குழந்தைகளுக்கு ஒரு வயது முதலே பற்கள் முளைக்கத் துவங்கிவிடும்.
பற்கள் முளைக்கத் துவங்கியதும், தினமும், காலையில் ஒரு சுத்தமான துணியை இளஞ்சூடான நீரில் நனைத்த பற்களை சுத்தம் செய்து விட வேண்டும்.
கைகளால் தேய்க்கிறேன் என்று கூறி குழந்தையை அழவிட வேண்டாம்.
ஒன்றரை வயது முதல் பிரஷ் கொண்டு பற்களைத் தேய்த்து விட்டு வாய் கொப்பறிக்கக் கற்றுத் தர வேண்டும். சிறிது பற்பசை வைத்து பற்களைத் தேய்த்து பின்னர் தண்ணீர் கொண்டு கொப்பளிக்க சொல்ல வேண்டும்.
3ம் வயது ஆகும்போது அவர்களாகவே பற்களைத் தேய்த்துக் கொள்ள பழக்கப்படுத்த வேண்டும்.
பற்களில் சொத்தையோ, உடைப்போ இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக