நம்மூரில் சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணிக்கு, ஆண்மையை அதிகரிப்பதில் வயாகராவை விஞ்சும் சக்தி உள்ளதாக ஆய் வில் கண்டறியப்பட்டுள்ளது.
முதலிரவன்றே பிரிந்த புதுமணத் தம்பதிகள் என்று அடிக்கடி செய்திகள் வெளியாவதை பார்த்திருக்கிறோம். இதுபோல் திருமணமான புதிதிலேயே பல்வேறு தம்பதிகள் பிரிந்து செல் கிறார்கள். இதற்கு பின்னணியில் ஆண்மை குறைபாடே முக்கிய காரணமாக இருக்கிறது. குடும்ப நீதிமன்றங்களில் வரும் விவாகரத்து வழக்குகளில் இந்த பிரச்சினைக்காகத்தான் அதிக பெண்கள் வருகிறார்களாம். இப்போதெல்லாம் இளம் வயது ஆண்கள் கூட ஆண்மை குறைவால் பாதிக்கப்படுகிறார்கள்.
பிறப்பிலேயே ஆண்மையின்மை ஏற்பட்டு கவனிக்காமல் இருந்திருந்தால் அதனை மாற்ற முடியாது. ஆனால், மனம் மற்றும் உடல்ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளால் சிலர் தற்காலிகமாக ஆண்மைத்தன்மையை இழக்கிறார்கள். இதில், உடல்ரீதியாக பிரச்சினை ஏற்படுவோருக்கும், மற்ற ஆண்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியை அமெரிக்க டாக்டர் கள் கண்டுபிடித்துள்ளார்கள். சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணி பழத் துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந் திய டாக்டர் தலைமையிலான மருத்துவக் குழு மேற் கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந் துள்ளது. ஆண்மையை தூண்டும் சக்தியை பொறுத்தவரை, மேலை நாட்டு வயாகரா மாத்திரைக்கு நிகராக இன்னும் ஏன் அதனையே விஞ்சக் கூடிய தன்மை தர்பூசணி பழத்துக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தர்பூசணிக்கு என்ன சிறப்பு?
தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள் ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தக வலை இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வெளி யிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு ஆசையை' அதி கரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத் தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அது போல் உள்ள சிட்ரூ லின்' என்ற சத்து பொருள், வயாகராவை போல் இரத்த நாளங் களை விரிவடைய செய்து, இரத்த ஓட் டத்தை அதிகரிக்கு மாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்ப டும் இரசாயன மாற்றம் காரணமாகசிட்ரூலின்', அர்ஜினைனாக' எனும் இரசாயனப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், இரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்கு விக்கிறது. வெள்ளை பகுதியில்தான் இந்த சிட்ரூலின் அர்ஜினைன் இரசாயன மாற்றமானது, சர்க் கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளி களுக்கும் கூட நன்மை பயக்குமாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதி யில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.
இது தெரிந்தால் நம்மவர்கள், வாழைப் பழத்தை விட்டு தோலை மட்டும் சாப்பிடு வதைப்போல், தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக