புதன், 30 ஜனவரி, 2013

செக்ஸ் உறவின்போது ஆண்கள் மட்டுமே ‘ஆரம்பிப்பது’ ஏன்?




பெரும்பாலான ஆண்களுக்கு இந்தக் கவலை இருக்கும். ‘எல்லாத்தையும்’ நாமதான் ஆரம்பிக்கனும், நம்மாளு எதையுமே செய்வதில்லை என்ற கவலைதான் அது.

செக்ஸ் உறவின்போது பெரும்பா லான ஆண்களின் மனதில் தோன்றும் சலிப்புதான் இது. நான்தான் தொடங்க வேண்டும். அவங்க பாட்டுக்கு கம் முன்னு இருப்பாங்க, என்னிக்காச்சும் அவங்க ஆரம்பிச்சு வச்சுருக்காங்களா என்ற சலிப்பும் பல ஆண்களிடம் உள்ளது.

ஏன் பெண்கள் செக்ஸ் விஷயத்தில் ‘லீட்’ பண்ண மாட்டார்கள், அவரே ஆரம்பிக்கட்டும், முன்னேறட்டும் என்று காத்திருக்கிறார்கள்?. இதற்கு நிபுணர்கள் தரும் பதில் இது…

பெரும்பாலான ஆண்கள் என்றில்லை, கிட்டத்தட்ட அத்தனை ஆண்களுக்குமே இந்தக் கேள்வி மனதில் எழுவதற்கு வாய்ப்புள்ளது. காரணம், பெரும்பாலும் ஆண்கள்தான் செக்ஸ் உறவின்போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைக்கிறார்கள். அதன் பிறகுதான் பெண்கள் டேக் ஓவர் செய்து கொள் கிறார்கள்.

சில சமயங்களில், நமது மனைவிக்கு செக்ஸ் பிடிக்கவில்லையா, இப்படி அமைதியாக இருக் கிறாரே என்ற சந்தேகம் கூட சிலருக்கு எழலாம். பலருக்கு ஒரு வேளை நமது ‘மூவ்’கள் சரியாக இல்லையோ என்ற சந்தேகம் கூட எழலாம்.

முன் விளையாட்டுக்களில் மனைவிக்கு ஆர்வம் இருக்கிறதா, இல்லையா என்பது கூட பலருக் குப் புரிபடுவதில்லை. இப்படிப்பட்ட சிந்தனைக ளால் பல ஆண்கள் குழம்பிப் போவது நிஜம் தான். ஆனால் இதெல்லாம் இந்த அளவுக்கு குழம்பிப் போக வேண்டிய பெரிய விஷயமில்லை. சாதாரணமானவைதான்.
பெண்கள் எதையும் ஆரம்பிப்பதில் தயக் கம் காட்ட சில காரணங்கள் உள்ளன.

நாமே தொடங்கினால் நம்மவருக்கு ஏதாவது ஈகோ பிரச்சினை வந்து விடுமோ என்று பல பெண்கள் முதல் அடி எடுத்து வைக்க தயக்கம் காட்டுகிறார்களாம்.
நாமே முந்திக் கொண்டு போனால் நம் மைப் பற்றித் தவறாக நினைத்து விடுவா ரா என்ற சந்தேகமும் பல பெண்களுக்கு எழுகிறதாம். நாம்தான் சரியான ‘சிக்னல்’ கொடுத்தாச்சே, புரிந்து கொண்டு களம் இறங்க வேண்டியதுதானே என்று பலர் நினைக்கிறார்களாம்.

நான் சரியான முறையில்தான், உறவுக்கு ரெடி என்பதை மறைமுகமாக உணர்த்துகிறேன். அவர்தான் சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்று பல பெண்கள் புகார் பட்டியலுடன் உட் கார்ந்திருக்கிறார்கள்.
பட்டவர்த்தனமாக எப்படி பளிச்சென சொ ல்வது என்ற தயக்கம் ஏற்படுவதாக பல பெண்கள் சொல்கிறார்கள்.

ஆரம்பிப்பதில் அவர் தான் கில்லாடி, எக் ஸ்பர்ட், அதனால்தான் நான் மெளனம் காக்கிறேன் என்பதும் பல பெண்கள் சொல்லும் வாதமாக இரு க்கிறது. எனவே காதல் மற்றும் உறவில் ஈகோ என்பது பார்க்கப்படக்கூடாத ஒன் று. யார் ஆரம்பித்தால் என்ன, முடியும்போது அது சிறப்பாக, சந்தோ ஷமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.


அந்த நான்கு சுவருக்குள் தனிமையில் இருக்கும்போது இருவருக்கும் இடையே எந்தவிதமான தயக்கமோ, வெட்கமோ, கெளரவம் பார்ப்பதோ இருக்கக் கூடாது. ஆடைகளுடன் சேர்த்து அவற் றையும் தூரப் போட்டு விட வேண்டும். அப்போ துதான் உறவு இனிக்கும், சிறக்கும். மேலும், பார்ட்னரிடமிருந்து வரும் ‘சிக்னலை’ சரி யாக புரிந்து கொள்ள வேண்டியது இருவரின் கட மையுமாகும். 

சிக்னல் வந்து விட்டால், அடுத்தவர் வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான். அதை விட்டு விட்டு, இல்லை, இல்லை வாயைத் திறந்து கேட்டால்தான் ஆச்சு என்று வறட்டுப் பிடி வாதமாக இருக்கக் கூடாது. ஒரு வேளை கணவர் பிசியாக இருந்து கொண்டிருப்பார். அப்போது பார் த்து மனைவி அருகே வந்து கன்னத் தில் முத்தமிடலாம், கொஞ்சலாம். அதல்லாம்தான் உறவுக்கு அழைப்ப தற்கான ‘சிக்னல்’கள். எனவே பிசியா க இருந்தாலும் கூட அந்த சமிக்ஞை களை சரியாக புரிந்து கொண்டு செய ல்பட்டால் பிரச்சினை இல்லை.

மனைவி ஆரம்பிக்கட்டும், அவரே எல்லாவற்றையும் தொடங்கட்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை தாராளமாக அவரிடம் வெளிப் படையாக சொல்லி விடலாம். அடுத்த முறை உங்களை அசத்த அவரும் தயாராக இருப்பார்.

மொத்தத்தில் அன்பைக் காட்டவும், அருகாமையை இனிமையாக்கவும் வெளிப்படையான மனதும், செயல்பாடுகளும் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டால், ‘ஸ்டார்ட்டிங் டிரபுள்’ இருக்கவே இருக்காது.


கவனச் சிதறல் இருந்தால் உச்சம் அடைய முடியாது!! (மருத்துவ ஆய்வின் முடிவு)




செக்ஸ் உறவின்போது கவனச் சிதறல் ஏற்படும் பெண்களுக்கு ஆர்கசம்
எனப்படும் உச்ச நிலையை அடை வதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

ஆர்கசம் எனப்படும் உச்சநிலை யை அடைவதில் பெண்களுக்கு பல்வேறு தடங்கல்கள், சிரமங்கள் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். இது மன நிலை சம்பந்தப் பட்டதுதான் என்பதால் இதை சரி செய்வது சிரம மான காரியம் இல் லை.அப்படியும் முடியாவிட்டால் மருத்துவ, தெரபி முறைகள் கைவசம் நிறையவே உள்ளன.

தற்போது ஆர்கசம் அடைவதில் ஏற்படும் சிக்கலுக்கு என்ன காரணம் என்பதை ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். கவனச் சித றல்தான் ஆர்கசத்தை அடைவ தில் சிக்கல் ஏற்பட முக்கியக் கா ரணம் என்கிறது இந்த ஆய்வு.
மேலும் செக்ஸ் உறவு குறித்த எதிர்மறைச் சிந்தனைகளைக் கொண்டிரு க்கும்போதும் சம்ப ந்தப்பட்ட பெண்களுக்கு ஆர்கசம் ஏற்படுவதில்லையாம்.
‘என்னத்த’ என்ற எண்ணத்துடன் செக்ஸ் உறவில் நுழைந்தால் நிச்சயம் ஆர்கசத்தை அடைவது சிரமம் என்கிறது இந்த ஆய்வு. இப்படிப்பட்ட எதிர்மறை சிந்தனைகள், கவனச் சிதறல்கள் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். கவனச் சிதறல் இல் லாமல், மனம் ஒருமுகப்பட்டு, செ க்ஸ் உணர்வை அனுபவித்து, லயி த்து ஈடுபடும் பெண்களுக்கு ஆர்க சம் மிக எளிதாக ஏற்படுகிறதாம்.




நான்கு பெண்களில் ஒருவருக்கு மாதம் ஒருமுறையாவது ஆர்கசத் தை எட்டுவதில் சிரமம் ஏற்படுகிற தாம். செக்ஸில் நாட்டமின்மை பிரச்சி னைக்கு அடுத்து பெண்கள் அதி கம் சந்திக்கும் 2வது செக்ஸ் சம்பந்தப்பட்ட பிரச்சினை இந்த ஆர்கச த்தை அடைவதில் சந்திக்கும் சிக்கல் என் கிறார்கள் செக்ஸ் மருத்துவ நிபுணர்கள்.

இந்த ஆய்வுக்காக செக்ஸ் உறவில் தீவிரமாக ஈடுபட்டுள்ள 18 முதல் 59 வயது வரையிலான 191 பெண்களை உட்படுத்தினர். செக்ஸின்போது அவர் கள் ஆர்கசத்தை அடைந்தது குறித்து ம், அப்போது எந்த சிந்தனை யில் இருந்தனர் என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.

செக்ஸ் மோசமான ஒன்று என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும், செக்ஸ் உறவின்போது ஆர்கசம் அவ்வளவு சீக்கிரம் வராதாம். இப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறு வகையான செக்ஸ் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

திங்கள், 28 ஜனவரி, 2013

தினசரி தாம்பத்ய உறவு – ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்



வாரம் இருமுறையோ, மாதம் இருமுறையோ உறவில் ஈடு பட்டால் தான் ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்கள். ஆனால் தின சரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலி யா ஆய்வாளர்கள் சமீபத்தில் நிரூ பித்துள்ளனர்.

புதிதாக திருமணமான தம்பதிகளு க்கு செக்ஸ் பற்றிய ஆர்வமும், அதை அறிந்து கொள்ளவேண்டும் என்ற வேகமும் அதிகம் இருக்கு ம். இதனால் தினசரி உறவில் ஈடுபடுவார்கள். குழந்தை பிறந்த பின்பு இருவருக்கும் இடையே கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டு தாம்பத்ய உறவு கூட சம்பிரதாயமாக மாறிவிடும்.

இவ்ளோதானா என்ற அலுப்பும், சலிப்பும்கூட தம்பதியரிடையே செக் ஸ்க்கு இடைவெளியை ஏற்படுத் திவிடும். சில நேரங்களில் தம்ப திகளிடையே சண்டை, நோய், களைப்பு உள்ளிட்ட காரணங்க ளால் அந்த அளவும் நீண்ட போ க வாய்ப்பு உள்ளது. இந்த கார ணங்களை எல்லாம் இல்லாவி ட்டாலும் சில தம்பதிகள் வேண் டுமென்றே செக்ஸ் உறவை தள்ளி போடுகின்றனர்.

இன்றைக்கு தினமும் செக்ஸ் உறவு கொள்ளும் தம்பதிகளை பார்ப்ப து மிகவும் அரிதாகிவிட்டது. பொதுவாக வாரத்தில் 2 அல்லது 3 மு றை மட்டுமே செக்ஸ் உறவு வைத்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ள னர்.

இந்த இடைவெளிக்கு தம்பதிகள் சொல் லும் முக்கிய காரணம் தின மும் செக்ஸ் உறவு கொண்டால், உடல்நலம் குன்றி விடும், ஆண்மைக் குறைந்துவிடும் என விளக்கம் அளிக்கின்றனர். ஆனால் இது ஒரு தவறான கருத்து என ஆஸ்திரேலி யா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்

இதுதொடர்பாக ஆய்வுமேற்கொண்ட ஆஸ்திரேலியா டாக்டர் டே விட் கிரீனிங், இடைவெளி விட்டு செக்ஸ் உறவு வைத்தால், ஆண் மை அதிகரிக்கும் என தம்பதியர் நினைக்கின்றனர். ஆனால் அது தவ றான கருத்து. தினமும் உறவு கொண் டால் ஆண்களின் உடலில் உள்ள செக்ஸ் உறுப்புகள் சிறப்பாக செயல் பட்டு, வளமான விந்து உருவாக உத வுகிறது என்று கூறியுள்ளார்.


மனம் அமைதியாகும்

தகுந்த உணவும், மகிழ்ச்சியளிக்கும் தாம்பத்ய உறவும் மனிதனின் உடலை மட்டுமின்றி மனதையும் அமைதிப்படுத்தி வாழ்நாளை அதி கரிக்கிறது. வளமான விந்துகள் உருவாகி, கருத்தரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது என்று தம்பதிக ளுக்கு இன்பகரமான செய்தியை கூறி யுள்ளார்.


வாழ்நாள் அதிகரிக்கும்

தினமும் செக்ஸ் உறவு கொள்வத ன் மூலம் மனித விந்து பைகளில் உள்ள விந்துகளின் வாழ்நாளும் அதிகரிக் கிறது. உடலில் ரத்த ஒட் டம் அதிகரி க்கவும் உதவுகிறது. தினமும் உறவுகொண்டு விந்துக ளை வெளியே ற்றுவதால், புதிய விந்து செல்கள் உருவாக்கத்திற்கு வழிவகை ஏற் படுகிறது.


டி.என்.ஏக்கள் சேதமடையும்

ஆண்கள் உறவு கொள்ளாமல் நீண்ட நாள்கள் இருப்பதால், அவர்களின் விந் துகளில் உள்ள டிஎன்ஏ-க்கள் அதிகளவி ல் சேதமடைகின்றன. இதனால் நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்ளும் ஆண்களின் விந்துகள் மூலம் கருத்தரி க்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.


வளமான விந்தாக மாறும்

வளமில்லாத விந்துகளை கொண்ட ஆண்களை தினமும் உறவு கொள்ள செய்து ஆராய்ச்சி செய்ததில், 30 சதவீத ம் ஆண்களின் விந்து செல்கள் வளமான தாக மாறியது தெரியவந்தது, என்று மருத்து வர் கூறினார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த இனப்பெருக்க மருத்து வ இயல் மாநாட்டில் இந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது.



வியாழன், 17 ஜனவரி, 2013

செக்ஸே பிரச்சினையாக மாறினால்…



செக்ஸில் பிரச்சினை வரலாம், ஆனால் செக்ஸே பிரச்சினையாக மாறினால்… நினைக்கவே பயமாக இருக்கிறதல்லவா… ஆனால் நிதர்சனம் அதுவாகத்தான் இருக்கிறது. நிறையப் பேருக்கு குறி்ப்பாக பெண்களுக்கு செக்ஸே பெரும் பிரச்சினையாக மாறி மனதையும் உடலையும் வாட்டி வதைத்து வருவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.

அதிலும், அதீதமான செக்ஸ் உணர்வுகள் பொங்கிப் பிரவகிக்கும் பெண்களுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்சினைகளை சொல்லில் அடக்க முடியாது. எப்படி தணிப்பது, தவிப்பை எப்படித் தவிர்ப்பது, எதை ஊற்றி காமத்தீயை தணிப்பது என்பதில் அவர்கள் பெரிதும் தடுமாறிப் போய் விடுகிறார்கள், பல நேரங்களில் தடம் மாறியும் போய் விடுகிறார்கள். ஆனால் பல பெண்களுக்கு செக்ஸ் மீது பெரும் விரக்தி ஏற்பட்டு விடுகிறது.

நாட்டம் குறைந்து போய் விடுகிறது. விருப்பம் இல்லாமல் கடனுக்கு கணவரிடம் படுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையைத் தவிர்த்து, அதை சரி செய்து எப்படி தொடர்ந்து உறவில் ஈடுபடுவது என்பது குறித்த பார்வை இது…

விருப்பமின்மை – எந்தப் பெண்ணுக்குமே செக்ஸ் மீது ஆர்வம் இல்லாமல் போகவே போகாது. நிச்சயம் இருக்கத்தான் செய்யும், ஆனால் ஆண்களைப் போல வெளியில் காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். உள்ளுக்குள்ளேயே வைத்திருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நாம்தான் அடையாளம் கண்டு அனுசரணையுடன் அணுக வேண்டும்.இரவு விளையாட்டுக்கு பகலிலிருந்தே இவர்களைத் தயார்படுத்த வேண்டும். சின்னச் சின்ன செக்ஸ் விளையாட்டுக்கள், முத்தம், முன் விளையாட்டுக்கள் என பகலிலிலிருந்தே ரொமான்ஸைத் தொடங்கினால் இரவில் இவர்கள் சிறப்பான முறையில் தயராகி விடுவார்களாம்.

அழகா இல்லையே – சில பெண்களுக்கு தாங்கள் அழகாக இல்லை, உடல் அழகு சரியில்லை என்ற விரக்தி இருக்கலாம். இவர்களுக்கும் கூட செக்ஸில் ஆர்வம் குறைவாக இருக்குமாம். ஆனால் இப்படிப்பட்ட பெண்கள் மீது அவர்களின் ஆண் துணைகள் அதீத ஆர்வத்தையும், அன்பையும் பொழிந்தால் நிச்சயம் இவர்களுக்கும் செக்ஸ் ஆர்வம் சிறப்பாக தூண்டப்படுமாம். உன்னாலும் என்னை ஆள முடியும், நீயும் செக்ஸியாகத்தான் இருக்கிறாய் என்று அவர்களுக்கு தைரியம் சொல்லி ஊக்கப்படுத்தினாலே போதும் அவர்கள் நிச்சயம் செக்ஸில் சிறந்து விளங்குவார்கள் என்கிறார்கள் டாக்டர்கள்.

ஆர்கஸத்தில் ஆர்வமின்மை – ஆண்களுக்குத்தான் இந்த எழுச்சி, உச்சம், கிளைமேக்ஸ் எல்லாம் கவலை தரும் விஷயம். பெண்களைப் பொறுத்தவரை வெறும் முன் விளையாட்டுடன் நிறுத்தினால் கூட திருப்திப்பட்டுக் கொள்வார்கள். பெரும்பாலான பெண்கள் படுக்கையில் பொய்யான ஆர்கஸத்தைத்தான் வெளிப்படுத்துகிறார்கள் என்று கூறுகிறது ஒரு ஆய்வு. இப்படிப்பட்ட நிலையில் ஆண்கள் மிகவும் பொறுமையாக, நேர்த்தியாக பெண்களைக் கையாண்டால் நிச்சயம் அவர்கள் உரிய நேரத்தில் ஆர்கஸத்தை எட்டுவது நிச்சயம்.

நான் என்ன செக்ஸ் மெஷினா – சில ஆண்கள் எப்போது பார்த்தாலும் செக்ஸ் நினைப்பிலேயே இருப்பார்கள். தங்களது துணையை தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். இது பெண்களுக்கு அலுத்துப் போய் விடும். நான் என்ன செக்ஸ் மெஷினா என்று விரக்திக்குப் போய் செக்ஸையே வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படிப்பட்டவர்களிடம் மனித நேயத்துடன் பொறுப்புடன், பொறுமையாக நடந்து கொண்டு மனதைக் காயப்படுத்தாமல் மனதையும், காமத்தையும் வெல்ல முயற்சிக்க வேண்டும்.



ரொம்ப வலிக்குதே – இது பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைதான். உறுப்பு வறட்சி, இறுக்கம் காரணமாக உறவின்போது வலி ஏற்படுவது சகஜம்தான். இதனாலும் பலருக்கு செக்ஸ் பிடிக்காமல் போய் விடுகிறதாம். இதுபோன்ற நேரங்களில் உரிய உபாயங்களைக் கையாள வேண்டும். மேலும் முரட்டுத்தனமான உறவை தவிர்க்க வேண்டும். பூவைப் போல பெண்களின் உறுப்பை பாவித்து அதை அணுகி இன்பத்திற்குள் நுழைய வேண்டும்.

இப்படி பெண்கள் சந்திக்கும் செக்ஸ் பிரச்சினைகள் நிறையவே உள்ளன. ஆனால் பிரச்சினை என்று வந்தால் கூடவே தீர்வும் இருக்கத்தானே செய்யும். அதை நாம் சரியாக உணர்ந்து, புரிந்து தெளிந்து அணுகினால் எல்லாம் சரியாகி, இன்பமும் கைகூடி வரும்.

புதன், 16 ஜனவரி, 2013

உறவுக்கு முந்தைய விளையாட்டுக்கள்




தாம்பத்ய உறவு என்பது வெறும் பத்து நிமிடத்தில் முடிந்துவிடுவது அல்ல. அது உற்சாகமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமைய கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும். உறவுக்கு முந்தைய விளையாட்டுக்கள் உங்கள் துணையை உற்சாகப்படுத்தும். அது இறுகலான மனதைக்கூட இளகச்செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். உங்களின் தாம்பத்ய வாழ்க்கையில் உற்சாகத்தை ஏற்படுத்தும் முன் விளையாட்டுக்கள் குறித்து அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.

உற்சாகப்படுத்துங்கள்
வீட்டில் எந்த தொந்தரவும் இன்றி நீங்கள் இருவர் மட்டும் தனித்திருக்கும் நேரத்தில் வரவேற்பரையில் ஜாலியாக இருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படும். உங்கள் படுக்கை அறையில் அலங்கரிக்கபட்ட படுக்கை இருந்தாலும் ஹாலில் சின்னதாய் இருக்கும் ஷோபாவில் நெருக்கமாய் அமர்ந்து கிளர்ச்சியூட்டும் வகையில் பேசலாம். ஒரே தட்டில் விருப்பமான உணவை போட்டு ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக்கொள்ளலாம். அப்புறம் பாருங்கள் இந்த அன்பான முன்விளையாட்டு படுக்கை அறையில் சூப்பராக எதிரொலிக்கும்.

சின்ன சின்ன விளையாட்டு
கோடையில் செக்ஸ் ஆர்வம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அதிகமான முன் விளையாட்டுக்களை உங்கள் துணை விரும்பவும் கூடும் எனவே சின்ன சின்ன விளையாட்டுக்களை விளையாடுங்கள். கண்களை கட்டிக்கொண்டு தொட்டு விளையாடலாம். உற்சாகம் தரும் பழங்களை கையில் வைத்து அதை தூக்கிப்போட்டு பிடித்து விளையாடுவது, ஊட்டிவிடுவது போன்ற உற்சாகமான விளையாட்டுக்கள் உங்கள் துணையை குஷிப்படுத்தும்.

குளுமையான பாத்டப்
கோடையில் செக்ஸ் உற்சாகமாக இருக்க குளுமையான பாத்டப் உபயோகப்படும். குளிர குளிர நீரை நிரப்பி அதில் இறங்கி உட்கார்ந்து கொண்டு இருவரும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருங்களேன். அந்த மாதிரியான மூட் இல்லாதவர்களையும் காதல் மூடுக்கு கொண்டுவரும். அப்புறம் உங்கள் துணை உங்களிடம் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து நீங்களே அசந்து போவீர்கள்.

நாவினால் வருடுங்கள்
பசு தனது கன்றுக்குட்டியை நாவினால் வருடி தனது அன்பை வெளிப்படுத்தும். அதேபோல் உங்கள் அன்பை வெளிப்படுத்த உங்கள் நாக்கை நீங்கள் உபயோகிக்கலாம். உங்கள் துணையின் உணர்ச்சியை தூண்டும் பகுதிகளில் உங்கள் நாக்கினால் வருடலாம். இது அதிக கிளர்ச்சியை ஏற்படுத்தும். காது நுனி, கண்ணம், பின்னங்கழுத்து, உதடு என நாவினால் மென்மையாக வருடுங்கள். அப்புறம் அன்பு உங்களுக்கு இரண்டு மடங்காக திரும்ப வரும்.

கவிதை பேசும் கைகள்
உங்கள் காதல் எண்ணத்தை விரல்களால் உணர்த்துங்கள். உங்கள் விரல்களின் மூலம் உங்கள் துணையை மென்மையாக தொடுவதன் மூலம் உங்கள் துணையானவர் கிளர்ச்சியடையக்கூடும். இதுபோன்ற முன் விளையாட்டுக்கள் உங்கள் துணையை உற்சாகமூட்டுவதோடு செக்ஸ் வாழ்க்கையில் நீடித்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

செவ்வாய், 15 ஜனவரி, 2013

பருக்களின் வடுக்களை போக்க முடியுமா?…




பருக்கள் வருவதை விட, அவை விட்டுச் செல்லும் வடுக்கள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பருக்கள் வராமல் தடுக்கவும், பரு வடுவைப் போக்கவும் வழி உள்ளதா? இந்த கேள்விக்கு நமது அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதா கூறும் யோசனை:

பருக்கள் வந்ததால் முகத்தில் இருக்கும் ஓரிரு வடுக்களை நிச்சயமாக போக்க முடியும். முதலில் வடுக்கள் ஏன் ஏற்படுகின்றன என்றால், முகப்பரு வந்ததும் அதனை நகத்தால் கீறுகிறார்கள்.

நகம் பட்டாலே வடு விழுந்துவிடும். அதனை உடனடியாக போக்க முடியாது. சிறிது காலம் பிடிக்கும். சிலருக்கு பருக்கள் வந்து முகத்தில் சிறிய பள்ளங்களே ஏற்பட்டிருக்கும்.

முக‌ப்பரு வ‌ந்தா‌ல் அதனை ‌நீ‌க்குவத‌ற்கு மு‌ன்பு, ஐ‌ஸ் க‌ட்டிகளா‌ல் ஒ‌த்தட‌ம் கொடு‌த்த ‌பிறகு அ‌தி‌ல் கை வை‌ப்பது ந‌ல்லது. இதனா‌ல் பரு‌க்க‌ளி‌ன் வ‌ழியாக ர‌த்த‌ம் வெ‌ளியாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌கிறது. பொதுவாக பரு‌க்க‌ள் வ‌ந்தா‌ல் அது மு‌ற்‌றிய ‌நிலை‌யி‌ல் அ‌தி‌ல் இரு‌க்கு‌ம் வெ‌ள்ளையான ‌திரவ‌த்தை எடு‌த்து ‌விடுவது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். அ‌திலு‌ம் ம‌ற்ற இட‌ங்க‌ளி‌ல் அவை படாம‌ல் எடு‌க்க வே‌ண்டியது‌ம் அவ‌சியமா‌கிறது.

மேலு‌ம், பருவை ‌நீ‌க்குவது ‌எ‌ன்பதை கவனமாக செ‌ய்ய வே‌ண்டு‌ம். பருவை கைகளா‌ல் ‌கி‌ள்‌ளி எடு‌த்து‌விடு‌கிறோ‌ம். அ‌தி‌ல் இரு‌ந்து வெ‌ள்ளையான ‌திரவ‌ம் வெ‌ளியான ‌பிறகு ர‌த்த‌ம் வரு‌ம். அதனை துடை‌த்து‌ப் போ‌ட்டு‌வி‌ட்டு அ‌ப்படியே ‌வி‌ட்டு‌விட‌க் கூடாது. அ‌ப்படி ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌ன் பரு‌க்க‌ள் பரவு‌கிறது.
பரு‌க்க‌ள் வ‌ந்தா‌ல் அதனை ‌நீ‌க்‌கியது‌ம் உடனடியாக அதனை சு‌த்த‌ப்படு‌த்‌தி‌வி‌ட்டு அ‌தி‌ல் ஏதாவது ஒரு பே‌ஸ் பே‌க்கை (‌க்‌ரீ‌ம்) போட வே‌ண்டு‌ம். அ‌ப்படி போடா‌வி‌ட்டா‌ல், பரு‌வி‌ல் ஏ‌ற்ப‌ட்ட துளை‌‌க்கு‌ள் தூசு, துக‌ள்க‌ள் போ‌ய் பெ‌ரிய ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌ம்.

முகப்பரு வந்தவர்கள் அதிலும், அதிகமாக முகப்பருவினால் பாதிக்கப்படுபவர்கள் தங்களது முகத்தை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். பருக்கள் வருபவர்கள் எந்த விதமான க்ரீம்களையும் பயன்படுத்தக் கூடாது. சிலரது முகத்தில் விரலைக் கூட வைக்க முடியாது. அந்த அளவிற்கு வலி எடுக்கும். அவர்கள் அழகுக் கலை நிபுணரிடம் செல்வதை விட, ஒரு தோல் மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது.
அழகுக் கலை நிபுணரால் எல்லாமே செய்ய முடியாது. எனவே, அவர்களுக்கு அடிப்படையில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை மருத்துவர் மூலம் அறிந்து கொண்டு அதற்கு முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பருவை ம‌‌ட்டு‌ம் ‌நீ‌க்‌கி‌வி‌ட்டா‌லு‌ம், உ‌ள்ளு‌க்கு‌ள் இரு‌ந்து ‌சீ‌‌ழ் போ‌ன்ற ஒ‌ன்று வ‌ந்து கொ‌ண்டே இரு‌க்கு‌ம். அதனை எ‌வ்வளவுதா‌ன் எடு‌க்க முடியு‌ம். ஒரு வேளை அது சரும‌த்‌தி‌ற்கு அடி‌யிலேயே த‌ங்‌கி‌வி‌ட்டாலு‌ம் ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌ம். அ‌திகமாக எடு‌த்தாலு‌ம் பரு இரு‌ந்த இட‌த்‌தி‌ல் வடு ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம். எனவே பருவை அழகு‌க் கலை ‌நிபுண‌ரிட‌ம் செ‌ன்று ‌நீ‌க்‌கி‌க் கொ‌ள்வதை ‌விட, அ‌திகமாக பரு இரு‌ப்பவ‌ர்க‌ள் ஒரு மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்வதுதா‌ன் ந‌ல்லது.

பரு‌க்க‌ளி‌னா‌ல் ஏ‌ற்ப‌ட்ட வடு ‌நி‌ச்சயமாக போகு‌ம். அத‌ற்கு ஒரு ‌நீ‌ண்ட ‌சி‌கி‌ச்சை உ‌ள்ளது. முத‌லி‌ல் பரு உ‌ள்ளவ‌ர்க‌ள் பேஷ‌ிய‌ல் செ‌ய்து கொ‌ள்ளவே‌க் கூடாது. ஏ‌ன் அ‌ப்படி‌க் கூறு‌கிறே‌ன் எ‌ன்றா‌ல், பரு வரு‌கிறது எ‌ன்றா‌ல் அவ‌ர்களது சரும‌த்‌தி‌ல் அ‌திக‌ப்படியான எ‌ண்ணெ‌ய் பசை உ‌ள்ளது. மேலு‌ம், பே‌‌ஷ‌ிய‌லி‌ன் போது பய‌ன்படு‌த்து‌ம் ‌க்‌ரீ‌ம்க‌ள் அனை‌த்‌திலு‌ம் அ‌திக‌ப்படியான எ‌ண்ணெ‌ய் பசைதா‌ன் இரு‌க்கு‌ம். எனவே அவரகளது சரும‌த்தை பேஷ‌ிய‌ல் மேலு‌ம் ‌சி‌க்கலா‌க்கு‌ம்.

முக‌த்‌தி‌ல் அ‌திகமான பரு‌க்க‌ள் இரு‌ப்பவ‌ர்க‌ள் அவ‌சியமாக பேஷ‌ிய‌ல் செ‌ய்தே ஆக வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌த்தா‌ல் முத‌லி‌ல் ஒரு மரு‌த்துவ‌ரிட‌ம் ஆலோசனை பெ‌ற்று‌வி‌ட்டு ‌பிறகு பேஷ‌ிய‌ல் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம்.

‌ப்‌ளீ‌ச் செ‌ய்யலா‌ம். ஏனெ‌னி‌ல் ‌ப்‌ளீ‌ச் செ‌ய்வதா‌ல் முக‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் எ‌ண்ணெ‌ய் த‌ன்மை ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌விடு‌ம். எனவே ‌ப்‌ளீ‌ச்‌சி‌ங் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம். தவ‌றி‌ல்லை.

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க! ஆண்மைக்கு ஆபத்து!



கவர்ச்சியாக உடை அணிந்த பெண்களை காண்பதாலும், அவர்களை நினைத்து கற்பனை உலகில் சஞ்சரிப்பதாலும் ஆண்களின் ஆண்மைக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களின் ஆண்மையை பறிக்கும் மொபைல்போன், லேப்டாப், மனஅழுத்தம், சூடு போன்றவற்றின் பட்டியலில் தற்போது கவர்ச்சி உடை கண்ணியர்களும் இடம் பெற்றுள்ளனர்.

ஆண்களின் ஆண்மை குறைபாட்டிற்கான காரணம் குறித்து அமெரிக்காவில் 30 ஆண்டுகாலம் ஆய்வு நடைபெற்றது. அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் கண்டறியப்பட்டது.

பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு கொண்டு செல்கிறதாம்.

உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

பணிபுரியும் இடங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் செக்ஸ் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது. முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.

நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் கூறியுள்ளார்.

பெண்களின் கவர்ச்சிகரமான நடத்தையினால் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கும் அதே வேளையில், ஆண்களும் கவர்ச்சி உடை அணிந்த கன்னியர்களை கண்டுகொள்ளாமல் இருந்தாலே ஆண்மையை பாதுகாத்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.