ஞாயிறு, 31 ஜூலை, 2011

அன்‌பை வெ‌ளி‌ப்படு‌த்து‌ங்க‌ள்

 


குழ‌ந்தையை எ‌ப்போ‌து‌ம் தூ‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள் எ‌ன்று சொ‌ல்லுவா‌ர்க‌ள். இது ஒரு புற‌ம் உ‌ண்மைதா‌ன்.

குழ‌ந்தை ‌கீழே இரு‌க்கு‌ம் போதுதா‌ன் கை கா‌ல்களை உதை‌த்து ‌விளையாடு‌ம். அ‌தனா‌ல் குழ‌ந்தை‌யி‌ன் உட‌ல் ந‌ல்ல ‌நிலை‌யி‌ல் இரு‌க்கு‌ம். குடி‌த்த பாலு‌ம் செ‌ரி‌க்கு‌ம்.

ஆனா‌ல் எ‌ப்போது‌ம் குழ‌ந்தையை தூ‌க்காம‌ல் இரு‌க்க‌க் கூடாது. தா‌ய் தனது குழ‌ந்தையை அ‌வ்வ‌ப்போது எடு‌த்து கொ‌ஞ்ச வே‌ண்டு‌ம்.

குழ‌ந்தையை மா‌ர்போடு அணை‌த்தபடி மு‌த்த‌ம் கொடு‌ப்பது, செ‌ல்லமாக கொ‌ஞ்சுவது, பாட‌ல்க‌ள் பாடுவது எ‌‌ன்பன குழ‌ந்தையை உ‌ற்சாகமாக வை‌க்கு‌ம் டா‌னி‌க்.

எனவே உ‌ங்க‌ள் குழ‌ந்தையை அ‌வ்வ‌ப்போது வா‌ரி அணை‌த்து கொ‌ஞ்சலா‌ம். இது ‌பிற‌ந்த குழ‌ந்தை‌க்கு ம‌ட்டும‌ல்ல‌, ஓடி ‌விளையாடு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு‌ம் பொரு‌ந்து‌ம்.

அதிக செல்லம் வேண்டாம்

 


குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுக்க வேண்டாம். செல்லம் கொடுத்து கெடுத்த குழந்தைகள் ஏராளமானோர் ஏற்கனவே இருப்பதால் உங்கள் குழந்தையையும் அந்த பட்டியலில் சேர்க்காதீர்கள்.


அன்பை வெளிப்படுத்துவதில் கூட ஒரு ஒழுங்கு நெறி இருக்க வேண்டும்.

அவர்களது கடமையில் இருந்து தவறும்போதோ அல்லது தவறு என்று தெரிந்தும் அதனை செய்யும்போதோ அது தவறு என்று எடுத்துக் கூற வேண்டியது அவசியம்.


அதற்காக அடிப்பதோ, தண்டனை கொடுப்பதோ அவர்களை திருத்த உதாவது. எடுத்துக் கூறி புரிய வைப்பதுதான் நல்லது.


எதைச் செய்தாலும் குழந்தைத் தானே என்று சொல்வதும், தவறாகப் பேசும்போது அதனைக் கேட்டு ரசிப்பது அல்லது சிரிப்பதும் தவறானது.

ப‌ல் துள‌க்கு‌ம் பழ‌க்க‌ம்

 


குழ‌ந்தைகளு‌க்கு ‌ஒ‌ரு வயது முதலே ப‌ற்க‌ள் முளை‌க்க‌த் துவ‌ங்‌கி‌விடு‌ம்.


ப‌ற்க‌ள் முளை‌‌க்க‌த் துவ‌ங்‌கியது‌ம், தினமு‌ம், காலை‌யி‌ல் ஒரு சு‌த்தமா‌ன து‌ணியை இள‌ஞ்சூடான ‌‌நீ‌ரி‌ல் நனை‌த்த ப‌ற்களை சு‌த்த‌ம் செ‌ய்து ‌விட வே‌ண்டு‌ம்.


கைகளா‌ல் தே‌ய்‌க்‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றி குழ‌ந்தையை அழ‌விட வே‌ண்டா‌ம்.
 
 

ஒ‌ன்றரை வயது முத‌ல் ‌பிர‌ஷ‌் கொ‌ண்டு ப‌ற்களை‌த் தே‌ய்‌த்து ‌வி‌ட்டு வா‌ய் கொ‌ப்ப‌றி‌க்க‌க் க‌ற்று‌த் தர வே‌ண்டு‌‌ம். சி‌றிது ப‌ற்பசை வை‌த்து ப‌ற்களை‌த் தே‌ய்‌த்து ‌பி‌ன்ன‌ர் த‌ண்‌ணீ‌ர் கொ‌ண்டு கொ‌ப்ப‌ளி‌க்க சொ‌ல்ல வே‌ண்டு‌ம்.


3‌ம் வயது ஆகு‌ம்போது அவ‌ர்களாகவே ப‌ற்களை‌த் தே‌ய்‌த்து‌க் கொ‌ள்ள பழ‌க்க‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்.


ப‌ற்க‌ளி‌ல் சொ‌த்தையோ, உடை‌ப்போ இரு‌ந்தா‌ல் உடனடியாக மரு‌த்துவரை அணுக வே‌ண்டு‌ம்.

குழ‌ந்தைக‌ள் மு‌ன்‌னிலை‌யி‌ல்

 குழ‌ந்தைக‌ள் மு‌ன்‌னிலை‌யி‌ல் நா‌ம் எ‌ப்படி நட‌ந்து கொ‌ள்‌கிறோமோ குழ‌ந்தைகளு‌ம் அ‌ப்படி‌த்தா‌ன் நட‌ந்து கொ‌ள்வா‌ர்க‌ள்.

எனவே அவ‌ர்களை ‌சிற‌ப்பாக வள‌ர்‌க்க முத‌லி‌ல் நா‌ம் ‌சிற‌ப்பாக மாற வே‌ண்டு‌ம். ம‌ற்றவ‌ர்களை‌ப் ப‌ற்‌றி தர‌க்குறைவாக குழ‌ந்தைக‌ள் மு‌ன்‌னிலை‌யி‌ல் பேசுவது கூடாது.

கணவ‌ன் - மனை‌வியோ‌, வீ‌ட்டி‌ன் பெ‌ரியவ‌ர்களோ குழ‌ந்தைக‌ள் மு‌ன்‌னிலை‌யி‌ல் ச‌ண்டை போடுவது‌க் கூடவே‌க் கூடாது.கணவனோ, மனை‌வியோ இருவ‌ரி‌ல் ஒருவ‌ர் குழ‌ந்தையை ‌க‌ண்டி‌க்கு‌ம் போது ம‌ற்றவ‌ர் குறு‌க்‌கி‌ட்டு குழ‌ந்தை‌க்கு ஆதரவாக‌ப் பேச‌க் கூடாது இது ‌க‌ண்டி‌ப்பவ‌ரி‌ன் ம‌தி‌ப்பை குழ‌ந்தை‌யிட‌ம் குறை‌த்து‌விடு‌ம்.

தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் வரு‌ம் ‌விஷய‌ங்களை ‌மிகவு‌ம் அ‌க்கறையோடு ம‌ற்றவ‌ர்களுட‌ன் ‌விவா‌தி‌க்க‌க் கூடாது அது ஏதோ உ‌ண்மை‌க் கதை எ‌ன்று குழ‌ந்தைக‌ளி‌ன் மன‌தி‌ல் ப‌தி‌ந்து ‌விடு‌ம்.

ம‌ற்ற குழ‌ந்தைகளை ம‌ட்ட‌ம் த‌ட்டி உ‌ங்க‌ள் குழ‌ந்தைகளை உய‌ர்‌த்‌தி‌ப் பேசுவது‌ம் ‌மிகவு‌ம் தவறு.

குழ‌ந்தைக‌ளி‌ன் உணவு‌ப் பழ‌க்க‌ம்

 
பே‌ரி‌ட்ச‌‌ம் பழ‌ம், இ‌னி‌ப்பான பழ‌ங்க‌ள் போ‌ன்றவ‌ற்றை அ‌திகமாக உ‌ண்ண‌க் கொடு‌க்க வே‌ண்டு‌ம்.

எ‌ந்த‌ப் பொருளையு‌ம் அவ‌ர்க‌ள் ‌விரு‌ம்பு‌ம் வகை‌யி‌ல் கொடு‌த்தா‌ல் அதை ‌நி‌ச்சயமாக சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள்.நொறு‌க்கு‌த் ‌தீன‌ி போ‌ன்றவ‌ற்றை அவ‌ர்க‌ள் ‌அ‌திக‌ம் ‌விரு‌ம்புவா‌ர்க‌ள்.ஆனா‌ல் அதனை சா‌ப்‌பிடவே‌க் கூடாது எ‌ன்று பெ‌ற்றோ‌ர் மறு‌ப்பது ச‌ரிய‌ல்ல.


 90 விழு‌க்காடு ச‌த்தான உணவுகளை‌க் கொடு‌த்தா‌ல் 10 விழு‌க்காடு அள‌வி‌ற்காவது அவ‌ர்க‌ள் ‌விரு‌‌ம்பு‌ம் நொறு‌க்கு‌த் ‌தீ‌னிகளையு‌ம் சா‌ப்‌பிட அனும‌தியு‌ங்க‌ள்.


அ‌வ்‌வ‌ப்போது கா‌ய்க‌றி சூ‌ப், மு‌ட்டை ஆ‌ம்லெ‌ட், பழ‌‌க் கலவை, கா‌ய்க‌றி சால‌ட் போ‌ன்றவ‌ற்றை செ‌ய்து கொடு‌த்து அவ‌ர்களது உண‌வி‌ல் இதெ‌ல்லா‌ம் அவ‌சிய‌ம் எ‌ன்பதை பு‌ரிய வையு‌ங்க‌ள்.

மெதுவாய் மலரட்டுமே பூக்கள் !!? 
 
எங்கும் அவசரம், எதிலும் அவசரம் என்ற ஒரு இயந்திரத்தனமான  ஒரு காலம் இது. இந்த இயந்திர உலகில், நமக்கு தெரியாமல் நம் உடலில் ஏற்பட கூடிய ஹார்மோன் மாற்றங்களை பற்றி நாம் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.....?! பொருட்படுத்துவதும் இல்லை.....!? ஒரு முக்கியமான மாற்றம் தான் பெண் குழந்தைகளின் விரைவான பூப்படைதல். சமீப காலமாக பருவமடையும் வயது குறைந்து கொண்டே செல்கிறது. ஒரு பெண் குழந்தை ஆறு வயதில் பருவமடைந்திருக்கிறது...இங்கே இல்லை லண்டனில்...?!!

அவ்வாறு விரைவில் வயதிற்கு வருவது நல்லதல்ல என்பதே மருத்துவர்கள், ஆய்வாளர்களின் கருத்து.  பெண் குழந்தைகளை பொறுத்தவரை அவர்களின் மனமும் உடலும் ஒன்றாக  சேர்ந்து வளர வேண்டும். உடல் மட்டுமே வளர்ந்து, மனதில் குழந்தையாக இருப்பவர்களின் வாழ்க்கை அவ்வளவு நன்றாக இருக்காது என்பதை விட பல ஆபத்துகளுக்கும் இது வழி வகுக்கும்.

இது ஏன் அவ்வாறு விரைவாக ஏற்படுகிறது என்பதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருப்பது  அக்குழந்தையின் பெற்றோர் தான் ?!

இதனை பற்றியதே இந்த பதிவு.....

முன்பு எல்லாம் பதினாறு வயதில், பின் அதுவும்  குறைந்து பதினாலு வயதில் பருவமடைதல் என்றானது...இப்போது 12 வயதாக இருக்கிறது. சில குழந்தைகள் பத்து வயதில்....!! பொதுவாக ஒரு பெண் வயதிற்கு வருவது என்பது அவர்கள் வளரும் சூழ்நிலை, பரம்பரை, உணவு பழக்க வழக்கம் இவற்றை அடிப்படையாக வைத்து தான் நடை பெறும்.

உளவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

*  குழந்தை வயிற்றில் இருக்கும் போது அதன் தாயார் டாக்சிக் அமிலம் அடங்கிய மருந்துகளை உட்கொள்வது ஒரு முக்கிய காரணமாக சொல்லபடுகிறது.

*   பெற்றோர்களின் கருத்து வேறுபாடுகள் குழந்தைகளை பலவிதத்திலும் பாதிக்கும் என்பது உண்மை. ஆனால் இது பெண் குழந்தைகள் விரைவில் வயதிற்கு வருவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது என்று உளவியல் அறிஞர்கள் கூறும் போது பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருக்கிறது.

குடும்பத்தில் ஏற்படும் சண்டைகள், பெற்றோர்கள் பிரிந்து வாழ்வது போன்றவை பெண் குழந்தைகளுக்கு மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுக்கிறது, இது  ஹார்மோன்களின் சுரப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, பிரச்சனை நேருகிறது. உடல் வளர்ச்சியில் பெறும் குழப்பம் ஏற்பட்டு முடிவில் விரைவாக அக்குழந்தையை பூப்படையச்  செய்து விடுகிறது.
 
*  ஆணின் அரவணைப்பு இல்லாமல்...

பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை ஆணின் அரவணைப்பு அதாவது தன்  தந்தையின் நெருக்கம் அவசியம் தேவை. தந்தையில்லாத , தந்தை வெளியூரில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் படி நேர்ந்தால்,  அவர்களின் பெண் குழந்தைகள் விரைந்து வயதிற்கு வந்து விடுகிறார்கள்....!!

சகோதரனின் பாசமும் ஹார்மோன்களின் குழப்பத்தை சரி செய்யும். இப்போது பெரும்பாலான  வீடுகளில் ஒரு குழந்தை மட்டுமே இருப்பதால் அதுவும் ஒரு பெண் குழந்தையாக இருந்துவிட்டால் சகோதரன் என்ற ஒரு உறவே தெரியாமல் தான் அக்குழந்தைகள் வளருகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தந்தையின் அருகாமையும், பாசமான அரவணைப்பும் மட்டுமாவது கண்டிப்பாக தேவை.

*  தொலைகாட்சியும் ஒரு காரணம் !!?

நம் குழந்தைகளின் வாழ்க்கையோடு விளையாடுவதில் இந்த தொலைக்காட்சிக்கு அப்படியென்ன சந்தோசமோ தெரியவில்லை. குறைந்தது ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் டிவி பார்க்கும் குழந்தைகளின் தூக்கம் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. குழப்பமான மனதுடனே  தூங்கவும் செல்கிறார்கள். இதன் காரணமாகவும் விரைவில் பூப்படைகிறார்கள்  என்று அறிஞர்கள் தங்களது ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.

சீக்கிரம் வயதிற்கு வருவதால் ஏற்படக்கூடிய அசௌரியங்கள்

* முதலில் இதை பற்றி என்ன வென்றே தெரியாத ஒரு நிலை.
* நிகழ்ந்த பின் ஏற்படக்கூடிய ஒரு அச்சம், குழப்பம், எதனால் என்கிற கேள்வி ?!!
* பள்ளியில் சக மாணவிகள்/மாணவர்கள்  வினா எழுப்பும் பார்வைகள்.
* தனிமையான ஒரு உணர்வு.
* மனதளவில் குழந்தை, உடலளவில் பெண் ?!!

தகுந்த சரியான முறையான நேரத்தில் நடக்காத எது ஒன்றுமே பிரச்சனைகளைத்தான் கொண்டுவரும்...பெண் குழந்தைகளின் வளர்ப்பில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம்
பெற்றோர்கள் சரியாக இருந்துவிட்டால் அந்த வீட்டில் குழந்தைகள் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நல்ல முறையில் தான் வளருவார்கள்....குழந்தைகள் முன்னால் சண்டை போடும் பெற்றோர்கள் இருக்கும் வீட்டில் குழந்தைகளின் மனநிலை பாதிக்கபடுவது மட்டும் இன்றி ஹார்மோன் குளறுபாடுகள்  ஏற்பட்டு விரைவில் பெண் குழந்தைகள் வயதிற்கு வருவதும் ஏற்படுகிறது.

பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களே! கொஞ்சம் உங்கள் குழந்தையின் மனநிலையிலும் அக்கறைக் காட்டுங்கள்.

இதற்கு ஒரு தீர்வு உங்கள் கையில் தான் இருக்கிறது, குழந்தைகளின் மனம் பாதிக்காத அளவிற்கு அவர்கள் முன் நடந்து கொள்ளுங்கள் , உணவு பழக்கவழக்கத்தை முறைப் படுத்தணும் , கொழுப்பு பொருட்களை தவிர்க்க வேண்டும், அவர்கள் வளரும் சூழ்நிலை ஆரோக்கியமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.


 
பூ மெதுவாய்.....இயல்பாய் மலரட்டுமே....!
 
 
 
 
****
 
 

பெற்றோர்கள் கவனத்துக்கு..!


 
சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களைப் பற்றிய செய்திகள் நாம் தினமும் பார்க்கின்ற ஒன்றாகிவிட்டது. அதைப் படிக்கும்போது 'யாருக்கோ நடந்த சம்பவம் தானே' என்று பெற்றோர்களாகிய நாம் கவலைப்படுவதில்லை.

னால், யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் நடக்க கூடிய விதத்தில் இப்போது இச்சம்பவங்கள் அதிகமாக நம் சமூகத்தில் நடந்து கொண்டிருகின்றது. அவற்றைத் தடுப்பதற்காக நாமே சில முன்னெச்சரிகை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது அவசியமே.

நம் சமூகத்தில் சிறுமிகள்தான் பாலியல் கொடுமைக்கு மிகுதியாக ஆளாகின்றனர். அதேபோல், சிறுவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாமால் இல்லை.

பாலியல் பற்றிய அடிப்படைக் கல்வியை தங்களது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டியது ஒவ்வொரு தாய்மார்களின் கடமை. ஏனென்றால், வெளியாட்கள் குழந்தைகளுடைய அறியாமையை பயன்படுத்தி கொள்கிறார்கள். உதாரணமாக, வீட்டிலுள்ள டிரைவர், வீட்டு வேலைக்காரர்கள், வெளியிலுள்ள தெரிந்தவர்கள், வீட்டுக்கு வருகின்ற சொந்தக்காரர்கள் போன்றவர்களிடமிருந்து தான் குழந்தைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் ஏற்படுகின்றது.

அதனால் குழந்தைகளைக் கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தவறான காரியம் செய்பவர்களிடம் இருந்து எவ்வாறு சிக்காமல் இருப்பது என்று குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டியது பெற்றோர்கள்தான்.

குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகாமல் இருக்க, குழந்தைகளுடைய சந்தேகங்களை பெற்றோர்களே அவர்களுக்கு முன்கூட்டியே புரிய வைப்பதே நல்லது.

அதைப் பற்றிய தேவையான விவரங்களை குழந்தைகளுக்கு தெரியபடுத்திக் கொள்வதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைகளுடைய சந்தேகங்களை அலட்சியப்படுத்தி ஒதுங்குவது நல்லதல்ல. அவர்களுடைய வயதுக்கேற்ற சந்தேகங்களுக்கு பதில் அளிக்கலாம்.

அம்மாவை அப்பா தொடுவது சகஜம். ஆனால், வேரு யாருக்கும் அதற்கான உரிமை கொடுக்கப்படவில்லை என்று சொல்லும்போது, குழந்தைகளுடைய மனதில் பாலியல் ரீதியான முதல் கேள்வி பதிகின்றது.

யாரையும் உடம்பில் தொடக்கூடாத இடங்களில் ஸ்பரிசிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று குழந்தைகளுக்கு முன்கூட்டியே புரிய வைக்க வேண்டும்.

வேகமாக வசீகரிக்க முடிகின்ற இறைதான் குழந்தைகள். போலியான அன்பை யார் காட்டினாலும், அதை ஒதிக்கிகொள்வதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, நமக்குப் பிடித்த உணவு, மொபைல் போன் போன்ற பொருட்களை பழக்கமில்லாதவர்கள் பரிசாக தருவார்கள் என்று குழந்தைகள் புரிந்து வைத்திருக்க வேண்டும்.

குழந்தையின் கையில் வீட்டுக்கு தெரியாத எந்த ஒரு பொருளைப் பார்த்தாலும், அது எங்கிருந்து கிடைத்தது என்று பெற்றோர்கள் கேட்க வேண்டும்.

தங்களது குழந்தையின் நண்பர்கள் யாரெல்லாம் என்று பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும்.
 


பள்ளிக்கூடத்தில் போகமாட்டேன் என்று குழந்தை சொல்லும் போது, அதன் காரணம் என்னவென்று பெற்றோர்கள் கண்டிப்பாக கேட்டு தெரிந்திருக்க வேண்டும். படிப்பதற்கு விருப்பமில்லாமல், அல்லது பள்ளியும் ஆசிரியரும் பிடிக்காமல் இருக்கலாம் என்று நாமே யோசித்து முடிவெடுப்பது பல நேரங்களில் சரியாக இருக்க வாய்ப்பில்லை.

ஒருவர் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டால், அதைக் நேராக நம்மிடம் சொல்ல குழந்தைகள் தயங்குவார்கள். இதனால், குழந்தைகளுக்கு பல மாற்றங்கள் மனதளவிலும் உடலளவிலும் உண்டாகின்றன. அதை அவர்கள் தங்களது வழக்கத்துக்கு மாறான செய்கைகளால்தான் வெளிப்படுத்துகிறார்கள்.

அந்த நேரங்களில் குழந்தைகள் பேசுவதை குறைத்துக் கொள்வார்கள்; சுறுசுறுப்பில்லாமல் இருப்பார்கள்; காரணமில்லாமல் அதிர்ச்சி அடைவது, சாப்பிடுவதில் வெறுப்பு... இப்படி குழந்தைகளுடைய நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தால், அதற்கான காரணம் என்னவென்று தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.

வீட்டில் பெற்றோர்களுடனோ, பெரியவர்களுடனோ தங்களுடைய எல்லா விஷயங்களும் பகிர்ந்து கொள்வதற்கான சுதந்திரம் குழந்தைகளுக்கு கொடுத்திருக்க வேண்டும்.

பாலியல் கொடுமைக்கு ஆளான விவரத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று எவரேனும் பயப்படுத்தி வைத்திருந்தாலும், அதை பெற்றோர்களிடம் தைரியமாக சொல்வதற்கான சுதந்திரம் குழந்தைக்கு இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு நல்ல முறையில் ஆடை அணிவிப்பதில் பெற்றோர்கள் கவனமாக இருக்கவேண்டும். குழந்தைகளுக்கு ஸ்லீவ்லெஸ் அழகாக இருக்கலாம், ஆனால், குழந்தைகளுடைய மார்பு முழுவதும் தெரிகின்ற விதத்தில் ஆடைகள் அணிவிப்பதை தவிர்க்க வேண்டும். உடல் மறைத்துகொள்கின்ற மாதிரியான ஆடைகளை குழந்தைகளுக்கு அணிவிக்கவும்.

சொந்தக்காரராக இருந்தாலும், பக்கத்து வீட்டுக்காரராக இருந்தாலும் குழந்தைகளை தூக்கிக்கொண்டு போவதற்கு நீங்கள் அனுமதிக்கக் கூடாது. சொந்தக்காரராக இருந்தாலும் குழந்தைகளை அவர்களுடன் படுக்க அனுமதிக்க கூடாது.

குழந்தைகளோடு திறந்த மனதோடு பழகுவதே, அவர்களுக்கு ஏற்ப்படுகின்ற பிரச்சனைக்கு மிகவும் பயனான சிகிச்சை என்று உளவியல் மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

செக்ஸ் முதல் எவ்விதமான விஷயங்களைப் பற்றி குழந்தைகள் கேட்டாலும், அதற்கு மனம் திறந்து இலகுவான விளக்கங்கள் அளித்தாலே பிரச்சனைகள் தீர்க்க முடியும். சிறார்களுக்கு அவர்களது வீடுதான் கவுன்சிலிங் சென்டர். அப்படியில்லாமல், சந்தேகம் கேட்கும் குழந்தைகளைத் திட்டுவது பாதக நிலைக்குத் தள்ளிவிடும்.

குடும்ப பொறுப்புகளை சுமந்து ஓடி உழைக்கின்ற பெற்றோர்களுக்கிடையே சொந்த வீட்டிலேயே குழந்தைகள் அனாதையாகின்றனர். இது, அவர்களது மனதை மிகவும் பாதிக்கிறது.
குழந்தைகளுக்குள்ளும் பிரச்சனைகள் புதைந்து கிடக்கின்றது என்ற யதார்த்தத்தை புரிந்து குழந்தைகளோடு நண்பர்களைப்போல் பழகுவதற்கும், அதோடு அவர்களுடைய நம்பிக்கைக்கு ஆளாகவும் பெற்றோர்களை முடியாமல் போகின்றது. இதன் விளைவாக குழந்தைகள் தவறான வழிகள் தேடி போகின்றார்கள்.

குழந்தைகள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்வதென்றும், எப்படி பேசுவதென்றும் பெற்றோர்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஒருவர் தேவையில்லாமல் தவறான எண்ணத்துடன் உடம்பில் தொட்டால், அதை குழந்தையால் புரிந்து கொள்ள முடிய வேண்டும். அவர்களிடம் பார்வையாலும், தேவைப்பட்டால் எச்சரிகையாவும் பேச குழந்தைக்கு துணிச்சல் தர வேண்டும்.

குழந்தைகளை கொஞ்சுவதற்கும், அவர்களுடன் பேசுவதற்கும் பெற்றோர்கள் நேரம் காணவேண்டும். குழந்தைகளை கட்டித் தழுவ வேண்டும், அவர்களுக்கு முத்தம் கொடுக்க வேண்டும்.

பெற்றோர்களிலிடமிருந்து பராமரிப்பு கிடைக்கின்ற குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட பாலியல் கொடுமைகள் நேர வாய்ப்புகள் இல்லை. தங்களை தேவையில்லாமல் தொட யாரையும் அவர்கள் அனுமதிப்பதில்லை!

புளிச்சாதம்

 


தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்
புளி - எலுமிச்சம் பழ அளவு
காய்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி விதை - 1 டீஸ்பூன்
நல்லெண்ணை - 4 அல்லது 5 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியைக் கழுவி குழையாமல், பொல பொலவென்று சாதமாக வேக வைத்தெடுத்து, ஒரு தட்டில் கொட்டி பரப்பி விடவும். அதன் மேல் ஓரிரு டீஸ்பூன் எண்ணையை தெளித்து விடவும்.

புளியையும் உப்பையும் ஊறவைத்து, திக்காக பிழிந்தெடுக்கவும். 2 கப் புளித்தண்ணீர் கிடைக்கும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும். பின் அதில் வேர்க்கடலை, மிளகாய் (மிளகாயை 4 அல்லது 5 துண்டுகளாகக் கிள்ளிப் போடவும்), கறிவேப்பிலைச் சேர்த்து சற்று வதக்கி அத்துடன் புளித்தண்ணீரை ஊற்றவும். அதில் மஞ்சள் தூள், பெருங்காய்த்தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கலக்கி, மிதமான தீயில் கொதிக்க விடவும்.

இதனிடையே, இன்னொரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் ஒரு காய்ந்த மிளகாய், கொத்துமல்லி விதை மற்றும் வெந்தயத்தை வறுத்தெடுத்து, ஆறியவுடன் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

புளிக்கரைசல் நன்றாகக் கொதித்து சற்று திக்கானதும், பொடித்து வைத்துள்ள வெந்தய-தனியாப் பொடியைச் சேர்த்துக் கிளறி விடவும். புளிக்காய்ச்சல் கெட்டியாகி, எண்ணை மேலே மிதந்து வரும் பொழுது, இறக்கி விடவும்.

இந்தப் புளிக்காய்ச்சலை சாதத்தின் மேல் சிறிது சிறிதாகச் சேர்த்து கலந்து விடவும். கலக்கும் பொழுது தேவைப்பட்டால் மேலும் சிறிது எண்ணை விட்டுக் கொள்ளலாம்.

குறிப்பு: இதில் மற்ற எண்ணையையும் உபயோகிக்கலாம். ஆனால் புளிச்சாதத்திற்கு நல்லெண்ணை சேர்த்தால்தான் வாசமாக இருக்கும். இதில் வேக வைத்த கறுப்பு கொண்டைக்கடலையையும் புளிக்காய்ச்சல் கொதிக்கும் பொழுது சேர்த்து செய்யலாம்.

மசாலா சாதம்

 


தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
பச்சை கொத்துமல்லி தழை (பொடியாக நறுக்கியது) - 1 டேபிள்ஸ்பூன்
காரட் - சிறு துண்டுகளாக வெட்டியது - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
கரம் மசாலாத் தூள் - ஒரு சிட்டிகை
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியை குழையவிடாமல், பொல பொலவென்று சாதமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய்யை விட்டு, சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன் அதில் முந்திரிப்பருப்பு, காரட் துண்டுகள், பச்சை மிளகாய் (கீறிப்போடவும்), கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். முந்திரிப்பருப்பு சற்று சிவக்க வறுபட்டதும், அத்துடன் மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், கொத்துமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து ஒரு கிளறு கிளறவும். பின்னர் அதில் சாதம் மற்றும் உப்பு போட்டு நன்றாகக் கிளறி, இறக்கி வைக்கவும்.

கத்திரிக்காய் சாதம்

 


கத்திரிக்காய் சாதம், வாங்கி பாத் என்றும் அழைக்கப்படும். இந்த சாதத்தில் சேர்க்கப்படும் பொடியை முன்னதாகவே செய்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் பொழுது மிகச் சீக்கிரத்தில் இதை செய்து விடலாம்.

தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
கத்திரிக்காய் - 4 (நடுத்தர அளவு)
பெரிய வெங்காயம் - 1
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வாங்கி பாத் பொடி செய்வதற்கு:

காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 சிறு துண்டு
கிராம்பு - 2
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும். கடைசியாக தேங்காய்த்துருவலைப் போட்டு வதக்கி எடுத்து ஆற விடவும். வறுத்தெடுத்த பொருட்கள் எல்லாம் ஆறியவுடன் உப்பைச் சேர்த்து நன்றாகப் பொடி செய்துக் கொள்ளவும்.

அரிசியை வேக வைத்து சாதமாக்கிக் கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கத்திரிக்காயை நீள வாக்கில் மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும் அதில் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன், கத்திரிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி விட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து காய் வேகும் வரை வதக்கவும். பின் அதில் வாங்கி பாத் பொடியைத்தூவிக் கிளறவும். கடைசியில் சாதத்தைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

பொரித்த அப்பளம், வடவம் அல்லது சிப்ஸ் சேர்த்து சாப்பிட சுவையாயிருக்கும்.

பிரிஞ்சி சாதம்

 


தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு பற்கள் - 8
பச்சை பட்டாணி - 1/4 கப்
காரட் - 1
பீன்ஸ் - 4
உருளைக் கிழங்கு - 1
காலிபிளவர் துண்டுகள் - 1/2 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
நெய் அல்லது எண்ணை - 8 டேபிள்ஸ்பூன்
பட்டை இலை - சிறிது
கிராம்பு - 4
பட்டை - 3 துண்டுகள்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
கொத்துமல்லித் தழை - சிறிது

செய்முறை:

அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

தக்காளி, பூண்டு, இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

காய்கறிகளையும் நடுத்தர அளவிற்கு நறுக்கிக் கொள்ளவும்.


பிரஷ்ஷர் குக்கரை அடுப்பிலேற்றி நெய் அல்லது எண்ணையை விட்டு சூடானதும் அதில் பட்டை இலை, பட்டை, கிராம்பு சேர்த்து சற்று சிவந்ததும் அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னரி அதில் தக்காளித் துண்டுகளைப் போட்டு வதக்கவும். அத்துடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டுக் கிளறி விடவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள காய், பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து கிளறி, பின்னர் அதில் ஊற வைத்துள்ள அரிசியை, தண்ணீரை வடித்து விட்டு சேர்க்கவும். அரிசி நன்றாக, தொட்டால் சுடும் வரைக் கிளறி விடவும். அத்துடன் 4 கப் தண்ணீர், எலுமிச்சை சாறு அக்கியவற்றைச் சேர்த்துக் கிளறி மூடி வைத்து, இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.

குக்கரில் ஆவி குறைந்தவுடன், திறந்து கொத்துமல்லித் தழையைத்தூவி பரிமாறவும்.

குறிப்பு: இதை பாசுமதி அரிசியிலும் செய்யலாம். பாசுமதி அரிசி உப்யோகித்தால், தண்ணீரின் அளவை 3 கப்பாக குறைத்துக் கொள்ளவும். தண்ணீருக்குப் பதில் தேங்காய் பால் உபயோகித்தும் செய்யலாம்.

காய்கறிகள் இல்லாமல் வெறும் பிரிஞ்சி சாதமாகவும் செய்யலாம். மசாலா வாசனை கூடுதலாக வேண்டுமென்றால், 1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூளைச் சேர்க்கலாம்.

புதினா சாதம்

 


தேவையானப்பொருட்கள்:

அரிசி - 2 கப்
தேங்காய் பால் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அரைக்க:

புதினா இலை - 2 கப்
கொத்துமல்லி இலை - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
இஞ்சி - 1" துண்டு
பூண்டு பற்கள் - 2

தாளிக்க:

எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
பட்டை - 2 சிறிய துண்டு
கிராம்பு - 2
முழு ஏலக்காய் - 2
பட்டை இலை - சிறு துண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊற விடவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பிரஷ்ஷர் குக்கரில் எண்ணையை விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பட்டை இலை, சோம்பு அக்கியவற்றைப் போட்டு சற்று வறுக்கவும். பின் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள புதினா விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர் அதில் அரிசியை தண்ணீரை நன்றாக வடித்து விட்டு போடவும். அத்துடன் தேங்காய் பால், மூன்று கப் தண்ணீர் (தேங்காய் பால் மற்றும் தண்ணீர் இரண்டும் சேர்ந்து 4 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.) விட்டு கிளறி விடவும். மூடி வைத்து, மூன்று விசில் வரும் வரை வேக விட்டு இறக்கி வைக்கவும்.

சற்று ஆறிய பின் குக்கரைத் திற்ந்து, எலுமிச்சம் சாறு சேர்த்து கிளறவும்.

அதன் மேல் சிறிது புதினா இலைகள் மற்றும், எலுமிச்சம் பழத்துண்டுகளை வைத்து பரிமாறவும்.

குறிப்பு: இதை பாசுமதி அரிசியிலும் செய்யலாம். எண்ணைக்குப் பதில் நெய்யையும் சேர்க்கலாம். தேங்காய்பால் சேர்க்காமல், வெறும் தண்ணீரிலும் செய்யலாம்.

குருமாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.