புதன், 10 ஆகஸ்ட், 2011

மிக்ரேயின் (migraine )

 

தலையிடியை ஏற்படுத்தும் நோய்களில் பொதுவானது மிக்ரேயின் (migraine)ஆகும்.

இது ஆண்களைவிட பெண்களையே அதிகமாகத் தாகும். இளம் வயதிலேயே இது அதிகமாக ஏற்படும்.வயது போகப் போக இந்த நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் குறையும்.

இந்த நோயின் தன்மை,தீவிரம் என்பவை ஆளுக்கு ஆள் வேறுபாடும். அத்தோடு இந்த தாக்கம் ஏற்படும் இடைவெளியும் ஆளுக்கு ஆள் வேறுபாடும்.
அதாவது சில பேரிலே ஏற்படும் தலையிடி தீவிரமானதாக இருப்பதோடு அவர்களின் அன்றாடச் செயற்பாடுகளையும் பாதிக்கலாம்.சில பேரிலே பல வருடத்திற்கு ஒருமுறையே இந்த நோய் தாக்கும் அதே வேளை சில பேரில் அடிக்கடி அத்தாக்கம் ஏற்படலாம்.

இந்த நோய் உள்ள சில பேரிலே தலையிடி தொடங்குவதற்கு சில மணித்தியாலங்களுக்கு (24மணித்தியாலம் வரை) சில மாற்றங்கள் ஏற்படலாம்.அவை Aura எனப்படும்.அவை தலையிடி தொடங்கப்போகுது என்பதற்கான அறிகுறி என்று அவர்களால் உணரக்கூடியதாக் இருக்கும்.


அவ்வாறான மிக்க்ரேயினுக்கு முன் தோன்றும் அறிகுறிகள்,
  1. தாகம் அதிகரித்தல்
  2. மனிநிலை மாற்றம்
  3. உடம்பிலே சக்தி கூடிய உணர்வு 
  4. பலவீனமான உணர்வு 
  5. பசியிலே மாற்றம் (கூடுதல்/குறையுதல்)

இவ்வாறு வேறுபட்ட உணர்வுகள் தலையிடி தொடங்குவதற்கு முன் எச்சரிக்கை உணர்வாக ஏற்படலாம்.

இவ்வாறான எச்சரிக்கை உணர்வோடு ஏற்படுகின்ற மிக்ரேயின் கிளாசிக்கல் மிக்ரேயின்(classical migraine) எனப்படும்.ஏனையவை common migraine  எனப்படும்.

மிக்ரேயினின் அறிகுறிகள்..

  1. தலையிடி
  2. வாந்தி/வாந்தி வருவது போன்ற உணர்வு
  3. பார்வை மங்குதல் 
  4. வெளிச்சத்தில் இருந்தால் தலையிடி கூடுதல்
  5. குறிப்பிட்ட சில பதார்த்தங்களின் மணம் வலியை அதிகரித்தல் 
  6. களைப்பாக உணர்தல் 
  7. வியர்த்தல்
  8. குளிராக உணர்தல்..

ஒவ்வொரு தடவை மிக்ரேயின் தாக்கும் போதும் இது சில மணிநேரங்கள் தொடக்கம் மூன்று நாட்கள் வரை தொடரலாம்.

சில விடயங்கள் மிக்ரேயின் ஏற்படுவதைத் தூண்டலாம். ஆகவே எந்த விடயத்தால்  மிகிரேயின் அதிகரிக்கிறதோ அதை நோயாளி தவீர்த்தல் வேண்டும்.

நோயைத் தூண்டக் கூடிய விடயங்கள்.

  1. சிலவகை உணவுகள் 
  2. சில வகையான மணங்கள்,அதிகமான சத்தம், வெளிச்சம்
  3. சில காலநிலை மாற்றங்கள் 
  4. அதிகரித்த வேலைப் பளு
  5. புகைத்தல்
  6. சில வாசனைத் திரவியங்கள்
  7. போதிய உறக்கமின்மை
  8. மாதவிடாய்
  9. சாப்பாடுகளைத் தவற விடுதல்(நேரத்திற்கு சாப்பிடாமை

மிக்ரெயினைத் தூண்டக்(ஏற்படுத்தக் கூடிய) கூடிய உணவுகள்

  1. நீண்ட நாட்களாக பதப்படுத்தப்பட்ட இறைச்சி
  2. சொக்கலேட்
  3. சீஸ்
  4. கொக்கோ கலந்த உணவுகள்
  5. மது (குறிப்பாக ரெட் வைன்)
  6. பட்டர் 
  7. சோயா சோஸ் 
  8. பப்பாசி 
  9. பேஷன் புருட்
  10. அதிகரித்த வெங்காயப் பாவனை
  11. அதிகரித்த கோப்பிப் பாவனை

இவை தவிர இன்னும் ஏராளாமான உணவுகள் இருக்கலாம்.மிக்ரேயின் நோயாளி ஒருவர் தனக்கு ஏதாவது உணவுகள் மூலம் அந்த நோய் ஏற்படுவது அதிகரிக்கிறது என்று நினைத்தால் அந்த உணவுகளைத் தவீர்த்தல்வேண்டும்.

மருந்துகள்

இந்த நோய்க்கு இரண்டு விதமான மருந்துகள் உள்ளன

1. நோய் ஏற்பட்டவுடன் வழியை நீக்கும் தற்காலிக மருந்துகள்
பரசிட்டமோல்,இவ்புருபான் போன்ற வைத்தியரின் துண்டு இல்லாமல் வங்கக் கூடிய மருந்துகளைப் பாவிக்கலாம். 

2.நோய் ஏற்படாமல் தடுக்கும் மருந்துகள்
எல்லா நோயாளிகளுக்கும் இந்த மருந்து வழங்கப்படுவதில்லை.மிக்கிறேயின் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களின் வாழ்க்கையைப்பாதித்தாலோ அல்லது வருடத்திற்கு நான்கிற்கு மேட்பட்ட தடவைகள் இந்த நோய் ஏற்பட்டாலோ மாத்திரமே இந்த மாத்திரைகள்வழங்கப்படும். இது வைத்தியர்களாலேயே வழங்கப்பட வேண்டும்.

மாத்திரைகள் தவீர இந்த நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு செய்ய வேண்டியவை

1.மேலே சொன்ன நோயை தூண்டும் காரணிகள் ஏதாவது உங்களுக்கு நோயை ஏற்படுத்துமாயின் அவற்றைத் தவிர்க்க வேண்டும்
2.போதியளவு தூக்கம் அவசியம் 
3.போதியளவு நீராகாரம் 
4.மன அழுத்தத்தைக் குறையுங்கள்
5.போதியளவு உடற்பயிற்சி
6.உடல் பருமனானவர்கள் உடல் நிறையை குறைக்க வேண்டும்


நோய் ஏற்பட்டவுடன் வலியைக் குறைப்பதற்கான வழிமுறைகள்

1.அமைதியான இருட்டறையில் படுத்திருங்கள்
2.ஈரத் துணியினால் தலை போர்த்திவிடுங்கள்
3.நன்கு தலையில் மசாஜ் செய்யுங்கள் 


சிறுகுழந்தைகளில் மிக்ரேயின் 

சிறுகுழந்தைகளுக்கு மிக்கிறேயின் நேரத்தில் வயிற்று வலி ஏற்படலாம். இது .. எனப்படும்.உங்கள் குழந்தைஅடிக்கடி வயிற்று வலி என்று கூறினால் அது சில வேளைகளில் மிக்கிறேயினாக இருக்கலாம்

மிகிரேயின் சுகமான பின்பு

சில பேரில் சந்தோஷமான புது உணர்வு ஏற்பட்ட மன நிலை ஏற்படும்.
சில பேரில் கழைப்புத் தன்மை சில நாட்களுக்கு நீடிக்கலாம். .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக