வியாழன், 31 மே, 2012

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் மற்றும் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகளை தெரிந்து கொள்ளவும்.


தவிர்க்க வேண்டியவை:

. சர்க்கரை, தேன், வெல்லம், குளுக்கோஸ், எலக்ட்ரால் சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் முதலிய இனிப்பு வகைகளையும் பேரீச்சை, காய்ந்த திராட்சை, போன்ற உலர்ந்த பழங்களையும் தவிர்க்கவும்.

. கேழ்வரகு, கம்பு, கோதுமை, பார்லி, அரிசி முதலியவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட கஞ்சி, களி மற்றும் கூழ் வகைகள்.

. மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், சப்போட்டா, சீதாப்பழம், திராட்சை.

. பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள் அறவே கூடாது.

. தேங்காய், வேர்க்கடலை, பாதாம், முந்திரி, பிஸ்தா, முதலிய பருப்பு வகைகள்.

. அசைவ உணவு வகையில் ஈரல், ஆட்டுக்கால் பாயா, மூளை, கொழுப்பு முதலியன.

. பீர் குடிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும், மதுபான வகைகளை உட்கொள்வது உடல் நலத்திற்குக் கெடுதல் உண்டாக்கும்.

. நெய், டால்டா, வெண்ணெய், பாம் எண்ணெய், கடலை எண்ணெய் முதலியவைகளைத் தவிர்க்கவும்.

. ஹார்லிக்ஸ், போன்விட்டா, காம்ப்ளான், வீவா, மால்டோவா முதலிய பானங்கள்.

தவிர்க்க வேண்டிய காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள்

உருளைக்கிழங்கு, கருணை, சேனை, சேப்பங்கிழங்கு, வாழைக்காய், பலாக்கொட்டை, பீட்ரூட், டபுள் பீன்ஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ஆல்வள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு.

சேர்க்க வேண்டிய காய்கறி வகைகள்:

பீன்ஸ், கோஸ், தக்காளி, முள்ளங்கி, முருங்கைக்காய், புடலங்காய், கோவக்கா, பாகற்காய், பூசணிக்காய், சௌ சௌ, வெள்ளரிக்காய், காலிபிளவர், வாழைத்தண்டு, வெண்டைக்காய், காராமணி நூக்கல், சுரைக்காய், டர்னிப், அவரைக்காய் பீர்க்கங்காய், வெங்காயம், பூண்டு முதலியன.

பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் தைராய்டு
பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் நோய்களில் தைராய்டும் ஒன்று. இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை அயோடின் குறைவே இதற்குக் காரணம்.கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள்
உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது.

தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம், குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள்  கூறுகின்றனர்.

இன்றுள்ள சூழ்நிலைக்கு 100 க்கு 90 பேருக்கு தைராய்டு பிரச்சினை உள்ளது. உடல் வெயிட் போடுகிறது என்று தெரிந்தவுடன் முதலில் தைராய்டு டெஸ்டு எடுத்து பார்த்துவிட்டு தைராய்டு இல்லையென்றால் வெயிட் குறைவதற்கு எந்த சிகிச்சை நல்லது? என்று தேர்வு செய்து வெயிட்டை குறைப்பது நல்லது. தைராய்டு டி.எஸ்.எச் அளவு அதிகமாக உள்ளது என்று தெரிந்தவுடன் தைராய்டு குறைய ட்ரீட்மெண்ட எடுக்க வேண்டும். டி.எஸ்.எச் அளவு ரத்தத்தில் அதிகமானால் ஹை தைராய்டு (அதிகமான தைராய்டு), கம்மியானால் லோ தைராய்டு உடலில் அயோடின் சத்து குறைந்தால் வீக்கம் வேறு வந்து விடும். சில சமயம் சிறு, சிறு கட்டிகள் தோன்றி கேன்சரா என்று பயம் ஏற்படும். கட்டிகள் என்ன என்பதை ஸ்கேன் மூலம் பார்த்து தெரிவுப்படுத்திக் கொள்ளலாம்.
தைராய்டு சுரப்பி குறைவாக இருந்தால் ஆரம்பத்தில் தெரிந்தோ, தெரியாமல் இருக்கும். முதல் மாற்றம் மாதவிலக்கில் மாற்றம் ஏற்படலாம். (அதிகமாக அல்லது குறைவாக) உடல் பருமன் அதிகமாகி விடும்.

இளம் பெண்களுக்கு கருமுட்டையில் நீர் கட்டிகள் (பாலி சிஸ்டிக் ஓவரியன் டிஸஸ்) இருக்கலாம். சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கும். டெலிவரிக்கு பிறகு உடல் குண்டாவது முகம் பருமனாகிவிடும். கைகளில் வீக்கம், கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படும். அதிக களைப்பு, குளிர்ச்சியை தாங்க முடியாமல் தோன்றும். கை, கால்கள் உளைச்சல், மூட்டுவலி, ஞாபக மறதி, மனச்சோர்வு அதிகமாகும். சிலருக்கு குரல் மாறும். எச்சில் முழுங்கும் போது வலி ஏற்படும். சருமம் வறண்டு பொலிவு இழந்து காணப்படும். மற்ற நாளமில்லா சுரப்பிகளும் வேலை செய்யாமல் முடி வளர்ச்சி இல்லாமல் முடி கொத்து கொத்தாக கொட்டி சிலருக்கு வழுக்கையே வந்து விடும். கரு முட்டைகள் சரியாக வளர்ச்சியில்லாமல் உடல் பருமன் காரணமாக குழந்தை பிறப்பை தடுத்து விடும்.

டென்ஷன் காரணமாய் தைராய்டு பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு. ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பதோடு, உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

தைராய்டு சுரப்பி, அதிகமாக சுரந்தாலும், கழுத்து வீக்கம், உடல் சூடு, படபடப்பு, வியர்வை அதிகமாகும். நாக்கு வறண்டு, குமட்டல், வாந்தி கூட வரும். சிலருக்கு குறை பிரசவம், கருச்சிதைவு போன்றவை உண்டாகும். சிலருக்கு கண்கள் பெரிதாக வெளியில் விழும் மாதிரி தோன்றும். பார்வை மங்கும். இந்த தைராய்டு பிரச்சினைக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்று பலர் நினைத்து கொள்கிறார்கள். இல்லவே இல்லை. சித்தா மருந்திலிருந்து 3லிருந்து 6மாதம் வரை அவரவர் அளவுக்கேற்ப மருந்து எடுத்துக் கொண்டால் மேல் சொன்ன வியாதிகளை அனைவரும் தவிர்க்கலாம்.

சத்துபவுடர்:

தனியா 100 கிராம், எள் 50 கிராம், மிளகு 10 கிராம், மிளகாய் 10, கறிவேப்பிலை போன்ற சாமான்களை வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். உப்பும் சேர்த்துக் கொள்ளவும். தினமும் 1 பிடி சாதத்தில் 1 ஸ்பூன், நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடவும். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளவும். தினமும் சாப்பிட்டு வந்தால் பசி மற்றும் பித்த மயக்கம், தலை சுற்றல், வாந்தி, ருசியின்மை குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு கல்லீரல் பிரச்சினை நீக்கி பலப்படுத்துவது உறுதி.

மழைக் கால உணவுகள் 

மழை காலங்களில் சிறந்த உணவு எது என்று பலருக்கு தெரியாமல் இருக்கும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று குழப்பமாக இருக்கும். சிலருக்கு ஒத்துக்கொள்ளும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

இதை தீர்க்க சில உணவு குறிப்புகள் இதோ

1. மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு நிலவேஷ்பு கஷாயம் தான் மிகச்சிறந்த மருந்து. நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது.

இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீ­ர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.

2. மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

3. பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக் கூடாது. ஆனால் மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.

4. நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

5. மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.

6. இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.

7. நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழை சீசனில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்.

7. கண்டிப்பாக மழைக் காலத்தில் நம் உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.

8. மழைக் காலங்களில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரைத் துகள்களை போட்டு வைக்கவும்.

9. மழைக் காலங்களில் பழங்களைச் சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக ஏற்படாது. ஆனாலும் பழத்தை அப்படியே துண்டுகளாக வெட்டிச் சாப்பிட விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம். எல்லா சீசனுக்கும் பொருத்தமானது வாழைப்பழம். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக, மற்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.

10. சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும், விட்டமின் 'சி' சத்து ஒத்துப் போகும். சிலருக்கு மழைக்காலம் வந்து விட்டாலே ஒத்துக் கொள்ளாது. எலுமிச்சம், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது. ஆனால், ஒத்துக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.

11. சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நல்லது.

12. மழைக் காலங்களில் கீரைகள் அதிகம் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் கீரைகளை நன்றாக தண்ணீ­ரில் கழுவி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கீரைகளால் புதுசாக நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

13. மழைக் காலங்களில் எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு தண்­ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக் கொள்ளாது. அத்தகையவர்கள் அவர்களுக்கு ஏற்ற காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம்.

14. அசைவ உணவாக மீன், முட்டை, கறி, சிக்கன் என்று சாப்பிடலாம் ஆனால் அவை பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மழைக் காலங்களில் கடைகளுக்குப் போய் வாங்குபவர்கள் குறைவு. அதனால் மீன் போன்றவை பழைய ஸ்டாக் இருக்க வாய்ப்பு உண்டு.

15. மழைக் காலங்களில் எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது பஜ்ஜி, போண்டா என சாப்பிடாமல், அதற்கு பதிலாக உப்புமா உருண்டை, இட்லி சாம்பார், பிரட் டோஸ்ட் என சாப்பிடலாம். நாம் தினமும் சாப்பிடும் உணவையே சற்று சூடாகச் சாப்பிட்டால் போதும்

கேரளா நண்டு குழம்புதேவையான பொருட்கள்:

நண்டு - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி- 100
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
பச்ச மிளகாய் - 2
மஞ்சள்த்தூள் - 1/2 ஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் - 3ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் -1/2ஸ்பூன்
பட்டை -1
கிராம்பு -1
ஏலக்காய் - 1
தயிர் - 1/2கப்
கறிவேப்பிலை
அரைத்த தேங்காய் விழுது - 3ஸ்பூன் அல்லது தேங்காய் பால் -1/2 கப்
உப்பு - தேவைக்கு
தேங்காய் எண்ணெய் - தேவைக்கு


முதலில் நண்டை சுத்தமாக அலசி வைக்கவும். அதில் மிளாய்த்தூள்,மஞ்சள்த்தூள்,தனியாத்தூள், சீரகத்தூள்,பெருஞ்சிரகத்தூள், சிறிது தயிர், சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு போட்டு விரவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
காடாயில் நன்றாக எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கிராம்பு,பட்டை,ஏலக்காய் போட்டு தாளிக்கவும் பிறகு வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும் அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட், பச்சமிளகாய், கறிவேப்பிலை, தக்களி சேர்த்து நன்றாக வதக்கவும்

பிறகு விரவி வைத்த நண்டு கலவையினை சேர்த்து வதக்கவும். அதில் அரைத்த தேங்காய் விழுதினை சிறிது தண்ணீர் சேர்த்து இதில் சேர்க்கவும். தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். விருப்பபட்டால் மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

நண்டு வறுவல்


 

தேவையான பொருள்கள்:

வெங்காயம் - 3
தக்காளி - 3
இஞ்சி, பூண்டு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2

  

செய்முறை:

நண்டை கால்கள் தனியாகவும், உடல் பாகம் தனியாகவும் எடுத்து விட்டு
சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.

ஒரு வெங்காயம் மிளகு, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து
கொள்ளவேண்டும்.

எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போடவும்.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது போடவும்.

வதங்கியதும் தக்காளி மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், அரைத்து
வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு வதக்கி நண்டுகளை போட்டு மசாலா
கலந்து வரும்படி கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.

நண்டு வெந்து கிரேவியாக வரும் போது இறக்கவும்..

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா?


எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.


 பெட்ரோல் வணிகத்தில் வெப்பஅளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.


 அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும்போதுதான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்

திங்கள், 28 மே, 2012

பழங்களின் சூப்பர் ஸ்டார் "கொய்யா"!

நம்மில் பலருக்கு சந்தையில் விலை அதிகம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில்தான் அதிக சத்து உள்ளதாகவும், அதுதான் உடலுக்கு நல்லது என்பதுபோன்றும் ஒரு பொது புத்தி உள்ளது. 

அவ்வளவு ஏன்...? உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை பார்க்க செல்பவர்கள் கூட,"ஏதாவது ஆப்பிள், ஆரஞ்சு வாங்கிச் செல்லலாமா?" என்றுதான் கேட்பார்கள். அந்த அளவுக்கு ஆப்பிள்,ஆரஞ்சு போன்ற பழங்கள்தான் சிறந்தது என்ற எண்ணம் நம்மவர்களின் பொது புத்தியில் உறைந்துபோயுள்ளது. 

ஆனால் இதுமாதிரியான பிம்பத்தை அடித்து நொறுக்கி வீசியுள்ளது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

அநேகம்பேர் அவ்வளவாக சீண்டாத மற்றும் ஏழைகளின் பழமாக கருதப்படுகிற கொய்யா பழம்தான், அதிக 'ஆண்டாக்ஸிடென்ட்'(உடலில் செல்களை புதுப்பிக்கும் திறன்)கொண்ட, பழங்களின் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்வதாக தெரியவந்துள்ளது. 

இந்தியாவில் கிடைக்கும் பழங்களை வைத்துக்கொண்டு அண்மையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இந்த ஆய்வை மேற்கொண்டது. 

இமாச்சல் ஆப்பிள் மற்றும் மாதுளம்பழம்,தென்னிந்திய பகுதி வாழைப்பழம், மகாராஷ்ட்ரா திராட்சை மற்றும் இந்தியா முழுவதும் பரவலாக கிடைக்கக்கூடிய கொய்யா பழம் ஆகியவை இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 

இதில் மற்ற அனைத்து பழங்களுடன் ஒப்பிடுகையில், கொய்யாவில்தான் அதிக'ஆண்டாக்ஸிடென்ட்'இருப்பதாக தெரியவந்துள்ளது. 

மேலும் பிளம்ஸ் பழம்,இந்தியர்களால் மிகவும் விரும்பப்படும் மாம்பழம் மற்றும் சீதா பழம் ஆகிய பழங்களும் கூட கொய்யா பழத்திற்கு பின்னால்தான் நிற்கின்றன. 

அந்த அளவிற்கு கொய்யா பழத்தின் ராஜாங்கம் முன்னிலையில் இருக்கிறது.100 
கிராம் கொய்யா பழத்தில் 500 மில்லி கிராம் அளவுக்கு ஆண்டாக்ஸிடென்ட்' உள்ளது. அதுவே பிளம்ஸ் பழத்தில் 330 மி.கி., மாதுளம்பழத்தில் 135 மி.கி., ஆப்பிள் பழத்தில் 125 மி.கி, வாழைப்பழத்தில் 30 மி.கி. அளவு மட்டுமே 'ஆண்டாக்ஸிடென்ட்' உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

அதேப்போன்று தர்பூசணி மற்றும் அன்னாசி பழத்திலும் மிகக்குறைந்த அளவே 'ஆண்டாக்ஸிடென்ட்' உள்ளது. அதேப்போன்று மாம்பழத்தில் 170 மி.கி. 'ஆண்டாக்ஸிடென்ட்' உள்ளது.

ஆனால் கொய்யாவில் அதிக அளவு 'ஆண்டாக்ஸிடென்ட்' மற்றும் நார்சத்து உள்ளது.

எனவே விலை மலிவாக இருக்கிறதே என்று கொய்யா பழத்தை அலட்சியப்படுத்தாமல் நாளொன்றுக்கு குறைந்தது ஒரு பழமாவது சாப்பிட்டு வரலாம் என்று கூறும் டாக்டர் ஸ்ரீராமுலு, "An apple a day keeps the doctor away" என்பதற்கு பதிலாக "A guava a day keeps the doctor away", அதாவது " தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டாம்!" என்பதற்கு பதிலாக" தினமும் ஒரு கொய்யா சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டாம்!" என்று புதுமொழி படைக்கலாம் என்கிறார்...! 

அதே சமயம் சளித் தொல்லைக்கு ஆளானவர்கள் இதை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மேலும் சிலருக்கு கொய்யா பழம் "அலர்ஜி" எனப்படும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அத்தகையவர்களும் இதை தவிர்த்துவிட வேண்டும் என்பது டாக்டர்களின் அட்வைஸ்!