புதன், 19 அக்டோபர், 2011

நோயை விரட்ட தினந்தோறும் செக்ஸ்!
ஆங்கிலத்தில் ஆப்பிள் பழத்தின் மகிமையை பற்றி சொல்வதற்காக"An apple a day keeps the doctor away" ( தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டாம்) என்ற ஒரு பழமொழி வெகு பிரசித்தம். அதே மாதிரிதான் "Have sex everyday to keep diseases away"- தினந்தோறும் செக்ஸ் வைத்துக்கொண்டால் நோய் அண்டாது- என்று மருத்துவர்கள் தற்போது சொல்ல தொடங்கி உள்ளனர்.

நாள்தோறும் அல்லது அடிக்கடி செக்ஸ் என்பது உங்களது மனதிற்கும், உடலுக்கும் இன்பத்தையும், உற்சாகத்தையும் தருவதோடு மட்டுமல்லாது, கலோரிகளை எரித்து கொழுப்பை குறைக்கிறது; மன அழுத்தத்திலிருந்து விடுபட வைக்கிறது என அதன் பயனை ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம் என்கிறார்கள் பாலியல் மருத்துவ நிபுணர்கள்.

அவர்கள் பட்டியலிடும் அவ்வாறன பயன்கள் சில வருமாறு:

இருதயக்குழாய் செயல்பாட்டை மேம்படுத்துகிறது:

ஒரு வாரத்தில் இரண்டு தடவைக்கும் அதிகமாக செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆண்களுக்கு, மாதம் ஒருமுறை செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆண்களை விட மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

அடிக்கடி பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் தம்பதியர்களுக்கு வழக்கமாக ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்கள் தாக்காதவாறு,'immunoglobulin A' என்ற நோய் எதிர்ப்பு சக்தி அவர்களது உடலில் அதிகரிக்கிறது.

மன அழுத்தத்தை குறைக்கிறது:

பலருக்கு அலுவலக பிரச்சனை அல்லது குடும்ப பிரச்சனை என்று ஏதாவது ஒரு பிரச்சனை வாட்டிக்கொண்டிருக்கும்.இதனால் அவர்கள் அத்தகைய சமயங்களில் மிகுந்த மன அழுத்தத்துடனேயே காணப்படுவார்கள்.இதனால் கோபப்படுவது, அருகில் இருப்பவர்களிடம் எரிந்து விழுவது என இவர்கள் தாமும் துன்பப்பட்டு,மற்றவர்களையும் மன வேதனைக்கு ஆளாக்குவார்கள்.

சமயங்களில் இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் அது மன நல வியாதிக்கே கூட கொண்டுசென்று விடும்.இத்தகைய நபர்கள் படுக்கை அறையினுள் நுழையும் முன்னர் பிரச்சனைகளையும் வெளியிலேயே விட்டுவிட்டு,தமது ஜோடியுடன் அடிக்கடி ஆரோக்கியமான செக்ஸ் வைத்துக்கொள்ளும் பட்சத்தில், மன அழுத்தம் அடியோடு குறைவதோடு, பிரச்சனைகளுக்கான தீர்வை யோசிக்கவும் மகிழ்ச்சியுடன் வாழவும் முடியும் என்று அடித்துக் கூறுகின்றனர் இத்துறையின் மருத்துவ நிபுணர்கள்.

வலிகளிலிருந்தும் நிவாரணம்:

சிலருக்கு சமயங்களில் தலைவலி மண்டையை பிளக்கும்.இத்தகைய நபர்களிடம் அவர்களது இணை, செக்ஸ் வைத்துக்கொள்ளும் நோக்கத்துடன் அணுகினால்," போப்பா! எனக்கே தலைவலி மண்டையை பிளக்குது;இதுல இது ஒண்ணுதான் குறைச்சல்...!" என்று எரிந்து விழுவார்கள். ஆனால் செக்ஸ் வைத்துக்கொள்வதை தவிர்க்க தலைவலியை ஒரு காரணமாக சொல்லாதீர்கள் என்று கூறுகின்றனர் இத்துறை மருத்துவ நிபுணர்கள்.

தலைவலி இருக்கும்போது செக்ஸை தவிர்ப்பதற்கு பதிலாக, அதனை வைத்துக்கொண்டால், அப்போது ஏற்படும் உச்சக்கட்டம் எனப்படும் "ஆர்கஸம்" (orgasm) உங்களது தலைவலியை விரட்டியடித்துவிடும் என்கிறார்கள். அதாவது ஆர்கஸத்தின்போது ஹார்மோன் ஆக்ஸ்டாசினின் அளவு ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்றும், இது வலிகளை குறைக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆயுளை கூட்டுகிறது:

ஒருவருக்கு செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது ஏற்படும் ஆர்கஸத்தின்போது "dehydroepiandrosterone" என்று அழைக்கப்படும் ஹார்மோன் சுரக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிப்பதோடு,உடல் திசுக்கள் கோளாறை சரி செய்து,தோலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. வாரத்திற்கு இரண்டு முறையாவது ஆர்கஸம் உணர்வை எட்டும் ஆண்கள், சில வாரங்களுக்கு ஒரு முறை மட்டும் அதனை அனுபவிக்கும் ஆண்களைக் காட்டிலும் கூடுதல் ஆயுளை பெறுகிறார்கள்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது:

நீங்கள் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது உங்களது ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. உங்களது உடல் உறுப்புகள் மற்றும் உயிரணுக்களுக்கு புதிய ரத்தம் பாய்ச்சப்படுகிறது.பயன்படுத்தப்பட்ட ரத்தம் வெளியேற்றப்படும்போது உங்களது உடல் நச்சுபொருட்கள் மற்றும் இதர பொருட்களை வெளியேற்றுகிறது.இதனால்தான் செக்ஸ்-க்கு பின்னர் உங்களது உடல் சோர்வடைவதாக நீங்கள் உணர்கிறீர்கள்.

நல்ல உறக்கம் தரும்:

செக்ஸ்-க்கு பின்னர் உடல் சோர்வடையும்போது தூக்கம் தானாகவே கண்களை தழுவும். சிலர் தூக்கத்திற்காக மாத்திரை,மருந்துகளையெல்லாம் நாடுவார்கள்.அவற்றையெல்லாம் தூக்கி தூர எறிந்துவிட்டு, ஆரோக்கியமான செக்ஸ் வைத்துக்கொண்டாலே தூக்கம் சொக்கும். இவ்வாறு நன்றாக தூங்கி எழுவதன் மூலம் உங்களது உடல் மற்றும் மனது ஆகிய இரண்டுமே புத்துணர்ச்சி பெற்று அடுத்த நாள் பணியை நீங்கள் சுறுசுறுப்பாக ஆற்ற வைக்கும்.

உடல் கட்டமைப்பு மேம்படும்:

பலர் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வீட்டிலோ அல்லது உடற்பயிற்சி கூடத்திலோ பல உடற்பயிற்சிகளை செய்வது வழக்கம்.உடல் கட்டுகோப்புக்கு இது ஒரு வழி முறை என்றாலும், மாற்று வழி ஒன்றும் உள்ளது.அதுதான் அடிக்கடி செக்ஸ் வைத்துக்கொள்வது.அரைமணி நேரம் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது உடலில் 80 க்கும் அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகின்றனவாம். எனவே அடிக்கடி வைத்துக்கொள்வதும் கட்டுடலுக்கு ஒரு மாற்று வழி என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள்.

செவ்வாய், 18 அக்டோபர், 2011

கோபத்தை மறக்கச் செய்யும் மணவாழ்க்கை
புதிதாக திருமணமானவர்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், வேகமும் அதிகமாக இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டுக்கும் மேற்பட்ட முறை கூட உறவு வைத்துக் கொள்ள விரும்புவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். அதிக அளவிலான உறவால் உண்மையில் நியூராட்டிசம் போன்றவை மட்டுப் பட உதவுகிறது. எனவே அதிக அளவில் உறவு வைத்துக் கொள்வதிலும் தவறில்லை என்பது மருத்துவர்கள் தரும் ஆலோசனை.

நியூராட்டிசம் பிரச்சினை இருப்பவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், எரிச்சல் படுவார்கள். யாராவது ஏதாவது சொன்னால் சட்டமென்று மூக்கு நுனியில் கோபம் வந்து விடும். இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு திருமணமும், தாம்பத்ய உறவும் மிகப் பெரிய நிவாரணமாக அமைகிறது என்கிறது ஒரு ஆய்வு. அதுதான் அவர்களது மண வாழ்க்கை பெரும் மகிழ்ச்சிக்குரியதாக மாற நல்ல அடித்தளமாக அமையும் என்கின்றனர் மருத்துவர்கள்.


இனிய மண வாழ்க்கை

இதுகுறித்து நடத்தப்பட்ட ஒருஆய்வில், புதிதாக மணமான ஜோடியை சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களிடம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முதல் நான்கு ஆண்டுகளுக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் ஆரம்பத்தில் அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை அவர்களுக்கு (ஆண் மற்றும் பெண்களுக்கு) எந்தவிதமான டென்ஷனும் வரவே இல்லையாம். பதட்டம் குறைந்து, மிகுந்த மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருந்துள்ளனர்.

இதற்கு முக்கியக் காரணம், இந்த கால கட்டத்தில் அவர்கள் அதிக அளவில் தாம்பத்ய உறவில் ஈடுபட்டதே இதற்கு காரணம். ஒரு ஆண்டு கழித்து தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளும் அளவு குறையத் தொடங்கியுள்ளது. இதனால் அவ்வப்போது எரிச்சல் வந்து எட்டிப் பார்த்துள்ளது அவர்களிடம். அதேசமயம், பெரிய அளவி்ல் டென்ஷனுக்குள்ளாகவில்லை. காரணம், வாரத்திற்கு குறைந்தது 3 முறையாவது அவர்கள் உறவில் ஈடுபட்டனர்.


நரம்பியல் கோளாறுகள் தீரும்

4வது ஆண்டுவாக்கில் அவர்களுக்குள் உறவுகள் குறைந்து வந்திருப்பதை ஆய்வின் மூலம் மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதாவது மாதத்திற்கு 3 அல்லது 4 முறை மட்டுமே உறவு கொள்ள ஆரம்பித்துள்ளனர் ஜோடிகள். இதனால் நியூராட்டிசம் அவர்களிடையே எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் தாம்பத்ய உறவு நரம்பியல் கோளாறுகளுக்கு நல்ல மருந்து என்பது டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.


பக்குவமடையும் மனம் 

எனவே புதிதாக திருமணமானவர்கள் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு உறவு கொள்வதில் ஆர்வம் காட்டலாம். உடல் நலம் பாதிக்காத அளவுக்கு பார்த்துக் கொண்டு, தாம்பத்ய உறவில் அதிக அளவில் ஈடுபடுவது அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பக்குவப்படுத்த உதவும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்கிறார்கள் ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்கள்.

எனவே எதற்கெடுத்தாலும் வெக்ஸ் ஆகும் பழக்கம் உடையவர்கள், டென்சன் ஆகும் குணமுடையவர்கள், காலாகாலத்தில் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கையில் செட்டில் ஆக விடலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

குழந்தையை கண்டிப்புடனும், செல்லமாகவும் வளருங்கள்!
குழந்தை பிறந்த சில நாட்களுக்கு தாய்க்கும், குழந்தைக்கும் அமைதியும், அதிகமான ஓய்வும் தேவை. குழந்தை தினமும் 23 மணி நேரம் தூங்க வேண்டும். தாயும் அதிக நேரம் தூங்க வேண்டும். அந்த நேரத்தில் சத்தமில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

குழந்தை பிறந்ததும் உறவினர்கள் பார்க்க வந்து தாய் மற்றும் குழந்தைக்கு தொந்தரவு கொடுக்காமல் சில நாட்கள் கழித்து குழந்தையை பார்த்து கொஞ்சுவதே மிகவும் நல்லது. குழந்தை பிறந்த சில நாட்களுக்கு மற்றவர்கள் தூக்கி கொஞ்சாமல் இருப்பது சுத்தமானது… சுகாதாரமானது!
குழந்தைக்கு ரோல்மாடலே பெற்றோர்கள்தான். அவர்கள் தங்கள் கடமைகளை சரியான நேரத்தில், ஒழுங்காக செய்தாலே குழந்தைகளும் அதை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இரவு 12 மணி வரை டிவி பார்ப்பது, காலையில் தாமதமாக எழுவது, அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவது போன்ற பெற்றோரின் பழக்கங்கள் குழந்தைகளிடம் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.

 குழந்தைகள் படிக்கும்போது பெற்றோர்கள் டிவி பார்ப்பதையோ, வெளியே செல்வதையோ அல்லது யாரிடமாவது ஜாலியாக பேசுவதையோ தவிர்ப்பது நல்லது.

குழந்தைக்கு சேலை மற்றும் இதர துணிகளால் தொட்டில் கட்டுவது கூடாது. இதனால் குழந்தைக்கு பல தீமைகள் ஏற்படும். குழந்தை தன் விருப்பத்திற்கு கை, கால்களை ஆட்டவும், புரண்டு படுக்கவும் முடியாது. தன் நெஞ்சு மற்றும் உடம்பை குறுக்கிக் கொண்டு தூங்க வேண்டிய சூழல் ஏற்படும். காற்றோட்டமும் குறையும். இதனால் குழந்தைக்கு மார்பில் மூக்கடைப்பும், சளியும் ஏற்படும். மேலும் தொட்டிலில் தூங்கும் குழந்தைகள் அடிக்கடி விழித்துக் கொள்ளும். இதனால் தாய்க்கும் தூக்கம் கெடும்.

‘ஊட்டி வளர்த்த பிள்ளை உருப்படாது’ என்பது பழமொழி. சாப்பிடுவதற்கு குழந்தைகள் அடம் பிடித்தால் ஊட்டுவதை நிறுத்துங்கள். சாப்பாட்டைக் கண்டால் ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டாம். சாப்பாடு வேண்டும் என்று குழந்தை கேட்கும் வரை கண்டுகொள்ளாமல் பொறுமையாக இருக்கவும். வீட்டில் உள்ள மற்றவர்கள் சாப்பிடும் போது குழந்தைக்கும் சாப்பாடு வைத்து மற்றவர்களை பார்த்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தவும். நாளடைவில் குழந்தைக்கு நல்ல சாப்பாட்டு பழக்கத்தை இது உருவாக்கும்.

குழந்தைகளை மற்ற குழந்தையுடன் ஒப்பிட வேண்டாம். ஒப்பீடு செய்வது பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் மற்ற குழந்தையை மிஞ்சித் தான் இருப்பார்கள். பெற்றோர்களின் ஊக்குவிப்பினால் குழந்தைக்கு தன்னம்பிக்கை அதிகமாக வேண்டும், மேலும் நீங்கள் கொடுக்கும் பயிற்சியால் குழந்தை மிகவும் திறமைசாலியாக மாறும் சூழல் ஏற்படும். ஆரம்பத்தில் தோல்வி கண்டாலும் ஊக்குவித்தால் குழந்தைகள் முயற்சி செய்து வெற்றி அடைவார்கள்.

குழந்தையை மிகுந்த கண்டிப்புடன் வளர்ப்பது தவறு. கண்டிப்பு இல்லாமல் மிகுந்த செல்லத்துடன் வளர்ப்பதும் தவறு. குழந்தையை கண்டிப்புடனும், செல்லமாகவும் வளர்க்க வேண்டும். கண்டிப்புடன் வளர்க்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிக்காமல் பயப்படுவார்கள். கண்டிக்காமல் செல்லம் கொடுத்து வளர்த்தால், குழந்தை பெற்றோரை தாம் நினைத்ததைச் செய்யும் அடிமை என்று நினைத்து விடுவார்கள். இதனால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

அடம் பிடிக்கும் குழந்தையிடம் எக்காரணம் கொண்டும் பெற்றோர்கள் அடிபணியக் கூடாது. தொடர்ந்து குழந்தை அடம் செய்ய ஆரம்பித்தால், அலறினால் யாரும் கண்டு கொள்ள வேண்டாம். குழந்தையை அடிக்கவோ, அதட்டவோ, கட்டாயப்படுத்தவோ வேண்டாம். இது கஷ்டம்தான் என்றாலும் பொறுமையாக பெற்றோர் இருந்தாலே, அடம் செய்தால் நமக்கு எதுவும் கிடைக்காது என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். பின்னர் அமைதியாக இருக்கும்போது பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்கவும்

குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை
மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றவேண்டும்

வீட்டில் உள்ளபோது உபயோகிக்க வேண்டாம்

வெளியில் செல்லும் போதும் , பயணங்களின் போதும் உபயோகிக்கலாம்.

தொடர்ந்து மாற்றாமல் இருந்தால் டயாபர் ரேஷ் எனப்படும் allergy ஏற்படும்.

ஆண் குழந்தைகளுக்கு இறுக்கமாக போடகூடாது , இதனால் விரைப்பையின் வெப்பநிலை உயர்ந்து பின் நாட்களில் விந்து அணு குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது .

துணி diaper சிறந்தது என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது . எனவே வீட்டிலேயே சுத்தமான புது துணியை பயன்படுத்தலாம் .

துணியை துவைத்தபின் டெட்டோல் போன்ற கிருமி நாசினிகளை உபயோகித்தால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படக்கூடும் .

தூங்குடா செல்லம் தூங்கு…வாழ்வின் இனிமையான பருவங்களுள் ஒன்று, குழந்தைப் பருவம். எந்தக் கவலையையும், சுமையையும் உணராத பருவம். பெற்றோரின் அன்பு, அரவணைப்பை, தாயின் பாச மழையை முழுமையாக அனுபவிக்கும் பருவம்.

வெளிக்காற்றைச் சுவாசிக்கும் முதல் நொடி துவங்கி, விவரம் அறியும் வயது வரை குழந்தைப் பருவம் அடங்கும். ஒரு குழந்தையின் ஆரம்ப அடிகள் சில இங்கே…


உணவும், உறக்கமும்


உணவு தான் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு முதல் முக்கியமான விஷயம். தூக்கம், இரண்டாவது. சிசு, ஒவ்வொரு இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பால் பருகுகிறது. அதைப் போல தூக்கமும் விட்டு விட்டுத் தொடரும். சுமார் எட்டுப் பகுதிகளாக, 24 மணி நேரத்தில் 16 முதல் 17 மணி நேரம் தூங்குகிறது, புதிய குழந்தை. ஒரு மாத அளவில், குழந்தையானது தூக்கம், பால் அருந்துவதில் ஒரு குறிப்பிட்ட சீரான முறைக்கு வந்து விடுகிறது.

* குழந்தையை அழாமல் சந்தோஷமாக வைத்திருப்பதை எந்தக் கல்லூரியும், படிப்பும் ஒரு தாய்க்குப் போதிப்பதில்லை. அது அவரின் உள்ளுணர்வில் பிறக்கிறது.


பார்வை


புதிதாகப் பிறந்த குழந்தையால் 12 அங்குலங்கள், அதாவது 30 சென்டிமீட்டர் நீளத்துக்குத்தான் தெளிவாகப் பார்க்க முடியும். நேரடியாகச் சொல்வதென்றால், குழந்தை தன்னை வைத்திருப்பவரின் முகத்தைத்தான் நன்றாகப் பார்க்க முடியும். எனவே குழந்தைக்கு அதிக ஆர்வமூட்டும் விஷயம், அதன் அம்மாவின் முகம் தான். அதைப் போல, எதிரெதிர் வண்ணங்கள் கொண்ட பொருட்களும் குழந்தைகளை ஈர்க்கின்றன.


தொடுவதும்… அணைப்பதும்…


தங்களைத் தூக்கி வைத்திருப்பதை புதிய குழந்தைகள் விரும்புகின்றன. முத்தமிடுவது, உடம்பைத் தடவுவது, மென்மையாகத் தட்டிக்கொடுப்பது, `மசாஜ்’ செய்வது ஆகியவற்றையும் குழந்தைகள் ரசிக்கின்றன. உங்கள் குழந்தையுடன் தொடர்பு கொள்ள, தொடுகை ஒரு முக்கியமான வழியாகும்.

* நான் எனது முதல் குழந்தையைப் பெற்றபோதுதான், எனது தாய் என்னை எந்த அளவு நேசித்திருக்கிறார் என்று புரிந்து கொண்டேன். -ஓர் இளம்தாய்.


கற்பது உடனே தொடங்குகிறது


சில வேளைகளில் உங்களின் குட்டிப் பாப்பா அமைதியாகவும், உஷாராகவும் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். குழந்தை கற்பதற்குச் சிறந்த நேரம் அதுவே. அந்தக் காலகட்டத்தை, குழந்தையுடன் விளையாடவும், பேசவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த நிலையிலேயே குழந்தைகளால் முகங்கள், சைகைகளைப் புரிந்து கொள்ளவும், சிலவற்றை `இமிடேட்’ செய்யவும் கூட முடிகிறது. திருப்பிச் செய்வதற்கு நீங்களே அதற்கு வாய்ப்புக் கொடுக்கலாம்.

 திரும்பத் திரும்ப நாக்கை நீட்டுவது, புருவங்களை உயர்த்துவது போன்றவற்றைக் குழந்தை கவனிக்கும். சில நிமிடங்களில் அவற்றைத் திரும்பச் செய்யும். திரும்பச் செய்யாவிட்டாலும் அது கவனிக்கவில்லை என்று அர்த்தமில்லை.


குழந்தையுடன் விளையாடுவது


`பளிச்’சென்ற வண்ணங்கள் கொண்ட நகரும் பொருட்கள், பட்டையான கோடுகளால் ஆன பெரிய படங்கள் கொண்ட புத்தகங்கள், பிறந்த குழந்தையைக் கவருகின்றன. ஆனால் அவற்றை யெல்லாம் அதற்கு அதிகமாகக் காட்டித் திணிக்க முயல வேண்டாம்.

குழந்தையால் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் தான் கவனம் செலுத்த முடியும். சிலநேரங்களில் அந்த ஆர்வத்தையும் காட்டாது. தனக்கு ஆர்வமில்லை என்பதை, கொட்டாவி விடுவது, பார்வையை விலக்குவது, முகத்தைத் திருப்புவது, முதுகை வளைப்பது, முனகுவது, அழுவது போன்றவற்றின் மூலம் காட்டும். அதைப் போல தான் விரும்பி ரசிப்பதையும் குழந்தை உங்களுக்குப் புரிய வைத்துவிடும்.


எழுத்துகளைக் கற்பிக்கச் சிறந்த வழி


இரண்டு முதல் மூன்று வயதுக் காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் சில எழுத்துகளைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கின்றன. நான்கு- ஐந்து வயதில் ஏறக்குறைய எல்லா எழுத்துகளையும் கற்றுக்கொள்கின்றன. அதாவது நீங்கள் இரண்டு வயதிலேயே குழந்தைக்கு எழுத்துகளைக் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கலாம்.

ஆனால் உடனேயே அவர்கள் எல்லா எழுத்துகளையும் கற்றுக் கொண்டுவிட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். படங்கள் நிறைந்த, பெரிய எழுத்துகள் கொண்ட புத்தகங்கள், குழந்தைக்கு ஆர்வமூட்டும். தான் கற்றுக்கொண்ட எழுத்துகள், வண்ணங்கள், வடிவங்கள், பொருட்கள், விலங்குகளைச் சுட்டிக் காட்டுவதில் குழந்தை ஆர்வம் காட்டும்.


பேச்சு


குழந்தைகள் தங்கள் முதல் இரண்டாண்டுகளில் பேசக் கற்றுக்கொள்கின்றன. தாங்கள் பார்ப்பதை, கேட்பதை, உணர்வதை விவரிக்க முயல்கின்றன. ஒரு குழந்தை தனது முதல் வார்த்தையைப் பேசும் முன்பே, மொழியின் விதிகளையும், பெரியவர்கள் அதை எப்படிப் பயன்படுத்தித் தொடர்புகொள்கிறார்கள் என்றும் புரிந்து கொள்கின்றன என்பது ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு.


வளைந்திருக்கும் கை, கால்கள்


புதிதாகப் பிறந்த குழந்தைக்கு கை, கால்கள் நேராக இருப்பதில்லை. அவை சற்று வளைந்த நிலையில் இருப்பது இயற்கை. வெளிப்புற உலகுக்கு வந்ததுமே அவற்றின் கை, கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக நேராகத் தொடங்கி விடும்.

தாய்ப்பாலை பெருக்கும் பூண்டுகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுப்போய் விடுமோ என்று இன்றைய தலைமுறை தாய்மார்கள் கவலைப்படுவது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையே… என்று கவலைப்படும் தாய்மார்களும் மறுபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க டாக்டர்கள் கொடுக்கும் முதல் அட்வைஸ், சத்தான உணவுகளோடு அதிக அளவில் பசும்பால் குடியுங்கள் என்பதுதான். எந்த அளவுக்கு அதிகமாக பசும்பால் குடிக்கிறோமோ, அந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்கிறார்கள் அவர்கள்.

தமிழ்நாட்டு சமையலில் அதிகம் இடம் பிடிக்கும் பூண்டுக்கும் தாய்ப்பாலை பெருக்கும் சக்தி உள்ளது. அதற்கு என்ன செய்யலாம்?
தினமும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

மீன் வகைகளில் சுறா மீனை உட்கொண்டு வந்தாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். சுறா மீனை புட்டாக அவித்து, அதனுடன் அதிக அளவில் பூண்டு சேர்த்து சாப்பிட வேண்டும்.

தாய்ப்பாலை பெருக்குவதோடு மேலும் பல நன்மைகளையும் பூண்டு நமக்கு தருகிறது. தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றலும் பூண்டுக்கு உண்டு.

இதனால்தான் குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கு குளிக்கும்போது நல்லெண்ணையைக் காய்ச்சி, அதில் சிறிது பூண்டும் போட்டு, அந்த எண்ணெயை தேய்த்து உடல் முழுவதும் மசாஜ் செய்யும் வழக்கம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.

திங்கள், 10 அக்டோபர், 2011

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா?மாதவிடாய் என்பது பெண்களிலே சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வு.இதன் போது கருப்பையின் உட்பகுதி பிரிந்து பெண்ணுறுப்பு வழியே வெளியேறும்.இந்த மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் நிறையப் பேரின் மனதில் இருக்கலாம். இதுபற்றி பல மூட நம்பிக்கைகளும் நம்மிடையே இருக்கின்றன.

உண்மையில் மாதவிடாயின் போது உடலுறவு கொள்வது ஒரு தகாத செயலா?
இல்லை
.
உண்மையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் பல நன்மைகள் ஏற்படலாம். குறிப்பாக மாதவிடாய் காலத்திலேயே ஒரு பெண்ணுக்கு வயிற்று நோ , மன உளைச்சல் போன்றவை சாதாரணமாக ஏற்படலாம். இதுபற்றி மாதவிடாய் காலத்து வலிகள் என்ற இடுகையில் பதிவிட்டிருந்தேன்.இவ்வாறான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபட்டால் இந்தப் பிரச்சினைகள் குறையலாம்.அதாவது மாதவிடாய் நேரத்து அசௌகரியங்கள் உடலுறவில் ஈடுபடும் போது குறையலாம்.

மேலும் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபடும் போது மற்றைய நேரங்களை விட பெண்ணுக்கு அதிகம் திருப்தி ,கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.காரணம் மாதவிடாய் நேரத்தில் அவளது உறுப்புக்கள் அனைத்தும் ஹார்மோன்களால் மாற்றமடைந்து காணப்பட்டு உறவின் மகிழ்ச்சியைக் கூட்டலாம்.
மேலும் நம் சமூகத்தில் உள்ள பிழையான நம்பிக்கை போல இந்த காலத்தில் உறவில் ஈடுபடுவதால் ஆணுக்கோ அல்லது பெண்ணின் கருப்பைக்கோ எந்தவிதமான பாதிப்பும்ஏற்படுவதில்லை.

மற்றும் இந்தக் காலத்தில் உறவில் ஈடுபட்டால் கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவு. ஆனாலும் மிகவும் அரிதாக இந்தக் காலத்திலும் கருத்தரித்தல் நடைபெறலாம். ஆகவே குழந்தை பிறப்பைத் தவிர்க்க விரும்புபவர்கள் நிச்சயமாக கருத்தடை முறைகளை பாவிக்கவேண்டும்.

மாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடுவதால் எந்த மாதிரியான தீங்குகள் ஏற்படலாம்?

மாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் தொற்றுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.அதாவது ஆனிலோ அல்லது பெண்ணிலோ எயிட்ஸ்(Aids) ,சிபிலிஸ்(SYPILLIS) , ஈரழ் அலர்ச்சி B(hEPATITIS B) போன்ற நோய்கள் இருந்தால் இது மற்றவருக்குத் தொர்ருவதகான சந்தர்ப்பம் அதிகமாகலாம்.

மேலும் கொண்டம் பாவிப்பது இந்த நோய்களின் தொற்றைக் குறைப்பதால் இந்த நேரத்தில் தவறாமல் கொண்டம் பாவிப்பது உகந்தது.
அதானால் உங்களுக்கு நம்பிக்கைக்கு உரியவரோடு மட்டும் உறவு வைத்துக் கொண்டால் மாதவிடாய் காலத்திலும் உறவு வைத்துக் கொள்ளலாம். சிலபேருக்கு மற்றைய நாட்களை விட இதன்போது அதிக சந்தோசம் கிடைக்கலாம்

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

உடல் உறவின் பயன்கள்

 
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள
 
கண்டு, கேட்டு, உண்டு, முகர்ந்து, தீண்டி அனுபவிக்கும் ஐம்புல இன்பங்களும் வளையல் அணிந்த இப்பெண்ணின் இடத்தே கொள்ளக் கிடக்கின்றன!
 
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கு மிடத்து.
 
ஆராய்ந்தறிந்த நல்ல ஆபரணங்களை யணிந்த இப்பெண்ணோடு சேர்ந்து வாழ்தல் என்பது, உயிர் உடலோடு சேர்ந்து இன்பத்தை நுகர்வதைப் போன்றது. இவளை பிரிந்து வாழ்தல் என்பது, உயிர் விட்டுப்போகச் சாதலைப் போலத் துன்பம் அனுபவிப்பது.
 
இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட இரு வேறு உடல்களை சங்கமிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவதும் உடல் உறவே ஆகும்.
 
சிக்மண்ட் ஃப்ராய்ட், 20 ம் நூற்றாண்டின் சிந்தனையாளர்களில் ஒருவர். மனோ வியாதிக்கான சைக்கோ அனலைசிஸ் எனும் ஆராய்ச்சியின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். பாலுணர்வு தான் முக்கியமான “தூண்டுதல் சக்தி” எல்லாவித பாசிடிவ் செயல்கள், கிரியேடிவ் செயல்கள் இவையெல்லாமே செக்ஸ் உந்துதல் தான் என்கிறார் ஃப்ராய்டு.
 
உடலுறவின் நன்மைகள்
 
ரத்த அழற்சி சீராகி மூளைக்கு அதிக ரத்தம் பாய்கிறது.
 
கலவியின் போது பல ரசாயன மாற்றங்கள் உடலில் நிகழும். மூளையில் டோஃபாமைன் அளவுகள் ஏறும்.
 
உடலுறவு ஆஸ்த்மாவை கட்டுப்படுத்தும்.
 
மகிழ்ச்சியான உடலுறவில் பெண்களின் அழகு கூடுகிறது. ஏழு நாட்களில் 4 முறை உடலுறவு கொள்ளும் பெண்கள் 10 வருட வயது குறைந்தவர்களாக தெரிகின்றனர். இவை சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பவை.
 
உடல் உறவு என்பது அற்பநேர சந்தோஷத்திற்காகவோ அல்லது இனவிருத்திக்காகவோ மட்டுமல்ல அதையும் விட மகத்தான பல பங்குகளைக் கொண்டது. சமீப கால ஆராய்ச்சிகள் இதனை தெளிவுபடுத்தியுள்ளன. நீண்ட நேரம் உடலுறவு கொண்டு கருத்தரிக்கும் பெண்களுக்கும் அதிக நேரம் உடலுறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறைகின்றன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பெண்கள் அதிக நேரம் உடலுறவு கொள்வதால் பெண் உறுப்பில் உள்ள தசை நார்கள் வலுவடைய உதவுவதாகவும் இது பிற்காலத்தில் ஏற்படும் சிறுநீர்க் கசிவு உபாதைகளைப் போக்கிடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
 
உடல் உறவு என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழியாகவே கருதப்படுகின்றது. இதனையே மேலை நாட்டு ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன. உடலுறவு கொள்வதால் மன இறுக்கம் குறைகின்றது. மனச்சோர்வு நீங்குகின்றது. மனது மகிழ்ச்சியடைகின்றது. சீரான சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு அவசியமாகின்றது.
 
கணவன் – மனைவி இருவரும் சராசரியாக வாரம் இருமுறை உறவு வைத்துக் கொள்வது உடல் நலத்தை பெருக்கி உடல் ஆரோக்கியத்தை பேணிட உதவுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வாரம் இரு முறை குறைந்த பட்சம் உறவு வைத்துக் கொள்வது ஜலதோஷத்தை அண்டவிடாது தடுத்திடும் வயிற்றுப் பிரச்சனைகளான நெஞ்செரிச்சல், அல்சர் வலி போன்றவற்றையும் போக்கிடும்.
 
உடலுறவு என்பது பல விதமான உடல் மற்றும் மனரீதியான உபாதைகளுக்கு ஒரு வடிகால் போன்று விளங்கினாலும் அளவோடு வைத்துக் கொள்வது மட்டுமே சிறந்த பயனை தந்திடும். அளவுக்கு அதிகமான உடலுறவு சோர்வை கொடுத்து உடலை பலவீனமடையச் செய்து விடும். குறைந்த இடைவெளியில் வாரத்திற்கு இரண்டு முறைக்கு மிகாமல் உறவு கொள்வதே ஆரோக்கியத்தை பெருக்கிடும் என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு உறவு கொள்வது உடலில் இம்மியூளோகுளோபுலின் – ஏ என்ற நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிடும் இராசயன் பொருளை உடல் தேவையான அளவு சுரந்திட வழி வகுக்கும். இதனால் உடல் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றிடும்.
நியுயார்க் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சியில் உடலுறவால் தலைவலி, கீல்வாதம் போன்ற பல வலிகள் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது. உடலுறவு கொள்ளும் பொழுது மூளையில் ஏற்படும் இயற்கையான சில இரசாயன சுரப்புகளால் சந்தோஷம் பெருகுவதால் இந்த இரசாயனப் பொருட்கள் வலி நிவாரணத்திற்கும் பயன்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
 
மேலும், இவ்வகைச் சுரப்புகள் மன அழுத்தத்தை போக்கி உடல் முழுவதும் ஒரு வித புத்துணர்ச்சியை பரவிடவும் செய்கின்றதாம்.
உடலுறவின் போது மூக்கும் அதிக சுறுசுறுப்பாகி தனது பணியை செவ்வனே செய்து அதிக சுரப்புகளை சுரந்தும் அதிக உமிழ்நீரைச் சுரக்கவும் செய்கின்றது. இதனால் தனது பணியை முறையாக மூக்குகள் செய்து மூக்கில் உள்ள நரம்புகள் வலுவடைவதும் கண்டறியப்பட்டுள்ளது.
 
திருப்தியான உடலுறவிற்குப் பின், உடல் களைத்துப் போய் சோர்வடைவது இயல்பே. இதற்கு அடிப்படைக் காரணமாக விளங்குவது உடலுறவின் போது, உச்சநிலையை அடைந்த பின்னர் உடல் ‘ஆக்கிடோஸிஸ்’ என்ற இரசாயனப் பொருளை சுரக்கின்றது.
 
இப்பொருள் ஓய்வையும் உடல் வெப்பத்தையும் மாற்றமடையச் செய்கின்றது. இப்பொருளே வாழ்க்கை துணைவருடன் அன்பை பெருக்கி இனிய மனநிலையை உண்டாக்குகின்றது.
 
பெண்களுக்கு உடலுறவு மாதவிலக்கு ஏற்படுத்தும் பலதரப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கின்றது. குறிப்பாக, மாதவிலக்கின் சமயம் “எஸ்ட்ரோஜனின்” அளவு சீர் செய்யப்படும் பொழுது, மாதவிலக்கிற்கு முன்பாக உடலுறவு கொண்டால் எஸ்ட்ரோஜனின் அளவு எளிமையாக சீரமைக்கப்படுகின்றது. அதனால் மாதவிலக்கின் போது ஏற்படும் பலவிதமான வலிகள் சோர்வு போன்ற உபாதைகள் பெரிதும் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது.
 
ஆண்களுக்கு உடல் உறவு களைப்பை, இறுக்கத்தை, மனச்சோர்வை போக்கிடும் ஒர் மாமருந்தாகும். மனம் அமைதி பெறவும் உடல் புத்துணர்ச்சி பெற பெரிதும் பயன்படும் அற்புத செயலாகும்.
 
உளவியல் மற்றும் மனஇயல் நிபுணர்களும் கூட பிரமச்சரியத்தை விட, உடலுறவால் தான் அதிக உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் தர இயலும் என ஒப்புக்கொள்ள ஆரம்பித்து, பரிந்துரையும் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
 
நமது கலாச்சாரத்தில் உடலுறவிற்கு கடைசியிடம் ஒதுக்கப்படலாம். ஆனால், ஆரோக்கியமாக வாழ்ந்திட உடல் உறவு ஒர் ஒப்பற்ற உன்னத வடிகாலாகும். எனவே, அவரவர்கள் வயதிற்கு ஏற்ப உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப வாரம் இருமுறையாவது உறவு கொள்வது, உடல் ஆரோக்கியத்தைக் காத்திட பெரிதும் உதவிடும். உடலுறவு அவசியமே!

பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டியவை

feeding pillow

பாலூட்டும் தாய்மார்கள் வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்துவது குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தாய் முடியும் என எச்சரிக்கை செய்துள்ளனர் கனடா நாட்டு மருத்துவர்கள்.

கோடைன் எனப்படும் மருத்துவப் பொருள் அடங்கிய வலி நிவாரணிகளை அதிகம் உட்கொள்வது குழந்தைகளின் உடல் நலத்தைப் பெருமளவில் பாதிப்பதாக அவர்கள் நடத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த வலி நிவாரணிகளை குறிப்பாக பிரசவ கால வலிகளிலிருந்து தப்புவிக்க தாய்மார்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் மருந்தாகும் . அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களுக்கு இந்த மருத்து அத்தியாவசியத் தேவை என்பது குறிப்பிடத் தக்கது.

பாலூட்டும் தாய்மார்கள் தங்களுடைய உணவுப் பழக்கவழக்கம், மருந்து உட்கொள்தல் போன்றவற்றில் அதீத கவனம் செலுத்துவதுண்டு. ஏனெனில் உடலில் கலக்கும் வேதியல் பொருட்கள் பால் வழியாக குழந்தையின் உடலுக்குள் செல்கிறது என்பதே.

தாய்மாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத இந்தப் பொருள் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், உறுப்புகள் பாதிப்பு, மயக்கம் போன்ற பலவிதமான இன்னல்களை உருவாக்குகின்றது என்பதை இந்த ஆய்வு நிரூபித்திருக்கிறது.

தாய்மார்கள் தாங்கள் உட்கொள்ளும் மருந்து குழந்தையின் உடலுக்குள்ளும் பாயும் என்பதை கவனத்தில் கொள்ளவும், தேவையற்ற மருத்துகளைத் தவிர்க்க வேண்டுமெனவும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.

வெள்ளி, 7 அக்டோபர், 2011

குழந்தை வளர்ப்பு உங்கள் குழந்தைக்குத் தெரியட்டும்தினசரி செய்தித்தாள்களிலோ அல்லது டிவியிலோ நாம் பார்க்கும் விஷயம் பெண்கள், குழந்தைகள் கற்பழிப்பு, பாலியல் தொந்தரவுகள் பற்றிய வேதனைக்குரிய சம்பவம்தான். அங்கொன்றுமாக இங்கொன்றுமாக பெரியவர்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் குழந்தைகளைப் பற்றி செய்தித்தாள்கள் அடிக்கடி அலாரம் அடிக்கத்தான் செய்கின்றன. "நினைக்கவே நெஞ்சம் பதறுகிற இதுபோன்ற ஆபத்துக்களில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பு பெற்றோருடைய கைகளில்தான் இருக்கிறது. அதற்கான விழிப்புணர்வு எல்லாப் பெற்றோர்களுக்கும் இருக்க வேண்டும்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி. குழந்தைகளை எப்படியெல்லாம் ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும்... அவர்களுக்கு எதையெல்லாம் சொல்லித் தந்து வளர்க்க வேண்டும் என்பது பற்றி விரிவாகப் பேசினார் ஜெயந்தினி.

"குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் முன்னும் சரி, அவர்கள் பள்ளி செல்லும் காலத்திலும் சரி... வெளி உலகை எதிர்கொள்ள அவர்களை மனரீதியாகத் தயார்ப்படுத்த வேண்டியது பெற்றோரின்... முக்கியமாக அம்மாக்களின் மிக முக்கிய கடமை....

குழந்தை பேசத் துவங்கும் பருவத்திலேயே அதன் கழுத்து வரைக்கும் யார் தொட்டாலும் அது "குட் டச்.... அதற்குக் கீழே எங்கே தொட்டாலும் அது "பேட் டச்" .... என்கிற இந்த வித்தியாசத்தை அடிக்கடி சொல்லி அவர்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும்.

"யாராவது உன்னை "பேட் டச்" பண்ணினா, உடனே, அவங்ககிட்ட "இது பேட் டச்... அம்மாகிட்ட சொல்லித் தருவேன். நான் உனக்கு பயப்படவெல்லாம் மாட்டேன்...." என்று சொல்லச் சொல்லி குழந்தையைப் பழக்க வேண்டும்.

அதோடு, "அப்படி யாராவது தொட்டா நீ என்கிட்ட சொல்லு. அவங்க ரொம்ப கெட்டவங்க...." என்று சொல்லி, "அந்த நபர் ஏதோ தவறு செய்கிறான்.. அவன் தண்டனைக்கு உரியவன்" என்கிற எண்ணத்தைக் குழந்தையின் மனதில் விதைக்க வேண்டும். அப்போதுதான் குழந்தை அப்படிச் செய்கிறவர்களைப் பார்த்துப் பயப்படாது.

இதுபோன்ற கயவன்களின் ஆயுதமே "மிரட்டல்"தான். "நம்மையோ, நம் பெற்றோரையோ இவன் ஏதாவது செய்து விடுவான்" என்று பயந்து போய்த்தான் தங்களுக்கு நடக்கிற அநியாயத்தைக் குழந்தைகள் பொறுத்துக் கொள்கின்றன.

எனவே, "நம் அப்பா அம்மாவுக்கு எல்லா வல்லமைகளும் உண்டு. அவர்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது.... அவர்களிடம் சொன்னால், நம் பிரச்சினை தீர்ந்துவிடும்" என்கிற தைரியத்தை குழந்தையின் மனதில் ஏற்படுத்தினாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும்.

அப்படியெனில், மீதி பிரச்சினை? அதற்கானத் தீர்வும் பெற்றோரிடம்தான் இருக்கிறது. சில குழந்தைகளுக்குத் தங்கள் பெற்றோரால் எதுவும் செய்ய முடியும் என்கிற தைரியம் இருக்கும். ஆனால், "நடந்த இந்த விஷயத்தைச் சொன்னால், எங்கே அவர்கள் தன்னைத் தண்டிப்பார்களோ" என்று பயந்து உண்மையை மறைப்பார்கள். இதற்குக் காரணம், குழந்தையை அளவுக்கு அதிகமாகத் தண்டிப்பது. இப்படி தண்டனைக்குப் பழகிப் போகும் குழந்தை ஏதேனும் தவறு நடந்தாலே "நாம்தான் குற்றவாளி" என்கிற எண்ணத்திலேயே இருக்கும். பெற்றவர்களிடம் நடந்ததைச் சொல்லாது" என்று குழந்தையின் மனநிலையைத் தெளிவாகப் படம் பிடித்தார்.

தொடர்ந்து, "தினமும் குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்ததும் அவர்களிடம் இயல்பாகப் பேசி நட்பாகப் பழகுவது மட்டும்தான் இதைத் தடுக்க இதற்கு ஒரே வழி. முதல் பீரியடில் நடந்த பாடத்திலிருந்து வீட்டுக்கு வந்து ஷூ கழற்றுவது வரை எல்லாவற்றையும் மெதுவாக, அதே நேரம் உற்சாகமாக விசாரிக்க வேண்டும். இப்படி தினமும் அவர்களது பேச்சுக்கு காது கொடுத்தால், அவர்களே மனம் திறந்து பேச ஆரம்பித்து விடுவார்கள்" என்று விளக்கியவர், இன்னும் சில முக்கியமான அணுகுமுறைகளையும் பகிர்ந்துக் கொண்டார்....

"ஒருவேளை தனக்கு நேர்ந்திருக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தலைப் பற்றி குழந்தை சொன்னால், உடனடியாக ஆக்ரோஷமாகி விடக் கூடாது. "நடக்கக் கூடாத ஏதோ ஒன்று தனக்கு நேர்ந்து விட்டது" என்று குழந்தை மிரண்டு போய் விடும்.

"சரி.... இனிமே தனியா அங்க போகாத.... அம்மாவோட வா... சரியா?" என்று மட்டும் சொல்லிவிட்டு, அந்தக் குறிப்பிட்ட நபரிடமிருந்து குழந்தையை விலக்குங்கள். அந்த நபரை முழுவதுமாகத் தவிர்த்து விட முடியும் எனில், உங்கள் கணவரிடமும் விஷயத்தைப் பக்குவமாக எடுத்துச் சொல்லி, இனி அந்த நபர் உங்கள் வீட்டுப் பக்கம் வராமல் இருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். முதல் தடவை நட.ந்த அந்த நிகழ்வை பதமாகக் கையாளுங்கள். அடுத்தடுத்துத் தொடர்ந்தால் தீவிர நடவடிக்கை எடுங்கள்." என்றவர், விளையாட்டுக்காகச் செய்கிற சில விஷயங்களிலும் கூடுதல் கவனம் தேவை என்பதைச் சுட்டிக் காட்டினார்...

"வீட்டில் உள்ளவர்கள், குழந்தைகளிடம் விளையாட்டுக்காக அவர்களது அந்தரங்க உறுப்பில் கிச்சுக்கிச்சு மூட்டுவது போன்ற செயல்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இதனால், வெளியாட்கள் இப்படி நடந்துக் கொள்ளும்போது குழந்தைகளுக்கு அது தவறாகத் தோன்றாது...." என்று எச்சரித்தவர்,

"ஒவ்வொரு குழந்தையுமே ஒருவித அறிவுப் பசியோடுதான் இந்த உலகத்தைப் பார்க்கிறது. அதனால் தான் புதிதாகப் பார்க்கும் ஒவ்வொரு பொருளையும் உருட்டி, புரட்டி "அதில் என்னதான் இருக்கிறது?" என்று கற்றுக் கொள்ளத் துடிக்கிறது. தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறையையே அந்த அறிவுப் பசிக்குத் தீனியாகத் தந்தால், கற்றுக் கொள்ளாமலா போய்விடும்!" என்றார் முத்தாய்ப்பாக!

பாலியல் கொடுமையிலிருந்து சிறுமிகளை கவனியுங்கள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை அதிகரித்து வருகிறது. மிகவும் நெருக்கமாக பழகும் ஒருவரே இதில் குற்றவாளியாக இருப்பதுதான் கொடுமையான விஷயம்.

* குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பதை கண்டுபிடிக்கும் வழிகள்...

* சில உடல் ரீதியான மாற்றங்களை மருத்துவ சோதனையின் மூலமே கண்டறிய முடியும். அவை...

* நடப்பது அல்லது உட்காருவதற்குச் சிரமப்படுவது.

* மன உளைச்சலால் ஏற்படும் உடல் நலக்குறைவு, அனோரெக்சியா, புலிமியா போன்றவை.

* சிறுநீர் அல்லது மலம் கழிப்பதில் அசவுகரியம்.

* சிறுநீர் உறுப்பில் மீண்டும் மீண்டும் ஏற்படும் நோய்த் தொற்று.

* குழந்தை உடல்ரீதியான தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதை வாய், அந்தரங்க உறுப்பு அல்லது மலம் கழிக்கும் உறுப்புகளில் ரத்தப்போக்கு, ரத்தக் கசிவு, சிராய்ப்பு அல்லது அரிப்பு போன்றவை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

* மார்பகம், பின்புறம், தொடை அல்லது வேறு உறுப்புகளில் சிராய்ப்போ, காயமோ காணப்படுதல்.

* எந்த வயதுக் குழந்தையாக இருப்பினும் பால்வினை நோய்கள் இருத்தல்.

* முறையற்ற கருத்தரிப்பு.

* குழந்தைகளின் நடவடிக்கை மாற்றங்களும் பாலியல் வன்முறையைக் காட்டும் அறிகுறியாகும். ஆனாலும் அது பாலியல் கொடுமையை மட்டும் குறிக்காது. இவற்றோடு கூட வேறு அறிகுறிகளும் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம்...

* பாடங்களை கற்றுக்கொள்வதில் சிரமம். காரணமில்லாமல் குறைவான மதிப்பெண்களைப் பெறுவது. ஞாபகசக்தியின் குறைபாடு, சிந்தனையை ஒருமுகப்படுத்துவதில் சிரமம் போன்றவை.

* விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற உடலுழைப்பு சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபட ஆர்வமின்றி இருத்தல்.

* விரல் சப்புவது, உறக்கத்தில் சிறுநீர் கழித்தல், பேச்சுத்திறன் குறைபாடு போன்ற வயதிற்கு பொருத்தமற்ற சிறுகுழந்தையைப் போன்ற செயல்களைச் செய்தல்.

* எப்போதும் அடுத்தவரைச் சார்ந்திருக்கும் தன்மை.
* திடீரென நிறைய பணமும், பரிசுகளும் சேர்வது.

* உடல் ரீதியான காரணம் ஏதுமின்றி தலைவலி, வயிற்றுவலி அல்லது வாந்தி பற்றி முறையிடுதல்.

* உடல் சோர்வு அல்லது உறங்குவதில் சிரமம்.

* தன்னைப் பேணிக்கொள்வதிலும், உடல் நலத்தை கவனிப்பதிலும் ஆர்வமின்மை.

* மனச்சோர்வுக்கு ஆளாகுதல்.

* சமூகத்திலிருந்து விலகி இருத்தல. (பெரியோர், நண்பர் என எல்லா உறவுகளிலும் நாட்டக்குறைவு)

* திடீரென பயம், இனம் தெரியாத வெறுப்பு, மன உளைச்சல் போன்றவற்றிற்கு ஆளாகுதல். (கொடுமைப்படுத்தப்பட்ட இடம் குறித்த பயம், குறிப்பிட்ட நபரைக் கண்டால் பயப்படுவது, விளையாட்டு அல்லது நீச்சல் உடை அணிய மறுத்தல் போன்றவை)

* உணர்ச்சியைத் தூண்டும் ஆபாசமான உடை அணிதல் அல்லது உடலில் ஏற்பட்ட காயங்களை மறைக்க அல்லது அழகில்லாமல் தோன்ற அடுக்கடுக்காக உடையணிதல்.

* வயதிற்கு பொருத்தமற்ற பாலுறவு பற்றிய அறிவு, நடவடிக்கை அல்லது பேச்சு.

* வகுப்புப்பாடம் அல்லது ஓவியப் பயிற்சியில் தன் பாலியல் அறிவை வெளிப்படுத்துதல்.

* தன்னைவிட வயதில் சிறிய அல்லது வலிமை குறைந்த குழந்தைகளிடம் பாலியல் கொடுமை இழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.

* வழக்கத்திற்கு மாறாக வரைமுறையின்றி எல்லோரிடமும் நெருக்கமாக பழகுதல்.

* சரியான காரணமின்றி வீட்டைவிட்டு ஓடிப்போவது.

* குடி, போதை மருந்துப்பழக்கம் ஏற்படுவது, உடலுறுப்புகளைச் சிதைத்துக் கொள்ளுதல், சட்டத்தை மீறுதல், தற்கொலை முயற்சி செய்தல் போன்ற தனக்குத் தீமை பயக்கும் செயல்களில் ஈடுபடுதல்.

* சம்பந்தப்பட்ட குற்றவாளி நெருக்கமானவர் என்றாலும், அவரிடம் இருந்து குழந்தைக்கு விடுதலையும், பாதுகாப்பும் அளிப்பது பெற்றோரின் கடமை. உறவுகளை விட, நட்பை விட, எல்லாவற்றையும் விட உங்களுக்கு உங்கள் குழந்தை முக்கியம்.

செவ்வாய், 4 அக்டோபர், 2011

ஆண் - பெண் இனப்பெருக்க உறுப்புக்கள்

பெண்

ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நுரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மாதியாகவே உள்ளது. இவர்களுக்கிடையே உள்ள ஒரே வித்தியாசம் இவர்களின் பாலியல் மற்றும் இனவிருத்திக்கான உடலுறுப்புகள் வெவ்வேறு விதமாக அமைந்துள்ளதுதான். ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து குழந்தையை உருவாக்க இந்த உறுப்புகள் மூலம்தான் சாத்தியம் ஆகிறது. பெண்களின் பல ஆரோக்கியப் பிரச்சினைகள் இந்த உறுப்புகளை பாதிப்பதாய் அமைந்துள்ளது.

பாலியலுடன் சம்பந்தப்பட்ட நம் உடலுறுப்புகளை குறித்து பேசுவது சற்று கடினமான காரியம்தான். குறிப்பாக நீங்கள் வெட்கப்படுபவராக இருந்தால் இதை குறித்து விவாதிப்பது ரொம்பவே கஷ்டம். உடலின் பல்வேறு இனப்பெருக்க உறுப்புகளின் பெயர்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் விவாதிப்பது கஷ்டம்தான். இன விருத்திக்கான உடலுறுப்புகள் பொதுவாகவே அந்தரங்கமான ஒன்றாகவே எங்கும் கருதப்படுகிறது.

நம் உடல் எப்படி இயங்குகிறது என்று நமக்கு தெரிந்தால் நம் உடலை நம்மால் மேலும் நன்றாக பார்த்துக் கொள்ளமுடியும். பிரச்சினைகள் வரும்பொழுது அதற்கான காரணங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அந்த அடிப்படையில் பிரச்சினை யின் காரணத்தை அறிந்து, எது சிறந்த சிகிச்சை என முடிவெடுக்க முடியும். நம்மை பற்றி மேலும் மேலும் அறியும் பொழுது மற்றவர்களின் அறிவுரை (நல்லதோ, கெட்டதோ எதுவாய் இருந்தாலும்)யையும் மீறி நம்மால் சொந்த முடிவு எடுக்க முடியும்.

ஒரு பெண்ணுக்கு பெண் என்பதற்கு அடையாளமான இனவிருத்தி உறுப்புகள் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் அமைந் துள்ளன. இவை பிறப்புறுப்புகள் அல்லது இனவிருத்திக்கான உறுப்புகள் என அழைக்கப் படுகின்றன. வெளிப்பாகத்தை உல்வா என்றழைப்பர். இந்த பாகம் முழுவதையும் சிலர் யோனி என்றழைப்பதுண்டு. ஆனால் யோனி என்பது உல்வாவின் திறப்பிலிருந்து உள்ளே கர்ப்பப்பை வரை போகின்ற வழி யாகும். யோனியை சில நேரங்களில் பிறப்பு வழி என்றும் அழைப்பதுண்டு.

கீழேஉள்ள வரைபடத்தில் உல்வா விளக்கப்பட்டுள்ளது. அதன் பல்வேறு பாகங்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. ஆனால், பெண்ணுக்கு பெண் உடல் வித்தியாசப்படும். உறுப்புகளின் அளவு, வடிவம் நிறம்கூட வித்தியாசப்படும். குறிப்பாக வெளி மற்றும் உள் மடிப்புகள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்படும்.

மார்பகங்கள்

மார்பகங்கள் எல்லா வடிவிலும் எல்லா அளவிலும் காணப்படும். ஒரு பெண்ணுக்கு 10 முதல் 15 வயது ஆகும் போது இது வளர ஆரம்பிக்கிறது. அதாவது சிறுமியாயிருந்து பூப்படையும் பருவத்தில் இது வளர ஆரம்பிக்கிறது. கருத்தரித்த பின் குழந்தைக்கான பால் இங்குதான் உற்பத்தியாகிறது. உடலுறவின் போது இதைத் தொட்டால் பெண்ணின் யோனிக் குழாய் ஈரமாகி பெண்ணை உடலுறவுக்கு தயார்படுத்துகிறது.

மார்பகத்தின் உள்பாகம்

சுரப்பிகள் : குழந்தைக்கான பாலை உற்பத்தி செய்கிறது.

சுரப்பி குழாய்கள் : இவை பாலை மார்புக் காம்புக்கு கொண்டு செல்கிறது.

திறவு (Sinuses) : குழந்தை பால் குடிக்கும் வரை பால் இங்குதான் சேமித்து வைக்கப்படுகிறது.

மார்புக்காம்பு : இதன் வழியே பால் வெளிவருகிறது. சில நேரம் இது விரைத்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். சில நேரம் இது தட்டையாக இருக்கும்.

ஏரியோலா (Areola) : மார்புக் காம்பை சுற்றிய கருத்த மேடான பகுதி. கருவட்டத்தில் உள்ள மேடுகள் எண்ணெய் பசையை உற்பத்தி செய்கின்றன. அவை மார்புக்காம்பை சுத்தமாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

பருவமாற்றங்களும் ஹார்மோன்களும்

ஹார்மோன்கள் உடலில் சுரக்கும் விஷேச வேதிப்பொருட்களாகும். இவை உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுப்படுத்துகிறது. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிடாய்க்கு சற்று முன்பு எஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டெரோன் என்ற இரு ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள். இந்த இரு ஹார்மோன்களால் தான் பெண் பருவமடைகிறாள்.

பருவமடைந்த பின் மாதவிடாய் நிற்கும் வரை, ஹார்மோன்கள் பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்பிற்கு தயார்படுத்துகிறது. இந்த ஹார்மோன்களின் ஆணைப்படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டையை வெளியிடுகின்றன. ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாய் விளங்குகின்றன. பல குடும்ப கட்டுப்பாட்டு வழிமுறைகள் இந்த ஹார்மோன்களை கட்டுப்படுத்துவது மூலம் நடக்கிறது. கருத்தரித்த பின்பும், தாய்பால் ஊட்டும் போதும் கூட ஹார்மோன்கள் பல மாற்றத்தை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்களால் தான் கர்ப்பமாயிருக்கும்போது மாதவிடாய் வருவதில்லை. குழந்தை பிறந்த உடனே பால் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்கள்தான்.

ஒரு பெண் இன விருத்திக்கான கட்டத்தை கடக்கும்பொழுது, இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது. அவள் உடலில் கருத்தரித்த லுக்கான நிலை முடிந்து போகும். மாதவிடாய் முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர் தான் “மாதவிடாய் நின்றுவிடுதல்” (Menopause)

அதைத் தொடர்ந்து பெண்ணின் உட லில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவளின் மனநிலை, காம உணர்வு, எடை, உடல்சூடு, பசி மற்றும் எலும்பின் சக்தி ஆகியவற்றிலும் மாற்றம் ஏற்படும்.

மாதவிடாய்

ஒரு பெண் இனவிருத்திக்கான காலக்கட்டத்தில் இருக்கும்பொழுது, ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் அவளின் கர்ப்பப் பையிலிருந்து இரத்தம் யோனிக் குழாய் வழியாக உடலை விட்டு வெளியேறு கிறது. இதற்கு பெயர்தான் மாதவிடாய். மாதவிடாய் நடப்பது உடல் நல்ல நிலையில் இருப்பதற்கு அடையாளம். இதன் மூலம் உடல் கருத்தரித்தலுக்கு தயாராகிறது. இந்த மாதவிடாயை பல பெண்கள், தங்கள் வாழ்வின் ஒரு அம்சமாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பலநேரங்களில் அவர்களுக்கு இது ஏன் நிகழ்கிறது? இந்த மாற்றம் ஏன் ஏற்படுகிறது என்றெல்லாம் தெரிவதில்லை.

மாதாந்திர சுற்று (மாதவிடாய் சுற்று)

மாதாந்திரச் சுற்று ஒவ்வொரு பெண் ணுக்கும் வித்தியாசப்படும். இரத்தப்போக்கு வரும் முதல் நாள் இது தொடங்குகிறது. பெரும்பாலான பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை இந்த ரத்தப்போக்கு ஏற்படும். சில பெண்களுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை கூட இது ஏற்படும். சில பெண்களுக்கோ 45 நாட்களுக்கு ஒருமுறைதான் இது நிகழும். மாதவிடாய் சுற்றின்போது, ஒவரியில் சுரக்கும் எஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ் டெரான் ஹார்மோன்களின் அளவு மாறிக் கொண்டேயிருக்கும். மாதச்சுற்றின் முதல் பாதியில் பெரும்பாலும் சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன்தான் சுரக்கும். இதனால் கருப்பையின் உட்சுவரில் ரத்தம் மற்றும் திசுக்களாலான மிருதுவான படலம் உருவா கிறது. ஒரு வேளை பெண் கருத்தரித்தால் உருவாகும் குழந்தை இந்த மிருதுவான கூட்டில் சுகமாக இருக்கும்.

மாதச்சுற்றின் மத்தியில், கருப்பையின் மிருதுவான உட்சுவர் தயார் ஆன உடன், ஏதாவது ஒரு சினைப்பையில் இருந்து முட்டை ஒன்று வெளியேறும். இம்முட்டைஃபெலோப்பியன் குழாய் வழியாக கருப்பையை அடையும். அப்போது பெண் கருத்தரிக்க ஆயத்த நிலையில் இருப்பாள். அப்போது பெண் உடலுறவுக் கொண்டாள், ஆணின் உயிரணு முட்டையோடு சேர வாய்ப்புண்டு. இதற்கு கருத்தரித்தல் எனப்பெயர். அது கர்ப்ப காலத்தின் தொடக்கமும் ஆகும். மாதச்சுற்றின் இரண்டாம் பாகத்தில், அதாவது அவளது அடுத்த மாதவிடாய் தொடங்கும் வரை அவள் உடல் புரோஜெஸ்டொரோன் ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹர்மோனும் கருத்தரிதலுக்கு ஏதுவாக கருப்பையின் மிருதுவான உட்சுவரை உருவாக்குகிறது.

பெரும்பாலான மாதங்களில் பெண்ணின் முட்டை கருத்தரிக்காது. எனவே கருப்பையின் சுவர்ப்படலத்துக்கு தேவையிருக் காது. சினைப்பைகளும், ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்தி விடும். இதன் விளைவாய் சுவர்படலமானது உடைந்து சிதையும். உடைந்து சிதைந்த இரத்தக்குழம்பு கருப்பையிலிருந்து மாதவிடாயின்போது, உடலை விட்டு வெளியேறும். இதனோடு கூடவே முட்டையும் வெளியேறும். இது புதியமாதாந்திர சுற்றின் தொடக்கமாகும். மாதவிடாய் நின்ற உடன் சினைப்பைகள் சுவர்ப்படலம் உருவாகும். பெண்களுக்கு வயதாகி, மாதவிடாய் முற்றிலுமாக நிற்பதற்கு முன்பு இரத்தப்போக்கு அடிக்கடி ஏற்படலாம். இரத்தப்போக்கின் அளவும், இளமையாய் இருந்தபோது உண்டானதைவிட அதிகமாக இருக்கலாம். மாதவிடாய் நிற்கப் போகும் காலத்தில் (மெனோபாஸை நெருங்கும் சமயத்தில்), மாதவிடாய் சில மாதங்கள் நின்று மீண்டும் தொடங்கலாம்.

பெண்ணின் இனவிருத்தி உறுப்பின் வெளிப்பாகங்கள்

உல்வா : உங்கள் இரு தொடைகளுக்கு இடையே காணப்படும் இனவிருத்தி உறுப்புகள்

வெளிமடிப்புகள் : தடித்த சதைப் பகுதி கால்கள் ஒன்றாக இருக்கும்பொழுது இவை மூடிக்கொள் ளும். இது உள் பாகங்களை பாதுகாக்கிறது.

உள்மடிப்புகள் : இது மிருதுவான தோல்பகுதி. இதில் முடி இருக்காது. தொட்ட உடனே உணர்ச்சி வரும். உடலுறவின் போது இப்பாகம் விரிவடையும். இதன் நிறம் கருமையாகும்.

யோனிக் குழாயின் திறப்பு : யோனியின் திறப்பு வாயில்

ஹைமன் (Hymen) : யோனியின் திறப்பில் உள்ளே அமைந்துள்ள மெல்லிய சதைப் பகுதி. கடின வேலை விளையாட்டு போன்ற நடவடிக்கைகளின் போது இத்தோல் பகுதி விரிவடையும் அல்லது கிழிபடலாம். அப்போது லேசாக இரத்தம் வரும். முதன்முறையாக உடலுறவின் போதும் இது கிழிபடலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஹைமன் வித்தியாசப்படும். சில பெண்களுக்கு ஹைமன்னே இருக்காது.

மோன்ஸ் (Mons) : முடிகள் அடர்ந்த, உல்வாவின் தடித்த மேல் பகுதி.

கிளிட்டோரிஸ் : மலர்மொட்டு போன்று சிறு பாகம். உல்வாவின் பாகங்களிலேயே மிகுந்த உணர்ச்சி தரக்கூடியது. இதையும் இதைச் சுற்றியுள்ள பகுதியையும் தேய்த்தால் பெண்ணுக்கு பாலியல் வேட்கை அதிகமாகி உச்சக் கட்டத்தை அடைவாள்.

சிறுநீர்த்துவாரம் : சிறுநீர் குழாயின் வெளித்திறவு வாயில். சிறுநீர்ப் பையில் சேமிக்கப்பட்டுள்ள சிறுநீர் இக்குழாய் வழியேதான் உள்ளிருந்து வெளியே வருகிறது.

ஆசனவாய் (Anus) : குடல்வாய் திறப்பு, கழிவு (மலம்) இதன் வழியாக வெளியேறும்

பெண்ணின் இனவிருத்தி உறுப்புகளின் உட்பாகங்கள்

சினைப்பை: ஒவ்வொரு மாதமும் சினைப்பையிலிருந்து ஒரு முட்டை பெலோப்பியன் குழாய்க்கு அனுப்பப்படுகிறது. ஒரு ஆணின் விந்தணு இதோடு இணையும் பொழுது அது குழந்தையாக உருப்பெற துவங்கு கிறது. ஒரு பெண்ணுக்கு இரு சினைப்பைகள் இருக்கும் கருப்பையின் இரு புறமும் ஒவ்வொன்றும் இருக்கும். ஒவ்வொரு சினைப்பையும் ஒரு திராட்சைப்பழ அளவில் இருக்கும்.

கர்ப்பப்பைவாய் : கருப்பையின் வாயைத் தன் கர்ப்பப்பைவாய் என சொல்கிறோம். கருப்பையின் இத்திறப்பு யோனிக்குள் செல்கிறது. ஆணின் உயிரணு கர்ப்பப்பைக்குள் கர்ப்பப்பை வாயில் உள்ள சிறுதுவாரம் வழியே உள்ளே நுழைகிறது. அதே நேரத்தில் ஆண்குறி போன்ற மற்றவை கருப்பையில் நுழைய முடியாதபடி இது தடுக்கிறது. குழந்தைப் பிறப்பின்போது, இது திறந்து குழந்தை வெளியே வர உதவுகிறது.

.ஃபெலோப்பியன் குழாய்கள் : இக்குழாய்கள் சினைப்பையையும் கர்ப்பப்பையையும் இணைக்கிறது. சினைப்பை ஒரு முட்டையை வெளியிடும் போது, அம்முட்டை இக்குழாயில் பயணம் செய்து கருப்பையை அடைகிறது.

கர்ப்பப்பை : உள்ளே வெற்றிடத் தைக் கொண்ட தசையாலான பகுதி மாதவிடாயின் போது இங்கிருந்து தான் இரத்தம் வெளியேறுகிறது. கருத்தரித்த பின் குழந்தை இங்குதான் வளர்கிறது.

யோனிக் குழாய் அல்லது பிறப்புவழி : உல்வா (Vulva)விலிருந்து கர்ப்பப்பைக்கு செல்லும் பாதைதான் யோனிக் குழாய். இதன் தோல் பகுதி விஷேசமானது. உடலுறவின் போதும் குழந்தைப் பிறப்பின்போது இத்தோல் பகுதி சுலபமாக விரிவடை கிறது. இதிலிருந்து வெளிப்படும் திரவம் அல்லது ஈரம் யோனிக்குழாயை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், கிருமிகள் தாக்காமலும் பாதுகாக்கிறது.

பெண்களின் பாலியல் பிரச்சனைகள்

வளர்கின்ற பருவத்தில் பெரும்பாலான பெண்களுக்கு காதல் மற்றும் காம உணர்வுகள் வரத்தான் செய்யும். தாங்கள் யாரையாவது தொடவேண்டும் அல்லது யாராவது தங்களை தொடவேண்டும் என்று அவர்கள் இச்சையுடன் நினைப்பது சாதாரண விஷயம்தான்.

பெண்கள் உடலுறவில் ஈடுபட பல காரணங்கள் உண்டு. சிலர் குழந்தைவேண்டி உடலுறவில் ஈடுபடுகிறார்கள். சிலருக்கு உடலுறவு சந்தோஷம் அளிப்பதாய் உள்ளது. சிலருக்கு அது தேவைப்படுகிறது என்பதனால் உடலுறவில் ஈடுபடுகிறார்கள். சிலர், அதில் விருப்பம் உண்டோ, இல்லையோ, மனைவி என்ற அடிப்படையில், கடமை போல் அதில் ஈடுபடுகிறார்கள். சிலர் பணத்திற்காக அல்லது வாழ்க்கையில் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு அல்லது தனது குழந்தைகளுக்கு உடைகள் வாங்குவதற்காக அல்லது தங்க இடம் வேண்டி கட்டாயப்படுத்தப்பட்டு அதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

மற்ற பெண்கள் தன்னுடைய துணைவன் தன்னை அதிகம் நேசிக்கவேண்டும் என்பதற்காக உடலுறவில் ஈடுபடுகிறார்கள். சில நேரங்களில், பெண்ணின் நண்பனோ அல்லது காதலனோ, பெண் தயாராக இல்லாதபோது கூட அவனுடன் உடலுறவு கொள்ளவேண்டும் என வலியுறுத்தி அவளை ஏற்றுக்கொள்ளச் செய்கிறான்.

தான் விரும்பாத பொழுது, எந்த ஒரு பெண்ணும் உடலுறவின் ஈடுபடக்கூடாது. தான் அதற்கு தயார் என்று பெண்ணாகிய நீங்கள் முடிவு செய்த பின்னரே அதில் ஈடுபட வேண்டும். உடலுறவு என்பது, அதில் ஈடுபடும் இருவருக்குமே மகிழ்ச்சி தரக்கூடியது. ஆனால் அதில் பயமோ, வெட்கமோ இருக்கும் பட்சத்தில் அந்த மகிழ்ச்சி கிடைப்பது கடினம். உடலுறவுக்கு நீங்கள் தயாரானவுடன், கருத்தரித்தல் மற்றும் பால்வினை நோய்களி லிருந்து உங்களை எப்போதும் பாதுகாத்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

காதலனோடு உடலுறவு வைத்துக் கொள்ள நிர்பந்தம்

உலகம் முழுவதும், பல பெண்களும் இளம் பெண்களும் விருப்பமில்லாமல் உடலுறவில் ஈடுபட நிர்பந்திக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் காதலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அவர்களின் ஆண் நண்பர்களே இவ்வாறு நிர்ப்பந்திக்கிறார்கள். சில இடங் களில் இதை ‘காதலனின் பலாத்காரம்’ (Date rape) என்றழைக்கின்றனர். இந்த நிர்ப்பந்தம் உடல் ரீதியானது மட்டுமல்ல. உணர்வுகளாலும், வார்த்தைகளாலும் கூட அவர்கள் நிர்ப்பந்திப்பார்கள். விருப்பமில்லாமல் யாரையும், யாரும் பாலுறவுக்கு நிர்ப்பந்திக்கக் கூடாது.

உங்கள் குடும்ப உறுப்பினர் யாராவது உங்க ளோடு உடலுறவு வைத்துக்கொள்ள முயற்சித்தால் (முறைக் கெட்ட உறவு)

நீங்கள் விரும்பவில்லையெனில் உங்கள் விருப்பத்திற்கு மாறாய், எவ்வளவு நெருக்கமானவராய் இருந்தாலும், அவர் உங்களை தொடக்கூடாது. அது தவிர உங்களை தந்தை, சகோதரன், மாமா, அல்லது ஒன்றுவிட்ட சகோதரன் போன்ற எந்த குடும்ப உறுப்பினரும் உங்களின் பிறப்புறுப்பையோ, அல்லது உடலின் வேறு எந்த பாகத்தையோ, காம உணர்வோடு தொடக்கூடாது. அப்படி யாரேனும் தொட்டால், உடனே நீங்கள் உதவி நாடவேண்டும். வெளியே சொன்னால் உனக்கு ஆபத்து என்று தொட்டவர் பயமுறுத்தினால் கூட, நீங்கள் நம்பும் ஒருவரிடம், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சொல்லவேண்டும். இந்த விபரத்தை உங்கள் குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒருவரிடம் சொன்னால், இன்னமும் நல்லது.

(நன்றி : டாக்டர் இல்லாத பெண்களுக்கு)
(நன்றி : மாற்று மருத்துவம் அக்டோபர் 2008)

தாம்பத்தியம் தழைக்க தங்கமான யோசனைகள்தாம்பத்தியத்தின் வெற்றிக்கும் தொடர் வெற்றிக்கும் கணவன், மனைவி இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த - புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ / அசைவ உணவுக் கூறுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண்ண வேண்டும்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய அலோபதி மருந்துகளை உண்ணக்கூடாது.

உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உடலுறவு செய்வது கூடாது. இதனால் மூட்டு உபாதைகளும், வேறு பல உடல்நலக்கோளாறுகளும் ஏற்படும்.

உறவுக்கு முன் இனிமையான உரையாடலும், உணர்வுப்பறிமாறலும், முன்விளையாடலும் உறவு முழுமைபெற உதவும். தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் தாம்பத்தியம் அரைகுறையாக அலங்கோலமாக ஆகிவிடும்.

அன்றாட வாழ்வில் அலையலையாய் வரும் குடும்ப பிரச்சனைகளில் கணவன் மனைவியரிடையில் கருத்துவேறுபாடுகள், மனச்சோர்வுகள், மன இறுக்கங்கள் போன்றவை ஏற்படும். அது நீடிக்கக்கூடாது. பரஸ்பரம் புரிதலோடு பேசித் தீர்க்க வேண்டும். மனஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டும் இயங்கி தேகவேட்கையைத் தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும் ஆழ்ந்த மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி.

தாம்பத்தியத்தில் எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது. அடிக்கடிவரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும். தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையரையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வது முக்கியம்.

வயது அதிகமாகும் போது. தாம்பத்திய உறவு இயலாமல் போய்விடுமோ என்ற அச்சம் தேவையற்றது. உடலுறுவுக்கு வயது ஒரு தடை அல்ல.
கணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர். புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பேசினால் அநாகரீகம் அப்படிச் செய்தால் அநாகரீகம் என்று எண்ணத் தேவையில்லை. இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்க்கை நெறிப்படி சரியானதுதான்.

கணவனுக்கும் மனைவிக்கும் தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் இருப்பதில்லை.ஆணுக்கு ஆவல் அடிக்கடி ஏற்படும். பெண்ணுக்கு விருப்பமில்லாதபோது தொல்லை தரக்கூடாது என்றெண்ணி அடக்கிக்கொள்கிறான். இது தொடர்கதையானால் மனைவி மீது ஒருவித வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே பெண்கள் ஆண்களின் மனநிலையறிந்து இயன்றளவு தங்களை சரிசெய்துகொள்ளுவது இல்லறத்தை இனிக்கச் செய்யும். அடிக்கடி உடலுறவு கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு.

ஆண்கள் அவர்களது விருப்பம் அறிந்து உதாசீனப்படுத்தாமல் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும். பரஸ்பர மனவிருப்பம், தேவை அறிந்து உடல் எழுச்சியை வரவழைத்து தாம்பத்தியம் மேற்கொள்வது தம்பதியரிடம் என்றென்றும் இறுக்கமான பிணைப்பையும், இணைப்பையும் உறுதிப்படுத்தும்.

 
(கட்டுரை அக்டோபர் 2008 மாற்று மருத்துவம் இதழில் வெளிவந்தது)

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

கர்ப்பத்தின் போது உறவு


பொதுவாக கர்ப்பத்தின் போது உடலுறவு என்பது பல தம்பதிகளும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.

பொதுவாக ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து அதில் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டதும், மருத்துவர் கூறும் முதல் அறிவுரை முதல் மூன்று மாதங்களுக்கு உடலுறவு வேண்டாம் என்பதுதான்.

இது எல்லா மருத்துவர்களும் கூறுகிறார்களா என்பது சந்தேகமே, ஆனால் இதுதான் நடைமுறை.
 

முதல் மூன்று மாதம்தான் கர்ப்பத்தின் முக்கிய காலக்கட்டமாகும். இந்த சமயத்தில் கர்ப்பத்தின் உறுதித்தன்மை குறைவு. ஆகையால்தான் முதல் மூன்று மாத காலத்திற்கு உடலுறவு வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.
 
எனினும் கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு உடலுறவில் இன்பம் குறைந்தே காணப்படும். முதல் மூன்று மாதத்திற்குப் பின் பெண் சம்மதித்தால் உடலுறவில் ஈடுபடலாம். அதில் தவறு ஏதும் இல்லை.

ஆனால் மிகவும் எச்சரிக்கையாக உடலுறவு கொள்ள வேண்டும். முரட்டுத்தனமாக இருக்கக் கூடாது. மிகவும் வசதியான நிலையில் பெண் இருக்கும் போது உடலுறவு கொள்ளல் வேண்டும். ஆணின் உடல் எடை எந்த வகையிலும் பெண்ணை அழுத்தக் கூடாது.

அதிக உணர்ச்சிவயப்படுதலோ, அதிக நேரம் உடலுறவு கொள்வதோ பெண்ணை சீக்கிரம் களைப்படையச் செய்து விடும். அதனையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

மேலும், உடலுறவின் போது பெண்ணின் கர்ப்ப வாயில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தற்போது மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

அதற்காக கவலைப்பட வேண்டாம், உடலுறவுக்கு முன்பும், பின்பும் இருவருமே உறுப்புகளை சரியாக சுத்தம் செய்திருக்க வேண்டும். கூடுமானவரை காண்டம் எனப்படும் ஆணுறைப் பயன்படுத்தி உடலுறவுக் கொள்வது பிறக்கப் போகும் குழந்தையின் உடல் நலத்தை பாதுகாக்க வழி செய்யும்.

கர்ப்பிணின் பெண்கள் உடல் மற்றும் மன அளவில் தயாராக இருக்கும் வரை உடலுறவுக் கொள்ளலாம்.


8 அல்லது 9வது மாதங்களில் உடலுறவுக் கொள்ளும் போதுதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்பத்தின் 8 அல்லது 9வது மாதத்தில் உடலுறவுக் கொள்வது உடலுறுப்புக்களை தளர்த்தியாக வைக்க உதவுகிறது.

எனினும், சிலருக்கு கர்ப்பப் பை பலவீனமாக இருப்பதாகவும், சிலர் படுத்த நிலையிலேயே கர்ப்ப காலத்தைக் கழிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தால் அவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே உடலுறவு கொ‌ள்ள வேண்டும்.

வியாழன், 29 செப்டம்பர், 2011

தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
எது வெற்றி? எது தோல்வி?

முதலில் எது வெற்றி? எது தோல்வி? நினைத்ததை அடைந்தால் வெற்றி. அடைய முடியாவிட்டால் தோல்வி. முதலில் புரிந்துகொள்ள வேண்டியது “தோல்வி என்பது நாம் செய்த செயல்கள் சரியில்லை” என்பதை அறிவுறுத்த வந்த நிகழ்வு. இதில் நான் தோற்கவில்லை.

நான் செய்த செயல்கள் சரியில்லை என்பதுதான் நிகழ்வு. எனவே, நம் வாழ்க்கை அகராதியில், ‘நான் தோற்றுவிட்டேன்’ என்றசொல்லைத் தூக்கிக் கடலில் போட்டு விடுவோம்.
குழந்தை நடக்க முயற்சி செய்யும்பொழுது பலமுறை விழுந்து எழுந்துதான் நடக்கக் கற்றுக்கொள்கிறது. எந்தக் குழந்தையாவது ‘நான் நடக்க முயற்றிக்கும் பொழுது 50 முறை விழுந்து விட்டேன். எனவே நடப்பது எனக்கு ஒத்துவராத விஷயம்” என முடிவெடுத்திருக்கிறதா? ’50 முறை என்ன, 500 முறை விழுந்தாலும் எழுந்து நடந்தே தீருவேன்’ என்ற உற்சாகம் Motivation enthusiasm இருப்பதால் குழந்தை புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வமாய் உள்ளது. தன்னுடைய 5 வயதிற்குள் குழந்தை கிட்டத்தட்ட 93 திறமைகளை வளர்த்துக்கொள்கிறது.
உடனே வெற்றி இல்லை

நாம் சைக்கிளோ, ஸ்கூட்டரோ, காரோ கற்றுக்கொண்ட பொழுது ஒரே முயற்சியில் கற்றுக்கொள்ளவில்லை. பலமுறைவிழுந்தும் அடிபட்டும் கற்றுக்கொண்டோம். இப்படி எந்தத் திறமையையும் ஒரே முயற்சியில் நாம் பெற்றதில்லை. ஆனால் தொழிலுக்கு வந்த பிறகு ‘தோல்வியே வரக் கூடாது’ என்று நினைக்கிறோம்.

நண்பர்களே! ஒரு ஊருக்குக் காரில் போனால் மேடு, பள்ளங்கள், மழை, புயல் டயர்பஞ்சர், கூட்ட நெரிசல் எனப் பல்வேறு தடைகள் வருகின்றன. இவற்றையெல்லாம் கடந்துதான் நாம் அந்த ஊருக்குச் சென்று சேருகிறோம்.
அதற்காக நாம் பயணத்தை ரத்து செய்து விடுவதில்லை. திரும்பி வந்துவிடுவதும் இல்லை. தடைகளைக் கடந்து அந்த இடத்தை அடைகிறோம்.

 அதுபோலத் தொழிலும் பிரச்சனைகள், சங்கடங்கள், போட்டிகள், நஷ்டங்கள், தோல்விகள், இழப்புகள் போன்றவை ஏற்படத் தான் செய்யும். தொழிலில் வெற்றிபெற அந்தத் தடைகளைக் கடந்துதான், தோல்விகளைச் சந்தித்துத்தான் செல்ல வேண்டி இருக்கிறது.

சாதனையாளர்கள்…

இந்த மனிதனை வாழ்க்கையில் சாதனையாளர்களின் சரித்திரத்தைப் பார்த்தால் அவர்கள் நிறையத் தோல்விகளைச் சந்தித்து அவற்றை யெல்லாம் கடந்துதான் வெற்றியடைந்திருக்கிறார்கள். சாதாரண மனிதர்கள் தோல்விகளால் தன் முயற்சியிலிருந்து பின் வாங்கி விடுகிறார்கள்.
இதனை வள்ளுவர்
“இடைக்கண் முறிந்தார் பலர்!” என்பார்.
வெற்றியார்கள், சாதனையாளர்கள், தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் அவர்கள் அடைந்த பலன்கள் – பயன்கள் நிறையவே சொல்லப்பட்டிருக்கிறது. எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் பட்ட கஷ்டங்கள், தோல்விகள், தூக்கம் கெட்ட இரவுகள், அவமானங்கள், சிந்திய வியர்வை இவற்றைப் பற்றிச் சிறிதளவே சொல்லப்பட்டு இருக்கிறது.

எத்தனையோ வெற்றியாளர்களை நான் தனிப்பட்ட முறையில் பேட்டி கண்டபொழுது அவர்கள் சந்தித்த தோல்விகளும், கஷ்டங்களும், நஷ்டங்களும் ஏராளம், ஏராளம்.

பெரிய வெற்றி வேண்டுமானால்…
வெற்றியின் அளவு பெரியதாக இருக்க இருக்கப் போராட்டங்களும் பெரிதுதான். கட்டிடத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க அதன் அஸ்திவாரத்தின் ஆழமும் அதிகம். அஸ்திவாரம் தோண்டிக் கொண்டிருக்கும் பொழுதும், அதனுள்ளே சுவர் எழுப்பிக் கொண்டிருக்கும் பொழுதும் வெளி உலகுக்குத் தெரியாது. அந்தச் சமயத்தில் வெளி உலகம் உங்களைக் கேலி செய்யலாம். அல்லது மதிக்காமல் இருக்கலாம். அவர்கள் பார்வையில் கட்டிடம் மேலே வந்தால்தான் வெற்றி என்று நினைப்பார்கள்.
ஆனால் நண்பர்களே! நீங்கள் இதுவரை சாதிக்காமல் இருந்தால், தோல்வியடைந்து கொண்டிருந்தால் ‘அஸ்திவாரம் தோண்டிக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று அர்த்தம். அதற்காகக் கவலைப்பட வேண்டாம். இப் பொழுது நீங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறீர் கள். உங்களால் நிச்சயமாக உயர்ந்த கட்டித்தைக் கட்டமுடியும்.
ஒரு விவசாயி நெல் விதைத்தால் 3 மாதத்தில் அறுவடை செய்யலாம். ஆனால் மாமரம், தென்னைமரம் வைத்தால் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதன் பலன் பல வருடங்கள் தொடர்ந்து கிடைக்கும். ஆகவே நீங்கள் பெரிய வெற்றியடையத் தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள்.
தோல்விக்குக் காரணங்களை ஆய்க

ஒவ்வொரு முறையும் மனிதர்கள் தோல்வியடையும்போது விஞ்ஞானப் பூர்வமாகக் காரண காரியங்களை ஆராய வேண்டும். தோல்விக்குக் காரணம் என்ன? எதில் குறை? என்ன குறை? என்பதைத் தீர்க்கமாகப் பார்க்க வேண்டும்.

அதாவது குறை-தொழில் அறிவிலா? அணுகுமுறையிலா? திறமையிலா? அல்லது எனக்கு வியாபார – விற்பனை உத்திகள் சரியாகத் தெரியவில்லையா? போட்டியா உலக நிலவரம் தெரியவில்லையா? தரமா? விலையா? வாடிக்கையாளர் சேவை போதவில்லையா? தொடர்ச்சியான வளர்ச்சி இல்லையா? கணக்குகளில் சரியில்லையா? தொழில் ஈடுபாடு அல்லது அக்கறையில்லையா? நன்கு கவனிக்கவில்லையா?
இப்படிப் பல கோணங்களில் விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். முன் அனுபவம் உள்ளவர்களிடமும் ஆலோசகர் களிடமும் ஆலோசனை பெற வேண்டும். குறை களைக் கண்டுபிடித்துச் சரி செய்து, மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்.

நினைத்த வெற்றி- நினைத்த குறிக்கோளை அடையும் வரை மீண்டும், மீண்டும் தொடர் முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். ‘எத்தனை தோல்விகள் வந்தாலும் காரணத்தைக் கண்டுபிடித்து வெற்றியடையாமல் விட மாட்டேன்’ என்றமன உறுதி உடையவர்களுக்கு வெற்றி நிச்சயம். இதை டாக்டர் Falu தீவிரத்தன்மை Intentness என்று கூறுவார்.

தோல்விகள் – விழிப்புணர்வை உருவாக்கும்
மனித வாழ்க்கையில் தோல்விகள் என்பவை விழிப்புணர்ச்சி ஊட்ட வந்தவை. நமக்கு எச்சரிக்கை உணர்வை உருவாக்க வந்தவை. அதற்குப் பிறகு ‘விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்’ என்ற நிலை வரும்.
நண்பர்களே! அம்மை ஊசி போடும் போது அம்மை நோயை உண்டாக்கும் கிருமிகளைச் சிறிதளவு உடலில் செலுத்துகிறார்கள். அந்தக் கிருமிகள் உள்ளே போனால் நம் உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் அதனை எதிர்த்துப் போராடுகின்றன. நோய்க் கிருமிகள் குறைவாக இருப்பதால், வெள்ளை அணுக்கள் அதிகமாக இருப்பதால் நோய்க் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. அதன் பிறகு வெள்ளையணுக்கள் விழிப்புற்றுத் தயார் நிலையில் இருக்கின்றன. உண்மையான நோய்க் கிருமிகள் வந்தாலும் போரிட்டு வென்று விடுகின்றன.
அம்மை ஊசி போடும்போது வலிதான். வேதனைதான். சிலசமயம் காய்ச்சலும் வந்துவிடுகிறது. ஆனால், அவற்றால் அதன்பிறகு பெரிய நன்மை ஏற்படுகிறது. அதைப்போலவே வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களும், நஷ்டங் களும், தோல்விகளும் வலியை, வேதனையைக் கொடுத்தாலும் பின்னர் விழிப்புணர்ச்சியை ஊட்டி நமக்கு வெற்றி பெறத் துணைபுரிகிறது.
தோல்விக்கு பின் வரும் வெற்றி தரும் நன்மைகள்

இந்த மனித வாழ்க்கைச் சரித்திரத்தில் வெற்றியால் பெற்ற அறிவைவிட, தோல்வியால் பெற்றஅறிவும், விழிப்புணர்வும் அதிகம். எப்படி ஒரு மருத்துவர் உடலில் உள்ள கட்டியை நீக்கி னால், நமக்கு வலி ஏற்படுகிறது. ஆனால், அதன் பலனாக நன்மை கிடைக்கிறது. அதேபோலக் கருணைமிக்க பிரபஞ்ச சக்தி தோல்வியைக் கொடுத்தால் அதனாலும் ஒரு நம்மை கிடைக்கிறது. நாம் மனப்பக்குவம் பெறுகிறோம்.

வெயிலிலிருந்து நிழலுக்குப் போனால் சுகம். இருளிலிருந்து ஒளிக்குப் போனால் சுகம். இப்படித் தோல்வியடைந்து – சங்கடமடைந்து வெற்றிபெற்றால் அதனுடைய சந்தோஷமே தனிதான்.
மனிதர்கள் ஏன் இமயமலையில் ஏறுகிறார் கள்? அதில் எத்தனை சிக்கல்கள், சோதனைகள், சாதாரண வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் இல்லை. தடைகளும் இல்லை. ஆனால் இமய மலை ஏறும்பொழுது எவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றைக் கடந்து மலை உச்சிக்குச் சென்றுவிட்டால், அந்தச் சாதனையே சுகமானது, மகிழ்ச்சியானது. ஆகவே, நண்பர்களே! தோல்விகளைக் கடந்து அந்தச் சாதனைச் சந்தோஷத்தை அடைவோம். அதுவே நமக்குப் பேரானந்தம்.
தோல்வியானால்… அதனால் என்ன? எது நடந்தாலும் இன்று முதல் ஒரு கேள்வியைக் கேளுங்கள். அந்தக் கேள்வி அதனால் என்ன? (So What?)
அதாவது அந்தத் தோல்வியால் ஏற்படுகின்ற பாதிப்புகளை நினைத்து அதனால் என்ன? எதுவும் வரட்டும். அதன் விளைவுகள் எதுவாக இருந்தாலும் நான் சந்திப்பேன்’ என்று உறுதியாக நில்லுங்கள். ‘அதைத் தாங்கிக்கொள்ள நான் தயார்’ என்றமன உறுதியுடன் இருப்பவர் களும் எந்தச் சங்கடங்களும், தோல்விகளும், பிரச்சனைகளும் எந்தத் தீங்கினையும் செய்ய முடியாது. அதாவது, “மாற்ற முடிந்தவற்றை மாற்றுவோம். மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்வோம்”. “என்னதான் நடக்கும் நடக் கட்டுமே?” என்று எதையும் எதிர்கொள்வோர்க்கு இந்த உலகில் எதுவும் பிரச்சனை இல்லை.
வள்ளுவர்,

‘இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.’

என்று கூறுகிறார்.
அதாவது, ‘இடையூறுகளைக் கண்டு துன்பப்படாத மன உறுதியுடன் அறிவாளிகள், தங்களிடம் வந்த இடையூறுகளே துன்பப்படும் படி செய்துவிடுகிறார்கள்.’

ஜாதகம், சோதிடம், எண் கணிதம்…

அடுத்துத் தோல்வி அடைந்ததற்கு விஞ்ஞானப் பூர்வமான காரணத்தைக் கண்டு பிடிக்காமல் சிலபேர் அனுமானங்கள் கொள்கிறார்கள். இது காரணமாக இருக்குமோ, அது காரணமாக இருக்குமோ? என்றெல்லாம் தவறாக அங்கும், இங்கும் ஓடுகின்றனர். சிலமுறை தோற்றவுடன் மனதில் குழப்பமடைந்து அறிவுப் பூர்வமாகச் சிந்திக்காமல் உணர்வுப் பூர்வமாக மனம் கலங்கிவிடுகிறார்கள். மீண்டும் வெற்றியடைய ஜாதகம், சோதிடம், நியூமராலஜி, அருள் வாக்கு, கைரேகை, அதிர்ஷ்டக்கல், பில்லி சூன்யம், மாந்தரீகம் என்று பல்வேறு அம்சங்களை நாடுகின்றனர். பலர் ஏமாற்றப்படவும் செய்கின்றனர்.

தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பைக் கண்டுபிடிக்க 999 முறை தோல்வியுற்றார். ‘லேட்டக்ஸ்’ என்ற கெமிக்கலைக் கண்டு பிடிக்க 16999 முறைதோல்வியுற்று 17000வது முறைதான் கண்டுபிடித்தார். அவர் ஒவ்வாரு தோல்வியின் போதும் விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ந்து தொடர்ந்ததால் வெற்றியடைய முடிந்தது.

அவர் மட்டும் ஒருசில தோல்விகள் வந்தவுடன் ஜாதகம், சோதிடம் என்று பார்த்திருந்தால், நிலைமை என்ன ஆகியிருக் குமோ தெரியவில்லை.
ஜாதகம், சோதிடம் உண்மையா? பொய்யா? என்று ஆராய்ச்சி செய்ய நாம் வரவில்லை? இவற்றைப் பார்க்கலாமா? வேண்டாமா?
நம் முன்னோர்கள் என்ன சொல்கிறார்கள்? அருணகிரி நாதர் என்ன சொல்கிறார்?

‘நாள் என்ன செய்யும் வினைதான் என்ன செய்யும், எனை நாடிவந்த கோள் என்ன செய்யும், கொடுங்கூற்று என்ன செய்யும்’ என்கிறார்.
அதாவது, கோள்கள், கிரகங்கள் மற்றதடைகள் என்ன செய்திட முடியும். இறைவனுடைய திருவருள் நமக்குத் துணை செய்யும்பொழுது.
திருநாவுக்கரசர் சொல்கிறார்,

‘நாமார்க்கும் குடியல்லோம்
நமனை யஞ்சோம்’
பாரதியார் சொல்கிறார்,
‘சோதிடம் தனை இகழ்’

விவேகானந்தர் இதைப்பற்றி விளக்க ஒரு கதை சொல்லியிருக்கிறார்,
‘ஒரு ஊரில் ஓர் அரசன் இருந்தான். அந்த அரசனுடைய அரசவையில் ஒருமுறை ஒரு சோதிடர் வந்தார். அவர் சொன்னார் ‘அரசே உங்களுக்கு வாழ்க்கை இன்னும் முப்பது நாட்கள்தான் இருக்கிறது ஜாதகப்படி’ என்று சொல்விட்டார். அதற்கு மன்னன் மிகச் சோர்வாகிவிட்டான். இரண்டு நாட்களாக மிகவும் கவலை. அந்த அரசனால் மதிக்கத்தக்க ஒரு மந்திரி இருந்தார். அவர் அரசரிடம் சென்று ‘ஏன் கவலையுடன் இருக்கிறீர்கள்?’ என்றார். அரசர் சொன்னார், சோதிடர் சொன்னதை.
மந்திரி சொன்னார், ‘அரசரே நாளைக்கு அரசவையைக் கூட்டுங்கள். இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடித்து விடலாம்.
அடுத்தநாள் அரசவை கூட்டப்பட்டது. மந்திரி கேட்கிறார், சோதிடரிடம் ‘சோதிடரே மன்னருக்கு இன்னும் ஆயுள் நாள் எவ்வளவு இருக்கிறது’. ‘இன்னும் 28 நாட்கள்தான்; நான் சொல்லி 2 நாட்கள் ஆகிவிட்டன. மந்திரி கேட்கிறார், ‘சோதிடரே உனக்கு ஆயுள் எவ்வளவு’. அவர் சொல்கிறார், ‘இன்னும் 30 வருடம்’.
மந்திரி உடனே தன்னுடைய வாளை உருவிச் சோதிடர் தலையை வெட்டிவிட்டார். வெட்டிவிட்டு அரசரிடம் சொன்னார், ‘அரசரே 30 ஆண்டுகள் இவருடைய ஆயுள் என்று சொன்னார். ஆனால் 30 நிமிடத்தில் இவருடைய ஆயுள் முடிந்துவிட்டது, இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் முழுமையாக வாழுங்கள்! நாம் வெற்றி பெறுவோம்’ என்று கூறுவதாகக் கதை சொல்கிறது…
நண்பர்களே! இதுவரை கூறிய வற்றிலிருந்து நாம் எடுக்கிற முடிவு என்ன வென்றால், அடிப்படையில் பிரபஞ்ச சக்தி, அல்லது கடவுள் மாபெரும் ஆற்றல்மிக்கது. இந்த உலகம், கிரகங்கள் அனைத்தையும் உருவாக்கியது அந்த பிரபஞ்சப் பேராற்றல்.
நாம் அந்த மாபெரும் சக்தியிடம் ஆற்றலிடம் பொறுப்புகளை விட்டுவிட்டு, நம்முடைய கடமைகளை முழு மனத்துடன் ஈடுபாட்டுடன் செய்து கொண்டே போவோம். நல்லதற்கும், கெட்டதற்கும், வெற்றிக்கும், தோல்விக்கும் நாம் பொறுப்புகளை எடுத்துக்கொள்வோம். மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

நிச்சயமாகக் கருணைமிக்க அந்தப் பிரபஞ்ச சக்தி எந்த இடையூறும் நமக்குச் செய்யாது; பதிலாகத் துணைபுரியும். தடைகள் வந்தாலும் முயற்சி செய்கின்றமனிதர்களுக்கு அந்தக் கருணைமிக்க பிரபஞ்ச சக்தி, தடைகளை நீக்கிக் கொடுக்கும். வெற்றி பெறத் துணைபுரியும். எனவே, நாம் தொடர்ந்து செயல்புரிவோம். வெற்றி பெறுவோம்.

புதன், 28 செப்டம்பர், 2011

100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -2

Supermarket - image: Wikipedia

பாதுகாப்பான ஃபர்னிச்சர்
52. ஃபர்னிச்சர் வாங்கச் செல்லும் முன் ஒவ்வொரு அறைக்கும் என்னென்ன தேவை, என்ன அளவில், என்ன தரத்தில், என்ன வடிவத்தில், என்ன நிறத்தில் தேவை என்பதை ஓரளவுக்கு முடிவு செய்து விட்டு செல்லுங்கள். என்ன விலையில் வாங்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானித்து அதற்கேற்ற மரத்தையோ, உலோகத்தையோ, தரத்தையோ முடிவு செய்யலாம். பெரிய கடைகளில் சின்னதாக தோன்றும் சோஃபாக்கள்… நமது வீட்டுக்கு வந்ததும் அறைகளை முழுமையாக ஆக்கிரமித்துவிடும் என்பதை மனதில் கொள்ளவும்.
53. வீட்டை அடைப்பது போல ஃபர்னிச்சர்களை வாங்கி நிறைத்து வைக்காதீர்கள். மிகத் தேவையானதை மட்டுமே வாங்குங்கள். பழையவற்றை விற்பனை செய்வது கடினம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
54. மாதத்தின் துவக்கத்தில் பர்னிச்சர் வாங்குவதைவிட, கடைசியில் வாங்குவது நல்லது. பெரும்பாலான கடைகள் மாதம் எவ்வளவு விற்பனை என கணக்கு காட்ட வேண்டியிருக்கும். எனவே, கடைசி வாரத்தில் கொஞ்சம் மலிவு விலையில் அல்லது நியாயமான விலையில் பொருட்களைத் தள்ளிவிட பார்ப்பார்கள். அது நமக்கு லாபகரமானதாக இருக்கும்.
55. கட்டில் வாங்கப் போகிறீர்கள் எனில், எத்தனை பேருக்கான கட்டில் என்பதைவிட, எந்த அறையில் அதைப் போடப்போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்து வாங்குவது நல்லது.
56. சிறு குழந்தைகள் உள்ள வீட்டில் விலையுயர்ந்த லெதர் சோஃபா போன்றவற்றை வாங்கும்போது கவனம் தேவை. குழந்தைகள்… கத்தி, பென்சில், பேனா என எதை வைத்து வேண்டுமானாலும் கிழிக்கக் கூடும். அதேபோல, குழந்தைகளுக்கான கட்டில் அல்லது மேஜை போன்றவை வாங்கும்போது பாதுகாப்பை அதிகமாக கவனத்தில் கொள்ளுங்கள். ஆணிகள், கழன்று விழும் பகுதிகள் போன்றவை இல்லாத பொருட்களாக வாங்கவேண்டும். கட்டில், குழந்தைகளுக்குரிய உயரத்தில், வடிவத்தில் இருக்கவேண்டும்.
57. உங்கள் பட்ஜெட்டுக்கு இதுதான் கிடைத்தது என்று எதையாவது வாங்குவதைத் தவிருங்கள். ஃபர்னிச்சர் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டியவை என்பதால் பயன் தரக் கூடியதை மட்டுமே வாங்குங்கள்.
58. சோஃபாவில் உட்கார்ந்து பார்த்து உங்களுக்கு சரியாக இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே வாங்குங்கள். அதி அற்புதமான சோஃபாக்கள்கூட சிலருக்கு உட்கார்ந்து எழுந்துகொள்ள சிரமத்தைக் கொடுப்பவையாக இருக்கும்.
ஏ.சி. வாங்குவோர் கவனிக்கவும்!
59. உங்கள் அறையின் அளவுக்கு ஏற்ப, ஏ.சி. மெஷினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெரிய அறை என்றால், அதற்கென குறிப்பிடப்பட்டிருக்கும் அளவுள்ள மெஷினை வாங்காமல், விலை குறைவாக இருக்குமே என்று குறைவான அளவுள்ள மெஷினை வாங்கினால்… அது கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். விரைவிலேயே மெஷின் கெட்டும் போகும். அதேபோல, சிறிய அறைக்கு, குறிப்பிட்டதைவிட கூடுதல் அளவுள்ள மெஷினை வாங்கினால், அறை விரைவில் குளிர்ந்து, அவஸ்தையைக் கொடுப்பதாக அமைந்துவிடும்.
60. அறையில் எத்தனை ஜன்னல்கள் உண்டு, ஃபால்ஸ் சீலிங் உண்டா, அறைக்கு மேல் மொட்டை மாடியா… போன்ற பல விஷயங்களை அலசி உங்கள் ஏ.சி-யின் அளவை முடிவு செய்யுங்கள்.
61 ‘ஃபில்ட்டர்’களை எளிதாகச் சுத்தம் செய்யக் கூடிய ஏ.சி. மெஷின்களை வாங்குங்கள். அதுதான் சொந்தமாக நீங்களே பராமரிக்க வசதியாக இருக்கும்.
62 ‘எனர்ஜி சேவர்’ என்ற பெயரில் வரும் ஏ.சி. மெஷின்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். தொடர்ச்சியாக மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். ‘எனர்ஜி ஸ்டார்’ அதிகம் இருந்தால் அதிக மின்சாரம் மிச்சமாகும்.
63. ஏ.சி. மெஷின் கன்ட்ரோல்கள் எளிதில் இயக்கக் கூடியதாக இருக்கவேண்டும். இருளிலும் எத்தனை டிகிரி குளிர் என்பதை டிஜிட்டலில் காட்டும் மெஷின் என்றால் வசதியாக இருக்கம். அதேபோல ‘டைமர்’ உள்ளிட்ட சமாசாரங்களும் இருக்கிற மெஷினென்றால்… அதிகம் பயனுள்ளதாக இருக்கும். ரிமோட்டும் இருளிலும் ஒளிரக் கூடிய வகையில் இருப்பது நல்லது.
64. விண்டோ ஏ.சி. மெஷின் அதிகம் சத்தமிடும். சத்தம் தவிர்க்க நினைப்பவர்கள் ஸ்பிலிட் ஏ.சி. வாங்குவதே நல்லது.
65. ஏ.சி. மெஷினுக்கு ‘வருட சர்வீஸ்’ வாங்கி வைப்பது நல்லது. தேவையான இடைவெளியில் சர்வீஸ் செய்வது மெஷினின் ஆயுளை நீட்டிக்கும்.
66. நீளமான வராண்டா போன்ற அறை எனில், அதன் குறுகிய சுவரில் ஏ.சி. மெஷின் மாட்டும் போது, ‘டர்போ ஆப்ஷன்’ உள்ள மெஷினாக இருப்பது நல்லது. அதுதான் காற்றை அறை முழுதும் வீரியத்துடன் செலுத்தும்.
67. ஏ.சி. போன்ற பொருட்களை வாங்கும்போது குளிர் காலத்தில் வாங்குங்கள். குழம்பவேண்டாம்… பெரும்பாலான பொருட்கள் ‘சீஸன்’ முடிந்தபின்பு வாங்குவது, குறைந்த விலைக்கு உத்தரவாதமாக இருக்கும்.
வாஷிங்மெஷின் – வெளுத்துக்கட்டுங்க!
68. வாஷிங் மெஷின் வாங்கும் முன், முக்கியமாக வீட்டில் வாட்டர் சப்ளை எப்படி இருக்கிறது. எத்தனை பேருக்கு மெஷின் பயன்படப் போகிறது என்பதை முடிவு செய்வது நல்லது.
69. எப்போதும் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் எனில், ஃபுல்லி ஆட்டோமேடிக் மெஷின் வாங்கலாம். இல்லையேல் செமி ஆட்டோமேடிக் வாங்குவது நல்லது.
70. ‘எனர்ஜி சேவர்’ ஸ்டார் இருக்கும் மெஷின் வாங்கினால் மின்சாரத்தை மிச்சப்படுத்தும்.
71. முன்பக்கம் வழியாகத் துணிகளைப் போடும் ‘ஃபிரெண்ட் லோடிங்’ மெஷின், அதிக விலைகொண்டதாக இருக்கும். ஆனால், தண்ணீரும் மின்சாரமும் குறைவாகவே தேவைப்படும். அதிகம் சத்தமும் இருக்காது. துணிகளைக் கொஞ்சம் மென்மையாகத் துவைக்கும்!
72. எத்தனை ஆண்டுகளுக்கு ஃப்ரீ சர்வீஸ்; கொள்ளளவு என்ன; எத்தனை கிலோ எடைக்கு துணிகள் என்பதையெல்லாம் பாருங்கள். முழுக்க வாஷிங் மெஷினை மட்டும் நம்பியிருந்தால்… அதிக கொள்ளளவு உள்ள மெஷினை வாங்கலாம்.
‘ஆன்லைன்’ ஷாப்பிங்!
விழாக்காலத் ‘தள்ளுமுள்ளு’களிலிருந்து தப்பித்து ஷாப்பிங் செய்ய எளிய வழி ‘ஆன்லைன் ஷாப்பிங்’. இணையத்தில் உங்களுக்குத் தேவையான பொருட்களின் விலைகளை ஒப்பீடு செய்து உங்களுக்குத் தேவையானவற்றை வீட்டி லிருந்தே ஆர்டர் செய்யலாம். நேரமும் மிச்சம்… அலைச்சலும் மிச்சம்.
73. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது தேவையானதை மட்டும்தான் வாங்குவோம். கண்ணில் படுவதெல்லாம் வாங்கிக் குவிக்க மாட்டோம். அதனால் பணமும் மிச்சம். போக்குவரத்து செலவும் மிச்சம்.
74. என்னென்ன வாங்குகிறோம் எனும் பட்டியல் எப்போதும் நமது ‘கிரெடிட் கார்ட்’ ஹிஸ்டரியில் இருக்கும். ‘பணமெல்லாம் எப்படிப் போச்சுனு தெரியலையே!’ என குழம்ப வேண்டியிருக்காது.
75. யாருக்காவது விழாக்கால பரிசு கொடுக்க விரும்பினால், ஆன்லைனில் ஆர்டர் செய்து விலாசத்தைக் கொடுத்தால் போதும். அவர்களுடைய வீட்டுக்கே உங்கள் பெயரில் பொருள் சென்று சேர்ந்து விடும். கொடுப்பவருக்கு ஈஸி, வாங்குபவருக்கு சர்ப்ரைஸ்.
76. இணையத்தில் ஆர்டர் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. முக்கியமானது இணைய தளம் நம்பிக்கையானதா, அது செக்யூர்டு சைட்தானா (பாதுகாப்பான தளம்… அதாவது, ‘SSL – Secure Sockets Layer’ என்றால்… பிரவுசரில் கீழ்ப்பாகத்தில் பூட்டு போன்ற படம் வரும்) என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
77. இணைய தளத்தில் ‘ரிஜிஸ்டர்’ செய்ய வேண்டி இருந்தால், உங்கள் பாஸ்வேர்ட் ரொம்ப ஸ்டாரங்காக இருக்கட்டும். யாரும் ஊகிக்க முடியாத பாஸ்வேர்ட் முக்கியம். மாமன் பேரு, மச்சான் பேரு, போன் நம்பர், பிறந்த நாள் எல்லாம் உதவாது.
விளையாட்டா எடுத்துக்காதீங்க!
78. குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கும்போது அந்தந்த வயதினருக்கு உரியதையே வாங்குங்கள். ஐந்து வயது குழந்தைக்குரிய பொருள், இரண்டு வயது குழந்தைக்கு ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
79. விளையாட்டுப் பொருளில் காந்தப் பொருட்கள் இல்லாமல் இருப்பதைக் கவனித்து வாங்குங்கள். சிறுசிறு காந்தப் பொருட்களை விழுங்கிவிட்டால் பெரும் ஆபத்து. அதோடு, பிளக் பாயின்ட் போன்ற எலெக்ட்ரிக்கல் கனெக்ஷன் உள்ள இடங்களுக்கு அருகில் கொண்டு செல்லும்போது, அதன் மூலம் ஷாக் ஆபத்துக்கும் வாய்ப்பிருக்கிறது.
80. பலூன் வாங்கிக் கொடுக்காமல் இருப்பது நல்லது. சாதுவாக இருக்கும் பலூன், வெடித்துவிட்டால்… மிகவும் ஆபத்தைக் கொண்டு வரும். கண்ணுக்குத் தெரியாத துகள்களாககூட வெடிக்கும் பலூன், வாய் மற்றும் மூக்கு வழியாக உடலுக்குள் ஊடுருவிவிடும். இதனால் பல்வேறு உபாதைகள் ஏற்படலாம்.
81. ஒரு பொம்மையில், சிறுசிறு பாகங்கள் அதிகம் இருக்கிறதென்றால் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும். அந்தப் பொம்மை உடையும்போது, சிறு பாகங்கள் மூலம் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படலாம்.
82. ‘குறைவான விலைக்குக் கிடைக்கிறதே’ என்று சீன தயாரிப்பு பொம்மைகளை வாங்க வேண்டாம். தரமற்ற பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் அந்தப் பொம்மைகளை கையில் வைத்திருப்பதே ஆபத்துதான். சமயங்களில் குழந்தைகள் அவற்றைக் கடிக்கும்போது ஆபத்து அதிகரிக்கும்.
டெலிவிஷன்… பவர்விஷன்!
83. டி.வி. வாங்கப் போகிறீர்களா… என்ன டி.வி. என்பதை முதலில் முடிவு செய்வதைவிட, அதை எந்த அறையில் வைக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். அறையின் அளவுக்குத் தக்க டி.வி-யை வாங்குவதுதான் நல்லது. சின்ன அறையில் பெரிய டி.வி-யும், பெரிய அறையில் சின்ன (போர்ட்டபிள்) டி.வி-யும் வைத்தால், பார்வைக்கு நன்றாக இருக்காது என்பதோடு உங்களின் கண்களுக்கும் பிரச்னையை ஏற்படுத்தும்.
84. டி.வி-யைப் பயன்படுத்தி வீடியோ கேம்ஸ் விளையாடும் வசதியும் சமீபகாலமாக பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. எனவே, குழந்தைகளை மனதில் வைத்து, வீடியோ கேம்ஸ் வசதியுள்ள டி.வி-யாக வாங்கிவிட்டால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
85. டி.வி.டி. பிளேயர், வீடியோ கேம்ஸ், ஹோம் தியேட்டர் என நாளுக்கு நாள் தொழில்நுட்ப முன்னேற்றம் வந்து கொண்டே இருப்பதால், லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் வகையில் இன்புட், அவுட்புட் வசதியுள்ள டி.வி-யாக இருப்பது நல்லது.
86. நம்பிக்கையான பிராண்ட், அதிக வாரண்டி/கியாரண்டி தரும் நிறுவனத்தின் டி.வி-க்கு முன்னுரிமை தரலாம்.
87. டி.வி-யின் ரிமோட், எளிதாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் இருப்பது நல்லது. ஒருவேளை ரிமோட் வேலை செய்யாமல் போனால், டி.வி. பெட்டியில் உள்ள சுவிட்சுகளைப் பயன்படுத்த நேரிடலாம். எனவே, தேவையான சுவிட்சுகள் டி.வி-யிலும் வைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம்.
88. நீங்கள் எந்த பிராண்ட் டி.வி-யை வாங்கினாலும், அதற்குரிய சர்வீஸ் சென்டர்கள் உள்ளூரிலேயே இருக்கின்றனவா என்பதைத் தெரிந்து கொண்டு வாங்குங்கள்.
உஷார்… உஷார்…
89. ஷாப்பிங் முடிந்தவுடன் உங்கள் ‘பில்’லை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தவறு இருந்தால் உடனடியாகச் சரி செய்வதுதான் நல்லது.
90. ஒரு பொருளை வாங்கினால், அது சம்பந்தமான கடிதங்கள், ரசீதுகள், கியாரண்டி/வாரண்டி கார்டுகள் எல்லாவற்றையும் அந்தப் பொருள் உங்களிடம் இருக்கும் வரை சேமித்து வையுங்கள். பொருட்கள் பழுதடைந்திருந்தால் அதுதொடர்பான நடவடிக்கைகளுக்கு கட்டாயம் பில்கள் தேவைப்படும்.
91. கியாரண்டி மற்றும் வாரண்டி என்றால் என்ன என்பதே பலருக்கும் குழப்பமான விஷயம். கியாரண்டி என்றால், ‘குறைபாடுள்ள பொருளை மாற்றித் தருவதற்கு நாங்கள் உத்தரவாதம்’ என்று சம்பந்தபட்ட நிறுவனம் சொல்வதாக அர்த்தம். இதுவே வாரண்டி என்றால், ‘குறைபாடினை சரிசெய்து கொடுப்போம்’ என்ற உத்தரவாதத்தைத் தருவதாக அர்த்தம்.
92. பொருட்களை வாங்கும்போது ‘கியாரண்டி கார்ட்’ பார்க்க வேண்டியது அவசியம். வாங்கிய பொருளை எப்படி இயக்குவது, எப்படிப் பராமரிப்பது போன்ற விஷயங்களைக் கேட்டறியுங்கள்.
93. வாங்கிய பொருளில் ஏதேனும் குறை இருந்தால் நீங்களே மெக்கானிக்காக மாறி களத்தில் குதிக்காதீர்கள். கடைக்காரருக்கோ, சர்வீஸ் சென்டருக்கோ தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் பொருளைப் பிரித்தால் அதுதான் சாக்கு என ”ஸாரி… ஓப்பன் பண்ணிட்டீங்க. அதனால கியாரண்டி கிடையாதுங்க” என்று மிளகாய் அரைத்துவிடுவார்கள்.
94. ‘இப்போது புதிய கைப்பிடியுடன்…’, ‘இப்போது புதிய ஸ்பீக்கருடன்…’ இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டு வரும் பழைய பொருட்களின் புதிய அவதாரங்களை அதிகமாக ரசித்தால்… பர்ஸூக்குத்தான் ஆபத்து.
95. ‘பதினைந்து பொருட்கள் வெறும் 2,000 ரூபாய்க்கு’ என்று கூவும் விளம்பரங்களை கண்டு மயங்காதீர்கள். அத்தனை பொருட்களை அள்ளிக் கொண்டு வந்து, விளம்பரமும் செய்து கொடுக்கிறார் என்றால்… நிச்சயமாக அதைவிட மிகவும் குறைவான விலையில்தான் அவை வாங்கப்பட்டிருக்கும் என்பதுதானே உண்மை!
96. ஒரு சேலை வாங்கினால் மூக்குத்தி இலவசம், பிளாஸ்டிக் வாளி இலவசம் என்று விற்பதைக் கொஞ்சம் கழுகுக் கண்களுடன் கவனியுங்கள். பிளாஸ்டிக் வாளியின் அழகைப் பார்த்துவிட்டு, மோசமான சேலையை வாங்கிவிடப் போகிறீர்கள்!
97. நுகர்வுப் பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ., விவசாயப் பொருட்களுக்கு அக்மார்க், தங்க நகைகளுக்கு ஹால்மார்க், பட்டுச்சேலைகளுக்கு சில்க் மார்க் என பார்த்து வாங்குங்கள். விலை கூடினாலும் தரம் நன்றாக இருக்கும். சமயங்களில் இந்த முத்திரைகளே போலியான பொருட்களிலும் இடம் பெற்றிருக்கும் உஷார்.
98. தேவைகளைக் குறைப்பது, தேவையற்றவற்றை நிராகரிப்பது, பொருட்களை திரும்பத் திரும்ப பயன்படுத்துவது, ரீசைக்கிள் பண்ணுவது போன்ற விஷயங்களைப் புரிந்து கொண்டால்… நீங்கள் தலைசிறந்த கன்ஸ்யூமர்!
99. ஃபேன்ஸியாக பாட்டில்களிலோ, அழகிய கவர்களிலோ விலை கூடுதலாக வைத்து விற்கப்படும் பொருட்கள்தான் தரமானவை என்று நினைக்காதீர்கள். உண்மையில் ஆரோக்கியமான பொருட்கள், பகட்டான பேக்கிங் இல்லாமல் குறைந்த விலையிலேயே கிடைத்துவிடும்.
100. வீட்டிலேயே திருப்தியாக சாப்பிட்ட பின்பு ஷாப்பிங் கிளம்புங்கள். இல்லையேல் கண்ட கண்ட ஸ்நாக்ஸ், குளிர்பானம்… அது, இது என தேவையற்ற செலவு உங்கள் தோளில் வந்தமரும்.

100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -1சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங்மால், மல்டிபிளெக்ஸ் காம்ப்ளெக்ஸ் என்று திரும்பிய பக்கமெல்லாம் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அதையெல்லாம் பார்த்ததுமே… ‘ஹையா…’ என்று குடும்பம் குடும்பமாக புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால், இப்போதெல்லாம் தினம் தினம் தீபாவளி என்றாகிவிட்டது.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் இதுதான் நிலைமை. என்றாலும், ”தீபாவளி சமயத்தில் நடக்கும் பர்ச்சேஸூக்கு தனி மரியாதை இருக்கத்தான் செய்கிறது. துணிகள் மட்டுமில்லை… செல்போன், கம்ப்யூட்டர், எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என்று பலவற்றையும் தீபாவளி சமயத்தில் வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் கூட்டம் அதிகம் இருக்கிறது. இதற்குக் காரணம்… போனஸ் உள்ளிட்ட சமாசாரங்கள்தான்” என்கிறார்கள் சென்னை, தி.நகர் பகுதியில் பிரபலமான ஷாப்பிங் நிறுவனங்களை நடத்தி வருபவர்கள்.
தீபாவளியோ… நியூ இயரோ… ஷாப்பிங் என்பது சந்தோஷமான சமாசாரம்தான். ஆனால், நம்முடைய தலையில் எப்படி எப்படியெல்லாம் மிளகாய் அரைப்பது என்பதில்தான் பலரும் குறியாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம் ஏமாந்துவிடாமல் ஷாப்பிங் செய்வதுதான் புத்திசாலித்தனம். இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவுவதற்காக இங்கே விரிகிறது ’100/100 சூப்பர் டிப்ஸ்’.

செல்போன் வாங்கப் போறீங்களா?
1. மொபைலை மாற்றும்போது ‘எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்’ இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது நல்லது. நல்ல கடைகளாகப் பார்த்து மொபைலை மாற்றுங்கள். உங்களின் பழைய மொபைலுக்கு அவர்கள் சொல்லும் விலைக்கு உடனே தலையாட்டிவிடாதீர்கள். கூச்சப்படாமல் பேரம் பேசினால், உங்களுக்குக் கூடுதல் லாபம் கிடைப்பது நிச்சயம்.
2. பேட்டரியின் லைஃப் எந்த அளவுக்கு இருக்கும் என்பதைக் கவனமாகப் பாருங்கள். அடிக்கடி சார்ஜ் செய்வதுபோல் இருந்தால், நம்முடைய நேரத்தை சாப்பிடுவதோடு பணியையும் பாதிக்கும். அடிக்கடி சார்ஜ் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால்… உடனே பேட்டரியை மாற்ற வேண்டியதுதான் என்று முடிவு செய்துவிடாதீர்கள். அது மொபைல் போனின் தொழில்நுட்பக் கோளாறாகவும் இருக்கலாம். முறைப்படி செக் செய்து கொள்ளுங்கள்.
3. மொபைல் வாங்கியதுமே…. சிம் கார்டு போட்டுப் பேசிப் பாருங்கள். தெளிவாக, சத்தமாகக் குரல் கேட்பது ரொம்ப முக்கியம். என்னதான் எக்ஸ்ட்ரா சமாசாரங்கள் இருந்தாலும்… பேசுவதற்கும் கேட்பதற்கும்தான் மொபைல் போன் என்பதை மறந்து விடாதீர்கள்.
4. மொபைல் போன் வாங்க நினைப்பவர்கள், நேரில் போய் வாங்குவதே மிக மிக நல்லது. பட்டன்கள் எல்லாம் நன்றாக இருக்கிறதா, சரியாக இருக்கிறதா என்பதைக் கவனிப்பது முக்கியம். ‘ஆகா… வீடியோ இருக்கிறது, ஆடியோ இருக்கிறது, போட்டோ எடுக்கலாம்’ என இத்யாதி இத்யாதிகளில் கவனம் செலுத்தி, முக்கியமான சமாசாரங்களை கோட்டை விட்டுவிடாதீர்கள்.
5. மொபைல் போன் வாங்கும் முன் அதைப் பற்றிய தகவல்களை நண்பர்களிடமோ, இணைய தளத்திலோ சில நாட்கள் அலசுங்கள். பிறகு, ‘இதுதான் எனக்குத் தேவையான போன்’ என முடிவெடுங்கள். தீர்மானம் செய்துவிட்ட பிறகு, கடைக்குச் செல்லுங்கள்.
6. காஸ்ட்லி போன் எனில் மொபைல் போனுக்கான இன்ஷுரன்ஸ் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். மொபைல் போன் கோளாறு, தீ, திருட்டு என்று எந்த விஷயங்களுக்கெல்லாம் இன்ஷுரன்ஸ் கவரேஜ் இருக்கிறது என்பதை விசாரித்த பிறகு பாலிஸி எடுப்பது நல்லது!
7. நீங்கள் மொபைல் போனை அடிக்கடி பயன்படுத்துபவரா..? அப்படியென்றால், ‘அம்பாஸடர் மாதிரி’ என்பார்களே… அதுமாதிரி தரமான, எல்லா சூழலையும் தாக்குப் பிடிக்கற மாடல் போன்களைத் தேர்ந்தெடுங்கள். அதாவது ‘பேஸிக் மாடல்’ என்றுகூட சொல்லலாம். ‘டச் ஸ்க்ரீன்’ போன்ற ‘ஃபேன்ஸி’ மற்றும் அதிக சென்ஸிடிவ்வான தொழில்நுட்பங்கள் இல்லாத மாடலாக இருப்பது பயன் தரும். அத்தகைய போன்கள் நீண்ட நாள் உழைக்கவும் செய்யும்.
8. ‘இரண்டு சிம்’, ‘குறைந்த விலை’ என்று சீனா போன்ற வெளிநாட்டு போன்களை வாங்கி விடாதீர்கள். அந்த போன்களில் உள்ள ஆன்டெனா மூலம் ரேடியேஷன்கள் அதிகமாக ரிஸீவாகும். இது, உடலுக்கு ஊறு விளைவிக்கும்.
சிம் கார்டு ஜாக்கிரதை!
9. செல்போன் வைத்திருக்கிறீர்களா… சிம் கார்டு வாங்கும்போது, எந்த நிறுவனத்தின் (சர்வீஸ் புரவைடர்) சேவை, உங்களுக்குத் தேவை என்பதை தீர ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். வழக்கமாக எந்தெந்த ஊர்களுக்குச் செல்வீர்களோ… அங்கெல்லாம் கவரேஜ் இருக்கும் சர்வீஸ் புரவைடராக இருப்பதுதான் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.
10. மொபைல் சர்வீஸ் வாங்கும்போது எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட், கால் சார்ஜ், மாதக் கட்டணம் என அனைத்தையும் கவனியுங்கள். பலர் நாசூக்காக மறைமுகக் கட்டணங்களை வைத்திருப்பார்கள்.
11. கால் சார்ஜ் விஷயத்தில் அதிக கவனம் தேவை. ‘நாங்கள், நிமிடத்தில் வசூலிக்கிறோம்…’, ‘நாங்கள் விநாடிகளில்தான் வசூலிக்கிறோம்…’ என்றெல்லாம் வகை வகையாக வலை விரிப்பார்கள். வார்த்தைகளில் மயங்கினால் பாக்கெட் பணால்! சர்வீஸ் புரவைடர்களிடம் பேசி, அவர்களின் கால் கட்டணங்களைத் (டேரீஃப்) தெரிந்து கொண்டு, அலசி ஆராய்ந்து எது நமக்கு லாபகரமானது என்பதை கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.
12. போனில் இன்டர்நெட் இருக்கிறது, வீடியோ சேட்டிங் இருக்கிறது என்பதற்காக சதா அவற்றையே சுழற்றிக் கொண்டிருந்தால்… சத்தம் இல்லாமல் பைசா கரைய ஆரம்பித்துவிடும். ‘அதெல்லாம் நமக்குத் தேவையா’ என்று தெரிந்து, அந்த வசதிகளைப் பெற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
13. ஹலோ ட்யூன்/காலர் ட்யூன் எனப்படும் வசதியை ஏற்படுத்தும் முன்பாக அதனால் என்ன பயன் என்பதை முதலில் உணரவேண்டியது அவசியம். அந்த ட்யூன் உங்களுக்குப் பிடித்த பாடலாக இருக்கலாம். ஆனால், எதிர் முனையில் பேசுபவர்தான் அதைக் கேட்கப்போகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். அந்தப் பாடல் சிலருக்கு எரிச்சல் ஊட்டுவதாக அமைந்துவிட்டால்… உங்கள் மீதான அபிப்பிராயத்தில் பேதங்கள் வரலாம்.
ஆடைகளில் அலட்சியம் வேண்டாம்!
14. விழாக் காலம் என்றால்… கடைசிக் கட்டத்தில் ஆடைகள் வாங்கச் செல்லாதீர்கள். கூட்டம் அதிகமாக மொய்க்க ஆரம்பித்து, நின்று நிதானித்து தேர்வு செய்ய வசதியில்லாமல் செய்துவிடும். அதோடு, நல்ல துணிகளெல்லாம் விற்றும் தீர்ந்திருக்கும். அதேபோல மிகவும் ஆரம்பக் கட்டத்திலும் செல்லக் கூடாது. பழைய ஸ்டாக்குகளைத் தலையில் கட்டிவிடுவார்கள்.
15. ‘என்ன வாங்க வேண்டும்?’ என்று பட்டியல் போட்டுக் கொண்டு சென்றால் நல்லது. ரெடிமேடு ஆடைகளென்றால் உடுத்திப் பாருங்கள்; எல்லா பட்டன்களையும் போட்டுப் பாருங்கள்; ஜிப்கள் சரியாக இருக்கிறதா என்று இழுத்துப் பாருங்கள்; முக்கியமாக ஆடையை அணிந்து கொண்டு நடக்க முடிகிறதா, அமர முடிகிறதா, எழ முடிகிறதா என்பதையும் கவனியுங்கள். உதாரணத்துக்கு, இடுப்பு மிகவும் ¬ட்டான ஆடை என்றால்… அது அந்தப் பாகத்தில் புதுவித பிரச்னையை உண்டாக்கும்.
16. எளிதில் கழற்ற வசதியான ஆடைகளை அணிந்து கொண்டு ஷாப்பிங் செல்லுங்கள். உடைகளைப் போட்டுப் பார்த்து வாங்க இது வசதியாக இருக்கும். இறுக்கமான ஆடைகள், ஷு போன்றவற்றைத் தவிருங்கள். போட்டுப் பார்க்கத் தடை செய்யும் கடைகளைத் தவிர்ப்பதே நல்லது.
17. ஆடைகளை நீங்களே தேடித் தேடி வாங்குவதை விட, உங்களுக்குத் தேவையான ஆடையை சேல்ஸ்மேனிடம் கேட்டு வாங்குவது ரொம்பவே நேரத்தை மிச்சப்படுத்தும். உங்கள் கவனத்தையும் அதிகமாக சிதைக்காது.
18. தனியே போய் ஷாப்பிங் செய்வதே நல்லது. நான்கைந்து தோழிகளுடன் போனால்… உங்களால் எதையும் நிம்மதியாக வாங்க முடியாது. யாராவதுகூட வந்தால்தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தால்… கணவருடன் செல்வதுதான் பயனுள்ளதாக இருக்கும் – குழந்தையை வைத்துக் கொள்வதில் ஆரம்பித்து பல விஷயங்களுக்கும்!
19. எவ்வளவு பட்ஜெட் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். அந்த பட்ஜெட்டுக்குரிய பொருள் கிடைக்கும் கடைகளுக்கு மட்டும் செல்லுங்கள். கடைகளிலும் அதற்குரிய இடங்களைத் துழாவுங்கள்.
20 ஆடைகள் வாங்கும்போது… தண்ணீரில் அடிக்கடி நனைக்கக் கூடியதா, டிரை கிளீனிங் தேவைப்படுமா என்பதையெல்லாம் நன்றாகக் கேட்டுத் தெரிந்து வாங்குங்கள்.
21. நீங்கள் வாங்கிவந்த துணி சாயம் போகிறதா..? ‘சரி நம்ம தலையெழுத்து’ என்று விட்டுவிடாதீர்கள். வாங்கிய கடைக்கே திரும்ப எடுத்துச் சென்று புதிய துணியைக் கேட்டு வாங்குங்கள். அவர்களும் சத்தமில்லாமல் மாற்றித் தருவார்கள். அடுத்த தடவை சாயம் போனாலும், அதேபோல மாற்றிக் கேட்கத் தயங்காதீர்கள்.
உள்ளபடியே தள்ளுபடியா?
22. கடையில் நுழைந்தவுடன் முதலில் உங்கள் கண்களில் தெரிவது ‘தள்ளுபடி’ வாசகங்கள். அவசரப்பட்டு உங்கள் பணத்தை அங்கே கொட்டாதீர்கள். எதை முக்கியமாக வாங்க வேண்டுமோ… அதை முதலில் வாங்குங்கள். மீதமிருக்கும் பணத்துக்கு ஏற்ப ‘தள்ளுபடி’ பக்கம் கவனத்தைத் திருப்புங்கள்.
23. ‘ஒரு துணி வாங்கும் பணத்தில், இரண்டு துணிகள்… மூன்று துணிகள்… நான்கு துணிகள்’ என்று ஆசை காட்டினால் மயங்கி விழாதீர்கள். தேவைக்கேற்றதை மட்டும் வாங்குங்கள். தரமான பொருள், நீண்ட நாட்கள் மெருகுடன் இருக்கும்.
24. ‘தள்ளுபடியில் வாங்கிய ஆடைகளை மாற்றித் தர இயலாது’ என்றொரு வாசகத்தைக் கவனித்திருப்பீர்கள். அது, தரமற்ற பொருட்களை உங்களிடம் தள்ளி விடும் தந்திரமாகவும் இருக்கலாம். துணிகள் லேசாகக் கிழிந்திருந்தால்கூட, அதை மாற்றமுடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அப்படி ஒரு பொருளை வாங்க வேண்டுமா… என்றும் முடிவு செய்யுங்கள்.
25. ‘அசத்தலான 50% தள்ளுபடி’ என்றவுடன் உற்சாகமாகி, ‘பாவம், கடைக்காரர் நஷ்டத்தில் விற்கிறார்’ என நினைத்து எல்லாவற்றையும் அள்ளி விடாதீர்கள். விற்பனை விலை மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். அடக்க விலை, சேர்க்கப்பட்ட விலை போன்ற இத்யாதி விலைகளெல்லாம் கடைக்காரருக்கே வெளிச்சம்.
புன்னகைக்கும் பொன் நகை!
இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனம் (Bureau of Indian Standards), 22 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட நகைகளுக்கு வழங்கும் முத்திரைதான் ’916 ஹால்மார்க்’. ஒரு கிராம் நகையில் 91.6% தூய தங்கம் இருக்கிறது என்பதைத்தான் குறிக்கிறது அந்த 916. தூய தங்கத்தின் அளவைப் பொறுத்து இந்த எண்கள் மாறுபடும் (9 கேரட்- 375; 14 கேரட்- 585; 17 கேரட்- 708; 18 கேரட்- 750; 21 கேரட்- 875; கேரட்- 23 கேரட்- 958). இதையெல்லாம் கவனித்து நகைகளை வாங்குவது நல்லது.
26. நீங்கள் வாங்கும் நகை, ‘ஹால்மார்க்’ முத்திரையுடன் இல்லையென்றால்… ‘ஹால்மார்க்’ முத்திரையைப் போட்டு தரச்சொல்லி வாங்கலாம். ஆனால், நகைகளை அதற்குரிய விற்பனை ரசீதுகளுடன் வாங்குவது முக்கியம்.
27. வாங்கும் நகையின் தரம் எதுவென்று முத்திரைக்கு உள்ளே இருக்கும் தர எண்ணை, லென்ஸ் மூலம் தெளிவாகப் பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.
28. பெண் குழந்தை என்றால், எதிர்காலத்துக்குத் தேவை என்று நகைகளாக வாங்கிச் சேமிப்பீர்கள். அதைவிட, தங்க நாணயங்களாகச் சேமித்தால்… எதிர்காலத்தில், அன்றைய நாகரிகத்துக்கு ஏற்றாற்போல புதிய நகைகளைச் செய்து கொள்ளலாம்.
29. தங்க நகை விலை உயர்ந்து கொண்டே போகும் இந்தக் கால கட்டத்தில், உங்களின் முதலீடு, தங்க நகைகளாக இருக்கட்டும். அதுவும் ’916 ஹால்மார்க்’ நகைகளாக இருப்பது மிகவும் புத்திசாலித்தனமானது.
30. தங்க நகை வாங்கும்போது, தரமானதா என்பதைத்தான் முக்கியமாக கவனிக்க வேண்டும். ‘பவுனுக்கு இத்தனை ரூபாய் தள்ளுபடி’ என்பதையெல்லாம் பார்த்து, தரமற்ற தங்க நகைகளை வாங்கிவிடாதீர்கள். விற்கும்போது உங்களுக்கு நஷ்டம் ஏற்படும்.
31. கல் வைத்த நகைகள் வாங்கும்போது, அந்தக் கற்களின் தரம் பற்றி நன்றாகக் கேட்டறியுங்கள். அவை தங்கத்தின் எடையுடன் சேருமா, சேராதா என்பதையும் கவனிப்பது முக்கியம். விலை குறைந்த கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் நகையை, தங்கத்துக்குரிய விலை கொடுத்து வாங்குவது புத்திசாலித்தனமல்ல.
சூப்பர் மார்க்கெட் போவோமா?!
32. தேவையில்லாமல் பணம் செலவாகும் ஒரு இடம்… சூப்பர் மார்க்கெட். என்ன சமைக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்துவிட்டுப் பொருட்களை வாங்க வேண்டும். இல்லையென்றால், தேவையில்லாமல் வாங்கிக் குவிப்பீர்கள். அவையெல்லாம் வீட்டு அலமாரியிலும் ஃப்ரிட்ஜிலும் தூங்கிக் கொண்டிருக்கும். அந்தப் பொருள் கெட்டுப்போக ஆரம்பித்தால், உங்களின் நோக்கமே வீணாகிவிடும்.
33. ‘பிராண்ட்’ பார்த்து மயங்கிவிடாதீர்கள். அதே தரத்தில், உள்நாட்டுப் பொருட்கள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கக் கூடும். அதைக் கவனித்து வாங்குங்கள்.
34. அடிக்கடி பயன்படுத்த வேண்டிய பொருட்களை கவனித்து வாங்குங்கள். விற்பவர்களின் வசீகர வார்த்தையில் மயங்கி வாங்கிக் குவிக்கும் வெஜிடபிள் கட்டர், சப்பாத்தி மேக்கர் எல்லாம் பெரும்பாலும் பயன்படுவதில்லை.
35. பதப்படுத்தப்பட்ட உணவுகள் பெரும்பாலும் உடலுக்கு நல்லவையல்ல. முடிந்தவரை அவற்றைத் தவிர்க்கப் பாருங்கள். அல்லது குறைவாகவே வாங்குங்கள்.
36. ஒரு கடைக்குச் செல்லும்போது, அந்தக் கடையின் சொந்தத் தயாரிப்புகள் ஏதேனும் இருந்தால், அவற்றை வாங்கி பயன்படுத்திப் பார்க்கலாம். நன்றாக இருந்தால், தொடரலாம். அந்தப் பொருட்கள் பெரும்பாலும் விலை குறைவாக இருக்கும் என்பதைக் கவனிக்கத் தவறிவிடாதீர்கள்.
கம்ப்யூட்டர் வாங்க கவனம் தேவை!
37. கம்ப்யூட்டர் கொஞ்சம் கவனமாக வாங்க வேண்டிய விஷயம். ஒரே மாதிரி செயல் திறன் கொண்ட பல கம்ப்யூட்டர்களை பார்த்தபின் முடிவெடுக்க வேண்டும். எல்லா அப்டேஷன் சமாசாரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மலிவு விலையில் ‘ரேம்’ போன்றவை கிடைத்தால், அப்கிரேட் செய்து கொள்ளலாம்.
38. நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய முதல் அயிட்டம், ரேம். அதிக திறன் கொண்ட ரேம், உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டை அதிகரிக்கும். கூடவே, ஆபரேடிங் சிஸ்டம் உங்கள் கம்ப்யூட்டரில் சக்திக்குத் தக்கதாக இருக்க வேண்டியது அவசியம்.
39. உங்கள் தேவையை அந்த கம்ப்யூட்டர் பூர்த்தி செய்யாது எனத் தெரிந்தால்… அதை வாங்காதீர்கள். ஒரு கம்ப்யூட்டரை வாங்குவது என்று முடிவெடுத்துவிட்டால்… கொஞ்ச நேரம் அதைத் தனியாகச் சோதித்துப் பாருங்கள். சேல்ஸ்மேன் அருகில் இருக்கும்போது சிலவற்றை சரியாகச் சோதிக்க முடியாமல் போகலாம்.
40. கம்ப்யூட்டருடன் என்னென்ன இணை பொருட்கள் கிடைக்கின்றன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் அனைத்தும் இல்லாவிட்டால், தைரியமாகக் கேட்டு வாங்குங்கள்.
41. கம்ப்யூட்டரின் வாரண்டி, கியாரண்டி, ரிட்டர்ன் போன்றவவை ரொம்ப முக்கியம். குறிப்பாக முக்கியமான பாகங்கள் பழுதானால் மாற்றித் தரும் கியாரண்டி அவசியம். அந்தக் கம்ப்யூட்டருக்கான சர்வீஸ் சென்டர்கள் உங்களுக்கு அருகில் இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். எந்தெந்த நிறுவனங்கள், சிறப்பான சேவை தருகின்றன என்பதையும் விசாரித்து அறியுங்கள்.
42. இரண்டு பிராண்ட் கம்ப்யூட்டர்கள் ஒரேபோல இருந்தும், பயங்கர விலை வித்தியாசம் இருந்தால் நன்றாகக் கவனித்து வாங்கவும். புராஸசர், மெமரி, பிராண்ட் போன்றவை விலை வித்தியாசத்துக்குக் காரணமாக இருக்கலாம். அவையெல்லாம் திருப்தியாக இருக்கும்பட்சத்தில், விலை அதிகம் என்றாலும்கூட வாங்கலாம்.
43. பத்திரிகை விமர்சனங்கள், தயாரிப்பாளர் விமர்சனங்கள், பயன்பாட்டாளர் விமர்சனங்கள் மூன்றும் வேறு வேறு விதங்களில் கம்ப்யூட்டரை அலசும். எனவே, ஒவ்வொரு பிராண்ட்டுக்கும் இந்த மூன்று விதமான விமர்சனங்களையும் படித்துவிட்டு முடிவெடுங்கள்.
டிஜிட்டல் கேமரா டிஷ்யூம்!
44. கேமரா வாங்குவது ஒரு கலை. கேமரா வாங்கும் முன் பல விஷயங்களில் நீங்கள் தெளிவு கொள்ளவேண்டும். முக்கியமாக புகைப்படம் எடுப்பது உங்களுக்கு கலையா, வேலையா, பொழுதுபோக்கா, வீட்டு உபயோகத்துக்கா என்பதில் தெளிவு வேண்டும். சாதாரணத் தேவைக்கு எனில் ‘ஆட்டோமேடிக்’ கேமராவே போதும்.
45. டிஜிட்டல் கேமரா என்றதும், ‘எத்தனை மெகா பிக்ஸல்?’ என்பதுதான் எல்லோரும் முதலில் கேட்கும் கேள்வி. ஆனால், அது அவ்வளவு முக்கியமில்லை. நீங்கள் படங்களை ‘சாதாரண’ அளவில் பிரின்ட் போடப் போகிறீர்களெனில் 5 மெகா பிக்ஸல் கேமராக்களே கனகச்சிதம். மிகப் பெரிய ‘புளோ-அப் சைஸ்’ படங்களாக பிரின்ட் செய்ய வேண்டுமெனில் அதிக மெகா பிக்ஸல் கேமராக்கள் வாங்கலாம்.
46. பேட்டரி விஷயத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். அதிகம் ‘இண்டோர்’ போட்டோக்கள் எடுக்கும் கேமராவில் ஃப்ளாஷ் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு அதிக பேட்டரிகள் இருப்பது நல்லது. சார்ஜ் செய்து பயன்படுத்தக் கூடிய பேட்டரிகள் வாங்குவது அவசியம்.
47. கேமராவுடன் எல்லா உபபொருட்களும் வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு கேமரா வாங்க முடிவு செய்தபின் அதன் விலை எங்கே குறைவாக இருக்கிறது, எங்கே இலவசமாக கவர், பேட்டரி, மெமரிகார்டு போன்றவை தருகிறார்கள் என்று பார்த்து வாங்குங்கள்.
48. சாதாரண தேவைகளுக்கு ‘எஸ்.எல்.ஆர்.’ ரக கேமரா வகைகளைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் பயன்படுத்தக் கூடிய ‘பாயின்ட் அண்ட் ஷுட்’ கேமராக்களே அன்றாடத் தேவைகளுக்கு இலகுவானது.
49. கேமராவின் ‘ஸும்’ (zoom) வசதியைப் பார்க்கும்போது ‘ஆப்டிகல் ஸும்’ அதிகம் உள்ளதைப் பார்த்து வாங்க வேண்டும். டிஜிட்டல் ஸும் அதிகம் பயன் தராது.
50. அளவில் சிறியதாக… ஸ்டைலிஷாக இருக்கவேண்டும் என்று கணக்குப் போட்டு கேமரா வாங்காதீர்கள். கையில் பிடித்து எடுப்பதற்கு வசதியாக இருக்கவேண்டும் என்பதை முக்கியமாக வைத்து வாங்குங்கள். அத்தகைய கேமராக்கள்தான் குடும்பத்திலுள்ள அனைவரும் பயன்படுத்த வசதியாக இருக்கும்.
51. ‘இமேஜ் ஸ்டெபிலைஸேஷன்’ எனப்படும் வசதியுள்ள கேமராவா என்று பார்த்து வாங்குங்கள். அது இருந்தால்… போட்டோ எடுக்கும்போது கேமரா கொஞ்சம் அசைந்துவிட்டாலும், படம் தெளிவாக வரும்.
பாதுகாப்பான ஃபர்னிச்சர்!
52. ஃபர்னிச்சர் வாங்கச் செல்லும் முன் ஒவ்வொரு அறைக்கும் என்னென்ன தேவை, என்ன அளவில், என்ன தரத்தில், என்ன வடிவத்தில், என்ன நிறத்தில் தேவை என்பதை ஓரளவுக்கு முடிவு செய்து விட்டு செல்லுங்கள். என்ன விலையில் வாங்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானித்து அதற்கேற்ற மரத்தையோ, உலோகத்தையோ, தரத்தையோ முடிவு செய்யலாம். பெரிய கடைகளில் சின்னதாக தோன்றும் சோஃபாக்கள்… நமது வீட்டுக்கு வந்ததும் அறைகளை முழுமையாக ஆக்கிரமித்துவிடும் என்பதை மனதில் கொள்ளவும்.
53. வீட்டை அடைப்பது போல ஃபர்னிச்சர்களை வாங்கி நிறைத்து வைக்காதீர்கள். மிகத் தேவையானதை மட்டுமே வாங்குங்கள். பழையவற்றை விற்பனை செய்வது கடினம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
54. மாதத்தின் துவக்கத்தில் பர்னிச்சர் வாங்குவதைவிட, கடைசியில் வாங்குவது நல்லது. பெரும்பாலான கடைகள் மாதம் எவ்வளவு விற்பனை என கணக்கு காட்ட வேண்டியிருக்கும். எனவே, கடைசி வாரத்தில் கொஞ்சம் மலிவு விலையில் அல்லது நியாயமான விலையில் பொருட்களைத் தள்ளிவிட பார்ப்பார்கள். அது நமக்கு லாபகரமானதாக இருக்கும்.
55. கட்டில் வாங்கப் போகிறீர்கள் எனில், எத்தனை பேருக்கான கட்டில் என்பதைவிட, எந்த அறையில் அதைப் போடப்போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்து வாங்குவது நல்லது.
56. சிறு குழந்தைகள் உள்ள வீட்டில் விலையுயர்ந்த லெதர் சோஃபா போன்றவற்றை வாங்கும்போது கவனம் தேவை. குழந்தைகள்… கத்தி, பென்சில், பேனா என எதை வைத்து வேண்டுமானாலும் கிழிக்கக் கூடும். அதேபோல, குழந்தைகளுக்கான கட்டில் அல்லது மேஜை போன்றவை வாங்கும்போது பாதுகாப்பை அதிகமாக கவனத்தில் கொள்ளுங்கள். ஆணிகள், கழன்று விழும் பகுதிகள் போன்றவை இல்லாத பொருட்களாக வாங்கவேண்டும். கட்டில், குழந்தைகளுக்குரிய உயரத்தில், வடிவத்தில் இருக்கவேண்டும்.
57. உங்கள் பட்ஜெட்டுக்கு இதுதான் கிடைத்தது என்று எதையாவது வாங்குவதைத் தவிருங்கள். ஃபர்னிச்சர் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டியவை என்பதால் பயன் தரக் கூடியதை மட்டுமே வாங்குங்கள்.
58. சோஃபாவில் உட்கார்ந்து பார்த்து உங்களுக்கு சரியாக இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே வாங்குங்கள். அதி அற்புதமான சோஃபாக்கள்கூட சிலருக்கு உட்கார்ந்து எழுந்துகொள்ள சிரமத்தைக் கொடுப்பவையாக இருக்கும்.