தாய்மார்கள் நலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாய்மார்கள் நலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

அம்மாக்கள் கவனத்திற்கு!





குழந்தை மன நல மருத்துவர் கண்ணன்: 
என்னிடம் வரும் பெற்றோர், பெரும்பாலும் கூறும் ஒரே புகார், "என் பசங்க சாப்பிடவே மாட்டேங்கறாங்க...' என்பது தான். குழந்தைகள் குறைவாகவோ, அதிகமாகவோ சாப்பிடுவதற்கு, பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் அவையெல்லாம் கவலைப்படக் கூடிய காரணங்கள் இல்லை."நம்ம குழந்தை நன்றாக சாப்பிடட்டும்' என்ற எண்ணத்தில், வயிற்றுத் தேவையைவிட, அதிக அளவிற்கு டிபன் பாக்சில் நிரப்பி அனுப்புகின்றனர் பல அம்மாக்கள். அதிலிருந்து, தங்கள் தேவைக்குச் சரியாகச் சாப்பிட்டு விடுகின்றனர் குழந்தைகள். மீதி, அப்படியே டிபன் பாக்சில் உள்ளது, என்பதை உணர வேண்டும்.காலை, இரவு மற்றும் விடுமுறை நாட்களில், சுவையாக சாப்பிட்டுப் பழக்கப்படும் குழந்தைகள், பள்ளியில் ஆறிப் போன உணவைத் தான் சாப்பிட வேண்டிய கட்டாயம். ஆறிய உணவில், இயல்பாகவே சுவை குறைவதால், சாப்பிடும் ஆர்வம் குறைவதும் இயல்பே.அதே போல், பெரும்பாலான பள்ளிகளில், உணவு இடைவேளை போதுமான அளவிற்கு இருப்பதில்லை.

 குழந்தைகள் உணவை வெறுக்க, இதுவும் ஒரு காரணம்.எந்நேரமும், குழந்தைகளுக்கு, நொறுக்குத் தீனி கொடுப்பதையும், "ஜங்க் புட்' கொடுப்பதையும் நிறுத்துங்கள். அவற்றின் தீமைகளை நன்கு புரியும் விதத்தில் அடிக்கடி நினைவூட்டி, வீட்டில் சமைத்த உணவின் அருமையை உணர்வதுடன், பெற்றோரும் அதையே உண்ண வேண்டும். காலை, மதியம், மாலை, இரவு என, நான்கு வேளை மட்டுமே சாப்பிட வேண்டும். மற்ற நேரம் எதுவும் குழந்தைகள் சாப்பிடக் கூடாது என்ற கொள்கையை, பெற்றோர் கடைப்பிடித்தாலே, குழந்தைகள் ஆரோக்கியமான வீட்டு உணவை விரும்ப ஆரம்பித்து விடுவர்.செய்யும் உணவுகளில், சிறிய மாற்றங்களையும், சுவையையும் அதிகரிக்க வேண்டும். இதுவே போதும், குழந்தைகளுக்கு உணவின் மீதான விருப்பத்தை அதிகரிக்க!

செவ்வாய், 18 அக்டோபர், 2011

தாய்ப்பாலை பெருக்கும் பூண்டு



குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுப்போய் விடுமோ என்று இன்றைய தலைமுறை தாய்மார்கள் கவலைப்படுவது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையே… என்று கவலைப்படும் தாய்மார்களும் மறுபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க டாக்டர்கள் கொடுக்கும் முதல் அட்வைஸ், சத்தான உணவுகளோடு அதிக அளவில் பசும்பால் குடியுங்கள் என்பதுதான். எந்த அளவுக்கு அதிகமாக பசும்பால் குடிக்கிறோமோ, அந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்கிறார்கள் அவர்கள்.

தமிழ்நாட்டு சமையலில் அதிகம் இடம் பிடிக்கும் பூண்டுக்கும் தாய்ப்பாலை பெருக்கும் சக்தி உள்ளது. அதற்கு என்ன செய்யலாம்?
தினமும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

மீன் வகைகளில் சுறா மீனை உட்கொண்டு வந்தாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். சுறா மீனை புட்டாக அவித்து, அதனுடன் அதிக அளவில் பூண்டு சேர்த்து சாப்பிட வேண்டும்.

தாய்ப்பாலை பெருக்குவதோடு மேலும் பல நன்மைகளையும் பூண்டு நமக்கு தருகிறது. தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றலும் பூண்டுக்கு உண்டு.

இதனால்தான் குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கு குளிக்கும்போது நல்லெண்ணையைக் காய்ச்சி, அதில் சிறிது பூண்டும் போட்டு, அந்த எண்ணெயை தேய்த்து உடல் முழுவதும் மசாஜ் செய்யும் வழக்கம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டியவை

feeding pillow

பாலூட்டும் தாய்மார்கள் வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்துவது குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தாய் முடியும் என எச்சரிக்கை செய்துள்ளனர் கனடா நாட்டு மருத்துவர்கள்.

கோடைன் எனப்படும் மருத்துவப் பொருள் அடங்கிய வலி நிவாரணிகளை அதிகம் உட்கொள்வது குழந்தைகளின் உடல் நலத்தைப் பெருமளவில் பாதிப்பதாக அவர்கள் நடத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த வலி நிவாரணிகளை குறிப்பாக பிரசவ கால வலிகளிலிருந்து தப்புவிக்க தாய்மார்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் மருந்தாகும் . அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களுக்கு இந்த மருத்து அத்தியாவசியத் தேவை என்பது குறிப்பிடத் தக்கது.

பாலூட்டும் தாய்மார்கள் தங்களுடைய உணவுப் பழக்கவழக்கம், மருந்து உட்கொள்தல் போன்றவற்றில் அதீத கவனம் செலுத்துவதுண்டு. ஏனெனில் உடலில் கலக்கும் வேதியல் பொருட்கள் பால் வழியாக குழந்தையின் உடலுக்குள் செல்கிறது என்பதே.

தாய்மாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத இந்தப் பொருள் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், உறுப்புகள் பாதிப்பு, மயக்கம் போன்ற பலவிதமான இன்னல்களை உருவாக்குகின்றது என்பதை இந்த ஆய்வு நிரூபித்திருக்கிறது.

தாய்மார்கள் தாங்கள் உட்கொள்ளும் மருந்து குழந்தையின் உடலுக்குள்ளும் பாயும் என்பதை கவனத்தில் கொள்ளவும், தேவையற்ற மருத்துகளைத் தவிர்க்க வேண்டுமெனவும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.

புதன், 31 ஆகஸ்ட், 2011

தாயாகு‌ம் மு‌ன்பு தெ‌ரி‌ந்‌திரு‌க்க வே‌ண்டிய ‌விஷய‌ங்கள்



 
புதுமண‌த் த‌ம்ப‌திகளு‌ம் ச‌ரி, குழ‌ந்தை பெ‌ற்று‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று முடிவெடு‌த்து‌ள்ளவ‌ர்களு‌ம் ச‌‌ரி ‌சில மு‌க்‌கியமான ‌விஷய‌ங்களை‌த் தெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

தாயாகு‌ம் மு‌ன்பு உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்‌திரு‌க்க வே‌ண்டிய ‌விஷய‌ங்களாவன :

1. கரு‌த்த‌ரி‌க்க ஏ‌ற்ற வயதை அடை‌ந்து‌வி‌ட்டோமா? அ‌ல்லது அதை‌க் கட‌ந்து ‌வி‌ட்டோமா?

2. தாயாகு‌ம் பெ‌ண்‌ணி‌ற்கு அ‌ம்மை‌த் தடு‌ப்பூ‌சி போட‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறதா?

3. உ‌ங்க‌ள் கணவரு‌க்கு‌ம், உ‌ங்களு‌க்கு‌ம் ர‌த்த‌ப் பொரு‌த்த‌ம் உ‌ள்ளதா?

4. கரு‌த்தடை‌க்காக ஏதேனு‌ம் மரு‌ந்து பய‌‌ன்படு‌த்‌தி‌யிரு‌ந்தா‌ல் அதனை ‌நிறு‌த்த வே‌ண்டிய கால‌ம் எது?

5. கரு‌த்தடை மரு‌ந்தை ‌நிறு‌த்‌திய‌ப் ‌பிறகு எ‌த்தனை மாத‌ங்க‌ள் க‌ழி‌த்து கரு‌த்த‌ரி‌க்கலா‌ம்?

6. தாயாகு‌ம் பெ‌ண்‌ணி‌ற்கு புகை‌ப்பழ‌க்க‌ம், மது‌ப்பழ‌க்க‌ம்?

7. உட‌ல் நல‌க் குறை‌ப்பா‌ட்டி‌ற்காக ஆ‌ண்டு‌க்கண‌க்‌கி‌ல் ஏதேனு‌ம் மரு‌ந்து உ‌ட்கொ‌ள்‌கி‌றீ‌ர்களா? அதனை கருவுறுத‌லி‌ன் போது தொடரலாமா அ‌ல்லது ‌நிறு‌த்த வேண‌்டியது அவ‌சியமா?

8. உ‌ங்க‌ள் ‌ப‌ணி‌யிட‌ம், கரு‌த்த‌ரி‌ப்பு‌க்கு ஏதேனு‌ம் ப‌‌ங்க‌ம் ‌விளை‌வி‌க்குமா?

9. ப‌ணி‌யிட‌ங்க‌ளி‌ல் ‌விளையு‌‌ம் ஆப‌த்துக‌ள் எ‌ன்ன?

10. பர‌ம்பரையாக வரு‌ம் நோ‌ய் பா‌தி‌ப்புக‌ள் எ‌ன்ன? அதனை தடு‌க்க வ‌ழி உ‌ண்டா?

11. எ‌ப்போது கரு‌த்த‌ரி‌க்க இயலு‌ம்?

12. கரு‌த்த‌ரி‌க்க எ‌வ்‌வளவு கால‌ம் ஆகு‌ம்?

13. கரு‌‌வி‌ல் இரு‌க்கு‌ம் குழ‌ந்தை‌யை ஆணா பெ‌ண்ணா எ‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ளலாமா?

14. ‌பிற‌வி‌க் குறைபாட‌ற்ற, ஆரோ‌க்‌கியமான குழ‌ந்தையை‌ப் பெ‌ற்று‌க் கொ‌ள்வது எ‌ப்படி?

15. சுக‌ப் ‌பிரசவ‌ம் ஆவத‌ற்கான வ‌ழிக‌ள் எ‌ன்ன?

இதுபோ‌ன்ற கேள‌்‌விகளு‌க்கு ப‌தி‌ல்களை‌த் தெ‌ரி‌ந்து கொ‌ண்டு ‌பி‌ன்ன‌ர் ‌தி‌ட்ட‌மி‌ட்டு குழ‌ந்தை பெ‌ற்று‌க் கொ‌ள்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது.

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

தாய்பால் இப்படித்தான் தயாராகிறது…!

 




தாய்பாலின் மகத்துவத்தை பற்றிக் கூற வேண்டியதில்லை. பிறந்த குழந்தைக்கு இயற்கையான உணவு, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புக் கவசம் அது. மார்பகங்களின் அமைப்பு எப்படி இருக்கும்? தாய்பால் எப்படி தயாராகும் என்பதை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர்

* தாய்பால் கொடுக்கும் ஒரு தாய்க்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை பால் சுரக்கிறது.


* குழந்தை பாலை உறிஞ்சும்போது பிட்யூட்டரி சுரப்பி, `ஆக்சிடோசின்’, `புரோலாக்டின்’ ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது, பால் உற்பத்தியைத் தூண்டுகிறது.


* ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை கிரகிப்பதற்கு பால் சுரபிகளை `புரோலாக்டின்’ தூண்டு கிறது. அந்த குளுக்கோஸானது லாக்டோஸாகவும் மற்ற சர்க்கரை களாகவும் மாற்றபடுகிறது. கால்சியம், அமினோ அமிலங்கள், புரதங்கள், கொழுப்பு ஆகியவையும் பெறப்படுகின்றன.


* பால் சுரபிகள் சுருங்கி, பால் நாளங் களுக்குள் பாலைச் செலுத்துவதை `ஆக்சிடோசின்’ தூண்டுகிறது.


* ஆரம்பத்தில் சுரக்கும் பால் அடர்த்தி குறைவானது. குழந்தையின் தாகத்தைத் தணிக்கிறது.


* பல நிமிடங்கள் கழித்துச் சுரக்கும் `சீம் பால்’, அடர்த்தியானது. அதிக கொழுப்பு உள்ள அது பசியை போக்குகிறது. ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் ஆண்கள் தங்களின் மார்பகக் காம்புகளுக்கு பின்னே வேலை செய்யாத மார்பகத் திசுக் களைக் கொண்டிருக்கின்றனர். அதாவது, வளர்ச்சி அடையாத பால் நாளங்கள், கொழுப்பு மற்றும் இணைப்புத் திசு. ஆண்களில் 1000 பேரில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அபாயக் காரணிகளில், பாரம்பரியம், கதிரியக்கதுக்கு உள்ளாகும் வாய்ப்பு போன்றவை அடங்கும். முழுமையான உணவு


* குழந்தைக்கு மிகவும் ஜீரணமாகக் கூடிய, கிரகித்துக்கொள்ளக் கூடிய விதத்தில் உள்ள தாய்பால், குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. குழந்தைக்கு 6 மாதங்கள் வரை கட்டாயமாக பால் கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.


* மஞ்சள் புரதம் செறிந்த பால், குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு சுரக்கிறது. அது குழந்தையின் உணவுக் குழலைச் சுத்தம் செய்கிறது, எதிர்உயிரிகளைக் கொண்டிருக்கிறது. குழந்தைக்கு இந்த பாலைக் கொடுப்பது அவசியம்.


* தாய்பால் கொடுப்பது, கர்ப பை மீண்டும் தனது உண்மையான அளவுக்கு சுருங்க உதவுகிறது, எடை இழப்பை ஊக்குவிக்கிறது. சிறுவர்களும், சிறுமிகளும்… சிறுவர், சிறுமியர் இருவருக்குமே மார்புக் காம்புக்கு பின் பால் நாளங்கள் இருக்கின்றன. சிறுமிகள் வயதுக்கு வரும்போது `ஈஸ்ட்ரோஜென்’னும் மற்ற ஹார் மோன்களும் பால் நாளங்களை வளரச் செய்கின்றன. கொழுப்பையும், இணைப்புத் திசுக்களையும் அதிகரிக்கச் செய்கின்றன. சிறுவர்களிடம் `டெஸ்ட்டோஸ்டிரான்’ அந்த வளர்ச்சியைத் தடுக்கிறது. இரு மார்புகளும் ஒரே அளவல்ல…!


சிகரெட்டின் நிகோட்டின், ஆல்கஹால் மற்றும் பல மருந்துகள் தாய்பால் வழியாகக் குழந்தைக்குச் செல்லக்கூடும். தீங்குகளையும் ஏற்படுத்தக்கூடும். தாய்பாலானது பசுவின் பாலை விட இனிமையானது, அடர்த்தி குறைந்தது. பெண் கடவுள் ஹேராவின் மார்பகத்தில் இருந்து உதிர்ந்த பால் துளிகளால் `பால் வீதி மண்டலம்’ உருவானதாக பண்டைய கிரேக்கர்கள் கருதி அப்பெயரைச் சூட்டினர்.


பெண்களின் இடது மார்பகம், வலது மார்பகத்தை விடச் சற்று பெரிதானது. மார்பகத்தை அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்குவது `மாஸ்டெக்டோமி’ எனபடுகிறது.



மார்பக பிரச்சினைகள்



சிஸ்ட்கள் – மார்பகத்தில் உருவாகும் நீர் நிறைந்த கட்டிகள்.


பைரோடினோமா – இழையும், உருளையுமான திசுக்களால் உருவான உறுதியான கட்டிகள்.


காலக்டோரியா – அளவுக்கு அதிகமான தாய்பால் உற்பத்தி.


கைனகோமேஸ்டியா – ஆண்களுக்கு மார்பகம் பெரிதாவது.


மஸ்டிடிஸ் – பால் நாளங்களில் அடைப்பு ஏற்படுவது.


மாஸ்டால்ஜியா – மாதவிலக்குக்கு முன் வலி அல்லதுதொளதொள தன்மை காணப்படுவது.


மார்புக் காம்பு பேசட்ஸ் வியாதி – மார்புக் காம்பில் ஒருவித சுரப்புடன் தெரியும் புற்றுநோய் அறிகுறி.


மார்பக புற்றுநோய் – பால் நாளங்கள், சுரபிகள் உள்ளிட்ட மார்பகத் திசுக்களில் உருவாகும் புற்றுநோய்.

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

உலக தாய்ப்பால் வாரம் அகஸ்ட் 1 -7




உலக தாய்ப்பால் வாரம் அகஸ்ட் 1-7 வரை கொண்டாட படுகிறது.  தாய்ப்பாலின் அருமைகளை விளக்கவே இந்த விழா கொண்டாட படுகிறது .




குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தரவேண்டும் , அறுவை சிகிச்சையில் பிறந்த பின் இரண்டு மணி நேரத்திற்குள் தரவேண்டும் , நேரம் கடந்து தந்தால் பால் சுரப்பது குறைய ஆரம்பிக்கும் .


முதல் இரண்டு மூன்று நாட்களில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும் . இது குழந்தைக்கு ஒரு அரு மருந்து . ஒரு தாய் தன் குழந்தைக்கு தரும் சீதனமே இந்த சீம்பால் ஆகும் .குழந்தைக்கு போடும் முதல் தடுப்பு மருந்து என்றும் இதை சொல்லலாம் .


இதில் அதிகமாக புரத சத்தும் , நோய் எதிர்ப்பு சத்துக்களும் உள்ளன . விட்டமின்கள் அதிகமாகவும் , எளிதில் செரிமானம் ஆககூடியதும் ஆகும் .


எனவே ஒரு துளி கூட வீணாக்காமல் சீம்பால் தரவேண்டும் .


குழந்தை பிறந்த முதல் இரண்டு வாரம் தனது எடையில் பத்து சதவிகிதம் குறையும் . இது இயல்பானதே , மூன்றாம் வாரத்தில் இருந்தே எடை கூட ஆரம்பிக்கும்


குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் தரவேண்டும் .


எடை குறைவான குழந்தைக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் தரலாம் .


சாதாரணமாக தாய்க்கு ஆறு மாதம் வரை தினமும் 750 ml பால் சுரக்கும் , ஆதற்கு பிறகு 500-600 ml பால் சுரக்கும் . இரண்டு வயது வரை பால் தந்தால் நல்லது.


பால் கொடுப்பதால் தாய்க்கு மார்பு புற்றுநோய் , ஓவரி புற்றுநோய் வராமல் தடுக்கப்படும் .


பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் பால் கொடுத்தால் தாய்க்கு உதிரபோக்கு குறையும் . ஏனெனில் பால் குடிக்கும் போது oxytocin என்ற ஹோர்மோன் சுரப்பதால் அது கர்பப்பையை சுருங்க செய்து ரத்தபோக்கை குறைக்கும் .


தொடர்ந்து ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வந்தால் மாதவிடாய் தள்ளிபோடபடும் , இதன் முலம் அடுத்த பிரசவத்தை தடுக்கமுடியும் .

தாய் பாலால் தாய்க்கும் பல நன்மைகள் உண்டு . எனவே தவறாமல் தாய்ப்பால் தரவேண்டும்.


குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய் பால் மட்டுமே தரவேண்டும்


தண்ணீர் கூட தர தேவை இல்லை ( கோடையில் கூட ) ஏனென்றால் பாலில் 88 % நீர் உள்ளது .

ஆறு மாதங்களுக்கு பிறகு பாலுடன் இணை உணவு தரவேண்டும்






குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்
 
குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு முதலில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும் . இது அளவில் குறைவாக , மஞ்சள் நிறத்தில் இருக்கும் . குழந்தைக்கு தாய் தரும் முதல் தடுப்பு மருந்து சீம்பால் ஆகும் . எனவே முதல் 3-4 நாட்கள் சீம்பால் மட்டும் தர வேண்டும் .


( கழுதைப்பால் , சீனிதண்ணி, சர்க்கரை ஆகிய பொருள்களை பிறந்தவுடன் தரும் பழக்கம் சில இடங்களில் உள்ளது , இது தவறான பழக்கம் .)


பால் பரிசுத்தமானது , எனவே பிறந்தவுடன் சுத்தமான உணவு தாய்ப்பால் மட்டுமே .


பாலில் நோய் எதிர்ப்பு சக்தி தர நிறைய பொருள்கள் உள்ளன .(secretary IgA, Macrophages,Lymphocytes,Lactoferrin, Lysozyme, Bifidus factor,Interferon) எனவே வயிற்றுபோக்கு , சளி முதலிய வியாதிகள் வராமல் தடுக்கும் .


பால் இயற்கையானது எனவே எளிதில் செரிக்கும் .


குழந்தையின் மூளை வளர்ச்சி முதல் இரண்டு வருடங்களில் மிக வேகமாக இருக்கும். அதற்க்கு தேவையான CYSTIENE ,TAURINE ஆகிய சத்துக்கள் தாய்பாலில் சரியான அளவில் உள்ளன . ( கன்றுகுட்டி பிறந்தவுடன் துள்ளி ஓடும் , ஆனால் மனித குழந்தை தத்தி நடக்க ஒரு வருடம் ஆகிறது . ) தாய் பால் மட்டுமே சரியான ஊட்டசத்தை சரியான நேரத்தில் தரும்.   
 
வேலைக்கு செல்லும் தாய் :


தாய் பாலே குழந்தைக்கு அரு மருந்து . வேலைக்கு செல்லும் தாய்மார்கள் பாலை எடுத்து சேமித்து பின் தரலாம் .


சாதாரண அறைவெப்ப நிலையில் எட்டுமுதல் பத்துமணி நேரம் வைக்கலாம் .


குளிர் பதன பெட்டியில் 24 மணி நேரமும் ,


அதனுள் உள்ள ப்ரீசர்(-20* c) இல் மூன்று மாதங்கள் வைத்திருக்கலாம் .


எனவே வேலைக்கு செல்வதை காரணமாக சொல்லி தாய் பால்தராமல் இருக்காதிர்கள்.

புதன், 3 ஆகஸ்ட், 2011

குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது கவனிக்க வேண்டியவை!


• குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் தாய்மார்கள் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.


•குழந்தைகள் உணவைச் சிந்திவிட்டால் திட்டுவதோ, அடிப்பதோ, மிரட்டுவதோ கூடாது.


•குழந்தைகளுக்கு எவ்வளவு உணவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்ணப் பழக்குங்கள். போதும் எனுமளவுக்கு உண்டபின் அதிகமாக உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம்.


•. சோறு சாப்பிடு, கீரை சாப்பிடு அப்படி சாப்பிட்டால் சாக்லேட் வாங்கித் தரேன், ஐஸ்கிரீம் வாங்கித் தரேன் என்று சொல்வது தவறு. அப்படிச் சொல்வதனால் சோறு என்பது மோசமான பொருள் என்றும், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை நல்ல பரிசுப் பொருட்கள் போன்ற ஒரு தோற்றம் குழந்தைகளின் மனதில் பதிந்து விடும்..


•. இனிப்புகளை முழுமையாய் தவிர்க்காதீர்கள். அப்படி மறுக்க மறுக்க குழந்தைகளுக்கு இனிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வரும். பின்பு வாய்ப்புக் கிடைக்கும் போது வட்டியும் முதலுமாய் சேர்த்து இனிப்பை உண்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும்.


• குறிப்பாக 90/10 முறையைக் கடைபிடிக்க வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். அதாவது 90 விழுக்காடு ஆரோக்கியமான உணவும் மீதி பத்து விழுக்காடு இனிப்பு, பொரியல் போன்றவற்றையும் உண்பதும் நல்லது. அந்த இனிப்பு வகைகளிலும் அதிக கொழுப்பான, செயற்கைப் பொருட்கள் அதிகம் அடங்கியவற்றைத் தவிர்க்கவேண்டும்.



•. அதிக கொறித்தல் பொருட்களைக் குழந்தைகளுக்கு வழங்காமல் இருப்பதே நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவு ஊட்டுவதும், சரியான நேரத்தில் தின்பண்டங்கள் கொடுப்பதும் நல்லது. .


• வீடுகளில் தேவையற்ற உணவுப் பொருட்களை வாங்கி நிறைக்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக நீங்கள் வாங்கி வைக்கும் குளிர்பானமோ, சிப்ஸோ குழந்தை சாப்பிடக் கூடாது என நீங்கள் எண்ணுவதில் அர்த்தமில்லை.


• இன்றைக்கு எங்கும் பரவியிருக்கும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை


•. பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். எல்லோரும் எல்லாவற்றையும் விரும்பமாட்டார்கள் என்பதும் நமக்கு மிகவும் பிடித்தது இன்னொருவருக்கு சுத்தமாகப் பிடிக்காமல் போகும் என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.


•. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவை கொடுத்து போரடிக்காதீர்கள். ஒரே மாதிரியான உணவைக் கொடுக்க வேண்டி வந்தால் அதன் வடிவத்தையோ, சுவையையோ எதையேனும் வித்தியாசமாய் காண்பியுங்கள். வித்தியாசமானவை குழந்தைகளுக்குப் பிடிக்கும் , பிடித்தமான பாத்திரத்துக்காகவே குழந்தைகள் உணவை உண்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.


•. ஒரு கடி, ஒரு வாய் என குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். காய்கறி போன்றவற்றை தினமும் கொஞ்சம் கொஞ்சம் உண்ணப் பழக்கினாலே அவை நீண்டகால உணவுப் பழக்கமாய் மாறிவிடும். .

•. குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பறவை, பூ, படகு என வித்தியாசமான வடிவங்களில் வெட்டிப் பரிமாறிப் பாருங்கள். குழந்தைகள் வெகுவாக விரும்பி உண்பார்கள்.


•சிறு சிறு சமையல் வேலைகளில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அவர்களுக்கு உணவின் மீதான நாட்டம் அதிகரிக்கும்.

குழந்தை வளர்ப்பு

 

குழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை
குழந்தைகளை வளர்ப்பது தாய்மார்களைப் பொறுத்தவரையில் பயம் கலந்த அனுபவமாக இருக்கிறது. ஆனால் அடிப் படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டால், குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சி யான பாசம் நிறைந்த கலை என்பதை புரிந்து கொள்ளலாம்.
குழந்தை வளர்ப்பில் அடிப்படையான விஷயங்கள் இங்கே தரப்படுகின்றன.


பிறப்பு முதல் ஒரு வயது வரை:

பிறந்த குழந்தைக்கு தினமும் எத்தனை முறை பாலூட்ட வேண்டும் என்ற சந் தேகம் பல தாய்மார்களுக்கும் ஏற்படு கிறது. குழந்தை ஒவ்வொரு முறை அழும் போதும் பசியால்தான் அழுகிறதோ என்று நினைக்கிறார்கள்.
குழந்தைக்கு தேவையான அளவு உணவு கிடைக்கிறதா என்பதை அறிய பலவழிகள் இருக்கின்றன. அதில் ஒன்று குழந்தையின் எடையை கவனிப்பது. குழந்தை பிறக்கும்போது எவ்வளவு எடை இருக்கிறதோ, நாலு மாதத்தில் அந்த எடை இரட்டிப்பாக வேண்டும். பிறக்கும் போது 2.7 கிலோ என்றால், 5.4 கிலோவாக இருக்க வேண்டும். தேவையான அளவு பால் கிடைத்தால், குழந்தையின் எடை இந்த அளவு அதிகரித்து விடும். குழந்தை யின் சிறுநீர் அளவு, மலத்தின் அளவைப் பார்த்தும் தேவையான அளவு பால் கிடைப்பதை உறுதி செய்து விடலாம்.

பிறந்த குழந்தைகளை தாயே பயமின்றி குளிப்பாட்டலாம். முதலில் `பேபி ஆயில்’ பயன்படுத்தி உடலை வருடி விடுங்கள். அம்மாவின் வருடல் குழந்தைக்கு ஆனந் தத்தை அளிக்கும். `மசாஜ்’ மூலம் குழந்தையின் உடலுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

ஒரு சிறிய பிளாஸ்டிக் `பேசினில்’ கால் பாகத்திற்கு குளிர் நீக்கிய (லேசாக சூடான) நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அம்மா தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். குழந்தையின் தலை இடது கையில் வருவதுபோல தூக்கிப் பிடிக்க வேண்டும். முதலில் குழந்தையின் உட லில் `பேபி சோப்’ தேய்த்து கழுவவேண் டும். அதற்குப் பிறகு தலையையும் முகத்தையும் கழுவுங்கள். கழுவும்போது தலையை உத்தேசமாக 30 டிகிரி கோணத் தில் தூக்கிப் பிடித்துக் கொள்ள வேண் டும். குழந்தையின் மூக்கினுள் தண்ணீர் சென்று விடக்கூடாது.

குளிப்பாட்டிய உடன் தலையை துவட்ட வேண்டும். உடலை துடைக்கும்போது காதுகளின் உள் பகுதியில் இருக்கும் ஈரத்தை தவறாமல் துடைத்து விட வேண் டும். மூக்கை மேல் இருந்து கீழாக லேசாக அழுத்தி, அங்கிருக்கும் தண்ணீரையும் அப்புறப்படுத்த வேண்டும். அதன் பிறகு பவுடர் பூசி துணி அணிவிக்க வேண்டியது தான். குளியல் முடிந்ததும் குழந்தைக்கு பசி எடுக்கும் பால் கொடுத்து தூங்க வைத்து விடலாம்.
சில குழந்தைகள் தூங்கும்போது, சுவாசத்தில் மூக்கில் இருந்து லேசான ஒலி எழும். மூக்கு, தொண்டைப் பகுதியில் ஏற்படும் லேசான தடையாலே இந்த ஒலி ஏற்படுகிறது. மூக்கில் இரண்டு துவாரம் உண்டு. அதில் ஒன்று சிறிதாக இருந்தால், சுவாசிக்கும்போது சத்தம் வரும். குழந்தை வளரும்போது, துவாரமும் பெரிதாகி இந்த குறை நீங்கி விடும்.

பால் குடிக்கும் குழந்தையாக இருந் தால், பால் இந்த துவாரத்தில் ஏறி இருந் தாலும் சுவாசிக்கும்போது சத்தம் வரும். இது ஒரு பிரச்சினையாகத் தோன்றினால், குழந்தைகள் நல மருத்துவரிடம் காட்ட வேண்டும்.
இரவு நேரத்தில் சில குழந்தைகள் தொடர்ச்சியாக அதிக நேரம் அழும். பசி, வயிற்று வலி, மலச்சிக்கல், உஷ்ணம், சிறுநீர் கழித்தலால் ஏற்பட்ட ஈரத்தன்மை, கொசுக்கடி, இறுகிய ஆடை, குளிர்… போன்ற ஏதாவது காரணம் இருக்கலாம். அறையில் தேவையான காற்று கிடைக்கா விட்டாலும், அதிக அளவு பால் குடித்து விட்டாலும் கூட குழந்தைகள் அழலாம்.
ஒரு வயதான குழந்தைக்கு இரவில் பால் கொடுக்கலாமா? என்ற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள். தூங்கச் செல் லும் போது குழந்தைக்கு `பாட்டிலில் பால்’ கொடுக்காமல் இருப்பது நல்லது. கொடுத் தால் குழந்தையின் பல் சேதமாகக் கூடும். இரவு உணவு கொடுத்து விட்டு குழந் தைக்கு ஒரு கப் பால் கொடுங்கள். அதற் குப் பிறகு ஒரு கப் தண்ணீர் கொடுங்கள். இதன் மூலம் வாயில் இருக்கும் பாலின் தன்மை கழுவப்பட்டு விடும்.

சைவ உணவு சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சைவ உணவை சாப் பிடும் பழக்கம் கொண்டவர்கள் குழந் தைக்கு அசைவ உணவு கொடுத்துதான் ஆகவேண்டும் என்பதில்லை. பால், தயிர், வெண்ணை போன்ற பால் வகைப் பொருட்களை கொடுக்கலாம். பயிறு வகை களை உணவில் சேர்த்தால், குழந்தைக்கு தேவையான புரோட்டீன் சத்து கிடைத்து விடும்.



2 முதல் 3 வயது வரை:

இரண்டு வயதான பிறகும் குழந்தை ஒரு சில வார்த்தைகள்தானே பேசுகிறது -என்று 75 சதவீத பெற்றோர் குறிப்பிடுகிறார்கள். இந்த குழந்தைகளுக்கும் பேச்சுத்திறன் அதிகரிக்கவே செய்யும். அப்பா-அம்மா பேசுவதை பார்த்தும் கேட்டும்தான் குழந்தைகள் பேசத் தொடங்குகின்றன. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல் பவர்களாக இருந்தால், குழந்தைக்கு அவர்களோடு செலவிடும் நேரம் மிகக் குறைவாக இருக்கும். இந்த மாதிரி குழந்தைகள் தாமதமாகத்தான் பேசும். குழந்தை சரியாக பேசவில்லை என்பதை உணர்ந்தால், `ஸ்பீச் தெரப்பிஸ்ட்’டிடம் ஆலோசனை பெறவேண்டும்.

குழந்தைகள் விரல் சப்புவது சகஜமான விஷயம். அதை நிறுத்துவதற்காக அடிப் பதோ குற்றஞ்சாட்டுவதோ கூடாது. இந்த வயதில் குழந்தைகள் கிடைப்பதை எல் லாம் வாயில் வைக்கும் பழக்கம் கொண் டவை. அந்த அடிப்படையில்தான் விரலை யும் வாயில் வைத்து சப்புகிறது. பயத்தின் மூலமும் சில குழந்தைகள் விரலை சப்பும். குறிப்பிட்ட வயதில், இந்த பழக்கம் நீங்கி விடும்.

இரண்டு வயது குழந்தைகள் 9-10 மணி நேரமாவது உறங்கும். சில குழந்தைகள் அதிக நேரம் தூங்காது. அதற்கு அறை யின் உஷ்ணம், சத்தம், கொசுக்கடி போன்ற ஏதாவது காரணமாக இருக்கும். குழந்தை சற்று குறைவான நேரமே தூங்கி னாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.


குழந்தைகள் மூன்று, நான்கு நாட்க ளுக்கு ஒருமுறை மலங்கழிக்கும். சில நேரங்களில் பச்சையாகவும் மலம் வெளி யேறும். இதற்கு பல காரணங்கள் உண்டு. சில குழந்தைகளுக்கு மலம் வெளியேறும் போது வலி ஏற்படும். அதற்கு பயந்து மலம் கழிக்காமலே இருந்து விடும். அவ்வாறு செய்தால் வயிற்றில் மலத்தின் அளவு அதி கரித்து அதிக வலி தோன்றும். இது மலச் சிக்கலாகி விடும். இந்த நிலை ஏற்பட்டால் டாக்டரின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஒரு சில நேரம் பச்சை நிறத் தில் வெளியேறினால் பிரச்சினை இல்லை. தொடர்ச்சியாக பச்சை நிறத்தில் இருந் தாலோ, வயிற்றை இளக்கிச் சென்றாலோ டாக்டரிடம் காட்ட வேண்டும்.
குழந்தைகள் டி.வி. பார்ப்பது தவறல்ல. ஆனால் போதிய இடைவெளியில் அமர்ந்து பார்க்கா விட்டால், கண்களைப் பாதிக்கும். குழந்தைகளிடம் விளையாட்டு ஆர்வத்தை உருவாக்க வேண்டியது மிக அவசியம். அந்த ஆர்வத்தைக் கெடுத்து டி.வி. முன்னாலே உட்கார வைத்து விடுவது சரியல்ல.

இந்த பருவத்து குழந்தைகள் சிலவற்றி டம் மண் தின்னும் பழக்கம் ஏற்பட்டு விடும். உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், மண்ணைத் தின்னும். அந்த சத்தை ஈடுசெய்ய வேண்டும். டாக்டரிட மும் காட்டி ஆலோசனை பெறலாம்.

குழந்தைகள் பெரும்பாலும் மருந்து குடிக்க மறுக்கவே செய்யும். அதனால் மருந்து கொடுக்கும்போது அவைகளு டைய கவனத்தை விளையாட்டின் பக்கம் திருப்பி விட வேண்டும். விளையாட்டு காட்டியபடியே கொடுத்து விடலாம். வற்புறுத்தி திணிப்பது சரியல்ல.

குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகள் வாங்கிக் கொடுக்கும்போது அவை பளபளப்பாகவும், விலை உயர்ந்த தாகவும் இருந்து எந்த பலனும் இல்லை. குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை தூண் டும் விதத்தில் அது இருக்கவேண்டும். சப்பாத்தி மாவை சிறிதளவு பிசைந்து கொடுத்து பலவிதமான உருவங்கள் செய் யச் சொல்லலாம். பேப்பர்களை மடக்கி, விமானம், கப்பல் போன்றவைகளை உருவாக்கச் செய்யலாம்.


4 முதல் 10 வயது வரை:

இந்த வயதில் குழந்தைகளின் மூளை வளர்ச்சி யும், கற்பனைத் திறனும் அதிகரிக்கும். அதனால் வீட்டுச் சுவர்களில் இஷ்டத்திற்கும் கோடு போட்டு படம் வரைவார்கள். இது ஊக்கு விக்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனாலும் வீடு முழுவதும் எல்லா சுவர்களிலும் வரைவது வரவேற்கத் தக்கதல்ல. ஏதாவது ஒரு சுவரில் வரையச் சொல்லுங்கள் அல்லது அதற்கென்று கரும் பலகை ஏதாவது வைத்துக் கொடுத்து விடுங்கள்.
பள்ளிக்கூடத்திற்குச் செல்ல சில குழந்தைகள் அடம்பிடிக்கும். அப்போது குழந்தைகளை அடிக்காமலோ, மிரட்டாமலோ, அவைகளுக்கு ஏன் பள்ளிக்கூடம் பிடிக்கவில்லை என்பதை மனரீதியாக ஆராய வேண்டும். உடன் படிக்கும் குழந்தைகள் தரும் மனோரீதியான தொல்லை, உடல்ரீதியான தொல்லை, ஆசிரியர்களின் மிரட்டல் அல்லது ஆசிரியர்கள் கொடுக்கும் தண்டனை, பாடல் களை புரிந்து கொள்வதில் ஏற்படும் பிரச் சினைகள் போன்ற பல காரணங்களால் குழந்தைக்கு பள்ளிக்கூடம் பிடிக்காமல் போகலாம்.


இப்போது 5, 6 வயது சிறுவர் -சிறுமியர் தினமும் அதிக நேரம் கார்ட்டூன் சேனல் களைப் பார்த்து பொழுதுபோக்குகிறார் கள். அதிக நேரம் அவர்கள் டி.வி. பார்ப்பது கண்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் கெடு தல் ஏற்படுத்தும். அதனால் விளையாட்டு, இதர பொழுதுபோக்குகளில் சிறுவர் களுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துங்கள்.
பல பெற்றோர், தங்கள் குழந்தைகள் போதுமான அளவு உணவு உண்பதில்லை என வருத்தப்படுகிறார்கள். தினமும் இட்லியையும் தோசையையும் கொடுத்தால், குழந்தைகளுக்கு வெறுப்பு ஏற்படத்தான் செய்யும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தினமும் சக மாணவ-மாணவிகள் மூலம் விதவிதமான உணவுகளைப் பார்க்கிறார்கள். அதனால் தங்கள் வீடுகளிலும் நிறத்திலும், சுவை யிலும் வித்தியாசமுள்ள உணவுகளை எதிர்பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட உணவு களை கொடுக்கும்போது குழந்தைகள் தாராளமாக உண்ணவேச் செய்யும்.
இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படிக்கும்போது சிறுவர் சிறுமிகளிடம் என்ன கலை ஆர்வம் இருக்கிறது என்பது தெரிந்து விடும். பாடும் ஆற்றல் இருப்ப தாக உணர்ந்தால், அதற்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்து கொடுங்கள். அதுபோல பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வத்தை உருவாக்கி கொடுங்கள். அவன் விரும்பும் போட்டிகள் டி.வி.யில் நடப்பதை பார்க்க வாய்ப்பு கொடுங்கள். முக்கியமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அக்கறை செலுத்தச் செய் யுங்கள்.

சிறுவர்-சிறுமியர்களிடம் பிடிவாதம் இருக்கத்தான் செய்யும். பெற்றோரின் அணுகு முறையால்தான் பிடிவாதம் கூடவோ, குறையவோ செய்யும். குழந்தை கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து விடக்கூடாது. குழந்தைகள் வளர வளர அதன் தேவைகள் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனால், தேவை யான பொருட்களை மட்டும் வாங்கிக் கொடுங்கள். ஒரே குழந்தையை வளர்க் கும் பலரும் `நாங்கள் சம்பாதித்து வைப் பது சேர்த்து வைத்திருப்பது எல்லாம் உனக்குத்தான். அதனால் நீ எதைக் கேட்டாலும் வாங்கித் தருவோம்’ என்ற மனோபாவத்தில் இருக்கிறார்கள். இது தவறான அணுகுமுறையாகும். குழந்தை களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்.

சனி, 30 ஜூலை, 2011

தாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா?




 
வேலைக்கு செல்லும் பெண்கள், தாய்ப்பாலை சேகரித்து "பிரிஜ்'ஜில் வைத்து கொடுக்கின்றனரே, இது ஆரோக்கியமானதா? எவ்வளவு நேரம் "பிரிஜ்'ஜில் வைக்கலாம்?

வெளியெடுக்கப்பட்ட தாய்ப்பாலை, பாதுகாப்பான முறையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பசும்பால், புட்டிப் பாலை விட, இது ஆரோக்கியமானது. பாலை எடுப்பதற்கு முன், உங்கள் கைகளை சுத்தமாகக் கழுவிக் கொள்ளுங்கள். சுத்திகரிக்கப்பட்ட புட்டியில் மட்டுமே பாலை எடுக்க வேண்டும்.

எடுத்த பின், காற்று புகாத வகையில், இறுக்கமான மூடியால் மூட வேண்டும். புட்டி மீது, அது என்னது, எந்த தேதியில், எத்தனை மணிக்கு எடுக்கப்பட்டது என்பதை எழுத வேண்டும். "பிரிஜ்'ஜில், பின்புறம் அல்லது, "ப்ரீசரில்' வைத்து பாதுகாக்க வேண்டும். "பிரிஜ்'ஜில் ஐந்து நாட்களும், "ப்ரீசரில்' இரண்டு வாரங்கள் வரையிலும் வைத்து பாதுகாக்கலாம்.

ஏற்கனவே புட்டியில் அடைக்கப்பட்ட பாலுடன், புதிதாக எடுக்கப்பட்ட பாலை கலந்து வைக்கக் கூடாது. அதேபோல், ஒரு முறை புட்டியை திறந்தால், அதில் பாலை மிச்சம் வைத்து, அடுத்த வேளைக்கு கொடுப்பதும் தவறு.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதைச் சுட வைத்து, அதன் மீது இந்த பாலை வைத்து சூடு செய்யலாம். நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்த கூடாது.

மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவதும் தவறு. கொதிக்க வைப்பதும் தவறு. ஒரு முறை, "பிரிஜ்'ஜிலிருந்து எடுத்து விட்டால், மீண்டும், "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது. "பிரிஜ்'ஜிலிருந்து வெளியில் எடுத்த ஆறு மணி நேரத்திற்குள், இந்தப் பாலை பயன்படுத்தி விட வேண்டும்

வெள்ளி, 29 ஜூலை, 2011

குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்பது தவறான எண்ணம் ?




பெண்களிடையே தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின்
எண்ணிக்கை தமிழகத்தில் இருமடங்கு அதிகரித்துள்ளது. பிறந்த குழந்தைக்கு உணவாக மட்டுமின்றி, சிறந்த மருந்தாகவும் இருப்பது தாய்ப்பால்.

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, தாது உப்புகள் அடங்கியிருப்பதால் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் பிற்காலத்தில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றன. ஒரு தாயிடம் நாளொன்றுக்கு 100 மி.லி., முதல் 1.5 லிட்டர் வரை பால் உற்பத்தியாகிறது. உணவு விகிதத்துக்கு ஏற்ற கலவை அதில் இருக்கும்.

குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்ற தவறான எண்ணம் பெரும்பாலான பெண்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கின்றனர். குழந்தை பிறந்த அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுத்தால், கருப்பை பழைய நிலைக்கு திரும்பும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும், 6 முதல் ஓராண்டு வரை தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை உருவாக்கும் ஹார்மோன்கள் குறைகிறதாம். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவுஜீவிகளாக இருப்பதுடன், ஆஸ்துமா உள்ளிட்ட நோய் தொற்றுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.



தாய்ப்பாலின் அவசியம் குறித்து எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், குழந்த பிறந்த சில நாட்களுக்கு மட்டுமே தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த போக்கு இந்தியாவில் மட்டுமல்ல; உலகளவில் பேசக்கூடிய பிரச்னையாக உள்ளது. தாய்ப்பாலின் அவசியத்தை உணர்ந்து பல நாடுகளில் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள், நோயால் பாதிக்கப்பட்டவை, பிறக்கும் போதே தாயை இழந்த குழந்தைகளுக்காக தாய்ப்பால் வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளது.பழங்காலத்தில் குழந்தை பெறுவதும், அவற்றை வளர்ப்பதும் என குடும்ப பொறுப்புகளையே கண்கண்ட தெய்வமாக பெண்கள் கருதினர். ஆனால், இப்போது குடும்ப சுமைகளை பொறுத்து வேலைக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, அவர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பது அரிதாகிறது. இவர்கள் தங்கள் விடுமுறை நாட்களில் தாய்ப்பால் கொடுப்பதை முக்கிய பணியாக கருத வேண்டும்.

இதுபோன்ற பல காரணங்களால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தை பெற்றெடுக்கும் 2.6 கோடி பெண்களில் 2 கோடி பெண்கள் 6 மாத கால அளவுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கிறது. தேசிய குடும்ப சுகாதார சர்வேயின் படி 24.5 சதவீதத்தினர் மட்டுமே பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்கின்றனர். இது 90 சதவீதமாக உயர்ந்தால் ஒவ்வொரு ஆண்டும் 2.5 லட்சம் குழந்தைகள் இறப்பது தடுக்கப்படும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தாய்ப்பால் விழிப்புணர்வால், தேசிய சராசரியை (24.5 சதவீதம்) விட இருமடங்கு உயர்ந்து 58.8 சதவீதமாக உள்ளது. இதுகுறித்து, குழந்தைகள் நல மருத்துவர் சீனிவாசன் கூறுகையில்,‘‘ தமிழகத்தில் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து டாக்டர்கள் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் மருத்துவமனையில் தான் அதிக குழந்தைகள் பிறக்கிறது. பிறந்த அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க கூறுகிறோம்.

குழந்தையின் வளர்ச்சி குறித்த அறிவுரையின் போது, 6 மாதத்துக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது என்று திட்டவட்டமாக சொல்லி அனுப்புகிறோம். அதையும் மீறி சில பெண்கள் தண்ணீர் கலந்த புட்டிபாலை கொடுக்கின்றனர். அதனால் குழந்தைகள் படும் அவஸ்தையை சுட்டிக்காட்டி தாய்ப்பாலின் அவசியத்தை புரிய வைக்கின்றனர். கிராமப்புற தாய்மார்களை சமூகநலத்துறையின் விழிப்புணர்வு வெகுவாக சென்றடைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது‘‘ என்றார்.


30 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியவை

தாய்ப்பால் கொடுக்க தவறும் பட்சத்தில் பிறந்த குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. இந்தியாவை பொறுத்தவரை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் 48 சதவீதமும், தமிழகத்தில் 30.9 சதவீதத்தினரும் உள்ளனர். அதேபோல், எடை குறைவான குழந்தைகள் தேசிய அளவில் 42.5 சதவீமும், தமிழகத்தில் 29.8 சதவீதமும் உள்ளனர். இந்த தகவல் தேசிய குடும்ப சுகாதார சர்வேயில் தெரியவந்துள்ளது
தாய்க்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அடுத்து உருவாகும் குழந்தை பிறப்பை தள்ளி போடுகிறது. குழந்தை பிறந்த அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுத்தால் ரத்தபோக்கு கட்டுப்படுத்தப்படும். இரண்டரை ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம். சொல்லப்போனால் தாய்க்கும், குழந்தைக்கும் இடையே பாசப்பிணைப்பை ஏற்படுத்துகிறது. தாய்ப்பாலால் கிடைக்கும் நன்மைகள் குறித்து, பல்வேறு கோணத்தில் ஆய்வுகள் நடந்து வருகிறது.

எய்ட்ஸ் பாதித்தவர்களும் தாய்ப்பால் கொடுக்கலாம்
எஸ்ட்ஸ் நோய் பாதித்த தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால், அதன் மூலம் நநோய் பரவுமா என்ற கேள்விகுறி இருந்து வந்தது. அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், எஸ்ட்ஸ் பரவுவது தடுக்கப்படும் என தெரியவந்துள்ளது. அதாவது, தாய்ப்பால் கொடுக்கும் முன்புஅன்ட்டிரேட்ரோஹைல்என்ற மருந்தை உட்கொள்ள வேண்டும். இதை பின்பற்றி தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறைகிறதாம்.