புதன், 31 ஆகஸ்ட், 2011

புதுமணத் தம்பதிகள் தவிர்க்க கூடாதது…திருமணம் என்றதும் மணப்பெண், மணமகன் இருவருக்குமே ஒரு படபடப்பு ஒட்டிக் கொள்ளும் என்பார்கள். தற்காலத்திய இளைஞர்களிடம் அப்படியொரு நிலையைப் பார்க்க முடிவதில்லை.
அவர்களிடம் பதற்றம் கிடையாது. நிச்சயதார்த்தம் முடிந்தவுடனே இருவரும் கை கோர்த்து விடுகிறார்கள்.(காதல் திருமணம் என்றால் இந்தக் கை கோர்ப்பு பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.) தவிர, தங்களது எதிர்கால வாழ்க்கை குறித்து தீர்க்கமாக சிந்திக்கிறார்கள்.

திட்டமிடுகிறார்கள். ஒருவருக்கொருவர் முன்னதாகவே அறிமுகம் ஆகிக் கொள்வதால் திருமணத்தின்போது தேவையற்ற டென்ஷன் மணமக்களிடையே இல்லாமல் போகிறது. ஆனால் திருமணத்திற்குப் பின் புது வாழ்க்கை அமைத்துக் கொள் ளும் தம்பதிகளுக்கு வேறு மாதிரி யான சமூக, குடும்பக் கடமைகள் உண்டு. அது அவர்களின் திருமண வாழ்க்கை சிறக்க காரணமானது.


அவற்றில் 5 முக்கிய அம்சங்கள் இங்கே:

சமூக பொறுப்பு:

காதல் திருமணமோ, பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணமோ எது வென்றாலும் அதற்கேற்ப சமூகம் உங் களை கண்காணிக்கத் தொடங்கி விடுகிறது. நீங்கள் ஒரு குடும்பத்தினருக்கும் மட்டும் உரியவர் அல்ல.
இரண்டு குடும்பத்திற்கும் இணைப்பு பாலமாக எவ்வாறு செயல்படப் போகிறீர்கள் என்பதை உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆவலோடு எதிர் பார்ப்பார்கள். உங்களின் நிறை, குறைகள் அலசப்படும். அது உங்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ அமையலாம்.

உங்கள் குடும்பம் மட்டுமின்றி அக்கம் பக்கம் வசிப்பவர்கள், உங்களது நண்பர்கள், தோழிகள் என்று உங்களுக்குத் தெரிந்த அனைவருமே உங்களை கண்காணிக்கக் கூடியவர் களாகவும் எடைபோடக் கூடியவர்களாகவும் மாறிவிடுவார்கள்.

இவ்வளவு ஏன், அன்றாடம் தெருவில் வரும் காய்கறிக்காரர் முதற்கொண்டு கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர் வரை உங்களைப் பற்றிய குணாதி சயங்கள் பேசப்படும். இதனால் உங்களுக்கு சமூகத்தில் பொறுப்புகள் நிறைய இருக்கின்றன என்பதை உணர வேண்டும். கல்யாணமாகி சில மாதங்கள் வரை உங்களுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இரண்டு வீட்டாரும் தருவார்கள்.
அதன் பின் உங்களுக்கு மதிப்பு குறைவதும் கூடுவதும் நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தினைப் பொறுத்துத்தான் அமையும்.

தாம்பத்ய உறவு:

திருமணத்திற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக கற்பனை செய்து வைத்துக் கொண்டிருக்கும் விஷயம் இது. சினிமாவில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப் பிடித்து ஓடியாடி மரங்களுக்குப் பின் டூயட் பாடுவது, படுக்கை அறையில் சந்தோஷமாக இருப்பது போன்ற காட்சிகளைப் பார்ப்பதன் மூலம் இருபாலரின் உடலிலும் ஒரு வித ரசாயன மாற்றம் ஏற்கனவே நிகழ்ந்திருக்கும்.

இதனால் முதல் நாள் இரவின்போதே தான் பார்த்தையெல்லாம் நிஜமாக்கிவிட நினைக்கும் துடிப்பும் முழுமையான தாம்பத்ய சுகம் கிடைத்திடவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இன்றைய மணமகன்களுக்கு நிறையவே இருக்கிறது. மணப்பெண்ணுக்கோ இனம் புரியாத ஒரு எதிர்பார்ப்பு.

முதல் இரவு எவ்வாறு இருக்குமோ என்று ஓர் பதற்றம். ஆனால் இவர்கள் அடிப்படையில் ஒரு விஷயத்தை மறந்து விடு கிறார்கள்.கல்யாணம் ஆன அன்றே தங்களது முழு விருப்பமும் நிறை வேறிடவேண்டும் என்று நினைப்பது தவறு. ஏனென்றால் திருமணத்திற்கு முன்பாக மணமக்கள் மனரீதியாக மட்டுமே தயாராகி இருப்பார்கள்.

அவர்களை தாம்பத்ய பந்தம்தான் உடல் ரீதியாகவும் இணைக்கிறது. அதனால் கூடியவரை புதுமணத் தம்பதிகள் உடனடி வேகம் காட்ட வேண்டிய அவசியமில்லை. தங்களது உணர்வுகளை மெல்ல மெல்ல பக்குவமாக வெளிப்படுத்தி அரங் கேற்றிக் கொண்டால் இருவருக்குமே இல்லற சுகம் இனிக்கும்.

முடிவெடுத்தல்:

திருமணம் செய்து கொண்ட அடுத்த வினாடியே நீங்கள் பல விஷயங்களுக்கு அதிபதியாகி விடுகிறீர்கள். பணம்,நகை,உடை, சொந்த பந்தங்கள் இவற்றில் முக்கியமானவை. இதை விட மிகவும் முக்கியமானது, உங்களது வாழ்க்கைத் துணை என்பதை மறந்து விட வேண் டாம். ஆம், இனி உங்களுடன் ஆயுள் முழுக்க இன்ப துன்பங்களில் பங்கேற்பவர் அவர்தானே?…
இதனால் ஒரு நல்ல தாயாக, ஒரு சிறந்த தந்தையாக அல்லது உங்களது குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராக என்று பல விஷயங்களில் நீங்கள் பிரகாசிக்க வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு உங்களுக்கு அவசியம் தேவை. எனவே தினமும் காலையில் எழுந் ததும் இருவரில் யாராவது ஒருவர் நெற்றியில் முத்தம் கொடுப்பதன் மூலம் அன்றைய பொழுதினை நல்லவிதமாக தொடங்கலாம். இன்னும் ஆழமான அன்பைக் காட்டவேண்டும் என்றால் மார்பிலோ அல்லது உதட்டிலோ முத்தம் கொடுக்கலாம்.

உங்கள் வாழ்க்கைத் துணைவர் நல்ல குஷி மூடில் இருந்தால் செல்லமாக காதைப் பிடித்து திருகக் கூடச் செய்யலாம். உங்களின் கனவுகள், வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் ஆகியவற்றை மனம் விட்டு பேசுங்கள். அப்போதுதான் மனச் சுமை பாதியாக குறைந்து மகிழ்ச்சி ஏற்படும். நல்ல விஷயமோ, கெட்டதோ எந்தவொரு பிரச்சினைக்கும் தன்னிச்சையாக முடிவை எடுக்க வேண்டாம்.

உங்களின் துணைவரோடு கலந்து ஆலோசியுங்கள். அவர் சொல்வதில் உள்ள நன்மை, தீமைகளை அமைதியாக அலசுங்கள். பின்னர் முடி வெடுங்கள். பிரச்சினையை ஏற் படுத்தக் கூடிய முடிவுகள் என்றால் சற்று தாமதமாக நிதானமாக யோசித்து முடிவெடுப்பதில் தவறில்லை.

குழந்தைகளை திட்டமிடல்:

உங்களுக்கு ஒரு குழந்தை போதுமா, இரண்டு குழந்தைகள் வேண்டுமா? என்பதை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். முதல் குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே இதில் நீங்கள் தீர்மானமாக இருக்கவேண்டும். இரண்டு குழந்தைகளைப் பெற்றால் எதிர்காலத்தில் அவர்களது கல்விச் செலவு, திருமணச் செலவு போன்றவற்றை உங்களது வருமானத்தின் மூலம் ஈடுகட்ட முடியுமா? என்பதை நன்கு ஆலோசித்துக் கொள்ளுங்கள்.

பெரும்பாலானவர்கள் முதல் குழந்தையை வேகமாக பெற்றெடுத்து விடுவார்கள்.அவர்கள் எதிர்காலத்தை திட்டமிடுவதற்குள் இரண்டாவது குழந்தையும் பிறந்து விடும். இது மாதிரியான நிலைமை ஏற்படாமல் தடுக்க முதல் குழந்தை பெறுவதற்கு முன்பாகவே புதுமணத் தம்பதிகள் இதைப் பற்றி ஒரு தெளிவான முடிவை எடுப்பது அவசியம்.
இதற்காக இருவரும் வெட்கமோ, சங்கடமோ படத்தேவையில்லை. குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் மட்டும் மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடக்காமல் நீங்கள் இருவரும் ஒருமித்ததொரு முடிவிற்கு வாருங்கள்.

பணம்,சொத்துசேமிப்பு:

ஆடம்பரமாக திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைத் தொடங்கும் பெரும்பாலான தம்பதிகள் கடைசிவரை தங்களது வாழ்க்கை சொகுசாகவும் பகட்டாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் குடும்பத்தை நடத்து வதற்கு முதல் காரணியாக இருப்பது பணம் தான் என்பதை தம்பதிகள் உணரவேண்டும்.

பணத்தை சரியான முறையில் கையாண்டால் மட்டுமே உங்களால் சொத்து சேர்ப்பது பற்றி சிந்திக்க முடியும். குறுகிய காலம் ஆடம்பரமாக வாழ்ந்து பணத்தை இழப்பதை விட சிக்கனமாக வாழ்ந்து ஆயுள் காலம் வரை நிம்மதியாக வாழ்வது எவ்வளவோ மேல். வங்கி கணக்கு, இன்சூரன்ஸ் பாலிசிகள்,ஆபரணச் சேர்க்கை, நிலம்-வீடு வாங்குதல் எல்லாமே உங்களின் சேமிப்பைப் பொறுத்த விஷயம்.

குடும்ப நிர்வாகத்தில் பணத்தை செலவிடும்போதும், சேமிக்கும்போதும் ஒருவரே தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொள்வதைத் தவிர்க்கவேண்டும். அன்றாடம் எவ்வளவு செலவு குடும்பத்திற்கு எற்படுகிறது, இன்னும் என்னென்ன மாதிரியான செலவுகள் வரலாம் அவற்றைச் சமாளிப்பது எப்படி என்பதையெல்லாம் புதுமணத் தம்பதிகள் மனம் விட்டுப் பேசிடவேண்டும்.
வங்கியில் பணத்தைச் சேமிக்கும்போது வாழ்க் கைத்துணைவரது பெயரையும் இணைத்துக் கொள்ளும் பழக்கம் இன்று வேகமாக பரவிவருகிறது. இதுவும் ஒரு நல்ல அம்சம்தான். இந்த 5 முக்கிய அம்சங்களையும் புதுமணத் தம்பதிகள் புறக்கணிக்காமல் நடந்தால் அவர்களின் வாழ்க்கை முறை மற்ற வர்களால் போற்றப்படுவது நிச்சயம்

தாயாகு‌ம் மு‌ன்பு தெ‌ரி‌ந்‌திரு‌க்க வே‌ண்டிய ‌விஷய‌ங்கள் 
புதுமண‌த் த‌ம்ப‌திகளு‌ம் ச‌ரி, குழ‌ந்தை பெ‌ற்று‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று முடிவெடு‌த்து‌ள்ளவ‌ர்களு‌ம் ச‌‌ரி ‌சில மு‌க்‌கியமான ‌விஷய‌ங்களை‌த் தெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

தாயாகு‌ம் மு‌ன்பு உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்‌திரு‌க்க வே‌ண்டிய ‌விஷய‌ங்களாவன :

1. கரு‌த்த‌ரி‌க்க ஏ‌ற்ற வயதை அடை‌ந்து‌வி‌ட்டோமா? அ‌ல்லது அதை‌க் கட‌ந்து ‌வி‌ட்டோமா?

2. தாயாகு‌ம் பெ‌ண்‌ணி‌ற்கு அ‌ம்மை‌த் தடு‌ப்பூ‌சி போட‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறதா?

3. உ‌ங்க‌ள் கணவரு‌க்கு‌ம், உ‌ங்களு‌க்கு‌ம் ர‌த்த‌ப் பொரு‌த்த‌ம் உ‌ள்ளதா?

4. கரு‌த்தடை‌க்காக ஏதேனு‌ம் மரு‌ந்து பய‌‌ன்படு‌த்‌தி‌யிரு‌ந்தா‌ல் அதனை ‌நிறு‌த்த வே‌ண்டிய கால‌ம் எது?

5. கரு‌த்தடை மரு‌ந்தை ‌நிறு‌த்‌திய‌ப் ‌பிறகு எ‌த்தனை மாத‌ங்க‌ள் க‌ழி‌த்து கரு‌த்த‌ரி‌க்கலா‌ம்?

6. தாயாகு‌ம் பெ‌ண்‌ணி‌ற்கு புகை‌ப்பழ‌க்க‌ம், மது‌ப்பழ‌க்க‌ம்?

7. உட‌ல் நல‌க் குறை‌ப்பா‌ட்டி‌ற்காக ஆ‌ண்டு‌க்கண‌க்‌கி‌ல் ஏதேனு‌ம் மரு‌ந்து உ‌ட்கொ‌ள்‌கி‌றீ‌ர்களா? அதனை கருவுறுத‌லி‌ன் போது தொடரலாமா அ‌ல்லது ‌நிறு‌த்த வேண‌்டியது அவ‌சியமா?

8. உ‌ங்க‌ள் ‌ப‌ணி‌யிட‌ம், கரு‌த்த‌ரி‌ப்பு‌க்கு ஏதேனு‌ம் ப‌‌ங்க‌ம் ‌விளை‌வி‌க்குமா?

9. ப‌ணி‌யிட‌ங்க‌ளி‌ல் ‌விளையு‌‌ம் ஆப‌த்துக‌ள் எ‌ன்ன?

10. பர‌ம்பரையாக வரு‌ம் நோ‌ய் பா‌தி‌ப்புக‌ள் எ‌ன்ன? அதனை தடு‌க்க வ‌ழி உ‌ண்டா?

11. எ‌ப்போது கரு‌த்த‌ரி‌க்க இயலு‌ம்?

12. கரு‌த்த‌ரி‌க்க எ‌வ்‌வளவு கால‌ம் ஆகு‌ம்?

13. கரு‌‌வி‌ல் இரு‌க்கு‌ம் குழ‌ந்தை‌யை ஆணா பெ‌ண்ணா எ‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ளலாமா?

14. ‌பிற‌வி‌க் குறைபாட‌ற்ற, ஆரோ‌க்‌கியமான குழ‌ந்தையை‌ப் பெ‌ற்று‌க் கொ‌ள்வது எ‌ப்படி?

15. சுக‌ப் ‌பிரசவ‌ம் ஆவத‌ற்கான வ‌ழிக‌ள் எ‌ன்ன?

இதுபோ‌ன்ற கேள‌்‌விகளு‌க்கு ப‌தி‌ல்களை‌த் தெ‌ரி‌ந்து கொ‌ண்டு ‌பி‌ன்ன‌ர் ‌தி‌ட்ட‌மி‌ட்டு குழ‌ந்தை பெ‌ற்று‌க் கொ‌ள்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

ஃபிரைடு ரைஸ்

vegetable-fried-rice
Vegetable Fried Rice

 

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி – 1 கப்
வெண்ணை/ எண்ணெய் – 8 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2
முட்டைக்கோஸ் – 50 கிராம்
கேரட் – 2
குடமிளகாய் (பச்சை, மஞ்சள், சிவப்பு) – தலா 1
வெள்ளை மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
சைவ அஜினமோட்டோ – 1 சிட்டிகை
சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன்
சில்லி வினிகர் – 1/2 டீஸ்பூன்
சில்லி சாஸ் – 1/2 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயத்தாள் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


செய்முறை
அடிகனமான வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் வெண்ணை அல்லது எண்ணெய்யை ஊற்றி லேசான தீயில் பாசுமதி அரிசியை சற்று வாசனை வர வறுக்கவும்.வறுத்த அரிசியை குக்கரில் இட்டு 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டதும் உதிரி உதிரியாக சமைத்து தனியே எடுத்து வைக்கவும்.அனைத்துக் காய்களையும் நீட்டமாக, மிக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். அடிகனமான பெரிய வாணலியில் வெண்ணை அல்லது எண்ணெய் ஊற்றி இஞ்சி-பூண்டு விழுது,வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கவும்.
பிறகு அரிந்த காய்கள்,வெள்ளை மிளகுத்தூள்,உப்பு சேர்த்து வாணலியில் போட்டு வாணலியை கைகளால் குலுக்கியபடி காய்களை அரை வேக்காடாக வதக்கவும். பின்பு வடித்த பாசுமதி அரிசி சாதம்,சோயா சாஸ்,சில்லி வினிகர்,சில்லி சாஸ்,சைவ அஜினமோட்டோ ஆகியவற்றைச் சேர்த்து அரிசி சாதம் உடையாமல் நன்கு கலந்து சிறிது வதக்கி அடுப்பை அணைக்கவும்.

* பொடியாக அரிந்த வெங்காயத்தாள் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

சில்லி பரோட்டா


தேவையான பொருட்கள் : 
 •   மைதா – 1 கப் (200 கிராம்),
 •   பெரிய வெங்காயம் – 1,
 •   குட மிளகாய் – 1,
 •   மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி,
 •   சோயா சாஸ் – 1 தேக்கரண்டி,
 •   தக்காளி சாஸ் – 3 தேக்கரண்டி,
 •   சிவப்பு கலர் கேசர் பவுடர் – 1/2 தேக்கரண்டி,
 •   இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி,
 •   எண்ணெய் – 2 மேசைக்கரண்டி,
 •   சர்க்கரை – 1 தேக்கரண்டி,
 •  உப்பு – தேவையான அளவு.

  
செய்முறை : 

 * வெங்காயம், குட மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி உதிர்த்து வைக்கவும்.

* மைதாவை சிறிது உப்பு, ஒரு தேக் கரண்டி எண்ணெய் சேர்த்து, சப்பாத் திக்கு பிசைவது போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* ரொம்ப மெலிதாகவோ, மொத்த மாகவோ இல்லாமல் சப்பாத் திகளாக தே ய்த்து, நான்காக மடித்து தேய்த்து வைக்கவும்.

* தோசைக்கல்லை காய வைத்து, சப் பாத்திகளை சிவக்காமல், இருபுறமும் வெள்ளையாக இருப்பது போல் சுட்டு எடுக்கவும்.

* சுட்ட சப்பாத்திகளை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், குட மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* வதக்கும் போதே மிளகாய் தூள், சிவப்பு கலர் கேசரி பவுடர், சோயா சாஸ், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து வதக்கவும்.

* நன்கு வதங்கியதும், நறுக்கிய சப்பாத்தி துண்டுகளை சேர்த்து, ஒரு கை தண்ணீர் தெளித்து, நன்கு கிளறி இறக்கவும்.

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!

 

நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம்.

1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும்.

2. மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா?
 
 
3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.
 
 
4. ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்!
 

5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.

6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.
 
 
7. பெண்களென்றால் வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. வித விதமாக நாம் உண்பதைப்போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். உணவு வகைகளை ருசிக்கும் அதேநேரம் உணவக பழக்கங்கள், எப்படிப் பறிமாறுகிறார்கள் என்ற விஷயமெல்லாம் தெரிந்துகொள்ளட்டும்.
 
 
8. நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.
 
 
9. நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் அறியட்டும்.
 
 
10. உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நிங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்.
 
 
11. புத்தகம், கவிதை, நல்ல நாவல்கள் ஆகியவற்றை மகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.
 
 
12. உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.
 
 
13. இன்றைய உலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் எதிர் பார்க்க முடியாது. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது, வண்டி டயரை மாற்றுவது, போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக கொடுங்கள்.

14. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்! மறக்காமல் மகளின் நல்வாழ்வுக்காக  பிரார்த்தியுங்கள்

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

கணவன் மனைவி ஆசை குறைகிறது
கணவன், மனைவிக்கு இடையே படுக்கை அறையில் காதல் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்குள் நிகழும் செக்ஸ் உறவில் நேசமும், மனம் லயிக்கும் நெருக்கமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இருவருக்குமே இருக்கும் மனநெருக்கடியும், பிரச்சினைகளும், சோர்வும் படுக்கை அறையை பெயரளவுக்கு உடல்கள் மட்டும் இணையும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. கணவன்-மனைவி படுக்கை அறை உறவு ஏதோ ஒரு சடங்கு, சம்பிரதாயம் போல் ஆகிவிட்டது. இந்த நிலையை சமூகம் உணர்ந்து விழித்துக்கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் எல்லையில்லாமல் போய்விடும்.

நகரத்தில் வாழும் 44% திருமணமான ஆண்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம் குறைந்து %கொண்டே இருக்கிறது. இதனால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகுகிறது. மேற்கண்டவர்களில் 29 % பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேளையிலே மிகவும் சோர்ந்துபோகிறார்கள். வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக்கொள்ளாவிட்டால் மனைவி மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுகிறார்கள். அப்படி ஒரு எண்ணம் அவர்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்கள்.

இந்த மாதிரியான எண்ணத்துடனே அவர்கள் படுக்கையை பகிர்ந்து கொள்வதால் அவர்களையே அவர்கள் ஏமாற்றிக்கொள்வதோடு, தங்கள் மனைவிகளின் உணர்வு களையும் மழுங்கடிக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் போய்விடுகிறது. இப்படி திருப்தியில்லாமல் உறவு வைத்துக்கொள்வதாலும், அதிக நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்வதாலும் காலப்போக்கில் அந்த கணவன், மனைவி இருவருக்குமே உறவில் எந்த சுகமும் இல்லாமல் போய்விடும். முடிவில் ஆசையே குறைந்துபோய் `திருப்திதராத இந்த உறவு நமக்குள் தேவையா?'-என்ற ரீதியில் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். அதன் விளைவுகளால் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படுகிறது. மட்டுமின்றி குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது''.

நேரமின்மை:
கணவன், மனைவி உறவுச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக இருப்பது நேரமின்மைதான். இரண்டு பேரும் வேலை பார்க்கும் குடும்பங்களில் இதுவே பெரிய வில்லன். மனைவி அலுவலக வேலையை முடித்துக்கொண்டு வேகவேகமாக வீட்டிற்கு வருவார். வந்த வேகத்திலே சமையல் அறைக்குள் அவர் நுழையவேண்டும். பிரிஜ்ஜில் ஏற்கனவே வாங்கி வைத்த மீனோ, இறைச்சியோ இருக்கும். அதை எடுத்து சமையல் செய்யவேண்டும். மறுநாள் காலை உணவுக்கு என்ன தயாரிப்பதென்று முடிவெடுக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்தல், பாத்திரம் தேய்த்தல் என்று அவள் சுழல்கிறாள். அதோடு நின்று விடுவதில்லை. குழந்தை படித்துக்கொண்டிருக்கும். அதன் சந்தேகத்தை தீர்த்துவைக்கவேண்டும்.

இந்த நிலையில் கணவர் வீடு திரும்புவார். அவர் எப்போது தூங்கலாம் என்ற நிலையிலே வருகிறார். கணவன், மனைவி இருவர் நேரமும் வேலை, அலுவலகம், குழந்தை, டெலிவிஷன் நிகழ்ச்சி, உறவினர்கள் வட்டம், வீட்டு வேலைகள் போன்ற அனைத்துக்கும் ஒதுக்கப்பட்டுவிடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது. அன்றன்றைய வேலை முடிந்து இருவரும் படுக்கைக்கு செல்லும் போது சோர்ந்து போய், எப்போது தூங்கலாம் என்ற நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். கணவனும், மனைவியும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கவோ, அவர்கள் விரும்பிய பொழுதுபோக்குகளில் ஈடுபடவோ, அவர்கள் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கவோ நேரமில்லாமல் போய்விடுகிறது. அதிக சோர்வு, களைப்பு, மறுநாள் பணி பற்றிய சிந்தனை போன்றவைகளுடன் அவர்கள் படுக்கைக்குச் செல்லுவதால் படுத்ததும் தூங்கிவிடுகிறார்கள். அதை மீறி அவர்கள் உறவு கொள்ள விரும்பினால், அது முழுமையான மன ஈடுபாட்டோடு அமையாமல் ஏதோ அவசர கோலத்து சடங்கு போல் ஆகிவிடுகிறது. இதில் குறிப்பிடவேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. கணவர், மனைவியிடம் அன்பு செலுத்தாமல் இருந்தாலோ, அவருடைய அன்றாட செயல்பாடுகள் பிடிக்காமல் இருந்தாலோ அவளுக்கு பிறப்பு உறுப்பு இறுக்க நிலைத்தோன்றிவிடும். அதனால் உறவு, வலி நிறைந்த அவஸ்தையாக மாறி, உடலுறவில் நிரந்தர வெறுப்பை உருவாக்கிவிடும்.

பலகீனநிலை:
வேலையில் ஏற்படும் மனநெருக்கடியும், பொருளாதார சிக்கலும் ஆண்க ளுக்கு சோர்வு மனநிலையை அதிகம் ஏற்படுத்துகிறது. அந்த சோர்வு நிலை, ஆண்க ளுக்கு செக்ஸ் பலகீனத்தை உருவாக்கும். இந்த பலகீனத்தை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால், அது செக்சில் வெறுப்பு நிலையை உருவாக்கும். அதனால் மனச் சோர்வில் இருந்து ஆண்கள் விடுபடவேண்டும். அவர்களுக்கு செக்ஸ் பலகீனங்கள் இருந்தால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இப்போது எல்லாவிதமான செக்ஸ் பலகீனங்களுக்கும் சிகிச்சைகள் உள்ளன.

உடற்கூறு அறிவின்மை:

ஆண்களும், பெண்களும் இப்போது எவ்வளவோ படித்தவர்களாகவும், பொது அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தாலும் உடற்கூறு பற்றிய அறிவில் ஏதும் அறியாதவர்களைப் போல்தான் இருக்கிறார்கள். ஆணின் உடற்கூறு பற்றி பெண்ணும், பெண்ணின் உடற்கூறு பற்றி ஆணும் சரியாக அறிந்திருப்பதில்லை. இப்போது பெரும்பாலனவர்களுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

பெண்களில் பலர் இப்போது வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் புடவையைத்தவிர இதர ஆடைகளையே அணிகிறார்கள். அப்போது உள்ளாடை அணிகி றார்கள். அவர்கள் முழுநேரமும் பேன்டீஸ் அணிவது நல்லதல்ல. ஏன்என்றால் கோடைகாலத்தில் நன்றாக பெண்களுக்கு வியர்க்கும். அப்போது மலத்துவாரப்பகுதியில் தொற்றுக்கிருமிகள் இருக்கும். அவை வியர்வையுடன் சேர்ந்து தண்ணீர் தன்மையுடன் பிறப்பு உறுப்பு பகுதியில் பிரவேசிக்கும். அங்கு தொற்றுக்கிருமிகள் தாக்குதல் உருவாகி விடும். அந்த தாக்குதலுக்கு உடனடியாக முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், உறவின் போது கணவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பெண்கள் 24 மணிநேரமும் பேன்டீஸ் அணியும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளக்கூடாது.

ஆண்களும் இறுகிய உள்ளாடை அணியக்கூடாது. விரைப்பகுதி எப்போதும் உடலை ஒட்டிய நிலையில் இருக்கக்கூடாது. இறுக்கமான உள்ளாடை அதற்கு மாறான நிலையை உருவாக்கிவிடுகிறது. விரைப்பகுதியின் தட்பவெப்பநிலை உடல் தட்பவெப்பநிலையை விட ஒரு டிகிரி குறைவாக இருக்கும். உள்ளாடை அணிந்திருக்கும் போது உடலோடு விரைப்பை ஒட்டி உடலின் தட்பவெப்ப நிலைக்கு மாறிவிடுகிறது. அதனால் உயிரணுவின் உயிர்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது.

இப்போது வாழ்க்கை சூழல், வாழும் முறை, உடை கலாசாரம், உணவுக் கலாசாரம், போட்டி மனப்பான்மை, மனநெருக்கடி போன்ற அனைத்தும் கணவன்- மனைவி நேசத்திற்கும், படுக்கை அறை உறவுக்கும், திருப்தியான தாம்பத்ய வாழ்க்கைக்கும் எதிராக இருக்கிறது. அதை எல்லாம் உணர்ந்து கணவனும், மனைவியும் நடந்து பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மார்பகங்கள் அழகாக

Breast cancer

பெண்மையின் இலக்கணமான இதில்தான் எத்தனை பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சனைகள். பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அழகு சிகிச்சையில் தீர்வுகள் வந்துவிட்டன இன்று. மார்பக அழகைப் பராமரிக்க சில யோசனைகள்...இயற்கை முறை ஆலோசனைகள் :

மார்பகங்களை மசாஜ் செய்வதற்கென்று இப்போது ஆயுர்வேத மருந்துக் கடைகளில் மசாஜ் எண்ணெய்கள் கிடைக்கின்றன. அதை வாங்கி மார்பகங்களை மசாஜ் செய்யலாம். அதே மாதிரி வெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் போன்றவற்றில் ஒன்றைக் கொண்டு மார்பகங்களைக் கீழிருந்து மேலாக, வட்ட வடிவத்தில் மசாஜ் செய்தால் மார்பகங்கள் பெருக்கும்.

மார்பகங்கள் பெருக்க வேண்டுமானால் உணவில் கொழுப்பு அதிகமுள்ள வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாதாம், முந்திரி, அக்ரூட், பிஸ்தா, பால் போன்றவற்றை நிறைய சாப்பிட வேண்டும். உடல் பெருத்தால் மார்பகங்களும் பெருக்கும்.

வாரம் ஒரு முறை தலை முதல் பாதம் வரை எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து, ஊறிக் குளிக்க வேண்டும். மார்பகங்களுக்கும் மசாஜ் செய்ய வேண்டும்.

மாதுளம் பழம் நிறைய சாப்பிடலாம்.

மாதுளம் பழத் தோலைக் காய வைத்து இடித்து, அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் குழைத்து மார்கங்களின் மேல் தடவி, ஊறிக் குளிக்கலாம். தொடர்ந்து செய்து வர சிறுத்த, தளர்ந்து போன மார்பகங்கள் ஓரளவுக்குப் பெரிதாகும்.

கர்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட மாதத்திலிருந்தே வைட்டமின் ஈ எண்ணெயை மார்பகங்களில் தடவி வரலாம். இதனால் பிரசவத்திற்குப் பிறகு மார்பகங்களில் ஏற்படும் தழும்புகளும், வெள்ளைக் கோடுகளும் தவிர்க்கப்படும்.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

டீன் ஏஜ் பெண்ணின் அம்மாவா நீங்க?

Photograph of Mother and Daughter hugging
 
டீன் ஏஜ் பெண்ணின் அம்மாவா நீங்கள்? உங்களுக்கும் உங்கள் பெண்ணுக்கும் இடையேயான உறவு எப்படி? அந்த காலத்து அம்மா போல இன்றும் இருக்கிறீர்களா? காலத்திற்கு ஏற்ப உங்களை கொஞ்சம் மாத்திக் கோங்க, தப்பில்லை. உங்களுக்கும், உங்க பெண்ணுக்கும் உள்ள உறவு மேம்பட, சில "டிப்ஸ்'.

* மனம் விட்டு பேசுங்கள்: உங்கள் பெண்ணுடன் இடைவெளி விட்டு பழகாதீர்கள். அப்படியிருந் தால், அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது. எந்த விஷயமாக இருந்தாலும், மனம் விட்டு பேசுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக, உங்கள் மகள் பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், அன்றைய நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கேளுங்கள்.


இதனால், உங்களுக்கு பொழுது போவது மட்டுமின்றி, அவர்கள் வெளியிடங்களில் செயல்படும் விதங்களையும் அறிந்து கொள்ளலாம்.

* நல்ல நண்பராக இருங்கள்: நீங்கள் தாயாக மட்டும் இல்லாமல், நண்பராகவும் இருக்க முயலுங்கள். தாயிடம் கூற முடியாத சில விஷயங்களை கூட, நண்பர்களிடம் சொல்வர். நீங்களே அந்த நண்பராகவும் இருக்கும் போது, உங்கள் பெண்ணை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

* உடல் தூய்மை பற்றி சொல்லுங்கள்: வயது வந்த பெண் எப்படி உடலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து சொல்லிக் கொடுங்கள். குறிப்பாக, மாதவிடாய் காலங்களில் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையும், அதன் அவசியத்தையும் எடுத்து கூறுங்கள்.

* பெண்ணின் விருப்பமறிந்து செயல்படுங்கள்: ஷாப்பிங் போறீங்களா? நீங்கள் மட்டும் கடைக்கு போய், கையில் கிடைத்ததை வாங்கி வந்து உங்க மகளிடம் கொடுக்காதீர்கள். உடை, அணிகலன், கைப்பை என, தினசரி புதுப்புது மாடல்கள் வந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் வாங்கி வருவது உங்கள் பெண்ணுக்கு பிடிக்காமல் போகலாம். இதை தவிர்க்க, உங்கள் பெண்ணையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அவளது விருப்பமறிந்து வாங்கிக் கொடுக்கலாம்.

* நண்பர்களை அறிமுகப்படுத்தும் போது: பள்ளி முதல் கல்லூரி வரை பெரும்பாலும், இரு பாலர் நிறுவனங்களாக தான் உள்ளன. டியூஷன் செல்லும் இடத்திலும் ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடும். எனவே, உங்கள் பெண், தன்னுடன் படித்த, அல்லது படிக்கும் ஆண் நண்பர்களை அறிமுகப்படுத்தும் போதும், அவர்களிடம் பேசும் போதும் கோபப்படாதீர்கள். மாறாக, இந்த காலகட்டத்தை நினைவில் கொண்டு, அவர்கள் ஆண் நண்பர்களுடன் பழகும் எல்லை எதுவரை இருக்கலாம் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.

* நண்பர்களை தெரிந்து கொள்ளுங்கள்: நண்பர்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், வாழ்க் கையே சீரழிந்து விடும் என்பதை உங்கள் பெண்ணுக்கு உணர்த் துங்கள். உங்கள் பெண்ணின் நண்பர்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள். உங்கள் பெண்ணின் பிறந்த நாள், தீபாவளி, போன்ற விசேஷ தினங்களில் அவர்களை வீட்டிற்கு அழையுங்கள். இதன் மூலம், உங்கள் பெண், சரியான நபர்களுடன் தான் சேர்கிறாளா என்பதும் தெரியவரும்.

விண்டோஸ் 7 ல் அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகள்.

விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு ஒலிபெருக்கியில் ( Speaker ) எவ்வித பிரச்சினையுமில்லை. லேப்டாப் ஆக இருந்தால் எதாவது ஒரு பாட்டைப் போடும் போது இயல்பாக லேப்டாப்பிலேயே உள்ளிணைந்த ஸ்பீக்கரில் பாடும். மேலும் ஹெட்போன் (Headphones) இணைத்தால் அதை உணர்ந்து ஹெட்போனில் பாடத்துவங்கும். ஆனால் விண்டோஸ் 7 ல் இந்த மாதிரி மாற்றி மாற்றி பயன்படுத்தும் போது சில அமைப்புகளை கையாள வேண்டியிருக்கிறது.

 
 
தோழியின் விண்டோஸ் 7 நிறுவப்பட்ட லேப்டாப்பில் சவுண்டே வரவில்லை என்று புலம்பினாள். நானும் ஒலியின் அளவை சோதித்தேன். நிறைவாகத்தான் இருந்தது. சரி என்று ஒரு படத்தை ஓடவிட்டுப்பார்த்தால் எந்த சவுண்டும் வரவில்லை. கணிணியை அணைத்து விட்டு மீண்டும் ஒருமுறை பார்க்கலாம் என்றால் அதுவும் சரியாகவில்லை. அப்போது தான் volume பட்டனை கிளிக் செய்த போது Playback devices என்ற விசயத்தைக் கவனித்தேன்.

விண்டோஸ் 7 ல் இயல்பான ஒலிபெருக்கி ( Default speaker ) என்ற அமைப்பு உள்ளது. அதாவது நாம் லேப்டாப்பில் இணைக்கப்படும் ஒலிபெருக்கிகள், ஹெட்போன்கள் போன்றவற்றை Playback devices பகுதியில் சேர்த்துக்கொள்கிறது. நீங்கள் தற்போதைக்கு ஹெட்போனில் பாட்டு கேட்க விரும்புகிறிர்கள். அதனால் ஹெட்போன் இயல்பான ஒலிபெருக்கியாக (Default speaker) கணிப்பொறியில் அமைந்து விடுகிறது.

அடுத்தமுறை ஹெட்போன் இல்லாமல் பாட்டு கேட்க விரும்பி பாட்டைப்போட்டால் நிச்சயமாக பாடாது. ஏனெனில் இன்னமும் ஹெட்போன் தான் உங்களது இயல்பான ஒலிபெருக்கியாக இருக்கும். அதனால் என்ன செய்ய வேண்டும்?
 
 

Volume பட்டன் கணினியில் டாஸ்க்பாரில் வலது ஒரத்தில் இருக்கும். அதை வலது கிளிக் செய்து Playback devices என்பதை தேர்வு செய்யவும். அங்கே இணைக்கப்பட்ட கருவிகளின் பட்டியல் தெரியும். எது இயல்பான ஒலிபெருக்கியோ அதில் பச்சைக் குறியீடு இருக்கும்.
 
 

மாற்ற வேண்டுமெனில் எதை மாற்றுகிறிர்களோ அதில் வலது கிளிக் செய்து Set Default Device என்பதை கிளிக் செய்தால் போதும்.

சனி, 27 ஆகஸ்ட், 2011

உங்கள் கணனியை வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான வழி

எதுவித மென்பொருட்களையும் நிறுவாமல் உங்கள் கணனியை முன்னிருந்ததை விட வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான முறையினை இங்கு உங்களிடன் பகிர்கின்றேன்.


முதலில் 'Start' பொத்தானை கிளிக் செய்து 'Run' என்பதை தெரிவு செய்யுங்கள்.

பின் அதில் regedit என டைப் செய்து 'Enter' பொத்தானை அழுத்துங்கள்.

பிறகு தோன்றும் Registry Editor வின்டோவில் HKEY_CURRENT_USER ன் கீழ் உள்ள control panel யை தெரிவுசெய்து அதில் desktop என்பதை கிளிக் செய்யுங்கள்.

அதன் வலது பக்கத்தில் காட்டப்பட்டுள்ள registry setting இல் 'MenuShowDdelay' என்பதன் மேல் right click செய்து modify என்பதை தெரிவு செய்யுங்கள்.
அதில் default value data வாக காட்டப்பட்டுள்ள '400' ஐ '000' வாக மாற்றிய பின் OK பொத்தானை அழுத்துங்கள்.பின்னர் உங்கள் கணனியை Restart செய்யுங்கள்.

உமது கணனி முன் இருந்ததை விட வேகமாக செயற்படுவதை உங்களால் உணர கூடியதாக இருக்கும்.
இம்முறையின் மூலம் கணனியை வேகமாக தொடக்கவும் (start) முடியும்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் வெண்டைக்காய்!


Ladys finger reduces cholesterol - Food Habits and Nutrition Guide
 in Tamil
வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளைக்கு போஷாக்கு என்று இந்தியர்களுக்கு தீவிர நம்பிக்கை. இது பருத்திச் செடியின் குடும்பத்தை சேர்ந்தது. தாவரவியல்படி செம்பருத்தி ஹாலிஹாக் என்னும் பூச்செடி வகை. இந்த பூக்களின் அமைப்பும் வெண்டைக்காய் பூவின் அமைப்பும் ஒரே மாதிரியானவை. வெண்டைக்காய்க்கு வெப்பம் அதிகமுள்ள நிலமும் பகல் இரவு இரண்டிலும் சூடான சூழ்நிலையும் அவசியம். இதனால் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் விளைச்சல் அதிகம்.
 
 
வரலாறு:
 
வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு. அங்கிருந்து அரேபியா, நைல்நதியோர நாடுகள், பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகி இருக்கிறது. கி.பி 1600-களில் அடிமை வியாபாரம் தொடங்கிய காலகட்டத்தில் ஆப்ரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். ஆப்ரிக்கர்கள் கம்போ என்ற ஒரு பிரபல சூப் தயாரிக்கையில் சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். வெண்டைக்காயை பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்ரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். ஓக்ரா என்ற இன்னொரு பெயரும் உண்டு.
 
இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும் நீளமாகவும் நுனி கூராகவும் இருப்பதால் ஆங்கிலத்தில் இதை பெண்ணின் விரல் (Ladies finger) என்கிறார்கள்.
வெகுநாட்கள் வரை இதை எப்படி சமைப்பது என்று தெரியாமலே யாரும் பயன்படுத்தவில்லை. அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியிலேயே முற்ற விட்டதால் அதை பயன்படுத்திய ஒருசிலரும் முற்றிய வெண்டைக்காயின் ருசி பிடிக்காமல் அதை வெறுத்தனர்.
 
வகைகள்:
 
இளம் பச்சை, கரும் பச்சை, சிவப்பு நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை வடிவங்கள் உண்டு.
 
விசேஷ குணம்:
 
வெண்டையின் மிக முக்கியமான விசேஷ குணம் கொழகொழப்புதான். இதிலுள்ள Acetylated Galeturomic அமிலங்கள் கொழகொழப்பை ஏற்படுத்துகின்றன. வெண்டைக்காயை நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வந்து கொழகொழக்கிறது.
 
வாங்குவது எப்படி?:
 
இளசாக இருக்கும் போதே பறித்துவிட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும் வகையை சேர்ந்தது. சீக்கிரமே மரம் போல் முற்றி விடும். வாங்கியவுடன் சமைக்க வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். காம்புக்கு அருகில் ஓட்டை இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும். ஓட்டை இருந்தால் புழு இருக்கும்.
 
பாதுகாப்பு:
 
ஃப்ரிஜ்ஜில் வைப்பதானால் கழுவாமல், லூஸாக பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி ட்ரேயில் வைக்கவும். ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது துளி கூட ஈரம் இருக்கக் கூடாது. ஈரம் இருந்தால் வெண்டைக்காய் அழுகி கொசகொசத்து பூசணம் பூத்துவிடும். சமைப்பதற்கு முன்தான் அலம்ப வேண்டும். சில வகை வெண்டைக்காயில் மெல்லிய பூனைமுடி போல இருக்கும். நன்றாக தேய்த்துக் கழுவி பேப்பர் டவலில் துடைத்துவிட்டு நறுக்கவும். நறுக்கி தண்ணீரில் போடக்கூடாது. அதிலிருக்கும் ஒருவித சளி போன்ற கொழ கொழப்பான திரவம் வெளியேறி சமையலே கெட்டு விடும்.
 
சமைக்கும் போது கவனிக்க:
 
இன்று வெண்டைக்காய் சாம்பார் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம். சூப், ஊறுகாய், குழம்பு என்று வெண்டைக்காயை வைத்து செய்யப்படும் உணவு வகைகளின் பட்டியல் மிகப் பெரியது. வெண்டைக்காயை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி, வெயிலில் காய வைத்து, எண்ணெயில் பொறித்து வடகமாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
 
வெண்டைக்காயின் கொண்டைப்பகுதியை வெட்டி தோசை மாவு அரைக்கும்போது சேர்த்தால் தோசை மிருதுவாக வரும்.
 
வெண்டைக்காயை துண்டாக வெட்டி நறுக்கும் போது அதிலிருக்கும் கொழ கொழப்பு மொத்தையாக்கி சரியாக வதங்காது. அதனால் கொழகொழப்பு நீங்க எலுமிச்சை சாறு, அல்லது தயிரை சிறிதளவு விட்டு வதக்கலாம்.
 
மிக மிக பொடியாக வெட்டி நறுக்கினாலும் கொழ கொழப்பு அவ்வளவாக இருக்காது. வெண்டைக்காயை தக்காளி, வெங்காயம், சோளம், மீன், உருளைக்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து சமைக்கும்போது அவை மிகவும் ருசியாக இருக்கும்.
 
மற்ற காய்கறிகளோடு சேர்த்து சமைக்கும் போது வெண்டைக்காயை அதன் கொழகொழப்பு வராமல் தனியாக வதக்கி கடைசியில் சேர்க்க வேண்டும். இரும்பு, அலுமினிய பாத்திரங்களில் சமைத்தால் கறுத்துவிடும். தக்காளியின் புளிப்புத் தன்மை வெண்டைக்காயின் கொழகொழப்பை முறியடிக்கும்.
வெளிநாட்டில் வெண்டைக்காயை மெலிதாக நறுக்கி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றோடு சேர்த்து ஸாலட்டாகத்தான் சாப்பிடுவார்கள். தனியாக சமைத்து சாப்பிடுவதில்லை. வங்காளத்தில் முற்றிய வெண்டையை உறித்து கொட்டையை சாப்பிடுவார்கள்.
 
இளசான வெண்டைக்காயை துண்டாக்கி முட்டையில் தோய்த்து ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து சாப்பிடுவது அமெரிக்காவில் பிரபலம். முற்றிய காயை பேப்பர் செய்யவும் கயிறு செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.
 
 
உணவுச் சத்து:
 
பாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
 
ஒரு கப் சமைத்த வெண்டைக்காயில் இருக்கும் உணவுச் சத்துகளின் அளவு:
கலோரி 25, நார்ச்சத்து - 2 கிராம், புரோட்டின் 1.52 கிராம், கார்போஹைட்ரேட் 5.76 கிராம், விட்டமின் ஏ 460 IU, விட்டமின் சி 13.04 மில்லி கிராம், ஃபாலிக் ஆசிட் - 36.5 மைக்ரோ கிராம், கால்சியம் 50.4 மில்லி கிராம், இரும்புச் சத்து 0.4 மில்லி கிராம், பொட்டாசியம் 256.6 மில்லி கிராம், மெக்னீசியம் - 46 மில்லி கிராம்.
வெண்டைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் இளம் பெண்களுக்கு ஆப்பிள் பழம் போல அழகிய கன்னங்கள் உண்டாகும். மேலும், புஷ்டியான முகத்துடன் பளபளவென்று மின்னுவார்கள்.
 
வெண்டைக்காய் வேரை இடித்துப் பொடியாக்கி அதை இரவு உணவிற்குப் பின் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். 10 கிராம் பொடியை 10 கிராம் அளவுள்ள நெய் மற்றும் தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்குத் தாது பலம் ஏற்படும்.
 
வெண்டைக்காயில் ஏ, பி மற்றும் சி ஆகிய வைட்டமின்கள் இருக்கின்றன. குடல் புண்ணால் ஏற்படும் வயிற்று வலிக்கு வெண்டைக்காய் ஒரு சிறந்த மருந்து. பண்டைய காலத்தில் லேசான காயம், நீர்க்கட்டு, பரு போன்ற பிரச்சினைகளுக்கு வெண்டைக்காய்ச் செடியின் இலைகளை அரைத்து மருந்தாகப் பயன்படுத்தினர்.
 
வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் தன்மையும் வெண்டைக்காய்க்கு உண்டு. சீசனில் விலை குறைவாக இருக்கும்போது நிறைய வெண்டைக்காயை வாங்கி, காய வைத்து தேவைப்படும்போது சூப் தயாரித்துக் குடித்து மகிழலாம். வீட்டிலேயே சிறிய தோட்டம் அமைத்து இயற்கை முறையில் வெண்டைக்காயைப் பயிரிட்டால் அதன் சுவை அதிகமாக இருக்கும். இத்தனை மகிமை வாய்ந்த வெண்டைக்காயை அளவோடு சாப்பிட்டு வந்தால் வளமாக வாழலாம்.

மொபைல்போன் பராமரிப்புக்கு சில எளிய வழிமுறைகள்குறைந்த விலை மொபைல்போன், காஸ்ட்லியான மொபைல்போன் எதுவாயினும், அதை பராமரிக்கும் முறைகளிலேயே அதன் ஆயுட்காலம் இருக்கிறது. சரியான பராமரிப்பு இல்லாத மொபைல்போன்கள் அதன் மதிப்பை வெகுசீக்கிரத்திலேயே இழந்துவிடும். சில எளிய முறைகளை கையாண்டால், உங்கள் மொபைல்போனின் மெருகு குலையாமல் நீண்ட காலம் பயன்படுத்த முடியும். உங்களுக்காக சில எளிய வழிமுறைகள்...

தட்பவெப்பம்:

மொபைல்போன்கள் தட்பவெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அதிக குளிர்ச்சியான மற்றும் அதிக வெப்பமான இடங்களில் மொபைல்போனை தொடர்ந்து வைத்திருக்க வேண்டாம். தவிர, மழைச்சாரல் அடிக்கும் ஜன்னல் ஓரங்களிலும் வைக்க வேண்டாம். இதனால், போனின் ஹார்டுவேர்கள் எளிதாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

சார்ஜ் செய்யும்போது கவனம்:

போன் சார்ஜில் இருக்கும்போது போனில் பேசுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். மின் இணைப்பை துண்டித்துவிட்டு அதன்பின் பேசுவது பாதுகாப்பானது.

பேட்டரி சார்ஜ் செய்வது எப்படி:

பேட்டரியில் சார்ஜ் முழுவதும் தீர்ந்தபின் மீண்டும் சார்ஜ் செய்யுங்கள். அடிக்கடி சார்ஜ் செய்வதால் உங்கள் பேட்டரியின் ஆயுள் சீக்கிரத்தில் போய்விடும். மேலும், சிறிது காலத்தில் பேட்டரி தனது சேமிப்பு திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிடும்.

போன் கவர்:

உராய்வுகளால் போனின் டிஸ்பிளே மற்றும் இதர முனைகள் பாதிக்கப்படும். பிளாஸ்டிக் மற்றும் லெதர் உறைகளில் போனை பாதுகாப்பாக வைத்திருக்க பழகுங்கள்.

பாதுகாப்பு:

குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் போனை வைக்க பழகிக்கொள்ளுங்கள். போனின் கீபேடு லாக்கை ஆக்டிவேட் செய்து வைத்துக்கொள்வது சிறந்த வழி. மேலும், தினமும் போனை மெல்லிய துணியால் சுத்தம் செய்யுங்கள்.

மெமரி கார்டு:

வங்கி ரகசிய எண்கள் உள்ளிட்ட அதிமுக்கியமான தகவல்களை மெமரி கார்டில் பதிவு செய்ய வேண்டாம். சில சமயங்களில் போன் தொலைந்துபோனால், அதன் மெமரி கார்டில் உள்ள தகவல்களை அடுத்தவர் எளிதில் எடுத்து துஷ்பிரயோகம் செய்யக்கூடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

சார்ஜ் சேமிப்பு:

டிஸ்பிளேயின் பிரகாசத்தை குறைத்து வையுங்கள். இதன்மூலம், பேட்டரியின் சார்ஜ் சீக்கிரம் காலியாகாது. போன் பேசுவதைவிட எஸ்எம்எஸ் மூலம் தகவல்களை பரிமாறினால்கூட பேட்டரியில் சார்ஜ் சீக்கிரம் இறங்காது. இதேபோன்று, மற்றொன்று முக்கிய விஷயம், தேவையில்லாமல் வைபரேட்டர் மோடை ஆன் செய்ய வேண்டாம். வைபரேட்டர் மோடு பேட்டரி சார்ஜை வேகமாக உறிஞ்சிவிடும்.

உஷார்:

பீச் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்போது பாக்கெட்டில் மொபைல்போனை போட்டுக்கொண்டு செல்ல வேண்டாம். தண்ணீருக்குள் மொபைல்போன் விழுந்தால், அதன் ஹார்டுவேர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது.

பேட்டரி:

பேட்டரி பழுதாகிவிட்டால், போலி தயாரிப்புகளை வாங்காமல் விலை கூடுதலாக இருந்தாலும், தரமான மற்றும் அந்தந்த நிறுவனத்தின் ஒரிஜினல் பேட்டரிகளை வாங்குங்கள்.

டச் ஸ்கிரீன் போன்களின் பராமரிப்பு:

1. சாதாரண மொபைல்போன்களைவிட டச் ஸ்கிரீன் போன்களை பராமரிப்பது சற்று கடினமான விஷயம். டச் ஸ்கிரீன் போன் வாங்கும்போதே அதற்கு மேல் தகுந்த உறையை லேமினேஷன் செய்துகொள்ள வேண்டும்.

2. டச் ஸ்கிரீன் டிஸ்பிளேயில் விரலால் மெதுவாக தொட்டு அப்ளிகேஷன்களை இயக்க பழகுங்கள். நகங்களை கொண்டு சிலர் இயக்குவதை கண்டிருக்கிறோம். அது நாளைடைவில் டிஸ்பிளேயில் குறிப்பிட்ட இடங்களில் கீறல்களை ஏற்படுத்தி போனின் மவுசை குறைத்துவிடும்.

3. பெரும்பாலும் டச் ஸ்கிரீன் போன்களை சட்டை பாக்கெட்டில் போடுவதை தவிர்க்கவும். அப்படி சட்டை பாக்கெட்டில் போடும்போது போனுக்கு எக்ஸ்ட்ரா கவர் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். இதேபோன்று, போனின் டிஸ்பிளேயை லாக் மோடில் வைக்கவும்.

4. காந்த சக்தியுள்ள பகுதிகளில் டச் ஸ்கிரீன் போனை வைத்திருப்பதும், பயன்படுத்துவதையும் தவிர்க்கவும்.

5. மெல்லிய காட்டன் துணிகளை கொண்டு தினமும் டிஸ்பிளேயை துடைத்து சுத்தப்படுத்தவும்.

மேற்கண்ட சில எளிய பராமரிப்பு முறைகளை கையாண்டால் உங்கள் போன் என்றும் புதுசு போல் இருக்கும் என்பது மட்டுமல்ல, உங்கள் கவுரத்தின் அடையாள சின்னமாக இருக்கும் என்பதும் உறுதி.

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

 

Post image for தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.

வெள்ளைப் பூண்டு:


பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.வெங்காயம்:


வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.   

காரட்:


நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் ொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.

ஆரஞ்சு :வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.

பருப்பு வகைகள் :


பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

கோதுமை ரொட்டி :நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இறால் மீன் மற்றும் நண்டு :அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
 
 
 
தேநீர் :
தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.

பாலாடைக்கட்டி :
சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.

முட்டைக்கோஸ் :குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.
மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

முருங்கக்காய் கார குழம்பு (செட்டிநாடு)


Drumstick (muranka) pieces, onion, coconut-ginger paste and tomato
தேவையான பொருட்கள்:
========================

புளி - எலுமிச்சை அளவு
முருங்கக்காய் துண்டுகள் - பத்து
சின்ன வெங்காயம் - பத்து
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
தக்காளி - ஒன்று அல்லது இரண்டு
பச்சை மிளகாய் - நான்கு
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஐந்து (optional)
நல்லெண்ணெய் - இரண்டு குழிகரண்டி +அரை குழிகரண்டி
கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்

அரைக்க:
========
சோம்பு பொடி - கால் டீஸ்பூன்
தேங்காய் துறுவல் - கால் கப்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி - ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன்
தனியா பொடி - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஐந்து இலை


செய்முறை:

* வெங்காயத்தை தோலுரித்து கொள்ளவும்,

* பச்சை மிளகாயை கீறி கொள்ளவும்.

* புளியை மூன்று கப் நீரில் கரைத்து கொள்ளவும்.

* அரைக்க வேண்டியதை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

* பாத்திரத்தில் இரண்டு குழிகரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மிளகாய் வற்றல்,பச்சை மிளகாய் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து பொறிய விடவும்.

* சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி முருங்கக்காய் சேர்க்கவும்.

* உப்பு சேர்த்து தக்காளி ,மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

* பச்சை வாசனை போனதும் அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொத்தி வந்ததும் மீதும் உள்ள எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து எண்ணெய் கக்கும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

* சுவையான கார குழம்பு தயார்.குறிப்பு:
=======

உங்கள் நாவிற்கு தகுந்தாற்போல் காரத்தை கூட குறைத்து போட்டு கொள்ளுங்கள்.
சின்ன வெங்காயம் உரிக்கும் பொழுது கண் எறியாமல் இருக்க ஒரு பத்து நிமிடம் முன்பு தண்ணீரில் ஊற போட்டு விடுங்கள்.எளிதாக தோல் நீக்கிவிட முடியும் அதே சமயம் கண் எறியாது.

நண்டு வறுவல்

தேவையான பொருட்கள்

நண்டு - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 1 (பெரியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 5
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 கோப்பை
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. நண்டை ஓடு நீக்கி சுத்தம் செய்து கழுவி வைத்து கொள்ளவும்.

2. சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, பாதியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. பாதி சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெயில் வதக்கி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்பு சேர்த்து வதக்கி ஆற வைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

4. பூண்டை தோல் உரித்து கொள்ளவும்.

5. தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை ஆகியவற்றை போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

7. பிறகு இதனுடன் பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.

8. பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

9. இதனுடன் கரம் மசாலா, அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கி, பின்னர் நண்டை சேர்த்து லேசாக பிறட்டி, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும்.

10. பிறகு தேங்காயை நன்றாக அரைத்து இதனுடன் சேர்த்து கொதிக்க விடவும்.

11. நண்டு நன்றாக வெந்து குழம்பு நன்றாக கொதித்து சிறிது கெட்டியானதும், மிளகுத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.


குறிப்பு

1. நண்டை ஓடு நீக்கி கழுவியதும் சிறிது நேரத்தில் சமைத்து விடவும். இல்லையென்றால் நண்டு உள்ளே குழைந்து விடும்.

2. இஞ்சி பூண்டு விழுதில் இஞ்சி அதிகமாகவும், பூண்டு குறைவாகவும் சேர்த்து அரைக்கவும்.

3. தேங்காய் விழுதுக்கு பதிலாக தேங்காய்ப்பால் சேர்த்தால் மேலும் சுவையாக இருக்கும்.

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

Blood Donors குருதி கொடையாளர் தேவையா ?


 
நோயாளிகள், அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்கள், விபத்தில் சிக்கிக் கொண்டு உடனடி சிகிச்சை கொள்ள துடிப்பவர்கள் அனைவருக்கும் இரத்தம் ஓர் உடனடித் தேவையாகும். இது போன்ற சூழ்நிலைகளில் உதவ தன்னார்வத்துடன் பல தொண்டர்கள் உள்ளனர். ஆனால் அவசர காலத்தில் இவர்கள் எங்குள்ளனர் என்று தெரிவதில்லை. இந்த தன்னார்வலர்களின் தகவல்களைக் கொண்டுள்ள இலவச தகவல் மையங்களின் முகவரிகள், தொலைபேசி எண்கள் ஆகியவற்றைப் பெற்று, இவர்களைக் கண்டறிந்து, இரத்தம் தேவைப்படும் இடத்திற்கு இவர்கள் வருவதும் கால தாமதம் ஏற்படுத்தும் ஒரு செயலாகிறது.இதனைத் தடுக்கவே www.friendstosupport.org என்ற இணைய தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளம் சென்றால் இங்கு இரத்த வகை வாரியாக, தன்னார்வலர்களின் முகவரி கிடைக்கிறது. எந்த இடத்திற்கு இவர்கள் வர வேண்டும் எனக் குறிப்பிட்டால், உடனே அந்த இடத்திற்கு அருகே உள்ளவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் தரப்படுகின்றன. இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு நாம் நேரடியாகவே இரத்தக் கொடையாளிகளுடன் பேசி அவர்களை வரவழைக்கலாம்.
அவர்கள் கொடுத்துள்ள தொலைபேசி எண்கள் இயங்கவில்லை என்றால், உடனே இந்த தளத்திற்குத் தகவல் தெரிவிக்கலாம்,. அவர்கள் சார்ந்தவர்களைத் தொடர்பு கொண்டு சரியான தொலைபேசி எண்களைப் பெற்று, தளத்தில் அப்டேட் செய்கின்றனர். இந்த தளத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு சேவை செய்திடலாமே
!


இங்கு இந்த செய்தியை வெளிவிட காரணம் யாராவது ஒருவருக்கு இந்த செய்தி பயன்படவேண்டும் என்பதற்க்காக தான்.நீங்களும் இந்த செய்தியை ஒருவரிடமாவது கட்டாயம் தெரியபடுத்துங்கள்.

கணினியில் பிரச்சனையா ! CPU வை கலட்டதிங்க !


பொதுவாக கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை வருவது வழக்கம்தான்.அவ்வாறு பிரச்சனை வரும்போது கணினி ஒருவகையா ஒலி எழுப்புவதை கேட்கலாம். முதன்மைநினைவகம்(RAM),வன்தட்டு,மதர்ப்போர்டு போன்றவற்றில் பிரச்சனை வரும்போது சிபியு -வில் அந்த வன்பொருளுக்கு ஏற்றது போல ஒலியை எழுப்பும்.அந்த ஒலியை பீப் சவுண்ட் என்று கூறுவோம்.கணினியில் இருந்து ஒலி வந்த உடன் அந்த ஒலிக்கு உரிய வன்பொருளை கண்டறிந்து பிர்ச்சனைக்கு தீர்வுக் காண்போம்.
ஆனால் பீப் ஒலி வந்ததும் கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை என்று சில நபர்கள் அனுபவம் இல்லாமல் CPU வை திறந்து அந்த பிரச்சனை கண்டறிய முயற்ச்சிப்பார்கள் அதனால் WARRANTY போய்விடும் CPU வில் மற்ற வன்பொருள்களுக்கு கூட பிரச்சனை ஏற்ப்படலாம்.இதற்க்கெல்லாம்
 மென்பொருள்கள் மூலம் அந்த வன்பொருளில் என்ன பிரச்சனை, அது எந்த நிலமையில் உள்ளது போன்ற தகவலை அந்த மென்பொருளில் காணலாம்.ஹார்ட்வேரில் உள்ள ஒவ்வரு வன்பொருள்களுக்கும் தனி தனி மென்பொருள்கள் இருக்கிறது.இதனால் கணினியில் இருந்தபடியே மென்பொருள்கள் உதவியுடன் வன்பொருள்களின் செயல்பாட்டுத் தகவலை அறியலாம்.அந்த மென்பொருள்களை பற்றி காண்போம்.

MEMORY யை TEST செய்ய: 

மெமரியை டெஸ்ட் செய்ய MEMTEST என்ற மென்பொருளை நிறுவி பயன்படுத்திக்கொள்ளலாம்.இது கேச் மெமரி,முதன்மைநினைவகம் போன்றவற்றை கண்டறிய உதவுகிறது. அந்த மென்பொருளை பெற, 

1. http://www.memtest86.com/

2. http://www.memtest.org/

3. நிறுவிய பின் ,
வன்தட்டு பரிசோதனை:

கீழே குறிப்பிட மென்பொருளை நிறுவி ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்வை பரிசோதிக்கலாம்.வன்தட்டில் உள்ள ஹெட்க்கு, ஹார்ட்-ட்ரைவ்க்கு தேவையானது. 

http://www.hdtune.com/

http://crystalmark.info/software/CrystalDiskInfo/index-e.html

http://www.panterasoft.com/download/hddh.exe

PROCESSOR க்கு தேவையானது

CPU யின் தகவலை பற்றி தெரிந்துக்கொள்ள:

http://www.cpuid.com/softwares/cpu-z.html

PRIME 9:

http://www.mersenne.org/freesoft/

i7 CORE :

http://www.xtremesystems.org/forums/showthread.php?t=225450

கிராபிக்ஸ் கார்டின் நிலையை கண்டறிய :

http://www.techpowerup.com/gpuz/

அனைத்து COMPONENTS னை பரிசோதிக்க :

http://www.ubcd4win.com/

USB மற்றும் MEMORY CARD பரிசோதிக்க:

http://www.heise.de/software/download/h2testw/50539

இந்த மென்பொருள் மூலம் usb ,memory யை டெஸ்ட் செய்யலாம்.அந்தமென்பொருளை படத்தில் காணலாம். 

 
இந்த அனைத்து மென்பொருள்களை பயன்படுத்தி கணினியில் வன்பொருள் நிலமையை காணமுடியும்.பின் அதற்க்கு கூறிய தீர்வை காணலாம்