வியாழன், 31 மே, 2012

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் மற்றும் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகளை தெரிந்து கொள்ளவும்.


தவிர்க்க வேண்டியவை:

. சர்க்கரை, தேன், வெல்லம், குளுக்கோஸ், எலக்ட்ரால் சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் முதலிய இனிப்பு வகைகளையும் பேரீச்சை, காய்ந்த திராட்சை, போன்ற உலர்ந்த பழங்களையும் தவிர்க்கவும்.

. கேழ்வரகு, கம்பு, கோதுமை, பார்லி, அரிசி முதலியவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட கஞ்சி, களி மற்றும் கூழ் வகைகள்.

. மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், சப்போட்டா, சீதாப்பழம், திராட்சை.

. பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள் அறவே கூடாது.

. தேங்காய், வேர்க்கடலை, பாதாம், முந்திரி, பிஸ்தா, முதலிய பருப்பு வகைகள்.

. அசைவ உணவு வகையில் ஈரல், ஆட்டுக்கால் பாயா, மூளை, கொழுப்பு முதலியன.

. பீர் குடிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும், மதுபான வகைகளை உட்கொள்வது உடல் நலத்திற்குக் கெடுதல் உண்டாக்கும்.

. நெய், டால்டா, வெண்ணெய், பாம் எண்ணெய், கடலை எண்ணெய் முதலியவைகளைத் தவிர்க்கவும்.

. ஹார்லிக்ஸ், போன்விட்டா, காம்ப்ளான், வீவா, மால்டோவா முதலிய பானங்கள்.

தவிர்க்க வேண்டிய காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள்

உருளைக்கிழங்கு, கருணை, சேனை, சேப்பங்கிழங்கு, வாழைக்காய், பலாக்கொட்டை, பீட்ரூட், டபுள் பீன்ஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ஆல்வள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு.

சேர்க்க வேண்டிய காய்கறி வகைகள்:

பீன்ஸ், கோஸ், தக்காளி, முள்ளங்கி, முருங்கைக்காய், புடலங்காய், கோவக்கா, பாகற்காய், பூசணிக்காய், சௌ சௌ, வெள்ளரிக்காய், காலிபிளவர், வாழைத்தண்டு, வெண்டைக்காய், காராமணி நூக்கல், சுரைக்காய், டர்னிப், அவரைக்காய் பீர்க்கங்காய், வெங்காயம், பூண்டு முதலியன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக