செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

சில்லி பரோட்டா


தேவையான பொருட்கள் : 
  •   மைதா – 1 கப் (200 கிராம்),
  •   பெரிய வெங்காயம் – 1,
  •   குட மிளகாய் – 1,
  •   மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி,
  •   சோயா சாஸ் – 1 தேக்கரண்டி,
  •   தக்காளி சாஸ் – 3 தேக்கரண்டி,
  •   சிவப்பு கலர் கேசர் பவுடர் – 1/2 தேக்கரண்டி,
  •   இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி,
  •   எண்ணெய் – 2 மேசைக்கரண்டி,
  •   சர்க்கரை – 1 தேக்கரண்டி,
  •  உப்பு – தேவையான அளவு.

  
செய்முறை : 

 * வெங்காயம், குட மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி உதிர்த்து வைக்கவும்.

* மைதாவை சிறிது உப்பு, ஒரு தேக் கரண்டி எண்ணெய் சேர்த்து, சப்பாத் திக்கு பிசைவது போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* ரொம்ப மெலிதாகவோ, மொத்த மாகவோ இல்லாமல் சப்பாத் திகளாக தே ய்த்து, நான்காக மடித்து தேய்த்து வைக்கவும்.

* தோசைக்கல்லை காய வைத்து, சப் பாத்திகளை சிவக்காமல், இருபுறமும் வெள்ளையாக இருப்பது போல் சுட்டு எடுக்கவும்.

* சுட்ட சப்பாத்திகளை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், குட மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* வதக்கும் போதே மிளகாய் தூள், சிவப்பு கலர் கேசரி பவுடர், சோயா சாஸ், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து வதக்கவும்.

* நன்கு வதங்கியதும், நறுக்கிய சப்பாத்தி துண்டுகளை சேர்த்து, ஒரு கை தண்ணீர் தெளித்து, நன்கு கிளறி இறக்கவும்.

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!

 

நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம்.

1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும்.

2. மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா?
 
 
3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.
 
 
4. ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்!
 

5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.

6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.
 
 
7. பெண்களென்றால் வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. வித விதமாக நாம் உண்பதைப்போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். உணவு வகைகளை ருசிக்கும் அதேநேரம் உணவக பழக்கங்கள், எப்படிப் பறிமாறுகிறார்கள் என்ற விஷயமெல்லாம் தெரிந்துகொள்ளட்டும்.
 
 
8. நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.
 
 
9. நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் அறியட்டும்.
 
 
10. உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நிங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்.
 
 
11. புத்தகம், கவிதை, நல்ல நாவல்கள் ஆகியவற்றை மகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.
 
 
12. உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.
 
 
13. இன்றைய உலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் எதிர் பார்க்க முடியாது. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது, வண்டி டயரை மாற்றுவது, போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக கொடுங்கள்.

14. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்! மறக்காமல் மகளின் நல்வாழ்வுக்காக  பிரார்த்தியுங்கள்

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

கணவன் மனைவி ஆசை குறைகிறது




கணவன், மனைவிக்கு இடையே படுக்கை அறையில் காதல் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்குள் நிகழும் செக்ஸ் உறவில் நேசமும், மனம் லயிக்கும் நெருக்கமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இருவருக்குமே இருக்கும் மனநெருக்கடியும், பிரச்சினைகளும், சோர்வும் படுக்கை அறையை பெயரளவுக்கு உடல்கள் மட்டும் இணையும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. கணவன்-மனைவி படுக்கை அறை உறவு ஏதோ ஒரு சடங்கு, சம்பிரதாயம் போல் ஆகிவிட்டது. இந்த நிலையை சமூகம் உணர்ந்து விழித்துக்கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் எல்லையில்லாமல் போய்விடும்.

நகரத்தில் வாழும் 44% திருமணமான ஆண்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம் குறைந்து %கொண்டே இருக்கிறது. இதனால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகுகிறது. மேற்கண்டவர்களில் 29 % பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேளையிலே மிகவும் சோர்ந்துபோகிறார்கள். வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக்கொள்ளாவிட்டால் மனைவி மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுகிறார்கள். அப்படி ஒரு எண்ணம் அவர்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்கள்.

இந்த மாதிரியான எண்ணத்துடனே அவர்கள் படுக்கையை பகிர்ந்து கொள்வதால் அவர்களையே அவர்கள் ஏமாற்றிக்கொள்வதோடு, தங்கள் மனைவிகளின் உணர்வு களையும் மழுங்கடிக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் போய்விடுகிறது. இப்படி திருப்தியில்லாமல் உறவு வைத்துக்கொள்வதாலும், அதிக நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்வதாலும் காலப்போக்கில் அந்த கணவன், மனைவி இருவருக்குமே உறவில் எந்த சுகமும் இல்லாமல் போய்விடும். முடிவில் ஆசையே குறைந்துபோய் `திருப்திதராத இந்த உறவு நமக்குள் தேவையா?'-என்ற ரீதியில் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். அதன் விளைவுகளால் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படுகிறது. மட்டுமின்றி குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது''.

நேரமின்மை:
கணவன், மனைவி உறவுச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக இருப்பது நேரமின்மைதான். இரண்டு பேரும் வேலை பார்க்கும் குடும்பங்களில் இதுவே பெரிய வில்லன். மனைவி அலுவலக வேலையை முடித்துக்கொண்டு வேகவேகமாக வீட்டிற்கு வருவார். வந்த வேகத்திலே சமையல் அறைக்குள் அவர் நுழையவேண்டும். பிரிஜ்ஜில் ஏற்கனவே வாங்கி வைத்த மீனோ, இறைச்சியோ இருக்கும். அதை எடுத்து சமையல் செய்யவேண்டும். மறுநாள் காலை உணவுக்கு என்ன தயாரிப்பதென்று முடிவெடுக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்தல், பாத்திரம் தேய்த்தல் என்று அவள் சுழல்கிறாள். அதோடு நின்று விடுவதில்லை. குழந்தை படித்துக்கொண்டிருக்கும். அதன் சந்தேகத்தை தீர்த்துவைக்கவேண்டும்.

இந்த நிலையில் கணவர் வீடு திரும்புவார். அவர் எப்போது தூங்கலாம் என்ற நிலையிலே வருகிறார். கணவன், மனைவி இருவர் நேரமும் வேலை, அலுவலகம், குழந்தை, டெலிவிஷன் நிகழ்ச்சி, உறவினர்கள் வட்டம், வீட்டு வேலைகள் போன்ற அனைத்துக்கும் ஒதுக்கப்பட்டுவிடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது. அன்றன்றைய வேலை முடிந்து இருவரும் படுக்கைக்கு செல்லும் போது சோர்ந்து போய், எப்போது தூங்கலாம் என்ற நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். கணவனும், மனைவியும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கவோ, அவர்கள் விரும்பிய பொழுதுபோக்குகளில் ஈடுபடவோ, அவர்கள் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கவோ நேரமில்லாமல் போய்விடுகிறது. அதிக சோர்வு, களைப்பு, மறுநாள் பணி பற்றிய சிந்தனை போன்றவைகளுடன் அவர்கள் படுக்கைக்குச் செல்லுவதால் படுத்ததும் தூங்கிவிடுகிறார்கள். அதை மீறி அவர்கள் உறவு கொள்ள விரும்பினால், அது முழுமையான மன ஈடுபாட்டோடு அமையாமல் ஏதோ அவசர கோலத்து சடங்கு போல் ஆகிவிடுகிறது. இதில் குறிப்பிடவேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. கணவர், மனைவியிடம் அன்பு செலுத்தாமல் இருந்தாலோ, அவருடைய அன்றாட செயல்பாடுகள் பிடிக்காமல் இருந்தாலோ அவளுக்கு பிறப்பு உறுப்பு இறுக்க நிலைத்தோன்றிவிடும். அதனால் உறவு, வலி நிறைந்த அவஸ்தையாக மாறி, உடலுறவில் நிரந்தர வெறுப்பை உருவாக்கிவிடும்.

பலகீனநிலை:
வேலையில் ஏற்படும் மனநெருக்கடியும், பொருளாதார சிக்கலும் ஆண்க ளுக்கு சோர்வு மனநிலையை அதிகம் ஏற்படுத்துகிறது. அந்த சோர்வு நிலை, ஆண்க ளுக்கு செக்ஸ் பலகீனத்தை உருவாக்கும். இந்த பலகீனத்தை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால், அது செக்சில் வெறுப்பு நிலையை உருவாக்கும். அதனால் மனச் சோர்வில் இருந்து ஆண்கள் விடுபடவேண்டும். அவர்களுக்கு செக்ஸ் பலகீனங்கள் இருந்தால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இப்போது எல்லாவிதமான செக்ஸ் பலகீனங்களுக்கும் சிகிச்சைகள் உள்ளன.

உடற்கூறு அறிவின்மை:

ஆண்களும், பெண்களும் இப்போது எவ்வளவோ படித்தவர்களாகவும், பொது அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தாலும் உடற்கூறு பற்றிய அறிவில் ஏதும் அறியாதவர்களைப் போல்தான் இருக்கிறார்கள். ஆணின் உடற்கூறு பற்றி பெண்ணும், பெண்ணின் உடற்கூறு பற்றி ஆணும் சரியாக அறிந்திருப்பதில்லை. இப்போது பெரும்பாலனவர்களுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

பெண்களில் பலர் இப்போது வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் புடவையைத்தவிர இதர ஆடைகளையே அணிகிறார்கள். அப்போது உள்ளாடை அணிகி றார்கள். அவர்கள் முழுநேரமும் பேன்டீஸ் அணிவது நல்லதல்ல. ஏன்என்றால் கோடைகாலத்தில் நன்றாக பெண்களுக்கு வியர்க்கும். அப்போது மலத்துவாரப்பகுதியில் தொற்றுக்கிருமிகள் இருக்கும். அவை வியர்வையுடன் சேர்ந்து தண்ணீர் தன்மையுடன் பிறப்பு உறுப்பு பகுதியில் பிரவேசிக்கும். அங்கு தொற்றுக்கிருமிகள் தாக்குதல் உருவாகி விடும். அந்த தாக்குதலுக்கு உடனடியாக முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், உறவின் போது கணவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பெண்கள் 24 மணிநேரமும் பேன்டீஸ் அணியும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளக்கூடாது.

ஆண்களும் இறுகிய உள்ளாடை அணியக்கூடாது. விரைப்பகுதி எப்போதும் உடலை ஒட்டிய நிலையில் இருக்கக்கூடாது. இறுக்கமான உள்ளாடை அதற்கு மாறான நிலையை உருவாக்கிவிடுகிறது. விரைப்பகுதியின் தட்பவெப்பநிலை உடல் தட்பவெப்பநிலையை விட ஒரு டிகிரி குறைவாக இருக்கும். உள்ளாடை அணிந்திருக்கும் போது உடலோடு விரைப்பை ஒட்டி உடலின் தட்பவெப்ப நிலைக்கு மாறிவிடுகிறது. அதனால் உயிரணுவின் உயிர்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது.

இப்போது வாழ்க்கை சூழல், வாழும் முறை, உடை கலாசாரம், உணவுக் கலாசாரம், போட்டி மனப்பான்மை, மனநெருக்கடி போன்ற அனைத்தும் கணவன்- மனைவி நேசத்திற்கும், படுக்கை அறை உறவுக்கும், திருப்தியான தாம்பத்ய வாழ்க்கைக்கும் எதிராக இருக்கிறது. அதை எல்லாம் உணர்ந்து கணவனும், மனைவியும் நடந்து பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மார்பகங்கள் அழகாக

Breast cancer

பெண்மையின் இலக்கணமான இதில்தான் எத்தனை பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சனைகள். பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அழகு சிகிச்சையில் தீர்வுகள் வந்துவிட்டன இன்று. மார்பக அழகைப் பராமரிக்க சில யோசனைகள்...



இயற்கை முறை ஆலோசனைகள் :

மார்பகங்களை மசாஜ் செய்வதற்கென்று இப்போது ஆயுர்வேத மருந்துக் கடைகளில் மசாஜ் எண்ணெய்கள் கிடைக்கின்றன. அதை வாங்கி மார்பகங்களை மசாஜ் செய்யலாம். அதே மாதிரி வெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் போன்றவற்றில் ஒன்றைக் கொண்டு மார்பகங்களைக் கீழிருந்து மேலாக, வட்ட வடிவத்தில் மசாஜ் செய்தால் மார்பகங்கள் பெருக்கும்.

மார்பகங்கள் பெருக்க வேண்டுமானால் உணவில் கொழுப்பு அதிகமுள்ள வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாதாம், முந்திரி, அக்ரூட், பிஸ்தா, பால் போன்றவற்றை நிறைய சாப்பிட வேண்டும். உடல் பெருத்தால் மார்பகங்களும் பெருக்கும்.

வாரம் ஒரு முறை தலை முதல் பாதம் வரை எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து, ஊறிக் குளிக்க வேண்டும். மார்பகங்களுக்கும் மசாஜ் செய்ய வேண்டும்.

மாதுளம் பழம் நிறைய சாப்பிடலாம்.

மாதுளம் பழத் தோலைக் காய வைத்து இடித்து, அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் குழைத்து மார்கங்களின் மேல் தடவி, ஊறிக் குளிக்கலாம். தொடர்ந்து செய்து வர சிறுத்த, தளர்ந்து போன மார்பகங்கள் ஓரளவுக்குப் பெரிதாகும்.

கர்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட மாதத்திலிருந்தே வைட்டமின் ஈ எண்ணெயை மார்பகங்களில் தடவி வரலாம். இதனால் பிரசவத்திற்குப் பிறகு மார்பகங்களில் ஏற்படும் தழும்புகளும், வெள்ளைக் கோடுகளும் தவிர்க்கப்படும்.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

டீன் ஏஜ் பெண்ணின் அம்மாவா நீங்க?

Photograph of Mother and Daughter hugging
 
டீன் ஏஜ் பெண்ணின் அம்மாவா நீங்கள்? உங்களுக்கும் உங்கள் பெண்ணுக்கும் இடையேயான உறவு எப்படி? அந்த காலத்து அம்மா போல இன்றும் இருக்கிறீர்களா? காலத்திற்கு ஏற்ப உங்களை கொஞ்சம் மாத்திக் கோங்க, தப்பில்லை. உங்களுக்கும், உங்க பெண்ணுக்கும் உள்ள உறவு மேம்பட, சில "டிப்ஸ்'.

* மனம் விட்டு பேசுங்கள்: உங்கள் பெண்ணுடன் இடைவெளி விட்டு பழகாதீர்கள். அப்படியிருந் தால், அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது. எந்த விஷயமாக இருந்தாலும், மனம் விட்டு பேசுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக, உங்கள் மகள் பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், அன்றைய நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கேளுங்கள்.


இதனால், உங்களுக்கு பொழுது போவது மட்டுமின்றி, அவர்கள் வெளியிடங்களில் செயல்படும் விதங்களையும் அறிந்து கொள்ளலாம்.

* நல்ல நண்பராக இருங்கள்: நீங்கள் தாயாக மட்டும் இல்லாமல், நண்பராகவும் இருக்க முயலுங்கள். தாயிடம் கூற முடியாத சில விஷயங்களை கூட, நண்பர்களிடம் சொல்வர். நீங்களே அந்த நண்பராகவும் இருக்கும் போது, உங்கள் பெண்ணை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

* உடல் தூய்மை பற்றி சொல்லுங்கள்: வயது வந்த பெண் எப்படி உடலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து சொல்லிக் கொடுங்கள். குறிப்பாக, மாதவிடாய் காலங்களில் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையும், அதன் அவசியத்தையும் எடுத்து கூறுங்கள்.

* பெண்ணின் விருப்பமறிந்து செயல்படுங்கள்: ஷாப்பிங் போறீங்களா? நீங்கள் மட்டும் கடைக்கு போய், கையில் கிடைத்ததை வாங்கி வந்து உங்க மகளிடம் கொடுக்காதீர்கள். உடை, அணிகலன், கைப்பை என, தினசரி புதுப்புது மாடல்கள் வந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் வாங்கி வருவது உங்கள் பெண்ணுக்கு பிடிக்காமல் போகலாம். இதை தவிர்க்க, உங்கள் பெண்ணையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அவளது விருப்பமறிந்து வாங்கிக் கொடுக்கலாம்.

* நண்பர்களை அறிமுகப்படுத்தும் போது: பள்ளி முதல் கல்லூரி வரை பெரும்பாலும், இரு பாலர் நிறுவனங்களாக தான் உள்ளன. டியூஷன் செல்லும் இடத்திலும் ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடும். எனவே, உங்கள் பெண், தன்னுடன் படித்த, அல்லது படிக்கும் ஆண் நண்பர்களை அறிமுகப்படுத்தும் போதும், அவர்களிடம் பேசும் போதும் கோபப்படாதீர்கள். மாறாக, இந்த காலகட்டத்தை நினைவில் கொண்டு, அவர்கள் ஆண் நண்பர்களுடன் பழகும் எல்லை எதுவரை இருக்கலாம் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.

* நண்பர்களை தெரிந்து கொள்ளுங்கள்: நண்பர்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், வாழ்க் கையே சீரழிந்து விடும் என்பதை உங்கள் பெண்ணுக்கு உணர்த் துங்கள். உங்கள் பெண்ணின் நண்பர்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள். உங்கள் பெண்ணின் பிறந்த நாள், தீபாவளி, போன்ற விசேஷ தினங்களில் அவர்களை வீட்டிற்கு அழையுங்கள். இதன் மூலம், உங்கள் பெண், சரியான நபர்களுடன் தான் சேர்கிறாளா என்பதும் தெரியவரும்.

விண்டோஸ் 7 ல் அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகள்.

விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு ஒலிபெருக்கியில் ( Speaker ) எவ்வித பிரச்சினையுமில்லை. லேப்டாப் ஆக இருந்தால் எதாவது ஒரு பாட்டைப் போடும் போது இயல்பாக லேப்டாப்பிலேயே உள்ளிணைந்த ஸ்பீக்கரில் பாடும். மேலும் ஹெட்போன் (Headphones) இணைத்தால் அதை உணர்ந்து ஹெட்போனில் பாடத்துவங்கும். ஆனால் விண்டோஸ் 7 ல் இந்த மாதிரி மாற்றி மாற்றி பயன்படுத்தும் போது சில அமைப்புகளை கையாள வேண்டியிருக்கிறது.

 
 
தோழியின் விண்டோஸ் 7 நிறுவப்பட்ட லேப்டாப்பில் சவுண்டே வரவில்லை என்று புலம்பினாள். நானும் ஒலியின் அளவை சோதித்தேன். நிறைவாகத்தான் இருந்தது. சரி என்று ஒரு படத்தை ஓடவிட்டுப்பார்த்தால் எந்த சவுண்டும் வரவில்லை. கணிணியை அணைத்து விட்டு மீண்டும் ஒருமுறை பார்க்கலாம் என்றால் அதுவும் சரியாகவில்லை. அப்போது தான் volume பட்டனை கிளிக் செய்த போது Playback devices என்ற விசயத்தைக் கவனித்தேன்.

விண்டோஸ் 7 ல் இயல்பான ஒலிபெருக்கி ( Default speaker ) என்ற அமைப்பு உள்ளது. அதாவது நாம் லேப்டாப்பில் இணைக்கப்படும் ஒலிபெருக்கிகள், ஹெட்போன்கள் போன்றவற்றை Playback devices பகுதியில் சேர்த்துக்கொள்கிறது. நீங்கள் தற்போதைக்கு ஹெட்போனில் பாட்டு கேட்க விரும்புகிறிர்கள். அதனால் ஹெட்போன் இயல்பான ஒலிபெருக்கியாக (Default speaker) கணிப்பொறியில் அமைந்து விடுகிறது.

அடுத்தமுறை ஹெட்போன் இல்லாமல் பாட்டு கேட்க விரும்பி பாட்டைப்போட்டால் நிச்சயமாக பாடாது. ஏனெனில் இன்னமும் ஹெட்போன் தான் உங்களது இயல்பான ஒலிபெருக்கியாக இருக்கும். அதனால் என்ன செய்ய வேண்டும்?
 
 

Volume பட்டன் கணினியில் டாஸ்க்பாரில் வலது ஒரத்தில் இருக்கும். அதை வலது கிளிக் செய்து Playback devices என்பதை தேர்வு செய்யவும். அங்கே இணைக்கப்பட்ட கருவிகளின் பட்டியல் தெரியும். எது இயல்பான ஒலிபெருக்கியோ அதில் பச்சைக் குறியீடு இருக்கும்.
 
 

மாற்ற வேண்டுமெனில் எதை மாற்றுகிறிர்களோ அதில் வலது கிளிக் செய்து Set Default Device என்பதை கிளிக் செய்தால் போதும்.

சனி, 27 ஆகஸ்ட், 2011

உங்கள் கணனியை வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான வழி

எதுவித மென்பொருட்களையும் நிறுவாமல் உங்கள் கணனியை முன்னிருந்ததை விட வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான முறையினை இங்கு உங்களிடன் பகிர்கின்றேன்.


முதலில் 'Start' பொத்தானை கிளிக் செய்து 'Run' என்பதை தெரிவு செய்யுங்கள்.

பின் அதில் regedit என டைப் செய்து 'Enter' பொத்தானை அழுத்துங்கள்.

பிறகு தோன்றும் Registry Editor வின்டோவில் HKEY_CURRENT_USER ன் கீழ் உள்ள control panel யை தெரிவுசெய்து அதில் desktop என்பதை கிளிக் செய்யுங்கள்.

அதன் வலது பக்கத்தில் காட்டப்பட்டுள்ள registry setting இல் 'MenuShowDdelay' என்பதன் மேல் right click செய்து modify என்பதை தெரிவு செய்யுங்கள்.




அதில் default value data வாக காட்டப்பட்டுள்ள '400' ஐ '000' வாக மாற்றிய பின் OK பொத்தானை அழுத்துங்கள்.



பின்னர் உங்கள் கணனியை Restart செய்யுங்கள்.

உமது கணனி முன் இருந்ததை விட வேகமாக செயற்படுவதை உங்களால் உணர கூடியதாக இருக்கும்.
இம்முறையின் மூலம் கணனியை வேகமாக தொடக்கவும் (start) முடியும்.