திங்கள், 1 ஆகஸ்ட், 2011

குடிகார கணவரை திருத்துவது எப்படி?


ஒரு கணவன் குடிக்கத் தொடங்கும் போதே அவரிடம், இது உடம்புக்கு நல்லதல்ல. இதற்கு பதிலாக சத்தான உணவு வகைகளை சாப்பிட வலியுறுத்தலாம். மது அருந்தி விட்டு வரும் கணவருடன் சண்டை போடுவதை விட்டு, விட்டு எதற்காக குடிக்கிறார் என்பதை அறிய வேண்டும்.


சில கணவர்கள் அலுவலகம், தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சினை காரணமாகவும் மது அருந்துவதுண்டு. அப்போது நீங்கள் அவர் பிரச்சினை என்ன என்பதை கேட்டறிந்து ஆறுதல் கூறலாம்.


இதை விட்டு விட்டு அந்த நேரத்தில் உங்கள் பிரச்சினைகளை மட்டும் கூறிக்கொண்டிருந்தால் மோதல்தான் வெடிக்கும். பெரும்பாலும் நண்பர்களால்தான் கணவர் மதுப்பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்.
அதனால் அவரது நட்பு வட்டத்தை கண்காணிப்பது அவசியம். நல்லவர் -கெட்டவர் யார் என்பதை அறிந்து கெட்டவர்களுடன் நட்பு வைத்திருப்பதை தவிர்க்க வலியுறுத்த வேண்டும்.

உங்கள் கணவருடன் திறந்த மனதுடன் பழகுங்கள். அவர் திருந்துவதற்கு போதுமான கால அவகாசம் கொடுங்கள் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையுடன் அணுகுங்கள்.

நீங்கள் எவ்வளவுதான் சொல்லிப் பார்த்தும் மனுஷன் மதுப்பழக்கத்தை கைவிடவில்லையா, மருத்துவர்களிடம், அழைத்துச் செல்லுங்கள். உங்கள் கணவரின் போதைப் பழக்கத்துக்கான காரணம் அறிந்து, அதை மறப்பதற்கு மனரீதியான பயிற்சி அளிப்பார்கள். இந்த பயிற்சி பெற்றால் எப்பேர்ட்ட குடிகாரரும் திருந்தி விடுவதை காண முடிகிறது.எந்நேரமும் போதையில் மிதக்கும் கணவர்களை அடிக்கடி கோவில்களுக்கு அழைத்துச் செல்லலாம். யோகா, தியானம், போன்றவற்றில் ஈடுபடுத்துவதும் நல்ல பலனைத்தரும்.
சிலர், போதை ஊசி, போதை பாக்கு, போதை மாத்திரை, கஞ்சா… போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.
இவர்கள் பெரும்பாலும் மன நோயாளிகளாகவே மாறி விடுகிறார்கள். இவர்களை மனரீதியான பயிற்சியாலும், முறையான மருத்துவ சிகிச்சை மூலமும் குணப்படுத்த முடியும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதிலும் போதைக்கு அடிமையாகி வரும் ஆண்களின் எண்ணிக்கை பெருகி இருக்கிறது. இதற்கு காரணம் திருமணம், பிறந்தநாள், விழா, பண்டிகை கொண்டாட்டம்… என்று பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளிலும் மதுபானம் அருந்துவது ஒரு பேஷனாக மாறி இருப்பதுதான். இந்த நிலை மாறினால் குடிகாரர்கள் பெருகுவது குறைய வாயப்புள்ளது.
 
***

ஆ‌ண்மை‌த் த‌ன்மை - ஆய்வுகளும் முடிவுகளும்


"ஆண்மை பெண்மை,
இவ்விருமைகளின்
கற்பனைக் கனவுகளின்,
சில நிமிட,
மரபு சார்ந்த,
புதுக் கவிதையின்
கண்ணீர்த் துளி நீ...
உயிர்த் துளி!!!"
இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் பெரும்பாலானோருக்குத் தந்திருக்கிறது எனலாம். அலுவலகத்தில் சுவர்களுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபட்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது சராசரி வாழ்க்கை.

இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று.
மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் வைட்டமின் டி குறைவது என்பது இவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவாகும்.

தேவையான அளவு வைட்டமின் டி உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன. தம்பதியர் பெற்றோராகும் வாய்ப்பு பிரகாசமடைகிறது. அதற்கு அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் சட்டையைக் கழற்றி ஓரமாய் வைத்து விட்டு கொஞ்சநேரம் வெயிலில் காலார நடந்து வருவது தான் !

இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரண்டு மாதங்களில் விந்தணுக்களின் வலிமையும், எண்ணிக்கையும், உருவமும் பல மடங்கு மேம்பட்டதாகச் சொல்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய மருத்துவர் கிளார்க்.

இந்த சோதனையில் மூலம் 35 விழுக்காடு பேர் குழந்தையின்மைச் சிக்கலையும் தீர்த்திருக்கின்றனர் என்பது வியப்பூட்டுகிறது.

அலுவலக அறைகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பவர்கள் அவ்வப்போது எழுந்து சாலையோர டீ கடைக்குச் சென்று சுடச்சுட டீயும், வைட்டமின் டீயும் பெற்றுக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

புகை, மது, காபி போன்றவற்றை உட்கொள்ளாமலும் அளவான உடற்பயிற்சி மேற்கொள்வதும் என உடலை ஆரோக்கியமாய் காத்துக் கொள்ளும் ஆண்கள் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து வந்தால் வாழ்க்கை செழிக்கும்
 
 
***

ஆ‌ண்மை‌த் த‌ன்மையை அ‌திக‌ரி‌க்ககுழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன.ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌பி‌ன் ‌விளைவுகளு‌ம் இ‌ன்‌றி ந‌ல்ல ‌சி‌கி‌ச்சை ந‌ம்‌மிடமே உ‌ள்ளது.

உயர் ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (உ‌ண்மையான தே‌ன்) ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள்.

பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள். அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள்.

தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள்.

இதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள்.

இப்படி 60 நாட்கள் தொடர்ந்து தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும். ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும்.
 
 
***

ஆ‌ண்மை‌த் த‌ன்மை - ஆய்வுகளும் முடிவுகளும் 2

 

நம்மூரில் சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணிக்கு, ஆண்மையை அதிகரிப்பதில் வயாகராவை விஞ்சும் சக்தி உள்ளதாக ஆய் வில் கண்டறியப்பட்டுள்ளது.முதலிரவன்றே பிரிந்த புதுமணத் தம்பதிகள் என்று அடிக்கடி செய்திகள் வெளியாவதை பார்த்திருக்கிறோம். இதுபோல் திருமணமான புதிதிலேயே பல்வேறு தம்பதிகள் பிரிந்து செல் கிறார்கள். இதற்கு பின்னணியில் ஆண்மை குறைபாடே முக்கிய காரணமாக இருக்கிறது. குடும்ப நீதிமன்றங்களில் வரும் விவாகரத்து வழக்குகளில் இந்த பிரச்சினைக்காகத்தான் அதிக பெண்கள் வருகிறார்களாம். இப்போதெல்லாம் இளம் வயது ஆண்கள் கூட ஆண்மை குறைவால் பாதிக்கப்படுகிறார்கள்.

பிறப்பிலேயே ஆண்மையின்மை ஏற்பட்டு கவனிக்காமல் இருந்திருந்தால் அதனை மாற்ற முடியாது. ஆனால், மனம் மற்றும் உடல்ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளால் சிலர் தற்காலிகமாக ஆண்மைத்தன்மையை இழக்கிறார்கள். இதில், உடல்ரீதியாக பிரச்சினை ஏற்படுவோருக்கும், மற்ற ஆண்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியை அமெரிக்க டாக்டர் கள் கண்டுபிடித்துள்ளார்கள். சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணி பழத் துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந் திய டாக்டர் தலைமையிலான மருத்துவக் குழு மேற் கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந் துள்ளது. ஆண்மையை தூண்டும் சக்தியை பொறுத்தவரை, மேலை நாட்டு வயாகரா மாத்திரைக்கு நிகராக இன்னும் ஏன் அதனையே விஞ்சக் கூடிய தன்மை தர்பூசணி பழத்துக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தர்பூசணிக்கு என்ன சிறப்பு?

தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள் ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தக வலை இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வெளி யிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு ஆசையை' அதி கரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.

மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத் தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அது போல் உள்ள சிட்ரூ லின்' என்ற சத்து பொருள், வயாகராவை போல் இரத்த நாளங் களை விரிவடைய செய்து, இரத்த ஓட் டத்தை அதிகரிக்கு மாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்ப டும் இரசாயன மாற்றம் காரணமாகசிட்ரூலின்', அர்ஜினைனாக' எனும் இரசாயனப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், இரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்கு விக்கிறது. வெள்ளை பகுதியில்தான் இந்த சிட்ரூலின் அர்ஜினைன் இரசாயன மாற்றமானது, சர்க் கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளி களுக்கும் கூட நன்மை பயக்குமாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதி யில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.

இது தெரிந்தால் நம்மவர்கள், வாழைப் பழத்தை விட்டு தோலை மட்டும் சாப்பிடு வதைப்போல், தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம்.

மதர் போர்ட் சி.டியை தொலைத்தவர்களுக்கு...நாம் புதியதாக கணிணி வாங்கு கிறோம் என்று வைத்துகொள்வோம் அப்போது அந்த கணிணியின் மதர்போர்க்குரிய சி.டியை தருவார்கள்... அதிலே... லேன் கார்ட்... சவுண்ட்கார்ட் ..டிஸ்பிலே கார்ட்.. சிப்செட் அஸிலேட்டர் என அந்த போர்ட்க்கு தேவையான அனைத்து டிரைவர்களும் இருக்கும்.. அது தொலைந்து போய்விட்டாலோ அல்லது கீறல் விழுந்து செயல் திறன் அற்று விட்டாலோ.. அவ்வளவுதான் ... வேறு ஒரு காப்பி எடுத்து வைத்திருந்தால் நன்று இல்லையெனில் அது என்னவகை அது எங்கு கிடைக்கும் இணையத்தில் தேடி தேடி பலருக்கு தாவு தீர்ந்துவிடும்...எனெனில் சவுண்ட் கார்ட் டிரைவர் இல்லையெனில் ஆடியோ வராது லேன் கார்ட் இல்லையெனில் இணையம் கிடைக்காது... அவ்வாறான் சூழ் நிலையில் உதவுவதுதான் எவரஸ்ட் அல்டிமெட் எடிசன்...

Posted Image


இதை கணிணியில் நிறுவி ஒரு முறை ரன் செய்து விட்டால் போதும் தங்கள் கணிணியின் பயோடேட்டா அக்குவேறாக ஆணிவெறாக வெளிவந்துவிடும் அத்தோடு அக்கணிணியின் டிரைவர்கள்.. அது கிடைக்கும் இடங்கள்.. என்று அத்தனையும் வரும்...இதை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும் .

http://www.4shared.com/file/qBW0QTov/EVEREST_Ultimate_Edition_550_B.html Download
    


-- 

விரைவாக கோப்புகளை காப்பி செய்ய

நாம் கணிணியில் பலவிதமான கோப்புகள் வைத்திருப்போம் . அவற்றை நம் வசதிக்கேற்றவாறு அடிக்கடி இடமாற்றம் செய்வோம் . அப்படி இடமாற்றம் செய்யும் போது ஒரு Drive விட்டு ஒரு Drive காப்பி அல்லது இடமாற்றம் செய்யும் போது அதாவது உதாரணமாக Drive(C:) லிருந்து Drive(E:) காப்பி அல்லது இடமாற்றம் செய்யும் போது சற்று வேகம் குறைவாக இருக்கும். மேலும் இடமாற்றம் செய்யப்படும் கோப்பு பெரிதாக இருப்பின் மேலும் நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் .

TeraCopy என்னும் மென்பொருள் விரைவாக காப்பி செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய உதவுகிறது . இது சாதாரணமாக காப்பி மற்றும் இடமாற்றம் செய்வதை காட்டிலும் விரைவாக செய்கிறது .இதற்க்கு முதலில் TerCopy மென்பொருளை நிறுவிய பின் இடமாற்றமோ காப்பியோ செய்யவேண்டிய கோப்பின் மீது Right Click செய்து அதில் TeraCopy என்பதை கிளிக் செய்க

 


--
    
-- 


பின் தோன்றும் Window வில் Copy அல்லது Move வசதியை தேர்வு செய்க.மேலும் கோப்பை இடமாற்றமோ காப்பியோ செய்ய வேண்டிய இடத்தையும் தேர்வு செய்க .


 
 கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும்

கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் அது இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன.


1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும்சரிபார்க்கவும்.


2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.


3. மூன்று பீப் – ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக: இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்சினை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்சினை தொடர்ந்தால் இதனைமாற்றவேண்டியதிருக்கும்.


4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்: பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ்செக்செய்திடவும்.


5. தொடர்ந்த பீப் ஒலி: கீ போர்டு பிரச்சினை. எடுத்துக்காட்டாக உங்கள் விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம்; அல்லது ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயேஇருக்கலாம்.


6. பிளாப்பி டிஸ்க் டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது: டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதாஎன்றுபார்க்கவும்.


7. மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை: ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும்.


8. பவர் எல்.இ.டி. எரியவில்லை: மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.9.CMOS Error என்று செய்தி வருகிறது: மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப்சார்ட்பார்க்கவும்.


10. FDD Error காட்டுகிறது, பிளாப்பி டிரைவ் சரியாகச் செயல்படவில்லை: எப்.டி.டி.யின் பவர் கார்ட், டேட்டா கேபிள் சரியாக அதன் இடத்தில் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். சீமாஸ் செட்டிங்ஸ் சரி பார்த்துவிட்டு பிளாப்பி டிரைவும் சரியாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும்.

11. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது. பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதா என்று பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும். ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப் டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.

12. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது: எஸ்.எம்.பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.


13. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது: டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.


14. திரைக் காட்சி அதிர்கிறது: மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லதுரேடியோஅலைகள்உருவாகலாம்.


15. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது: கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.

16. Non System Disk Error: : பிளாப்பி டிரைவில் பூட் பண்ண முடியாத வேறு டிஸ்க் இருக்கலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக்கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட்செய்யப்படாமல்இருக்கலாம்.


17. Missing Operating System: சிடம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம் – குறிப்பாக Command.com என்னும் பைல். இதனுடன் IO.sys, MS_DOS.sys ஆகிய பைல்களும் ஒரு சிஸ்டம் இயங்க முதல் தேவைகளாகும். இவை சரியாக உள்ளனவா என்று பார்க்கவும்.


18. Missing Command Interpretor: Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப் பட்டிருக்கலாம்.


19. IO Error : சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.

20.Divide Over Flow எர்ரர் மெசேஜ்: சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச்சரிசெய்திடவும்.


21. செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது: சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் ஙு கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியான கேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.


22. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது: CHKDSK/F அல்லது SCANDIS பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோதனை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.23. Hard Disk Not Detected: பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும்.ஜம்ப்பர்களைச்சோதனைசெய்திடவும்.


24. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை: ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன்இணைந்துபோகவில்லை.


25. MMX/DLL FILE MISSING : இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும். உங்களுடையது பழைய விண்டோஸ் 98 ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனில் அதனை மீண்டும் இன்ஸ்டால் செய்திடவும்.

பொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய்விட்டால்,உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோம். அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொண்டு,உங்களால் கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடியவில்லை என்றால் அதற்கான டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்.