வியாழன், 18 ஆகஸ்ட், 2011

முருங்கக்காய் கார குழம்பு (செட்டிநாடு)


Drumstick (muranka) pieces, onion, coconut-ginger paste and tomato
தேவையான பொருட்கள்:
========================

புளி - எலுமிச்சை அளவு
முருங்கக்காய் துண்டுகள் - பத்து
சின்ன வெங்காயம் - பத்து
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
தக்காளி - ஒன்று அல்லது இரண்டு
பச்சை மிளகாய் - நான்கு
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஐந்து (optional)
நல்லெண்ணெய் - இரண்டு குழிகரண்டி +அரை குழிகரண்டி
கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்

அரைக்க:
========
சோம்பு பொடி - கால் டீஸ்பூன்
தேங்காய் துறுவல் - கால் கப்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி - ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன்
தனியா பொடி - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஐந்து இலை


செய்முறை:

* வெங்காயத்தை தோலுரித்து கொள்ளவும்,

* பச்சை மிளகாயை கீறி கொள்ளவும்.

* புளியை மூன்று கப் நீரில் கரைத்து கொள்ளவும்.

* அரைக்க வேண்டியதை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

* பாத்திரத்தில் இரண்டு குழிகரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மிளகாய் வற்றல்,பச்சை மிளகாய் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து பொறிய விடவும்.

* சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி முருங்கக்காய் சேர்க்கவும்.

* உப்பு சேர்த்து தக்காளி ,மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

* பச்சை வாசனை போனதும் அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொத்தி வந்ததும் மீதும் உள்ள எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து எண்ணெய் கக்கும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

* சுவையான கார குழம்பு தயார்.



குறிப்பு:
=======

உங்கள் நாவிற்கு தகுந்தாற்போல் காரத்தை கூட குறைத்து போட்டு கொள்ளுங்கள்.
சின்ன வெங்காயம் உரிக்கும் பொழுது கண் எறியாமல் இருக்க ஒரு பத்து நிமிடம் முன்பு தண்ணீரில் ஊற போட்டு விடுங்கள்.எளிதாக தோல் நீக்கிவிட முடியும் அதே சமயம் கண் எறியாது.

நண்டு வறுவல்





தேவையான பொருட்கள்

நண்டு - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 1 (பெரியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 5
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 கோப்பை
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. நண்டை ஓடு நீக்கி சுத்தம் செய்து கழுவி வைத்து கொள்ளவும்.

2. சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, பாதியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. பாதி சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெயில் வதக்கி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்பு சேர்த்து வதக்கி ஆற வைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

4. பூண்டை தோல் உரித்து கொள்ளவும்.

5. தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை ஆகியவற்றை போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

7. பிறகு இதனுடன் பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.

8. பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

9. இதனுடன் கரம் மசாலா, அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கி, பின்னர் நண்டை சேர்த்து லேசாக பிறட்டி, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும்.

10. பிறகு தேங்காயை நன்றாக அரைத்து இதனுடன் சேர்த்து கொதிக்க விடவும்.

11. நண்டு நன்றாக வெந்து குழம்பு நன்றாக கொதித்து சிறிது கெட்டியானதும், மிளகுத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.


குறிப்பு

1. நண்டை ஓடு நீக்கி கழுவியதும் சிறிது நேரத்தில் சமைத்து விடவும். இல்லையென்றால் நண்டு உள்ளே குழைந்து விடும்.

2. இஞ்சி பூண்டு விழுதில் இஞ்சி அதிகமாகவும், பூண்டு குறைவாகவும் சேர்த்து அரைக்கவும்.

3. தேங்காய் விழுதுக்கு பதிலாக தேங்காய்ப்பால் சேர்த்தால் மேலும் சுவையாக இருக்கும்.

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

Blood Donors குருதி கொடையாளர் தேவையா ?


 
நோயாளிகள், அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்கள், விபத்தில் சிக்கிக் கொண்டு உடனடி சிகிச்சை கொள்ள துடிப்பவர்கள் அனைவருக்கும் இரத்தம் ஓர் உடனடித் தேவையாகும். இது போன்ற சூழ்நிலைகளில் உதவ தன்னார்வத்துடன் பல தொண்டர்கள் உள்ளனர். ஆனால் அவசர காலத்தில் இவர்கள் எங்குள்ளனர் என்று தெரிவதில்லை. இந்த தன்னார்வலர்களின் தகவல்களைக் கொண்டுள்ள இலவச தகவல் மையங்களின் முகவரிகள், தொலைபேசி எண்கள் ஆகியவற்றைப் பெற்று, இவர்களைக் கண்டறிந்து, இரத்தம் தேவைப்படும் இடத்திற்கு இவர்கள் வருவதும் கால தாமதம் ஏற்படுத்தும் ஒரு செயலாகிறது.இதனைத் தடுக்கவே www.friendstosupport.org என்ற இணைய தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளம் சென்றால் இங்கு இரத்த வகை வாரியாக, தன்னார்வலர்களின் முகவரி கிடைக்கிறது. எந்த இடத்திற்கு இவர்கள் வர வேண்டும் எனக் குறிப்பிட்டால், உடனே அந்த இடத்திற்கு அருகே உள்ளவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் தரப்படுகின்றன. இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு நாம் நேரடியாகவே இரத்தக் கொடையாளிகளுடன் பேசி அவர்களை வரவழைக்கலாம்.
அவர்கள் கொடுத்துள்ள தொலைபேசி எண்கள் இயங்கவில்லை என்றால், உடனே இந்த தளத்திற்குத் தகவல் தெரிவிக்கலாம்,. அவர்கள் சார்ந்தவர்களைத் தொடர்பு கொண்டு சரியான தொலைபேசி எண்களைப் பெற்று, தளத்தில் அப்டேட் செய்கின்றனர். இந்த தளத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு சேவை செய்திடலாமே
!


இங்கு இந்த செய்தியை வெளிவிட காரணம் யாராவது ஒருவருக்கு இந்த செய்தி பயன்படவேண்டும் என்பதற்க்காக தான்.நீங்களும் இந்த செய்தியை ஒருவரிடமாவது கட்டாயம் தெரியபடுத்துங்கள்.

கணினியில் பிரச்சனையா ! CPU வை கலட்டதிங்க !


பொதுவாக கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை வருவது வழக்கம்தான்.அவ்வாறு பிரச்சனை வரும்போது கணினி ஒருவகையா ஒலி எழுப்புவதை கேட்கலாம். முதன்மைநினைவகம்(RAM),வன்தட்டு,மதர்ப்போர்டு போன்றவற்றில் பிரச்சனை வரும்போது சிபியு -வில் அந்த வன்பொருளுக்கு ஏற்றது போல ஒலியை எழுப்பும்.அந்த ஒலியை பீப் சவுண்ட் என்று கூறுவோம்.கணினியில் இருந்து ஒலி வந்த உடன் அந்த ஒலிக்கு உரிய வன்பொருளை கண்டறிந்து பிர்ச்சனைக்கு தீர்வுக் காண்போம்.
ஆனால் பீப் ஒலி வந்ததும் கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை என்று சில நபர்கள் அனுபவம் இல்லாமல் CPU வை திறந்து அந்த பிரச்சனை கண்டறிய முயற்ச்சிப்பார்கள் அதனால் WARRANTY போய்விடும் CPU வில் மற்ற வன்பொருள்களுக்கு கூட பிரச்சனை ஏற்ப்படலாம்.இதற்க்கெல்லாம்
 மென்பொருள்கள் மூலம் அந்த வன்பொருளில் என்ன பிரச்சனை, அது எந்த நிலமையில் உள்ளது போன்ற தகவலை அந்த மென்பொருளில் காணலாம்.ஹார்ட்வேரில் உள்ள ஒவ்வரு வன்பொருள்களுக்கும் தனி தனி மென்பொருள்கள் இருக்கிறது.இதனால் கணினியில் இருந்தபடியே மென்பொருள்கள் உதவியுடன் வன்பொருள்களின் செயல்பாட்டுத் தகவலை அறியலாம்.அந்த மென்பொருள்களை பற்றி காண்போம்.

MEMORY யை TEST செய்ய: 

மெமரியை டெஸ்ட் செய்ய MEMTEST என்ற மென்பொருளை நிறுவி பயன்படுத்திக்கொள்ளலாம்.இது கேச் மெமரி,முதன்மைநினைவகம் போன்றவற்றை கண்டறிய உதவுகிறது. அந்த மென்பொருளை பெற, 

1. http://www.memtest86.com/

2. http://www.memtest.org/

3. நிறுவிய பின் ,




வன்தட்டு பரிசோதனை:

கீழே குறிப்பிட மென்பொருளை நிறுவி ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்வை பரிசோதிக்கலாம்.வன்தட்டில் உள்ள ஹெட்க்கு, ஹார்ட்-ட்ரைவ்க்கு தேவையானது. 

http://www.hdtune.com/

http://crystalmark.info/software/CrystalDiskInfo/index-e.html

http://www.panterasoft.com/download/hddh.exe

PROCESSOR க்கு தேவையானது

CPU யின் தகவலை பற்றி தெரிந்துக்கொள்ள:

http://www.cpuid.com/softwares/cpu-z.html

PRIME 9:

http://www.mersenne.org/freesoft/

i7 CORE :

http://www.xtremesystems.org/forums/showthread.php?t=225450

கிராபிக்ஸ் கார்டின் நிலையை கண்டறிய :

http://www.techpowerup.com/gpuz/

அனைத்து COMPONENTS னை பரிசோதிக்க :

http://www.ubcd4win.com/

USB மற்றும் MEMORY CARD பரிசோதிக்க:

http://www.heise.de/software/download/h2testw/50539

இந்த மென்பொருள் மூலம் usb ,memory யை டெஸ்ட் செய்யலாம்.அந்தமென்பொருளை படத்தில் காணலாம். 

 
இந்த அனைத்து மென்பொருள்களை பயன்படுத்தி கணினியில் வன்பொருள் நிலமையை காணமுடியும்.பின் அதற்க்கு கூறிய தீர்வை காணலாம்

உங்கள் கணினியை உளவறிய ஓர் மென்பொருள்.

உங்கள் கணனியில் நீங்கள் செய்யும் அனைத்து செயற்பாடுகளையும் கண்காணிக்க பல மென்பொருட்கள் உள்ளன, அவ்வாறான ஓர் மென்பொருள்தான் இந்த பணியாளர்கண்காணிப்பு மென்பொருள்.

 
  • இந்த மென்பொருளை நிறுவியபின்னர் நிறுவிய கணனியின் செயற்பாடுகள் முழுவதும் பதிவு செய்யப்படும். 

 


  • நாம் குறிப்பிடும் நேர இடைவெளியில் கணனி திரையினை படமாகவும் சேமிக்கும். 

  • வேறு யாரும் பார்க்காதவாறு கடவுசொல் இடும் வசதியும் உள்ளது.

  • குறித்த நேர இடைவெளியில் சேமித்த தகவல்களை நாம் வழங்கம் மின்னஞ்சலிற்கு அனுப்பிவைக்கும்.

                                                         Tools---->Settings Wizard 
 
  •  மென்பொருள் நிறுவியதற்கான தடயம் ஏதுமின்றி அழித்து விடலாம்.

  • பின்னர் மென்பொருளை நாம் திறந்து பார்ப்பது எனில் Ctrl+Shift+Alt+K இனை அழுத்தி பின் நாம் வழங்கிய கடவுச்சொல்லினை இட்டு திறக்கலாம். (திறப்பதற்கான இந்த குறுக்குவழிவிசைக்கட்டளையை மாற்றலாம்)

  • Run கட்டளையில் "runkgb" என வழங்கியும் திறக்கலாம்.இக்கட்டளையும் மாற்றக்கூடியதே.

மென்பொருளை நிறுவுவதற்கும் ஆரம்பிப்பதற்கும் உங்கள் கணனியில் நிறுவியுள்ள எதிர்வைரசு காப்பை நிறுத்தவேண்டி ஏற்படலாம்.

இம்மென் பொருளை 
தரவிறக்க.

செயற்படுத்துவதற்கான செயற்பாட்டு இலக்கங்கள் மென்பொருளுடன் வழக்கம்போல இணைத்துள்ளேன்.


மற்றவர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய கணனியில் நிறுவி அவர்களின் செயற்பாடுகளை மின்னஞ்சல் மூலம் பார்க்கும், தனிமனித சுதந்திரத்திற்கு இடையூறாகவும் இம்மென்பொருள் அமைந்தாலும் அலுவலகங்களில் வேலை செய்யாமல் வெட்டியாய் பொழுது கழிப்பவர்களை மேலதிகாரிகளுக்கு போட்டுக்கொடுக்க இவ்வாறான மென்பொருள்கள் உதவுகின்றன.


 உங்களுக்கு தெரியாமல் உங்கள் கணனியிலும் யாரேனும் இவ்வாறான மென்பொருளை நிறுவியிருக்கலாம். எச்சரிக்கையாய் இருங்கள் , மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதா என்பதை கண்டு பிடிக்க முடியாது.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

டீன் – ஏஜ் மகளிடம் அப்பா எப்படி நடந்து கொள்ளவேண்டும்

 


பிள்ளைகளிடம் தலையீட்டிற்கும், அக்கறைக்கும் இடைப்பட்ட ஒரு நடு நிலையை அப்பாக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

எனது நண்பர் தன் 14வயது மகளை எப்பொழுதும் நச்சரித்துக் கொண்டே இருப்பார். “சொல் பேச்சை கேக்குறதில்லை எதை எடுத்தாலும் வாதம் பண்ணிக்கிட்டே இருக்கா” என நச்சரிப்புக்குக் காரணம் கூறுகிறார்.

நண்பர் எதையும் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புகிற மனிதர் அவருடைய இந்த அணுகுமுறை தன் மகளிடம் ஒரு பாதகமான போக்கை உருவாக்கும் என்று அவரிடம் கூறியிருக்கிறேன்.

அந்தப் பெண்ணுக்கு ஒரு பத்து வயது தங்கையும் இருக்கிறாள். அவள் அடக்கமும் கீழ்படியும் குணமும் கொண்டவள். அதனால் தந்தையுடன் அவள் எளிதாக ஒத்துப் போகிறாள். இது மூத்தவளிடம் பொறாமை யையும் எரிச்சலையும் தூண்டுகிறது.

14 வயது என்பது ஒரு சிக்கலான பருவம். இதை நண்பர் உணரவில்லை. அவருடைய ஆத்திரமும், இயலாமையும் அந்த வீட்டின் நிம்மதியைப் பெரிதும் குலைக்கின்றது.

உங்களுடைய பிள்ளைகள் கைக்குழந்தை நிலையிலிருந்து தத்தித் தவழும் பருவத்தை எட்டிய அந்த கால கட்டத்தை நினைத்துப் பாருங்கள். மெல்ல பரிணமித்த அவள் குணாதிசியங்களுக்கேற்ப (ஆளுமை) நீங்கள் தாம் அப்பொழுது உங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.

அவளுடைய அழுகைகளுக்கும், ஆட்டங்களுக்கும் காரணம் புரியாமல் அப்பொழுது நீங்கள் கொஞ்சம் எரிச்சல் கூட அடைந்திருக்கலாம்.

டீன் ஏஜ் பருவம் என்பது கூட அத்தகைய ஒருபருவ மாறுதல்தான். இந்தக் காலகட்டத்தில் உங்கள் மகள் வேகமாக வளர்கிறாள். இவ்வளர்ச்சி உடல், அறிவு மற்றும் உணர்வு ரீதியானது.

இந்த வயதில் அவள் பாதி பெரியவள் என்பதை மறந்துவிட வேண்டாம். அதனால்தான், ஒரு குழந்தையாக நடத்தப்படும்போது அவளைப் புண்படுத்துகிறது.

உங்களை அறியாமல் நீங்கள் அவளுடைய தன்னம்பிக்கையை காயப் படுத்தக் கூடும். “என்னுடைய வாழ்க்கையை என்னாலேயே திறம்பட நடத்த முடியும் என்கிற போது இவர்கள் ஏன் தேவையின்றி இடையே புகுந்து அறிவுரைகள் வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்?” என்று அவள் நினைப்பாள்.

உங்கள் ஆணைகளும், கட்டளை களும் தன்னை ஒரு குழந்தைபோல் உணர வைப்பதால் அவற்றை வெறுக்கிறாள்.

இந்த வயதில் தன்னுடைய அந்தரங்க மானவைகளை கட்டிக் காப்பவளாகவும், அதை வெளியில் சொல்ல விரும்பாதவளா கவும் இருப்பாள்.

“எங்கே போனாய்?”, “என்ன செய்தாய்“ போன்ற கேள்விகளை அவள் விரும்புவ தில்லை வளர்ந்துவிட்ட ஒரு நபர் மீது நீங்கள் வைக்கக்கூடிய நம்பிக்கையை ஏன் தன்மீது வைப்பதில்லை என்று சலித்துக்கொள்வாள்.

ஏனென்றால், அப்பொழுது அவளைப் பொறுத்தவரை நன்கு வளர்ச்சியடைந்து விட்ட ஒரு பெண் இந்த வயதில் தன்னை சுயசோதனைக் குள்ளாக்குவதிலும் அதிக நேரம் செலவழிப்பாள்.

டீன் ஏஜ்ஜிற்கே உரிய குழப்பங் களையும், மனப்போராட்டங்களையும் புரிந்து கொள்வதற்கும் களைவதற்கும் அவள் முயற்சி செய்யும் காலம் இது. தன் உடலிலும், மனதிலும் நிகழும் மாற்றங்கள் அவளை குழப்பமடையச் செய்யும். இந்த நேரத்தில் நீங்கள் காட்டுகின்ற எந்த அதீதமான அக்கறையும் தேவையற்றதாகவே அவளுக்குப் படும். அவள் அந்தரங்கத்தில் மூக்கை நுழைப்பதாகவே அவளுக்குத் தோன்றும்.


ஆனால் மகளுக்கும் உங்களுக்கும் இடையில் எழுந்த தடுப்புச் சுவர் எதனால் உருவானது என்கிற குழப்பத்தில் நீங்கள் இருப்பீர்கள். தன் அந்தரங்க உணர்வுகள், எண்ணங்கள் சிக்கல்கள் ஆகியவற்றை பற்றி உங்களுடன் கலந்துரையாடுவதை உங்கள் மகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொள்ளுவாள். இந்தப் போக்கு உங்கள் குழப்பத்தை மேலும் அதிகரிக்கும்.. அதுமட்டுமல்ல அவள் தொடர்பான சிக்கல்களை களைய முடியாமல் திண்டாடுவீர்கள். நாம் ஒரு சிறந்த அப்பாவாக இல்லையோ? எனும் ஐயங்கள் உங்களை அலைக்கழிக்கும். இந்த சிக்கல்கள் பிள்ளைக்கும், பெற்றோர்க்கும் இடையிலான இடைவெளியை அகலப்படுத்தும்.

அச்சங்களும், ஐயப்பாடுகளும் நிறைந்த டீன்-ஏஜ் பருவம்:-

பொதுவாகவே டீன்-ஏஜ் பருவத்தைச் சேர்ந்தவர்கள், தன்னம்பிக்கையை குறைவாகக் கொண்டிருப்பார்கள். தம்மில் தோற்றத்தில் நிறைய குறைகளைக் காண்பார்கள். இத்தகைய அச்சங்களும், ஐயப்பாடுகளும் கொண்டவர் களிடம் பழகுவது சிக்கலான காரியம் .சாதாரணமாக நாம் சொல்லுகிற சொற்களை திரித்து அர்த்தப்படுத்திக் கொள்கிற போக்கு இந்த கால கட்டத்தில் மிகுந்திருக்கும்.

ஏறக்குறைய எல்லா உறவுமுறையினரிடமும் இந்தக் குளறுபடி இந்தாலும், பெற்றோர்க்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இப்படிப்பட்ட கருத்து முரண்பாடு ஏற்படுமானால், அது இருசாரார்க்கும் மிகுந்த மனவேதனையை உண்டாக்கும்.

தன் கட்டளைகளை பிள்ளைகள் மீறும்போது தன் அதிகாரத்தையே அவர்கள் தட்டிக் கேட்பதாக அப்பாவுக்குத் தோன்றும் ஏன் தந்தை என்கிற தன் நிலையையே அவர்கள் உதாசினப்படுத்துவதாக நினைப் பீர்கள். ஒரு அப்பாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது.

சின்ன வயதில் எந்தப் பெண் குழந்தையும் தன் அப்பாவிடம் மிகவும் பாசமாக இருக்கும். அவரை ஆராதிக்கும் இந்த பாசத்திற்கும், ஆராதனைக்கும் பழக்கப்பட்டுபோன ஒரு தந்தையால் தன் டீன்-ஏஜ் மகளின் கலக்கத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது தானே.

தாய்-மகள் உறவு முறை என்பது தகப்பன் - மகள் உறவு முறையிலிருந்து மிகவும் மாறுபட்டது.

டீன் -ஏஜ் பருவத்தில் எந்த ஒரு பெண் பிள்ளையும் தன் தாயிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது இயல்பு. தந்தையுடன் பகிர்ந்துக்கொள்ள இயலாத அச்சங்களையும், ஐயப்பாடுகளையும் தாயுடன் பகிர்ந்துக் கொள்கிறாள்.

தாயுடன் ஒட்டுதலாக இருக்கின்ற மகள் தன்னுடன் அப்படி இல்லையே என்று தந்தை ஏங்குகிறார். விலக்கி வைக்கப்பட்டது போல் உணருகிறார். இன்னொரு கருத்து கூட இதை மேலும் சிக்கலாக்குகின்றது.

கண்ணோட்டத்தில், பார்வையில், தம் மகள் எப்பொழுதும் குழந்தையாகவே தென்படுகிறாள். அவள் வளர்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை உணரத் தவறி விடுகிறார். டீன்-ஏஜ் மகளின் ஒவ்வொரு புதிய பழக்கமும் - மகளைப் பற்றி தன் மனதில் தான் பதித்து வைத்திருக்கும் படிமத்திற்கு முரணாக இருப்பதால் அவரை வெறுப்பேற்றுகிறது.

இந்த சூழ்நிலையில் தாய் என்கிற முறையிலும் மனைவி என்கிற முறையிலும் பெண்களுக்கு பெரிய கவலை ஏற்படும், சச்சரவுகளை தவிர்க்கும் பொருட்டு, அப்பாவும் மகளும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வ தையும் தவிர்க்கத் தொடங்குவர். வீடே ஒரு போட்டிக் களமாகக் காட்சியளிக்கும்.

“என் விருப்பப் படித்தான் நடப்பேன்” என அடம் பிடிக்கும் 14வயது மகளுக்கும். குடும்பத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முனையும் அப்பாவுக்கும் இடையில் நடக்கின்றன போட்டி, வீட்டை அல்லோல கல்லோலப் படுத்திவிடும். இவர்கள் இருவருக் கும் நடுவில் ஒரு சமாதான உடன்படிக்கையை ஒரு பெண்ணால் தாயால் ஏற்படுத்த முடியுமா?

அப்பா-தன் மகளிடம் அவ்வளவு கோபம் கொள்வதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள். குறிப்பாக எதைப் பற்றி அவர் நச்சரிக்கிறார்? அது புதிதாக உருவான ஒன்றா? அல்லது அப்பா மகளிடம் நெடுங்காலமாகவே குறை காணும் அம்சமா?

குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கூட்டுங்கள் (ஃபேமிலி மீட்டிங்) குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத் துங்கள். ஒவ்வொருத்தரும் எந்த குறுக்கீடு மின்றி ஐந்து நிமிடம் பேச வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள்.

தங்கள் மனதில் குமைகின்ற மனக்குறைகள் பற்றியும் அவற்றுக்கான மூல காரணங்கள் பற்றியும் விளக்கச் சொல்லத் தூண்டுங்கள்.

“ நம் உணர்வுகளை நம் குடும்பத்தினர் அனைவரும் செவிமெடுத்து கேட்கிறார்கள்” என்கிற எண்ணம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுவது மிகவும் முக்கியம்.

தனிப்பட்ட மனக்குறைகள் இல்லாத குடும்ப உறுப்பினர்களும், இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம். தனிப்பட்ட மனக்குறைகள் இல்லாத போதும் வீட்டில் நிலவும் உளைச்சலும் நிம்மதியின் மையும் அவர்களையும்தானே பாதிக்கும்?

குடும்பத்தினர் அனைவரும் கடைப் பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளை அப்பொழுது வகுத்துக் கொள்ளுங்கள். இத்தகைய விதிமுறைகள் ஒவ்வொரு குடும்பத் திலும் இருப்பது அவசியம். குறிப்பாக பின் வருவன பற்றிய விதிமுறைகளை வகுத்துக் கொள்வது நல்லது.

வீட்டு வேலைகள், எதிர்பார்ப்புகள், வீட்டில் இருக்க வேண்டிய நேரம், வீட்டுப் பாடம் செய்ய வேண்டிய நேரம், தொலைக்காட்சியை யார் எவ்வளவு நேரம் பயன்படுத்துவது என்கிற அட்டவனை, விடுமுறை நாட்களைப் பற்றிய விதிமுறை களை வகுத்துக் கொள்ள வேண்டும். பொதுவான வரையறைகள் போன்ற இதர பலவற்றைப் பற்றியும் சில முக்கியமான வீட்டு விதிகள்:

1) வீட்டுப் பாடங்களை செய்து முடிக்கின்ற வரை தொலைக்காட்சி கிடையாது.

2) நச்சரித்தல் கிடையாது - உரையாடல்கள்தான்.

3) இன்னொருவர் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கையில் யாரும் குறுக்கிடக் கூடாது.

4) பத்து மணிக்கு மேல் தொலை பேசியைப் பயன்படுத்தக் கூடாது.

5) சமைப்பதிலும் உணவு பரிமாறு வதிலும் எல்லோருக்கும் உதவ வேண்டும்.

6) அவரவர் பொருட்களை அவரவர் தான் பராமரித்துக் கொள்ள வேண்டும்.

ஒருவருடைய குணாதிசயத்தை இன்னொருவரா; மாற்றியமைக்க முடியாது என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டு பொறுப்பு மிக்கவர்களாக வளர்ந்தால் அது குடும்ப கட்டமைப்பிலே ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

அப்பாக்கள் தங்களின் அதிகாரத்தை அவ்வப்போது தளர்த்திக் கொள்ளல், குடும்பத்தில் சமாதானத்தை நிலைநாட்ட வழி வகுக்கும், உங்கள் பிடிவாதங்கள் அனைத் தையும் மறுபடியும் ஒருமுறை பரிசீலியுங்கள். உங்களுக்கு இன்றியமையா ததாக தோன்றும் சில உண்மையில் முக்கிய மற்றதாக இருக்கக்கூடும் எடுத்துக்காட்டாக உங்கள் பெண் விரும்புகிற வரையில் தொலை பேசியில் பேச அனுமதியுங்கள். இந்த விட்டுக் கொடுக்கும் அணுகுமுறை உங்கள் டீன்.ஏஜ் மகளை சிந்திக்க வைக்கும். வழக்கமாக சண்டை பிடிக்கும் அப்பா இவ்வளவு நேரம் பேசியும் அமைதியாக இருக்கிறாரே? என்று வியப்புறுவாள்.

காலப்போக்கில் உங்கள் மீதும் உங்கள் தேவைகளின் மீதும் அவளுக்கு மரியாதை கூடும். என்னதான் டீன்-ஏஜ் பருவத்தை எட்டிவிட்டாலும், உங்கள் அன்புக்காகவும், உறவுக்காகவும் ஏங்கும் குழந்தையாகவே மனதளவில் அவள் இருக்கிறாள். குடும்ப உறவு பிணக்குகள் கொண்டதாக இல்லாமல் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இருப் பதையே அவளும் விரும்புகிறாள். பிடியை கொஞ்சம் தளர்த்த வேண்டும் என்றவுடன் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் அறவே கவனம் செலுத்தாமல் இருப்பது என்று நினைத்துவிடக்கூடாது. அதிகமாக தலையி டாமல் அவள் நடவடிக்கைகளை மேற்பார் வையிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். உலகத்தை எதிர்கொள்வதற்கான வயது, பக்குவமும் ஒரு டீன்-ஏஜ் பெண்ணிடம் இருக்காது. உங்கள் அறிவுரையும் வழிகாட்டு தலும் அவளுக்குத் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும்.


டீன்-ஏஜ் பருவம் என்பது பரிணாம வளர்ச்சியை குறிக்கிறது. பார்க்காததைப் பார்க்கவும். கேட்காததைக் கேட்கவும் ஆவல் மேலிடுகிறது. சில சமயங்களில் இந்த ஆவல் உணர்ச்சியே உங்கள் டீன்-ஏஜ் பிள்ளையை சிக்கலில் மாட்டியும் விடுகின்றது. அதனால் அவள் வாழ்க்கையில் நீங்கள் பங்கு பெறுவது முக்கியம்.

மகளின் நண்பர்கள் வீட்டிற்கு வரும்போது அவர்களுடன் கலந்துரையாடுங்கள். உங்கள் மகளின் நட்புவட்டம் எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவும். டீன்-ஏஜ் பருவத்தில் நிகழும் இன்னொரு முக்கியமான வளர்ச்சி. மொட்டுவிடும் பாலியல் உணர்வு . இந்த பாலியல் உணர்ச்சியை முழுவதும் புரிந்துக் கொள்ள முடியாமல் உங்கள் மகள் தடுமாறும் காலம் இது. இந்த தடுமாற்றத்தின் விளைவாக உங்களைக் கூட அவள் தவிர்க்க விழைவாள். சிடுசிடுப்பாகவும், முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்ளத் துவங்குவாள்.

இந்த நேரத்தில்தான் நீங்கள் மிக அனுசரனையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பது கடினம்தான். எனினும் இந்த அனுசரணையின் பயனைத் தெரிய வரும் போது பெரும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

உங்களை எதிர்த்துப் பேசிக் கொண்டும். முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டும் அவள் வலம் வருகின்ற நேரங்களை விட, தன் பொறுப்பை மறவாமல் அவள் சில வேலைகளைச் செய்யக்கூடும். அவை மிகச் சிறிய செயல்களாகவும் இருக்க லாம. எனினும் நீங்கள் அவற்றை மறக்காமல் பாராட்ட வேண்டும். அதிக அலட்டல் இல்லாமல் சாமர்த்தியமாக பாராட்டுங்கள்.

தொலைபேசியை எடுத்து காதில் வைத்துக்கொண்டால் முடிவில்லாமல் பேசுகின்ற ஒரு பதினான்கு வயது இளம் பெண்ணை எனக்கு தெரியும். அவள் தேர்வுகள் நெருங்கி வந்துவிட்டால் பாடப்புத்தகங்களில் மூழ்கிவிடுவாள். தோழி களுடன் கதையடிப்பதில் நாட்டம் மிகுந்த வளாக இருப்பினும். தன் கடமைகளில் அவன் ஒருபோதும் குறை வைப்பதில்லை இதனால் அவள் தந்தைக்கும் மகிழ்ச்சி தொட்டதற் கெல்லாம் மகளை அவர் கடிந்துக்கொள்வ தில்லை. தொலைபேசியில் விடாமல் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் எப்பொழுதாவது நேரம் போவதை சுட்டிக் காட்டுவார். அவ்வளவுதான்.

டீன்-ஏஜ் பருவத்தில் உணர்வுகளை வெளிப்படுத்த உங்கள் மகள் சங்தேக மொழி யைக் கைக்கொள்வாள். தன் எண்ணங்களை நாசுக்கான குறிப்புகள் மூலம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவாள்; இந்த மாதிரி தருணங் களில் எந்த ஒரு அப்பாவுக்கும் அறிவுரைகளை வாரி வழங்கிடத்தான் மனம் துடிக்கும். அவசரப்பட்டு விடாதீர்கள் இலேசாக மனம் திறந்து காட்டியிருக்கின்ற உங்கள் மகள் அதை மறுபடியும் பட்டென மூடாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் புத்திசாலித்தனமா நடந்து கொள்ள வேண்டும். உங்கள் மகள் சுற்றி வளைக்காமல் நேரடியாக கேள்வி கேட்பாளேயானால் நீங்களும் அவ்விதமா கவே பதிலளிக்க வேண்டும்.

கூச்சப்பட்டுக் கொண்டு சுற்றி வளைத்தால் உங்கள் பதில்கள் அதற்குத் தக்கவாறு அமைய வேண்டும். இந்த நேரத்தில் போய் சொற்பொழிவு செய்து கொண்டு இருப்பீர்களேயானால் அவள் மறுபடியும் உங்களிடம் ஆலோசனை கேட்டு வராம லேயே போகக்கூடும். எந்த நேரத்தில் எந்த விதமாக பேச வேண்டும் என்பதை புரிந்துக் கொண்டு பேசினால், உங்கள் டீன்-ஏஜ் பெண்ணுக்கும் உங்களுக்கும் இடையிலான உறவு கெட்டிப்படும்; ஆழப்படும்.


-நன்றி : ஹெர்குலிஸ் - ஆக 2000

நன்றி - கீற்று இணையம்

சனி, 13 ஆகஸ்ட், 2011

ஹார்மோன்களின் வேகம்..நடுத்தர வயதில் அதிகரிக்கும் ஆர்வம்!



 
Sexual Life முப்பது வயதானால் அழகும் மெருகும் கூடுவது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும்தான். முப்பதை கடந்த பெண்கள் பணியிலும், அனுபவத்திலும், முதிர்ச்சியடைகின்றனர். பெண்களுக்கான மிக முக்கியமான கால கட்டம் தொடங்குவது முப்பது வயதிற்கு மேல்தான் என்கின்றனர் உளவியலாளர்கள்.

இருபதில் தொடங்கும் திருமண வாழ்க்கையில் குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களை வளர்த்து ஆளாக்கி பள்ளிக்கு அனுப்பும் வரைக்கும் பெண்களுக்கு எதைப்பற்றியும் நினைக்க தோன்றுவதில்லை. ஓரளவிற்கு குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பே தங்களின் மீதே அக்கறை ஏற்படுகிறது.

உடுத்தவும், அழகுபடுத்திக் கொள்ளவும் ஆயத்தமாவது பெண்கள் முப்பது வயதிற்கு மேல்தான். தாம்பத்திய வாழ்க்கையிலும் அதிக ஈடுபாடு ஏற்படுவது நடுத்தர வயதில்தான் என்று சர்வே முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.


நடுத்தர வயதில் ஆர்வம்

நாற்பது வயதில்தான் தாம்பத்திய உறவில் அதிக ஆர்வம் ஏற்படுவதாக 81 சதவிகித பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் 20 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கேட்பட்ட கேள்விகளில் 63 சதவிகிதம் பேர் தாம்பத்ய உறவில் ஈடுபாடு காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு காரணம் இளவயதில் காட்டும் வேகமும், நடுத்தர வயதில் ஏற்படும் விவேகமும்தான் என்கிறது அந்த ஆய்வு. சிகாகோ பல்கலைக் கழக ஆய்வறிக்கையின் படி 20 வயதுகளில் இருக்கும் பெண்கள் மிகக்குறைவாகவே உச்சட்ட சிலிர்ப்பு நிலையை அடைகின்றனர் என்றும் 40 வயதுகளில் இருக்கும் பெண்களே அதிகமாக அந்நிலையை அடைகின்றனர் என்றும் தெரிகிறது.


வேகமும், விவேகமும்

இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. ஆனால் நடு வயதில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதானமாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் அதிக நேரம் நீடித்திருக்கிறான். மனைவியை சிலிர்ப்பு நிலைக்கு கொண்டு போவதில் ஆர்வம் காட்டும் கணவன் இயல்பாகவே தானும் அந்தப் பரவசத்தை அடைகிறான்.

கவர்ச்சியைக் கண்ணால் கண்டாலே இளமைப் பருவம் மோக வயப்படும். வயது முதிரும் போது மோகத்திற்கு பார்வை மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. தொடு உணர்ச்சிகளே அந்நிலைக்குத் தூண்ட முடியும். எனவே தான் இவ்வயதுகளில் நிதானமும் செயல்திறனும் இவ்விஷயத்தில் உதவிகரமாக இருக்கிறது.


ஹார்மோன்களின் வேகம்

இளமைக் காலத்தில் உறவுக்கு அழைப்பதில் ஆண்தான் முன்நிற்கின்றான். ஆனால் நடுவயதில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவளாக இருப்பாள். காரணம் ஆண் பெண் இருவர் உடலிலும் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் திரவங்கள்தான்.

வயது கூடும்போது அவை மாற்றமடைகின்றன. ஆணுக்கு இவையிரண்டும் அளவில் குறையத் தொடங்கும். ஆனால் பெண் உடலில் டெஸ்டோஸ் டெரோனின் குறைவை ஈஸ்ட்ரோஜன் ஈடுகட்டுகிறது. எனவேதான் ஆணை விடவும் பெண் நடுவயதில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள்.