வியாழன், 3 மே, 2012

உங்கள் செல்லங்களை செக் பண்ணுங்க




கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் பாதுகாப்பாய் இருக்கும் குழந்தைகள் பிறந்த உடன் எத்தனையோ சோதனைகளை சந்திக்கின்றன. ஆரம்ப கட்ட பரிசோதனைகளிலேயே குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் கண்டறியப்பட்டுவிட்டால் அவர்களை மிகப் பெரிய நோய் பாதிப்புகளில் இருந்து அவர்களை பாதுகாக்கலாம் என்பதற்காகவே இதுபோன்ற பரிசோதனைகள் செய்யப்படுவதாக குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிதாய் பிறந்த குழந்தைகள் ஆரோக்கியமாகவும், நோய் பாதிப்புகள் எதுவும் இன்றி இருக்கின்றனரா என்பதை அறிய எந்த வகையான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்று குழந்தை நல மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

ஆரோக்கிய அம்சங்கள்

பிறந்த ஐந்து நிமிடத்திலேயே அப்கர் ஸ்கோர் எனப்படும் முதல் மதிப்பீடு செய்யப்படும். இந்தப் பரிசோதனை, இதயத் துடிப்பு வேகம், சுவாசித்தல், தசைகளின் ஆரோக்கியம், அனிச்சைச் செயல்கள், மற்றும் தோலின் நிறம் போன்ற ஐந்து வித்தியாசமான காரணிகளை உபயோகித்து புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் நலனின் ஆரோக்கியமான அம்சங்களை மதிப்பீடு செய்யப்படுகின்றன.

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஒரு உடற்பரிசோதனை கண் மற்றும் காது கேட்டல் மற்றும் பல்வேறு பிறப்புறுப்பு சம்பந்தமான ஒழுங்கின்மை என்பனவற்றைக் கண்டறிவதற்காக திரைப் பரிசோதனையும் செய்யப்படுகிறது. இந்த பரிசோதனைகளின் போதே நோய்கள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்
பரிசோதனை

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு, கண் தொற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, பிறந்து இரண்டு மணி நேரங்களுக்குப் பின்னர், எரித்றோமைஸின் எனப்படும் கண் பூசு மருந்து கொடுக்கப்படும். இரத்தம் தகுந்த முறையில் உறைவதை உறுதி செய்வதற்காக, அவனுக்கு வைட்டமின் K ஊசி மருந்து கொடுக்கப்படும். மேலும் குழந்தைகளின் மலம் மற்றும் சிறுநீரின் வெளியேற்றங்கள் கண்காணிக்கப்பட்டு மஞ்சள்காமாலைக்கான அறிகுறிகளைக் காண்பித்தால், அதற்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்படும்.

ரத்தப்
பரிசோதனை

குழந்தை பிறந்து மூன்று தினங்களுக்குள் சிறப்பு ரத்தப் பரிசோதனை ஒன்றைச் செய்ய வேண்டியது மிக அவசியம். இதன் மூலம் குழந்தைகளுக்கு பின்னால் ஏற்படக்கூடிய பல தொந்தரவுகளை சரிசெய்து விடலாம்.

என்சைம் குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு கண்புரை, மனவளர்ச்சி குறைபாடு போன்றவை ஏற்படலாம். குழந்தைக்கு உரிய ஊட்டச்சத்து உணவு கொடுத்து காப்பாற்ற முடியும். இந்தப் பரிசோதனைகளை குழந்தை பிறந்த மூன்று தினங்களுக்குள் அதன் குதிகாலில் இருந்து சிறு துளி ரத்தத்தை எடுத்து செய்ய வேண்டும்.

ஹார்மோன்
உற்பத்தி

பிறவியிலேயே அட்ரீனல் குறைபாடுள்ள குழந்தையாக இருந்தால் அதன் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் உற்பத்தி குறைந்திருக்கும். இக்குறைபாடு இருந்தால் உடனடியாக சிகிச்சை அளித்தால் மட்டுமே குழந்தையை பாதுகாக்க முடியும். அதேபோல் பிறவி தைராய்டு குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மூளை வளர்ச்சியின்மை, மனவளர்ச்சி குன்றிய தன்மை போன்றவற்றை இதன் மூலம் தவிர்க்க முடியும்.

குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளை போக்க முடியும் என்று குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

கண்களுக்கு ஒளிதரும் பீட்ரூட் கீரைகள்!


அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் காய்கறியான பீட்ரூட்டில் இருந்து கிடைக்கும் இலைகளான பீட்ரூட் கீரைகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இது மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது.

பீட்ரூட்டை
உணவில் சேர்த்துக்கொள்கின்ற அளவிற்கு பீட்ரூட் கீரையை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் இக்கீரையை விரும்பி தங்கள் உணவை சேர்த்துக் கொள்கின்றனர். இது ஐரோப்பா கண்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட போதிலும் சமீபத்தில்தான் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது.

ஐரோப்பாவிலும்
, வடஅமெரிக்காவிலும், கீரைக்காகவே பீட்ரூட்டைப் பயிரிடுகின்றனர்.. சைபீரியாவில் கால்நடைகளின் உணவிற்காகவே முற்காலத்தில் இந்த கீரையும் கிழங்கும் பயிரிடப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. கோழிகள் இக்கீரையை விரும்பி உண்கின்றன. எனவே இது ஒரு கோழித் தீவனமாகவும் பயன்படுகின்றன

சுவையான
கீரை

பீட்ரூட்டுக்கு
சுகந்தா என்ற என்ற வேறு பெயரும் உண்டு. இந்தியாவில் கூட கிழங்குக்காக மட்டுமின்றி கீரைக்காகவும் இதனை பயிரிடுகின்றனர். இக்கீரையை பொரியலாகவோ, துவரம் பரும்புடன் சேர்த்து கூட்டாகவோ செய்யலாம். பாசிப்பயறு, தட்டைப்பயிறு, முதலியவற்றுடன் சேர்த்துக் கூட்டுக்கறிகள் ஆக்கலாம். இப்பயிர்களுடன் சேர்க்கப்பட்ட கீரை மிகவும் சுவையாக இருக்கும். சாலட் செய்யவும் இக்கீரை பயன்படுகிறது.

கரோட்டின்
உயிர்சத்து

பீட்ரூட்
கீரைகளில் நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகளில் கரோட்டின் எண்ணும் உயிர்சத்து அதிகம் உள்ளது. இந்த கரோட்டின் வைட்டமின் சத்தை அதிகம் சேர்த்து வைக்கின்றன. எனவே இதனை வைட்டமின் ஏயின் சேமிப்புப் பட்டரை என்றே கூறலாம். பச்சையாக உண்பதால் வைட்டமின் நேரடியாக நம் உடலில் சேருகிறது. இதனை கத்தியைக் கொண்டு பறிக்கக் கூடாது. கையால் திருகி பறிக்கவேண்டும்.

புரதம்
, தாது உப்புக்கள்

பீட்ரூட்
கீரை ஒரு சிறந்த உணவாக அமைவதோடு புரதம் மற்றும் தாது உப்புகள் உயிர்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். தையாமின், ரிபோஃப்ளோவின், நிக்கோடின் அமிலம், வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளது.

பீட்ரூட்
கீரை சிறுநீரைப் பெருக்கி அதனை மிதமாக வெளியேற்றுகிறது. மலத்தை இளக்கி வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. மலச்சிக்கலைத் தவிர்க்கும் இக்கீரை கல்லீரலுக்கு வலிவு கொடுக்கிறது.

கண்நோய்கள்
குணமாகும்

உடலில்
ஏற்படும் எரிச்சலுக்கு இந்த இலையில் சாற்றினை தடவ எரிச்சல் தணியும். வைட்டமின் அதிகமாக இருப்பதால் கண் நோய்களை இக்கீரை போக்குகிறது. கண்ணுக்கு தெளிவையும், பார்வையும், கூர்மையும் ஏற்படுகிறது. உடற்சூட்டால் ஏற்படும் கண் வீக்கம், அழற்சி முதலியவற்றுக்கு இக்கீரையின் சாற்றை கண் இமைகளில் பூச குணம் கிடைக்கும். கீரையை உணவாக உட்கொண்டாலும், கண் நோய்கள் குணமடையும் என்றும் உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

வயிற்றுக்கு இதமளிக்கும் ஓமத் திரவம்


 

ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இது ரொட்டி மற்றும் கேக் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகிறது. மதுபான வகைகளை மணமூட்டப் கையாளப்படுகிறது. இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது.

ஓமத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்

ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்றவை அடங்கியுள்ளன. ஓமத்தில் மூன்று வகைகள் உள்ளன. ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும்.

மருத்துவ குணம் கொண்ட ஒமம்

இலைகளின் சாறு பூச்சிகளுக்கு எதிரான சக்தி கொண்டது. வேர்கள் ஜீரணச் சக்தி மற்றும் சிறுநீர்க் கழிப்பினைத் தூண்டும் திறன்படைத்தது. கனிகளில் இருந்து கார்வீன் மற்றும் கார்வால் ஆகிய பொருட்கள் எடுக்கப்படுகிறது. கனிகளில் இருந்து வடிக்கப்படும் நீர் வயிற்றுப் போக்கினைக் கட்டுப்படுத்துகிறது. ஜீரணத்தையும் வயிற்று உப்புசத்தையும் குணப்படுத்துகிறது. குழந்தைகளின் குடல்வலி, வயிற்றுக் கோளாறுகளுக்கு தக்க மருந்தாகும். சுவாசக் குழாய் தொடர்பான நோய்கள், குடிப்பழக்கத்திற்கான அடிமைத்தனம், மனநோய், போன்றவற்றுக்கு மருந்தாக உதவுகிறது.

வயிற்றுப் பொருமல் நீங்க

சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.

இன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள். இந்த ஓமத் திரவம் ஓமத்தை காய்ச்சி எடுக்கப்படுவது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு மந்தம் தொடர்பான நோயை போக்கும் தன்மை கொண்டது.

பொதுவாக மந்தமானது சிறு குழந்தை களுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.

ஓமத்திரவகம்

ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான். ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.

உடல் பலம் பெற

உடல் சோர்வை போக்குவதில் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .

பசியைத் தூண்ட

நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.

பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.

ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். சுவாசக்கோளறுகள், இருமல் போன்ற நோய்களை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும். மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் போன்றவற்றையும் ஓமம் குணப்படுத்துகிறது.