குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை அதிகரித்து வருகிறது. மிகவும் நெருக்கமாக பழகும் ஒருவரே இதில் குற்றவாளியாக இருப்பதுதான் கொடுமையான விஷயம். * குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பதை கண்டுபிடிக்கும் வழிகள்... * சில உடல் ரீதியான மாற்றங்களை மருத்துவ சோதனையின் மூலமே கண்டறிய முடியும். அவை... * நடப்பது அல்லது உட்காருவதற்குச் சிரமப்படுவது. * மன உளைச்சலால் ஏற்படும் உடல் நலக்குறைவு, அனோரெக்சியா, புலிமியா போன்றவை. * சிறுநீர் அல்லது மலம் கழிப்பதில் அசவுகரியம். * சிறுநீர் உறுப்பில் மீண்டும் மீண்டும் ஏற்படும் நோய்த் தொற்று. * குழந்தை உடல்ரீதியான தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதை வாய், அந்தரங்க உறுப்பு அல்லது மலம் கழிக்கும் உறுப்புகளில் ரத்தப்போக்கு, ரத்தக் கசிவு, சிராய்ப்பு அல்லது அரிப்பு போன்றவை மூலம் தெரிந்து கொள்ளலாம். * மார்பகம், பின்புறம், தொடை அல்லது வேறு உறுப்புகளில் சிராய்ப்போ, காயமோ காணப்படுதல். * எந்த வயதுக் குழந்தையாக இருப்பினும் பால்வினை நோய்கள் இருத்தல். * முறையற்ற கருத்தரிப்பு. * குழந்தைகளின் நடவடிக்கை மாற்றங்களும் பாலியல் வன்முறையைக் காட்டும் அறிகுறியாகும். ஆனாலும் அது பாலியல் கொடுமையை மட்டும் குறிக்காது. இவற்றோடு கூட வேறு அறிகுறிகளும் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம்... * பாடங்களை கற்றுக்கொள்வதில் சிரமம். காரணமில்லாமல் குறைவான மதிப்பெண்களைப் பெறுவது. ஞாபகசக்தியின் குறைபாடு, சிந்தனையை ஒருமுகப்படுத்துவதில் சிரமம் போன்றவை. * விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற உடலுழைப்பு சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபட ஆர்வமின்றி இருத்தல். * விரல் சப்புவது, உறக்கத்தில் சிறுநீர் கழித்தல், பேச்சுத்திறன் குறைபாடு போன்ற வயதிற்கு பொருத்தமற்ற சிறுகுழந்தையைப் போன்ற செயல்களைச் செய்தல். * எப்போதும் அடுத்தவரைச் சார்ந்திருக்கும் தன்மை. * திடீரென நிறைய பணமும், பரிசுகளும் சேர்வது. * உடல் ரீதியான காரணம் ஏதுமின்றி தலைவலி, வயிற்றுவலி அல்லது வாந்தி பற்றி முறையிடுதல். * உடல் சோர்வு அல்லது உறங்குவதில் சிரமம். * தன்னைப் பேணிக்கொள்வதிலும், உடல் நலத்தை கவனிப்பதிலும் ஆர்வமின்மை. * மனச்சோர்வுக்கு ஆளாகுதல். * சமூகத்திலிருந்து விலகி இருத்தல. (பெரியோர், நண்பர் என எல்லா உறவுகளிலும் நாட்டக்குறைவு) * திடீரென பயம், இனம் தெரியாத வெறுப்பு, மன உளைச்சல் போன்றவற்றிற்கு ஆளாகுதல். (கொடுமைப்படுத்தப்பட்ட இடம் குறித்த பயம், குறிப்பிட்ட நபரைக் கண்டால் பயப்படுவது, விளையாட்டு அல்லது நீச்சல் உடை அணிய மறுத்தல் போன்றவை) * உணர்ச்சியைத் தூண்டும் ஆபாசமான உடை அணிதல் அல்லது உடலில் ஏற்பட்ட காயங்களை மறைக்க அல்லது அழகில்லாமல் தோன்ற அடுக்கடுக்காக உடையணிதல். * வயதிற்கு பொருத்தமற்ற பாலுறவு பற்றிய அறிவு, நடவடிக்கை அல்லது பேச்சு. * வகுப்புப்பாடம் அல்லது ஓவியப் பயிற்சியில் தன் பாலியல் அறிவை வெளிப்படுத்துதல். * தன்னைவிட வயதில் சிறிய அல்லது வலிமை குறைந்த குழந்தைகளிடம் பாலியல் கொடுமை இழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல். * வழக்கத்திற்கு மாறாக வரைமுறையின்றி எல்லோரிடமும் நெருக்கமாக பழகுதல். * சரியான காரணமின்றி வீட்டைவிட்டு ஓடிப்போவது. * குடி, போதை மருந்துப்பழக்கம் ஏற்படுவது, உடலுறுப்புகளைச் சிதைத்துக் கொள்ளுதல், சட்டத்தை மீறுதல், தற்கொலை முயற்சி செய்தல் போன்ற தனக்குத் தீமை பயக்கும் செயல்களில் ஈடுபடுதல். * சம்பந்தப்பட்ட குற்றவாளி நெருக்கமானவர் என்றாலும், அவரிடம் இருந்து குழந்தைக்கு விடுதலையும், பாதுகாப்பும் அளிப்பது பெற்றோரின் கடமை. உறவுகளை விட, நட்பை விட, எல்லாவற்றையும் விட உங்களுக்கு உங்கள் குழந்தை முக்கியம். |
வெள்ளி, 7 அக்டோபர், 2011
பாலியல் கொடுமையிலிருந்து சிறுமிகளை கவனியுங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக