சனி, 12 ஜனவரி, 2013

சிக்கன் மஞ்சூரியன்......
*தேவையான பொருட்கள்*

எலும்பு நீக்கிய கோழிக்கறி - 400 கிராம்
முட்டைஒன்று
கார்ன்ப்ளவர் - 6 மேசைக்கரண்டி
மைதா – 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - 2 டீ ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டுகால் கப்
பூண்டு குடை மிளகாய் - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
வெங்காயத்தாள் - 2
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி
வினிகர் - 2 மேசைக்கரண்டி

*மஞ்சூரியன் செய்முறை*

கோழிக்கறியினை கழுவி சுத்தம் செய்து பின் விரல் நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அகலமான பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி கார்ன்ப்ளவர், ஒரு மேசைக்கரண்டி மைதா, சோயா சாஸ், முட்டை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இதில் சிக்கனை சேர்ந்து நன்கு கலந்து சுமார் அரை மணி நேரம் ஊறவிடவேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, ஊறவைத்துள்ள கோழித் துண்டங்களைப் போட்டு முன்று நான்கு நிமிடங்களுக்கு வேக வைத்துப் பொரித்து எடுத்து, தனியாக வைத்துக்கொள்ளவும்.

வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். குடை மிளகாயைக் கழுவி, விதைகளை நீக்கி மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத் தாளினையும் நீளவாக்கில் குறுக்காக வெட்டி வைத்துக்கொள்ளவும். மீதமுள்ள கார்ன் ப்ளவரை ஒரு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, இஞ்சி விழுது போட்டு இலேசாக வதக்க வேண்டும். அத்துடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அதன் பிறகு சோயா சாஸ்அஜினோமோட்டோ, தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும்.

பிறகு கரைத்து வைத்துள்ள கார்ன்ஸ்டார்ச்சினை ஊற்றிக் கலக்கி குழம்பு
கெட்டியாகும் வரை நன்கு கலந்து வேகவிட வேண்டும். அதில் வறுத்து வைத்துள்ள கோழித் துண்டங்களைச் சேர்த்து சில நிமிடங்களுக்கு வேக விட வேண்டும். பின்னர் நறுக்கின குடை மிளகாய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். இறக்குவதற்கு முன்பு வினிகர் கலந்து, வெங்காயத் தாளினைத் தூவி சூடாகப் பரிமாறலாம். சுவையான சிக்கன் மஞ்சூரியன் ரெடி. எளிதாக செய்யலாம். நீங்களும் செய்து பார்த்து அசத்துங்களேன்.

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!1. *மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம் (basic)*.

2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.


3. உடல் எடை குறைவு - சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும். குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம்.

4. நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம். அவற்றை குறைவாக, அவ்வபோது சாப்பிடுங்கள்.

5. மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால், மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு நல்லது.

6. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுங்கள். *ப்ரிட்ஜில்
வைக்கப்படும் காய் - பழங்கள் 50 முதல் 60 % வரை சத்துக்களை இழக்கின்றன. *

7. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.

8.உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும்  உபயோகபடுதாதீர்கள்.

9.புகை பிடிப்பதும் அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை
விளைவிக்கும்.

10. தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

11. சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.

12. *மிக சிறிய , உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் பெரும்பாலும் (90 %) நமக்கு மனச்சுமை (Stress) வருகிறது.*

13. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.

14. *எல்லா விஷயங்களும் மிக சரியாக (perfect ) இருக்க வேண்டும் என எதிர்
பார்க்காதீர்கள். நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள்*. இது உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.

15. சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள் ( Delegate ).

16.*கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள்அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.*

*17. அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். வேலையை விட்டு செல்பவர்களை விட, அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கபடுகிறார் !*

18. குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.

19. உங்கள் படுக்கை அறையில் தொலை காட்சி, கணினி, வளர்ப்பு பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.

20. உடல் எடை கூடுவதற்கு தொலை காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்

21. உங்கள் அலை பேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்; அது மோசமான பழக்கம்; மேலும் மனச்சுமையை கூட்டும்.

22. *மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை*.

23. சிரிப்பு ( Laugh therapy) புற்று நோய், இதய நோய், மன சுமை
போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்க
பட்டுள்ளது.

24. தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகபடுத்த உதவும்


25. உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசி தீர்க்க பாருங்கள்.

26. *நேர் மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என ( Optimist ) நம்புங்கள்*.

27. மகிழ்வாக வாழும் கணவன்- மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவுதனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.

28. நம்பிக்கையும் நேர் மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய
நோய்களிலிருந்து மீள உதவும்

29. வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.

30. *பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளும் உருவாக்கி கொள்ளுங்கள்நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்.*


மூளை ஆரோக்கியமா இருக்கணுமா? இதெல்லாம் சாப்பிடுங்க!மனிதனின் தலைமைச் செயலகம் மூளைதான். அது ஆரோக்கியமாக இருக்கும் வரைதான் உயிரோட்டமான வாழ்க்கையை வாழ முடியும். மூளை செயலிழந்து விட்டால் மொத்த செயல்பாடும் குழப்பமடைந்துவிடும்.

ஒரு குறிப்பிட்ட வயதிற்குப்பின்னர் மூளையின் செயல்திறன் படிப்படியாக
குறைகிறது. நினைவுச்செல்களின் செயல்பாடுகளில் ஏற்படும் மந்த நிலையிலானாலே மறதி, அல்சீமார் போன்றவை ஏற்படக்காரணமாகின்றன. எனவே சிறுவயதிலேயே சத்தான உணவுகளை உட்கொள்வதன் நமது மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.


*மீன் சாப்பிடுங்க*

அசைவ உணவுகளில் அதிக சத்து நிறைந்தது மீன் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் உள்ள ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மூளையின் வளர்ச்சிக்கு ஏற்றது. சல்மான், டுனா வகை மீன்களில் அதிக அளவில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.மீனைப் போல முட்டையிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை
மூளையின் செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில் உள்ள உயர்தர புரதம்வைட்டமின் போன்றவை மூளைக்கு தேவையான அளவு ஊட்டச்சத்தினை தருகின்றன.


*சத்தான சாலட்*
 

பச்சைநிற இலைகளைக் கொண்ட சாலட், காய்கறி சாலட் மூளைக்கு ஏற்ற உணவாகும்லெட்டூஸ், கீரைகள் மூளையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. அதேபோல் கேரட்,ப்ருக்கோலி, முட்டைக்கோஸ் போன்றவைகளை சாலட்களாக சாப்பிடுவதன் மூலம் மூளையை ஆரோக்கியமானதாக பலம் நிறைந்ததாக மாற்ற முடியும். இவை உயர்தர நார்ச்சத்து நிறைந்தவை. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், வைட்டமின் சி, இ போன்றவை மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. இவைகளை சாலட்களாக சாப்பிடப்
பிடிக்காதவர்கள் சூப் ஆக சாப்பிடலாம்.


*பாதாம் பருப்பு*


பாதம் பருப்பில் உயர்தர ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன. தினசரி நான்கு பாதாம் பருப்பு சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான கலோரிகள் கிடைப்பதோடு மூளையும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

*நினைவாற்றலுக்கு யோகர்ட்*


யோகர்ட் சாப்பிடுவதன் மூலம் தேவையான அளவு அமினோ அமிலங்கள் கிடைக்கின்றன. இது நினைவாற்றலை அதிகரிக்கிறது. யோகர்ட் உடன் உலர் பருப்புகள், பழங்கள் கலந்து சுவையான உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் மூளைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

*சத்தான புளூபெரீஸ்*

புளூபெரீசில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளையின் நினைவாற்றல் திறனை
ஊக்குவிக்கிறது. மறதி நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தங்களின் நினைவாற்றல் திறனை திரும்ப பெற புளூபெரிஸ் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.இந்த உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வதன் மூலம் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாத்து அல்சீமர் போன்ற நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

ஓவரா கோபப்படுறீங்களா?
அப்பிடீன்னா நீங்க ரொம்ப பாவம்!
எதுக்குன்னு அறிய இதப்படிங்க!


ஒரு சிலர் எப்பொழுது பார்த்தாலும் கோபத்துடனே இருப்பார்கள். சிடு சிடு
முகமும், சிவந்த கண்களுமாய் இருப்பார்கள். இது போன்ற நபர்களுக்கு மாரடைப்பு எளிதில் தாக்கி மரணம் சம்பவிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கோபத்தினால் பள்ளி மாணவர்களுக்கும் கூட இதயநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் நோயை தடுக்க சினத்தை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.


சிறு குழந்தைகளோ, இளைஞர்களோ இன்றைய இளம் தலைமுறையினருக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறதுகோபத்தை தற்காலிக பைத்தியம் என்றே சொல்லலாம். அடிக்கடி கோபப்படுவதால் ரத்த அழுத்தம் 160-80 என எகிறுகிறதுகோபப்படும் நேரத்தில் செயல்பாடுகளை நாம் உணர்வதில்லை. அதனால்தான் கோபத்தை தற்காலிக பைத்தியம் என்கிறோம். கோபம் வரும்போது அட்ரினலின் ஹார்மோன் சுரக்கிறது. அதுவே, உடலின் ரத்தக்குழாயை சுருக்கி விடுகிறது. உடலில் ரத்தம் செல்வது குறைவதால், முகத்தில் அதிக ரத்தம் தேங்கி, முகம் சிவப்பாகிறது.

அதிக கோபம் வரும்போது, அதிகமான அளவு ரத்தத்தை இருதயம் பம்ப் செய்ய வேண்டியிருக்கிறது. கோபப்படுவதால், மனம் மட்டுமின்றி உடலும் கெட்டுப்போய் திடீர் மரணங்கள் சம்பவிக்கின்றனஅமெரிக்காவில் இருதய நலன்துறை தலைவரும் மியாமி மில்லர் ஸ்கூல் நரம்பியல் துறை தலைவருமான ரால்க் சாக்கோ, மனிதர்களின் கோபத்தினால் நடத்தையில் மாற்றம் ஏற்படுவது மட்டுமல்லாது, இதய நோய்கள் ஏற்படுவது நிச்சயம் என்று கூறியுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு இதயநோய் இன்றைக்கு பள்ளிமாணவர்களுக்கு இடையேயான மோதல்கள் அதிகரித்து வருகின்றனஅவர்களுக்கு ஏற்படும் கோபத்தினால் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் பள்ளி மாணவர்களை தாக்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக கோவையில் ஒரு பள்ளியில் 1,500 மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில், 8 பேருக்கு இருதய நோய் பாதிப்பு இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது.  எனவே மாணவர்களிடையே கோபம் ஏற்படுவதை
தவிர்க்க அவர்களுக்கு உளவியல் ரீதியான பயிற்சிகளை அளிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இருதயம் நன்றாக இருந்தால்தான் ஒரு மனிதன் நன்றாக இருக்கமுடியும். எனவே கோபத்தை தவிர்த்து மகிழ்ச்சியுடன் வாழ நினைத்தாலே மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.