சனி, 6 ஆகஸ்ட், 2011

உணவு உண்ட உடனே வேண்டாம் இந்த 7 பழக்கங்கள்!!!

1. புகைப்பிடித்தல்:
உணவு உண்ட பின் புகைப்பிடித்தல் என்பது கிட்டத்தட்ட பத்து சிகிரெட்டை தொடர்ச்சியாக புகைப்பிடிப்பதற்குச் சமம். மேலும் கேன்சருக்கு அதிகளவு வாய்ப்பு.
2. பழங்கள் உண்பது:
உணவு உண்ட உடனே பழங்கள் உண்பதால், வயிறு காற்றினால் பருக்கும். இதனால் செரிமானம் தாமதமாகும். எனவே 1 மணி அல்லது 2 மணி நேரம் கழித்தோ அல்லது உணவு உண்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு உண்பது நல்லது.
3. டீ அருந்துவது:
தேயிலையில் அதிக அளவு அமிலத்தன்மை இருப்பதால், நாம் உண்ட உணவில் இருக்கும் புரதத்தை செரிப்பதை தாமதமாக்கும்.
4. பெல்டை தளர்வு செய்வது:
உணவு உண்ட உடன் பெல்டை தளர்வு செய்தால் குடல் சுற்று அல்லது ஏற்றம் வாய்ப்பு உண்டு.
5. குளித்தல்:
உணவு உண்ட உடன் குளிப்பதால், இரத்த ஓட்டம் வேகமாக கைகளுக்கும், கால்களுக்கும், உடலுக்கும் செலுத்தப்படும். இதனால் வயிற்றுப் பகுதிக்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவு குறைக்கப்படும். இதனால் செரிமானம் தாமதமாகும்.
6. நடைப் பயிற்சியில் ஈடுபடுவது:
பொதுவாக நாம் கேள்விபட்டிருப்போம் உணவு உண்ட உடன் நூறு அடி நடந்தால் 99 வயது வரை உயிர் வாழலாம் என்பதுபோல். ஆனால் இது உண்மை கிடையாது. உணவு உண்ட உடன் நடைப் பயிற்சியில் ஈடுபட்டால் நாம் உண்ட உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம்முடைய உடலுக்கு கிடைக்காமல் தடுக்கப்படும்.
7. உறங்குவது:
உணவு உண்ட உடன் உறங்குவதால் நாம் உண்ட உணவு செரிமானத்திற்கு தாமதமாகும். மேலும் வாய்வு பிரச்சனைகள் ஏற்படும். குடலில் தொற்று நோய்கள் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக