வெள்ளி, 27 ஜூலை, 2012

TASK MANAGER ல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய


எனது கணிணியில் பலமுறை வைரசால் பாதிக்கப்பட்ட போது  Task Manager Disabled  என்னும் பிழைச்செய்தி வந்தது. பெரும்பாலும் வைரஸ், ட்ரோஜன், மால்வேர்கள் Taskmanager ஐ disable செய்கின்றன. அதனால், நம்மால் அதன் process ஐ நிறுத்த முடிவதில்லை. அதனை மீண்டும் சரி செய்வதற்கான 5 வழிமுறைகள் கீழே தந்துள்ளேன்.Task Manager has been disabled by your administrator

Methode 1:


Group Policy Editor வழியாக சரி செய்யலாம்..

Start, Run , அதில் gpedit.msc என்று டைப் செய்யவும்.

அதில் User Configurationல் Administrative Template ஐ Expand(+) செய்யவும்

அதில் System ஐ Expand செய்து Ctrl+Alt+Del ஐ க்ளிக் செய்யவும்

அதில் Remove Task Manager என்பதனை Click செய்து அந்த Optionல் Not Configured என்பதனை தேர்வு செய்யவும்.


Methode 2: 


Start, Run ல் கீழே உள்ள Command ஐ கொடுப்பதன் மூலம் சரி செய்யலாம்.


REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v DisableTaskMgr /t REG_DWORD /d 0 /f 

  

Methode 3:


Notepad ல் கீழே உள்ள வரிகளை Paste செய்யவும்


[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System] 
“DisableTaskMgr”=dword:00000000

பின்னர் அதனை Taskmanager.reg என save செய்து அதை OPEN பண்ணுவதன் மூலமாக சரி செய்யலாம்.Methode 4:


Start, run ல் regedit என்று Type செய்யவும்


அதில் HKEY_CURRENT_USER \ Software \ Microsoft \ Windows \ CurrentVersion \ Policies\ System என்ற இடத்தில் Disable Task manager என்ற Value ஐ அழித்துவிடவும்.


Methode 5:


anbuthil.com

Task Manager Fix என்னும் மென்பொருளை பதிவிறக்கம் செய்யவும் அதனை Run செய்வதன் மூலம் Task Manager ஐ Restore செய்ய முடியும்.

குதிகால் (High Heels) செருப்புகள் கவனம்!குதிகால் (High Heels) செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை  கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமான தோற்றம் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.

* குதிகால் செருப்பணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு.


* குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம்.

* இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு விண்விண்ணெனத் தெறிக்கிற மாதிரி 'நியுரோமா' எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம்.

* குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும். அதிக உயரமான குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும் போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டுவலியும் ஏற்படும்.

இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர்கள் சொல்லும் ஆலோசனை:-


குதிகால் செருப்புகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:

* உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும் வாங்காதீர்கள்.

* பகல் முழுவதும் நீங்கள் நடந்து வேலைமுடித்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே நீங்கள் செருப்பு வாங்க காலை நேரத்தை விட இரவு நேரம் பொருத்தமானது.

* நீங்கள் அதிக உயரமாக தெரிய வேண்டும் என்று அளவுக்கு மீறிய 6 அங்குல உயரமுள்ள குதிகால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

* 2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை.

* குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் 'சோல்' ரப்பரில் ஆனது தானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல் தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாக இருக்கும்.

* குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களின் லைனிங் செயற்கையான வினைல் போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்படாமல் இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

* தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலிற்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும்.

* குதிகால் செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடியிராமல் அங்கங்கே காற்று புகும்படி திறந்த வெளியாக இருக்க வேண்டும்.

* அதிகநேரம் குதிகால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். அழகைவிட பாதுகாப்பான உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

* குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும் அதுவே ஆரோக்கியமானது.


நடக்கும்போது கவனிக்க வேண்டியவை:

* குதிகால் செருப்பணிந்தவர்கள் நடக்கும்போது குதிரை நடக்கும் குளம்பொலி சத்தம்போல் கேட்கும். பொருத்தமான குதிகால் செருப்பணிந்த பெண்கள் நடனம் கூட ஆடலாம். ஆனால் பழக்கமில்லாத சில பெண்கள் குதிகால் செருப்புடன் நடப்பதற்குச் சிரமப்படுவர். இத்தகைய பெண்கள் நடப்பதற்கு பயிற்சி எடுக்க வேண்டும்.

* கைகளை முன்னும் பின்னும் நீட்டியசைத்து உடல் எடையைச் சமநிலை செய்து விட்டு நடந்து பழக வேண்டும்.

* குதிகால் செருப்பணிந்தவர்கள் கால்களை எட்டி நடக்காமல் குறுகிய இடைவெளியில் கால்களை எடுத்து வைக்க வேண்டும்.

* மாடிப்படியேறும்போது முன்னங்காலும் குதிகாலும் படியில் ஒன்றுபோல் சமமாகப்பதித்து ஏறவேண்டும்.

* மாடிப்படியில் இருந்து கீழிறங்கும்போது காலின் முற்பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிறங்க வேண்டும்.

* குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வராது. எனவே குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்தல் நல்லது.

* அதிகாலையில் குதிகால் செருப்பணிந்து நடக்கும்போது குதிகால் வீக்கம் ஏற்படும். இம்மாதிரியான வீக்கம் ஏற்படாமலிருக்க குதிகால் செருப்பணிந்து நடந்தவர்கள் 45 டிகிரி கோணத்தில் காலை நீட்டி கீழே உட்கார்ந்து 10 அல்லது 15 நிமிடநேரம் ஓய்வு எடுத்தல் அவசியம். இப்படி ஓய்வெடுக்கும்போது கால்களிலிருந்து ரத்த ஓட்டம் பிற இடங்களுக்குப் பரவி வீக்கம் குறையும்.

* கால் பாதங்களில் வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்துவிட்டால் குதிகால் வலியின்றிச் சுகமாக இருக்கும்.

* கால்நீட்டி கீழே உட்கார்ந்து சிறிய பந்தின் மேற்பகுதியில் கால் பாதங்களை அழுத்தி உருட்டுதல், சிறிய கோலிகளை தரையில் போட்டு அவற்றை கால் பாதங்களின் முற்பகுதி விரல் இடுக்கில் அகப்படச் செய்து எடுத்தல் போன்றவை குதிகால் செருப்பு அணிபவர்களின் கால்களுக்கு நல்ல பயிற்சியாகும்.

MS Office 2010 Save செய்த File ஐ MS Office2003 இல் Open செய்வது எப்படி?
கடந்தவொரு அலசல்கள்1000 இன் பதிப்பிலேMS Word இல் தயாரித்த ஆவணமொன்றுக்கு எவ்வாறு கடவுச்சொல் இட்டு பாதுகாத்தல்என்பது பற்றி அலசியிருந்தோம். இப்பதிப்பினூடாக MS Office 2007 / 2010போன்றவற்றில் சேமித்த File ஒன்றினை எவ்வாறு MS Office 2003 இல் Open செய்வது என்பது பற்றிப் பார்ப்போம்.

இதற்கு நீங்கள் முதலிலே My Computer Open செய்து அங்கு Tools கிளிக் செய்து Folder Options ஐத் திறந்து அதிலே VIEW என்ற Tap கிளிக் செய்யவும்.இப்போ இதிலே “Hide Extensions for Known File Types” என்றதில் தெரிவு செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கவும் [Un-checked].


இப்போ Open செய்யவேண்டிய File இனுடைய File Name   “ .Docx ”என்பதிலிருந்து “ .Doc “ என்றவாறாக மாற்றியபின் File MS Office2003 இல் திறந்துகொள்ளுங்கள்.

இப்போ MS Office 2007 / 2010 இல் சேமித்த File ஆனது MS Office2003 இல் திறக்கக்கூடியதாய் இருக்கும். மீண்டும் இதே பிரச்சனை ஏற்படாதிருக்க இப்போ திறந்து வைத்துள்ள File Save As என்பதைக் கொடுத்து Save Type Asஎன்பதில் “ Word 97-2003 Document “ ஐத் தெரிவுசெய்தபின் சேமித்துக் கொள்ளவும்.

Mobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு ..சில நாட்களுக்கு முன்  ஒருவருக்கு நடந்த நிகழ்ச்சி இது . அவர் வைத்திருக்கும் மொபைல்க்கு தேவை இல்லாத SMS மற்றும் தவறான கால்கள் வந்துள்ளது. இவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து வந்துள்ளது. வீட்டில் சொன்னால் நீ இனி மொபைல் பயன்படுத்தாதே என சொல்லி விடுவார்கள் என பயந்து இவர் வேறு என் மாற்றி விட்டார் . ஆனால் சில நாட்கள் கழித்து மீண்டும் அதே என்னில் இருந்து பிரச்னை.நம்பர் மாற்றியும் எப்படி இதுபோல கால் ,SMS வருகிறது என குழம்பி போனார். நண்பர்கள் துணையுடன் விசாரித்ததில் சில அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

இவர் வழக்கமாக ரீ- சார்ஸ் செய்யும் இடத்தில் இவர் நம்பரை குடுத்து விட்டு E.C பண்ண சொல்லிவிட்டு போய் விடுவார் . இந்த நம்பரை வைத்து அங்கு உள்ள சிலர் செய்த செயல்தான் இது .இதுபோல ஆபத்தில் நீங்கள் மாட்டாமல் இருக்க சில வழிமுறைகள் .


முடிந்த வரை ரீசார்ஸ் கார்ட் வாங்கி ரீசார்ஸ் செய்யுங்கள் .
E.C செய்யவேண்டிய நிலை வந்தால் முடிந்த வரை நன்றாக தெரிந்த கடையில் மட்டும் செய்யவும் .
இல்லை என்றால் உங்கள் சகோதரர்களை அல்லது ஆண் நண்பர்களை விட்டு செய்ய சொல்லவும்
பேருந்தில் அல்லது கூட்டமாக உள்ள இடத்தில் சத்தமாக உங்கள் நம்பரை சொல்லாதிர்கள் .
தெரியாத நபர்களிடம் நம்பர் தராத்திர்கள் .
உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் நண்பர்கள் உங்கள் நம்பரை யாரிடமும் குடுக்க கூடாது என சொல்லுங்கள் .
தவறான SMS வந்தால் யார் என கேட்டு பதில் அனுப்பாதிர்கள் . அப்படி அனுப்பினால் அதுமுலமாக உங்களிடம் தொடர்ந்து தொடர்பு கொள்ள பார்ப்பார்கள் .
WRONG CALL வந்தால் உடனடியான துண்டித்து விடுங்கள் . அடிகடி வந்தால் வீட்டில் உள்ளவர்களை அல்லது உங்களுக்கு நம்பிக்கையான ஆண்களை பேச சொல்லுங்கள்
பேருந்தில் அமர்ந்து SMS அனுப்பினால் சுற்றுபுறம் பார்த்து அனுப்புங்கள் . நீங்கள் அனுப்பும் செய்தியை அடுத்தவர்கள் படிக்க வாய்ப்புள்ளது .
மொபைல்லை பழுது பார்க்க கொடுத்தால் அதில் உள்ள SIM CARDமற்றும்  Memory Card இரண்டையும் கழட்டிவிட்டு கொடுக்கவும்.
மெமெரி கார்ட்களில் பாடல் பதிவு செய்ய கொடுப்பதாக இருந்தால் நன்றாக தெரிந்த இடத்தில் மட்டும் கொடுக்கவும் . இல்லை எனில் நீங்கள் அழித்த புகைப்படங்கள் , வீடியோக்கள் அனைத்தையும் திருப்ப எடுத்துவிடுவார்கள் .


இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும் .