திங்கள், 8 ஆகஸ்ட், 2011

கருத்தடையில் என்னென்ன வகைகள் இருக்கிறது?

கருத்தடை என்பது, கருத்தரிப்பதைத் தடை செய்யும் முறையாகும்.
கருத்தரிப்பதைத் தவிர்க்க நிறைய வழிமுறைகள் உள்ளன. அதில் சில வழிமுறைகள் மற்ற வழிமுறைகளை விடச் சிறந்தது.
அதில் ஹார்மோன் மருந்துகள், கருத்தடைச் சாதனங்கள், கருத்தரிப்பு நிகழக்கூடிய நாட்களில் செக்ஸைத் தவிர்ப்பது (இதைத் தான் `பாதுகாப்பான நாட்கள்' என்று அழைப்பார்கள்) மற்றும் அறுவை சிகிச்சை.
கருத்தடை முறையில் பாதுகாப்பான பல முறைகள் வந்து இன்றைய பெண்களின் உலகில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி விட்டது.
கருத்தடை முறைகளைத் தெரிந்துகொண்டு, அதில் உங்களுக்கும், உங்கள் லைஃப் ஸ்டைலுக்கும் எது சரியானதோ அதைத் தேர்ந்தெடுங்கள்.

*ஹார்மோன் முறை:-

கருத்தடை மாத்திரைகளோ, ஊசிகளோ (வாய் வழியாக எடுத்துக் கொள்ளப்படுவது) மற்றும் ஈஸ்ட்ரோஜன் அல்லது புரோஜெஸ்ட்ரான் போன்ற ஹார்மோன்கள் அடங்கியது. இந்த ஹார்மோன்கள் பெண்களுடைய சினைப்பையிலிருந்து மாதாமாதம் வெளிவரும் கருமுட்டையைத் தடை செய்து விடும். தவிரவும், இந்த முறையினால் கருப்பையின் வாய்ப்பகுதியில் இருக்கும் வெள்ளைச் சளி போன்ற டிஸ்சார்ஜ் (mucus discharge)தடிமனாகி, விந்து கர்ப்பப்பைக்குள் நுழையாமல் தடை செய்துவிடும்.
சில நாட்கள் வரை குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட நினைக்கும் புதுமணத் தம்பதிகளுக்கு கருத்தடை மாத்திரைகள் மிகச் சிறந்த வழி.
கருத்தடை மாத்திரை சாப்பிடும் பெண்கள் அதை மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின்படி தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கருத்தடை ஊசி ஒன்று இருக்கிறது. அது 3 மாதங்களுக்கு கர்ப்பத்தைத் தடுக்கும். இதனால் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த ஊசியை எடுத்துக்கொள்ளலாம்.

*ஆணுறைகள்:-


எச்.ஐ.வி, ஹெப்படைடிஸ் போன்ற செக்ஸ் வழியாகப் பரவும் வியாதிகளைத் தடுப்பதில் இந்த ஆணுறைகள் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் கருத்தடை விஷயத்தில் ஆணுறைகள் ஃபெயிலியர் ரேட் அதிகம். அதாவது 15%. அதனால் கர்ப்பம் ஏற்பட்டால் கவலை இல்லையென்றால் இந்த முறையைப் பயன்படுத்தலாம்.


*கருத்தடைச் சாதனம்:- (Intrauterine device IUD)


இந்த சாதனம் ஒரு சிறிய பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டது. அதன் மேல் காப்பர் (அ) ஹார்மோன் இருக்கும். இதை கருப்பைக்குள் வைப்பார்கள். இந்த காப்பர் (அ) ஹார்மோன் கர்ப்பப்பைக்குள் இருப்பதனால் கருத் தரிக்காது. அப்படி கருத்தரித்தாலும் கர்ப்பப்பைக்குள் நிற்க விடாது. இந்த கருத்தடைச் சாதனத்தை அதன் டைப்பைப் பொறுத்து 3 முதல் 5 வருடங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். இதன் ஃபெயிலியர் ரேட் வெறும் 3% லிருந்து 5% வரைதான். தவிர, இந்த முறை ஏற்கெனவே குழந்தை பிறந்தவர்களுக்கு மிகவும் ஏற்றது.


கருத்தடை முறையில் இந்த முறைதான் இயற்கையான ஃபேமிலி பிளானிங். இந்த முறையில் எந்த கருத்தடைச் சாதனத்தையும், கருத்தடை மாத்திரைகளையும், ஊசிகளையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. கருத்தரிப்பதைத் தடைசெய்ய வேண்டுமென்றால், பீரியட்ஸ் தொடங்கிய முதல் 7 நாட்கள் வரை உறவு கொள்ளலாம்.

(
பீரியட்ஸ் ஆன முதல் நாளிலிருந்து கணக்கெடுத்துக் கொள்ளுங்கள்) மற்றும் அடுத்த மாத பீரியட்ஸ் வருவதற்கு முந்தைய 7 நாட்களும்தான் `பாதுகாப்பான நாட்கள்' என்று அழைக்கப்படுகிறது. இந்த கருத்தடை முறை பீரியட்ஸ் ரெகுலராக இருக்கும் பெண்களுக்கு மட்டும்தான் பொருந்தும். இந்த முறையின் ஃபெயிலியர் ரேட் 25%.

*பாதுகாப்பான நாட்கள் (சேஃப்டி பீரியட்):-

 

*கருத்தடை ஆபரேஷன் (Sterilisation):-


இந்த கருத்தடை முறையில், விந்தணு அல்லது கருமுட்டையை எடுத்துக்கொண்டு செல்லும் கருக்குழாய்களை ஆப்ரேஷன் மூலம் மூடி விடுவார்கள். இந்த ஆப்ரேஷனைச் செய்து கொண்ட ஆணோ அல்லது பெண்ணோ பிறகு எப்போதுமே பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது.
வாசக்டமியில், ஆணின் விந்தணுவைக் கடத்திச் செல்லும் குழாயை சர்ஜன் வெட்டி, சீல் செய்து விடுவார். பெண்ணுக்குச் செய்யும் போது, ஓவரியிலிருந்து கருப்பைக்கு கருமுட்டையை ஏந்திச் செல்லும் கருக்குழாயை கட் செய்து, சீல் பண்ணி விடுவார். இதில் ஆணுக்குச் செய்யும் ஆப்ரேஷன் பெண்ணுக்குச் செய்யும் அறுவை சிகிச்சையைவிட சுலபமானது. இந்த சிகிச்சையினால் ஆண்மை குறையாது. இந்த கருத்தடை முறையில் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி ஃபெயிலியர் ரேட் ஒரு சதவீதத்துக்கும் கீழேதான்!.***எமர்ஜென்சி கருத்தடை முறை!

தம்பதிகள் கருத்தடை முறையைப் பயன்படுத்தவில்லை என்றால் ஒரு வருடத்துக்கு குழந்தைப் பிறப்பு 80% இருக்கும். கருத்தடை ஆபரேஷன் முறையைத் தவிர ஹார்மோன் முறை மருத்துவம், கருத்தடைச் சாதனம் (IUD) ஆகியவை மிக எஃபெக்ட்டிவான முறைகள். எந்த வகை கருத்தடையும் உபயோகிக்காமல், பாதுகாப்பான நாட்களை மட்டும் உபயோகித்தால் (Safe period) கர்ப்பம் ஆவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு!

பாதுகாப்பில்லாமல் உறவு கொண்டாலோ அல்லது ஆணுறை உபயோகப்படுத்தியும் அது கிழிந்து இருந்தாலோ எமர்ஜென்சி கருத்தடையான `மறுநாள் காலையில் பயன்படுத்தும் மாத்திரைகளை' எடுத்துக் கொள்ளலாம். இந்த ஹார்மோனல் மாத்திரையை உறவு கொண்ட 72 மணிநேரத்துக்குள் ஒரு மாத்திரையும், அதன் பிறகு அடுத்த 12 மணி நேரத்துக்குள் மற்றொரு மாத்திரையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முறையைப் பற்றி உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இதைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாது. துரதிர்ஷ்டவசமாக இந்த கருத்தடை மாத்திரைகளை தற்போது தடை செய்து உள்ளார்கள்.


சில கட்டுக்கதைகள்!

கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பெண்கள் குண்டாகி விடுவார்கள் என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் இது உண்மையல்ல. உடலில் நீர் சேர்வதால் ஒன்று அல்லது இரண்டு கிலோ மட்டும் வெயிட் போடலாம். இந்த மாத்திரையினால் கேன்சர் வருமோ என்று சில பெண்கள் தயங்குவார்கள். இது உண்மையல்ல. இதில் கவனிக்க வேண்டிய நல்ல விஷயம் என்னவென்றால், இந்த கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கு வரும் ஓவேரியன் கேன்சரை வர விடாமல் தடுக்கும்.

பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு குறிப்புகள்!

 
பணியிடங்களில் இருந்தும், கல்வி நிலையங்களில் இருந்தும் வீடு திரும்பும்போதோ அல்லது வெளியில் செல்லும் போதோ பல்வேறு சூழ்நிலைகளில் பெண்கள் பல வகைகளில் துன்புறுத்தப்படுகின்றனர் இதற்கு பெண்களின் தைரியமும், துணிச்சலும், எச்சரிக்கை உணர்வும்தான் மாற்று மருந்தாக அமையும். அதுபோன்ற சம்பவங்கள் எல்லா பெண்களுக்கும் நேரும் என்று கூற இயலாது. ஆனால் அவ்வாறு நேரும்போது அதனை எதிர்க்கும் ஆற்றலை பெண் பெற்றிருக்க வேண்டும்.

 பொதுவாக பெண்கள் மூன்று காரணங்களால் எளிதல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

குறைவான விழிப்புணர்வு:

பெண்கள் எங்கே இருக்கிறோம், நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனம் வைத்திருக்க வேண்டும். நம்மை மறந்த நிலையில் இருக்கும் சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும். நாம் புதிதாக போகும் இடத்தைப் பற்றிய தகவல்களை நாம் அறிந்திருக்க வேண்டும்.

உடல் மொழி:

தலையை குனிந்துகொண்டு, எதற்கும் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். உடலையும், தலையையும் நேராக வைத்திருங்கள். மனித உடலில் புஜங்கள் தான் மிகவும் வலிமையானவை. எனவே, உங்களது கைகளும், புஜங்களும் தாக்குதலை தடுக்கவும், எதிர்தாக்குதலுக்கும் தயாராக இருக்கட்டும்.

தவறான இடத்தில், நேரத்தில் இருத்தல்:

குறிப்பாக இரவு நேரங்களில் குறுகிய பாதையில் தனியாக செல்வதை தவிருங்கள். உங்களுக்கு நம்பிக்கை குறைந்தவர்களுடன் கட்டாயத்தின் பேரில் செல்வதையும் தவிர்த்துவிடுங்கள். எந்த இடத்திற்கும் நேரம் காலம் என்று ஒன்று உண்டு. தாங்கள் சுதந்திரப் பறவை என்ற எண்ணத்தில் கண்ட நேரத்தில், கண்ட இடத்தில் இருந்து தாங்களாகவே வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம். காரில் கடைகள் உட்பட வெளியிடங்களுக்கு செல்லும் போதும், உண்ணும்போதும் திறந்த காரில் உட்கார்ந்துகொண்டிருக்கும் வழக்கம் பெண்களிடம் அதிகமாக உள்ளது. அப்போது மர்ம மனிதர்கள் காரில் ஏறி மிரட்டி உங்களை வேறு இடத்திற்கு அழைத்து சென்றுவிடலாம். எனவே, காரின் கதவுகளை நன்கு மூடி வைத்துக்கொள்ளுங்கள் அல்லது தனியாக அமர்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

 *** thanks தினசரி

மாதவிடாய் டென்சன் - திர்வு !

பெண்கள் திடீரென்று சில நாட்களாகக் காரணமில்லாமல் எரிந்து விழுவது, வயிற்று வலி, தலைவலி, கோபப்படுவது, டிப்ரஷன், டென்ஷன் இவையனைத்தும் மாதவிடாயின் முன்பு அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளின் பிரதிபலிப்பு.
ஹார்மோனின் வேலைகள்தான். Premenstrual Syndrome..மாதவிடாயின் அசௌகரியங்கள் அதற்கு பின்பு இருக்கும் மருத்துவ உண்மைகள்:

சினை முட்டையை உற்பத்தி செய்கிற ஒவ்வொரு பெண்ணும், மாதவிடாய்க்கு முன்பு சில மாற்றங்களை அனுபவிக்கிறாள். மார்பக வலி, வீக்கம், தலைவலி, மனச்சோர்வு, தசைப்பிடிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் மாதவிடாய்க்கு முன்பு இருக்கும்.

*

இதனை மருத்துவம் Premenstrual Syndrome என்கிறது. அதிக சதவிகிதப் பெண்கள் உடலால் மட்டுமின்றி மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் தொடர்ந்து சில நாட்கள் அவர்களுடைய இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைகிறது.

*

முன்பெல்லாம் இதைச் சகித்துக் கொண்டு இயல்பு வாழ்க்கையைத் தொடரவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், இன்றைய மருத்துவத்தில் இதற்குத் தேவையான மருந்துகள் வந்தாகிவிட்டது.

*

மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில், அவதிகள் காரணமாக பெண்கள் தங்கள் வேலைக்கோ, குடும்ப உறவுகளிலோ எந்தவித இடையூறுகளும் வராமல் ஜாலியாகச் சமாளிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

*

மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு, பெரும்பாலான பெண்கள் மார்பகங்களில் கனமான உணர்வு அல்லது மார்பக வலி இருப்பதை அனுபவித்திருப்பார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாவதுதான்.

*

செல் அணுக்களில் நீர் தேங்கலால், உடலில் வெயிட் போட்டு விட்டது போல கனமான உணர்வு தோன்றுகிறது. தலைவலி சர்வ சாதாரணமாகப் பலருக்கும் இருக்கும்.

*

இளம் பெண்களின் ஒற்றைத் தலைவலிக்குக் காரணம், இந்த ஹார்மோனல் இம்பேலன்ஸ் தான். மேலும் பீரியட்ஸ் சமயத்தின் சில நாட்களுக்கு முன்பு முகப்பருக்கள் வரத் தொடங்கும்.

*

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், என்ட்ரோஜன் ஹார்மோன் அளவை மாற்றி, முகப்பருக்களைப் பருக்க வைத்துவிடும். உடலில் ஏற்படும் இந்தப் பிரச்னைகளின் பிரதிபலிப்பு உடல் சோர்வையும், மனப்பிரச்னைகளையும் கொடுக்கும்.

*

காரணமில்லாமல் எரிந்து விழுதல், அமைதியின்மை, மனக்கவலை, திடீரென்று அழுதல் என்று ஒரு கட்டுப்பாடு இல்லாமல் தங்கள் உணர்ச்சிகளை மற்றவர்களிடம் பிரதிபலிப்பார்கள்...

*

வீட்டில் உள்ளவர்களும், கணவர்களும் இந்த நேரத்தில் அவர்களைப் புரிந்து கொண்டு அன்பாக நடந்து கொள்வதே அவர்களுக்குச்செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

*

பெண்களின் இந்தப் பிரச்னையைப் புரிந்து கொள்ளாமல், அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சண்டை போட்டால், அவர்களுடைய உடல்நலம் தேவையில்லாமல் பாதிக்கப்பட்டு விடும்.
மாதவிலக்கு ஏற்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு அடிவயிற்றிலும், பக்கவாட்டிலும் சற்று கனமான உணர்வு, சூடு தெரியும்.
*

இதை வைத்தே தீட்டு ஏற்பட இருக்கிறது என்பதைப் பெரும்பாலும் எல்லாப் பெண்களும் அறிந்திருப்பார்கள். இதற்குக் காரணம் கருப்பையிலும், கரு முட்டையிலும் ஏற்படும் அதிக இரத்த ஓட்டம்தான். சிலருக்கு வயிற்று வலி படாய்ப்படுத்தும்.
*

திடீரென்று ஏற்படும் வயிற்றுவலி, சிலரை மயக்கமடையக் கூடச் செய்துவிடும். வலியால் சுருண்டு விடுவார்கள். நாக்கு வறண்டு போதல், வியர்வை, தலைசுற்றல் கூட இருக்கலாம்.


*

மாதவிலக்கு ஏற்பட்டவுடன் வலி படிப்படியாகக் குறையலாம். கையால் பிசைவது போல வலி இருந்தால் அது கருப்பை அதிகமாக சுருங்கி விரிவதால்தான் இருக்கும்.
*

கருப்பையின் உட்சுவர் சீராகச் சிதையாமல், தாறுமாறாகச் சிதைவதால் சிலருக்கு வலியை ஏற்படுத்தலாம். தாங்கமுடியாத வலி இருந்தால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனையின்படி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.
*

ஒரு சில பெண்களுக்கு கருப்பையில் கட்டிகள், கரு முட்டைப் பையில் நீர்க்கட்டிகள் போன்றவை இருந்தால் கொஞ்சம் சீரியஸ் கவனம் தேவை.
*

கருப்பையின் உட்சுவர் திசுக்கள் கருப்பையினுள் வளர்வதுண்டு. அதேபோல, சினைக்குழாய், சினை முட்டைப்பை, வயிற்றுப் பகுதி போன்ற பகுதிகளாக வளர்ந்து எண்டோமிட்ரியோஸிஸ் எனப்படும் தொந்தரவுகளுக்கு ஆளாகலாம்.
*

எண்டோ மிட்ரியோஸிஸ் தீவிரமடைந்து சிறு குடலைப் பாதிக்கும்போது தான் மாதவிடாயின் போது வாந்தி, பேதி ஏற்பட்டுவிடுகிறது.
*

எனவே, மாதவிடாயின் போது இதுபோன்ற தீவிர பிரச்சினைகள் இருந்தால், அதைத் தள்ளிப் போடக் கூடாது. இதனால்கூட மாதவிடாயின் போது தீராத வலி ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சைகள் அவசியம்!
*

பொதுவாகத் தீட்டுக் கோளாறுகள் என்று நீங்கள் மருத்துவரை அணுகினால் அவர் ஹார்மோனல், இம்பாலன்ஸ் என்று தான் குறிப்பிடுவார்.
*

இந்த ஹார்மோனல் இம்பாலன்ஸ் என்பது, ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறையினைக் குறிக்கிறது.
*

இந்த ஹார்மோன்களின் செயல்பாட்டை, மூளையின் அடிபாகத்தில் உள்ள பிட்யூட்டரி எனப்படும் சுரப்பி கட்டுப்படுத்துகிறது.
*

அதுமட்டுமல்ல, இந்த பிட்யூட்டரி சுரப்பியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஹைம்போதலாமஸ் எனப்படும் மூளையின் ஒரு பகுதி, இந்தப் பகுதி, உடலின் தேவையை அறிந்து அவ்வப்போது பிட்யூட்டரிக்கு கட்டளையிட்டுக் கட்டுப்படுத்தும்!
*

சாதாரணமாக ஏற்படும் மன பயம், அதிர்ச்சி போன்றவை மாதவிலக்கால் சற்று மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாக இருப்பது, இந்த ஹைபோதலாமஸ் எனும் பகுதி தான்!
*

பொதுவாக, தீட்டுக் கோளாறுகளுக்கு மருத்துவர் அளிக்கும் பரிசோதனைச் சீட்டுகளைப் பாருங்கள், இந்த ஹார்மோன்களின் நிர்ணயப் பரிசோதனையாகத்தான் இருக்கும்.
*

பொதுவாக, மாதவிடாய் ஏற்படவும், முட்டை நல்ல ஆரோக்யமாக வெளிவர... சினைமுட்டைப்பை, பிட்யூட்டரி, ஹைப்போதலாமஸ் மற்றும் கருப்பை போன்றவற்றின் ஒத்துழைப்பு ஒன்றுக்கொன்று சீராக இருக்க வேண்டும்.
*

இதில் எந்த ஒரு உறுப்பில் கோளாறு ஏற்பட்டாலும் தீட்டுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
*

மாதவிலக்கின் முன்பு ஏற்படக்கூடிய இந்த அறிகுறிகளில் ஏற்படும் பிரச்னைகளை உட்கொள்ளும் உணவின் மூலமாகத் தீர்வுக் காணலாம்.***


உணவின் மூலமாகத் தீர்வுக் காணலாம்:

1. கொழுப்புச் சத்துள்ள உணவுகள் PMS (Pre menstrual syndome) அறிகுறிகளை அதிகப்படுத்தும். குறைவான கொழுப்புள்ள உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.
*

2. உப்பு அதிகம் சேர்ந்த ஊறுகாய், நொறுக்குத்தீனி வகைகளை ஒதுக்கிவிட வேண்டும்.
*

3. PMS இன்போது ஸ்வீட், ஐஸ்க்ரீம்களை ஒரு பிடி பிடித்தால் நன்றாக இருக்குமே என்றுபடும்.

*
4. சாக்லெட், சிப்ஸ் போன்றவற்றை ஒரு வெட்டு வெட்டத் தோன்றும். இருந்தாலும் இனிப்புக் குறைவாக உள்ள உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது.
*

5. மாதவிடாய் நாட்களுக்கு ஒரு வாரம் முன்பு, இருபது நிமிட வாக்கிங் பழகிக்கொண்டால் மனரீதியான பாதிப்புகளைக் குறைக்கலாம்.
*

6. காபி, டீ போன்ற பானங்களைத் தவிர்க்கலாம். தினமும் இரண்டு கப்பிற்கு மேல் காபி, டீ, குடிக்கும் பெண்கள் சாதாரணப் பெண்களைவிட ஏழு மடங்கு றிவிஷி ஆல் அவதிப்படுவார்கள் என்கிறார்கள், ஆராச்சியாளர்கள். காபியில் உள்ள காஃபின் பதற்றத்தையும் எரிச்சலையும் அதிகப்படுத்தும்.
*

7. 7_8 மணி நேரம் உறக்கம் கட்டாயம்.
*

8. இந்தச் சமயத்தில் வைட்டமின் ஏ,டி அவசியம். இவை அதிகம் உள்ள கேரட், பசளைக்கீரை, பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!
*

9. மார்பக வலி, களைப்பு போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற, வைட்டமின் பி6 உதவும். மீன், கோழி, வாழை, உருளை போன்றவை வைட்டமின் பி6 உள்ள உணவுகள்.
*

10. மனஅழுத்தம் நீங்க வைட்டமின் சி உள்ள ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை சேர்த்துக் கொள்ளுங்கள்!
*

இந்த உணவுப் பழக்கங்களை மாதவிடாயின் ஒரு வாரத்துக்கு முன்பும், மாதவிடாயின் போதும் கடைப்பிடித்தல் நல்லது!
றிவிஷி லிருந்து விடுபட குடும்பத்தாரின் சப்போர்ட் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம். இதுதான் அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்!

***


நன்றி - மருத்துவர் கீதா ஹரிப்பிரியா.
நன்றி - குமுதம் ஹெல்த்

இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்!


பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!

* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.


* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.


* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

* தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.


* சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.


* வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.


* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.


* குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.


* நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்­ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்


* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.


* வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.


* தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்­ரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.


* இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.


* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.


* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.


* கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.


* வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.


* பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.


* ஒரு பாத்திரத்தில் தண்­ர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.


* இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.


* காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 23 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.


* கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.


* தண்­ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.


* முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.


* உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் பெண்களின் ஆயுள் குறைய வாய்ப்பு

 
தினசரி 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் பெண்களின் ஆயுள் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களின் பெரும்பான்மையான வேலைகள் உட்கார்ந்த இடத்திலே செய்யும் அளவிற்கு முடங்கிவிட்டது. இவ்வாறாக வேலை செய்பவர்கள் எண்ணிக்கை உலக அளவில் பெருகி வருகிறது.
 
 
 
இது குறித்து, 1.23 லட்சம் பேரை கடந்த 14 ஆண்டுகளாக அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி விஞ் ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவர்களின் உடல் ஆரோக்கிய நிலைகளையும் கண்காணித்தனர். அதில், உட்கார்ந்த நிலையில் தொடர்ந்து 6 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்பவர்கள் மற்றும் எந்தவொரு உடற்பயிற்சியும் செய்யாதவர்களுக்கு இதய நோய், நீரிழிவு, நரம்பு தளர்ச்சி, உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


அவ்வாறாக தினசரி 3 மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் பெண்களைவிட, 6 மணி நேரத்துக்கு மேல் உட்காந்து இருக்கும் 40 சதவீதம் பெண்களின் ஆயுள் குறைய வாய்ப்புள்ளது. அதில் ஆண்களுக்கு 20 சதவீதம் வாய்ப்புள்ளது. உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வதால் இளம் வயதில் இறப்பதற்கான சூழல்கூட ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்


கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இதை ஃபாலோ செய்தால் ஆபத்தில்லாத பிரசவமும், ஆரோக்யமான குழந்தையும் நிச்சயம் என்கிறார் சென்னையில் மிகப் பிரபல கப்பேறு மருத்துவரான டாக்டர் அமுதா ஹரி!
*


திட்டமிட்டு கருத்தரியுங்கள்:


திருமணமானவுடன் உடனடியாக கருத்தரிப்பதை விரும்பாத தம்பதிகள் அதற்கேற்ப திட்டமிட்டு குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். கருத்தரித்தபின் அபார்ஷன் செய்து கொண்டால் அடுத்த குழந்தையின் ஆரோக்யமான வளர்ச்சிக்கும், தாயின் உடல் நிலைக்கும் பாதிப்புகள் ஏற்படுத்தக் கூடும்!


*

டாக்டர் ஆலோசனை இல்லாமல் நோ டேப்லெட் ப்ளீஸ்!


கர்ப்ப காலத்திற்குத் திட்டம் போடும் பொழுது கூட இரத்த உறவுகளில் திருமணம் செய்து கொண்டவரா, அவர்களது பரம்பரையில் யாருக்காவது பெரிய வியாதிகள் இருக்கிறதா? என்பதை எல்லாம் மருத்துவரிடம் சொல்லி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

*

கர்ப்பம் தரித்தவுடன், அல்லது மாதவிலக்கு 15 நாட்கள் தள்ளிப் போனவுடன் வேறு ஏதேனும் வியாதிகளுக்கு மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்றுத் தள்ளிப் போட வேண்டும். ஏற்கெனவே உடல் நலக்குறைவு இருந்து, அதற்கு ஃபோலிக் ஆஸிட் மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அதை நிறுத்தி விடலாம்!

*

கர்ப்பகாலத்தில் வேறு ஏதாவது உடல் நலக் குறைவு ஏற்பட்டால், மருத்துவருடைய ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக மாத்திரை மருந்துகளை வாங்கிச் சாப்பிடக் கூடாது.
கர்ப்ப காலத்தில் வரும் சுகருக்கு மாத்திரை போடக் கூடாது. சர்க்கரை நோய் மருத்துவரைப் பார்த்து உணவு மூலமே சரி செய்ய முயற்சிக்க வேண்டும். அப்படியும் சரியாகவில்லை என்றால் வாரம் ஒருமுறை, இருமுறை இரத்தப் பரிசோதனை செய்து இன்சுலின் போட்டுக் கொள்ளலாம்.

*

அப்படிச் செய்யாமல் இருந்தால் குழந்தை அதிக எடையுடன் பிறக்கும். பிறவிக் கோளாறுகளும் வரலாம். குழந்தைக்கு சர்க்கரை வியாதி வரவும் வாய்ப்பு உண்டு. ஏன் வயிற்றிலேயே குழந்தை இறக்கக் கூட வாய்ப்புகள் அதிகம்.

*

கர்ப்பிணிகளுக்கு இரத்தக் கொதிப்பு இருக்குமானால் ஸ்பெஷல் கவனம் தேவை. டாக்டர் அட்வைஸ்படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். உணவில் உப்பை அறவே தவிர்க்க வேண்டும். சாதாரணமாகக் கால்கள் வீங்கித் தானாகக் குறைந்து விடுமானால் பிராப்ளம் இல்லை. ஆனால் உடல் முழுதும் வீங்கி வந்தால் நிச்சயம் அது ஹை பி.பி. ஆக இருக்கும்.


***

 
 
என்னென்ன சாப்பிடலாம்?

கர்ப்பம் உறுதியானால் தலைசுற்றல், வாந்தி, லைட்டாக உதிரம் கூட வரலாம். காரம் மற்றும் எண்ணெய் அதிகம் இல்லாமல், 3 மணி நேரத்துக்கு ஒருமுறை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். ப்ரூட்ஸ், தண்ணீர் என நிறைய எடுத்துக் கொள்ளலாம். தேவையான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். வாந்தி அதிகமாக இருந்தால் மருத்துவர் ஆலோசனைப்படி விட்டமின் பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
இரத்த சோகை இருந்தால் டயட்டில் பீட்ரூட், கேரட், பேரீச்சை, ஆப்பிள், கீரை வகைகளைச் சாப்பிட வேண்டும்.

*

அதிகக் கொழுப்புள்ள உணவு வகைகள், ஃபாஸ்ட் ஃபுட், கோக் போன்ற உணவுகளைச் சாப்பிட்டு எடையை ஏற்றிக் கொள்ளக்கூடாது.


***

நீங்கள் செய்ய வேண்டிய ஸ்கேன் மற்றும் டெஸ்ட்கள்!


கர்ப்ப காலத்தை:

முதல் மூன்று மாதங்கள், இரண்டாவது மூன்று மாதங்கள், மூன்றாவது மூன்று மாதங்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

*

முதல் ஆறு மாதங்கள், மாதம் ஒரு முறையும், மீதி மூன்று மாதங்கள் மூன்று வாரத்துக்கு ஒரு முறையும் செக்கப்புக்குப் போக வேண்டும்.


*

முதல் மூன்று மாதங்களில் வாந்தி, எடை குறைதல், களைப்பு, தலைசுற்றல் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் இரத்தப் பரிசோதனை எந்தப் பிரிவு இரத்தம், பால்வினைத்தொற்று போன்ற நோய்கள் இருக்கிறதா, முக்கியமாக இரத்தம் நெகடிவ் குரூப்பா, இரத்த சோகை இருக்கிறதா என்பது போன்ற முக்கியமான பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும்.

***


கவனியுங்க கணவர்களே:


முதல் மூன்று மாதங்களுக்கு தாம்பத்ய உறவினைத் தவிர்க்கலாம் அல்லது மனைவியின் உடல் நிலையைப் பொறுத்து மிதமாக ஏற்படுத்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அபார்ஷன் ஆக நிறைய வாய்ப்புகள் இருக்கும்.

*

கர்ப்ப காலத்தில் பிரயாணங்கள் வேண்டாம்.

*

கர்ப்பத்தின் போது யோகா, உடற்பயிற்சிகள் செய்வது என்றால், வயிறு விரிந்து சுருங்கும் சில பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

*
முதலாவது, இரண்டாவது மாதத்தில் மூச்சுப்பயிற்சி மற்றும் பொருத்தமான உடற்பயிற்சிகளைத் தெரிந்து கொண்டு மனைவியுடன், கணவனும் சேர்ந்து செய்தால், இருவருக்கும் இடையில் நல்ல ஒரு புரிதலும், இன்வால்வ் மென்ட்டும் வரும்! நடைப் பயிற்சியும் நல்லது.

*
மூன்றாவது மாதத் துவக்கத்தில் முதல் ஸ்கேன் செய்து கருக் குழாயிலிருந்து கரு, கர்ப்பப்பைக்கு வந்து விட்டதா என்பதைப் பார்க்க வேண்டும்.

*

இரண்டாவது ஸ்கேன் இது குழந்தைக்கு நார்மலான, நல்ல இதயத் துடிப்பு இருக்கிறதா என்று பார்ப்பதும் அவசியம்.

*

மூன்றாவது ஸ்கேனை பதினாறிலிருந்து இருபது வாரத்திற்குள் எடுக்க வேண்டும். இது குழந்தையின் அங்க அவயங்கள் சரியாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்கு.

*

நான்கு, ஐந்து, ஆறாம் மாதங்களில் சர்க்கரையும், பி.பி.யும் உயர் இரத்த அழுத்தமும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். (இதற்கு முன் இல்லாமல் இருந்து இப்பொழுது இருந்தால் பயப்படத் தேவை இல்லை. குழந்தை பிறந்து ஆறு வாரங்களில் இது சரியாகி விடும்.)

*


குழந்தையின் அசைவு 7ம் மாதத்திலேயே தொடங்கிவிடும். அப்படித் தெரியவில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டும்.

*

வாரம் அரை கிலோ எடை ஏறுவதுதான் மெடிக்கலி ஆரோக்கியமான, சரியான விஷயம். பிரசவகாலத்தில் கடைசி மூன்று மாதங்களில்தான் சரியான எடைகூடும்.

*

கடைசி மூன்று மாதங்களில் நேராகப் படுக்கக்கூடாது. குழந்தையின் எடை கர்ப்பப்பையை அழுத்தி இரத்த ஓட்டத்தைத் தடுக்கும். இடது பக்கமாகத் திரும்பிப் படுக்க வேண்டும். எப்பொழுது எழுந்தாலும் ஒரு பக்கமாகத் திரும்பி எழ வேண்டும்.

*

டெலிவரி நேரத்தில் அல்லது 9வது மாதத்தில் சில நேரத்தில் வலி தோன்றும்... பிரசவ வலி என்றால் விட்டு விட்டு வந்து கொண்டே இருக்கும். போகப் போக வலி அதிகரிக்கும். சாதாரண வலி என்றால் வந்து விட்டுப் போய் விடும்.

*

எட்டு மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை வயிற்றுக்குள் அசைவு தெரியவில்லை என்றாலோ, வலி இல்லாமல் சிறுநீர் மாதிரி தண்ணீர் போய்க் கொண்டு இருந்தாலோ, சில சமயம் வலியுடன் நீர்போவதும் உணர்ந்தாலோ உடனே மருத்துவரைத் தேடிப்போகவேண்டும்.


***


35 வயதுக்கு மேல் முதல் கர்ப்பமா?


35 வயதுக்கு மேல் முதல் கர்ப்பம் தரிக்கும் பெண்களை ஸ்பெஷல் கவனம் கொடுத்து தனியாக பரிசோதனைகள் மற்றும் ட்ரீட்மெண்ட்கள் தர வேண்டும்.

*

வலித்துத்தான் பிரசவம் ஆகும். ஆகவே வலி பொறுத்துத்தான் ஆகவேண்டும். மருத்துவருடன் ஒத்துழைத்தால் நார்மலாகப் பிரசவம் ஆகும். சிசேரியனைத் தவிர்க்கலாம்.

*

ஏதோ ஒரு சிக்கலான காரணத்துக்காக தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சிசேரியனுக்கு அட்வைஸ் செய்தால், அது தாய் சேய் நலத்திற்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். பயப்படக்கூடாது.

*

கர்ப்பமான நேரத்தில் தாய் அமைதியான மனதுடன், தெளிவான எண்ணங்களுடன் மனசுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தினால் தாய்மை ஒரு இனிய அனுபவம் ஆக இருக்கும்!

***

நன்றி கூடல் தளம்.

***


"வாழ்க வளமுடன்"

தாய்பால் இப்படித்தான் தயாராகிறது…!

 
தாய்பாலின் மகத்துவத்தை பற்றிக் கூற வேண்டியதில்லை. பிறந்த குழந்தைக்கு இயற்கையான உணவு, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புக் கவசம் அது. மார்பகங்களின் அமைப்பு எப்படி இருக்கும்? தாய்பால் எப்படி தயாராகும் என்பதை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர்

* தாய்பால் கொடுக்கும் ஒரு தாய்க்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை பால் சுரக்கிறது.


* குழந்தை பாலை உறிஞ்சும்போது பிட்யூட்டரி சுரப்பி, `ஆக்சிடோசின்’, `புரோலாக்டின்’ ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது, பால் உற்பத்தியைத் தூண்டுகிறது.


* ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை கிரகிப்பதற்கு பால் சுரபிகளை `புரோலாக்டின்’ தூண்டு கிறது. அந்த குளுக்கோஸானது லாக்டோஸாகவும் மற்ற சர்க்கரை களாகவும் மாற்றபடுகிறது. கால்சியம், அமினோ அமிலங்கள், புரதங்கள், கொழுப்பு ஆகியவையும் பெறப்படுகின்றன.


* பால் சுரபிகள் சுருங்கி, பால் நாளங் களுக்குள் பாலைச் செலுத்துவதை `ஆக்சிடோசின்’ தூண்டுகிறது.


* ஆரம்பத்தில் சுரக்கும் பால் அடர்த்தி குறைவானது. குழந்தையின் தாகத்தைத் தணிக்கிறது.


* பல நிமிடங்கள் கழித்துச் சுரக்கும் `சீம் பால்’, அடர்த்தியானது. அதிக கொழுப்பு உள்ள அது பசியை போக்குகிறது. ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் ஆண்கள் தங்களின் மார்பகக் காம்புகளுக்கு பின்னே வேலை செய்யாத மார்பகத் திசுக் களைக் கொண்டிருக்கின்றனர். அதாவது, வளர்ச்சி அடையாத பால் நாளங்கள், கொழுப்பு மற்றும் இணைப்புத் திசு. ஆண்களில் 1000 பேரில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அபாயக் காரணிகளில், பாரம்பரியம், கதிரியக்கதுக்கு உள்ளாகும் வாய்ப்பு போன்றவை அடங்கும். முழுமையான உணவு


* குழந்தைக்கு மிகவும் ஜீரணமாகக் கூடிய, கிரகித்துக்கொள்ளக் கூடிய விதத்தில் உள்ள தாய்பால், குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. குழந்தைக்கு 6 மாதங்கள் வரை கட்டாயமாக பால் கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.


* மஞ்சள் புரதம் செறிந்த பால், குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு சுரக்கிறது. அது குழந்தையின் உணவுக் குழலைச் சுத்தம் செய்கிறது, எதிர்உயிரிகளைக் கொண்டிருக்கிறது. குழந்தைக்கு இந்த பாலைக் கொடுப்பது அவசியம்.


* தாய்பால் கொடுப்பது, கர்ப பை மீண்டும் தனது உண்மையான அளவுக்கு சுருங்க உதவுகிறது, எடை இழப்பை ஊக்குவிக்கிறது. சிறுவர்களும், சிறுமிகளும்… சிறுவர், சிறுமியர் இருவருக்குமே மார்புக் காம்புக்கு பின் பால் நாளங்கள் இருக்கின்றன. சிறுமிகள் வயதுக்கு வரும்போது `ஈஸ்ட்ரோஜென்’னும் மற்ற ஹார் மோன்களும் பால் நாளங்களை வளரச் செய்கின்றன. கொழுப்பையும், இணைப்புத் திசுக்களையும் அதிகரிக்கச் செய்கின்றன. சிறுவர்களிடம் `டெஸ்ட்டோஸ்டிரான்’ அந்த வளர்ச்சியைத் தடுக்கிறது. இரு மார்புகளும் ஒரே அளவல்ல…!


சிகரெட்டின் நிகோட்டின், ஆல்கஹால் மற்றும் பல மருந்துகள் தாய்பால் வழியாகக் குழந்தைக்குச் செல்லக்கூடும். தீங்குகளையும் ஏற்படுத்தக்கூடும். தாய்பாலானது பசுவின் பாலை விட இனிமையானது, அடர்த்தி குறைந்தது. பெண் கடவுள் ஹேராவின் மார்பகத்தில் இருந்து உதிர்ந்த பால் துளிகளால் `பால் வீதி மண்டலம்’ உருவானதாக பண்டைய கிரேக்கர்கள் கருதி அப்பெயரைச் சூட்டினர்.


பெண்களின் இடது மார்பகம், வலது மார்பகத்தை விடச் சற்று பெரிதானது. மார்பகத்தை அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்குவது `மாஸ்டெக்டோமி’ எனபடுகிறது.மார்பக பிரச்சினைகள்சிஸ்ட்கள் – மார்பகத்தில் உருவாகும் நீர் நிறைந்த கட்டிகள்.


பைரோடினோமா – இழையும், உருளையுமான திசுக்களால் உருவான உறுதியான கட்டிகள்.


காலக்டோரியா – அளவுக்கு அதிகமான தாய்பால் உற்பத்தி.


கைனகோமேஸ்டியா – ஆண்களுக்கு மார்பகம் பெரிதாவது.


மஸ்டிடிஸ் – பால் நாளங்களில் அடைப்பு ஏற்படுவது.


மாஸ்டால்ஜியா – மாதவிலக்குக்கு முன் வலி அல்லதுதொளதொள தன்மை காணப்படுவது.


மார்புக் காம்பு பேசட்ஸ் வியாதி – மார்புக் காம்பில் ஒருவித சுரப்புடன் தெரியும் புற்றுநோய் அறிகுறி.


மார்பக புற்றுநோய் – பால் நாளங்கள், சுரபிகள் உள்ளிட்ட மார்பகத் திசுக்களில் உருவாகும் புற்றுநோய்.

முருங்கைப் பூவின் மருத்துவ குணங்கள் !!!

பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூக்களின் பயன்களைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் முருங்கைப் பூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்வோம்.

முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர்.

முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.

முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.

இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.

இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.

முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.


முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.

விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்

அழிவிந் துவும்புஷ்டி யாகும் - எழிலார்

ஒருங்கையக லாககற் புடைவா ணகையே

முருங்கையின் பூவை மொழி

- அகத்தியர் குணபாடம்

வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.


***

கண்களைப் பாதுகாக்க

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.


***


ஞாபக சக்தியைத் தூண்ட

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.

இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.

முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.


***


பித்தம் குறைய
மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.


***

நரம்புத் தளர்ச்சி நீங்க
அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.

முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

***

நீரிழிவு நோயாளிக்கு
கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.

நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று

நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.


***


பெண்களுக்கு

சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.


***

தாது புஷ்டிக்கு
ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.

இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.***


கண்களை பாதுகாக்கும் முருங்கைப் பூ:


பொதுவாக காய்களையும், கனிகளையும் உட்கொள்ளும் நாம் காய், கனி உருவாவதற்கு காரணமான பூக்களை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. அப்படி நாம் ஒதுக்கிவிட்ட பூக்களுக்கு பல மருத்துவக் குணங்கள் உள்ளன.

முருங்கைப் பூவைப் பயன்படுத்தினால் கண்கள் குளிர்ச்சி பெறும். உடல் உறுப்புகள் சீரான முறையில் வளர்ச்சியடையும். அதிகமான பித்தத்தை போக்கும்.

வாழைப் பூ கை, கால் எரிச்சல், இருமல், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவற்றை நிவர்த்தி செய்யும். மாதுளம் பூ பித்த வாந்தியை நிறுத்தும் தன்மை கொண்டது. இரத்த மூலம், உடல் வெப்பம் ஆகியவற்றைச் சீர் செய்யும்.

இது தவிர மாதுளம் பழத்தோல் சீதபேதி, வாய்ப்புண், இரத்த பேதி போன்றவற்றிற்கு மருந்தாகும். அகத்திப் பூ வெயில் காரணமாக ஏற்படும் பித்தத்தை அகற்றும். உடல் அழற்சியை விலக்கும்.

வேப்பம் பூ நீடித்த ஏப்பம், வாந்தி, குடற்பூச்சிகள் ஆகியவற்றை அகற்றும். புளியம் பூவைச் சமையலுக்குப் பயன்படுத்தினால் பித்தம் அகலும். நாவின் சுவையின்மை நீங்கும். வெங்காயப் பூ குன்ம நோய்களை போக்கும் மற்றும் குடல் தொடர்பான பல பிணிகளை நீக்கும்


***

மேலும் இப்பூவின் சில மருத்துவ குணங்கள் :

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது.

முருங்கை பூவை பாலில் வேகவைத்து- பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும் .

முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி பொடியாக்க காலையில் கஷாயம்-செய்து அதனுடன் பனைவெல்லத்தை கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும் , நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.

முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும் , கண் பார்வை குறைபாடு நீங்கும்.

கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும்.

"ஞாபக மறதி நோய்" மிக கொடிய நோயாகும் .இந்த ஞாபக மறதி நோயைப் போக்கி நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தி முருங்கை பூவிற்கு உண்டு.


முருங்கைப்பூவை நன்றாக அரைத்து பாலில்-கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்க்கண்டை சேர்த்து காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் நமது நினைவாற்றல் அதிகரிக்கும்.

முருங்கை பூவை நிழலில் உலரவைத்து பொடியாக்கி தினமும் கஷாயம் செய்து காலை மாலை என்று இரண்டு வேலையும் அருந்தி வந்தால் உடலில் இருக்கும் பித்தம் குறைந்து, உடலின் அசதி நீங்கி உடல் நிலை சீரடையும் .

முருங்கை பூவை நன்றாக அரைத்து பசும் பாலில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டை கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். நீர்த்துப்போன விந்து கெட்டியாகும்

கர்ப்பிணிகள் செய்யக்கூடாதவை சில விஷயங்கள் !!!

 


கர்ப்பிணிகள் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும், இதை செய் இதை செய்யாதே என்ற பெரியவர்கள் பலரும் அறிவுரை கூறுவார்கள்.

அதில் சில மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாக அமையும். அதாவது அதிக எடை கொண்ட பொருட்களை தூக்கக் கூடாது, மல்லாக்காக படுக்கக் கூடாது, உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் பொருட்களை உண்ணக் கூடாது போன்றவை.

இதை எல்லாம் பெரும்பாலும் கர்ப்பிணிகள் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் உள்ளது.

முதலில் உணவு வகைகளில் சாப்பிடக் கூடாதவைப் பற்றிப் பார்ப்போம்.

அதாவது வேக வைக்காத, அரை வேக்காட்டுப் பொருட்களை கர்ப்பிணிகள் உண்ண வேண்டாம். ஏனென்றால் நன்கு வேக வைத்த பொருட்களில் அழிக்கப்படும் கிருமிகள், வேக வைக்கப்படாத பொருட்களில் அழிவதில்லை.


மேலும், அன்றைய தினம் சமைத்த உணவுப் பொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும். அழுகிய, கொஞ்சம் கெட்டுப்போன காய்கறி, பழங்களை நறுக்கிவிட்டு நல்ல பாகத்தை சாப்பிடும் பழக்கம் அறவே வேண்டாம்.


இதேப்போல் அதிக குளிர்ச்சி, அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும் பொருட்களை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள். பழச்சாறுகளை அதிகமாகக் குடிக்க வேண்டாம். ஏனெனில் அதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையற்ற சர்க்கரை சேர்வதால் நீரிழிவு ஏற்படலாம்.

‌மிகவு‌ம் சூடான பொருட்களை சாப்பிட வேண்டாம். இது கர்ப்பத்தின் போதும், குழந்தை பிறந்த பிறகும் கடைபிடிக்கலாம்.

உடலுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும் செயல்களை செய்யக் கூடாது. குணிந்து எடை அதிகம் கொண்ட பொருட்களை தூக்குவது, இடுப்பில் வைப்பது, எட்டாத பொருளை எட்டி எடுப்பது, குதிப்பது, வேகமாக நட‌ப்பது, வாகனம் ஓட்டுவது, நீண்ட தூரப் பயணம் செல்வது, அதிகமான எடையை தூக்கிக் கொண்டு படி ஏறுதல் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.

மல்லாக்காகப் படுப்பது கூடாது என்பார்கள். ஏனெனில் குழந்தையின் எடை உங்களது ரத்தக்குழாய்களை அழுத்துவதால் உங்களுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படும். உங்கள் மூச்சுக் காற்றின் அளவு குறையும்போது அது குழந்தையின் உடலையும் தாக்கும். எனவேதான் மல்லாக்காகப் படுக்கக் கூடாது என்கிறார்கள்.

உடலுக்கு இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்திற்கு என்று தளர்த்தியான ஆடைகளை வாங்கி அணியவும். கர்ப்ப காலத்தில் உள்ளாடைகளின் அளவுகளிலும் மாற்றம் ஏற்படும். எனவே அதற்கேற்ற உள்ளாடைகளைத் தேர்வு செய்யவும்.

முகத்திற்கோ, தலைக்கோ, உடலுக்கோ எந்த வித புதிய க்ரீம்களையும் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் எப்போதும் பயன்படுத்தி வந்த பொருட்களையும் அளவோடு பயன்படுத்துங்கள்.

சாதாரண காய்ச்சல், பேதி போன்ற எந்த நோய்க்கும் மருந்துக் கடைக்காரரிடம் சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது. உங்களது மகப்பேறு மருத்துவரிடம்தான் செல்ல வேண்டும்.


அப்படி இல்லாமல் அவசரத்திற்கு சாதாரண் மருத்துவரிடம் செல்ல வேண்டி இருந்தால் நீங்கள் கர்ப்பமுற்று இருப்பதை முதலில் தெரிவித்துவிட வேண்டும்.

ரத்தப் போக்கு, நீர்க்கசிவு, வயிற்றின் இரு புறத்திலும் லேசான வலி, மலச்சிக்கல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அஜீரணம் போன்றவற்றை உங்களது மகப்பேறு மருத்துவரிடம் சொல்லி உரிய மருத்துவம் பெறுவது அவசியம். இதில் எதையும் அலட்சியப்படுத்தக் கூடாது.

உங்களது கர்ப்பத்தில் ஏதேனும் சிக்கலோ அல்லது உறுதித்தன்மை குறைவோ இருந்தால் உடலுறவை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

விரதம் இருப்பதோ, மிகவும் இருளான அல்லது கரடுமுரடான இடத்திற்கு செல்வதோ, ஓடுவதோ, கூட்டத்தில் செல்வதோ தவிர்த்தல் வேண்டும்.

மிகவும் குளிர்ந்த மற்றும் மிகவும் சூடான தண்ணீரில் குளிக்க வேண்டாம்.


அதிகமான கவலை மற்றும் மன அழுத்தம் பிறக்கும் குழந்தையின் மனநிலையை பாதிக்கும். எனவே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள் அவ்வாறு இல்லாவிட்டாலும் மனதில் கண்டதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமலாவது இருக்க முயற்சி செய்யுங்கள்.

நீண்ட பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் போகக் கூடாது. பேருந்தை தவிர்த்துவிட்டு ரயிலில் செல்லலாம்.

சாதாரண எக்ஸ்-ரே எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதிகமான அலைச்சல், அதிகமான மன, உடல் அழுத்தம் போன்றவையும் தவிர்த்தல் நலம்.

மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அதிக உயரம் கொண்ட குதிகால் செருப்புகள், காற்றுப்புகாத ஆடைகள், அதிக வாசனை திரவியங்கள் வேண்டாம்.