அழகு குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழகு குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 ஏப்ரல், 2013

உதட்டு வறட்சியை போக்க வேண்டுமா?




பருவக்காலம் மாறும் போது, உதடுகளில் பிரச்சனை ஆரம்பிக்கும். இத்தகைய
பிரச்சனையை தடுக்க நாம் சரியாகவும், முறையாகவும் உதடுகளை பராமரித்து வர வேண்டும். மேலும் சிலர்உதடுகளுக்கு அதிகமான அளவில் லிப்ஸ்டிக்கை போடுவார்கள்.

அவ்வாறு அதிகப்படியான லிப்ஸ்டிக் உதடுகளில் இருந்தால், அதில் உள்ள கெமிக்கல் உதடுகளில் இயற்கையான மென்மைத்தன்மையை இழக்கச் செய்து, பொலிவிழக்கச் செய்யும். உதடுகள் வறட்சியடையாமல், மென்மையோடும், பொலிவோடும் காணப்படுவதற்கு, ஒருசில இயற்கை முறைகளைப் பின்பற்றி வந்தால், சரி செய்துவிடலாம்.

• உதடு வறட்சியடையும் போது உதட்டில் தேங்காய் எண்ணெயை வைத்தால், உடனே வறட்சியானது போய்விடும். ஏனெனில் தேங்காய் எண்ணெயில் உள்ள ஃபேட்டி ஆசிட் வறட்சியை நீக்கி, உதட்டை எண்ணெய் பசையுடன் வைக்கும்.

• தக்காளியை நறுக்கி, அதனை வறட்சியடைந்த உதட்டில் தடவினால், வறட்சி
நீங்கிவிடும். வேண்டுமெனில் தக்காளியில் தேனை தடவியும் உதட்டில் மசாஜ் செய்யலாம்.

• வறட்சியான மற்றும் பொலிவிழந்த உதட்டிற்கு எலுமிச்சை சிறந்ததாக இருக்கும். ஏனெனில் பொதுவாக எலுமிச்சை இறந்த செல்களை சருமத்தில் இருந்து வெளியேற்றுவதில் சிறந்தது. எனவே இதனை உதட்டில் தடவினால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடு பொலிவாகும். மேலும் இந்த முறையில் சிறிது தேனையும் சேர்த்து செய்து, உதடு வறட்சியடையாமல் இருக்கும்.

• உடலில் நீர் வறட்சி இருந்தாலும், உதடுகளில் வறட்சி ஏற்படும். எனவே அதிகமான அளவில் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இதனால் வறட்சி நீங்குவதோடு, உடலும் நன்கு பொலிவோடு இருக்கும்.

பெண்களில் முகத்தில் உள்ள முடிகளை போக்க...




*பெண்களின் அழகைக் கெடுப்பதில் முகத்தில் தோன்றும் முடிகளும் ஒன்று. இதனைப் போக்குவதற்கு நிறைய பராமரிப்புகளை பெண்கள் பின்பற்றி வருகின்றனர்*

*இருப்பினும் அவை வளர்ந்து முகத்தை அசுத்தமாகவும், கருப்பாகவும், அழுக்குடன் இருப்பது போன்றும் வெளிப்படுத்துகிறது. இத்தகைய முடிகளைப் போக்குவதற்கு ப்ளீச்சிங் தான் சிறந்தது. ஆனால் அவை
சருமத்திற்கு மிகவும் நல்லதல்ல.

மஞ்சள் மற்றும் கடலை மாவு:

ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து அதில் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும்.

குறிப்பாக முடி உள்ள இடத்தில் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடும்.

மஞ்சள் மற்றும் உப்பு:

ஸ்கரப் செய்வதற்கு உப்பு மற்றொரு சிறந்த அழகுப் பொருள். இதனை வைத்து ஸ்கரப் செய்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, முகத்தில் இருக்கும் முடியும் உதிர்ந்து அதன் வளர்ச்சி தடைபடும். அதற்கு மஞ்சள் தூளுடன், உப்பு சேர்த்து, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் பால் விட்டு கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்தால் முகம் பளபளப்புடன் இருப்பதோடு, முகத்தில் இருக்கும் முடியும் இயற்கையாக நீங்கிவிடும்.

எலுமிச்சை மற்றும் தேன்:

இந்த ஸ்கரப்பை செய்தால் முகம் நன்கு வெள்ளையாவதோடு முடியில்லாத பட்டுப் போன்ற சருமத்தைப் பெறலாம்.

இந்த முறைக்கு எலுமிச்சை சாற்றுடன் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

சர்க்கரை ஸ்கரப்:

இந்த ஸ்கரப்பில் முகத்தை கழுவி பின் சர்க்கரையை கொண்டு ஸ்கரப் செய்ய வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம். பருக்கள் உள்ளவர்களும் இந்த முறையை பின்பற்றினால் பருக்களை போக்கலாம்*

உங்களது கழுத்து கருத்துப்போய் உள்ள‍தா?



*சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலை வது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப்போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழி முறைகள் இதோ.. *

** கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப் பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும். ***

** பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத் தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும். ***

**முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும். ***

** பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும். ***

** சிலருக்கு செயின்போட்டு, அதனால் பின்கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்.*

செவ்வாய், 15 ஜனவரி, 2013

பருக்களின் வடுக்களை போக்க முடியுமா?…




பருக்கள் வருவதை விட, அவை விட்டுச் செல்லும் வடுக்கள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பருக்கள் வராமல் தடுக்கவும், பரு வடுவைப் போக்கவும் வழி உள்ளதா? இந்த கேள்விக்கு நமது அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதா கூறும் யோசனை:

பருக்கள் வந்ததால் முகத்தில் இருக்கும் ஓரிரு வடுக்களை நிச்சயமாக போக்க முடியும். முதலில் வடுக்கள் ஏன் ஏற்படுகின்றன என்றால், முகப்பரு வந்ததும் அதனை நகத்தால் கீறுகிறார்கள்.

நகம் பட்டாலே வடு விழுந்துவிடும். அதனை உடனடியாக போக்க முடியாது. சிறிது காலம் பிடிக்கும். சிலருக்கு பருக்கள் வந்து முகத்தில் சிறிய பள்ளங்களே ஏற்பட்டிருக்கும்.

முக‌ப்பரு வ‌ந்தா‌ல் அதனை ‌நீ‌க்குவத‌ற்கு மு‌ன்பு, ஐ‌ஸ் க‌ட்டிகளா‌ல் ஒ‌த்தட‌ம் கொடு‌த்த ‌பிறகு அ‌தி‌ல் கை வை‌ப்பது ந‌ல்லது. இதனா‌ல் பரு‌க்க‌ளி‌ன் வ‌ழியாக ர‌த்த‌ம் வெ‌ளியாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌கிறது. பொதுவாக பரு‌க்க‌ள் வ‌ந்தா‌ல் அது மு‌ற்‌றிய ‌நிலை‌யி‌ல் அ‌தி‌ல் இரு‌க்கு‌ம் வெ‌ள்ளையான ‌திரவ‌த்தை எடு‌த்து ‌விடுவது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். அ‌திலு‌ம் ம‌ற்ற இட‌ங்க‌ளி‌ல் அவை படாம‌ல் எடு‌க்க வே‌ண்டியது‌ம் அவ‌சியமா‌கிறது.

மேலு‌ம், பருவை ‌நீ‌க்குவது ‌எ‌ன்பதை கவனமாக செ‌ய்ய வே‌ண்டு‌ம். பருவை கைகளா‌ல் ‌கி‌ள்‌ளி எடு‌த்து‌விடு‌கிறோ‌ம். அ‌தி‌ல் இரு‌ந்து வெ‌ள்ளையான ‌திரவ‌ம் வெ‌ளியான ‌பிறகு ர‌த்த‌ம் வரு‌ம். அதனை துடை‌த்து‌ப் போ‌ட்டு‌வி‌ட்டு அ‌ப்படியே ‌வி‌ட்டு‌விட‌க் கூடாது. அ‌ப்படி ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌ன் பரு‌க்க‌ள் பரவு‌கிறது.
பரு‌க்க‌ள் வ‌ந்தா‌ல் அதனை ‌நீ‌க்‌கியது‌ம் உடனடியாக அதனை சு‌த்த‌ப்படு‌த்‌தி‌வி‌ட்டு அ‌தி‌ல் ஏதாவது ஒரு பே‌ஸ் பே‌க்கை (‌க்‌ரீ‌ம்) போட வே‌ண்டு‌ம். அ‌ப்படி போடா‌வி‌ட்டா‌ல், பரு‌வி‌ல் ஏ‌ற்ப‌ட்ட துளை‌‌க்கு‌ள் தூசு, துக‌ள்க‌ள் போ‌ய் பெ‌ரிய ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌ம்.

முகப்பரு வந்தவர்கள் அதிலும், அதிகமாக முகப்பருவினால் பாதிக்கப்படுபவர்கள் தங்களது முகத்தை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். பருக்கள் வருபவர்கள் எந்த விதமான க்ரீம்களையும் பயன்படுத்தக் கூடாது. சிலரது முகத்தில் விரலைக் கூட வைக்க முடியாது. அந்த அளவிற்கு வலி எடுக்கும். அவர்கள் அழகுக் கலை நிபுணரிடம் செல்வதை விட, ஒரு தோல் மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது.
அழகுக் கலை நிபுணரால் எல்லாமே செய்ய முடியாது. எனவே, அவர்களுக்கு அடிப்படையில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை மருத்துவர் மூலம் அறிந்து கொண்டு அதற்கு முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பருவை ம‌‌ட்டு‌ம் ‌நீ‌க்‌கி‌வி‌ட்டா‌லு‌ம், உ‌ள்ளு‌க்கு‌ள் இரு‌ந்து ‌சீ‌‌ழ் போ‌ன்ற ஒ‌ன்று வ‌ந்து கொ‌ண்டே இரு‌க்கு‌ம். அதனை எ‌வ்வளவுதா‌ன் எடு‌க்க முடியு‌ம். ஒரு வேளை அது சரும‌த்‌தி‌ற்கு அடி‌யிலேயே த‌ங்‌கி‌வி‌ட்டாலு‌ம் ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌ம். அ‌திகமாக எடு‌த்தாலு‌ம் பரு இரு‌ந்த இட‌த்‌தி‌ல் வடு ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம். எனவே பருவை அழகு‌க் கலை ‌நிபுண‌ரிட‌ம் செ‌ன்று ‌நீ‌க்‌கி‌க் கொ‌ள்வதை ‌விட, அ‌திகமாக பரு இரு‌ப்பவ‌ர்க‌ள் ஒரு மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்வதுதா‌ன் ந‌ல்லது.

பரு‌க்க‌ளி‌னா‌ல் ஏ‌ற்ப‌ட்ட வடு ‌நி‌ச்சயமாக போகு‌ம். அத‌ற்கு ஒரு ‌நீ‌ண்ட ‌சி‌கி‌ச்சை உ‌ள்ளது. முத‌லி‌ல் பரு உ‌ள்ளவ‌ர்க‌ள் பேஷ‌ிய‌ல் செ‌ய்து கொ‌ள்ளவே‌க் கூடாது. ஏ‌ன் அ‌ப்படி‌க் கூறு‌கிறே‌ன் எ‌ன்றா‌ல், பரு வரு‌கிறது எ‌ன்றா‌ல் அவ‌ர்களது சரும‌த்‌தி‌ல் அ‌திக‌ப்படியான எ‌ண்ணெ‌ய் பசை உ‌ள்ளது. மேலு‌ம், பே‌‌ஷ‌ிய‌லி‌ன் போது பய‌ன்படு‌த்து‌ம் ‌க்‌ரீ‌ம்க‌ள் அனை‌த்‌திலு‌ம் அ‌திக‌ப்படியான எ‌ண்ணெ‌ய் பசைதா‌ன் இரு‌க்கு‌ம். எனவே அவரகளது சரும‌த்தை பேஷ‌ிய‌ல் மேலு‌ம் ‌சி‌க்கலா‌க்கு‌ம்.

முக‌த்‌தி‌ல் அ‌திகமான பரு‌க்க‌ள் இரு‌ப்பவ‌ர்க‌ள் அவ‌சியமாக பேஷ‌ிய‌ல் செ‌ய்தே ஆக வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌த்தா‌ல் முத‌லி‌ல் ஒரு மரு‌த்துவ‌ரிட‌ம் ஆலோசனை பெ‌ற்று‌வி‌ட்டு ‌பிறகு பேஷ‌ிய‌ல் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம்.

‌ப்‌ளீ‌ச் செ‌ய்யலா‌ம். ஏனெ‌னி‌ல் ‌ப்‌ளீ‌ச் செ‌ய்வதா‌ல் முக‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் எ‌ண்ணெ‌ய் த‌ன்மை ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌விடு‌ம். எனவே ‌ப்‌ளீ‌ச்‌சி‌ங் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம். தவ‌றி‌ல்லை.

சனி, 29 டிசம்பர், 2012

இயற்கையான அழகு குறிப்புகள்



தற்காலத்தில் தங்களின் அழகை வெளிப்படுத்திக் காட்டுவதில் பெண்களுக்கு அதிக
ஆர்வமும், போட்டியும் இருக்கிறது..

ஒவ்வொருவரும் தன்னைவிட அழகானவர்கள் யாரும் இல்லை என மனதில்
நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

அவரவர் மனதில் அவரவர்களே கதாநாயகனாக, கதாநாயகியாக உருவகித்துக்கொண்டு
வாழ்ந்துவருகிறோம். இது அனைவருக்கும் மனதில் இருக்கும் பொதுவான எண்ணங்கள்தான்.

இருப்பினும் இயற்கையை மீறி சில செயற்கைத் தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய
அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீசித்துப் பார்ப்பவர்கள்
இன்று ஏராளம். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை..

இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய
உடலழகைப் பேண முடியும்.

*இயற்கையான அழகு குறிப்புகள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம். *

முதலில் நகம். நகத்தை தூய்மையாக வைத்துக்கொண்டாலே உடலில் பாதி நோய்கள்
அண்டாது. மருத்துவர்கள் கூட வைத்தியம் பார்த்தவுடன் அடிக்கடி கைக்களை சோப்பு
நீரில் கழுவுவதை நாம் பார்த்திருப்போம்.

காரணம் மனிதர்களுக்கு கிருமிகள் பெரும்பாலும் கைகளின் மூலமாகவே வாயிற்கும்,
வயிற்றும் சென்று பல உபாதைகளை ஏற்படுத்துகிறது. அதனால்தான் கைகளை நன்றாக கழுவி
சுத்தம் செய்து பிறகே சாப்பிட வேண்டும் என்றும், அடிக்கடி நகத்தை கடிக்க
கூடாதென்றும் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.

*நகத்தைப் பராமரிக்க: *

பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும்
குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு
கிடைக்கும்.

*இதழ்களை பராமரிக்க: *

நம் வீட்டில் பொரியலுக்கு வாங்கும் பீட்ருட் சிறிதளவு இருந்தாலே போதும்.
உங்களுக்கு எந்த வித Lipstick-ம் தேவையில்லை. பீட்ரூட்டை வெட்டி உங்கள்
இதழ்களில் இலாசக லிப்ஸ்டிக் பூசுவதைப் போல அழுத்தி தேய்த்து வந்தாலே போதும்.
உங்களுக்கு இயற்கை கொவ்வைச் செவ்வாய் இதழ்கள் கிடைக்கும்.

பலரையும் கவர்ந்திழுக்கும் இயற்கையான செந்நெறி உதடுகளைப் பெறலாம்.

கூடவே இந்தப் பதிவில் இருப்பதைப் போலவும் நீங்கள் செய்து பார்க்கலாம்.
ரோஜாப்பூ போன்ற இதழ்களைப் பெற வேண்டுமா?

*முகத்தைப் பராமரிக்க: *

உங்களுக்கு அமுல்பேபி போன்ற கொழுக் மொழுக் முகத்தைப் பெற வேண்டுமா? நீங்கள்
செய்வதென்னவோ சுலபமான வேலைதான்.

நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து உங்கள்
முகத்தை கழுவிப் பாருங்கள்.

பயற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில்
பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி.

இந்த இரண்டு முறைகளை நீங்கள் பின்பற்றினாலே உங்கள் முகம் "பளிச் பளிச்"
போங்க..!

*கழுத்தை பராமரிக்க: *

நிறையப் பெண்கள் செய்யும் தவறே இதுதான்.. அழகாக முகத்தை பரிமரிக்க
தெரிந்தவர்கள் கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். இதனால் கழுத்து
கருத்துப்போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும்.

சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு,
இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு
பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ்
செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை
நிறம் நீங்கி பள பளக்கும்.

*சருமத்தைப் பராமரிக்க: *

ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள்.
அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை
அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட
சருமத்தில் நிறம் சிவப்பாக காட்யளிக்கும்.

*கருவளையம் நீங்க: *

கருவளையம் என்றாலே கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தைத்தான் குறிக்கும்.
கருவளையம் நீங்க இதுதான் சிறந்த வழி. வெள்ளரிக்காய் விடையை பொடி செய்து, அதில்
தயிர் சேர்த்து பசைப்போல(Paste)ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையும் உள்ள
பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல்
போயிருக்கும்.

*கருப்பு திட்டுகளை நீக்க: *

சிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள்
காணப்படும். இதை கிராம புறத்தில் "மங்கு" என குறிப்பிடுவார்கள். இவற்றைப்
போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர்கலந்து நன்றாக
அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள்
இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். சில முறை இந்த முறையை நீங்கள்
கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு(கருந்திட்டு)மறைந்துவிடும்.

*Nature cleanser (இயற்கை கிளென்சர்)*

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பால் ஒரு நல்ல cleanser ஆகும். குளிர்ந்த பாலில்
பஞ்சை நனைத்து முகம் துடைக்கலாம். இது ஒரு சிறந்த க்ளென்சிங் ஆகும்.

இளநீரும் ஒரு மிகச்சிறந்த க்ளென்சிங் பொருள். எனவே நீங்கள் தேங்காய்
உடைக்கும்போது வெளியேறும் நீரை வீணாக்காமல் அவற்றை முகத்தில் தடவிக்கொள்ளலாம்.

எண்ணெய் பசை உள்ள சருமத்தை உடையவர்கள் எலுமிச்சை சாற்றில் சில துளிகள் பால்
சேர்த்து கலந்து, கலவையில் பஞ்சினை நனைத்து சருமத்தை துடைக்காலம்.

வறண்ட சருமத்தை உடையவர்கள் பாலுடன் தேன் கலந்து பயன்படுத்தலாம்.

*முகப்பரு போக்க: *

முகத்தை, முகத்தின் அழகை கெடுப்பதில் முகப்பருவிற்கு பெரும்பங்கு உண்டு. பரு
வந்து காய்ந்து போனால் முகத்தில் திட்டு திட்டாக, கருமை நிறத்துடன் முகம்
பொலிவிழந்து காணப்படும். எனவே முகத்தில் பரு வராமல் பார்த்துக்கொள்வது நல்லது.
முகப்பருவை நீக்க ஜாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்துக்கொள்ளுங்கள்.
அதனுடன் சந்தனத் தூளைக் கலந்து முகப்பரு, முகப்பரு தழும்புகளின் மீது தடவி வர
முகப்பருக்கள் நீங்கும். முகம் பொலிவு பெறும்.

இரண்டு ஸ்பூன் புதினா சாற்றுடன், ஒரு ஸ்பூன் பயிற்ற மாவைக் கலந்து முகப்பரு
தழும்புகளின் மீது பூசிவர முகப்பரு தழும்புகள் நீங்கும்.

*முகம் பொலிவு பெற ஒரு Hi-tech இயற்கை மருத்துவ முறை: *

பாதாம் பருப்பு. பெயரிலேயே இது ஒரு அந்தஸ்தை கொண்டுள்ளது. இந்த பாதாம் பருப்பை
ஊறவைத்து  பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்தெடுங்கள். பேஸ்ட்போல
ஆக்கிக்கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசுங்கள். 20-25 நிமிடங்கள்
கழித்து முகத்தைக் கழுவிப் பாருங்கள்.. நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள்...

முகம் பளிச் பளிச்தான் போங்க...!!

*மற்றொரு இயற்கையான எளிய முறை:*

கடலை மாவு.. இது நம் வீட்டிலேயே அடிக்கடி பயன்படக்கூடியது இல்லையா...?
காலையில் குளிக்கப் போகும் முன் இதை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் குழநைத்து
முகத்தில் தடவுங்கள். அரைமணி நேரம் ஊறிய பிறகு குளித்துவிடுங்கள். தொடர்ந்து
இரண்டு வாரங்கள் இந்த முறையைப் பின்பற்றினாலே உங்கள் முகம் பளபளக்க
ஆரம்பித்துவிடும். விரைவான பலனைக் கொடுப்பதில் கடலைமாவு முன்னணி வகிக்கிறது.

*முகச்சுருக்கம் போக்க: *

ஆவாரை இருக்கும்போது சாவாரைக் கண்டதுண்டோ..? இது பழமொழி. இந்த
பழமொழியிலிருந்தே ஆவாரையின் மருத்துவ குணத்தை நாம் உணரலாம். இது
முகச்சுருக்கத்தைப் போக்கவும் பயன்படுகிறது. ஆவாரம் பூவை காய வையுங்கள்.
 காய்ந்த ஆவாரம் பூ பொடி செய்து 5 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். கூடவே காய்ந்த
புதினா இலைப் பொடி 5 கிராம், கடலை மாவு 5 கிராம், பாசிப்பயிறு மாவு(பயற்ற
மாவு)5 கிராம்.

இவற்றுடன் Olive Oil கலந்து நன்கு குழைத்து முகத்தில் பூசி பதினைந்து
நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு நன்கு குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை
கழுவுங்கள். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இந்த முறையைச் செய்து வந்தால் தோலில்
சுருக்கங்கள் மறைந்து தோல் இளமை பெறும். புதுப்பொலிவுடன் காட்சி தரும்.

*மற்றொரு முறை: *வெள்ளிக் காய் துண்டு இரண்டும், நாட்டுத் தக்காளி ஒன்றும்,
சிறிதளவு புதினா இலை அவற்றை எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு
அரைத்த விழுதை முகத்தில் நன்றாக பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு
முகத்தை நல்ல தூய்மையான, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள்
முகத்தோற்றத்தில் பளபளப்பை காண முடியும். தொடர்ந்து இவ்வாறு இரண்டு வாரங்கள்
செய்து வர உங்களால் நம்ப முடியாத அளவிற்கு உங்கள் முகம் பொலிவு பெற்றிருக்கும்.


மேலே குறிப்பிட்ட அனைத்தும் இயற்கையாக விளைந்த பொருட்களைப் பயன்படுத்தி
செய்வதால் எந்த வித பக்கவிளைவுகள் ஏற்படாது. மேலும் இயற்கை மருத்துவப்
பொருட்களைக் கொண்டு செய்வதால் முழுப் பயன்களையும் பெற குறைந்த பட்சம் இரண்டு
வாரங்கள், பதினைந்து நாட்கள் ஆகும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்..
நீங்களும் உலக அழகிதான்...!!! உலக அழகன்கள்தான்...!!!

வியாழன், 3 மே, 2012

கருப்பா இருந்தாலும் களையாக இருக்கனுமா?



Nandita Das


கருப்பான சருமம் என்பது நம் ஊரைப் பொருத்தவரை இரண்டாம்பட்சமாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் சிவந்த மேனி கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமைதான். கருப்பு என்பது வெறுக்கத்தக்க நிறமில்லை. இந்தியர்களின் உண்மை நிறமே கருப்புதான். கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் களையாக மாற சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.

பப்பாளி, ஆரஞ்சு பழ பேஷியல் 

முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும். சருமத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் வெளியேறிவிடும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும். 20 நிமிடம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.

நன்கு கனிந்த பூவன் வாழைப் பழத்தை பிசைந்து அத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற விட்டுக் கழுவி வர, நிறம் பளிச் என்று மாறும்.

முட்டைகோஸ்
பேஷியல்

காய்கறி பேஷியலுக்கும் முதலில் காய்ச்சாத பாலால் முகத்தைத் துடைக்கவும். பின்னர் முட்டைக் கோஸை பச்சையாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வடிகட்டி சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் செய்யவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ முகம் பளிச் தோற்றத்துடன்

இந்த இரண்டு பேஷியல்களையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.

குங்குமாதி
தைலம்

சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம். இதனால் கருப்பான சருமம் களையாகும்.

ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்யவும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டும். இதனால் முகம் நிச்சயம் பொலிவாகும். வெயிலில் டூ வீலரில் செல்கிற போது சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம். அதேபோல் கைகளுக்கு கிளவுஸ் அணிவது சருமத்தை பாதுகாக்கும்.

குங்குமப்பூ

சூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும். இதனால் சரும நிறத்தில் பொலிவு கூடும். அதேபோல் பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.