சமைக்கும் நேரம் = 30 நிமிடங்கள்
அளவு = 5 நபர்களுக்கு
தேவையானப் பொருட்கள்:
6 நண்டு
1/4 தேங்காய்
1/2 கோப்பை தயிர்
2 வெங்காயம்-
2 தக்காளி
1/2 தே.க இஞ்சி அரைத்தது
1/2 தேக உள்ளி அரைத்தது
2 பச்சைமிளகாய்
6 செத்தல்
1 மே.க மல்லித்தூள்
1 தே.க மஞ்சள்த்தூள்
1 தே.க மிளகு
1 தே.க சீரகம்
4 கராம்பு
1 பட்டை கறுவா
1/2 கோப்பை எண்ணெய்
1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- நண்டை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும்.
- தேங்காயை துறுவி, சட்டியில் போட்டு இலேசாக வறுத்துக் கொள்ளவும்.
- பின்னர் செத்தல், மல்லித்தூள்,மிளகு சீரகம்,பட்டை,கராம்பு ஆகியவற்றை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
- இவற்றுடன் தேங்காயை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- சட்டியில் எண்ணெய்யை ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
- பின்னர் இஞ்சி உள்ளி, பச்சைமிளகாய்,தக்காளி,மஞ்சள்த்தூள் போட்டு வதக்கவும்.
- பிறகு அரைத்த கலவையை போட்டு வதக்கி தயிரை சேர்த்து நன்கு வதக்கவும்.
- பிறகு உப்பை போட்டு நண்டை போட்டு கிளறி விடவும்.
- இறுதியாக 2 கோப்பை தண்ணி சேர்த்து நன்றாக கலக்கி பத்து நிமிடம் கொதிக்கவைத்து இறக்கிவிடவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக