செவ்வாய், 4 செப்டம்பர், 2012

கணினியை பற்றி cmd மூலம் நீங்களும் தெரிந்து கொள்ளலாம்Command prompt என்பது கணனியில் மிகவும் பயனுள்ள ஒரு பகுதியாகும். இந்த Command prompt ஊடாக நமது கணணியை செயற்படுத்தமுடியும். இந்த Command prompt என்பது  நமக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை தரவல்லது. Command prompt இன் உதவியுடன் நமது கணணி குறித்த பல தகவல்களை பெற்றுகொள்ள முடியும். நாம் சில கட்டளைகளை வழங்கினால் போதும் அவை குறித்த பல தகவல்களை நாம் பெற்றுக்கொள்ளமுடியும். அத்தகைய Command prompt இல் பயன்படுத்தி நமது கணனி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளவென சில கட்டளைகளை இங்கு தருகிறேன்.

முதலில் Command prompt ஐ திறந்து கொள்ளுங்கள்.

Command prompt ஐ திறந்துகொள்வதற்கான வழிமுறைகள் இதோ.

 Start-->>Accesories-->>Command prompt

அல்லது

Start-->>Run  இல் cmd என தட்டச்சு செய்து திறந்துகொள்ளுங்கள்.

கீழ்வரும் கட்டளைகளை தோன்றும் Command prompt இல் தட்டச்சு செய்து கணணி குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

1.கட்டளை: systeminfo

கணனியின் Host Name மற்றும் இயங்குதளம் குறித்த தகவல்கள் போன்ற இன்னும் பல தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

2. கட்டளை: driverquery
 
கணனியின் இயக்கிகள்(Drivers) குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.


3. கட்டளை: tasklist 

கணனியில் இயங்கிக்கொண்டிருக்கும் Programs குறித்த தகவல்களை பெறுக்கொள்ளமுடியும்.

4.கட்டளை: ipconfig /all

உங்கள் கணனியின் IP முகவரியினையும் மற்றும் வலையமைப்பு குறித்த தகவல்களையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

5. கட்டளை: net user

கணணி பயனாளர்கள்(User names) குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

பெண் தோழிகள் தவிர்க்க வேண்டிய இணையதள நட்புகள்
பெண்களின் கல்வியறிவும், பொது அறிவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெரும்பாலான பெண்கள் பேஸ்புக், ட்விட்டர், ஸ்கைப் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் தற்கால பெண்கள் முன்பின் தெரியாத ஆண் நண்பர்களுடன் அதிக தொடர்பு வைத்துள்ளார்க்ள். இதன் மூலம் அவர்களின் நட்பு செல்போன்கள் எண்களை பரிமாறி கொள்ளுதல் மற்றும் வெளியிடங்களில் தனிமையில் சந்தித்தல் போன்ற தவறுகளுக்கு காரணமாக அமைகின்றன.சில நேரங்களில் எல்லை தாண்டி கள்ளக்காதலாகவும் கூட மாற வாய்ப்புள்ளது.மேலும் பல பெண்களுடன் தொடர்பிலிருக்கும் ஆண்களுடனும் சகவாசம் ஏற்பட நேரிடுகிறது.

பின்னர் அவர்களை பற்றி உண்மை நிலவரங்கள் தெரியும் போது மன உளைச்சலுக்கு ஆளாகி நடைப்பிண வாழ்க்கை மேற்கொள்ளவும், சிலர் தற்கொலை செய்யவும் வழிவகுக்கிறது.

எனவே பெண்கள் இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் முன்பின் தெரியாத ஆண்களை நண்பர்களாக அங்கீகரிப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை அத்தகைய நபர்கள் தங்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளும் படி தொந்தரவு செய்யும் பட்சத்தில் அவர்களது  கணக்கை தடை(block) செய்யும் தேர்வை தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு தடை செய்தால் அந்த நபர்கள் உங்களது கணக்கை மேற்கொண்டு காண இயலாது.

என்ன எனதருமை பெண் தோழிகளே இதனை படித்தவுடன் கெட்ட நண்பர்களின் பழக்கத்திற்கு தடை போட முடிவெடுத்துவிட்டீர்களா?

தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது பலபேர் பலமுறையில் சொல்வார்கள். ஆனால் அமைதியான சூழலில் (அதிகாலை உகந்தது) இரு கால்களையும் மடக்கி உட்கார்ந்து இரு கண்களையும் மூடிய நிலையில் அமைதியாக நம்முடைய மனம் அலைபாய்வதை நிறுத்தி ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து இருப்பதே தியானம் என அழைக்கப்படுகிறது. இந்த தியானம் செய்வதனால் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. அதில் சில குறிப்பிட்ட நன்மைகளை கீழே கொடுத்துள்ளேன்.
 • ஆக்சிஜன் உபயோகத்தை கட்டுக்குள் வைக்கிறது.
 • இதய துடிப்பு வேகமாக இருந்தால் அதை கட்டு படுத்துகிறது.
 • உயர் ரத்த அழுத்த பிரச்சினையை குறைக்கிறது.
 • உங்கள் மனதை பரப்பரப்பில் இருந்து நிம்மதி அடைய செய்கிறது.
 • நம்முடைய உடல் பகுதிகள் சீராக இயங்க உதவுகிறது.
 • உடல் எடையை குறைக்கலாம்.
 • உடலிற்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.
 • உடல் சக்தி வீணாவதை தடுக்கும்.
 • தன்னம்பிக்கையை ஏற்ப்படுத்தும்.
 • மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்.
 • ஞாபக சக்தி அதிகரிக்கும்.
 • தேவையில்லாமல் கோபப்படுவதை குறைக்கும்.
 • மாணவர்களின் படிக்கும் சக்தி அதிகரிக்கும்.
 • பேராசையை தவிர்க்கும்.
 • உடலின் சக்தி,வேகம் அதிகரிக்கும்.
 • கண்பார்வை அதிகரிக்கும்.
 • அமைதியான மன நிலையை கொடுக்கும்.
 • மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும்.
 • முடிவு எடுக்கும் திறனை அதிகபடுத்தும்.
 • மற்றவர்களிடம் இருந்து உங்களின் நிலையை அதிகரிக்கும்.
 • போதை பொருளுக்கு அடிமையாகி இருந்தால் மீண்டு வர துணை புரியும்.
 • ஓயாமல் எதையாவது யோசித்து கொண்டிருப்பதை தடுத்து மனதை ஒருநிலை படுத்தும்.
 • சுவாச பிரச்சினைகளை தீர்க்கும்.
 • புகை பழக்கத்தில் இருந்து மீள முடியும்.
 • எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க உதவும்.
 • லட்சியங்களை எளிதில் அடைய உதவும்.
 • ஒரு தகவலை உள்வாங்கும் திறனை அதிகரிக்கும்.
 • எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் மன்னிக்க மனதை தயார் செய்யும்.
 • நீங்கள் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தால் தங்களுக்கும் இறைவனுக்கும் இடையே இனம் புரியாத ஆழமான உணர்வை உருவாக்கும்.
 • நண்பர்கள் வட்டம் பெருகும்.
 • தக்க சமயத்தில் தகுந்த முடிவை எடுக்கும் திறனை அதிகர்க்கும்.
 • சமூகத்தில் தங்களின் நிலை உயரும்.
 • கிடைத்தை வைத்து சந்தோசப்படும் அறிவை கற்று கொடுக்கும்.
 • மன அழுத்தம், மனநோய் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட உதவி புரியும்.
 • சமூக அக்கறை அதிகரிக்கும்.
 • எதுக்காவும் யாரிடமும் கோபப்படுவதை தவிர்க்கும்.
 • தூக்கம் வராமல் கஷ்ட படுபவர்கள் படுத்த உடனே தூக்கம் நன்றாக வரும்.
 • தூக்கத்தில் கண்ட கனவுகள் வருவதை தவிர்த்து  நிம்மதியாக தூங்க முடியும்.
 •  மருத்துவமனைக்கு செல்லும் தேவையை குறைக்கும்.
 • மருந்து மாத்திரைகளிடம் இருந்து உங்களை விடுவிக்கும்.
 • மாணவர்கள் பாடங்கள் கவனிக்கும் திறனை அதிகர்க்கும்.
 • தற்காப்பை உருவாக்கும்.
 • வாழ்க்கையின் மேடு,பள்ளங்களை பக்குவமாக கையாள மனதை தயார்படுத்தும்.
 • வயதிற்கேற்ற மன முதிர்வை உருவாக்கும்.
 • இசையில் நாட்டமுள்ளவர்களுக்கு கலைத்திறனை அதிகரிக்கும்.
 • ரத்த சுத்திகரிப்பை அதிகரிக்கும்.
 • நீங்கள் மறந்துவிட்ட சில முக்கிய நிகழ்வுகளை ஞாபகபடுத்தும்.
 • உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை நீக்கும்.
 • உடலில் உள்ள கொழுப்பு சக்தியை குறைக்க உதவும்.
 • இதய நோய்களை கட்டுபடுத்தும்.
 • உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாட்டை சீர்படுத்தும்.
 • வியர்வை அதிகம் வெளியேறுவதை சீர்படுத்தும்.
 • தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் அதற்க்கு தீர்வு காணலாம்.
 • ஆஸ்மா நோயிலிருந்து பூரண குணமடையலாம்.
 • தீய பழக்கங்களை ஒழிக்கும்.
 • நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 • கற்பனை திறன் அதிகரிக்கும்.
 • மற்றவர்கள் கூறும் அறிவுரையை தட்டி கழிக்காமல் பொறுமையோடு கேட்டு அதன்படி நடக்கும் மனநிலையை உருவாக்கும்.
 • உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும்.
 • உங்களின் அறிவுத்திறன் வளரும் விகிதம் அதிகமாகும்.
 • பெரியவர்களை மதித்து நடக்கும் உயரிய மனம் உருவாகும்.
 • உங்களுக்கு இருக்கும் கடமைகளை உணர செய்யும்.
 • கடமைகளில் வெற்றியும் பெறச்செய்யும்

அம்மாக்கள் கவனத்திற்கு!

குழந்தை மன நல மருத்துவர் கண்ணன்: 
என்னிடம் வரும் பெற்றோர், பெரும்பாலும் கூறும் ஒரே புகார், "என் பசங்க சாப்பிடவே மாட்டேங்கறாங்க...' என்பது தான். குழந்தைகள் குறைவாகவோ, அதிகமாகவோ சாப்பிடுவதற்கு, பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் அவையெல்லாம் கவலைப்படக் கூடிய காரணங்கள் இல்லை."நம்ம குழந்தை நன்றாக சாப்பிடட்டும்' என்ற எண்ணத்தில், வயிற்றுத் தேவையைவிட, அதிக அளவிற்கு டிபன் பாக்சில் நிரப்பி அனுப்புகின்றனர் பல அம்மாக்கள். அதிலிருந்து, தங்கள் தேவைக்குச் சரியாகச் சாப்பிட்டு விடுகின்றனர் குழந்தைகள். மீதி, அப்படியே டிபன் பாக்சில் உள்ளது, என்பதை உணர வேண்டும்.காலை, இரவு மற்றும் விடுமுறை நாட்களில், சுவையாக சாப்பிட்டுப் பழக்கப்படும் குழந்தைகள், பள்ளியில் ஆறிப் போன உணவைத் தான் சாப்பிட வேண்டிய கட்டாயம். ஆறிய உணவில், இயல்பாகவே சுவை குறைவதால், சாப்பிடும் ஆர்வம் குறைவதும் இயல்பே.அதே போல், பெரும்பாலான பள்ளிகளில், உணவு இடைவேளை போதுமான அளவிற்கு இருப்பதில்லை.

 குழந்தைகள் உணவை வெறுக்க, இதுவும் ஒரு காரணம்.எந்நேரமும், குழந்தைகளுக்கு, நொறுக்குத் தீனி கொடுப்பதையும், "ஜங்க் புட்' கொடுப்பதையும் நிறுத்துங்கள். அவற்றின் தீமைகளை நன்கு புரியும் விதத்தில் அடிக்கடி நினைவூட்டி, வீட்டில் சமைத்த உணவின் அருமையை உணர்வதுடன், பெற்றோரும் அதையே உண்ண வேண்டும். காலை, மதியம், மாலை, இரவு என, நான்கு வேளை மட்டுமே சாப்பிட வேண்டும். மற்ற நேரம் எதுவும் குழந்தைகள் சாப்பிடக் கூடாது என்ற கொள்கையை, பெற்றோர் கடைப்பிடித்தாலே, குழந்தைகள் ஆரோக்கியமான வீட்டு உணவை விரும்ப ஆரம்பித்து விடுவர்.செய்யும் உணவுகளில், சிறிய மாற்றங்களையும், சுவையையும் அதிகரிக்க வேண்டும். இதுவே போதும், குழந்தைகளுக்கு உணவின் மீதான விருப்பத்தை அதிகரிக்க!