வியாழன், 11 ஆகஸ்ட், 2011

ரொமன்ஸ் ரகசியங்கள் !

 

திருமணமாகி இல்லற வாழ்க்கையில் இணைந்த தம்பதிகள் நான்கு சுவர்களை கொண்ட ஒரு இல்லத்தில் வசிக்கும் போது ஒரு சில விசயங்களை பின்பற்ற வேண்டும். நம் இல்லத்தின் ஒவ்வொரு அறையும் ஒரு கதை சொல்லும். சமையலறையில் தொடங்கி படுக்கை அறை வரை சங்கீதம் இசைக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்.

ரொமன்ஸ் ரகசியங்கள்

படுக்கை அறை என்பது தூங்கி ஓய்வெடுப்பதற்கு மட்டும் அல்ல.. மனதை ரிலாக்ஸ் செய்து மகிழ்வதற்கும் ஏற்ற அறை. ஆனால், அங்கும் சில சிரமங்கள், பிரச்னைகளை  சந்திக்க வேண்டியுள்ளது. தம்பதிகள் அவற்றை பெரிதுபடுத்தாமல் சமாளிக்க பழகி கொண்டால் ரொமன்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் குடும்ப நல நிபுணர்கள்.

மனம் விட்டுப் பேசுங்கள்

பார்ட்னருடன் மனம் விட்டுப் பேசினால், மென்மையாக எடுத்துச் சொன்னால் சிறிய அளவாக இருக்கும்போதே பிரச்னைகளை அகற்றிவிடலாம். படுக்கைஅறை போல வாழ்க்கையும் இன்பமாகும். ரொமான்ஸ் அதிகரிக்கும் . இல்லற இன்பத்துக்குப்பின் சிலருக்கு உடனடியாக தூக்கம் சொக்கும். பார்ட்னர்   சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க பிரியப்படலாம்.. எனவே சிறிது நேரம் தூக்கத்தை தியாகம் செய்து துணையுடன் பேசுங்கள். பெரும்பாலும் இதுபோன்ற சின்னப்
பிரச்னைதான் விஸ்வரூபமெடுத்து பிரிவு வரை கொண்டு செல்கிறது.

அந்நியருக்கு இடமில்லை

கணவன் மனைவியின் சில அந்தரங்கங்களை எவ்வளவு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் நண்பர்கள் உள்பட யாரிடமும் வெளியிடக்கூடாது. நம்பிக்கைக்குரியவர்கள், பெற்றோர் உதவியை நாட வேண்டும். பூசல்கள் மிகுந்தாலும் அந்நியரை மூக்கை நுழைக்க விடக்கூடாது. தம்பதிகள் தங்கள் வளர்ச்சியை மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. விரும்பிய மாற்றங்கள், வளர்ச்சி ஏற்படாததற்கு ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சுமத்தாதீர்கள்.

போட்டி தேவையில்லை

திருமணம் என்பது `நீயா நானா’ போட்டியல்ல. கணவன்- மனைவி ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு ஒருவரின் தேவையை நிறைவு செய்ய மற்றவர் துணைபுரிய வேண்டும். இருவர் இணைவதே சேர்க்கையால் கிடைக்கும் முழுமையை
அனுபவிக்கத்தான்.

இயந்திரத்தனமான உடலுறவு ஆபத்தானது. உங்கள் பலவித எதிர்பார்ப்புகளும் உடனே நிறைவேறும் என்று எண்ணக்கூடாது. மருத்துவரை அணுகுவது நல்ல பலன் தரும். அதைவிடுத்து தேவையற்ற ஆலோசனைகள் சிக்கலை உண்டாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக