந்தைகள் பார்க்காமல் தடுக்க

 

இணையம் என்பது உலகலாவில் பரந்துபட்ட ஓர் வலையமைப்பு ஆகும். இணையத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் காணக்கிடைத்தாலும் அதற்கு நிகராக தீய விடயங்களும் காணப்படத்தான் 
செய்கின்றன.
இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்களாக சிறுவர்கள் காணப்படுகின்றனர். இணையத்தின் உண்மைத்தன்மையை புரியக்கூடிய வயது
அவர்களுக்கு இல்லாத பட்சத்தில் தற்போது சமூக வலையமைப்புக்கல் மற்றும் அரட்டை அறைகள் போன்றவற்றிலே அதிகமான தவறுகள் நடக்குமிடமாக காணப்படுகின்றது.
கட்டிளமைப்பருவத்தில் அவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என புரிந்து கொள்வது கடினமாகவிருக்கும் ஆனால் இதுவே அவர்களின் வாழ்க்கையை பாதாளத்துக்கு இட்டுச்சென்று விடும். பெற்றோர் இது தொடர்பாக கவனமெடுக்கவேண்டும்.சிறுவர்களை இணைய செயற்பாடுகளில் இருந்து பாதுகாப்பதற்கு மேலத்தேய நாடுகளில் கடினமான சட்டங்கள் அமுலில் உள்ளது. எனும் பாதிக்கப்படுபவர்கள் பாதிக்கப்பட்டுக கொண்டுதான் இருக்கின்றனர்.
சரி நாம் இன் இவற்றில் இருந்து எப்படி சிறுவர்களை பாதுகாக்கலாம் என இனிப் பார்ப்போம்.
விடுகளில் சிறுவர்கள் இணையத்திளை பாவிக்கும் சந்தர்ப்பங்களில் பில்டர்களினை (Cyper patrol) உபயோகிக்கலாம். உதாரணமாக தேடுபொறிகள் அதிகமாக ஆபாசத் தளங்களையே முன்னிலைப்படுத்திக்’ காட்டும் ஏனெனில் அதுதான் அவர்களின் விளம்பர உத்தி.
நாம் இவ் பில்டர்களை பாவிக்கும் போது நாம் குறிப்பிட்ட சொற்களை இணையத்தில் காட்டாத பிரசுரிக்காத வண்ணம் நாம் செய்து கொள்ளலாம். மற்றும் சிறுவர்களின் நடவடிக்கைகளினை இணையத்தில் கண்காணிப்பதற்கு கிலோக்கர்களினை (Key logger) உபயோகிக்கலாம். இவை கணணியை இயக்கியதில் இருந்து அவர் கணணியில் என்ன செய்கிறார் என்கின்ற அனைத்து தரவுகளையும் அவருக்குத் தெரியமால் இவை சேமிக்கும். தேவையெனில் நிமிடத்துக்கொரு தரம் கணணியில் என்ன செய்கிறார் என்னபதனை Screen Shot மூலமாக பிடித்து சேமித்தும் வைக்கக் கூடியவை இந்த கீலோக்கர்கள்.
இவற்றினை உபயோகிப்தன் மூலம் சிறார்களுக்கு தெரியமாலே அவர்களினை நாம் பாதுகாக்கலாம்.
குறித்த மென் பொருட்களை தரவிறக்கம் செய்ய கீழ் உள்ளவற்றை பார்க்கவும்

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி ?

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி ?

நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,

விபரங்களுக்கு Click here

இங்கே கிளிக் செய்யவும்.

அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்
பிறகு

பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்தான் அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் .....

மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான பத்துக் கட்டளைகள்.
 
1.கடைசி நிமிடப் பரபரப்பைத் தவிருங்கள்.  
  
எங்காவது செல்ல வேண்டுமென்றால் ஓர் அரை மணி நேரம் முன்பாகவே கிளம்புவது, காலையில் ஒரு பதினைந்து நிமிடம் முன்னதாகவே எழுந்து விடுதல், பயணத்திற்குத் தேவையானவற்றை முந்தின நாளே எடுத்து வைத்துக்கொள்வது, போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

2.        ஒரு நேரம் ஒரு வேலையை மட்டுமே செய்யுங்கள்.

எட்டு வேலைகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு ஒன்பதாவது வேலையைச் செய்துகொண்டிருந்தால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். என்ன செய்யவேண்டும் என்பதைப் பட்டியலிடுங்கள். மிக முக்கியமான விஷயங்களை முதலில் செய்யுங்கள். எல்லா வேலைகளையும் செய்ய வேண்டுமென்ற கட்டாயமில்லை. போதுமான ஓய்வு நேரம் உங்கள் பட்டியலில் நிச்சயம் இருக்கட்டும்.

3.      உங்களுக்கு மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்களை ஒதுக்குங்கள்.

இரைச்சல், வெளிச்சம், தாமதம், சிலவகை வாசனைகள், சில நபர்கள்………. இத்தியாதி….. இத்தியாதி என இந்தப்பட்டியல் எவ்வளவு பெரிதாக வேண்டுமானால் இருக்கலாம். முடிந்தவரை ஒதுக்குங்கள். ஒதுக்க முடியாத சூழல்களில் நீங்களே கொஞ்சம் ஒதுங்கிப் போய் விடுங்கள்.

4.       உடற்பயிற்சி செய்யுங்கள்.

ஆரோக்யமான உடல், மன அழுத்தத்தின் எதிரி. உடலில் ரத்த ஓட்டமும், ஆக்சிஜன் விநியோகமும் சீராக இருக்கும்போது மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே மூச்சுப் பயிற்சி போன்றவையும், வாக்கிங், ஜாகிங், போன்றவையும் உங்கள் தினசரி அட்டவணையில் இடம் பெறட்டும்.

5.      தீய பழக்கங்களை கை கழுவி விடுங்கள்.

புகை, மது, போதை போன்றவைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் காரணிகள்.

6.   எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

திருப்தியடையும் மனநிலை இருந்தால் வாழ்க்கை அழகாகும். குழந்தைகளுக்கு மன அழுத்தம் வருவதில்லை. காரணம் அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

7.   ஒரு நல்ல பொழுதுபோக்கை கைவசம் வைத்திருங்கள்.

உங்களுக்கு ரொம்பவே பிடித்த விஷயமாய் அது இருக்கட்டும். உங்களுடைய மனதை உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் வைத்திருக்க அது உதவும். குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பது, செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது என தினமும் கொஞ்ச நேரம் செலவிடுங்கள்.

8.   பாசிடிவ் சிந்தனைகளை மனதில் கொண்டிருங்கள்.

நடந்து முடிந்த நிகழ்வுகளின் மோசமான பக்கங்களை அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்.

9.   சின்னச்சின்ன வெற்றிகளைக்கூட கொண்டாடுங்கள்.

சின்னச் சின்ன வெற்றிகளின் கூட்டுத்தொகையே பெரிய வெற்றி என்பதை மனதில் எழுதுங்கள்.

10. பிறருடன் நம்மை ஒப்பிடாதீர்கள்.

பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது தேவையற்ற மன அழுத்தத்தை கொண்டு வந்து சேர்க்கும். அவர்களுடைய வெற்றி, தோற்றம், அந்தஸ்து, பணம் என எதை ஒப்பிட்டாலும் அது உங்களுக்கு மன அழுத்தத்தையே தரும்

செல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில வழிமுறைகள்கண்டிப்பாக இந்த தலைமுறையினர் பெரும் பாக்கியம் பண்ணி இருக்க வேண்டும். எவ்வளவு சொகுசான வாழ்க்கை எந்த மூலையில் நடந்தாலும் அதை உடனே அறிய தொலைகாட்சிகள், இடம் விட்டு இடம் பெயர சொகுசு கார்கள், தகவலை ஒரு ஒரே நொடியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தெரிவிக்க போன் வசதி அதிலும் செல்போன்கள் வசதி இன்னும் பிரமாதம் பெரும்பாலானாவர்கள் இந்த செல்போன்களுக்கு அடிமையாகவே ஆகிவிட்டனர். இதில் உள்ள வசதிகளால் இந்த செல்போன்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது. 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த செல்போன்களில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இந்த செல்போன்களின் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. இந்த செல்போன் கதிர் வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas)  புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் செல்போன் உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விஷயம் நாம் செல்போன் உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.  

இந்த செல்போன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்று சில வழிமுறைகளை கீழே காண்போம்.
Ø  முடிந்த அளவு செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம்.
Ø  ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்
Ø  குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.
Ø  உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
Ø  காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
Ø  தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்
Ø  நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
Ø  செல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
Ø  செல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிற்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

Ø  செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.

Ø  செல்போன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்

Ø  போனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.