திங்கள், 10 அக்டோபர், 2011

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா?



மாதவிடாய் என்பது பெண்களிலே சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வு.இதன் போது கருப்பையின் உட்பகுதி பிரிந்து பெண்ணுறுப்பு வழியே வெளியேறும்.இந்த மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் நிறையப் பேரின் மனதில் இருக்கலாம். இதுபற்றி பல மூட நம்பிக்கைகளும் நம்மிடையே இருக்கின்றன.

உண்மையில் மாதவிடாயின் போது உடலுறவு கொள்வது ஒரு தகாத செயலா?
இல்லை
.
உண்மையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் பல நன்மைகள் ஏற்படலாம். குறிப்பாக மாதவிடாய் காலத்திலேயே ஒரு பெண்ணுக்கு வயிற்று நோ , மன உளைச்சல் போன்றவை சாதாரணமாக ஏற்படலாம். இதுபற்றி மாதவிடாய் காலத்து வலிகள் என்ற இடுகையில் பதிவிட்டிருந்தேன்.இவ்வாறான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபட்டால் இந்தப் பிரச்சினைகள் குறையலாம்.அதாவது மாதவிடாய் நேரத்து அசௌகரியங்கள் உடலுறவில் ஈடுபடும் போது குறையலாம்.

மேலும் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபடும் போது மற்றைய நேரங்களை விட பெண்ணுக்கு அதிகம் திருப்தி ,கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.காரணம் மாதவிடாய் நேரத்தில் அவளது உறுப்புக்கள் அனைத்தும் ஹார்மோன்களால் மாற்றமடைந்து காணப்பட்டு உறவின் மகிழ்ச்சியைக் கூட்டலாம்.
மேலும் நம் சமூகத்தில் உள்ள பிழையான நம்பிக்கை போல இந்த காலத்தில் உறவில் ஈடுபடுவதால் ஆணுக்கோ அல்லது பெண்ணின் கருப்பைக்கோ எந்தவிதமான பாதிப்பும்ஏற்படுவதில்லை.

மற்றும் இந்தக் காலத்தில் உறவில் ஈடுபட்டால் கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவு. ஆனாலும் மிகவும் அரிதாக இந்தக் காலத்திலும் கருத்தரித்தல் நடைபெறலாம். ஆகவே குழந்தை பிறப்பைத் தவிர்க்க விரும்புபவர்கள் நிச்சயமாக கருத்தடை முறைகளை பாவிக்கவேண்டும்.

மாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடுவதால் எந்த மாதிரியான தீங்குகள் ஏற்படலாம்?

மாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் தொற்றுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.அதாவது ஆனிலோ அல்லது பெண்ணிலோ எயிட்ஸ்(Aids) ,சிபிலிஸ்(SYPILLIS) , ஈரழ் அலர்ச்சி B(hEPATITIS B) போன்ற நோய்கள் இருந்தால் இது மற்றவருக்குத் தொர்ருவதகான சந்தர்ப்பம் அதிகமாகலாம்.

மேலும் கொண்டம் பாவிப்பது இந்த நோய்களின் தொற்றைக் குறைப்பதால் இந்த நேரத்தில் தவறாமல் கொண்டம் பாவிப்பது உகந்தது.
அதானால் உங்களுக்கு நம்பிக்கைக்கு உரியவரோடு மட்டும் உறவு வைத்துக் கொண்டால் மாதவிடாய் காலத்திலும் உறவு வைத்துக் கொள்ளலாம். சிலபேருக்கு மற்றைய நாட்களை விட இதன்போது அதிக சந்தோசம் கிடைக்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக