வெள்ளி, 29 ஜூலை, 2011

குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்பது தவறான எண்ணம் ?
பெண்களிடையே தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின்
எண்ணிக்கை தமிழகத்தில் இருமடங்கு அதிகரித்துள்ளது. பிறந்த குழந்தைக்கு உணவாக மட்டுமின்றி, சிறந்த மருந்தாகவும் இருப்பது தாய்ப்பால்.

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, தாது உப்புகள் அடங்கியிருப்பதால் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் பிற்காலத்தில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றன. ஒரு தாயிடம் நாளொன்றுக்கு 100 மி.லி., முதல் 1.5 லிட்டர் வரை பால் உற்பத்தியாகிறது. உணவு விகிதத்துக்கு ஏற்ற கலவை அதில் இருக்கும்.

குழந்தைக்கு பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்ற தவறான எண்ணம் பெரும்பாலான பெண்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கின்றனர். குழந்தை பிறந்த அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுத்தால், கருப்பை பழைய நிலைக்கு திரும்பும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும், 6 முதல் ஓராண்டு வரை தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை உருவாக்கும் ஹார்மோன்கள் குறைகிறதாம். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவுஜீவிகளாக இருப்பதுடன், ஆஸ்துமா உள்ளிட்ட நோய் தொற்றுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.தாய்ப்பாலின் அவசியம் குறித்து எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், குழந்த பிறந்த சில நாட்களுக்கு மட்டுமே தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த போக்கு இந்தியாவில் மட்டுமல்ல; உலகளவில் பேசக்கூடிய பிரச்னையாக உள்ளது. தாய்ப்பாலின் அவசியத்தை உணர்ந்து பல நாடுகளில் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள், நோயால் பாதிக்கப்பட்டவை, பிறக்கும் போதே தாயை இழந்த குழந்தைகளுக்காக தாய்ப்பால் வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளது.பழங்காலத்தில் குழந்தை பெறுவதும், அவற்றை வளர்ப்பதும் என குடும்ப பொறுப்புகளையே கண்கண்ட தெய்வமாக பெண்கள் கருதினர். ஆனால், இப்போது குடும்ப சுமைகளை பொறுத்து வேலைக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, அவர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பது அரிதாகிறது. இவர்கள் தங்கள் விடுமுறை நாட்களில் தாய்ப்பால் கொடுப்பதை முக்கிய பணியாக கருத வேண்டும்.

இதுபோன்ற பல காரணங்களால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தை பெற்றெடுக்கும் 2.6 கோடி பெண்களில் 2 கோடி பெண்கள் 6 மாத கால அளவுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கிறது. தேசிய குடும்ப சுகாதார சர்வேயின் படி 24.5 சதவீதத்தினர் மட்டுமே பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்கின்றனர். இது 90 சதவீதமாக உயர்ந்தால் ஒவ்வொரு ஆண்டும் 2.5 லட்சம் குழந்தைகள் இறப்பது தடுக்கப்படும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தாய்ப்பால் விழிப்புணர்வால், தேசிய சராசரியை (24.5 சதவீதம்) விட இருமடங்கு உயர்ந்து 58.8 சதவீதமாக உள்ளது. இதுகுறித்து, குழந்தைகள் நல மருத்துவர் சீனிவாசன் கூறுகையில்,‘‘ தமிழகத்தில் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து டாக்டர்கள் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் மருத்துவமனையில் தான் அதிக குழந்தைகள் பிறக்கிறது. பிறந்த அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க கூறுகிறோம்.

குழந்தையின் வளர்ச்சி குறித்த அறிவுரையின் போது, 6 மாதத்துக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது என்று திட்டவட்டமாக சொல்லி அனுப்புகிறோம். அதையும் மீறி சில பெண்கள் தண்ணீர் கலந்த புட்டிபாலை கொடுக்கின்றனர். அதனால் குழந்தைகள் படும் அவஸ்தையை சுட்டிக்காட்டி தாய்ப்பாலின் அவசியத்தை புரிய வைக்கின்றனர். கிராமப்புற தாய்மார்களை சமூகநலத்துறையின் விழிப்புணர்வு வெகுவாக சென்றடைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது‘‘ என்றார்.


30 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியவை

தாய்ப்பால் கொடுக்க தவறும் பட்சத்தில் பிறந்த குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. இந்தியாவை பொறுத்தவரை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் 48 சதவீதமும், தமிழகத்தில் 30.9 சதவீதத்தினரும் உள்ளனர். அதேபோல், எடை குறைவான குழந்தைகள் தேசிய அளவில் 42.5 சதவீமும், தமிழகத்தில் 29.8 சதவீதமும் உள்ளனர். இந்த தகவல் தேசிய குடும்ப சுகாதார சர்வேயில் தெரியவந்துள்ளது
தாய்க்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அடுத்து உருவாகும் குழந்தை பிறப்பை தள்ளி போடுகிறது. குழந்தை பிறந்த அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுத்தால் ரத்தபோக்கு கட்டுப்படுத்தப்படும். இரண்டரை ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம். சொல்லப்போனால் தாய்க்கும், குழந்தைக்கும் இடையே பாசப்பிணைப்பை ஏற்படுத்துகிறது. தாய்ப்பாலால் கிடைக்கும் நன்மைகள் குறித்து, பல்வேறு கோணத்தில் ஆய்வுகள் நடந்து வருகிறது.

எய்ட்ஸ் பாதித்தவர்களும் தாய்ப்பால் கொடுக்கலாம்
எஸ்ட்ஸ் நோய் பாதித்த தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால், அதன் மூலம் நநோய் பரவுமா என்ற கேள்விகுறி இருந்து வந்தது. அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், எஸ்ட்ஸ் பரவுவது தடுக்கப்படும் என தெரியவந்துள்ளது. அதாவது, தாய்ப்பால் கொடுக்கும் முன்புஅன்ட்டிரேட்ரோஹைல்என்ற மருந்தை உட்கொள்ள வேண்டும். இதை பின்பற்றி தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறைகிறதாம்.

பயணம் செய்பவரின் கனிவான கவனத்திற்கு
விடுமுறை விட்டாச்சு. டூர், பிக்னிக் என்று ஊர், உறவு, வீடு, நண்பர் வீடு என நகர்ந்து விட வேண்டியதுதான். புறப்படுவதற்குமுன், என்ன செய்யணும். எதை தூக்கணும், யாருகிட்ட சொல்லணும் என்று ஒரு ரவுண்டு போவோமா!

பயணச்சீட்டின் ஜெராக்ஸை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் கை கொடுக்கும். பயணத்தில் “மூத்த குடிமக்கள்’ இருந்தால், அவர்களின் வயது சான்றிதழை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும்.


நீண்ட நாள் டூர் என்றால், நகைகள், பத்திரங்கள், பணம் போன்றவற்றை வங்கி லாக்கரில் வைத்து விட வேண்டும். குறைந்த நாள் போனமா வந்தமா டைப் டூர் என்றால் தினப்படி வந்து செல்லும் பால்/ பேப்பர்க்காரர்கள், வீட்டு பணி செய்பவர்களுக்கு கூட தெரிவிக்காமல், அக்கம் பக்கத்து ஒரு வீட்டில் பார்த்துக்க சொல்லிவிட்டு, சுருக்க போய் உடனே வந்துவிடலாம்.


நகை, வாட்ச், உடை, காலணி…

வீட்டில் இருக்கும் நகை எல்லாவற்றையும் போட்டு கொண்டு “வா திருடா, திருட வா’ன்று நாமே இன்விடேலின் கொடுக்க கூடாது.


மிக மெல்லிய, சிறிய,குறைந்த நகைகள் அணியலாம். பிளாட்டினம், பிளாஸ்டிக் ஐயிட்டங்கள் ஸ்மார்ட்டாய் காட்டும். ஒரு நாளிலேயே பல அணிகளை அணிய முடியும். விலை உயர்ந்த வாட்ச்கள் வேண்டாம்; வாட்ச்சே வேண்டாம்.


“செல்’லில்தான் டையம் இருக்கே. குட்டீஸ் கையில் பொம்மை வாட்ச்களை பார்த்து கொள்ளலாம். எவ்வளவுக்கெவ்வளவு விலையுயர்ந்த பொருட்கள் இல்லாமல் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு டூரை மகிழ்ச்சியால் அனுபவிக்கலாம். அதிக எடையில்லாத, காட்டன் உடைகளை எடுத்து செல்லலாம்.
பெண் குழந்தைகள் என்ன வயது என்றாலும் உடலின் பெரும்பகுதி துணியால் மூடப்பட்டு இருக்கட்டும். மிடி, பிராக், எல்லாம் போடும்போது முட்டி வரை கூட உள்ளாடை போடலாம். வீணாய் தீயவர்களை தூண்ட வேண்டாமே.காலணிகளை லகுவானதாய் இருக்கட்டும்.


முக்கியமாய் ஆளுக்கொரு “செல்’ கண்டிப்பாய் இருக்கணும். அவரவர் அதை பொறுப்பாக வைத்து கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டு நண்பரிடம் வீட்டின் வெளிசாவியின் டூப்ளிகேட்டையும், குடும்பத்தாரின் செல்போன் நம்பர்களையும் கொடுத்து வையுங்கள்.


வீட்டு கதவை பூட்டும் முன் காஸ் சிலிண்டரையும் எல்லா சுவிட்ச்சுகளையும் ஆப் செய்திருக்கிறீர்களா… கதவுகளை சரியாக தாழிட்டிருக்கிறீர்களா… என்பதை சரி பாருங்கள். ஒருவருக்கு இருவராய் செக் செய்தா, சந்தேகம் தோன்றாது. வெளிப்புறமாக சில ஜோடி செருப்புகளையும், காய வைத்த நிலையில் சில துணிகளையும் விட்டு வைப்பது நல்லது.


ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இருதய நோய் போன்ற பிரச்னை இருப்பவர்கள் டாக்டரை சந்தித்து உங்கள் பயண விவரங்களை சொல்லி அவரின் ஆலோசனையும் அவருடைய செல்போன் எண்ணையும் வாங்கி கொள்ளுங்கள். எல்லா மருந்துகளும் எல்லா ஊரிலும் கிடைக்காது என்பதால், மருந்துகளையும் டோசேஜ் விவரங்களையும் எடுத்து செல்ல மறக்காதீர்கள்.


முதலுதவி விஷயங்கள்:

தைலம், குளூக்கோஸ் எடுத்து செல்ல வேண்டும். வலி நிவாரணம் களிப்பு, பஞ்சு, பேண்ட் எய்டு முதலியவற்றையும் உங்கள் பேக்கில் கட்டாயம் இருக்க வேண்டும்.


மற்ற பொருட்கள்!

எண்ணெய், பற்பசை, டூத் பிரஷ், சோப், பவுடர், ஷாம்பு, கொசுவர்த்தி, டார்ச் லைட், கத்திரிக்கோல், சிறிய கத்தி, கோப்பை, “செல்’ சார்ஜர் ஆகியவற்றையும் எடுத்து செல்ல மறக்க வேண்டாம்.
சோப் எடுத்து செல்ல வேண்டாம். கொழகொழப்பாய் இருக்கும். அதற்கு பதில் லிக்விட் சோப் எடுத்து செல்லலாம். அனைவரும் பயன்படுத்தலாம்.பரிசு!

தங்கப் போகிற உறவினர் வீடுகளுக்கு பயனுள்ள பரிசுகளுடன் செல்லுங்கள். குழந்தைகள் இருந்தால் அந்த வீட்டிற்கு போகும்போது விளையாட்டு பொருட்கள்… வேலைக்கு செல்கிறவர்களுக்கு, அவர்கள் தயாரிக்க நேரமில்லாமல் சிரமப்படும் தோசை மிளகாய் பொடி, வத்தல், வடகம்… வயதானவர்களுக்கு பூஜையறை பொருட்கள், சுவாமி படங்கள் என்று கொடுத்து அன்பை தெரிவியுங்கள்.


முகவரி!

போகும் இடத்து உறவினரின் முகவரியை தெளிவாய் எழுதி பாத்திரமா வைத்துக் கொள்ளுங்கள். பஸ், டாக்ஸி, ஆட்டோ, நடை எப்படி வர வேண்டும் என, கேட்டு கொள்ளுங்கள். அவர்களிடையே ஆட்டோ அல்லது சொந்த வண்டி எடுத்து வந்து பிக்-அப் செய்ய சொல்வது மிகவும் சிறப்பான வழியாகும்.


உணவு!

உணவு விஷயத்தில் இவனுக்கு இந்த காய் பிடிக்காது. அவளுக்கு இந்த பானம் பிடிக்காது என்றெல்லாம் அடம் பிடிக்காமல் அட்ஜஸ்ட் செய்து போங்கள். உங்கள் உணவு முறையே இதுவரை பழகி இருப்பீர்கள். மாறுதலுக்கு பாதி நாட்கள் அவர்கள் உணவு முறையை ஏற்று உண்ணுங்கள். அதேபோல உங்கள் உணவு முறையை பாதி நாட்கள் கடைபிடியுங்கள். இரு குடும்பத்திற்கும் இன்ப மாறுதாய் இருக்கும். அதோடு சமையல் வேலைகளில் பங்கு கொள்ளுங்கள். விரைவாய் சமையல் வேலை முடியும். ஆண்கள், காய்கறிகள் பர்சேஸ் செய்யலாம். ஒருநாள் மாறுதலாய் ஓட்டலில் சாப்பிடலாம். நீங்கள் போன ஊரின் சிறப்பு உணவு பொருட்களை ருசித்து மகிழுங்கள்.


பணிபார்வை!

அவர்கள் வீட்டில் வேலைக்கு ஆள் இருந்தால், அதை உங்களின் ஏகபோக உரிமையாக கருதி, உங்கள் வேலைகளை ஏவாதீர்கள். உங்கள் வரவு யாருக்கும் தொந்தரவாய் இருக்க கூடாது.


டிவி!

ஊருக்கு போய் இந்த பெட்டி முன் டேரா போட்டு விடாதீர்கள். எல்லாரும் பார்க்க வேண்டிய இடங்களை பார்த்து விட்டு, வீட்டில் இரவு வேளையில் ரிலாக்ஸாக இருக்கும்போது குழு விளையாட்டு விளையாடலாம்.வாங்கி வாருங்கள்!

காய்கறி, பேப்பர், பால், வாட்டர் கேன், இப்படி அத்தியாவசிய பொருட்கள், குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என நிறைய வாங்கி தாருங்கள்.மறக்காதீங்க!

நாம டூர் அடிக்கும்போது நம்ம வீட்டை பார்த்து கொள்கிற வேலையை செய்யும் நண்பர் வீட்டுக்கும் கண்டிப்பாய் பரிசு பொருட்கள் வாங்க வேண்டும்.


கேமரா!

கண்டிப்பாய் இது வேண்டும். ஒவ்வொரு கணமாய் பதிவு செய்யுங்கள். ஊருக்கு போனபின் பிரிண்ட் போட்டு, ஆல்பமாக்கி உங்கள் உறவினருக்கு அனுப்புங்கள்.கடிதம்!

என்னதான் வாயாற நன்றி சொல்லி, பெரியவர்களை நமஸ்கரித்து விடை பெற்றிருந்தாலும், விருந்துண்ட வீடுகளுக்கு எழுத்து மூலம் ஒரு நன்றி கடிதம் அனுப்புங்கள். அதில் அவர்களை அவசியம் உங்கள் வீட்டுக்கு வருமாறு அழையுங்கள்.


கோவில்!

நீங்கள் செல்லும் கோவில்களின் வழிபாட்டு முறைகளை தெரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக, கேரளா கோவில்களில் ஆண்கள் வேட்டியும், பெண்கள் புடவையும் அணிய வேண்டும் என்பது கட்டாயம். சுடிதாரோ, பேண்ட்டோ அணிந்து சென்றால் அனுமதி கிடையாது. அதோடு, வழிபாட்டு நேரம் சிறப்பு வழிபாட்டு தினங்கள் பற்றியும் அறிந்து போக வேண்டும். தரகர்களிடம் மாட்டி கொள்ளாதீர்கள்.


வலை!

சுற்றுலாவிற்கென அரசாங்கம் முதல் தனியார் வரை ஏகப்பட்ட வெப்சைட் உண்டு. சிறப்பான சைட்களை விசிட் அடித்து, ஒரு அழகான பிளானை போட்டு போகலாம். இன்டர்நெட்டின் மூலம் எல்லா விவரமும், உதவியும், ஆலோசனையும் பெறலாம்.


போர்டு!

தீயில் கை வைக்காதே; ரெயிலில் ஓரமாக நிற்காதே எங்களோடே இரு, தூரப்போகாதே; இப்படிப்பட்ட வாசகங்கள் டூரின்போது நிச்சயமாய் பெற்றோர்களால் சொல்லப்படும். வாண்டுகளோ சொன்னபடி நடக்காமல் வாலை அவிழ்க்கும். எச்சரிக்கை, ஆபத்து போன்ற போர்டு உள்ள இடத்தில் குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம். என்ன தவறு செய்தாலும் குட்டீஸை அடிப்பது பப்ளிக்காக திட்டுவது என அநாகரிகம் வேண்டாம். தனியே, மிக இனிமையாக நிலைமையை விளக்கவும்.


பணம்!

பயணத்துக்கு தேவையான பணத்தை மொத்தமாக எடுத்து செல்லாமல், டிராவல் செக் ஆகவோ பண அட்டையாகவோ வைத்து கொள்ளவும். 1000 ரூபாய்க்கு 100,50,20,10 மற்றும் சில்லறை காசுகளையும் வைத்து கொள்ளவும். அவசர தேவைகளுக்கும், சிறிய தேவைகளுக்கும் இவை உதவும்.


சில முக்கிய ஆலோசனைகள்!

உங்கள் பயணம் பற்றிய தெளிவான குறிப்பை, நம்பிக்கையான அண்டை வீட்டாரிடம் சொல்லி விட்டு செல்லவும். கோபம், குற்றம் கண்டுப்பிடித்தல், மட்டம் தட்டுதல், மனதை நோகடித்தல் போன்ற குணங்களை தவிர்த்து அனைவரிடமும் இனிமையாக பேசி பயணத்தை மகிழ்ச்சியாக்கி கொள்ளுங்கள்.உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அரை வயிறு நிரப்பினாலே போதும். செல்லும் இடத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப எளிய உடைகளை எடுத்து செல்லவும். நிறைய நகைகள் வேண்டாம். புதிய மனிதர்களிடம் மிக கவனமாய் பழகவும். புதியவர் கொடுக்கும் திண்பண்டத்தை குழந்தைகளை உண்ண வேண்டாம் என அறிவுறுத்துங்கள்.

காசு இல்லை என்று சொல்லாமல், குழந்தைகளை மிக சந்தோஷமாய் வைத்துக் கொள்ளுங்கள். டூரின் சந்தோஷத்தில் அவர்கள் 10 மாதங்கள் சந்தோஷமாக கல்வி கற்க வேண்டும். ஓகே!

ஆனியன் முட்டை மசாலா & கட்லெட்


மிகவும் ஈசியாக செய்யக் கூடிய ,ருசியான சைட்டிஷ் இது.

தேவையான பொருட்கள்
முட்டை - 6
வெங்காயம் - 3
உப்பு - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 3 ஸ்பூன்

செய்முறை
முட்டையை அவித்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அரைத்த வெங்காயத்தை போடவும்.
நன்கு கிளறவும்.
அரைத்த வெங்காயம் வதங்க அதிக நேரம் பிடிக்கும்.
உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கி, எண்ணெய் பிரியும்.
மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
சிறிது நேரம் வதக்கி பின் முட்டையை நீளவாக்கில் நான்கு அல்லது ஐந்து இடங்களில் கீறி மசாலாவில் சேர்க்கவும்.
இரண்டு நிமிடம் முட்டை உடையாமல் பிரட்டி விட்டு இறக்கி பறிமாறவும்.


முட்டை கட்லெட்


தேவையான பொருட்கள்:

முட்டை - 5
மிளகாய்தூள் - 1 கரண்டி
மசாலாதூள் - 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - அரைக்கிலோ
வெங்காயம் - 1
தேங்காய்பால் - அரை கப்
மிளகுதூள் - 1 தேக்கரண்டி
மைதா - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 250 கிராம்

செய்முறை:

முட்டை, உருளைக்கிழங்கை ஆகியவற்றை வேகவைத்து தோல் எடுக்க வேண்டும். முட்டையை இரண்டாக வெட்ட வேண்டும். ஒரு முட்டையை சிறிது உப்பு மிளகு போட்டு கலக்கி வைக்க வேண்டும். வெங்காயத்தை மிக பொடியாக நறுக்க வேண்டும்.

உருளைக்கிழங்கை கட்டியில்லாமல் மசித்து அதனுடன் தேங்காய் பால், வெங்காயம், மைதா போட்டு நன்கு பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். அதனை கையில் வட்டமாகத் தட்டி நடுவில் முட்டையை வைத்து மூட வேண்டும். அதனை கலக்கி வைத்த முட்டையில் நனைத்து ரொட்டிதூளில் நனைத்து எண்ணெயில் போட்டு இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்க வேண்டும்.

நீர்க்குடம் உடைதல்


கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid)இருக்கிறது.இது குழந்தையை பல விதங்களில் பாது காக்கிறது.

அமுக்க விசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது. இந்தத் திரவத்தைச் சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு(amniotic membrane) உள்ளது.


இந்த மென்சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பின்னே உடையும். ஆனாலும் சில வேளைகளில் அதற்கு முன்னமே அது உடையலாம். அது .. Pre labour rupture of membrane எனப்படும்.அதனால் குழந்தையைச் சுற்றியுள்ள திரவ நீர் வெளியேறுவதோடு கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று கேழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் பாதிய பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

இதன் அறிகுறிகள்...

திடீரென பிறப்பு உறுப்பு வழியே நிறையத் திரவம்(நீர் வெளியேறுதல்)

இவ்வாறு ஒரு கர்ப்பிணிக்கு திடிரென நீர் வெளியேறினால் உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும்.

மருத்துவ முறை

34 வார கர்ப்ப காலத்திற்கு முன் இது நடை பெற்றால் வைத்திய சாலையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு 34 வாரம் வரை கண்காணிக்கப்பட்டு அதன் பிறகு குழந்தை பிறப்பு தூண்டப்படும்.

ஆனாலும் அதற்கு முன் கருப்பையினுள் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றினாலோ அல்லது தொப்புள் கோடி கீழிறங்குவது
உறுதி செய்யப்பட்டாலோ உடனடியாக பிறப்பு தூண்டப்படும்.


இது யாருக்கு ஏற்படும் என்று எதிர்வு கூறப் பட முடியாது.


ஆனாலும் ஏற்கனவே குறை மாதத்தில் குழந்தை பெற்றவர்களுக்கு இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

நச்சுக்கொடி பிரிதல்
Placenta எனப்படும் நச்சுக் கொடி குழந்தைக்கு தேவையான பாதர்த்தங்களைத் தாயில் இருந்து எடுத்து குழந்தைக்கு வழங்குவதோடு குழந்தையில் இருந்து கழிவுகளை தாயின் குழந்தைக்கு அனுப்பும் உறுப்பாகும். இது வழமையாக குழந்தை பிறந்த பின்பே கருப்பையில் இருந்து பிரிந்து வெளியேறும்.

ஆனால் சில வேளைகளில் குழந்தை பிறப்பதற்கு முன்னமே இதுகருப்பையில் இருந்து பிரிந்து வெளியேறலாம். இது ஆங்கிலத்திலே Placental abruption எனப்படும் .இது மிகவும் அபாயகரமானது. குழந்தை பிறப்பதற்கு முன்னமே நச்சுக் கொடி கருப்பையில் இருந்து பிரிவதால் குழந்தைக்குத் தேவையான ஒட்சிசன் உட்பட்ட முக்கிய பதார்த்தங்கள் கிடைக்காமல் போவதால் குழந்தை கருப்பையிலேயே இறந்து போய் விடலாம்.

குழந்தை பிறப்பதற்கு முன்னமே பிரிந்த நச்சுக் கொடியில் இரத்தம் கட்டியாகி உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் எவ்வளவு விரைவாக குழந்தை பிறக்கச் செய்யப் பட முடியோ அவ்வளவு விரைவாக பிறக்கச் செய்யப்பட வேண்டும்.
அநேகமான சந்தர்ப்பங்களில் சீசர் செய்ய வேண்டி வரலாம். ஆனாலும் சில வேளைகளில் கருப்பைக் வாயில் போதியளவு விரிவடைந்து இருந்தால் சீசர் செய்யாமல் ஆயுதங்கள் ..பாவிப்பதன் மூலம் குழந்தை பிறக்கச்செய்யப்படலாம்.
.

பொதுவாக இது கர்ப்பம் தரித்து 5-6 மத காலத்திற்குப் பின்பு எப்போதும் ஏற்படலாம்.

அறிகுறிகள்...
1.தொடர்ச்சியான வயிற்று வலி (பிரசவ வலி விட்டு விட்டே ஏற்படும்)
விட்டு விட்டு ஏற்படாமல் தொடர்ச்சியாக வயிறு வலி ஏற்பட்டால் அது நச்சுக் கொடி பிரிந்ததால் இருக்கலாம்.

2.பிள்ளைத் துடிப்புக் குறைதல்

3.மயக்கம் வருவது போன்ற உணர்வு

4.சிலவேளைகளில் வயிற்று வலியுடன் சிறிதளவு ரத்தம் யோனி(பிறப்புறுப்பு) வழியே வெளிப்படலாம்.

மேற்சொன்ன அறிகுறிகள் உள்ள கர்ப்பிணிகள் உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும்.

இது எவருக்கு வேண்டுமானாலும் எந்தவிதமான காரணம் இல்லாமலும் ஏற்படலாம்.ஆனாலும் பலமாக வயிற்றிலே அடிபடுவதும் இந்த பிரச்சினையை ஏற்படுத்தலாம்.மேலும் கர்ப்பகால பிரசர் நோய் உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சினை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

ஏற்கனவே சொன்னது போல இந்த நோய் கருப்பையின் உள்ளேயே குழந்தையின் இறப்புக்குக் காரணமாக இருக்கலாம்.அத்தோடு அதிக இரத்தம் வெளியேறுவது காரணமாக தாயின் உயிருக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இதற்கு மருத்துவ முறை

குழந்தை உயிரோடு இருக்கும் பட்சத்தில் உடனடியாக பிறப்புத் தூண்டப்பட வேண்டும். சில வேளைகளில் சீசர் செய்ய வேண்டி வரலாம்.

ஆகவே கர்ப்பம் தரித்து .. மாத காலத்திற்குப் பின் உங்களுக்குத் தொடர்ச்சியான வயிற்று வலி ஏற்பட்டால் எந்தவைதமான உணவுகளையும் வாய் வழியே உட்கொள்ளாமல் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று உங்களுக்கு இந்த நோய் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

தொப்புள்க்கொடி வெளியேற்றம்

தொப்புள் கோடி தாயின் இரத்தத்தில் இருந்து குழந்தைக்கு உயிவாழத் தேவையான பதார்த்தங்களை பரிமாறுவதற்கும்,குழந்தையின் இரத்தத்தில் இருந்து கழிவுகளை தாயின் இரத்தத்திற்கு அனுப்புவதற்கும் உதவுகிறது. இது வழமையாக குழந்தை பிறக்கும் போதே குழந்தியோடு சேர்ந்து வெளிவரும். ஆனால் சில வேளைகளில் இது குழாந்தை பிறப்பதற்கு முன்னமே வெளிவரலாம் இது cord prolapse எனப்படுகிறது.

இது மிகவும் குழந்தைக்கு மிகவும் ஆபத்தான நிலையாகும்.

கருப்பைக்கு வெளியே தொப்புள் கொடி கீழிறங்குதல்
இது ஏற்படும் பெண்களில் சிலவேளைகளில் தொப்புள் கொடி வெளியே வெளிப்படலாம் அல்லது கருப்பையை விட்டு வெளியேறிய தொப்புள் கொடி உங்கள் பிறப்பு உறுப்பினுல்லேயே இருக்கலாம்.அப்போது உங்கள் பிறப்பு உறுப்பினுல்லேயே
எதோ ஒன்று இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் தொப்புள் கொடியை கையால் தொடுவதைத் தவீர்த்து கீழே உள்ள படத்தில் உள்ளது போன்ற நிலையில் இருந்தவாறே விரைவாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்.


வைத்தியசாலைக்கு செல்லும்போது நீங்கள் இருக்கவேண்டிய நிலை
குழந்தை உயிரோடு இருக்கும் பட்சத்தில் மிகவும் விரைவாக சீசர் செய வேண்டி வரலாம்.சிலவேளைகளில் பிரசவத்தில் இருக்கும் போது கூட இது ஏற்படலாம். அப்போதும் பிரசவ நிலையைப் பொறுத்து உடனடியாக சீசர் செய்யவேண்டி வரலாம்.

உடனடியாக சீசர் செய்ய வேண்டி வரலாம் என்பதால் இவ்வாறன நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பவர்கள் எந்தவிதமான சாப்போடோ நீராகரமோ உட்கொள்ளாமல் வைத்திய சாலைக்கு செல்லுதல் வேண்டும்.

இது ஏற்படாமல் தடுப்பதற்கோ ,யாருக்கு ஏற்படலாம் என்று எதிர்வு கூறுவதற்கோ முடியாது.

ஆனாலும் குழந்தை பிறப்பிற்கான பிரசவம் ஆரம்பிப்பதற்கு முன்பே நீர்க் குடம் உடைபவர்களுக்கு இது ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதால் , உங்கள் பிறப்புறுப்பில் இருந்து திடீரென நீர் வெளியேறினால் வலி ஏற்பட விட்டாலும் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்.