வியாழன், 4 ஆகஸ்ட், 2011

உலக தாய்ப்பால் வாரம் அகஸ்ட் 1 -7




உலக தாய்ப்பால் வாரம் அகஸ்ட் 1-7 வரை கொண்டாட படுகிறது.  தாய்ப்பாலின் அருமைகளை விளக்கவே இந்த விழா கொண்டாட படுகிறது .




குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தரவேண்டும் , அறுவை சிகிச்சையில் பிறந்த பின் இரண்டு மணி நேரத்திற்குள் தரவேண்டும் , நேரம் கடந்து தந்தால் பால் சுரப்பது குறைய ஆரம்பிக்கும் .


முதல் இரண்டு மூன்று நாட்களில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும் . இது குழந்தைக்கு ஒரு அரு மருந்து . ஒரு தாய் தன் குழந்தைக்கு தரும் சீதனமே இந்த சீம்பால் ஆகும் .குழந்தைக்கு போடும் முதல் தடுப்பு மருந்து என்றும் இதை சொல்லலாம் .


இதில் அதிகமாக புரத சத்தும் , நோய் எதிர்ப்பு சத்துக்களும் உள்ளன . விட்டமின்கள் அதிகமாகவும் , எளிதில் செரிமானம் ஆககூடியதும் ஆகும் .


எனவே ஒரு துளி கூட வீணாக்காமல் சீம்பால் தரவேண்டும் .


குழந்தை பிறந்த முதல் இரண்டு வாரம் தனது எடையில் பத்து சதவிகிதம் குறையும் . இது இயல்பானதே , மூன்றாம் வாரத்தில் இருந்தே எடை கூட ஆரம்பிக்கும்


குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் தரவேண்டும் .


எடை குறைவான குழந்தைக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் தரலாம் .


சாதாரணமாக தாய்க்கு ஆறு மாதம் வரை தினமும் 750 ml பால் சுரக்கும் , ஆதற்கு பிறகு 500-600 ml பால் சுரக்கும் . இரண்டு வயது வரை பால் தந்தால் நல்லது.


பால் கொடுப்பதால் தாய்க்கு மார்பு புற்றுநோய் , ஓவரி புற்றுநோய் வராமல் தடுக்கப்படும் .


பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் பால் கொடுத்தால் தாய்க்கு உதிரபோக்கு குறையும் . ஏனெனில் பால் குடிக்கும் போது oxytocin என்ற ஹோர்மோன் சுரப்பதால் அது கர்பப்பையை சுருங்க செய்து ரத்தபோக்கை குறைக்கும் .


தொடர்ந்து ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வந்தால் மாதவிடாய் தள்ளிபோடபடும் , இதன் முலம் அடுத்த பிரசவத்தை தடுக்கமுடியும் .

தாய் பாலால் தாய்க்கும் பல நன்மைகள் உண்டு . எனவே தவறாமல் தாய்ப்பால் தரவேண்டும்.


குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய் பால் மட்டுமே தரவேண்டும்


தண்ணீர் கூட தர தேவை இல்லை ( கோடையில் கூட ) ஏனென்றால் பாலில் 88 % நீர் உள்ளது .

ஆறு மாதங்களுக்கு பிறகு பாலுடன் இணை உணவு தரவேண்டும்






குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்
 
குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு முதலில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும் . இது அளவில் குறைவாக , மஞ்சள் நிறத்தில் இருக்கும் . குழந்தைக்கு தாய் தரும் முதல் தடுப்பு மருந்து சீம்பால் ஆகும் . எனவே முதல் 3-4 நாட்கள் சீம்பால் மட்டும் தர வேண்டும் .


( கழுதைப்பால் , சீனிதண்ணி, சர்க்கரை ஆகிய பொருள்களை பிறந்தவுடன் தரும் பழக்கம் சில இடங்களில் உள்ளது , இது தவறான பழக்கம் .)


பால் பரிசுத்தமானது , எனவே பிறந்தவுடன் சுத்தமான உணவு தாய்ப்பால் மட்டுமே .


பாலில் நோய் எதிர்ப்பு சக்தி தர நிறைய பொருள்கள் உள்ளன .(secretary IgA, Macrophages,Lymphocytes,Lactoferrin, Lysozyme, Bifidus factor,Interferon) எனவே வயிற்றுபோக்கு , சளி முதலிய வியாதிகள் வராமல் தடுக்கும் .


பால் இயற்கையானது எனவே எளிதில் செரிக்கும் .


குழந்தையின் மூளை வளர்ச்சி முதல் இரண்டு வருடங்களில் மிக வேகமாக இருக்கும். அதற்க்கு தேவையான CYSTIENE ,TAURINE ஆகிய சத்துக்கள் தாய்பாலில் சரியான அளவில் உள்ளன . ( கன்றுகுட்டி பிறந்தவுடன் துள்ளி ஓடும் , ஆனால் மனித குழந்தை தத்தி நடக்க ஒரு வருடம் ஆகிறது . ) தாய் பால் மட்டுமே சரியான ஊட்டசத்தை சரியான நேரத்தில் தரும்.   
 
வேலைக்கு செல்லும் தாய் :


தாய் பாலே குழந்தைக்கு அரு மருந்து . வேலைக்கு செல்லும் தாய்மார்கள் பாலை எடுத்து சேமித்து பின் தரலாம் .


சாதாரண அறைவெப்ப நிலையில் எட்டுமுதல் பத்துமணி நேரம் வைக்கலாம் .


குளிர் பதன பெட்டியில் 24 மணி நேரமும் ,


அதனுள் உள்ள ப்ரீசர்(-20* c) இல் மூன்று மாதங்கள் வைத்திருக்கலாம் .


எனவே வேலைக்கு செல்வதை காரணமாக சொல்லி தாய் பால்தராமல் இருக்காதிர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக