புதன், 26 டிசம்பர், 2012

தூக்க மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடாதீங்க
இப்ப வேலை பார்க்கிற எல்லாருக்கும் இருக்குற பிரச்சனை-லஒன்னு தான் தூக்கமின்மை. சில ருக்கு வேலைப் பளு, ஆரோக்கிய மில்லா லைப் ஸ்டைல்-னால தூக் கம் வரமாட்டிங்குது. அதனால சில பேர் தூக்க மாத்திரை சாப்பிடுறா ங்க. தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரை சாப்பிடுறதால உடம்புக்குத் தான் கேடு வரும். அப் படி மருத்துவர் ஆலோசனை இல் லாமல் தூக்க மாத்திரை சாப்பிட்டா என்னென்ன ப்ராப்ளம் வருதுன்னு பாக்கலாமா!!!

1. தூக்க மாத்திரை ஒரு போதைப் பொருள் மாதிரி, அதை அடிக்கடிசாப்பிட்டா நாம அதுக்கு அடி மை ஆகிவிடுவோம். அப்புறம் நமக்கு நார்மலா தூக்கம் வந்தா கூட தூக்க மாத்திரை போடாம, நிம்மதியா தூங்க முடியாது, தூக்கமும் வராது.

2. தூக்க மாத்திரை சாப்பிட்டா நாம சுவாசிப்பதில் பிரச்சனை வரும். மேலும் ஆஸ்துமா, சுவா சக் கோளாறு பிரச்சனை இருக் குறவங்க தூக்க மாத்திரை சாப்பிட வேண்டாம்.

3. சிலர் தூக்க மாத்திரையை ஜூஸ் அல்லது ஆல்கஹாலில் கலந்துசாப்பிடுவாங்க. அப்படி சாப் பிட்டா உடலுக்கு மிகவும் ஆபத்தானது. மேலும் ஆல்க ஹாலில் கலந்து சாப்பிட்டா ல், சில சமயங்களில் மரண ம் கூட ஏற்படலாம். முக்கிய மாக தூக்க மாத்திரையை திராட்சை பழ ஜூஸ் கூட சாப்பிட வேண்டாம்.

4. தூக்க மாத்திரை சாப்பிட்டா அடிக்கடி காலையில் தலைவலி, மயக்கம், சோர்வு, அதிக தாகம் போன் றவை ஏற்படும்.

5. தூக்கம் அதிகம் வருவதால், பசி யைக் கூட மறந்து விடுவோம். இத னால் உடலில் உள்ள சக்தி குறை ந்து, தலைச் சுற்றல், உடலில் நடு க்கம் போன்றவை ஏற்படும்.

ஆகவே தூக்க மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடாதீங்க.

சத்தான நெல்லிக்காய் ஊறுகாய்  

நெல்லிக்காய் வைட்டமின் C, அதோடு வைட்டமின் D, வைட்டமின் E நிறைந்தது. இதில் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதனை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே வெயில் காலத்தில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்து சாப்பிடலாம். சத்தாகவும் சுவையாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய்அரை கிலோ
வரமிளகாய் : 30 கிராம்
உப்புஒரு கை பிடி அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணய் – 150 மிலி
பெருங்காயத்தூள் – 1 டீ ஸ்பூன்
வெந்தையம் – 2 டீ ஸ்பூன்
கடுகு - 3 டீ ஸ்பூன்

ஊறுகாய் செய்முறை


நெல்லிக்காய் கொட்டைகளை நீக்கி வில்லைகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் கொதிக்கிற வெந்நீரில் போட்டு பத்து நிமிடங்கள் மூடிவைத்து நீரை வடிக்கவும்.

உப்பு, வர மிளகாயை காயவைத்து பொடி செய்து நெல்லிக்காயில் சேர்த்துக் கலக்கவும்.

நல்லெண்ணையில் கடுகு, வெந்தையம் பெருங்காயம் தாளித்துக் கொட்டி, நன்றாக கலந்து, காற்றுப் புகாத கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.

கிலோ கணக்கில் நெல்லிக்காய் ஊறுகாய் தயாரிக்கும்போது நறுக்கிய காயின் அளவு எட்டுக்கு ஒன்று என்ற அளவில் மிளகாய்த் தூளும், உப்பும், காரத்தின் அளவுக்கு முக்கால் பாகம் அல்லது அதற்கு மேலும்கூட எண்ணெயும் தேவை. நெல்லிக்காயின் புளிப்பைப் பொருத்து காரம், உப்பை கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கவும்.

அசெம்பிள் கம்ப்யூட்டர், பிராண்டெட் கம்ப்யூட்டர் என்ன வித்தியாசம்?

கம்ப்யூட்டரில் இரண்டு வகை உண்டு.


1. பிரபல நிறுவனங்கள் தயாரித்து விற்கும் கம்ப்யூட்டர்கள்..(Branded computers)
2. நாமாக கணினியின் பாகங்களை வாங்கி, அவற்றை ஒன்றிணைத்து கணினியாக மாற்றுவது. (Assemble Computer)

முன்னது பிராண்டட் கம்ப்யூட்டர் எனவும், பின்னது அசெம்பிள் கம்ப்யூட்டர் எனவும் அழைக்கிறோம்.
சரி.. இவை இரண்டனுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன? இரண்டும் ஒன்றா? இல்லை வெவ்வேறானவை? இந்த குழப்பங்கள் ஒரு சிலருக்கு இருக்கக்கூடும்.

இரண்டும் செயல்படுவதில் ஒன்றுதான். ஆனால் கணினி தயாரிப்பு முறைகளில், அதில் இடம்பெற்றிருக்க பாகங்களின் தரங்களில் வேறுபடுகிறது.

அவற்றைப் பற்றி முழுமையாகப் பார்ப்போம். முதலில் பிராண்டட் கம்ப்யூட்டர்களை (Branded Computers)எடுத்துக்கொள்வோம். இது மிகப் பிரபலமான நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு, ஒரு சில சோதனைகளுக்குப் பிறகு விற்பனைக்கு விடப்படுகின்றன.


பிராண்டட் நிறுவனங்கள் எவை?
(What are the branded companies?)
Dell, Asus,HP, Lenovo, Sony, Toshiba, Compaq,Gatway, packard bell, acer, amd, ati, vaio, nec, ibm, apple, nvdia, போன்ற நிறுவனங்களை கூறலாம் இதைத் தவிர்த்து இன்னும் கூடுதலாக ஒரு சில நிறுவனங்களும் இருக்கின்றன.

இத்தகை நிறுவனங்கள் உருவாக்கும் கம்ப்யூட்டர்கள் நல்ல சிறப்பானதொரு கணினி பாகங்கள் உள்ளடக்கியதாகவே வெளிவருகிறது. இன்றைய காலத்தில் போட்டி மனப்பான்மையால் வாடிக்கையாளர்களைக் கவர, இந் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு, அதிக வசதிகளையும், மேம்படுத்தல்களையும் செய்து தருகிறது.

இத்தகைய நிறுவனங்களின் கணினிகளையே பிராண்டட் கம்ப்யூட்டர் என்று அழைக்கிறோம்.

பிராண்டட் கம்ப்யூட்டரில் உள்ள நன்மைகள்:
(The advantages of branded computer:)
பிராண்டட் கம்ப்யூட்டர்கள் வாங்குவதால் அதற்குத் தேவையான அனைத்துப் பாகங்களும் அதிலேயே உள்ளடக்கி கொடுக்கிறார்கள். எனவே வெளியில் ஏதேனும் பாகங்கள் வாங்கத் தேவையில்லை. பிராண்டட் கம்ப்யூட்டர்களுக்கென தனியாக எந்த ஒரு மென்பொருளும் வாங்கத் தேவையில்லை. குறிப்பாக OS என்று சுருக்கமாக அழைக்கப்படுகிற Operating System (Windows 7, Windows vista Windows xp)இவற்றை பணம் கொடுத்து வாங்கத் தேவையில்லை. கணினியிலேயே அனைத்து மென்பொருள்களும் இணைந்து கிடைப்பதால் வாங்கிய உடனேயே கணினியைப் பயன்படுத்த முடியும்.

பிராண்டட் கணினிகளில் original mother board பொருத்தப்பட்டிருக்கும். மேலும் இவை சிறப்பாக செயல்படவென அவற்றிற்கான சிறப்பு இயக்க முறைமைகளை சிறப்பு மென்பொருளைப் பயன்படித்தி உருவாக்கப் பட்டிருக்கும். BIOS UPDATION, DRIVER UPDATION போன்ற பல அப்டேசன்களைச் செய்து mohter board சிறப்பாக செயல்படும்படி அமைக்கப்பட்டிருக்கும்.

SMPS என்று சொல்லக்கூடிய Switched mode power supply யானது பிராண்டட் கம்ப்யூட்டரில் இருக்கும் Hardware-களுக்கென சிறப்பாக தயாரிக்கப்பட்டு இணைக்கப்பட்டிருக்கும். இந்த SMPS ஆனது கணினியில் உள்ள Mother board, Prossor, hard disk, DVD Player என ஒவ்வொரு பாகத்திற்கும் மின்சாரத்தை மிகச் சரியாக பிரித்து கொடுக்கும் பணியைச் செய்கிறது. இதனால் பிராண்டட் கம்ப்யூட்டரில் உள்ள உள் பாகங்கள் சரியாக இயங்குவதோடு, எளிதில் பாகங்கள் செயலிழக்காமலும் பாதுகாக்கப்படுகிறது.

பிராண்டட் கம்ப்யூட்டரில் இருக்கும் ஹார்ட்வேர் பகுதிகள் பல சோதனைகளுக்குப் பிறகு இணைக்கப்படுவதால் மிகவும் தரமானதாக இருக்கும். எனவே கணினியைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள் கூட துணிந்து பிராண்டட் கம்ப்யூட்டர்களை வாங்கலாம்.

பிராண்டட் கம்ப்யூட்டர்களை வாங்குவதால் இன்னும் கூடுதல் வசதிகளைப் பெற முடியும். ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கென பிரத்யேகமாக இணையதளங்களைக் கொண்டிருக்கிறது. அந்த இணையதளங்களின் மூலம் அந்த கணினிகளுக்குரிய (Computer Model)hard Drive களுக்கேற்ற Update களைப் பெற முடியும். இது ஒரு கூடுதலான பயனுள்ள வசதியாகும்.

Dell கணினிகளை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த நிறுவனத்திற்குரிய இணையதளமான www.dell.com சென்று உங்கள் கணினிக்குத் தேவையான மேம்படுத்தல்களை செய்ய முடியும் (Driver Updates).

பிராண்டட் கணினிகள் வாங்குவதால் இத்தகைய நன்மைகள் நமக்கு இருக்கின்றன.


 
அசெம்பிள் கம்ப்யூட்டரில் உள்ள நன்மைகள் என்ன? தீமைகள் என்ன?
(What are the advantages of assembly of the computer? What is evil?)
நான் வைத்திருப்பது அசெம்பிள் கம்ப்யூட்டர் தான்.. Hardware Engineer ஆன எனது நண்பர்கள் எனக்கு பல்வேறு பாகங்களை வாங்கி, ஒரு அருமையான கணினியை உருவாக்கித் தந்தார்

ஒவ்வொரு பாகமாக நன்கு கேட்டறிந்து, தனது அனுபவத்தில் அதிக வாழ்நாளைக் கொடுக்கக்கூடிய பாகங்களை வாங்கி எனக்கு அசெம்பிள் கம்ப்யூட்டர் செய்து கொடுத்தார். சுமார் 3 வருடங்களுக்கு மேலாக எந்த பிரச்னையுமின்றி கணினியானது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

சரி.. கணினி அசெம்பிள் செய்ய முக்கியமாக என்னென்ன பாகங்கள் வேண்டும்?
(What should be important to the assembly of computer parts?)

முதலில் computer case என்று சொல்லக்கூடிய நல்ல கேபின் வாங்க வேண்டும்.
அதற்கடுத்து அதில் பொருத்துவதற்கு உண்டான அனைத்து ஹார்ட்வேர்களையும் வாங்க வேண்டும்.
குறிப்பாக நல்ல நிறுவனத்தினுடைய
 1. Mother Board.
 2. processor
 3. RAM (Random Access Memory)
 4. Hard Disk 
 5. DVD Drive
 6. IDE-SATA Cables
 7. Monitor
 8. VGA Cable
 9. Power Cable
 10. Mouse – Keyboard
 11. Speaker
 12. OS CD Original (windows 7, windows 8, windows xp, windows vista)இவற்றில் ஏதாவது ஒரு Operation System மென்பொருள்.(os cd ரொம்ப முக்கியம்)
 13. Head Set (தேவைப்படின்)
இவற்றை அனைத்தையும் வாங்கி முறையாக ஒன்றிணைத்து ஒரு மணி நேரத்திலேயே கணினியை இயங்க வைக்கலாம். OS போடுவதற்கு சிறிது நேரம் எடுக்கும். எப்படியிருந்தும் இரண்டு மணி நேரத்திற்குள் நீங்கள் உங்கள் கணினியை உருவாக்கி அதில் நீங்கள் வேலை செய்ய முடியும்.

இவற்றிலுள்ள நன்மைகள்:
(Benefits of Branded Computer)
1. செலவு குறைவு.. பகுதிப் பொருட்களை நாமே வாங்குவதால் பார்த்து நல்லதாக தேர்ந்தெடுக்க முடியும்.

2. குறைந்த நேரத்தில் கணினியை இயக்கிப் பார்க்கும் வசதி.. கணினியில் ஏதேனும் பழுது என்றால் முடிந்த வரை நாமே அதைத் தீர்க்க முயற்சிக்கலாம்.

3. Ram, மற்றும் Fan ஆகியவற்றை தூய்மைப்படுத்துவது எளிதாக இருக்கும்.

4. ஏதேனும் பிரச்னை என்றால் துணிந்து அதில் கை வைக்கலாம். நம்மால் முடியாத சூழ்நிலை கணினி சரிசெய்பவரை அழைத்துக்கொள்ளலாம். பிராண்டட் கம்பெனி கம்ப்யூட்டர்களில் இவ்வாறு செய்ய முடியாது. காரணம் சர்வீஸ் சென்டர்களில் கொண்டுபோனால் இலவச சர்வீஸ் செய்யமாட்டார்கள். கணினியை திறக்காம் சீல் வைத்தப்படி அப்படியே இருந்தால் தான் இலவச சர்வீஸ் கிடைக்கும்.

5. ஏதாவது பழுது என்றால் உடனே மாற்றுப் பொருள் வாங்கி பொருத்தி செயல்படுத்தலாம். ஒரு கணினியிலுள்ள பொருளை எடுத்து இயங்காத கணினிக்குப் பொருத்தி சரிபார்த்துக்கொள்ளும் வசதி. உதாரணமாக SMPS போய்விட்டது என்றால் அதை கழற்றிவிட்டு வேறொரு SMPS - மாற்றி சோதனை செய்து பார்க்கலாம்.

6. மின்விசிறி இல்லாத இடத்தில் கூட வைத்து பயன்படுத்தலாம். கேபின் உள்ளே நல்ல காற்றோட்டமான இடைவெளி இருப்பதால் சூடேறுவது குறையும். இதனால் கணினியின் பாகங்கள் கெட்டுப்போக வாய்ப்புகள் குறைவு..

சராசரி பொருளாதார சூழ்நிலைகள் கொண்டவர்களுக்கு இந்த அசெம்பிள் கம்ப்யூட்டரே பொருத்தமானது.

கணனிக்கான இலவச ரீக்கவ்ரி போர்ட்டபிள் மென்பொருள்! 


ங்கள் கணணி, வந்தட்டுக்கள், யு.எஸ்.பிக்கள், நினைவு அட்டைகள் (மெமரிக்கார்ட்) போன்றவற்றில் ஏற்பட்ட வைரஸ்தாகுதல் அல்லது பழுதுகாரணமாக முழுத்தரவுகளும் அழிக்கப்பட்டுவிட்டனவா? அவற்றை மீட்டெடுக்க முடியவில்லையா?
அதற்கு உதவும் மிகச்சிறந்த மென்பொருளே இது!
இலகுவாகவும், காலவரையறைக்கமையவும் தரவுகளை மீட்டுத்தர இவ் மென்பொருள் துணை புரிகின்றது!
கணணியில் நிறுவிப்பயண்படுத்தவேண்டிய அவசியமில்லாததால், உங்கள் யு.எஸ்.பி சாதனங்களில் இவ் மென்பொருளை தரவிறக்கிவைத்துக்கொள்வதன் மூலம், தற்செயலாக அல்லது விபத்தாக அழியும் தரவுகளை மீட்கத்துணை புரியும்!

அளவு : 8 MB
தரவிறக்க Download now!

பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம்! அதிர்ச்சி தகவல்... 

தூக்கம் என்பது உடலுக்கு அளிக்கும் ஓய்வு. நாள்தோறும் ஓடிக் களைத்த உடலுக்கும் மனதுக்கும் இரவு நேரத்தில் 7 மணிநேரம் வரை ஓய்வளித்தால்தான் மறுநாள் சுறு சுறுப்பாக பணியை தொடங்க முடியும். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே!. அதுபோலத்தான் தூக்கமும். அதிக நேரம் தூங்குவது ஆபத்தானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இரவு நேரத்தில் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்கும் நடுத்தர மற்றும் வயதானப் பெண்களுக்கு, இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கின்றது அந்த ஆய்வு.

நடுத்தர வயதுப் பெண்கள்

நடுத்தர வயதுப் பெண்களின் தூக்கத்திற்கும், இதய கோளாறுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர் தெற்கு கரோலினா பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள்.

50 முதல் 79 வயது வரையிலான மொத்தம் 93,175 பெண்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். ஏழரை ஆண்டுகாலம் பெண்களின் தூக்க நேரம் கண்காணிக்கப்பட்டது.

இந்தப் பெண்களில் 1,166 பேருக்கு மிகவும் பொதுவான வகையைச் சேர்ந்த இதயக் கோளாறான 'இஸ்கெமிக் ஸ்ட்ரோக்'கை அனுபவித்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.

இதயக் கோளாறு

ஆய்வின் முடிவில் சராசரியாக 7 மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடுகையில், 8 மணிநேரம் மற்றும் 9 அல்லது அதற்கும் மேற்பட்ட மணிநேரம் தூங்குவோருக்கு முறையே 14 சதவிகிதம், 24 சதவிகிதம் மற்றும் 70 சதவிகிதம் அளவில் இதயக் கோளாறு வருவதற்கான அபாயம் உண்டு என்பது கண்டறியப்பட்டது.

எனவே, பெண்கள் 9 மற்றும் அதற்கும் அதிகமான மணிநேரங்கள் தூங்குவதைத் தவிர்த்து, சராசரியாக 7 மணி நேரம் தூங்குவதே சிறந்தது என்று மருத்துவ ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.