வியாழன், 11 ஆகஸ்ட், 2011

10 நிமிட உறவில் திருப்தியை எட்டலாம் – ஆய்வுதாம்பத்ய உறவில் திருப்தி, மகிழ்ச்சி என அனைத்தையும் அனுபவிக்க, உணர நீண்ட நேரம் தேவையில்லை, வெறும் பத்து நிமிடமே போதுமானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. அநேகம் பேருக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம், சிலருக்கு அப்படியெல்லாம் இல்லை என்ற எதிர்ப்பு எழலாம். ஆனால் உண்மையில் பத்து நிமிட செக்ஸ் உறவில் போதுமான திருப்தியும், மகிழ்ச்சியையும் எட்ட முடியும் என்கிறது அந்த ஆய்வு.
செக்ஸ் பிரச்சினைகள் தொடர்பான அறிவுரை, சிகிச்சை முறைகளைக் கொடுக்கக் கூடிய செக்ஸ் தெரப்பி மற்றும் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த 50 பேர் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட சுவாரஸ்யமான சில விஷயங்கள்…

உறவுக்கு ஏற்ற கால அளவு

சிலருக்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும். நீண்ட உடலுறவைக் கொடுத்தால்தான் பார்ட்னருக்கு திருப்தி கிடைக்கும், மகிழ்ச்சி கிடைக்கும் என்று ஆண்களும், பெண்களும் எண்ணுவதால் பல அவுசகரியங்களே ஏற்படுகிறது. மேலும் அதுபோல நடப்பதும் இல்லை. இதனால் ஏமாற்றமும், விரக்தியும் ஏற்படுகிறது.

இரவு முழுவதும் உல்லாசமாக இருந்தால்தான் திருப்திகரமாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. உண்மையில் திருப்தியான உறவுக்கு 7 முதல் 13 நிமிடங்கள் அல்லது பத்து நிமிடங்கள் போதும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.


இருவருக்கும் ஏற்ற நிமிடங்கள்

ஒன்று முதல் 2 நிமிடம் வரையிலான உறவு என்பது மிக மிக குறுகியது. இதில் இருவருக்குமே திருப்தி கிடைக்காது. 3 முதல் 7 நிமிடம் வரை என்பது நார்மலானது. இதில் இருவருக்கும் முழு திருப்தி கிடைக்கும். 13 நிமிடங்கள் வரை நீடிப்பது என்பது மிகவும் நீளமானது. இதிலும் இருவருக்கும் திருப்தி இருக்கும், அதேசமயம், கூடவே சில அசவுகரியங்களையும் சந்திக்க நேரிடும். எனவே 7 முதல் 13 நிமிடங்கள் வரை என்பது இரு தரப்புக்கும் ஏற்ற, பொருத்தமான, சரியான கால அளவாகும். அதிலும் 10 நிமிடம் என்பது மிகவும் பர்பக்ட் ஆன கால அளவு.


முன் விளையாட்டுக்கள்

உறவுக்கான கால அளவு வெறும் பத்து நிமிடமே போதுமானது என்கிறது ஆய்வு அதேசமயம், உறவுக்கு முந்தைய விளையாடல்கள், சீண்டல்கள் போன்றவற்றுக்கு இவ்வளவு நேரம்தான் என்று கணக்கில்லை. அது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீடிக்கலாம். ஆனால் உச்சகட்ட உறவுக்கு பத்து நிமிட அவகாசம் என்பது சரியானது, பொருத்தமானது, போதுமானது என்கிறது ஆய்வு முடிவு.

இரவு நீண்டிருந்தாலும், நம் உறவுக்கு தேவை சில நிமிடங்கள் மட்டுமே. இதை புரிந்து கொண்டு உறவில் இறங்கினால் குழப்பங்கள், கவலைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உண்மையைப் புரிந்து கொண்டு எதார்த்தமாக உறவுக்குள் நுழைவதே மனதுக்கும், நமது உடலுக்கும், செக்ஸ் வாழ்க்கைக்கும் சிறந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள்


கர்ப்பிணிகள் ஓவனை பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும்

 
கர்ப்பிணிகள் மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் ஆகிய சாதனங்களுக்கு அருகில் நீண்ட நேரம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வர வாய்ப்பு அதிகம் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
 
அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளிடம் ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர். மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் உள்ளிட்ட மின்காந்த சக்தி(மைக்ரோவேவ்) அதிகம் உள்ள கருவிகளின் பயன்பாடு பற்றி 801 கர்ப்பிணிகளிடம் கருத்து கேட்டனர்.

பின்னர் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் மருத்துவ விவரங்களை தொடர்ந்து பதிவு செய்து வந்தனர். 13 ஆண்டுகள் கழித்து அந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான அறிகுறிகள் பற்றி ஆராய்ந்தனர்.

மின்காந்த கருவிகளை குறைவாக பயன்படுத்தியவர்களைவிட அதிக நேரம் பயன்படுத்திய கர்ப்பிணிகளின் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வாய்ப்பு 3 மடங்கு அதிகமாக இருந்தது தெரியவந்தது.

கர்ப்பிணிகள் மின்காந்த கருவிகளின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது அவசியம் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. அத்துடன் அவை இயங்கும் போது அருகில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதை தடுக்க முடியும் என ஆய்வுக் குழுவின் தலைவர் டிகுன் லி தெரிவித்துள்ளார்.

கோவையிலுள்ள மருத்துவப்பயன்கள் !

 
1. மூலிகையின் பெயர் :- கோவை.

2. தாவரப்பெயர் :- COCCINIA INDICA.

3. தாவரக் குடும்பம் :- CUCURBITACEAE.

4. பயன் தரும் பாகங்கள் :- இலை, காய் மற்றும் கிழங்கு.

5. வளரியல்பு :- கோவைக் கொடி நன்கு படர்ந்து வளரக் கூடிய கொடி இனத்தைச் சேர்ந்தது. இது சாதாரணமாக வேலிகளிலும், குத்துச்செடி, மரங்களிலும் படர்ந்து தமிழகமெங்கும் வளரக்கூடியது. இதன் இலைகள் ஐந்து கோணங்களையுடைய மடலான காம்புடையது. மலர்கள் வெள்ளையாகவும், நீண்ட முட்டை வடிவ வரியுள்ள காய்களையும், பழங்கள் செந்நிரமாக இருக்கும். பெண்களின் உதடுகளை இந்தப் பழத்திற்கு ஒப்பிடுவர் புலவர்கள். வேர் கிழங்காக வளரும்.

6. மருத்துவப்பயன்கள் :- கோவை சிறுநீர், வியர்வை ஆகியவற்றை மகுதிப்படுத்தும் குணமுடையது. வாந்தியை உண்டாக்கும் தன்மையுடையது. இரத்த சர்கரையை (Blood sugar) குணப்படுத்த வல்லது.

கோவையின் ஒரு பிடி இலையை 200 மி.லி. நீரில் சிதைத்துப் போட்டு 100 மி.லி. யாகக் காச்சிக் காலை மாலை குடித்து வர உடல் சூடு, கண்ணெரிச்சல், இருமல், நீரடைப்பு, சொறிசிரங்கு, புண் ஆகியவை போகும். இதன் இலைசாறு 30 மி.லி. காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர மருந்து வேகம் தணியும்.

கோவைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகி வரச் சொறி, சிரங்கு, படை, கரப்பான் ஆகியவை தீரும். கோவையின் பச்சைக் காய் இரண்டை தீனமும் சாப்பிட்டு வர மதுமேகத்தைக் தடுக்கலாம்.

கோவைக் கிழங்குச் சாறு 10 மி.லி. காலை மட்டும் குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா) இரைப்பு, கபரோகம், மார்புச்சளி, மதுமேகம், கண்டமாலை, வீக்கம் ஆகியவை தீரும்.

கோவைக்காயை துண்டு துண்டாக வெட்டி, வெய்யிலில் நன்கு காயவைத்துப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி வீதம் மூன்று வேளை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை நோய் குணமாகும். பச்சைக் காயை வாரம் இருமுறை பொறியல் செய்தும் சாப்பிடலாம்.

ரொமன்ஸ் ரகசியங்கள் !

 

திருமணமாகி இல்லற வாழ்க்கையில் இணைந்த தம்பதிகள் நான்கு சுவர்களை கொண்ட ஒரு இல்லத்தில் வசிக்கும் போது ஒரு சில விசயங்களை பின்பற்ற வேண்டும். நம் இல்லத்தின் ஒவ்வொரு அறையும் ஒரு கதை சொல்லும். சமையலறையில் தொடங்கி படுக்கை அறை வரை சங்கீதம் இசைக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்.

ரொமன்ஸ் ரகசியங்கள்

படுக்கை அறை என்பது தூங்கி ஓய்வெடுப்பதற்கு மட்டும் அல்ல.. மனதை ரிலாக்ஸ் செய்து மகிழ்வதற்கும் ஏற்ற அறை. ஆனால், அங்கும் சில சிரமங்கள், பிரச்னைகளை  சந்திக்க வேண்டியுள்ளது. தம்பதிகள் அவற்றை பெரிதுபடுத்தாமல் சமாளிக்க பழகி கொண்டால் ரொமன்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் குடும்ப நல நிபுணர்கள்.

மனம் விட்டுப் பேசுங்கள்

பார்ட்னருடன் மனம் விட்டுப் பேசினால், மென்மையாக எடுத்துச் சொன்னால் சிறிய அளவாக இருக்கும்போதே பிரச்னைகளை அகற்றிவிடலாம். படுக்கைஅறை போல வாழ்க்கையும் இன்பமாகும். ரொமான்ஸ் அதிகரிக்கும் . இல்லற இன்பத்துக்குப்பின் சிலருக்கு உடனடியாக தூக்கம் சொக்கும். பார்ட்னர்   சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க பிரியப்படலாம்.. எனவே சிறிது நேரம் தூக்கத்தை தியாகம் செய்து துணையுடன் பேசுங்கள். பெரும்பாலும் இதுபோன்ற சின்னப்
பிரச்னைதான் விஸ்வரூபமெடுத்து பிரிவு வரை கொண்டு செல்கிறது.

அந்நியருக்கு இடமில்லை

கணவன் மனைவியின் சில அந்தரங்கங்களை எவ்வளவு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் நண்பர்கள் உள்பட யாரிடமும் வெளியிடக்கூடாது. நம்பிக்கைக்குரியவர்கள், பெற்றோர் உதவியை நாட வேண்டும். பூசல்கள் மிகுந்தாலும் அந்நியரை மூக்கை நுழைக்க விடக்கூடாது. தம்பதிகள் தங்கள் வளர்ச்சியை மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. விரும்பிய மாற்றங்கள், வளர்ச்சி ஏற்படாததற்கு ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சுமத்தாதீர்கள்.

போட்டி தேவையில்லை

திருமணம் என்பது `நீயா நானா’ போட்டியல்ல. கணவன்- மனைவி ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு ஒருவரின் தேவையை நிறைவு செய்ய மற்றவர் துணைபுரிய வேண்டும். இருவர் இணைவதே சேர்க்கையால் கிடைக்கும் முழுமையை
அனுபவிக்கத்தான்.

இயந்திரத்தனமான உடலுறவு ஆபத்தானது. உங்கள் பலவித எதிர்பார்ப்புகளும் உடனே நிறைவேறும் என்று எண்ணக்கூடாது. மருத்துவரை அணுகுவது நல்ல பலன் தரும். அதைவிடுத்து தேவையற்ற ஆலோசனைகள் சிக்கலை உண்டாக்கும்.

சுய இன்பம் ஆபத்தா?

sex-10-05-11
நிறைய பேருக்கு இதில் பெரும் குழப்பமே இருக்கும். ஆனாலும் இது ஒன்றும் தலை போகும் பிரச்சினை அல்ல என்பதே டாக்டர்களின் கருத்து. காலத்தே பயிர் செய் என்பார்கள்.. இது விவசாயத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் கூட நிறையவே பொருந்தும். இளம் பிராயத்தில் குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் இந்த சுய இன்பப் பழக்கம் அத்தனை பேரையும் ஆட்டிப்படைத்திருக்கும். இதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. இதுகுறித்து வெட்கப்படவும் தேவையில்லை. அந்த வயதில் டீன் ஏஜினர் சந்திக்கும் பல முக்கியப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.

சிலருக்கு 12-15 வயதில் தொடங்கிய சுய இன்பத்தை விட முடியாமல் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வழக்கமும் உண்டு. இதனால் அவர்களுக்கு எதிர்கால செக்ஸ் வாழ்க்கை எப்படி ஆகுமோ என்ற கவலை ஏற்படுவது இயற்கை.

இதுகுறித்து டாக்டர்கள் சொல்வது என்ன...?

டீன் ஏஜ் வயதில் வரும் பிரச்சினைகளில் சுய இன்பமும் ஒன்று. அந்த வயதில் வரும் மிகச் சாதாரண பிரச்சினைதான் இது. அதிலிருந்து தப்பி விடுபவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பார்கள், செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், அதில் சிக்கியவர்கள் கதி அதோ கதிதான் என்ற எண்ணம் நிறைய பேருக்கு உள்ளது. இரண்டுமே தவறு.

சிறு வயது முதல் 25-30 வயது வரை சுய இன்பத்திற்கு அடிமையானவர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்கள் அனைவருமே செக்ஸ் வாழ்க்கையில் பின் தங்கினர் என்று கூற முடியாது. அது அவரவர் மனதைப் பொறுத்தது.

நமக்குள் ஏற்படும் செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வழிதான் இந்த சுய இன்பம். இயற்கையாகப் போக வேண்டிய உணர்வுகளை, செயற்கையாக நாம் வெளியேற்றுகிறோம், அவ்வளவுதான்.இதனால் நமது செக்ஸ் உணர்வுகளோ அல்லது செக்ஸ் உறவின்போதான செயல்பாடுகளையோ இது பாதிக்கும் என்று கூற முடியாது.

சிலருக்கு கவர்ச்சிகரமான பெண்களின் படங்களைப் பார்த்தால் உடனே செக்ஸ் உணர்வு அதிகரித்து சுய இன்பவம் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றும். அதை அடக்காமல் வெளியேற்றி விடுவது ஒரு வகையில் நல்ல விஷயம்தான்.

சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அதை விடுவது எளிதல்ல. ஏன், திருமணமான பிறகும் கூட சுய இன்பத்தைத் தொடருபவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

இதனால் செக்ஸ் வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுமோ என்ற பயம் மட்டும் நிச்சயம் தேவையில்லை. எதுவும் தலைக்கு மேல் போய் விடாது. உங்களது மனதை ஒருநிலைப்படுத்த முயற்சித்தால் நீங்கள் சுய இன்பத்திலிருந்து விடுபட முடியும். மனக் கட்டுப்பாட்டுக்கு நல்ல பயிற்சி எடுங்கள். சுய இன்பத்தை தடாலடியாக நிறுத்தி விட முயற்சிக்காதீர்கள். படிப்படியாக குறையுங்கள்.

அதுபோன்ற சமயத்தில், வேறு பக்கம் கவனத்தை திருப்ப முயற்சியுங்கள். அப்படியும் முடியவில்லை என்றால் செய்து விடுங்கள்.

நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல விஷயங்களை அறிய முயற்சிப்பது, தேடுதல் நோக்கத்தை வேறு பக்கம் திருப்புவது, யோகாசனம், ஆரோக்கியமான செயல்பாடுகளில் கவனத்தைத் திருப்புதல் என சுய இன்பத்திலிருந்து மீள நிறைய வழிகள் உள்ளன.

தேவைப்பட்டால் ஒரு மன நல ஆலோசகரை அணுகி ஆலோசனை கேட்கலாம். அவர்கள் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்கள்.

சிலருக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் இருக்கலாம். அதாவது கவர்ச்சிகரமான படத்தைப் பார்த்தாலோ அல்லது அதுபோன்றவற்றை கேட்டாலோ, மனதில் நினைத்தாலோ கூட அவர்களுக்கு விந்தணு வெளியேறி விடும். அப்படிப்பட்டவர்கள் டாக்டரைக் கன்சல்ட் செய்யலாம்.

ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கூட இந்த சுய இன்பச் சிக்கல் ஏற்படுவது சகஜமானதுதான். இரு பாலினரும் இதை உரிய முறையில் அணுகினால் எந்தத் தொந்தரவும், மனப்புழுக்கமும் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

மொத்தத்தில் இது பெரிய பிரச்சினையே அல்ல, மாறாக உங்களது நம்பிக்கைக்கு விடப்படும் சவால், அவ்வளவுதான். அதை நீங்கள் வென்றால் சுய இன்பத்திற்கு வேலையே இல்லை.

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும் முன்பே கருவிலேயே. ஆண், பெண் தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் ஜீன்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டுவிடுகின்றன. அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்து சமாச்சாரங்களுமே பதியப்படுகின்றன.உதாரணமாக, ஒரு பெண் குழந்தையின் கருவில், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி வேகமாகத் தான் இருக்கும்., அல்லது மெல்லத்தான் இருக்கும், அல்லது நிதானமாகத்தான் இருக்கும் என பதியப்பட்டுவிடும். அந்தக் குழந்தை வளர்ந்து 14 வயதில் பருவம் அடையும் என்பதெல்லாம் கூட கருவிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும்.அந்தக் கட்டளையை மீறாமல், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண்டே வரும்., அதை யார் நினைத்தாலும் மாற்றி அமைக்க முடியாது.

இயற்கையை வென்றது யார் தான்...?அந்த வகையில் பார்த்தால், உடல் செயலியல் எனப்படும் பிசியாலஜியிலும் இதே போல ஏகப்பட்ட நுணுக்கமான விஷயங்கள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பிட்ட காலம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணுக்கு, விந்துப்பை வளர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தயும் தொடங்கிவிடுகிறது.அதே போல, பெண்ணுக்கு, பருவம் அடைந்தது முதல், கருப்பையும் வளர்ச்சி அடைந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கருமுட்டைகளும் உற்பத்தியாகின்றன. இதில் சில விதிமுறைகள் உண்டு. அவற்றை மீறினால் இயற்கைக்குப் புறம்பாக நடக்கும் போது ஏற்படும் விளைவுகள் உண்டாகும்

உதாரணமாக, ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண்ட நாட்களாக அடக்கி வைத்துக்கொண்டே இருந்தால், என்னவாகும்? அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின்விளைவுகளாக சில உடல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பிக்கும்.தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்படுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்பதோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்து போகும். இது உயிரியல் அறிஞர், டார்வின் கண்டுபிடித்த உண்மை.அந்த வகையில் பார்த்தால், ஆண், பெண்களின் செக்ஸ் உறுப்புகளுக்கும் இது மெத்தப்பொருந்தும். எனவே செக்ஸ் உறுப்புகளுக்கும் சரியான, மிதமான வேலை கொடுக்க வேண்டியது முக்கியம்.

அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரிதியான, மன ரிதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.சில ஆண், பெண்கள், அடிக்கடி உடலுறவு வைத்துக்கொண்டால், உடல் நலம் கெட்டுப்போகும் என்ற அதீத பயத்தின் காரணமாக, நெடு நாட்களாக உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பார்கள்.இப்படிப்பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்தமான பலவீனங்கள்., மனநோய், அஜிரணக்கேளாறுகள், ஆயாசம், நெஞ்சிடிப்பு, தலைநோய், தலைபாரம் போன்ற பலம் குன்ற வைக்கும் நோய்கள் தோன்றி அவதிக்குள்ளாக்கும். எனவே உடல் பக்குவம் அடைந்து திருமணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லது என்கிறது காமசூத்திரம்

உறவு முடிந்ததும்.....இந்தப் பழக்கம் கிட்டத்தட்ட அத்தனை பேருக்கும் உண்டு. அருமையான உறவை முடித்த பின்னர் அழகான தூக்கம் கண்ணைக் கட்டும்.  நிறையப் பேர் கையைக் காலை நீட்டி தூங்கப் போய் விடுவார்கள். சரி, ஏன் உறவை முடித்த பின்னர் ஆழ்ந்த தூக்கம் வருகிறது தெரியுமா? இந்த உறவுக்குப் பிந்தைய தூக்கம் உடலுக்கும், மனதுக்கும் உண்மையில் மிகவும் நல்லது என்கிறார்கள் டாக்டர்கள். உண்மையில், அருமையான உறவுக்குப் பின்னர் நல்ல தூக்கம் வரும், அது உடலையும், மனதையும் ரிலாக்ஸ் செய்ய மிகவும் உறுதுணையாக இருக்கிறது என்பது டாக்டர்களின் கருத்து. ஒரு உறவுக்குப் பின்னர் உடல் இயற்கையாகவே சோர்வடைகிறது.இதனால்தான் அந்தத் தூக்கம் வருகிறது. அதேசமயம், தூக்கம் வருகிறதே என்பதற்காக உடனடியாக தூங்கப் போய் விடாமல், நமது பார்ட்னருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருத்தல், ஆதரவாக தழுவிக் கொள்ளுதல், அந்த உறவின் அற்புத தருணங்களை பகிர்ந்து கொள்ளுதல் மிகவும் அவசியம் என்பதும் டாக்டர்கள் தரும் யோசனை.

உறவுக்குப் பின்னர் வரும் தூக்கத்திற்கு சில காரணங்கள் உள்ளன. அதைப் பார்ப்போம். இரவு நேரத்தில்தான் நமது உடல் மிகவும் சோர்வடையும். அந்த சமயத்தில் நாம் உறவையும் மேற்கொள்ளும் போது கூடுதல் சோர்வை நாம் சந்திக்க நேரிடுகிறது. நமது உடலை தூக்கம் வேகமாக தழுவ ஆரம்பிக்க இதுவும் ஒரு காரணம். உறவின்போது உச்ச நிலையை அடையும் ஆண் விந்தனுவை வெளிப்படுத்திய அடுத்த நொடியே அவனது உடலை சோர்வு முழுமையாக ஆக்கிரமிக்கிறது. ஆணின் உடல் வெளிப்படுத்தும் ஹார்மோன் உடலை வேகமாக சோர்வடைய வைக்கிறது. தூக்க உணர்வு வேகமாக வந்து தழுவுகிறது. உடல் இயக்கத்தின் அதி வேக செயல்பாடுகளும் இந்த தூக்கத்திற்கு இன்னொரு காரணம். செக்ஸ் உறவின்போது இதயத் துடிப்பு அதி வேகமாக இருக்கும். அதேசமயம், உடல் அமைதி அடையும்போது அந்த வேகம் குறைந்து படிப்படியாக நார்மல் ஆகிறது.

உறவின்போது நமது மூச்சு ஆக்சிஜனுக்காக அதிகமாக துடிக்கும். உறவு முடியும்போது அதிக அளவிலான ஆக்சிஜனை நமது உடல் சுவாசிக்கிறது. ஆக்சிஜன் திடீரென அதிகமாவதால் உடலின் அனைத்துப் பாகங்களும் வேகமாக ரிலாக்ஸ் ஆகின்றன. இதுவும் தூக்கம் கண்ணைத் தழுவ ஒரு காரணம். யாருக்கு உறவுக்குப் பின்னர் வேகமாக தூக்கம் வருகிறதோ, அவர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடையலாம்.  காரணம் அவர்களது உறவு முழுமையாக இருந்திருக்கிறது என்று அர்த்தமாம். அதேசமயம், சரியாக தூக்கம் வராவிட்டாலோ அல்லது அசவுகரியமாக உணர்ந்தாலோ உறவில் முழுமை இல்லை அல்லது உடல் ஆரோக்கியத்தில் குறை என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் டாக்டர்கள். உறவுக்குப் பின்னர் நமது உடலை நல்ல இயல்புக்குக் கொண்டு வர குளிர்ச்சியான எலுமிச்சை சாறை அருந்தலாம் என்று டாக்டர்கள் அட்வைஸ் தருகிறார்கள்.

இது நம்மை மேலும் புத்துணர்ச்சியாக்கவும், நல்ல தூக்கத்தில் மூழகவும் உதவுமாம். இது ஆண்களின் கதை. பெண்களைப் பொறுத்தவரை உறவுக்குப் பின்னர் உடனே அவர்களுக்குத் தூக்கம் வராது. காரணம், அவர்களின் உச்ச நிலை உடனடியாக அடங்கி விடாது என்பதால். உறவின்போது பெற்ற அனுபவத்தையும், பரிபூரணத்தையும் அவர்கள் மேலும் சில நிமிடங்களுக்கு நினைத்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த உணர்விலிருந்தும், நினைவிலிருந்தும் அவர்களால் உடனடியாக வெளியே வர முடியாது. இதனால்தான் உறவை முடித்த பின்னர் தூங்கப் போய் விடாமல், அனுசரணையாக, ஆதரவாக, காதலோடு அவர்களுடன் சில நிமிடங்களை ஆண்கள் பகிர்நது கொள்ள வேண்டும் என்கிறார்கள். அப்போதுதான் ஆணுக்கு மட்டுமல்லாமல், பெண்ணுக்கும் அன்றைய உறவு முழுமை அடையும் என்பது டாக்டர்கள் கூறும் கருத்து. உடல் ரீதியான தேவைகளுக்காக மட்டும் ஒரு பெண்ணும் சரி, ஆணும் சரி உறவை நாடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். உடலையும் தாண்டி மனதையும் இங்கு முக்கியமாக கருத வேண்டும். மனதின் உணர்வுகளும் முழுமையாக பூர்த்தியாகும்போதுதான் எந்தவிதமான உறவாக இருந்தாலும் அது உண்மையிலேயே முழுமையடைய முடியும்.

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தாம்பத்யம் ..!இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையேயான தாம்பத்ய உறவுதான். வெவ்வேறு இயல்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட இரு வேறு உடல்களை சங்கமிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவதும் தான் தாம்பத்யத்தின் சிறப்பம்சம்.

உடல் உறவு என்பது அற்பநேர சந்தோஷத்திற்காகவோ அல்லது இனவிருத்திக்காகவோ மட்டுமல்ல அதையும் விட மகத்தான பல சக்திகளை கொண்டுள்ளது. சமீப கால ஆராய்ச்சிகள் இதனை தெளிவுபடுத்தியுள்ளன. உடல் உறவு என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழியாகவே கருதப்படுகின்றது. இதனையே மேலை நாட்டு ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன.

சிந்தனை சீரடையும்

உடலுறவு கொள்வதால் மன இறுக்கம் குறைகின்றது. மனச்சோர்வு நீங்குகின்றது. மனது மகிழ்ச்சியடைகின்றது. சீரான சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு அவசியமாகின்றது.

ஆண்களுக்கு உடல் உறவு களைப்பை, இறுக்கத்தை, மனச்சோர்வை போக்கிடும் ஒர் மாமருந்தாகும். மனம் அமைதி பெறவும் உடல் புத்துணர்ச்சி பெற பெரிதும் பயன்படும் அற்புத செயலாகும்.

சோர்வு நீங்கும்

நீண்ட நேரம் உடலுறவு கொண்டு கருத்தரிக்கும் பெண்களுக்கும் அதிக நேரம் உடலுறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறைகின்றன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பெண்கள் அதிக நேரம் உடலுறவு கொள்வதால் பெண் உறுப்பில் உள்ள தசை நார்கள் வலுவடைய உதவுவதாகவும் இது பிற்காலத்தில் ஏற்படும் சிறுநீர்க் கசிவு உபாதைகளைப் போக்கிடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

மாதவிலக்கு ஏற்படுத்தும் பலதரப்பட்ட பிரச்சனைகளை உடலுறவு சரி செய்கின்றது. குறிப்பாக, மாதவிலக்கின் சமயம் “எஸ்ட்ரோஜனின்” அளவு சீர் செய்யப்படும் பொழுது, மாதவிலக்கிற்கு முன்பாக உடலுறவு கொண்டால் எஸ்ட்ரோஜனின் அளவு எளிமையாக சீரமைக்கப்படுகின்றது. அதனால் மாதவிலக்கின் போது ஏற்படும் பலவிதமான வலிகள் சோர்வு போன்ற உபாதைகள் பெரிதும் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இளமை கூடும்

கலவியின் போது பல ரசாயன மாற்றங்கள் உடலில் நிகழும். மூளையில் டோஃபாமைன் அளவுகள் ஏறும். ரத்த அழற்சி சீராகி மூளைக்கு அதிக ரத்தம் பாய்கிறது.

மகிழ்ச்சியான உடலுறவில் பெண்களின் அழகு கூடுகிறது. ஏழு நாட்களில் 4 முறை உடலுறவு கொள்ளும் பெண்கள் 10 வருட வயது குறைந்தவர்களாக தெரிகின்றனர். இவை சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பவை.

வாரம் இருமுறை தேவை

உடலுறவு என்பது பல விதமான உடல் மற்றும் மனரீதியான உபாதைகளுக்கு ஒரு வடிகால் போன்று விளங்கினாலும் அளவோடு வைத்துக் கொள்வது மட்டுமே சிறந்த பயனை தந்திடும். அளவுக்கு அதிகமான உடலுறவு சோர்வை கொடுத்து உடலை பலவீனமடையச் செய்து விடும். குறைந்த இடைவெளியில் வாரத்திற்கு இரண்டு முறைக்கு மிகாமல் உறவு கொள்வதே ஆரோக்கியத்தை பெருக்கிடும் என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு உறவு கொள்வது உடலில் இம்மியூளோகுளோபுலின் – ஏ என்ற நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிடும் இராசயன் பொருளை உடல் தேவையான அளவு சுரந்திட வழி வகுக்கும். இதனால் உடல் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றிடும்.

கணவன் – மனைவி இருவரும் சராசரியாக வாரம் இருமுறை உறவு வைத்துக் கொள்வது உடல் நலத்தை பெருக்கி உடல் ஆரோக்கியத்தை பேணிட உதவுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வாரம் இரு முறை குறைந்த பட்சம் உறவு வைத்துக் கொள்வது ஜலதோஷத்தை அண்டவிடாது தடுத்திடும் வயிற்றுப் பிரச்சனைகளான நெஞ்செரிச்சல், அல்சர் வலி போன்றவற்றையும் போக்கிடும்.

நமது கலாச்சாரத்தில் உடலுறவிற்கு கடைசியிடம் ஒதுக்கப்படலாம். ஆனால், ஆரோக்கியமாக வாழ்ந்திட உடல் உறவு ஒர் ஒப்பற்ற உன்னத வடிகாலாகும். எனவே, அவரவர்கள் வயதிற்கு ஏற்ப உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப வாரம் இருமுறையாவது உறவு கொள்வது, உடல் ஆரோக்கியத்தைக் காத்திட பெரிதும் உதவிடும். உடலுறவு அவசியமே!

செக்ஸ் சிறந்த உடற் பயிற்சி ஆய்வுத் தகவல்!

sex-sex-in-romance-29-07-11
வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வதோ, டிரெட்மில்களில் ஏறி கால் வலிக்க வலிக்க ஓடுவதோ தேவையே இல்லை. உங்களது உடலில் கூடிப் போய் விட்ட கூடுதல் எடையைக் குறைக்க தினசரி ஒரு அரை மணி நேரத்தை ஒதுக்கினால் போதும்- செக்ஸ் உறவுக்காக. 'எக்சர்ஸைஸை' விட 'செக்ஸர்ஸைஸ்' சிறந்த உடற் பயிற்சி என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உடல் எடையைக் குறைக்க உடல் உறவே சிறந்த வழி என்ற எண்ணம் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் இருக்கிறதாம். நாள் முழுக்க கடுமையான வேலை பார்த்து விட்டு வந்தாலும் இரவில் உறவு கொள்வதற்கு பெண்கள் மனதளவிலும், உடல் அளவிலும் தயாராக இருக்கிறார்களாம்- அது உடல் எடையைக் குறைத்து, மனதையும், உடலையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும் என்பதால்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 76 சதவீத பெண்கள், உடல் எடைக் குறைப்புக்கு செக்ஸர்ஸைஸ் சிறந்த வழி என்று கருதுகிறார்களாம். மூன்றில் இரண்டு பங்குப் பெண்கள், ஜிம்முக்குப் போய் உடற் பயிற்சி செய்வதை விட சிறந்தது செக்ஸ் உறவு என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காக தினசரி செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவும் தாங்கள் தயார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். கெர்ரி மெக்லோஸ்கி என்பவர் எழுதியுள்ள 'The Ultimate Sex Diet' என்ற புத்தகத்தில், அரை மணி நேர உடல் உறவின் மூலம் 150 முதல் 250 கலோரிகள் வரைக் குறைவதாக கூறியுள்ளார். உறவில் ஈடுபடுவோரின் செயல்பாடுகளைப் பொறுத்து சில நேரங்களில் இது 350 கலோரிகள் வரை கூட கூடுகிறதாம்.

முத்தமிடுவதன் மூலம் 200 கலோரிகள் வரை குறைகிறது என்ற தகவலையும் கெர்ரி தெரிவித்துள்ளார். எந்த ஜிம்முக்கும் போகாமலேயே இயற்கையான முறையிலேயே நமது உடல் எடையைக் குறைத்து நம்மை டிரிம்மாக வைத்துக் கொள்ள முடியும். செக்ஸ் என்பது உடல் ரீதியான இன்பத்துக்கு மட்டும் நமக்கு உதவுவதில்லை. மாறாக நம்மை புத்துணர்ச்சியுடனும், இளமையுடனும், வைத்துக் கொள்ள பேருதவி புரிகிறது. எனவே செக்ஸ் என்பதை உடல் மகிழ்ச்சிக்கான விஷயமாக மட்டும் கருதாமல் அதை பல விதங்களிலும் நமக்கு உதவும் ஆசானாக கருதி அணுகினால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்பதில் சந்தேகமில்லை என்பது கெர்ரியின் கருத்து.

ஹேர் டையை முதன்முதலில் உபயோகிக்கையில் : சில தகவல்!

 
hair-dai-hair-27-07-11
கூடுமானவரை ஹேர் டையை முதன்முதலில் உபயோகிக்கையில், அழகு நிலையங்களில் போடுவது நல்லது. பாலிமர் டை உபயோகிப்பவர்கள் கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு பூசலாம். அது தானாகவே பரவிக்கொள்ளும். அநேகம்பேர் ஹேர் டைக்கான பிரஷை உபயோகிக்கிறார்கள். பிரஷில் டையை எடுத்து தட்டையாகவே போடுகிறார்கள். அப்படிப் போடுவது முறையல்ல. பிரஷ் உபயோகப்படுத்துகையில் காற்று உள்ளே போகாது. எவ்வளவுக்கெவ்வளவு காற்று முடியினுள் செல்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. பிரஷில் போடும்போது காற்று உள்ளே செல்லும்படி, முடியை அவ்வப்போது தூக்கி விட்டுக்கொண்டு போட வேண்டும். தலையை ஒட்டி அழுத்தமாக டை போடுவதை விட்டு இருபக்கமும் சீராகப் போட வேண்டும்.

சிலர் ஹேர் டையைப் போட்டுவிட்டு அதிக நேரம் வைத்திருப்பார்கள். சிலர் அப்படியே வெளியிலும் அலைவார்கள். சிலர் மறுநாளோ, அதற்கு மறுநாளோ தலைக்குக் குளிப்பார்கள். பெரும்பாலும் ஆண்களே இந்தத் தவறைச் செய்கிறார்கள். இது மிகவும் தவறான முறை. ஹேர் டை பாக்கெட்டுகளில் எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அதன்படியே செய்ய வேண்டும். (15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை வைத்திருக்கலாம்.) தலையை அலசும்போது தரமான ஷாம்புடன் கண்டிஷனரும் அவசியம் போட வேண்டும். கண்டிஷனர் உபயோகப்படுத்தவில்லையெனில் டை முடியைச் சொர சொரப்பாகி விடும். அடிக்கடித் தலைக்குக் குளித்தால் டை மறைந்து, முடி வெளுத்து விடும் என்பதற்காகச் சிலர் அடிக்கடி தலைக்குக் குளிக்க மாட்டார்கள். எண்ணெயும் வைக்க மாட்டார்கள். இது மிகவும் தவறானது. சரியான பராமரிப்பைத் தலைமுடிக்குக் கொடுக்கவில்லை எனில் முடி கொட்ட ஆரம்பிக்கும்.

எவ்வளவுக்கெவ்வளவு டை போடுவதைத் தள்ளுகிறோமோ அல்லது தவிர்க்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. ஒன்றரை மாதத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்துக்கு ஒரு முறைதான் ஹேர்டை உபயோகிக்க வேண்டும் அல்லது முக்கியமாக வெளியில் செல்லும் போது போடலாம். கண் புருவத்தின் மீது எக்காரணத்தைக் கொண்டும் டையைப் போடக் கூடாது. ஆண்களில் சிலருக்கு மீசை மட்டும் வெள்ளை வெளேர் என்றிருக்கும். அதற்காகத் தற்பொழுது பிரஷுடன் சேர்ந்த டை வந்துள்ளது. மீசையை ட்ரிம் செய்யும்போது பிரஷ் செய்து டை போட்டுவிடலாம்.

தற்பொழுது 'பெர்மனென்ட்' டை வந்திருக்கிறது. முடி இருக்கும் இடத்தில் பெர்மனென்ட் டையைத் தடவும்போது அப்படியே இருக்கும். ஆனால் முடி புதிதாக வளர்கிற இடத்தில் வெள்ளையாக இருக்கும். எனவே அதற்குத் தகுந்தாற்போல் டையைப் பூசிக்கொள்ள வேண்டும். ஹேர் டையை விரும்பாதவர்களும், இளம் வயதில் இருப்பவர்களும் ஹென்னா உபயோகித்து முடியின் வெள்ளை நிறத்தை மறைக்கலாம். ஆனால் ஸ்கால்ப் மிகவும் வறண்டு விடும். ஹென்னாவை அடிப்படையாக வைத்தும் ஹேர் டை வந்துள்ளது.

ஹென்னா எல்லா முடிக்கும் ஒத்து வராது. நேரான முடிக்கு மட்டுமே ஒத்து வரும். ஹென்னாவை அப்படியே போடுவது முடியை முரட்டுத்தன்மை உடையதாக ஆக்கிவிடும். முடியும் கொட்டும். குறிப்பாக பெண்களுக்கு முன் தலையில் உள்ள முடி கொட்டும். ஹென்னாவைப் போட விரும்புபவர்கள் கண்டிஷனர் கலந்து உபயோகிக்க வேண்டும். மருதாணியை அரைத்து நேரடியாகப் பூசுவதை விடுத்து, அதை வெயிலில் காய வைத்து, பொடியாக்கி, அத்துடன் கண்டிஷனர் கலந்து உபயோகிக்க வேண்டும். இயற்கையான ஹென்னாவை உபயோகப்படுத்துபவர்கள் கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றலாம்.

ஒரு நபருக்குத் தேவையானவை:

ஹென்னா - 250 கிராம்
ஒரு முட்டை - வெள்ளை, மஞ்சள் கரு கலந்தது
ஆலிவ் ஆயில் - 2 டீ ஸ்பூன்
காப்பி அல்லது டீ டிகாஷன் - 2 ஸ்பூன்

(சிவப்பு நிறத்தை விரும்புபவர்கள் டீ டிகாஷனையும், அடர்ந்த ப்ரவுன் நிறத்தை விரும்புபவர்கள் காப்பி டிகாஷனையும் கலந்துகொள்ள வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும் உபயோகப்படுத்தவும்.)

நெல்லிக்காய் பவுடர் - 50 கிராம்
தயிர் - 2 டீ ஸ்பூன்
எலுமிச்சம் பழச் சாறு - 5லிருந்து 8 சொட்டுகள்

இவை அனைத்தையும் கலந்து இரும்புப் பாத்திரத்தில் முதல் நாளே ஊற வைக்க வேண்டும். மறுநாள் இந்தக் கலவையைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்படையும். ஹென்னாவின் நேரடியான வீரியமும் குறையும்.