புதன், 9 ஜனவரி, 2013

ஆறு சுவை உணவுகள்!




உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.


உணவு உண்ணும் முறை:

உடலில் இயக்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.

துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.

துவர்ப்பு (Astringent):


உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.

இனிப்பு (Sweet):


மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.

புளிப்பு (Sour):


உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நாரத்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.

கார்ப்பு (Pungent):


பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.

கசப்பு (Bitter):


பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.

உவர்ப்பு (Salty):


அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.

உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக் கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.

இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசாயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.

ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.

எப்போதும் உணவ உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.

எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக் கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப் படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.

உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.

நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.

'உண்பது நாழி' என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் போது உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.

செல்போன் கதிர்வீச்சில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு!




செல்போன் தொழில் நுட்ப சாதனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே
போகிறது. இதனால் தேவைகள் மட்டும் அல்லாமல் இதனால் ஏற்படும் பாதிப்புகளும்
அதிகரித்து கொண்டே தான் போகின்றன என்கின்றது ஆய்வு முடிவுகள். செல்போன்களை
எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டாலே பல பாதிப்புகளை
தவிர்க்கலாம்.

ஆம்! குழந்தைகள் பெரியவர்களைவிட செல்போன்களை மிக எளிதாக பயன்படுத்துவதை
பார்த்து பெருமை கொள்ளும் பெற்றோர்கள் நிச்சயம் ஒரு முக்கியமான விஷயத்தை
தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால்,
செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு வெகு அதிகமாக குழந்தைகளை
பாதிக்கும்.

முடிந்த வரை லேண்ட்லைனை பயன்படுத்துவது நல்லது என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படியே செல்போனை பயன்படுத்தினாலும் முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவது
நல்லது. சில கிராமப்புற பகுதிகளில் சரியாக நெட்வொர்க் கிடைப்பதில்லை. இது
போன்று சரியாக சிக்னல் கிடைக்காத பகுதிகளில் செல்போன் பயன்படுத்தும் போது,
கதிர்வீச்சின் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

அதோடு தூங்கும் போது செல்போனை பக்கத்திலேயே வைத்து கொண்டு தூங்குபவர்கள்
அதிகம் பேர் இருக்கிறார்கள். இந்த பழக்கத்தினை ஆரம்ப காலத்திலேயே தவிர்த்து
கொள்வது சரியான ஒன்று. மற்றவர்களுக்கு பேசும் போது, எதிர் முனையில்
பேசுபவர்கள் அழைப்பை எடுத்த பின், காதில் வைத்து பேசுவது நல்லது. ஏனெனில்
பேசும் போது ஏற்படும் கதிர்வீச்சைவிட, ரிங்டோன் போகும் பொழுது 14 மடங்கு
அதிகம் கதிரவீச்சுகள் வெளிப்படுகிறது.

முக்கியமாக வைப்ரேட் மோடில் செல்போனை வைத்திருப்பதை தவிர்க்கவும். இது போன்று
வைப்ரேட் மோடில் வைத்து, சட்டை பாக்கெட்டில் வைத்திருப்பதால் இதன் மூலம்
ஏற்படும் அதிர்வலைகள் அதிகம் தாக்குகின்றன.

பொதுவாக வலது காதில் வைத்து மொபைல் பேசும் போது மூளை நேரடியாக பாதிக்கும்.
இதனால் இடது பக்க காதில் வைத்து பேசினால் இதன் பாதிப்பை குறைக்கலாம்.
பயணங்களில் பொழுதுபோக்காக நிறைய பேர் கேம்கள் விளையாடுவது வழக்கம். இப்படி
பயணங்களில் உற்றுபார்த்து ஒரு வேலையை செய்வதன் மூலம் கண்கள் எளிதாக
பாதிக்கப்படும்.

இப்படி விளையாட்டாகவும், கவன குறைவாகவும் செய்யும் சில வேலைகளை குறைத்தாலே
செல்போன்கள் மூலம் ஏற்படும் பெரிய பாதிப்புகளை ஓரளவு குறைக்க முடியும்.

சனி, 29 டிசம்பர், 2012

CD டிரைவ் கணினியில் காட்டப்படாமல் இருக்கலாம் இதனை எப்படி சரி செய்வது?


கணினியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய்ய உதவியாக இருப்பது CD/DVD டிரைவ் ஆகும்சில நேரங்களில் CD டிரைவில் CDயை போட்டு பார்த்தால் கணினியின் my computerல் CD டிரைவ் காணாமல் போயிருக்கும். நமது CD டிரைவ் நல்ல நிலையில் இருந்தும் நன்றாக வெளியில் வந்து உள்ளே செல்கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணினியில் காட்டப்படாமல் இருக்கலாம். இதனை எப்படி சரி செய்வது?

  1. முதலில் Device Managerல் CD டிரைவ் இயல்பு நிலையில் இருக்கிறதா என்று பாருங்கள். Devise Manager செல்ல desktopல்  உள்ள my computer ஐகானை வலது கிளிக் செய்து manage மெனுவை கிளிக் செய்யவும். அதில் இடதுபக்கமுள்ள பகுதியில் Devise Manager என்பதை கிளிக் செய்தால் வலது பக்கம் நமது கணினியில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் பட்டியல் தெரியும். அதில் CD/DVD Rom devices என்பது enable ஆக உள்ளதா என பார்க்க வேண்டும்
  2. உங்கள் கணினியின் CPUவில் CD/DVD டிரைவை இணைக்கும் cable சரியாக உள்ளதா என சரிபார்க்கவும்
  3. மேற்கண்டவை சரியாக இருந்தும் கணினியில் CD டிரைவ் தெரியவில்லை என்றால் Registerல் ஒரு மாற்றம் செய்வதன் மூலம் காணாமல் போன CD டிரைவை மீட்கலாம்.
  4. Start->Run சென்று regedit என்று type செய்து எண்டர் செய்யவும். இப்போது கணினியின் Registry Editor திறக்கப்படும். பின்னர் கீழ் உள்ள key கண்டுபிடிக்கவும். நீங்கள் தேர்வு செய்த Key சரியானது தானா என்பதை உறுதி செய்ய அதன் வலதுபக்கம் CD/DVD டிரைவ் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Class\{4D36E965-E325-11CE-BFC1-08002BE10318}  இந்த key கிளிக் செய்து வலது பக்கம் உள்ள பட்டியலில் UpperFilters, LowerFilters ஆகிய Subkeyகள் இருந்தால் இரண்டையும் அழித்துவிடவும். அழிப்பதற்கு வலது கிளிக் செய்து Delete கொடுக்கவும். ஒரு முறை கணினியை  Restart செய்து விட்டு பார்க்கவும்.

இயற்கையான அழகு குறிப்புகள்



தற்காலத்தில் தங்களின் அழகை வெளிப்படுத்திக் காட்டுவதில் பெண்களுக்கு அதிக
ஆர்வமும், போட்டியும் இருக்கிறது..

ஒவ்வொருவரும் தன்னைவிட அழகானவர்கள் யாரும் இல்லை என மனதில்
நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

அவரவர் மனதில் அவரவர்களே கதாநாயகனாக, கதாநாயகியாக உருவகித்துக்கொண்டு
வாழ்ந்துவருகிறோம். இது அனைவருக்கும் மனதில் இருக்கும் பொதுவான எண்ணங்கள்தான்.

இருப்பினும் இயற்கையை மீறி சில செயற்கைத் தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய
அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீசித்துப் பார்ப்பவர்கள்
இன்று ஏராளம். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை..

இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய
உடலழகைப் பேண முடியும்.

*இயற்கையான அழகு குறிப்புகள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம். *

முதலில் நகம். நகத்தை தூய்மையாக வைத்துக்கொண்டாலே உடலில் பாதி நோய்கள்
அண்டாது. மருத்துவர்கள் கூட வைத்தியம் பார்த்தவுடன் அடிக்கடி கைக்களை சோப்பு
நீரில் கழுவுவதை நாம் பார்த்திருப்போம்.

காரணம் மனிதர்களுக்கு கிருமிகள் பெரும்பாலும் கைகளின் மூலமாகவே வாயிற்கும்,
வயிற்றும் சென்று பல உபாதைகளை ஏற்படுத்துகிறது. அதனால்தான் கைகளை நன்றாக கழுவி
சுத்தம் செய்து பிறகே சாப்பிட வேண்டும் என்றும், அடிக்கடி நகத்தை கடிக்க
கூடாதென்றும் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.

*நகத்தைப் பராமரிக்க: *

பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும்
குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு
கிடைக்கும்.

*இதழ்களை பராமரிக்க: *

நம் வீட்டில் பொரியலுக்கு வாங்கும் பீட்ருட் சிறிதளவு இருந்தாலே போதும்.
உங்களுக்கு எந்த வித Lipstick-ம் தேவையில்லை. பீட்ரூட்டை வெட்டி உங்கள்
இதழ்களில் இலாசக லிப்ஸ்டிக் பூசுவதைப் போல அழுத்தி தேய்த்து வந்தாலே போதும்.
உங்களுக்கு இயற்கை கொவ்வைச் செவ்வாய் இதழ்கள் கிடைக்கும்.

பலரையும் கவர்ந்திழுக்கும் இயற்கையான செந்நெறி உதடுகளைப் பெறலாம்.

கூடவே இந்தப் பதிவில் இருப்பதைப் போலவும் நீங்கள் செய்து பார்க்கலாம்.
ரோஜாப்பூ போன்ற இதழ்களைப் பெற வேண்டுமா?

*முகத்தைப் பராமரிக்க: *

உங்களுக்கு அமுல்பேபி போன்ற கொழுக் மொழுக் முகத்தைப் பெற வேண்டுமா? நீங்கள்
செய்வதென்னவோ சுலபமான வேலைதான்.

நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து உங்கள்
முகத்தை கழுவிப் பாருங்கள்.

பயற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில்
பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி.

இந்த இரண்டு முறைகளை நீங்கள் பின்பற்றினாலே உங்கள் முகம் "பளிச் பளிச்"
போங்க..!

*கழுத்தை பராமரிக்க: *

நிறையப் பெண்கள் செய்யும் தவறே இதுதான்.. அழகாக முகத்தை பரிமரிக்க
தெரிந்தவர்கள் கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். இதனால் கழுத்து
கருத்துப்போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும்.

சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு,
இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு
பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ்
செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை
நிறம் நீங்கி பள பளக்கும்.

*சருமத்தைப் பராமரிக்க: *

ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள்.
அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை
அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட
சருமத்தில் நிறம் சிவப்பாக காட்யளிக்கும்.

*கருவளையம் நீங்க: *

கருவளையம் என்றாலே கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தைத்தான் குறிக்கும்.
கருவளையம் நீங்க இதுதான் சிறந்த வழி. வெள்ளரிக்காய் விடையை பொடி செய்து, அதில்
தயிர் சேர்த்து பசைப்போல(Paste)ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையும் உள்ள
பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல்
போயிருக்கும்.

*கருப்பு திட்டுகளை நீக்க: *

சிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள்
காணப்படும். இதை கிராம புறத்தில் "மங்கு" என குறிப்பிடுவார்கள். இவற்றைப்
போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர்கலந்து நன்றாக
அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள்
இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். சில முறை இந்த முறையை நீங்கள்
கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு(கருந்திட்டு)மறைந்துவிடும்.

*Nature cleanser (இயற்கை கிளென்சர்)*

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பால் ஒரு நல்ல cleanser ஆகும். குளிர்ந்த பாலில்
பஞ்சை நனைத்து முகம் துடைக்கலாம். இது ஒரு சிறந்த க்ளென்சிங் ஆகும்.

இளநீரும் ஒரு மிகச்சிறந்த க்ளென்சிங் பொருள். எனவே நீங்கள் தேங்காய்
உடைக்கும்போது வெளியேறும் நீரை வீணாக்காமல் அவற்றை முகத்தில் தடவிக்கொள்ளலாம்.

எண்ணெய் பசை உள்ள சருமத்தை உடையவர்கள் எலுமிச்சை சாற்றில் சில துளிகள் பால்
சேர்த்து கலந்து, கலவையில் பஞ்சினை நனைத்து சருமத்தை துடைக்காலம்.

வறண்ட சருமத்தை உடையவர்கள் பாலுடன் தேன் கலந்து பயன்படுத்தலாம்.

*முகப்பரு போக்க: *

முகத்தை, முகத்தின் அழகை கெடுப்பதில் முகப்பருவிற்கு பெரும்பங்கு உண்டு. பரு
வந்து காய்ந்து போனால் முகத்தில் திட்டு திட்டாக, கருமை நிறத்துடன் முகம்
பொலிவிழந்து காணப்படும். எனவே முகத்தில் பரு வராமல் பார்த்துக்கொள்வது நல்லது.
முகப்பருவை நீக்க ஜாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்துக்கொள்ளுங்கள்.
அதனுடன் சந்தனத் தூளைக் கலந்து முகப்பரு, முகப்பரு தழும்புகளின் மீது தடவி வர
முகப்பருக்கள் நீங்கும். முகம் பொலிவு பெறும்.

இரண்டு ஸ்பூன் புதினா சாற்றுடன், ஒரு ஸ்பூன் பயிற்ற மாவைக் கலந்து முகப்பரு
தழும்புகளின் மீது பூசிவர முகப்பரு தழும்புகள் நீங்கும்.

*முகம் பொலிவு பெற ஒரு Hi-tech இயற்கை மருத்துவ முறை: *

பாதாம் பருப்பு. பெயரிலேயே இது ஒரு அந்தஸ்தை கொண்டுள்ளது. இந்த பாதாம் பருப்பை
ஊறவைத்து  பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்தெடுங்கள். பேஸ்ட்போல
ஆக்கிக்கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசுங்கள். 20-25 நிமிடங்கள்
கழித்து முகத்தைக் கழுவிப் பாருங்கள்.. நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள்...

முகம் பளிச் பளிச்தான் போங்க...!!

*மற்றொரு இயற்கையான எளிய முறை:*

கடலை மாவு.. இது நம் வீட்டிலேயே அடிக்கடி பயன்படக்கூடியது இல்லையா...?
காலையில் குளிக்கப் போகும் முன் இதை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் குழநைத்து
முகத்தில் தடவுங்கள். அரைமணி நேரம் ஊறிய பிறகு குளித்துவிடுங்கள். தொடர்ந்து
இரண்டு வாரங்கள் இந்த முறையைப் பின்பற்றினாலே உங்கள் முகம் பளபளக்க
ஆரம்பித்துவிடும். விரைவான பலனைக் கொடுப்பதில் கடலைமாவு முன்னணி வகிக்கிறது.

*முகச்சுருக்கம் போக்க: *

ஆவாரை இருக்கும்போது சாவாரைக் கண்டதுண்டோ..? இது பழமொழி. இந்த
பழமொழியிலிருந்தே ஆவாரையின் மருத்துவ குணத்தை நாம் உணரலாம். இது
முகச்சுருக்கத்தைப் போக்கவும் பயன்படுகிறது. ஆவாரம் பூவை காய வையுங்கள்.
 காய்ந்த ஆவாரம் பூ பொடி செய்து 5 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். கூடவே காய்ந்த
புதினா இலைப் பொடி 5 கிராம், கடலை மாவு 5 கிராம், பாசிப்பயிறு மாவு(பயற்ற
மாவு)5 கிராம்.

இவற்றுடன் Olive Oil கலந்து நன்கு குழைத்து முகத்தில் பூசி பதினைந்து
நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு நன்கு குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை
கழுவுங்கள். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இந்த முறையைச் செய்து வந்தால் தோலில்
சுருக்கங்கள் மறைந்து தோல் இளமை பெறும். புதுப்பொலிவுடன் காட்சி தரும்.

*மற்றொரு முறை: *வெள்ளிக் காய் துண்டு இரண்டும், நாட்டுத் தக்காளி ஒன்றும்,
சிறிதளவு புதினா இலை அவற்றை எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு
அரைத்த விழுதை முகத்தில் நன்றாக பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு
முகத்தை நல்ல தூய்மையான, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள்
முகத்தோற்றத்தில் பளபளப்பை காண முடியும். தொடர்ந்து இவ்வாறு இரண்டு வாரங்கள்
செய்து வர உங்களால் நம்ப முடியாத அளவிற்கு உங்கள் முகம் பொலிவு பெற்றிருக்கும்.


மேலே குறிப்பிட்ட அனைத்தும் இயற்கையாக விளைந்த பொருட்களைப் பயன்படுத்தி
செய்வதால் எந்த வித பக்கவிளைவுகள் ஏற்படாது. மேலும் இயற்கை மருத்துவப்
பொருட்களைக் கொண்டு செய்வதால் முழுப் பயன்களையும் பெற குறைந்த பட்சம் இரண்டு
வாரங்கள், பதினைந்து நாட்கள் ஆகும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்..
நீங்களும் உலக அழகிதான்...!!! உலக அழகன்கள்தான்...!!!