செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

திருமணமான பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வுகளும் – மருத்துவ அலசல்



திருமணமான பெண்களிடம் அவர்களது செக்ஸ் வாழ்க்கைப் பிரச்சி னைகள் குறித்து சமீபத்தில் ரகசிய ஆய்வு நடத்தப்பட்டிரு க்கிறது. அதன்படி நூற்றுக்கு தொண்ணுறு பெண்களுக்கு செக்ஸ் உறவு தொடர்பான ஏதோ ஒரு பிரச்சினை இருப் பது கண்டறியப் பட்டுள்ளது.

திருமணமான பெண்களை அதிகம் பாதிக்கும் சில செக் ஸ் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வு முறைக ளும் அல சப்பட்டன. அதன்படி…. மிகக் குறைவான செக்ஸ் ஆர்வத் திற்குக் காரணம்….
குழந்தைப் பருவத்தில் பெரும்பாலானபெண்களுக்கு ஏதோ ஒரு வகையில் மோசமான செக்ஸ் அனுபவம் கிடைக்கிறது.

செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் அவர்கள் சந்திக்கும் இந்த அனுபவம், அவர்கள் வள ர்ந்து பெரியவர்களானதும் செக்ஸ் குறித்த தவறான எண்ணத்தை உரு வாக்கி விடுகிறது.

இதனால் பல பெண்களுக்குத் திரு மணத்திற்குப் பிறகும் செக்ஸ் அத்தனை ரசிப்பிற்குரியதாக இல்லைசாப்பிடுவது, தூங்குவது என்பது மாதிரி செக்ஸ் உறவும் ஏதோ மாமூலான ஒன்று என்கிற ரிதியில் செல்லும் போதும் பெண்களுக்கு அதன் மீதான ஆர்வம் குறைகிறது.


இன்னும் சில பெண்களுக்கு பிரசவம், களைப்பு, கோபம், மாத விலக் கு சுழற்சியில் ஏற்படும் கோளாறுகள், டென்ஷன் ஆகியவற்றின் காரணமாகக் கூட செக்ஸில் ஆர்வம் குறைகிறதாம்.

மனரிதியான பாதிப்புகளாக இருந்தால் செக்ஸ் தெரபி மற்றும் கவுன் சலிங் மூலமும், உடல் ரிதியான பாதிப்புகளுக்கு ஹர்மோன் ரிப் ளேஸ்மென்ட் தெரபி மூலமும் சிகிச்சை அளித்து இதைக் குணப் படுத்தலாம்.


பிறப்புறுப்பு வறட்சி:
இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. ஈஸ்ட்ரோஜன் ஹர் மோன் அளவு குறையும் போது வறட்சி ஏற்படலாம். தாய்ப் பாலூட் டும் பெண்களுக்கும், மெனோபாஸ் காலக் கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் இது சகஜம். இதற்கும் ஹர் மோன் ரிப்ளேஸ்மென்ட் தெரபி பலனளிக்கும்.

குடிப் பழக்கம் இருக்கும் பெண்களுக்கும் பிறப்புறுப்பு வறட்சி ஏற்ப டுகிறது. ஆல்கஹலே அந்த வறட்சிக்குக் காரணம். குடி யை நிறுத்த வதன் மூலமும், வழுவழுப்புத் திரவங்களை உபயோகிப்ப தன் மூலமும் இதைக் குணப்படுத்தலாம்.


உறவின் போது வலி:
உறவின் போது சில பெண்க ளுக்குத் தாங்கவே முடியாத அளவுக்கு வலி ஏற்படலாம். பிறப்புறுப்புப் பாதையில் இரு புறங்களி லும் பட்டாணி அளவுக்குப் பெண்களு க்கு பார்த்தோலின் சுரப்பிகள் என்று உண்டு.
இவற்றின் வேலையே உறவின்போது வழுவழுப்புத் திரவத்தைக் கசியச் செய்வதுதான். இவை பாதிக்கப்படும் போது பிறப்புறு ப்பில் வீக்கம், எரிச்சல் ஏற்படு வதோடு சில சமயங்களில் நட க்கவே முடி யாத அளவுக்குக் கூட வலி தீவிரமாகலாம்.

மருத்துவரின் ஆலோசனையின்பேரில் இதை ஆன்டிபயா டிக் மருந்துகளின் மூலமோ, தேவைப்பட்டால் அறுவை சிகிச் சை மூலமோ சரிசெய்து விட முடியு ம்.

வலி ஏற்படுகிற சரியான இடத்தையும், சரியான நேரத்தையும் (உறவு தொடங்கிய உடனேயா, உறவின் இடையிலா, உச்சக் கட்டம் அடை கிற போதா) சொன்னால் மரு த்துவர்களுக்கு சிகிச்சை ளிக்க உதவியாக இருக்கும்.


உறவே கொள்ள முடியாத நிலை:
ஆர்வமும், ஆரோக்கியமும் இருந்தும் கூட சில பெண்க ளால் உறவில் ஈடுபட முடி யாத நிலை ஒன்று உண்டு. அதற்கு வாஜ னிஸ்மஸ் என் று பெயர். செக்ஸைப் பற்றிய பயம், கட ந்த காலக் கசப்பான செக்ஸ் அனுபவங்கள், பிரசவம் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

மெனோபாஸை அடைந்து விட்ட பெண்களுக்கு பிறப்புறுப்புத் திசுக்க ள் சுருங்கியதன் விளைவாக கசிவு குறைவாக இருக்கும். இவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.

செக்ஸ் தெரபியின் மூலம் இந்தப் பெண்களுக்கு இடுப்புச் சுவர் தசைகளை எப்படி லாக்ஸ் செய்வது என் று கற்றுக் கொடுக்கப்படும். மேலும் பெண் மேலிருந்த நிலையில் உறவு கொள்வதும் இதற்குத் தீர்வாக அமையும்.


உச்சக் கட்டத்தை அடைய முடியாமை:
 சில பெண்களுக்கு உறவின் ஏதேனும் ஒரு கட்டத்தில் உச்சக் கட்டம் சாத்தியமாகிறது. இன்னும் சிலருக்கு செக்ஸின் போது குறிப் பிட்ட சில நிலைகளைக் கையாளும் போது உச்சக் கட்டம் கிடைக்கிறது.
இன்னும் சிலர் சுய இன்பம் காண்பதன் மூல ம் மட்டுமே உச்சக் கட் டம் அடைகிறார்கள். குறிப்பிட்ட சிலருக்கு உச்சக் கட்டம் என்பது எப்போதுமே சாத்தியமாவதில்லை.

உச்சக் கட்டம் அடைய முடியாத பெண்கள் செக்ஸை அனுபவிக்கத் தகுதியற்றவர்கள் என்றோ, அவர்கள் உடல ளவிலோ, மனதளவிலோ பாதிக்கப்பட்டவர்கள் என்றோ அர்த்தமில்லை.

உறவின் போது பெரும்பாலா பெண்களது கவனம் தன் கணவன் மீதே இருக்கிறது. கணவன் தேவைகளை முழு மையாக நிறைவேற்றுகிறோமா என்பதிலேயே அவர்கள் கவனம்போய் விடுவதால் தன் னை எது உச்சக்கட்டம் அடை யச் செய்யும் என்பதைப் பற்றி நினைக் கத் தவறி விடுகிறார்கள்.
இந்த மாதிரிப் பெண்கள் உறவு இல்லாத நேரங்களில் தன் உடலைத் தொட்டுப் பார்த்து அதில் எந்த இடம் அல்லது எந்த மாதிரி யான ஸ்பரிசம் தனக்குக் கிள ர்ச்சியைத் தருகிறது என்று கண்டறிய வேண்டும்.

அதைத் தன் கணவனிடம் சொல்லத் தயங்கக் கூடாது. எல்லாவற்று க்கும் மேலாக உறவின்போது அவசரம் இரு க்கக் கூடாது. உச்சக் கட் டம் அடையவும் பெண்கள் மேல் நிலையில் இருந்து உறவுகொள்வது பலனளிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

செல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு..



நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக் கொண்டி ருக்கலாம்.

அது எப்படிஎன் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?” என்று யோசிக்கிறீர்களாவெயிட்உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்…(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)

 அடையாறில் வசிக்கிறா ர்கள் மதுமிதா- ராம். புது மணத் தம்பதிகளான இவ ர்கள் .டி. துறையில் வே லை செய்கிறார்கள். ஒரு நாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்ப ட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்க ப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த மது மிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட் ரூமில் அந்தரங்கமாக இருந்தபோது சும்மா ஜாலிக்காக செல்போனி ல் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல் போனிலிருந்து அப்போதே அதை அழித்து ம் விட்டார்கள். ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிரு க்கிறது. ‘செல் போனில் இருந்து டெலிட் செய்த ஒரு வீடியோ எப்படி இண்டர் நெட் டுக்குப் போகமுடியும்? என்பதுதானே உங் கள் டவுட். அதற்கான விடையைத் தெரிந் துகொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச் சிச் சம்பவங்களையும் பார்த்து விடுவோம்.

அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணி ன் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித்தி ரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கி றாள். உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என அப்பாவை நச்சரிக்கவே, அவ ரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார்.



ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, செல்போனில் தன் உடலில் துணியில்லாம ல் படம் பிடித்தால் என்ன என்று தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம் துணியில்லாத தன்னு டைய அந்த வீடியோவை ரசித்து ப் பார்த்துவிட்டு டெலிட் செய்து விட்டாள். ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டி ருக்கிறது.

இதேபோல் நெல்லையைச் சேர் ந்த லட்சுமி -குமார் தம்பதியரும் தங்கள் அந்தரங்கத்தை செல் போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை டெலிட் செய்து விட்ட னர். ஆனால் அந்த போன் ஒருநாள் தொலைந்து போனது. புது செல் போன் வாங்கிக் கொண்டார்கள். பழைய போனை மறந்தும் விட் டார்கள். ஆனால் பழைய செல்போனில் இருந்த அந்த தம்பதியினரி ன் அந்தரங்கம் இப்போது இணையதளம் முழுக்க பரவிக் கெண்டி ருக்கிறது.

இதுமட்டுமல்ல, குற்றாலத்தில் குளியல் போடும் கல்லூரி மா ணவிகளின் வீடியோ, ஹாஸ்ட ல் ரூமில் பர்த்டே பார்ட்டி கொ ண்டாட்டத்தில் குத்தாட்டம் போ டும் மாணவிகளின் வீடியோஎன ஏகப்பட்ட வெரைட்டிகளில் அந்தரங்க வீடியோக்கள் இண்டர்நெட்டில் நிரம்பிக் கிடக்கின்றன. செல்போனில் டெலிட் செய்யப்பட்ட ஒரு வீடியோ எப்படி இணையத் துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர்.

அந்த புதிருக்கான விடையின் பெயர்ரெக்கவரி சாஃப்ட்வேர் (recovery software)
மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் ஒன்றுபோல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமரா க்களும் ஒருநாள் பழுதடைந்தது. அவற்றைச் சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்து தான் அவர்களின் மானம் இணைய தளத்தில் பறக்கவிடப்பட்டது.
இதுபோன்ற வில்லங்கச் சம்பவங்க ளின் பின்னணி என்ன? அண்ணா நக ரில் செல்போன் கடை வைத்திருக் கும் மூர்த்தி விரிவாகச் சொல்கிறார்.

செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அது குறி த்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல் போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் டெலி ட் செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும்.

 அந்த விஷயம் தெரியாமல்தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்க ளின் படுக்கை அறைக் காட்சிக ளை செல்போனிலும், டிஜிட்டல் கேமரா விலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள். பின்னர் டெலிட் டும் செய்து விடுகிறார்கள். ஆனால் எலெக்ட்ரானிக் பொரு ட்கள் என்றாவது ஒரு நாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக் வேண்டி வரும். அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது.

சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன டெலிட் செய்யப்பட் டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள். இதற்காக அழிக்கப்பட்ட தக வல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பலரெக்கவரி சாஃப்ட் வேர்கள் இருக்கின்றன. இதன் மூலம் திரும்பப் பெறப்படும் வீடியோ மற்றும் போட்டோக்க ளில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவி டுவார்கள். இந்த மாதிரியானஹோம் மேட் செக்ஸ் வீடியோ க்கள் எனப்படும் சம்பந்தப்பட்ட வர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக் கி என்பதால் இந்த அயோக்கியத்தனத்தை பல கடைக்காரர்கள் துணிந்து செய்கிறார்கள் என்கிறார்.

இதைத் தவிர்க்க என்ன செய்வது?

முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவை யோ கொண்டு செல்லாதீர்கள். காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வ ளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக் கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண் டும்.

இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது. அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நா ளை சூழ்நிலைகாரணமாக பிரிந்து வேறொ ருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம். ஆனால்ஏமாற்றப்பட்ட தாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகி றார்கள்.

அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன்வெப் கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள் . கம்ப்யூட்டரில் அது பதிவு செ ய்யப்படலாம். அந்த கம்ப்யூட்ட ர்கள் ஒருநாள் பழுதடைந்து சரி செய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பர வக்கூடும். ஜாக்கிரதை!
ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போ தும்உலகம் முழுக்க அது பரவி விடும். அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது. அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

இப்போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களின் வரவால் ஒவ்வொருவரும் கேமராமேனாகி விட்டார்கள். பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமா கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கேமராக்கள் வந்து விட்டன.

தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணிக் கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்ட மிடுங்கள் உஷாருப்பா.. உஷாரு..

வியாழன், 7 பிப்ரவரி, 2013

பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் ‘நாப்கின்’ – அதிர வைக்கும் அதிர்ச்சி தகவல்


”உடல் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டும் என்று நாம் விலை கொடுத்து வாங்கும் பொருட்களே, நமக்கு ஆரோக்கிய கேட்டினை ஏற்படுத்தும் காரணியாக இருந்தால்..? அதுதான் நட க்கிறது பெண்கள் மாதவிடாய் காலங் களில் பயன்படுத்தும் ‘நாப்கின்’ விஷய த்தில்!”  அதிர்ச்சியான தகவல் சொல்கி றார், முனைவர் முகமது ஷாபீர். ‘பயோ டெக்னாலஜி’ துறையில் ஆய்வுசெய்து வரும் திருச்சியைச் சேர்ந்த ஷாபீர், அத ன் ஒரு பகுதியாக ‘நாப்கின்’ பற்றி தான் மேற்கொண்ட ஆய்வுச் செய்திகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

”இன்று சந்தையில் கிடைக்கும் சில நாப்கின்களை ஆய்வு செய்த போது, பல உண்மைகள் புரிந்தது. அந்த நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சு பயன்படுத்தப் பட்டிரு க்கிறது. மறுசுழற்சிக்கு அவர்கள் பயன் படுத்துவது, பிளாஸ்டிக் வகைப் பொருட் கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, நான்கு லேயர்களைக் கொ ண்ட நாப்கினில் முதல் லேயர்… சுத்திக ரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொரு ளாலானது; இரண்டாவது லேயர், மறு சுழற்சி செய்யப்பட்ட, அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர்; மூன்றாவது லேயர், ஜெல் (பெட்ரோலியப்பொருளால் தயாரானது); கீழ் லேயர்… பாலிதீ ன். நாப்கினை உள்ளாடையுடன் ஒட்ட வைப்பது, தொழிற்சாலை களில் பயன்படுத்தும் பசை வகை.
இரண்டாம் லேயரில் உள்ள அச்சடிக்கப் பட்ட டிஷ்யூ பேப்பரில் டையிங் ரசாயன ம் இருப்ப துடன், ஹைப்போ குளோரைட் என்ற வேதிப்பொருளாலும் அந்த பேப்பர் பிளீச்சிங் செய்யப்படுகிறது. பெண்கள் இதைப் பயன்படுத்தும்போது, நுண்ணிய துகள்களாகப் படிந்திருக்கும் இந்த ரசாய னங்கள், ஈரப்பதத்தின் காரணமாக டையாக்ஸேன் ஆக மாறுபாடடைகிறது. கே ன்சர் நோய்க்கான மூலக்காரணிகளில் … இந்த டையாக்ஸேனும் ஒன்று. தவிர, இத்தனை ரசாயனங்களால் ஆன இந்த நாப்கின்களைப் பயன்படுத்துவதால் பிற ப்பு உறுப்பில் அலர்ஜி, சிறுநீர் பாதையில் பிரச்னை, வெள்ளைப்படுதல், அதிகமான உதிரப்போக்கு, கர்ப்பவாய் கேன்சர் என்று பல பிரச்னைகள் வரிசை கட்ட நேரிடுகிறது.

நாப்கின் தயாரிப்புக்குப் பிறகு, அவை பேக்கிங் செய்து அனுப்ப ப்படுவதிலும் போதுமான சுத்தம் இருப்பதில்லை என்பதும் கவலைக்குரிய விஷயமே! அதிக விலை கொடுத்து வாங்கும் முன் னணி நிறுவன நாப்கின்களில் கூட தயாரிக்கப்படும் தேதிதான் இருக்குமே தவிர, காலாவதி நா ள் என்பது குறிப்பிடப்படுவதில் லை. சில கம்பெனி தயாரிப்புக ளில், ‘தயாரிக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்தினால் நல்லது’ என்று போட்டிருக்கிறார்கள்” என்ற ஷாபீர்,

”இன்று பெண்களின் பூப்படையும் வயது 13 என் றாகிவிட்ட நிலையில், அதிலிருந்து மெனோ பாஸ் ஏற்படும் 45 வயது வரை, மாதத்தில் மூன் று, நான்கு நாட்கள் என கிட்டத்தட்ட 30 வருட ங்களுக்கும் மேலாக அவர்கள் மாதவிடாய் சமயங்களில் நாப்கின் உபயோகிக்க நேரிடுகிற து. ரசாயனக் கலவைகளால் உருவான நாப்கி னைத் தொடர்ந்து உபயோகிக்கும்போது, அதன் பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாத தாகிறது” என்று நிறுத்தினார்.
”இதற்குத் தீர்வுதான் என்ன?” என்று அவரிடமே கேட்டோம்.

”வாங்கும் காசுக்குத் தரமான நாப்கின்களைத் தயாரித்துக் கொடு க்கும் மனசாட்சி, சம்பந்தப்பட்ட நிறுவ னங்களுக்கு இருக்க வேண்டும். இ தோ… இந்த நாப்கின் ஹாங்காங்கில் தயாரிக்கப்பட்டது. இதில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படவில்லை. பிரின்ட் எது வும் செய்யப்படாத துணிதான் பயன்ப டுத்தப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப் பட்டிருக்கும் ஜெல் என்பது, மக்காச் சோளத்தின் தண்டிலிருந்து எடுக்கப்பட்ட ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்ட ஜெல். மேலும் இந்த நாப்கினில் பய ன்படுத்தப்பட்டுள்ள ‘அனியன்ஸ் சிப்’, கிருமி நாசம் செய்யும் தன்மை கொண்ட பொருள். மேலும் இதில் இருந்து வெளியாகும் இன்ஃப்ரா ரெட் கதிர்கள் ரத்த ஓட்டத்தைத் தூண்டுவதுடன், அதை சமன் செய்ய வல் லது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள டிஷ்யூ பேப்பரும் தீங்கு விளைவி க்காதது.
வெளிநாட்டில் நாப்கின் என்பது பெண்களின் ஆரோக்கியம் சம்பந் தப்பட்ட பொருள் என்று அக்கறைப்படுவதால், அதன் தரக்கட்டுப்பாட் டு சோதனையை வலுவாக்கி இருக்கிறார்கள் . 

இந்தியாவிலோ, விளம்பரங்களுக்குக் கொடுக்கும் முக்கியவத்துவத்தை, அதன் தர மேம் பாட்டுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொ டுக்காதது, நம் இந்தியப் பெண்களின் ஆரோக் கியத்தில் அவர்களும் அரசும் கொண்டுள்ள அலட்சியத்தைத் தான் காட்டுகிறது” என்று சாடிய ஷாபீர்,
”மாதவிடாய்க் காலங்களில் தரமான நாப்கின் கள் உபயோகிக்க வேண்டும். அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை கட்டாயம் நாப் கினை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் பெண்களை பல பிரச்னைகளில் இருந்தும் பாதுகாக்கும்!” என்று வலியுறுத்தினார்

 மிகமிக கவலைத் தரக்கூடிய இந்த விஷயம் பற்றி ‘கன்ஸ்யூமர் அசோ ஸியேஷன் ஆஃப் இந்தியா’ அமைப் பின் டைரக்டர் ஆர். தேசிகனிடம் கே ட்டபோது, ”மலேஷியா, தைவான் போன்ற நாடுகளில் இருக்கின்ற வியாபாரிகள், தங்கள் நாடுகளில் எக்ஸ்பயரி ஆன மற்றும் பயன்படுத் தப்பட்ட குழந்தைகளுக்கான நாப்கி ன், சானிட்டரி நாப்கின் இவற்றை யெல்லாம் மொத்தமாக வாங்கி, ‘வேஸ்ட்’ என்று இந்தியாவுக்கு எக் ஸ்போர்ட் செய்வார்கள். சென்னைக்கு வரும் அவற்றை ராயபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைத்து, டூத் பிரஷ் மூலமா க சுத்தம் செய்து, புது நாப்கின்கள் போல இங்கே விற்பனை செய் வார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு இப்படி நடந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அரசு அதிகாரிகள் அப்படி விற்கப்பட்ட தரமற்ற நாப்கின் களை ஒட்டுமொத்தமாக அழித்தார்கள்.

இப்போது, ஷாபீர் சொல்லும் தகவல்களை, உங்கள் மூலமாகக் கேட்டு நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அவர் சொல்கின்ற விஷயத்தில் உண்மை இரு க்கிறது என்பதில் சந்தேகமே இல்ல. ஆனால், இந்த ஆய்வை அவர் அறிவியல்பூர்வமாக நிரூபித்திருக்கிறாரா என்று தெரிய வேண்டும்” என்ற தேசிகன்,

”சானிட்டரி நாப்கினுக்கு என்று வாலன்டரி தரக்கட்டுப்பாடு சர் டிபி கேட் ஐ.எஸ்-5405 என்பது தரப்படுகிறது. ஆனால், இந்த தரச்சான்றித ழோடுதான் சானி ட்டரி நாப்கின் இந்தியாவில் விற்கப்பட வேண்டும் என்று சட் டம் இல்லை. தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெற்று கொள்ளலாம் என்றுதா ன் கூறப்பட்டுள்ளது. பல கம்பெ னிகள் இதை ஃபாலோ செய்வதில்லை.

 இப்போது, ஷாபீர் கொடுத்திருக்கும் ஆய்வு அறி க்கையை உடனடி யாக, பி.ஐ.எஸ். (பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ஸ்) அமைப்பின் டைரக்டர் ஜெனரல் ஷரத் குப்தா ஐ.ஏ.எஸ்-க்கு மெயில் அனுப்பி விடுகிறேன். கூடவே நாப்கின் விஷயம் குறித்து நாங்களும் தீவிரமாக ஆராய்ச்சியில் இறங்கப் போகிறோம். அதை வைத்து, இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டிவிடலாம். எப்படியும் ஆறு மாதங்களில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கு வதை கட்டாயப்படுத்தும் வகையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று சொன்னார்.

சென்னையை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் சாதனாவிடம் இதுபற்றி கேட்டபோது, ”ஷாபீர் சொல்கின்ற தகவல்கள் அத்தனை யுமே சரி என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், சில உண்மைகள் இருக்கவே செய்கின் றன என்பதை மறுக்க முடியாது. நீங்கள் இதுபற்றி பேசுவதற்காக வருகிறேன் என்று என்னிடம் போ னில் கேட்டதுமே… பிரபல கம்பெ னிகள் தயாரிக்கின்ற சில நாப்கின் களை வாங்கிப் பார்த்தேன். அவற்றின் உள்ளே இருக்கின்ற பொருட் கள் பற்றியோ, எப்படி சுத்தமானதாக தயாரிக்கப்பட்டிருக்கிறது என் பது பற்றியோ எந்த விவரங்களும் அ தில் இல்லை. அதேசமயம், எத்தனை மாதத்துக்குள் பயன்படுத்த வேண்டும் என்கிற தகவல் இடம் பெற்றிருக்கி றது.

முன்பெல்லாம் நாப்கின்களுக்கு பதி ல் துணியை பயன்படுத்தினார்கள். ஆ னால், அதில் உள்ள சுத்தம் சந்தேகத்து க்குரியதே. அப்படி பார்க்கும்போது நா ப்கின்கள் நான்கு மணி நேரத்துக்கு பிறகு தூக்கி எறிந்து விட போகிறோ ம் என்பதால் பிரச்னை இல்லை. பொ து வாக இன்ஃபெக்ஷன் ஆவதற்கு இரண்டு நாட்கள் பிடிக்கும். அது கூட, தொடர்ந்து ஒரே நாப்கினை பயன்படுத்தும்போதுதான் ஏற்படு ம். ஆனால், அப்படி யாரும் செய்வதில்லை . மற்றபடி, எந்த முறையில் சுத்திகரிக்கி றார்கள் என்பது கேள்விக்குரியதுதான். நாப்கின்க ளை பொறுத்த வரை ஐ.எஸ்.ஐ. முத்திரை அவசியம் என்பதை நானும் வலியுறுத்துகிறேன்” என்று அக்கறையோ டு சொன்னார் டாக்டர்.