திங்கள், 15 ஆகஸ்ட், 2011

உங்கள் கணினியை உளவறிய ஓர் மென்பொருள்.

உங்கள் கணனியில் நீங்கள் செய்யும் அனைத்து செயற்பாடுகளையும் கண்காணிக்க பல மென்பொருட்கள் உள்ளன, அவ்வாறான ஓர் மென்பொருள்தான் இந்த பணியாளர்கண்காணிப்பு மென்பொருள்.

 
  • இந்த மென்பொருளை நிறுவியபின்னர் நிறுவிய கணனியின் செயற்பாடுகள் முழுவதும் பதிவு செய்யப்படும். 

 


  • நாம் குறிப்பிடும் நேர இடைவெளியில் கணனி திரையினை படமாகவும் சேமிக்கும். 

  • வேறு யாரும் பார்க்காதவாறு கடவுசொல் இடும் வசதியும் உள்ளது.

  • குறித்த நேர இடைவெளியில் சேமித்த தகவல்களை நாம் வழங்கம் மின்னஞ்சலிற்கு அனுப்பிவைக்கும்.

                                                         Tools---->Settings Wizard 
 
  •  மென்பொருள் நிறுவியதற்கான தடயம் ஏதுமின்றி அழித்து விடலாம்.

  • பின்னர் மென்பொருளை நாம் திறந்து பார்ப்பது எனில் Ctrl+Shift+Alt+K இனை அழுத்தி பின் நாம் வழங்கிய கடவுச்சொல்லினை இட்டு திறக்கலாம். (திறப்பதற்கான இந்த குறுக்குவழிவிசைக்கட்டளையை மாற்றலாம்)

  • Run கட்டளையில் "runkgb" என வழங்கியும் திறக்கலாம்.இக்கட்டளையும் மாற்றக்கூடியதே.

மென்பொருளை நிறுவுவதற்கும் ஆரம்பிப்பதற்கும் உங்கள் கணனியில் நிறுவியுள்ள எதிர்வைரசு காப்பை நிறுத்தவேண்டி ஏற்படலாம்.

இம்மென் பொருளை 
தரவிறக்க.

செயற்படுத்துவதற்கான செயற்பாட்டு இலக்கங்கள் மென்பொருளுடன் வழக்கம்போல இணைத்துள்ளேன்.


மற்றவர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய கணனியில் நிறுவி அவர்களின் செயற்பாடுகளை மின்னஞ்சல் மூலம் பார்க்கும், தனிமனித சுதந்திரத்திற்கு இடையூறாகவும் இம்மென்பொருள் அமைந்தாலும் அலுவலகங்களில் வேலை செய்யாமல் வெட்டியாய் பொழுது கழிப்பவர்களை மேலதிகாரிகளுக்கு போட்டுக்கொடுக்க இவ்வாறான மென்பொருள்கள் உதவுகின்றன.


 உங்களுக்கு தெரியாமல் உங்கள் கணனியிலும் யாரேனும் இவ்வாறான மென்பொருளை நிறுவியிருக்கலாம். எச்சரிக்கையாய் இருங்கள் , மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதா என்பதை கண்டு பிடிக்க முடியாது.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

டீன் – ஏஜ் மகளிடம் அப்பா எப்படி நடந்து கொள்ளவேண்டும்

 


பிள்ளைகளிடம் தலையீட்டிற்கும், அக்கறைக்கும் இடைப்பட்ட ஒரு நடு நிலையை அப்பாக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

எனது நண்பர் தன் 14வயது மகளை எப்பொழுதும் நச்சரித்துக் கொண்டே இருப்பார். “சொல் பேச்சை கேக்குறதில்லை எதை எடுத்தாலும் வாதம் பண்ணிக்கிட்டே இருக்கா” என நச்சரிப்புக்குக் காரணம் கூறுகிறார்.

நண்பர் எதையும் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புகிற மனிதர் அவருடைய இந்த அணுகுமுறை தன் மகளிடம் ஒரு பாதகமான போக்கை உருவாக்கும் என்று அவரிடம் கூறியிருக்கிறேன்.

அந்தப் பெண்ணுக்கு ஒரு பத்து வயது தங்கையும் இருக்கிறாள். அவள் அடக்கமும் கீழ்படியும் குணமும் கொண்டவள். அதனால் தந்தையுடன் அவள் எளிதாக ஒத்துப் போகிறாள். இது மூத்தவளிடம் பொறாமை யையும் எரிச்சலையும் தூண்டுகிறது.

14 வயது என்பது ஒரு சிக்கலான பருவம். இதை நண்பர் உணரவில்லை. அவருடைய ஆத்திரமும், இயலாமையும் அந்த வீட்டின் நிம்மதியைப் பெரிதும் குலைக்கின்றது.

உங்களுடைய பிள்ளைகள் கைக்குழந்தை நிலையிலிருந்து தத்தித் தவழும் பருவத்தை எட்டிய அந்த கால கட்டத்தை நினைத்துப் பாருங்கள். மெல்ல பரிணமித்த அவள் குணாதிசியங்களுக்கேற்ப (ஆளுமை) நீங்கள் தாம் அப்பொழுது உங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.

அவளுடைய அழுகைகளுக்கும், ஆட்டங்களுக்கும் காரணம் புரியாமல் அப்பொழுது நீங்கள் கொஞ்சம் எரிச்சல் கூட அடைந்திருக்கலாம்.

டீன் ஏஜ் பருவம் என்பது கூட அத்தகைய ஒருபருவ மாறுதல்தான். இந்தக் காலகட்டத்தில் உங்கள் மகள் வேகமாக வளர்கிறாள். இவ்வளர்ச்சி உடல், அறிவு மற்றும் உணர்வு ரீதியானது.

இந்த வயதில் அவள் பாதி பெரியவள் என்பதை மறந்துவிட வேண்டாம். அதனால்தான், ஒரு குழந்தையாக நடத்தப்படும்போது அவளைப் புண்படுத்துகிறது.

உங்களை அறியாமல் நீங்கள் அவளுடைய தன்னம்பிக்கையை காயப் படுத்தக் கூடும். “என்னுடைய வாழ்க்கையை என்னாலேயே திறம்பட நடத்த முடியும் என்கிற போது இவர்கள் ஏன் தேவையின்றி இடையே புகுந்து அறிவுரைகள் வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்?” என்று அவள் நினைப்பாள்.

உங்கள் ஆணைகளும், கட்டளை களும் தன்னை ஒரு குழந்தைபோல் உணர வைப்பதால் அவற்றை வெறுக்கிறாள்.

இந்த வயதில் தன்னுடைய அந்தரங்க மானவைகளை கட்டிக் காப்பவளாகவும், அதை வெளியில் சொல்ல விரும்பாதவளா கவும் இருப்பாள்.

“எங்கே போனாய்?”, “என்ன செய்தாய்“ போன்ற கேள்விகளை அவள் விரும்புவ தில்லை வளர்ந்துவிட்ட ஒரு நபர் மீது நீங்கள் வைக்கக்கூடிய நம்பிக்கையை ஏன் தன்மீது வைப்பதில்லை என்று சலித்துக்கொள்வாள்.

ஏனென்றால், அப்பொழுது அவளைப் பொறுத்தவரை நன்கு வளர்ச்சியடைந்து விட்ட ஒரு பெண் இந்த வயதில் தன்னை சுயசோதனைக் குள்ளாக்குவதிலும் அதிக நேரம் செலவழிப்பாள்.

டீன் ஏஜ்ஜிற்கே உரிய குழப்பங் களையும், மனப்போராட்டங்களையும் புரிந்து கொள்வதற்கும் களைவதற்கும் அவள் முயற்சி செய்யும் காலம் இது. தன் உடலிலும், மனதிலும் நிகழும் மாற்றங்கள் அவளை குழப்பமடையச் செய்யும். இந்த நேரத்தில் நீங்கள் காட்டுகின்ற எந்த அதீதமான அக்கறையும் தேவையற்றதாகவே அவளுக்குப் படும். அவள் அந்தரங்கத்தில் மூக்கை நுழைப்பதாகவே அவளுக்குத் தோன்றும்.


ஆனால் மகளுக்கும் உங்களுக்கும் இடையில் எழுந்த தடுப்புச் சுவர் எதனால் உருவானது என்கிற குழப்பத்தில் நீங்கள் இருப்பீர்கள். தன் அந்தரங்க உணர்வுகள், எண்ணங்கள் சிக்கல்கள் ஆகியவற்றை பற்றி உங்களுடன் கலந்துரையாடுவதை உங்கள் மகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொள்ளுவாள். இந்தப் போக்கு உங்கள் குழப்பத்தை மேலும் அதிகரிக்கும்.. அதுமட்டுமல்ல அவள் தொடர்பான சிக்கல்களை களைய முடியாமல் திண்டாடுவீர்கள். நாம் ஒரு சிறந்த அப்பாவாக இல்லையோ? எனும் ஐயங்கள் உங்களை அலைக்கழிக்கும். இந்த சிக்கல்கள் பிள்ளைக்கும், பெற்றோர்க்கும் இடையிலான இடைவெளியை அகலப்படுத்தும்.

அச்சங்களும், ஐயப்பாடுகளும் நிறைந்த டீன்-ஏஜ் பருவம்:-

பொதுவாகவே டீன்-ஏஜ் பருவத்தைச் சேர்ந்தவர்கள், தன்னம்பிக்கையை குறைவாகக் கொண்டிருப்பார்கள். தம்மில் தோற்றத்தில் நிறைய குறைகளைக் காண்பார்கள். இத்தகைய அச்சங்களும், ஐயப்பாடுகளும் கொண்டவர் களிடம் பழகுவது சிக்கலான காரியம் .சாதாரணமாக நாம் சொல்லுகிற சொற்களை திரித்து அர்த்தப்படுத்திக் கொள்கிற போக்கு இந்த கால கட்டத்தில் மிகுந்திருக்கும்.

ஏறக்குறைய எல்லா உறவுமுறையினரிடமும் இந்தக் குளறுபடி இந்தாலும், பெற்றோர்க்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இப்படிப்பட்ட கருத்து முரண்பாடு ஏற்படுமானால், அது இருசாரார்க்கும் மிகுந்த மனவேதனையை உண்டாக்கும்.

தன் கட்டளைகளை பிள்ளைகள் மீறும்போது தன் அதிகாரத்தையே அவர்கள் தட்டிக் கேட்பதாக அப்பாவுக்குத் தோன்றும் ஏன் தந்தை என்கிற தன் நிலையையே அவர்கள் உதாசினப்படுத்துவதாக நினைப் பீர்கள். ஒரு அப்பாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது.

சின்ன வயதில் எந்தப் பெண் குழந்தையும் தன் அப்பாவிடம் மிகவும் பாசமாக இருக்கும். அவரை ஆராதிக்கும் இந்த பாசத்திற்கும், ஆராதனைக்கும் பழக்கப்பட்டுபோன ஒரு தந்தையால் தன் டீன்-ஏஜ் மகளின் கலக்கத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது தானே.

தாய்-மகள் உறவு முறை என்பது தகப்பன் - மகள் உறவு முறையிலிருந்து மிகவும் மாறுபட்டது.

டீன் -ஏஜ் பருவத்தில் எந்த ஒரு பெண் பிள்ளையும் தன் தாயிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது இயல்பு. தந்தையுடன் பகிர்ந்துக்கொள்ள இயலாத அச்சங்களையும், ஐயப்பாடுகளையும் தாயுடன் பகிர்ந்துக் கொள்கிறாள்.

தாயுடன் ஒட்டுதலாக இருக்கின்ற மகள் தன்னுடன் அப்படி இல்லையே என்று தந்தை ஏங்குகிறார். விலக்கி வைக்கப்பட்டது போல் உணருகிறார். இன்னொரு கருத்து கூட இதை மேலும் சிக்கலாக்குகின்றது.

கண்ணோட்டத்தில், பார்வையில், தம் மகள் எப்பொழுதும் குழந்தையாகவே தென்படுகிறாள். அவள் வளர்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை உணரத் தவறி விடுகிறார். டீன்-ஏஜ் மகளின் ஒவ்வொரு புதிய பழக்கமும் - மகளைப் பற்றி தன் மனதில் தான் பதித்து வைத்திருக்கும் படிமத்திற்கு முரணாக இருப்பதால் அவரை வெறுப்பேற்றுகிறது.

இந்த சூழ்நிலையில் தாய் என்கிற முறையிலும் மனைவி என்கிற முறையிலும் பெண்களுக்கு பெரிய கவலை ஏற்படும், சச்சரவுகளை தவிர்க்கும் பொருட்டு, அப்பாவும் மகளும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வ தையும் தவிர்க்கத் தொடங்குவர். வீடே ஒரு போட்டிக் களமாகக் காட்சியளிக்கும்.

“என் விருப்பப் படித்தான் நடப்பேன்” என அடம் பிடிக்கும் 14வயது மகளுக்கும். குடும்பத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முனையும் அப்பாவுக்கும் இடையில் நடக்கின்றன போட்டி, வீட்டை அல்லோல கல்லோலப் படுத்திவிடும். இவர்கள் இருவருக் கும் நடுவில் ஒரு சமாதான உடன்படிக்கையை ஒரு பெண்ணால் தாயால் ஏற்படுத்த முடியுமா?

அப்பா-தன் மகளிடம் அவ்வளவு கோபம் கொள்வதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள். குறிப்பாக எதைப் பற்றி அவர் நச்சரிக்கிறார்? அது புதிதாக உருவான ஒன்றா? அல்லது அப்பா மகளிடம் நெடுங்காலமாகவே குறை காணும் அம்சமா?

குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கூட்டுங்கள் (ஃபேமிலி மீட்டிங்) குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத் துங்கள். ஒவ்வொருத்தரும் எந்த குறுக்கீடு மின்றி ஐந்து நிமிடம் பேச வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள்.

தங்கள் மனதில் குமைகின்ற மனக்குறைகள் பற்றியும் அவற்றுக்கான மூல காரணங்கள் பற்றியும் விளக்கச் சொல்லத் தூண்டுங்கள்.

“ நம் உணர்வுகளை நம் குடும்பத்தினர் அனைவரும் செவிமெடுத்து கேட்கிறார்கள்” என்கிற எண்ணம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுவது மிகவும் முக்கியம்.

தனிப்பட்ட மனக்குறைகள் இல்லாத குடும்ப உறுப்பினர்களும், இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம். தனிப்பட்ட மனக்குறைகள் இல்லாத போதும் வீட்டில் நிலவும் உளைச்சலும் நிம்மதியின் மையும் அவர்களையும்தானே பாதிக்கும்?

குடும்பத்தினர் அனைவரும் கடைப் பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளை அப்பொழுது வகுத்துக் கொள்ளுங்கள். இத்தகைய விதிமுறைகள் ஒவ்வொரு குடும்பத் திலும் இருப்பது அவசியம். குறிப்பாக பின் வருவன பற்றிய விதிமுறைகளை வகுத்துக் கொள்வது நல்லது.

வீட்டு வேலைகள், எதிர்பார்ப்புகள், வீட்டில் இருக்க வேண்டிய நேரம், வீட்டுப் பாடம் செய்ய வேண்டிய நேரம், தொலைக்காட்சியை யார் எவ்வளவு நேரம் பயன்படுத்துவது என்கிற அட்டவனை, விடுமுறை நாட்களைப் பற்றிய விதிமுறை களை வகுத்துக் கொள்ள வேண்டும். பொதுவான வரையறைகள் போன்ற இதர பலவற்றைப் பற்றியும் சில முக்கியமான வீட்டு விதிகள்:

1) வீட்டுப் பாடங்களை செய்து முடிக்கின்ற வரை தொலைக்காட்சி கிடையாது.

2) நச்சரித்தல் கிடையாது - உரையாடல்கள்தான்.

3) இன்னொருவர் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கையில் யாரும் குறுக்கிடக் கூடாது.

4) பத்து மணிக்கு மேல் தொலை பேசியைப் பயன்படுத்தக் கூடாது.

5) சமைப்பதிலும் உணவு பரிமாறு வதிலும் எல்லோருக்கும் உதவ வேண்டும்.

6) அவரவர் பொருட்களை அவரவர் தான் பராமரித்துக் கொள்ள வேண்டும்.

ஒருவருடைய குணாதிசயத்தை இன்னொருவரா; மாற்றியமைக்க முடியாது என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டு பொறுப்பு மிக்கவர்களாக வளர்ந்தால் அது குடும்ப கட்டமைப்பிலே ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

அப்பாக்கள் தங்களின் அதிகாரத்தை அவ்வப்போது தளர்த்திக் கொள்ளல், குடும்பத்தில் சமாதானத்தை நிலைநாட்ட வழி வகுக்கும், உங்கள் பிடிவாதங்கள் அனைத் தையும் மறுபடியும் ஒருமுறை பரிசீலியுங்கள். உங்களுக்கு இன்றியமையா ததாக தோன்றும் சில உண்மையில் முக்கிய மற்றதாக இருக்கக்கூடும் எடுத்துக்காட்டாக உங்கள் பெண் விரும்புகிற வரையில் தொலை பேசியில் பேச அனுமதியுங்கள். இந்த விட்டுக் கொடுக்கும் அணுகுமுறை உங்கள் டீன்.ஏஜ் மகளை சிந்திக்க வைக்கும். வழக்கமாக சண்டை பிடிக்கும் அப்பா இவ்வளவு நேரம் பேசியும் அமைதியாக இருக்கிறாரே? என்று வியப்புறுவாள்.

காலப்போக்கில் உங்கள் மீதும் உங்கள் தேவைகளின் மீதும் அவளுக்கு மரியாதை கூடும். என்னதான் டீன்-ஏஜ் பருவத்தை எட்டிவிட்டாலும், உங்கள் அன்புக்காகவும், உறவுக்காகவும் ஏங்கும் குழந்தையாகவே மனதளவில் அவள் இருக்கிறாள். குடும்ப உறவு பிணக்குகள் கொண்டதாக இல்லாமல் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இருப் பதையே அவளும் விரும்புகிறாள். பிடியை கொஞ்சம் தளர்த்த வேண்டும் என்றவுடன் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் அறவே கவனம் செலுத்தாமல் இருப்பது என்று நினைத்துவிடக்கூடாது. அதிகமாக தலையி டாமல் அவள் நடவடிக்கைகளை மேற்பார் வையிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். உலகத்தை எதிர்கொள்வதற்கான வயது, பக்குவமும் ஒரு டீன்-ஏஜ் பெண்ணிடம் இருக்காது. உங்கள் அறிவுரையும் வழிகாட்டு தலும் அவளுக்குத் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும்.


டீன்-ஏஜ் பருவம் என்பது பரிணாம வளர்ச்சியை குறிக்கிறது. பார்க்காததைப் பார்க்கவும். கேட்காததைக் கேட்கவும் ஆவல் மேலிடுகிறது. சில சமயங்களில் இந்த ஆவல் உணர்ச்சியே உங்கள் டீன்-ஏஜ் பிள்ளையை சிக்கலில் மாட்டியும் விடுகின்றது. அதனால் அவள் வாழ்க்கையில் நீங்கள் பங்கு பெறுவது முக்கியம்.

மகளின் நண்பர்கள் வீட்டிற்கு வரும்போது அவர்களுடன் கலந்துரையாடுங்கள். உங்கள் மகளின் நட்புவட்டம் எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவும். டீன்-ஏஜ் பருவத்தில் நிகழும் இன்னொரு முக்கியமான வளர்ச்சி. மொட்டுவிடும் பாலியல் உணர்வு . இந்த பாலியல் உணர்ச்சியை முழுவதும் புரிந்துக் கொள்ள முடியாமல் உங்கள் மகள் தடுமாறும் காலம் இது. இந்த தடுமாற்றத்தின் விளைவாக உங்களைக் கூட அவள் தவிர்க்க விழைவாள். சிடுசிடுப்பாகவும், முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்ளத் துவங்குவாள்.

இந்த நேரத்தில்தான் நீங்கள் மிக அனுசரனையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பது கடினம்தான். எனினும் இந்த அனுசரணையின் பயனைத் தெரிய வரும் போது பெரும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

உங்களை எதிர்த்துப் பேசிக் கொண்டும். முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டும் அவள் வலம் வருகின்ற நேரங்களை விட, தன் பொறுப்பை மறவாமல் அவள் சில வேலைகளைச் செய்யக்கூடும். அவை மிகச் சிறிய செயல்களாகவும் இருக்க லாம. எனினும் நீங்கள் அவற்றை மறக்காமல் பாராட்ட வேண்டும். அதிக அலட்டல் இல்லாமல் சாமர்த்தியமாக பாராட்டுங்கள்.

தொலைபேசியை எடுத்து காதில் வைத்துக்கொண்டால் முடிவில்லாமல் பேசுகின்ற ஒரு பதினான்கு வயது இளம் பெண்ணை எனக்கு தெரியும். அவள் தேர்வுகள் நெருங்கி வந்துவிட்டால் பாடப்புத்தகங்களில் மூழ்கிவிடுவாள். தோழி களுடன் கதையடிப்பதில் நாட்டம் மிகுந்த வளாக இருப்பினும். தன் கடமைகளில் அவன் ஒருபோதும் குறை வைப்பதில்லை இதனால் அவள் தந்தைக்கும் மகிழ்ச்சி தொட்டதற் கெல்லாம் மகளை அவர் கடிந்துக்கொள்வ தில்லை. தொலைபேசியில் விடாமல் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் எப்பொழுதாவது நேரம் போவதை சுட்டிக் காட்டுவார். அவ்வளவுதான்.

டீன்-ஏஜ் பருவத்தில் உணர்வுகளை வெளிப்படுத்த உங்கள் மகள் சங்தேக மொழி யைக் கைக்கொள்வாள். தன் எண்ணங்களை நாசுக்கான குறிப்புகள் மூலம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவாள்; இந்த மாதிரி தருணங் களில் எந்த ஒரு அப்பாவுக்கும் அறிவுரைகளை வாரி வழங்கிடத்தான் மனம் துடிக்கும். அவசரப்பட்டு விடாதீர்கள் இலேசாக மனம் திறந்து காட்டியிருக்கின்ற உங்கள் மகள் அதை மறுபடியும் பட்டென மூடாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் புத்திசாலித்தனமா நடந்து கொள்ள வேண்டும். உங்கள் மகள் சுற்றி வளைக்காமல் நேரடியாக கேள்வி கேட்பாளேயானால் நீங்களும் அவ்விதமா கவே பதிலளிக்க வேண்டும்.

கூச்சப்பட்டுக் கொண்டு சுற்றி வளைத்தால் உங்கள் பதில்கள் அதற்குத் தக்கவாறு அமைய வேண்டும். இந்த நேரத்தில் போய் சொற்பொழிவு செய்து கொண்டு இருப்பீர்களேயானால் அவள் மறுபடியும் உங்களிடம் ஆலோசனை கேட்டு வராம லேயே போகக்கூடும். எந்த நேரத்தில் எந்த விதமாக பேச வேண்டும் என்பதை புரிந்துக் கொண்டு பேசினால், உங்கள் டீன்-ஏஜ் பெண்ணுக்கும் உங்களுக்கும் இடையிலான உறவு கெட்டிப்படும்; ஆழப்படும்.


-நன்றி : ஹெர்குலிஸ் - ஆக 2000

நன்றி - கீற்று இணையம்

சனி, 13 ஆகஸ்ட், 2011

ஹார்மோன்களின் வேகம்..நடுத்தர வயதில் அதிகரிக்கும் ஆர்வம்!



 
Sexual Life முப்பது வயதானால் அழகும் மெருகும் கூடுவது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும்தான். முப்பதை கடந்த பெண்கள் பணியிலும், அனுபவத்திலும், முதிர்ச்சியடைகின்றனர். பெண்களுக்கான மிக முக்கியமான கால கட்டம் தொடங்குவது முப்பது வயதிற்கு மேல்தான் என்கின்றனர் உளவியலாளர்கள்.

இருபதில் தொடங்கும் திருமண வாழ்க்கையில் குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களை வளர்த்து ஆளாக்கி பள்ளிக்கு அனுப்பும் வரைக்கும் பெண்களுக்கு எதைப்பற்றியும் நினைக்க தோன்றுவதில்லை. ஓரளவிற்கு குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பே தங்களின் மீதே அக்கறை ஏற்படுகிறது.

உடுத்தவும், அழகுபடுத்திக் கொள்ளவும் ஆயத்தமாவது பெண்கள் முப்பது வயதிற்கு மேல்தான். தாம்பத்திய வாழ்க்கையிலும் அதிக ஈடுபாடு ஏற்படுவது நடுத்தர வயதில்தான் என்று சர்வே முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.


நடுத்தர வயதில் ஆர்வம்

நாற்பது வயதில்தான் தாம்பத்திய உறவில் அதிக ஆர்வம் ஏற்படுவதாக 81 சதவிகித பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் 20 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கேட்பட்ட கேள்விகளில் 63 சதவிகிதம் பேர் தாம்பத்ய உறவில் ஈடுபாடு காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு காரணம் இளவயதில் காட்டும் வேகமும், நடுத்தர வயதில் ஏற்படும் விவேகமும்தான் என்கிறது அந்த ஆய்வு. சிகாகோ பல்கலைக் கழக ஆய்வறிக்கையின் படி 20 வயதுகளில் இருக்கும் பெண்கள் மிகக்குறைவாகவே உச்சட்ட சிலிர்ப்பு நிலையை அடைகின்றனர் என்றும் 40 வயதுகளில் இருக்கும் பெண்களே அதிகமாக அந்நிலையை அடைகின்றனர் என்றும் தெரிகிறது.


வேகமும், விவேகமும்

இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. ஆனால் நடு வயதில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதானமாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் அதிக நேரம் நீடித்திருக்கிறான். மனைவியை சிலிர்ப்பு நிலைக்கு கொண்டு போவதில் ஆர்வம் காட்டும் கணவன் இயல்பாகவே தானும் அந்தப் பரவசத்தை அடைகிறான்.

கவர்ச்சியைக் கண்ணால் கண்டாலே இளமைப் பருவம் மோக வயப்படும். வயது முதிரும் போது மோகத்திற்கு பார்வை மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. தொடு உணர்ச்சிகளே அந்நிலைக்குத் தூண்ட முடியும். எனவே தான் இவ்வயதுகளில் நிதானமும் செயல்திறனும் இவ்விஷயத்தில் உதவிகரமாக இருக்கிறது.


ஹார்மோன்களின் வேகம்

இளமைக் காலத்தில் உறவுக்கு அழைப்பதில் ஆண்தான் முன்நிற்கின்றான். ஆனால் நடுவயதில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவளாக இருப்பாள். காரணம் ஆண் பெண் இருவர் உடலிலும் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் திரவங்கள்தான்.

வயது கூடும்போது அவை மாற்றமடைகின்றன. ஆணுக்கு இவையிரண்டும் அளவில் குறையத் தொடங்கும். ஆனால் பெண் உடலில் டெஸ்டோஸ் டெரோனின் குறைவை ஈஸ்ட்ரோஜன் ஈடுகட்டுகிறது. எனவேதான் ஆணை விடவும் பெண் நடுவயதில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள்.

படுக்கையறையே உடற்பயிற்சிக் கூடம்-தாம்பத்தியமே சிறந்த உடற்பயிற்சி!


வியர்க்க விறுவிறுக்க நடக்க வேண்டாம். உடலை இளைக்க ஜிம்மிற்கும் போக வேண்டாம். உங்களுடைய படுக்கையறையே சிறந்த உடற்பயிற்சி கூடம்தான் என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையுடன் நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டாலே உடல் இளைக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. செக்ஸர்சைஸ் இருக்க எக்ஸ்சர்சைஸ் எதற்கு? என்று கேட்கின்றனர் மருத்துவர்கள்.


நிம்மதியான உறக்கம்

நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதயத்துடிப்பு சீராகும். கெட்ட கொழுப்புகளை எரித்து நல்ல கொழுப்புகளை தக்க வைக்கும் என்ற வியக்கத்தக்க மருத்துவ உண்மைகள் தெரியவந்துள்ளது. உடல் உறவின் மூலம் எடை கட்டுப்பாட்டிற்குள் வருவதோடு நிம்மதியான உறக்கமும் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.


பெண்களுக்கு அதிக உற்சாகம்

தாம்பத்ய உறவின் மூலம் அதிகம் பலனடைவது பெண்கள்தான். அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரக்கிறது. முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும். மேலும் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு கூந்தல் பட்டுப் போல மிருதுவாகும் என்பது தெரியவந்துள்ளது. பெண்களின் கவர்ச்சி அதிகரிப்பதால் அவர்கள் தினமும் அந்த உறவினை விரும்புகின்றனர்.

மாயமாகும் கலோரிகள்

30 நிமிட உறவின் மூலம் 15 லிருந்து 350 கலோரிகள் வரை எரிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தினமும் அரைமணி நேரம் வேகமாக நடப்பதற்கும் வேகமாக ஓடுவதற்கும் சமமானதாகும். வாரத்திற்கு 5 முறை உறவு வைத்துக் கொள்ளும் பட்சத்தில் 1650 கலோரிகள் எரிக்கப்படுகின்றனவாம். இதன் மூலம் இருவரின் உடல் எடையும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.


கற்பனைத் திறன்

தினமும் ஒரே உணவை சாப்பிட்டாலும் போரடிக்கும் அல்லவா! ஒரே மாதிரியான உறவும் போரடிக்கும். கற்பனைத்திறனை புகுத்துங்கள்.அப்புறம் பாருங்கள், உங்களின் உடல் நீங்கள் சொன்னபடி கேட்கும். படுக்கையறையே உடற்பயிற்சிக்கூடாராமான பிறகு யாராவது பணம் செலவு செய்து ஜிம்மிற்கு போவார்களா என்ன?. ஆரோக்யமான உறவு உடலையும் உள்ளத்தையும் ஆரோக்யமாக வைத்திருக்கும்.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் . . . (தம்பதியர்களுக்காக)



உண்ண உணவும், சுவாசிக்க காற்றும் மனிதன் உயிர்வாழ அத்தியவசிய தே வையாக உள்ளது போல ஆண் பெண் இடையேயான உறவும் அவசியமான ஒன்றுதான் என்று கூறுகின்றனர் உளவியலாளர்கள். அன்பான தாம்பத்யம் ஆயுளை நீட்டிக்கச் செய்வதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வயதான பிறகும் முழுமையான தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதயகோளாறுகள், போன்ற நோய்கள் குணமடைவதாக ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற ஆய்வில் தெரிய வந்துள்ளது. மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் உற்சாகம் அதிகரித்து நோயின் தாக்கம் குறைவதாகவும் அந்த ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


வயதுக்கு விடை கொடுங்கள்
ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுணர்வு உணர்ச்சியில் வயது வேறுபாடு எதுவும் இல்லை. ஆரோக்கியக் குறைவு, நோய், மருந்து மாத்திரைகள், மது, புகையிலை, போதை, சிகரெட், எண்ணெய், கொழுப்பு, அதிக எடை ஆகியவை உடலுறவில் ஆர்வம் தோன்றாததற்கு காரணமாகும்.
மாதவிடாய் நின்றாலும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரக்கும்வ ரை 50, 60 வயது வரை யிலும் கூடப் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இருக்கும். அதனைப் போல, செக்ஸ் ஹார்மோன் டோஸ்டேரோன் சுரக்கும் 70, 80 வயதுவரை ஆண்களுக்கு உடலுறவில் இச்சையும், ஈடுபாடும் இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

மனநிறைவும் திருப்தியும்
உடல் உறவின் உச்சக்கட்டத்தின் போது எண்டோர்பின்கள் மூளைக்குச் செல்வதால் இவை சிறந்த வலி நிவாரணியாகவும், தூக்க ஊக்கியாகவும் செயல்படுகின்றன. மேலும், அந்தச்சமயத்தில் வெளிப்படும் ஒப்பியட்டுகள் என அழைக்கப்படும் தூக்கக் கலக்கம் கலந்த நிலையையும், உடலில் களைப்பையும் அதே சமயம் முழு மனநிறைவான உணர்வையும் தருகின்றன.
நிம்மதியற்ற மனிதனுக்குத் திருப்தியையும், உடலுக்கு நல்ல ஓய்வுடன் ஆழ்ந்த தூக்கத்தையும் அளிப்பது உடலுறவு ஒன்று தான். ஒரு திருப்தியான புணர்ச்சிக்குப் பிறகு உடலும் மனமும் தளர்ந்து ஓய்ந்து தானாகவே தூக்க நிலைக்குப் போய் விடுவதாக பிரிட்டனிலுள்ள இராயல் சொசைட்டி மருத்துவக்கழகம் கண்டறிந்துள்ளது.

நோய்கள் குணமடையும்
தாம்பத்ய உறவினால் ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்தினால் ஆஸ்துமா நோயுள்ளவர்களின் பிடிப்புகள் உடனே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகின்றன. அவ்வாறே உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களின் இரத்தக்குழாய் இறுக்கமும் தளர்த்தப்பட்டு விடுகிறது.
நரம்பு, தசைபிடிப்பு, முதுகுப் பிடிப்பு, வலி உள்ளவர்களுக்கும் உடலுறவு நல்ல பல னைத் தருகிறது என்று மருத் துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. டென்ஷன், மன இறுக்கம், கவலை, படபடப்பு இவைகளுக்கு உடலுறவு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. வயதான பிறகும் தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்கள் நீண்ட நாள்கள் உயிர் வாழ்கிறார்கள் என்று கூறுகிறது.
எனவே வயது எதுவாக இருந்தாலும் நிறைவான தாம்பத்யமும், உறவும் தொடர்ந்தால் மன நிம்மதிக்கும், உடல் நலனுக்கும் எந்தக் குறையும் இருக்காது என்பதில் சந்தேகமில்லை.

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

10 நிமிட உறவில் திருப்தியை எட்டலாம் – ஆய்வு



தாம்பத்ய உறவில் திருப்தி, மகிழ்ச்சி என அனைத்தையும் அனுபவிக்க, உணர நீண்ட நேரம் தேவையில்லை, வெறும் பத்து நிமிடமே போதுமானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. அநேகம் பேருக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம், சிலருக்கு அப்படியெல்லாம் இல்லை என்ற எதிர்ப்பு எழலாம். ஆனால் உண்மையில் பத்து நிமிட செக்ஸ் உறவில் போதுமான திருப்தியும், மகிழ்ச்சியையும் எட்ட முடியும் என்கிறது அந்த ஆய்வு.
செக்ஸ் பிரச்சினைகள் தொடர்பான அறிவுரை, சிகிச்சை முறைகளைக் கொடுக்கக் கூடிய செக்ஸ் தெரப்பி மற்றும் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த 50 பேர் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட சுவாரஸ்யமான சில விஷயங்கள்…

உறவுக்கு ஏற்ற கால அளவு

சிலருக்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும். நீண்ட உடலுறவைக் கொடுத்தால்தான் பார்ட்னருக்கு திருப்தி கிடைக்கும், மகிழ்ச்சி கிடைக்கும் என்று ஆண்களும், பெண்களும் எண்ணுவதால் பல அவுசகரியங்களே ஏற்படுகிறது. மேலும் அதுபோல நடப்பதும் இல்லை. இதனால் ஏமாற்றமும், விரக்தியும் ஏற்படுகிறது.

இரவு முழுவதும் உல்லாசமாக இருந்தால்தான் திருப்திகரமாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. உண்மையில் திருப்தியான உறவுக்கு 7 முதல் 13 நிமிடங்கள் அல்லது பத்து நிமிடங்கள் போதும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.


இருவருக்கும் ஏற்ற நிமிடங்கள்

ஒன்று முதல் 2 நிமிடம் வரையிலான உறவு என்பது மிக மிக குறுகியது. இதில் இருவருக்குமே திருப்தி கிடைக்காது. 3 முதல் 7 நிமிடம் வரை என்பது நார்மலானது. இதில் இருவருக்கும் முழு திருப்தி கிடைக்கும். 13 நிமிடங்கள் வரை நீடிப்பது என்பது மிகவும் நீளமானது. இதிலும் இருவருக்கும் திருப்தி இருக்கும், அதேசமயம், கூடவே சில அசவுகரியங்களையும் சந்திக்க நேரிடும். எனவே 7 முதல் 13 நிமிடங்கள் வரை என்பது இரு தரப்புக்கும் ஏற்ற, பொருத்தமான, சரியான கால அளவாகும். அதிலும் 10 நிமிடம் என்பது மிகவும் பர்பக்ட் ஆன கால அளவு.


முன் விளையாட்டுக்கள்

உறவுக்கான கால அளவு வெறும் பத்து நிமிடமே போதுமானது என்கிறது ஆய்வு அதேசமயம், உறவுக்கு முந்தைய விளையாடல்கள், சீண்டல்கள் போன்றவற்றுக்கு இவ்வளவு நேரம்தான் என்று கணக்கில்லை. அது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீடிக்கலாம். ஆனால் உச்சகட்ட உறவுக்கு பத்து நிமிட அவகாசம் என்பது சரியானது, பொருத்தமானது, போதுமானது என்கிறது ஆய்வு முடிவு.

இரவு நீண்டிருந்தாலும், நம் உறவுக்கு தேவை சில நிமிடங்கள் மட்டுமே. இதை புரிந்து கொண்டு உறவில் இறங்கினால் குழப்பங்கள், கவலைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உண்மையைப் புரிந்து கொண்டு எதார்த்தமாக உறவுக்குள் நுழைவதே மனதுக்கும், நமது உடலுக்கும், செக்ஸ் வாழ்க்கைக்கும் சிறந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள்


கர்ப்பிணிகள் ஓவனை பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும்

 
கர்ப்பிணிகள் மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் ஆகிய சாதனங்களுக்கு அருகில் நீண்ட நேரம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வர வாய்ப்பு அதிகம் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
 
அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளிடம் ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர். மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் உள்ளிட்ட மின்காந்த சக்தி(மைக்ரோவேவ்) அதிகம் உள்ள கருவிகளின் பயன்பாடு பற்றி 801 கர்ப்பிணிகளிடம் கருத்து கேட்டனர்.

பின்னர் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் மருத்துவ விவரங்களை தொடர்ந்து பதிவு செய்து வந்தனர். 13 ஆண்டுகள் கழித்து அந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான அறிகுறிகள் பற்றி ஆராய்ந்தனர்.

மின்காந்த கருவிகளை குறைவாக பயன்படுத்தியவர்களைவிட அதிக நேரம் பயன்படுத்திய கர்ப்பிணிகளின் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வாய்ப்பு 3 மடங்கு அதிகமாக இருந்தது தெரியவந்தது.

கர்ப்பிணிகள் மின்காந்த கருவிகளின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது அவசியம் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. அத்துடன் அவை இயங்கும் போது அருகில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதை தடுக்க முடியும் என ஆய்வுக் குழுவின் தலைவர் டிகுன் லி தெரிவித்துள்ளார்.