இன்றைய உலகில் கற்றுக்
கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை
இணைய இணைப்பும், இணையத் தேடலும்
தான்.இதில்
அபாயம் தரும்
இன்னொரு பக்கமும்
உள்ளது. முற்றிலும் கட்டற்ற இணையம்
சிறுவர்களுக்கு அபாய கரமானது. பாலியல் தளங்களும், வன்முறையை போதிக்கும் தளங்களும்
இணையத்தில் நிறைந்து கிடக்கின்றன. இவற்றைப்
பார்க்காதே என்று ஒரு
காவலாளி போல
சிறுவர்களை எந்நேரமும் கட்டுப்படுத்துவது இயலாது.
இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க
K9 Web Protection <http://www1.9webprotection.com/> என்னும் புரோகிராம் நமக்கு உதவுகிறது.
இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம், வீடுகளில் பயன்படுத்தும்
கம்ப்யூட்டர்களில், இணையத்தில் பெற்றோர் கட்டுப்பாடு விதிக்க உதவுகிறது.
உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில்
உள்ள இணையத்தை
உங்கள் கட்டுப்பாட்டிலேயே, நீங்கள் அருகில் இல்லாத
சூழ்நிலையிலும், வைத்திருக்க உதவுகிறது. உங்கள் குழந்தைகளை இணையம் தரும்
தீமைகளிலிருந்து பாதுகாக்க உதவிடும் இதன் சிறப்பம்சங்களாவன:
அனைத்து தேடல் சாதனங்களிலும்,
SafeSearch என்ற ஒன்றை இயக்கி வைக்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் இணையத்
தொடர்பினை ஏற்படுத்த
இயலாமல் செட்
செய்திடலாம். "எப்போதும் அனுமதி' மற்றும்
"எப்போதும் தடை செய்திடு' என இருவகைகளாக
இணைய தளங்களைப் பிரித்து அமைக்கலாம்.
பெற்றோர் அமைத்திடும் பாஸ்வேர்ட்,
மற்ற பாஸ்வேர்ட்களையும்
மீறி இருக்கும் வகையில் அமைக்கலாம். கம்ப்யூட்டர் தொழில் நுட்பம்
சற்று அதிகம்
தெரிந்து பயன்படுத்துபவர்கள்
கூட, மீட்டெடுக்க முடியாத தடைகளை
உருவாக்கலாம். தடை செய்யப்பட்ட தளங்களைப்
பார்த்தால், அது குறித்த அறிக்கை தரும்படி அமைத்திடலாம்.
விண்டோஸ் மட்டுமின்றி, மேக்
கம்ப்யூட்டர்களில் இயங்கும் வகை
யிலும் இது தரப்படுகிறது.K9 Web
Protection என்ற இந்த புரோகிராம், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ்
எக்ஸ்பி, மேக்
ஓ.எஸ்.
எக்ஸ் 10.4.7 மற்றும் அதற்கும் மேற்பட்ட சிஸ்டங்களில்
இயங்குகிறது.
இதனை டவுண்லோட் செய்து
இன்ஸ்டால் செய்திட
முயற்சிக்கையில் லைசன்ஸ் கீ தரும்படி இந்த புரோகிராம் கேட்கும்.
லைசன்ஸ் கீயினை
இலவசமாக, http://www1.k9webprotection. com/ என்ற முகவரியில் உள்ள இணைய
தளத்தில் பெற்றுக் கொண்டு பயன்படுத்தலாம்.
இதே இணைய பாதுகாப்பு
ஐ-போன்,
ஐ-பாட்
டச் மற்றும்
ஐ-பேட்
ஆகிய சாதனங்களில் பயன்படுத்தும் வகை களிலும்
கிடைக்கிறது. இவற்றிற்கான அப்ளிகேஷன் ஸ்டோர்களில் k9 என டைப் செய்து
தேடிப் பார்த்து
டவுண்லோட் செய்து
இன்ஸ்டால் செய்திடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக