வெள்ளி, 29 ஜூலை, 2011

ஆனியன் முட்டை மசாலா & கட்லெட்


மிகவும் ஈசியாக செய்யக் கூடிய ,ருசியான சைட்டிஷ் இது.

தேவையான பொருட்கள்
முட்டை - 6
வெங்காயம் - 3
உப்பு - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 3 ஸ்பூன்

செய்முறை
முட்டையை அவித்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அரைத்த வெங்காயத்தை போடவும்.
நன்கு கிளறவும்.
அரைத்த வெங்காயம் வதங்க அதிக நேரம் பிடிக்கும்.
உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கி, எண்ணெய் பிரியும்.
மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
சிறிது நேரம் வதக்கி பின் முட்டையை நீளவாக்கில் நான்கு அல்லது ஐந்து இடங்களில் கீறி மசாலாவில் சேர்க்கவும்.
இரண்டு நிமிடம் முட்டை உடையாமல் பிரட்டி விட்டு இறக்கி பறிமாறவும்.


முட்டை கட்லெட்


தேவையான பொருட்கள்:

முட்டை - 5
மிளகாய்தூள் - 1 கரண்டி
மசாலாதூள் - 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - அரைக்கிலோ
வெங்காயம் - 1
தேங்காய்பால் - அரை கப்
மிளகுதூள் - 1 தேக்கரண்டி
மைதா - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 250 கிராம்

செய்முறை:

முட்டை, உருளைக்கிழங்கை ஆகியவற்றை வேகவைத்து தோல் எடுக்க வேண்டும். முட்டையை இரண்டாக வெட்ட வேண்டும். ஒரு முட்டையை சிறிது உப்பு மிளகு போட்டு கலக்கி வைக்க வேண்டும். வெங்காயத்தை மிக பொடியாக நறுக்க வேண்டும்.

உருளைக்கிழங்கை கட்டியில்லாமல் மசித்து அதனுடன் தேங்காய் பால், வெங்காயம், மைதா போட்டு நன்கு பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். அதனை கையில் வட்டமாகத் தட்டி நடுவில் முட்டையை வைத்து மூட வேண்டும். அதனை கலக்கி வைத்த முட்டையில் நனைத்து ரொட்டிதூளில் நனைத்து எண்ணெயில் போட்டு இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக