வியாழன், 11 ஏப்ரல், 2013

உதட்டு வறட்சியை போக்க வேண்டுமா?




பருவக்காலம் மாறும் போது, உதடுகளில் பிரச்சனை ஆரம்பிக்கும். இத்தகைய
பிரச்சனையை தடுக்க நாம் சரியாகவும், முறையாகவும் உதடுகளை பராமரித்து வர வேண்டும். மேலும் சிலர்உதடுகளுக்கு அதிகமான அளவில் லிப்ஸ்டிக்கை போடுவார்கள்.

அவ்வாறு அதிகப்படியான லிப்ஸ்டிக் உதடுகளில் இருந்தால், அதில் உள்ள கெமிக்கல் உதடுகளில் இயற்கையான மென்மைத்தன்மையை இழக்கச் செய்து, பொலிவிழக்கச் செய்யும்உதடுகள் வறட்சியடையாமல், மென்மையோடும், பொலிவோடும் காணப்படுவதற்கு, ஒருசில இயற்கை முறைகளைப் பின்பற்றி வந்தால், சரி செய்துவிடலாம்.

உதடு வறட்சியடையும் போது உதட்டில் தேங்காய் எண்ணெயை வைத்தால், உடனே வறட்சியானது போய்விடும். ஏனெனில் தேங்காய் எண்ணெயில் உள்ள ஃபேட்டி ஆசிட் வறட்சியை நீக்கி, உதட்டை எண்ணெய் பசையுடன் வைக்கும்.

தக்காளியை நறுக்கி, அதனை வறட்சியடைந்த உதட்டில் தடவினால், வறட்சி
நீங்கிவிடும். வேண்டுமெனில் தக்காளியில் தேனை தடவியும் உதட்டில் மசாஜ் செய்யலாம்.

வறட்சியான மற்றும் பொலிவிழந்த உதட்டிற்கு எலுமிச்சை சிறந்ததாக இருக்கும்ஏனெனில் பொதுவாக எலுமிச்சை இறந்த செல்களை சருமத்தில் இருந்து வெளியேற்றுவதில் சிறந்தது. எனவே இதனை உதட்டில் தடவினால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கிஉதடு பொலிவாகும். மேலும் இந்த முறையில் சிறிது தேனையும் சேர்த்து செய்து, உதடு வறட்சியடையாமல் இருக்கும்.

உடலில் நீர் வறட்சி இருந்தாலும், உதடுகளில் வறட்சி ஏற்படும். எனவே அதிகமான அளவில் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இதனால் வறட்சி நீங்குவதோடு, உடலும் நன்கு பொலிவோடு இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக