வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் . . . (தம்பதியர்களுக்காக)



உண்ண உணவும், சுவாசிக்க காற்றும் மனிதன் உயிர்வாழ அத்தியவசிய தே வையாக உள்ளது போல ஆண் பெண் இடையேயான உறவும் அவசியமான ஒன்றுதான் என்று கூறுகின்றனர் உளவியலாளர்கள். அன்பான தாம்பத்யம் ஆயுளை நீட்டிக்கச் செய்வதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வயதான பிறகும் முழுமையான தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதயகோளாறுகள், போன்ற நோய்கள் குணமடைவதாக ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற ஆய்வில் தெரிய வந்துள்ளது. மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் உற்சாகம் அதிகரித்து நோயின் தாக்கம் குறைவதாகவும் அந்த ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


வயதுக்கு விடை கொடுங்கள்
ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுணர்வு உணர்ச்சியில் வயது வேறுபாடு எதுவும் இல்லை. ஆரோக்கியக் குறைவு, நோய், மருந்து மாத்திரைகள், மது, புகையிலை, போதை, சிகரெட், எண்ணெய், கொழுப்பு, அதிக எடை ஆகியவை உடலுறவில் ஆர்வம் தோன்றாததற்கு காரணமாகும்.
மாதவிடாய் நின்றாலும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரக்கும்வ ரை 50, 60 வயது வரை யிலும் கூடப் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இருக்கும். அதனைப் போல, செக்ஸ் ஹார்மோன் டோஸ்டேரோன் சுரக்கும் 70, 80 வயதுவரை ஆண்களுக்கு உடலுறவில் இச்சையும், ஈடுபாடும் இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

மனநிறைவும் திருப்தியும்
உடல் உறவின் உச்சக்கட்டத்தின் போது எண்டோர்பின்கள் மூளைக்குச் செல்வதால் இவை சிறந்த வலி நிவாரணியாகவும், தூக்க ஊக்கியாகவும் செயல்படுகின்றன. மேலும், அந்தச்சமயத்தில் வெளிப்படும் ஒப்பியட்டுகள் என அழைக்கப்படும் தூக்கக் கலக்கம் கலந்த நிலையையும், உடலில் களைப்பையும் அதே சமயம் முழு மனநிறைவான உணர்வையும் தருகின்றன.
நிம்மதியற்ற மனிதனுக்குத் திருப்தியையும், உடலுக்கு நல்ல ஓய்வுடன் ஆழ்ந்த தூக்கத்தையும் அளிப்பது உடலுறவு ஒன்று தான். ஒரு திருப்தியான புணர்ச்சிக்குப் பிறகு உடலும் மனமும் தளர்ந்து ஓய்ந்து தானாகவே தூக்க நிலைக்குப் போய் விடுவதாக பிரிட்டனிலுள்ள இராயல் சொசைட்டி மருத்துவக்கழகம் கண்டறிந்துள்ளது.

நோய்கள் குணமடையும்
தாம்பத்ய உறவினால் ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்தினால் ஆஸ்துமா நோயுள்ளவர்களின் பிடிப்புகள் உடனே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகின்றன. அவ்வாறே உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களின் இரத்தக்குழாய் இறுக்கமும் தளர்த்தப்பட்டு விடுகிறது.
நரம்பு, தசைபிடிப்பு, முதுகுப் பிடிப்பு, வலி உள்ளவர்களுக்கும் உடலுறவு நல்ல பல னைத் தருகிறது என்று மருத் துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. டென்ஷன், மன இறுக்கம், கவலை, படபடப்பு இவைகளுக்கு உடலுறவு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. வயதான பிறகும் தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்கள் நீண்ட நாள்கள் உயிர் வாழ்கிறார்கள் என்று கூறுகிறது.
எனவே வயது எதுவாக இருந்தாலும் நிறைவான தாம்பத்யமும், உறவும் தொடர்ந்தால் மன நிம்மதிக்கும், உடல் நலனுக்கும் எந்தக் குறையும் இருக்காது என்பதில் சந்தேகமில்லை.

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

10 நிமிட உறவில் திருப்தியை எட்டலாம் – ஆய்வு



தாம்பத்ய உறவில் திருப்தி, மகிழ்ச்சி என அனைத்தையும் அனுபவிக்க, உணர நீண்ட நேரம் தேவையில்லை, வெறும் பத்து நிமிடமே போதுமானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. அநேகம் பேருக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம், சிலருக்கு அப்படியெல்லாம் இல்லை என்ற எதிர்ப்பு எழலாம். ஆனால் உண்மையில் பத்து நிமிட செக்ஸ் உறவில் போதுமான திருப்தியும், மகிழ்ச்சியையும் எட்ட முடியும் என்கிறது அந்த ஆய்வு.
செக்ஸ் பிரச்சினைகள் தொடர்பான அறிவுரை, சிகிச்சை முறைகளைக் கொடுக்கக் கூடிய செக்ஸ் தெரப்பி மற்றும் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த 50 பேர் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட சுவாரஸ்யமான சில விஷயங்கள்…

உறவுக்கு ஏற்ற கால அளவு

சிலருக்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும். நீண்ட உடலுறவைக் கொடுத்தால்தான் பார்ட்னருக்கு திருப்தி கிடைக்கும், மகிழ்ச்சி கிடைக்கும் என்று ஆண்களும், பெண்களும் எண்ணுவதால் பல அவுசகரியங்களே ஏற்படுகிறது. மேலும் அதுபோல நடப்பதும் இல்லை. இதனால் ஏமாற்றமும், விரக்தியும் ஏற்படுகிறது.

இரவு முழுவதும் உல்லாசமாக இருந்தால்தான் திருப்திகரமாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. உண்மையில் திருப்தியான உறவுக்கு 7 முதல் 13 நிமிடங்கள் அல்லது பத்து நிமிடங்கள் போதும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.


இருவருக்கும் ஏற்ற நிமிடங்கள்

ஒன்று முதல் 2 நிமிடம் வரையிலான உறவு என்பது மிக மிக குறுகியது. இதில் இருவருக்குமே திருப்தி கிடைக்காது. 3 முதல் 7 நிமிடம் வரை என்பது நார்மலானது. இதில் இருவருக்கும் முழு திருப்தி கிடைக்கும். 13 நிமிடங்கள் வரை நீடிப்பது என்பது மிகவும் நீளமானது. இதிலும் இருவருக்கும் திருப்தி இருக்கும், அதேசமயம், கூடவே சில அசவுகரியங்களையும் சந்திக்க நேரிடும். எனவே 7 முதல் 13 நிமிடங்கள் வரை என்பது இரு தரப்புக்கும் ஏற்ற, பொருத்தமான, சரியான கால அளவாகும். அதிலும் 10 நிமிடம் என்பது மிகவும் பர்பக்ட் ஆன கால அளவு.


முன் விளையாட்டுக்கள்

உறவுக்கான கால அளவு வெறும் பத்து நிமிடமே போதுமானது என்கிறது ஆய்வு அதேசமயம், உறவுக்கு முந்தைய விளையாடல்கள், சீண்டல்கள் போன்றவற்றுக்கு இவ்வளவு நேரம்தான் என்று கணக்கில்லை. அது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீடிக்கலாம். ஆனால் உச்சகட்ட உறவுக்கு பத்து நிமிட அவகாசம் என்பது சரியானது, பொருத்தமானது, போதுமானது என்கிறது ஆய்வு முடிவு.

இரவு நீண்டிருந்தாலும், நம் உறவுக்கு தேவை சில நிமிடங்கள் மட்டுமே. இதை புரிந்து கொண்டு உறவில் இறங்கினால் குழப்பங்கள், கவலைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உண்மையைப் புரிந்து கொண்டு எதார்த்தமாக உறவுக்குள் நுழைவதே மனதுக்கும், நமது உடலுக்கும், செக்ஸ் வாழ்க்கைக்கும் சிறந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள்


கர்ப்பிணிகள் ஓவனை பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும்

 
கர்ப்பிணிகள் மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் ஆகிய சாதனங்களுக்கு அருகில் நீண்ட நேரம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வர வாய்ப்பு அதிகம் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
 
அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளிடம் ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர். மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் உள்ளிட்ட மின்காந்த சக்தி(மைக்ரோவேவ்) அதிகம் உள்ள கருவிகளின் பயன்பாடு பற்றி 801 கர்ப்பிணிகளிடம் கருத்து கேட்டனர்.

பின்னர் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் மருத்துவ விவரங்களை தொடர்ந்து பதிவு செய்து வந்தனர். 13 ஆண்டுகள் கழித்து அந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான அறிகுறிகள் பற்றி ஆராய்ந்தனர்.

மின்காந்த கருவிகளை குறைவாக பயன்படுத்தியவர்களைவிட அதிக நேரம் பயன்படுத்திய கர்ப்பிணிகளின் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வாய்ப்பு 3 மடங்கு அதிகமாக இருந்தது தெரியவந்தது.

கர்ப்பிணிகள் மின்காந்த கருவிகளின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது அவசியம் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. அத்துடன் அவை இயங்கும் போது அருகில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதை தடுக்க முடியும் என ஆய்வுக் குழுவின் தலைவர் டிகுன் லி தெரிவித்துள்ளார்.

கோவையிலுள்ள மருத்துவப்பயன்கள் !

 
1. மூலிகையின் பெயர் :- கோவை.

2. தாவரப்பெயர் :- COCCINIA INDICA.

3. தாவரக் குடும்பம் :- CUCURBITACEAE.

4. பயன் தரும் பாகங்கள் :- இலை, காய் மற்றும் கிழங்கு.

5. வளரியல்பு :- கோவைக் கொடி நன்கு படர்ந்து வளரக் கூடிய கொடி இனத்தைச் சேர்ந்தது. இது சாதாரணமாக வேலிகளிலும், குத்துச்செடி, மரங்களிலும் படர்ந்து தமிழகமெங்கும் வளரக்கூடியது. இதன் இலைகள் ஐந்து கோணங்களையுடைய மடலான காம்புடையது. மலர்கள் வெள்ளையாகவும், நீண்ட முட்டை வடிவ வரியுள்ள காய்களையும், பழங்கள் செந்நிரமாக இருக்கும். பெண்களின் உதடுகளை இந்தப் பழத்திற்கு ஒப்பிடுவர் புலவர்கள். வேர் கிழங்காக வளரும்.

6. மருத்துவப்பயன்கள் :- கோவை சிறுநீர், வியர்வை ஆகியவற்றை மகுதிப்படுத்தும் குணமுடையது. வாந்தியை உண்டாக்கும் தன்மையுடையது. இரத்த சர்கரையை (Blood sugar) குணப்படுத்த வல்லது.

கோவையின் ஒரு பிடி இலையை 200 மி.லி. நீரில் சிதைத்துப் போட்டு 100 மி.லி. யாகக் காச்சிக் காலை மாலை குடித்து வர உடல் சூடு, கண்ணெரிச்சல், இருமல், நீரடைப்பு, சொறிசிரங்கு, புண் ஆகியவை போகும். இதன் இலைசாறு 30 மி.லி. காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர மருந்து வேகம் தணியும்.

கோவைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகி வரச் சொறி, சிரங்கு, படை, கரப்பான் ஆகியவை தீரும். கோவையின் பச்சைக் காய் இரண்டை தீனமும் சாப்பிட்டு வர மதுமேகத்தைக் தடுக்கலாம்.

கோவைக் கிழங்குச் சாறு 10 மி.லி. காலை மட்டும் குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா) இரைப்பு, கபரோகம், மார்புச்சளி, மதுமேகம், கண்டமாலை, வீக்கம் ஆகியவை தீரும்.

கோவைக்காயை துண்டு துண்டாக வெட்டி, வெய்யிலில் நன்கு காயவைத்துப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி வீதம் மூன்று வேளை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை நோய் குணமாகும். பச்சைக் காயை வாரம் இருமுறை பொறியல் செய்தும் சாப்பிடலாம்.

ரொமன்ஸ் ரகசியங்கள் !

 

திருமணமாகி இல்லற வாழ்க்கையில் இணைந்த தம்பதிகள் நான்கு சுவர்களை கொண்ட ஒரு இல்லத்தில் வசிக்கும் போது ஒரு சில விசயங்களை பின்பற்ற வேண்டும். நம் இல்லத்தின் ஒவ்வொரு அறையும் ஒரு கதை சொல்லும். சமையலறையில் தொடங்கி படுக்கை அறை வரை சங்கீதம் இசைக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்.

ரொமன்ஸ் ரகசியங்கள்

படுக்கை அறை என்பது தூங்கி ஓய்வெடுப்பதற்கு மட்டும் அல்ல.. மனதை ரிலாக்ஸ் செய்து மகிழ்வதற்கும் ஏற்ற அறை. ஆனால், அங்கும் சில சிரமங்கள், பிரச்னைகளை  சந்திக்க வேண்டியுள்ளது. தம்பதிகள் அவற்றை பெரிதுபடுத்தாமல் சமாளிக்க பழகி கொண்டால் ரொமன்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் குடும்ப நல நிபுணர்கள்.

மனம் விட்டுப் பேசுங்கள்

பார்ட்னருடன் மனம் விட்டுப் பேசினால், மென்மையாக எடுத்துச் சொன்னால் சிறிய அளவாக இருக்கும்போதே பிரச்னைகளை அகற்றிவிடலாம். படுக்கைஅறை போல வாழ்க்கையும் இன்பமாகும். ரொமான்ஸ் அதிகரிக்கும் . இல்லற இன்பத்துக்குப்பின் சிலருக்கு உடனடியாக தூக்கம் சொக்கும். பார்ட்னர்   சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க பிரியப்படலாம்.. எனவே சிறிது நேரம் தூக்கத்தை தியாகம் செய்து துணையுடன் பேசுங்கள். பெரும்பாலும் இதுபோன்ற சின்னப்
பிரச்னைதான் விஸ்வரூபமெடுத்து பிரிவு வரை கொண்டு செல்கிறது.

அந்நியருக்கு இடமில்லை

கணவன் மனைவியின் சில அந்தரங்கங்களை எவ்வளவு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் நண்பர்கள் உள்பட யாரிடமும் வெளியிடக்கூடாது. நம்பிக்கைக்குரியவர்கள், பெற்றோர் உதவியை நாட வேண்டும். பூசல்கள் மிகுந்தாலும் அந்நியரை மூக்கை நுழைக்க விடக்கூடாது. தம்பதிகள் தங்கள் வளர்ச்சியை மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. விரும்பிய மாற்றங்கள், வளர்ச்சி ஏற்படாததற்கு ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சுமத்தாதீர்கள்.

போட்டி தேவையில்லை

திருமணம் என்பது `நீயா நானா’ போட்டியல்ல. கணவன்- மனைவி ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு ஒருவரின் தேவையை நிறைவு செய்ய மற்றவர் துணைபுரிய வேண்டும். இருவர் இணைவதே சேர்க்கையால் கிடைக்கும் முழுமையை
அனுபவிக்கத்தான்.

இயந்திரத்தனமான உடலுறவு ஆபத்தானது. உங்கள் பலவித எதிர்பார்ப்புகளும் உடனே நிறைவேறும் என்று எண்ணக்கூடாது. மருத்துவரை அணுகுவது நல்ல பலன் தரும். அதைவிடுத்து தேவையற்ற ஆலோசனைகள் சிக்கலை உண்டாக்கும்.

சுய இன்பம் ஆபத்தா?

sex-10-05-11
நிறைய பேருக்கு இதில் பெரும் குழப்பமே இருக்கும். ஆனாலும் இது ஒன்றும் தலை போகும் பிரச்சினை அல்ல என்பதே டாக்டர்களின் கருத்து. காலத்தே பயிர் செய் என்பார்கள்.. இது விவசாயத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் கூட நிறையவே பொருந்தும். இளம் பிராயத்தில் குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் இந்த சுய இன்பப் பழக்கம் அத்தனை பேரையும் ஆட்டிப்படைத்திருக்கும். இதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. இதுகுறித்து வெட்கப்படவும் தேவையில்லை. அந்த வயதில் டீன் ஏஜினர் சந்திக்கும் பல முக்கியப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.

சிலருக்கு 12-15 வயதில் தொடங்கிய சுய இன்பத்தை விட முடியாமல் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வழக்கமும் உண்டு. இதனால் அவர்களுக்கு எதிர்கால செக்ஸ் வாழ்க்கை எப்படி ஆகுமோ என்ற கவலை ஏற்படுவது இயற்கை.

இதுகுறித்து டாக்டர்கள் சொல்வது என்ன...?

டீன் ஏஜ் வயதில் வரும் பிரச்சினைகளில் சுய இன்பமும் ஒன்று. அந்த வயதில் வரும் மிகச் சாதாரண பிரச்சினைதான் இது. அதிலிருந்து தப்பி விடுபவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பார்கள், செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், அதில் சிக்கியவர்கள் கதி அதோ கதிதான் என்ற எண்ணம் நிறைய பேருக்கு உள்ளது. இரண்டுமே தவறு.

சிறு வயது முதல் 25-30 வயது வரை சுய இன்பத்திற்கு அடிமையானவர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்கள் அனைவருமே செக்ஸ் வாழ்க்கையில் பின் தங்கினர் என்று கூற முடியாது. அது அவரவர் மனதைப் பொறுத்தது.

நமக்குள் ஏற்படும் செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வழிதான் இந்த சுய இன்பம். இயற்கையாகப் போக வேண்டிய உணர்வுகளை, செயற்கையாக நாம் வெளியேற்றுகிறோம், அவ்வளவுதான்.இதனால் நமது செக்ஸ் உணர்வுகளோ அல்லது செக்ஸ் உறவின்போதான செயல்பாடுகளையோ இது பாதிக்கும் என்று கூற முடியாது.

சிலருக்கு கவர்ச்சிகரமான பெண்களின் படங்களைப் பார்த்தால் உடனே செக்ஸ் உணர்வு அதிகரித்து சுய இன்பவம் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றும். அதை அடக்காமல் வெளியேற்றி விடுவது ஒரு வகையில் நல்ல விஷயம்தான்.

சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அதை விடுவது எளிதல்ல. ஏன், திருமணமான பிறகும் கூட சுய இன்பத்தைத் தொடருபவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

இதனால் செக்ஸ் வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுமோ என்ற பயம் மட்டும் நிச்சயம் தேவையில்லை. எதுவும் தலைக்கு மேல் போய் விடாது. உங்களது மனதை ஒருநிலைப்படுத்த முயற்சித்தால் நீங்கள் சுய இன்பத்திலிருந்து விடுபட முடியும். மனக் கட்டுப்பாட்டுக்கு நல்ல பயிற்சி எடுங்கள். சுய இன்பத்தை தடாலடியாக நிறுத்தி விட முயற்சிக்காதீர்கள். படிப்படியாக குறையுங்கள்.

அதுபோன்ற சமயத்தில், வேறு பக்கம் கவனத்தை திருப்ப முயற்சியுங்கள். அப்படியும் முடியவில்லை என்றால் செய்து விடுங்கள்.

நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல விஷயங்களை அறிய முயற்சிப்பது, தேடுதல் நோக்கத்தை வேறு பக்கம் திருப்புவது, யோகாசனம், ஆரோக்கியமான செயல்பாடுகளில் கவனத்தைத் திருப்புதல் என சுய இன்பத்திலிருந்து மீள நிறைய வழிகள் உள்ளன.

தேவைப்பட்டால் ஒரு மன நல ஆலோசகரை அணுகி ஆலோசனை கேட்கலாம். அவர்கள் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்கள்.

சிலருக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் இருக்கலாம். அதாவது கவர்ச்சிகரமான படத்தைப் பார்த்தாலோ அல்லது அதுபோன்றவற்றை கேட்டாலோ, மனதில் நினைத்தாலோ கூட அவர்களுக்கு விந்தணு வெளியேறி விடும். அப்படிப்பட்டவர்கள் டாக்டரைக் கன்சல்ட் செய்யலாம்.

ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கூட இந்த சுய இன்பச் சிக்கல் ஏற்படுவது சகஜமானதுதான். இரு பாலினரும் இதை உரிய முறையில் அணுகினால் எந்தத் தொந்தரவும், மனப்புழுக்கமும் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

மொத்தத்தில் இது பெரிய பிரச்சினையே அல்ல, மாறாக உங்களது நம்பிக்கைக்கு விடப்படும் சவால், அவ்வளவுதான். அதை நீங்கள் வென்றால் சுய இன்பத்திற்கு வேலையே இல்லை.

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்



ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும் முன்பே கருவிலேயே. ஆண், பெண் தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் ஜீன்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டுவிடுகின்றன. அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்து சமாச்சாரங்களுமே பதியப்படுகின்றன.உதாரணமாக, ஒரு பெண் குழந்தையின் கருவில், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி வேகமாகத் தான் இருக்கும்., அல்லது மெல்லத்தான் இருக்கும், அல்லது நிதானமாகத்தான் இருக்கும் என பதியப்பட்டுவிடும். அந்தக் குழந்தை வளர்ந்து 14 வயதில் பருவம் அடையும் என்பதெல்லாம் கூட கருவிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும்.அந்தக் கட்டளையை மீறாமல், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண்டே வரும்., அதை யார் நினைத்தாலும் மாற்றி அமைக்க முடியாது.

இயற்கையை வென்றது யார் தான்...?அந்த வகையில் பார்த்தால், உடல் செயலியல் எனப்படும் பிசியாலஜியிலும் இதே போல ஏகப்பட்ட நுணுக்கமான விஷயங்கள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பிட்ட காலம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணுக்கு, விந்துப்பை வளர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தயும் தொடங்கிவிடுகிறது.அதே போல, பெண்ணுக்கு, பருவம் அடைந்தது முதல், கருப்பையும் வளர்ச்சி அடைந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கருமுட்டைகளும் உற்பத்தியாகின்றன. இதில் சில விதிமுறைகள் உண்டு. அவற்றை மீறினால் இயற்கைக்குப் புறம்பாக நடக்கும் போது ஏற்படும் விளைவுகள் உண்டாகும்

உதாரணமாக, ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண்ட நாட்களாக அடக்கி வைத்துக்கொண்டே இருந்தால், என்னவாகும்? அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின்விளைவுகளாக சில உடல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பிக்கும்.தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்படுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்பதோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்து போகும். இது உயிரியல் அறிஞர், டார்வின் கண்டுபிடித்த உண்மை.அந்த வகையில் பார்த்தால், ஆண், பெண்களின் செக்ஸ் உறுப்புகளுக்கும் இது மெத்தப்பொருந்தும். எனவே செக்ஸ் உறுப்புகளுக்கும் சரியான, மிதமான வேலை கொடுக்க வேண்டியது முக்கியம்.

அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரிதியான, மன ரிதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.சில ஆண், பெண்கள், அடிக்கடி உடலுறவு வைத்துக்கொண்டால், உடல் நலம் கெட்டுப்போகும் என்ற அதீத பயத்தின் காரணமாக, நெடு நாட்களாக உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பார்கள்.இப்படிப்பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்தமான பலவீனங்கள்., மனநோய், அஜிரணக்கேளாறுகள், ஆயாசம், நெஞ்சிடிப்பு, தலைநோய், தலைபாரம் போன்ற பலம் குன்ற வைக்கும் நோய்கள் தோன்றி அவதிக்குள்ளாக்கும். எனவே உடல் பக்குவம் அடைந்து திருமணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லது என்கிறது காமசூத்திரம்