குழந்தைகள் முன்னிலையில் நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ குழந்தைகளும் அப்படித்தான் நடந்து கொள்வார்கள்.
எனவே அவர்களை சிறப்பாக வளர்க்க முதலில் நாம் சிறப்பாக மாற வேண்டும். மற்றவர்களைப் பற்றி தரக்குறைவாக குழந்தைகள் முன்னிலையில் பேசுவது கூடாது.
கணவன் - மனைவியோ, வீட்டின் பெரியவர்களோ குழந்தைகள் முன்னிலையில் சண்டை போடுவதுக் கூடவேக் கூடாது.
கணவனோ, மனைவியோ இருவரில் ஒருவர் குழந்தையை கண்டிக்கும் போது மற்றவர் குறுக்கிட்டு குழந்தைக்கு ஆதரவாகப் பேசக் கூடாது இது கண்டிப்பவரின் மதிப்பை குழந்தையிடம் குறைத்துவிடும்.
தொலைக்காட்சியில் வரும் விஷயங்களை மிகவும் அக்கறையோடு மற்றவர்களுடன் விவாதிக்கக் கூடாது அது ஏதோ உண்மைக் கதை என்று குழந்தைகளின் மனதில் பதிந்து விடும்.
மற்ற குழந்தைகளை மட்டம் தட்டி உங்கள் குழந்தைகளை உயர்த்திப் பேசுவதும் மிகவும் தவறு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக