வியாழன், 3 மே, 2012

உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு!


Home Remedis For Indigestion

நாம் உண்ணும் உணவு நன்றாக ஜீரணமாகி, சத்துக்களாக மாற்றப்பட்டு உடலில் சேர வேண்டும். அதேபோல் கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டும். இதற்கு ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவது அவசியம். உணவு ஜீரணமாகாவிட்டால் வயிறு உப்புசம், சங்கடமான உணர்வு, சில சமயங்களில் வலி, பசியின்மை போன்றவை ஏற்படுகிறது.

நாம்
உட்கொள்ளும் உணவை உடலுக்கேற்றதாக மாற்றி அமைப்பதை ஜீரண சக்தி என்கிறோம். இதற்கு வயிற்றில் உள்ளசூடுதான் உணவு ஜீரணமாக உதவும். நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் கடுகு, மிளகு, கொத்தமல்லி, மிளகாய் முதலான பொருட்கள் இந்த சூட்டை குறையவிடுவதில்லை.

அஜீரணத்தை
போக்க

அதிக
உணவை உண்ணுதல், காலம் தவறி உண்ணுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அடிக்கடி அதிகமாக உண்பது, மனஅழுத்தம் போன்றவையும் அஜீரணத்தை ஏற்படுத்தும் எனவே இவற்றை தவிர்க்க வேண்டும்.வயிறு முட்ட உண்ணுவதை தவிர்க்க வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். முதல் கவளத்தை நெய்யுடன் கலந்து உண்ணவும். கனமான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த பானங்கள் நீர் அருந்துவதை தவிர்த்து சுடுநீரில் எலுமிச்சை கலந்து குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இஞ்சி
, எலுமிச்சை

ஜீரண
சக்தியை அதிகரிக்க எலுமிச்சம் பழம் சிறந்தது. அரை மூடி எலுமிச்சம் பழத்தின் சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து சிறிது உப்பு போட்டு குடிக்கவும். தண்ணீர் சூடாக இருந்தால் நல்லது.

இஞ்சியும்
ஜீரணத்திற்கு உதவும். உப்பில் தோய்த்த இஞ்சித் துண்டுகளை உணவிற்கு முன் சாப்பிடவும். இஞ்சி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து ஒருஸ்பூன் அளவு குடிக்கலாம்.

சீரகம்
, பெருங்காயம்

ஒரு
டம்ளர் தண்ணீரில் சீரகம் ஒரு டீ ஸ்பூன் ஒரு டீ ஸ்பூன் கொத்தமல்லி சாற்றை கலந்து, உப்பு போட்டு குடிக்கலாம். ஓமம் தண்ணீர் நல்லது. ஓமத்தை மோரில் கலந்தும் குடிக்கலாம்.

பெருங்காயமும்
ஒரு ஜீரண பெருக்கி, நெய்யும் பெருங்காயம் பொடி சேர்த்த அன்னத்தை ஒரு கவளம் உண்ணலாம். பெருங்காய பொடி கலந்த மோரும் நல்லது.

கரு
மிளகு, உலர்ந்த புதினா, மல்லி விதை, இஞ்சிப் பொடி, ஜீரகம், பெருங்காயம் இவற்றை சரிசம அளவில் எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி பொடியை தினமும் உணவிற்கு பின் உட்கொள்ளவும்.

கோதுமை
உணவிற்குப் பின் குளிர்ந்த நீரும், மாவுப் பண்டங்களை உண்டபின் சூடான நீரையும், பயறு வகைகளை உண்டால் நீர் மோரும் உட்கொள்ள வேண்டும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

வயிற்று
உப்புசம்

ஒரு
பெரிய கரண்டி இலவங்கப்பட்டை கலந்த தண்ணீர். வயிற்றில் வாய்வு தொல்லை ஊறவைத்து குடித்தால் வயிற்று உப்புசம் குறையும்.

புதினாவும்
ஜீரணத்திற்கு நல்லது. பச்சடி செய்து சாப்பிடலாம். இஞ்சிப் பொடி, கிராம்பு, கொத்தமல்லி விதை, ஏலக்காய் பொடி இவற்றை கலந்து உட்கொண்டால் அஜீரணம் ஏற்படாது. கறிவேப்பிலை சாறும் எலுமிச்சை சாற்றுடன் கலந்து ஜீரணத்திற்கு உதவும்.

திராட்சை
, அன்னாசி, மாதுளம், கேரட் இவையெல்லாம் அஜீரணத்தை ஜீரணத்தை அதிகரிக்கும். பொருட்கள் இவை கலந்து தயாரித்த பழ ரசம் குடித்தால் பசி ஏற்படும்.

சரியான
நேரத்தில் உணவை உட்கொள்ளவும். அரக்க, பரக்க சாப்பிடாதீர்கள்.உணவை வாயிலிருக்கும் போது தண்ணீர் குடிக்காதீர்கள். தண்ணீரால் உணவை உள்ள தள்ள வேண்டாம். நார்ச்சத்து உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சியான சூழ்நிலை, சூடான, சுவையான உணவு, நெய் சேர்ந்த உணவு இவை ஆரோக்கியமாக உண்ண உதவும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ரத்தத்தை சுத்தமாக்கும் சத்தான உணவுகள்!


மனித உடம்பில் ரத்தமானது சக்தி கடத்து பொருளாக செயல்படுகிறது. ரத்தம்தான் நாம் உண்ணும் உணவில் இருந்து சத்துக்களை கிரகித்து ஆக்சிஜனாக மாற்றி மூளைக்கும், இதயத்திற்கும் அனுப்பவதோடு மனித நடமாட்டத்திற்கு தேவையான சக்தியையும் அளிக்கிறது. ரத்தம் சுத்தமானதாக இருந்தால்தான் நம்மால் ஆரோக்கியமாக நடமாடமுடியும். அசுத்தக் கலப்பில்லாமல் ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி அன்றாடம் உண்ணும் உணவுப்பொருட்களிலேயே உள்ளது. உணவியல் நிபுணர்கள் கூறும் அவற்றை சாப்பிட்டு பாருங்களேன்

எலுமிச்சை

 

ரத்தத்தில்
உள்ள அசுத்தங்களை சுத்திகரித்து அவற்றை கழிவுகளாக வெளியேற்றும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு. தினசரி காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ரத்தத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ஒருவாரம் இதை முயற்சித்துப் பாருங்களேன். உங்களின் உடலில் கிடைக்கும் அபரிமிதமான சக்தியை நீங்களே உணர்வீர்கள்.

நோய்
எதிர்ப்பு சக்தி மிளகு
 

உணவுப்
பொருட்களில் சுவைக்காக நாம் சேர்த்துக்கொள்ளும் மிளகு சிறந்த ரத்த சுத்திக்கரிப்பானாக உள்ளது. மிளகானது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உள்ளது. எனவே உணவுகளில் மிளகு சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

பசுமை
காய்கறிகள்
 

பச்சை
நிறமுடைய காய்கறிகள், கீரைகள் உடல் சக்தியை அதிகரிப்பவை என்பது அனைவரும் அறிந்ததே. இதில் உள்ள குளோரோபில் மனிதர்களுக்குத் தேவையான சக்தியை ரத்தத்திற்கு அளிக்கிறது. டாக்ஸினை ரத்தம் கிரகித்துக் கொள்ள உதவிபுரிகிறது. நமக்குத் தேவையான சக்தி கிடைக்க அன்றாட உணவுகளில் பச்சைக் காய்கறி சாலட்களை அதிகம் உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

கண்ணிற்கு
ஒளிதரும் காரட்
 

காரட்டில்
உள்ள கரோட்டின் சத்து கண்ணிற்கும், சருமத்திற்கும் நன்மை தரக்கூடியது. நமது உணவில் காரட் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. சமைத்து உட்கொள்வதை விட காரட் ஜூஸ் பருகுவது ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

வெள்ளைப்பூண்டு

 

உடல்
ஆரோக்கியத்தைக் காப்பதில் வெள்ளைப்பூண்டு சிறந்த உணவாகும். இதில் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றுகிறது. ரத்தத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இது இறந்து போன செல்களை நீக்குவதோடு புதிய செல்களை ரத்தத்தில் விரைந்து உற்பத்தி செய்கிறது. எனவே வெள்ளைப்பூண்டினை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பெண்களின் தாய்மை பிரச்சினையை தீர்க்கும் வைட்டமின்கள்

Healthy Foods Increase Fertility


திருமணமான பெண்கள் உயிர்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் எளிதில் கருத்தரிக்கலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துணவுகளை எடுத்துக்கொள்ள பெண்கள் தயக்கம் காட்டக்கூடாது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் கருத்தரிக்காமல்
இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. போதுமான வைட்டமின்கள் உடலுக்கு கிடைக்காமல் இருப்பதும் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நல்ல ஊட்டச்சத்தான வைட்டமின் நிறைந்த உணவுகளை உண்டு வந்தால், பெண்கள் கர்ப்பம் தரிக்க உதவும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கருவுறுதல்
பிரச்சினை

கருத்தரித்தலில்
குறைபாடு உடைய 58 பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவுக்கு வைட்டமின் மாத்திரைகளும், மற்றொரு குழுவுக்கு ஃபோலிக் அமிலம் மாத்திரைகளும் அளிக்கப்பட்டன. கூடவே அவர்களுக்கு ஆரோக்கியமான, சமச்சீரான உணவுகளும் அவர்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டன.

ஆய்வின்
தொடக்கத்தில் இந்த இரண்டு குழுவில் இடம்பெற்ற பெண்களுக்கும் கர்ப்பத்திற்கு முக்கிய காரணமாக விளங்கும் மாதவிலக்கு சுழற்சி சீரான முறையில் இல்லாமல் இருந்தது. ஆய்வின் முடிவில் தினமும் வைட்டமின்கள் வழங்கப்பட்ட பெண்களில் 60 சதவிகித பெண்கள் அதாவது 30 பேரில் 18 பேர், கர்ப்பம் தரித்தனர்.அதே சமயம் ஃபோலிக் அமிலம் கொடுக்கப்பட்ட பெண்களில் 25 சதவிகிதத்தினர் மட்டுமே கர்ப்பம் தரித்தனர்.

போலிக்
அமிலம்வைட்டமின்

பெண்கள்
தாங்களாகவே ஃபோலிக் அமிலம் மாத்திரைகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு கர்ப்பமடைய எடுத்துக்கொள்ளும் காலத்தைவிட, வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதினால் விரைவாக கர்ப்பமடைய வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. ஃபோலிக் அமிலம் கர்ப்பம் தரிப்பதற்கு அவசியமான ஒன்றுதான் என்றாலும், அதைக்காட்டிலும் வைட்டமின் எடுத்துக்கொண்டவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதும், பக்கவிளைவுகள் இல்லாமல் இருப்பதும் இந்த ஆய்வின் முக்கிய அம்சம் என்று ஆய்வுக்கு தலைமை ஏற்ற டாக்டர் அகர்வால் தெரிவித்துள்ளார்.

வைட்டமின்
சி, பி6

வைட்டமின்
சி, வைட்டமின் பி6 உள்ள உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதன் மூலம் பெண்களின் கருவுறுதல் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் அனைவருமே வயது,உடல் எடை போன்றவற்றில் ஏறக்குறைய சமமானவர்களாகவே இருந்தனர்.அதேப்போன்று மது அருந்தும் மற்றும் புகைக்கும் பெண்களும் இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.