வியாழன், 11 ஏப்ரல், 2013

இணையப்பயன்பாட்டில் சிறுவர்களைக் பாதுகாத்திடஇன்றைய உலகில் கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான்.இதில் அபாயம் தரும் இன்னொரு பக்கமும் உள்ளதுமுற்றிலும் கட்டற்ற இணையம் சிறுவர்களுக்கு அபாய கரமானது. பாலியல் தளங்களும்வன்முறையை போதிக்கும் தளங்களும் இணையத்தில் நிறைந்து கிடக்கின்றன. இவற்றைப்
பார்க்காதே என்று ஒரு காவலாளி போல சிறுவர்களை எந்நேரமும்  கட்டுப்படுத்துவது இயலாது.


 மேலும் வரையறைகளை அமைப்பது இன்றைய டிஜிட்டல் உலகில் பெற்றோர் களுக்கும் சற்று சிரமமான செயல்பாடாக உள்ளது. இயலாததும் கூட. பெற்றோர் தடை இடுகையில் அதனை மீற வேண்டும் என்ற இயல்பு சிறுவர்களுக்கு இயல்பாகவே தோன்றுவது இயற்கையே.

  
இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க K9 Web Protection <http://www1.9webprotection.com/என்னும் புரோகிராம் நமக்கு உதவுகிறது. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம், வீடுகளில் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில், இணையத்தில் பெற்றோர் கட்டுப்பாடு விதிக்க உதவுகிறது.


உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள இணையத்தை உங்கள் கட்டுப்பாட்டிலேயேநீங்கள் அருகில் இல்லாத சூழ்நிலையிலும், வைத்திருக்க உதவுகிறது. உங்கள் குழந்தைகளை இணையம் தரும் தீமைகளிலிருந்து பாதுகாக்க உதவிடும் இதன் சிறப்பம்சங்களாவன:


 பாலியல், போதை மருந்து, தனிநபர் டேட்டிங், வன்முறையைப் போதிப்பது, வெறுப்பினை வளர்ப்பது, இனவேறு பாட்டினைத் தூண்டுவது என 70க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவுகளாக, இணைய தளங்களைப் பிரித்து வைத்து தடுக்கலாம்.  குழந்தைகளின் வயதின் அடிப்படை யில், தடுப்பு நிலைகளை அமைக்கலாம்.

அனைத்து தேடல் சாதனங்களிலும், SafeSearch என்ற ஒன்றை இயக்கி வைக்கலாம்குறிப்பிட்ட நேரத்தில் இணையத் தொடர்பினை ஏற்படுத்த இயலாமல் செட் செய்திடலாம். "எப்போதும் அனுமதி' மற்றும் "எப்போதும் தடை செய்திடு' என இருவகைகளாக இணைய தளங்களைப் பிரித்து அமைக்கலாம்.

பெற்றோர் அமைத்திடும் பாஸ்வேர்ட், மற்ற பாஸ்வேர்ட்களையும் மீறி இருக்கும் வகையில் அமைக்கலாம்கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் சற்று அதிகம் தெரிந்து பயன்படுத்துபவர்கள் கூடமீட்டெடுக்க முடியாத தடைகளை உருவாக்கலாம்தடை செய்யப்பட்ட தளங்களைப் பார்த்தால், அது குறித்த அறிக்கை தரும்படி அமைத்திடலாம்.

விண்டோஸ் மட்டுமின்றி, மேக் கம்ப்யூட்டர்களில் இயங்கும் வகை யிலும் இது தரப்படுகிறது.K9 Web Protection என்ற இந்த புரோகிராம், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் எக்ஸ்பி, மேக் .எஸ். எக்ஸ் 10.4.7 மற்றும் அதற்கும் மேற்பட்ட சிஸ்டங்களில் இயங்குகிறது.


இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில் லைசன்ஸ் கீ தரும்படி இந்த புரோகிராம் கேட்கும். லைசன்ஸ் கீயினை இலவசமாகhttp://www1.k9webprotection.com/  என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் பெற்றுக் கொண்டு பயன்படுத்தலாம்.


இதே இணைய பாதுகாப்பு -போன், -பாட் டச் மற்றும் -பேட் ஆகிய சாதனங்களில் பயன்படுத்தும் வகை களிலும் கிடைக்கிறது. இவற்றிற்கான அப்ளிகேஷன் ஸ்டோர்களில் k9 என டைப் செய்து தேடிப் பார்த்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடலாம்.

உதட்டு வறட்சியை போக்க வேண்டுமா?
பருவக்காலம் மாறும் போது, உதடுகளில் பிரச்சனை ஆரம்பிக்கும். இத்தகைய
பிரச்சனையை தடுக்க நாம் சரியாகவும், முறையாகவும் உதடுகளை பராமரித்து வர வேண்டும். மேலும் சிலர்உதடுகளுக்கு அதிகமான அளவில் லிப்ஸ்டிக்கை போடுவார்கள்.

அவ்வாறு அதிகப்படியான லிப்ஸ்டிக் உதடுகளில் இருந்தால், அதில் உள்ள கெமிக்கல் உதடுகளில் இயற்கையான மென்மைத்தன்மையை இழக்கச் செய்து, பொலிவிழக்கச் செய்யும்உதடுகள் வறட்சியடையாமல், மென்மையோடும், பொலிவோடும் காணப்படுவதற்கு, ஒருசில இயற்கை முறைகளைப் பின்பற்றி வந்தால், சரி செய்துவிடலாம்.

உதடு வறட்சியடையும் போது உதட்டில் தேங்காய் எண்ணெயை வைத்தால், உடனே வறட்சியானது போய்விடும். ஏனெனில் தேங்காய் எண்ணெயில் உள்ள ஃபேட்டி ஆசிட் வறட்சியை நீக்கி, உதட்டை எண்ணெய் பசையுடன் வைக்கும்.

தக்காளியை நறுக்கி, அதனை வறட்சியடைந்த உதட்டில் தடவினால், வறட்சி
நீங்கிவிடும். வேண்டுமெனில் தக்காளியில் தேனை தடவியும் உதட்டில் மசாஜ் செய்யலாம்.

வறட்சியான மற்றும் பொலிவிழந்த உதட்டிற்கு எலுமிச்சை சிறந்ததாக இருக்கும்ஏனெனில் பொதுவாக எலுமிச்சை இறந்த செல்களை சருமத்தில் இருந்து வெளியேற்றுவதில் சிறந்தது. எனவே இதனை உதட்டில் தடவினால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கிஉதடு பொலிவாகும். மேலும் இந்த முறையில் சிறிது தேனையும் சேர்த்து செய்து, உதடு வறட்சியடையாமல் இருக்கும்.

உடலில் நீர் வறட்சி இருந்தாலும், உதடுகளில் வறட்சி ஏற்படும். எனவே அதிகமான அளவில் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இதனால் வறட்சி நீங்குவதோடு, உடலும் நன்கு பொலிவோடு இருக்கும்.

பெண்களில் முகத்தில் உள்ள முடிகளை போக்க...
*பெண்களின் அழகைக் கெடுப்பதில் முகத்தில் தோன்றும் முடிகளும் ஒன்று. இதனைப் போக்குவதற்கு நிறைய பராமரிப்புகளை பெண்கள் பின்பற்றி வருகின்றனர்*

*இருப்பினும் அவை வளர்ந்து முகத்தை அசுத்தமாகவும், கருப்பாகவும், அழுக்குடன் இருப்பது போன்றும் வெளிப்படுத்துகிறது. இத்தகைய முடிகளைப் போக்குவதற்கு ப்ளீச்சிங் தான் சிறந்தது. ஆனால் அவை
சருமத்திற்கு மிகவும் நல்லதல்ல.

மஞ்சள் மற்றும் கடலை மாவு:

ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து அதில் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும்.

குறிப்பாக முடி உள்ள இடத்தில் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடும்.

மஞ்சள் மற்றும் உப்பு:

ஸ்கரப் செய்வதற்கு உப்பு மற்றொரு சிறந்த அழகுப் பொருள். இதனை வைத்து ஸ்கரப் செய்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, முகத்தில் இருக்கும் முடியும் உதிர்ந்து அதன் வளர்ச்சி தடைபடும். அதற்கு மஞ்சள் தூளுடன், உப்பு சேர்த்து, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் பால் விட்டு கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்தால் முகம் பளபளப்புடன் இருப்பதோடு, முகத்தில் இருக்கும் முடியும் இயற்கையாக நீங்கிவிடும்.

எலுமிச்சை மற்றும் தேன்:

இந்த ஸ்கரப்பை செய்தால் முகம் நன்கு வெள்ளையாவதோடு முடியில்லாத பட்டுப் போன்ற சருமத்தைப் பெறலாம்.

இந்த முறைக்கு எலுமிச்சை சாற்றுடன் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

சர்க்கரை ஸ்கரப்:

இந்த ஸ்கரப்பில் முகத்தை கழுவி பின் சர்க்கரையை கொண்டு ஸ்கரப் செய்ய வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம். பருக்கள் உள்ளவர்களும் இந்த முறையை பின்பற்றினால் பருக்களை போக்கலாம்*

உங்களது கழுத்து கருத்துப்போய் உள்ள‍தா?*சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலை வது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப்போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழி முறைகள் இதோ.. *

** கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப் பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும். ***

** பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத் தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும். ***

**முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும். ***

** பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும். ***

** சிலருக்கு செயின்போட்டு, அதனால் பின்கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்.*

மனஅழுத்தம் போக்கும் “இஞ்சி டீ”இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி இடம் உண்டு. மன அழுத்தமோ, கவலையோ ஏற்பட்டால் வீட்டில் சூடாக ஒருகப் இஞ்சி டீ சாப்பிடுங் ள் கவலை காணாமல் போய்விடு ம் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் மனஅழுத்தம் போக்கும் நிவாரணியாகவும் இஞ்சி டீ திகழ்கிறது என்கின்றனர் நிபுணர் கள்.

கவலை நிவாரணி

இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கல ந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. நமக்கு துயரம், கவலை ஏற்படும்போது நச்சு ரசா யனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்துவிடுகிறது. அதனால்தான் கவ லை ஏற்படும் போது இஞ்சி டீ குடியு ங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

மன அழுத்தம் போக்கும்

மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக் கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகி றது. இம்மாதிரி நிலைகளில் வெந் நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைப்பதாக நிபு ணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜீரணசக்தி கிடைக்கும்

மேலும் நாக்கின் ருசி சம்பந்த மான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்கு விக்கிறது. மலச்சிக்கல், அழற் சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச் சனைகள் இவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழ ற்சியையும் கட்டுக் கோப்பாக வைக்கிறது.

எனவேதான் நாளொன்றுக்கு ஒரு முறை இஞ்சி டீ குடித்தாலே போ தும். அது நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற் படும் தசைப்பிடிப்பைப் போக்க இஞ்சி சாற்றில் நன்றாகத் தோய்த்த துணியை வயிற்றின்மீது வைத்துக்கொண்டால் பெரிய ளவுக்கு நிவாரணம் கிடைப்பதாக மருத்து நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.